- Joined
- Nov 27, 2021
- Messages
- 48
இரவு நேரம்.
இந்திய ஒன்றியத்தின் தலைநகர் டெல்லியில் இயங்கி கொண்டிருக்கும் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம் அது.
"வொர்க் இஸ் ஓவர்", என்று சொல்லிக் கொண்டே கணினியின் எண்டர் பட்டனை தட்டினாள் பிரியா.
"சீக்கிரம் வாடி. ரெஸ்டாரண்ட மூடிற போறான்", என்றபடி அவளின் கையை பிடித்து எழுப்பினாள் ஆஷா.
"இருடி, வர்றேன்", என்றபடி கிளம்பினாள் பிரியா.
இருவரும் புறப்படும் போது,
"பிரியா", அழைத்தபடி ஓடி வந்தான் ஒரு இளைஞன்.
இருவரும் திரும்பி பார்த்தனர்.
"சொல்லு சஞ்சீவ்", பிரியா சொல்ல,
"ஒங்கிட்ட கொஞ்சம் பேசணும்", என்றான்.
"சொல்லுடா", பிரியா சொன்னாள்.
"ம்ம்,.. வந்து,... நா சொன்னத யோசிச்சுப் பாத்தியா பிரியா?", கேட்டான்.
பிரியாவின் முகம் வாடியது.
"ஒன்னோட முடிவு எதுவா இருந்தாலும் ஓகே. பட் ஓப்பனா சொல்லு", என்றான்.
"சாரி சஞ்சீவ்,. நீ எனக்கு புடிச்ச ஃப்ரெண்ட்தா. பட், உன்னை லவ்வரா நினைக்க முடியல. பிளீஸ், இது பத்தி இனிமே பேச வேணாம்",
"முடிவாத்தா சொல்றியா?", அவன் கேட்டான்.
"உறுதியாத்தா சொல்றேன். நெறைய யோசிச்சுதா சொல்றேன். புரிஞ்சிக்குவன்னு நினைக்கிறேன்", பிரியா சொன்னாள்.
சஞ்சீவ் வேறு வழியின்றி சிரித்தான்.
"ஒ மனசுல என்னதாண்டி நினைச்சிட்டுருக்க?", மின் விளக்குகளின் வெளிச்சத்தில், சாலையோரம் நடந்து கொண்டிருந்த பிரியாவிடம் கேட்டாள் ஆஷா.
"என்ன?",
"என்னவா? வீட்ல பாக்ற பையனையெல்லாம் வேணாம்னு சொல்ற. இந்த மாதிரி எவனாவது ப்ரபோஸ் பண்ணாலும் கட் ஆண்ட் ரைட்டா ரிஜெக்ட் பண்ணிடுற!!. லைஃப் லாங் இப்படியே இருந்துடலாம்னு நெனைப்பா?", ஆஷா கேட்க, பதில் சொல்லவில்லை பிரியா.
ஒங்கிட்டதாண்டி கேக்றேன்", ஆஷா சொல்லில் அழுத்