• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

16. திகட்டாத தீ நீயே!

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
அக்கா.. அக்கா..." என புலம்பினானே தவிர.. மேலே அவனால் பேச முடியவில்லை...

அவன் நிலை கண்டு பயந்தவர்கள்.

"என்ன மாப்பிள்ளை இதெல்லாம்.. ஏன் இப்பிடி..?" என்றனர்.

"இது என்னோட அக்கா மாமா..!" என்றான். அதன் பின் நடந்தவற்றை கூறியவனை தன்னோடு அணைத்து கொண்டவர்..

"நடந்தது நடந்து போச்சு.. இழப்பு ரெண்டு பக்கமுமே நடந்து போச்சு.. நடந்ததை நினைச்சு கவலை படாம ஆகவேண்டியதை பார்ப்போம்." என அழுதவனை தேற்றுவதற்கு நீண்டநேரம் ஆகிப்போனது.

வீடு செல்ல காரில் ஏறி அமர்ந்தவன்.. "மாமா தாமிராவுக்கு இதெல்லாம் இப்போ தெரிய வேண்டாம். கால் பண்ணி கூப்பிடுறப்போ வாங்க..." என்று மாத்திரம் சொன்னவன் வீடு வந்து சேர்ந்தான்.

அதுவரை நடந்தவற்றை ஆத்விக் வாய்மொழியாக கேட்டுக்கொண்டிருந்த யோகலிங்கம் தலையில், இடியே இறங்கியது போல் சோஃபாவில் தொம்பென அமர்ந்து விட்டார்.

கண்களோ ஆறு கண்டிருந்தது.

மகளின் மரணச்செய்தியை ஜீரணிக்க முடியாது தவித்திருந்தவர்.. கணவனது இடிந்த கோலம் கண்டு நொருங்கியே போனார்.

மகளை தேடி ஓய்ந்து போனவர்... எங்கோ ஓர் மூலையில் ஆசைப்பட்டவனோடு சந்தோஷமாக இருந்தால் போதுமென நினைத்திருக்க.. அவளோ இறந்து பல வருடங்கள் கடந்துவிட்டது என்பதை எந்த பெற்றவர்களால் தாங்க முடியும்...?

"என்னங்க...." என உதடுகள் துடிக்க அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து கதறுபவரை ஆறுதல் படுத்துவாரா..? இல்லை உயிருக்கு நிகரான மகளை பரிகொடுத்துவிட்டேன் என அவளிடம் ஆறுதல் தேடுவாரா...?


"புவனா.... நம்ம பொண்ணு...." என இருகைகளையும் விரித்து, மேலே காட்டியவருக்கு அதற்கு மேல் வார்த்தை எழவில்லை.. ஆறுதல் தேடி கணவன் மடியில் முகம் புதைத்து கதறியவர் கதறலில் கலங்கி விட்டாள் தாமிரா..

நடந்தவற்றை கேட்டவளுக்கு வேதனை தான். அதில் சிலவற்றை கடந்து வந்தவளால் ஓரளவுக்கு துக்கத்தை அடக்கிட முடிந்தது.

ஆனால் அன்பென்ற வார்த்தையின் அர்த்தத்தை சில காலங்களாக உணர வைத்தவர்களது கண்ணீரை அவளால் தாங்க முடியவில்லை..

"மாமா..." என அவரிடம் ஓடிச்சென்று.. அவரை கட்டிக்கொண்டு அவர் நெஞ்சில் சாய்ந்தவள்..

"அழாதிங்க மாமா... அம்மா இல்லன்னா என்ன..? அவங்களுக்கு பதில தான் நான் வந்திட்டேனே...!

உங்களால மட்டும் தான் பத்திரமா பார்த்துக்க முடியும்ன்னு தெரிஞ்சு... என்னை உங்ககிட்ட அனுப்பி வைச்சிருக்காங்க அம்மா... ஆனா நீங்களே இந்த மாதிரி அழுதா... நான் எப்பிடி மாமா சந்தோஷமா இருப்பேன்.

அத்தை அழாதிங்க... என்னால நீங்க அழறது பார்க்க முடியல.." என்றவள் கண்ணீர் கண்டு...

"சரிம்மா.. நடந்தது நடந்து போச்சு... நாங்க அழல... இனிமே என் பேத்தியும் எதுக்காகவும் அழக்கூடாது." என்று அவளை இருவருமாக தம் கண்ணீரை மறைத்து அணைத்தார்கள்.

உடனே பழைய நிலைக்கு திரும்பியவள்..

எழுந்து சென்று.. "நீங்க மட்டும் இல்லன்னா.. என் குடும்பம் எனக்கு கிடைச்சிருக்காது பெரியையா..." என்றாள் உணர்ச்சி பொங்க.

"அது என்ன பெரியையா..? அப்பான்னே கூப்பிடும்மா.. உன் வாயால அப்பான்னு கூப்பிட நான் குடுத்து வைச்சிருக்கணும்..." என தன் பங்கிற்கும் கைவிரித்து நின்றவரை சந்தோஷமாக ஓடி வந்து கட்டிக்கொண்டாள்.

"உன்னை பாதுகாக்குறது என் கடமைம்மா... அம்மாவோட எதிர்ப்பையும் மீறி.. கொஞ்சமாச்சும் உன்னை பாதுகாத்திருக்கேன்னு நம்புறேன்." என்றார்.

அவர்களது கொஞ்சல்களை எல்லாம் ஓரமாக நின்று பார்த்திருந்த வடிவுக்கரசிக்கும்.. தன்னையும் தாமிரா அணைக்கமாட்டாளா என்று ஏக்கமாக இருந்தது.

"தாமிரா.. நீ என் பேத்தின்னு தெரியாம ரொம்ப கொடுமை படுத்திட்டேன்... பாட்டிய மன்னிச்சிடும்மா..." என அவள் கைகளை பற்றிக்கொண்டவர் கையினை ஓடி வந்து தட்டி விட்டான் ஆத்விக்.

அதிர்ச்சியோடு ஆத்விக்கை பார்த்தவர்...
"ஏன் மாப்பிள்ளை...?" என்றார் ஏக்கமாய்.

"உங்க வீட்டு பிள்ளைங்க மட்டும் தான் மனுஷங்க... மத்தவங்க எல்லாருமே பொதி மாடுங்களா..

இத்தனை நாள் அந்த வீட்டில அடி உதைய வாங்கிட்டு.. அத்தனை சுமையையும் தாங்கிட்டிருந்தவள நீங்க கொண்டாட வேண்டாம்.. சந்தோஷமா ஒரு வார்த்தை பேசிருக்கிங்களா...? அதிலயும் ஆயிரத்தெட்டு குறை..
அவ பெயர் கூட மூதேவி.. சனியனே.. இது தானே...

போடுற ஒரு வேளை சோத்துக்கு.. அவளை நாய் மாதிரி நடத்திட்டு.. இன்னைக்கு இவ உங்க பேத்தி எண்டதும் கொஞ்சிட்டு வரிங்களா..?
உங்க வீட்டு புள்ளைங்களுக்கு வலிக்கிற மாதிரி தானே மத்தவங்களுக்கும் வலிக்கும்..?

தெரியாம தான் கேட்குறேன்.. பெரிய மனுஷியா நீங்க...?

வீட்டில ஒரு வயது முதிர்ந்தவங்களாவது இருக்கணும்னு ஏன் சொல்றாங்க தெரியுமா..?
சின்னவங்க தடுமாறுறப்போ சரியான நேரம்... அவங்க அனுபவத்தில நெறிப்படுத்துவாங்கன்னு தான்.

ஆனா நீங்க ஒரு அரக்கி.. உங்க பேச்சத்தான் அந்த வீட்டில எல்லாரும் கேட்டாகணும்னு அடம்பிடிக்கிற சாத்தான்... வார்த்தையிலும் சரி.. நடத்தையிலும் சரி நிதானமே இல்ல... அதனால உண்டாகிற பின் விளைவுகளை யோசிக்காம நடந்துக்கிற ஒரு ஜந்து...
அதனால தான் வாழவேண்டிய வயசிலயே அப்பாவியான மூணு உயிர் மண்ணுக்குள்ள போச்சு... அந்த குற்றவுணர்வு கூட இல்லாத ஒரு ஜென்மம்.

என் பொண்டாட்டியையும் இத்தனை வருஷம் கொடுமை படுத்தியிருக்கிங்க.. அதோட பலன் தான்.... அண்ணனே தங்கையை, புருஷன் கட்டின தாலிய அறுத்தெறிஞ்சிட்டு வா.. நான் உன்னை சந்தோஷமா வைச்சுக்கிறேன்னு புருஷன் முன்னாலயே கேட்கிற அளவுக்கு போயிருக்கு..." என்றான்.

அவனது பேச்சை கேட்டதும் மத்தவர்கள் அதிர்ந்து போக.. வெட்கத்தில் தலை கவிழ்ந்தான் பார்த்தீபன்.

வேல்முருகனுக்கு கோபம் தாங்கவில்லை.. விறுவிறுவென ஆத்விக்கிடம் வந்தவர்...

"என்ன மாப்பிள்ளை சொல்லுறீங்க..?"

"இன்னும் என்ன மாமா சொல்லணும்..?சின்ன வயசில இருந்து ஒருத்தி நம்ம வீட்டிலயே வளர்றாளே.. அவளை அண்ணன் ஸ்தானத்தில இருந்து பார்க்காம... வேலியே பயிர மேயிற மாதிரி.. தாமிராவை பார்த்திருக்கான். முதல் தடவை நான் வரும் போது தாமிரா மேலான இவன் பார்வையோட அர்த்தம் புரிஞ்சுக்கிட்டேன்." என்க.

ஆத்திரம் தாங்காது ஆவேசமாய் பார்த்தீபன் கன்னங்களில் மாறி மாறி அறைந்தார்.

அவற்றை வாங்கிக்கொண்டு கண்ணீர் ததும்ப தந்தையை எதிர்கொண்டவன்.

"தப்பா ஒன்னும் நான் பார்க்கலப்பா.. அவளை கட்டிக்கிற எண்ணம் தான். அவ எப்போ என் தங்கைன்னு தெரிஞ்சுதோ...என்னை நினைச்சு எனக்கே வெக்கமாபோச்சு என்ன மனிச்சிடுங்க."

"அடி செருப்பால.. இதுதான் உன் காதலா.. அன்னைக்கே உன்னை எச்சரிச்சேன்.. திரும்பவும்.. ச்சைய்..." என அவனுடன் பேச விரும்பாது தலை கவிழ்ந்தார் வேல்முருகன்.

பிள்ளைகள் செய்யும் தவறு பெற்றவர்களை தானே தலைகுனிய செய்யும்.

"மாமா.. இங்க உங்கள தவிர தாமிராவை யாரும் உறவு கொண்டாடிட்டு வரக்கூடாது.. இத்தனை நாள் வேண்டாதவளா இருந்தவ, வேண்டாதவளாவே இருக்கட்டும்... என் பொண்டாட்டியை எனக்கு எப்படி பார்த்துக்கணும்னு தெரியும்.. அக்கா மகளா அவளை எப்படி நடத்தணும்ன்னு தெரியும்." என அவளை தன் கைவளைவில் கொண்டு வந்தவன்.. தன் தந்தையை மேலும் வெட்டும் பார்வை ஒன்றை வீசி சென்றான்.




யாரை உதாசினம் செய்தாலும் தாங்கியிருப்பாள் தாமிரா... இறுதியில் யோகலிங்கத்தின் மேலான ஆத்விக்கின் பார்வையினை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை..

அறைக்குள் வந்து கதவடைத்து கொண்டதும்.. கழுத்தினை சுற்றியிருந்த அவனது கையினை ஆவேசமாக விலக்கி அவனை தள்ளியவள்..



"இத்தனை நாள் தான் அனாதையா இருந்தேன்.. இப்போவாவது என் சொந்தங்களோட சந்தோஷமா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலல்ல.." என்றாள் கோபமாய்.


"தாமிரா.. அம்மாவையும் மாமாவையும் தவிர.. மத்தவங்க காட்டுற அன்பு பொய்யானது.. நீ அவங்க இரத்தம் என்கிறதனால வந்த பாசந்தான் அது.. இல்லன்னா உன்கிட்ட பேசவே யோசிப்பாங்க...'

"அது அவங்களுக்கா உங்களுக்கா...? நான் உங்கக்கா மகள்னு தெரியிற வரைக்கும் என்மேலான உங்களோட பார்வை எப்பிடி இருந்திச்சு..? என்னை கண்டாலே எரிஞ்சு தானே விழுந்திட்டிருந்திங்க.
மாமா என்மேல காட்டினது உண்மையான அன்பு.. அம்மாவுக்கு அப்புறம் அன்புன்னா என்னன்னு உணர்ந்தது அவர்கிட்டதான். அவரைப்போய் குத்தம் சொல்லுறீங்க..."


"உனக்கு புரியாது தாமிரா... இன்னைக்கு அக்கா நம்மகூட இல்லாததுக்கு காரணமே அவருதான்... இப்போ வந்து கதைகதையா அளந்தா நம்பணுமா..?"

"புரிஞ்சுக்காதது நீங்க தான்.. உங்களுக்கு அம்மா கூடப்பிறந்தவ மட்டும் தான்.. அவங்களுக்கு மக.. பிறந்தது முதல் பார்த்துப்பார்த்து வளர்த்திருக்காங்க... அவங்கள விடவா உங்களுக்கு வலிச்சிட போகுது...

சாதாரண பரீட்சை... அதுவே எழுதி ஒரு வாரத்துக்கு அப்புறம் தான் மார்க்கே சொல்லுவாங்க.. ஆனா அம்மா... தன்னோட காதலை வெளிப்படுத்தி... பெரியவங்க அலசி ஆராயிறதுக்கு முன்னாடி ஓடிப்போனா அவங்க எப்பிடி காரணமாவாங்க...?

அவங்க சூழ்நிலை அப்பிடியானது தான்.. நான் ஒத்துக்குறேன். ஆனா பெத்தவங்களா, அவங்களுக்கும் கடமை இருக்குல்ல.. விரும்புறேன்னு சொன்னதும் கண்ண மூடிட்டு சரின்னு சொல்லிடணும்..
கல்யாணம் என்கிறது அவ்ளோ சாதாரண விஷயம் பாருங்க..." என கேலிபோல் கூறியவள்..

"அம்மா மேல முழு தப்பையும் வைச்சிட்டு.. மாமா மேல கோபத்தை காமிக்கிறது ரொம்ப தப்பு.. அதுவும் நிச்சயம் பண்ணவங்கள சமாதானம் செய்ய எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பாருன்னு யோசிச்சு பார்த்திங்களா...? மகளுக்காக அதைகூட செய்திருக்காரு மாமா...

ஆனா நீங்க...." என்றவள்.

"விபரம் இல்லாதப்போ செய்த தப்பை இப்பவும் செய்யாதிங்க.. இப்பவாவது மாமாகிட்ட மனசு விட்டு பேசி, உண்மை என்னன்னு தெரிஞ்சுக்க பாருங்க.." என்றாள்.

இப்படி எந்த கோணத்திலும் அவன் யோசிக்கவில்லையே.. அக்காள் மீது இருந்த கோபம்... அவன் மூளையை மழுங்க செய்திருந்தது.

தாமிரா தந்தையின் நிலையினை எடுத்து கூற கூற தன் தவறை உணர்ந்தவன்..


"என்னை மன்னிச்சிடு தாமிரா... எனக்கு எல்லாமே அக்கா தான்.. அவ இல்லன்னதும் என்ன செய்யிறேன் ஏது செய்யிறேன்னு எனக்கே தெரியல...
அதான் என் பக்கம் மட்டும் இருந்து சுயநலமா யோசிச்சு இருக்கேன்.

என் தப்பு என்னன்னு எனக்கு புரிஞ்சிடிச்சு.. இப்பவே அப்பாக்கிட்ட மன்னிப்பு கேட்டு அவருகூட பேசுறேன்." என்றவனை அவள் நம்பமுடியாது பார்த்திருக்க..

அவள் எதிரில் வந்தவனோ சட்டென அவள் கன்னங்களை கைகளில் தாங்கி...

"என்னை நம்பு தாமிரா... சின்ன வயசில என்னை வழிநடத்த அக்கா இருந்தா... அக்கா போனதுக்கப்புறம் யார்கூடவும் பேச பிடிக்கல.. அம்மாவே அவரை பத்தி ஏதாவது சொல்ல வந்தா விலகிப்போயிடுவேன்.

அப்புறம் அம்மாகூடவும் ஒருவாரத்துக்கு பேசமாட்டேன். அதனாலயே அம்மாவும் அப்பா பேச்சை எடுக்கிறது இல்ல.. அதான் இத்தனை வருஷம் உண்மை எதுன்னு புரிஞ்சுக்க முடியாம போச்சு.." என்றவன்..

"இன்னொரு வாட்டி அந்த மாதிரி சொல்லாத தாமிரா.. எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும்.. அக்கா மகளா இல்லை.. என் பொண்டாட்டியா... உண்மை தெரியிறதுக்கு முன்னாடியே நான் உன்னை விரும்ப ஆரம்பிச்சிட்டேன்... அப்பாவால வலுகட்டாயமா திணிக்கப்பட்டவன்னு நினைக்கிறப்போ தான் ஆத்திரம்.. அதான் எரிஞ்சு விழுந்தேன்." என்றவன் கண்கள் நிறைத்திருந்த கண்ணீரே உண்மையினை எடுத்துரைக்க..

அவனே எதிர்பாராது சட்டென அவன் இடையினை இறுகக்கட்டிக்காெண்டு, நெஞ்சில் தஞ்சம் புகுந்தவளை ஆனந்த கண்ணீரோடு தானும் இறுக்கிக்கொண்டவன்.

"இப்போ அப்பாகிட்ட மன்னிப்பு கேட்கணும்... அதுவுமில்லாம நீ பன்னிரெண்டாவது பாஸ் பண்ணணும்டி.. அதனால சீக்கிரம் என்மேல இருந்து எந்திரிக்கிறது தான் நமக்கு நல்லது.." என்றவன் பேச்சு புரியாமல் தலையினை மட்டும் நிமிர்ந்து பார்த்தாள்.

கள்ள சிரிப்பென்றை சிந்தி, கண்ணடித்தவன் செயலில் ஏதோ புரிந்து சிவந்து போனவள்..

"ச்சீ போ மாமா..." என வெட்கத்தினூடே விலகி நின்றவளை.. மாமா என்ற அவளது அழைப்பில் இழுத்து இறுக அணைத்தவன்..


"இதுதான் கடைசி.. இதுக்கப்புறம் தனிமையில் இந்த மாதிரி கட்டிப்பிடிக்காதடி...." என விலகி நிறுத்தியவன்.

"வா அப்பாகூட பேசுவோம்.." என அழைத்து சென்றான்.

வேல்முருகன் குடும்பத்தவர்கள் ஆத்விக்கின் கறாரான பேச்சில் அப்போதே திரும்பி விட்டிருந்தனர்.

முதலில் தயக்கமாக இருந்தாலும்.. தன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு வேண்டினான்.

இத்தனை நாள் இயல்பாக பேசமாட்டானா என தவம் கிடந்த யோகலிங்கம்.. இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டுவிடுவாரா..?

மகனை அணைந்து முத்தம் வைத்தவர்..
"அப்பாவ புரிஞ்சுக்கிட்டாலே போதும்டா.. மன்னிப்பெல்லாம் வேண்டாம்." என்க.

"எல்லாம் என் பேத்தி வந்த நேரம் தான்" என புவனா அவளை புகழ்ந்து பாடியவர்...

"ஏம்மா தாமிரா.. இந்த வருஷமே பன்னிரண்டாவது பாஸ் பண்ணிடுவேல்ல..." என்றார்.

"ஏன் புவனா இப்போ அது...?"

"எனக்கு என் பேர பிள்ளைய கொஞ்சணும்ன்னு ஆசை வந்திடிச்சுங்க.. அதான் கேட்டேன்." என்றார்.

"ஆமா எனக்காெரு சந்தேகம்..! நம்ம தாமிராவுக்கு பிறக்க போற பிள்ளை நமக்கு பேரப்பிள்ளையா..? பூட்டப்பிள்ளையா..? என சிரிக்க...

அவர்கள் பேச்சில் காதலாய் மனைவியை நோக்கியவன் பார்வையில் சிவந்து போனாள் பெண்ணவள்.




இனி அவள் வாழ்க்கையில் இதே காதலும் சந்தோஷமும் என்றும் நிலைத்திருக்கும்.

முற்றும்.
 

Vimala Ashokan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
274
STORY MUDINJATHA
AVVVVVVVVVVV
1685087254870.png
 
Top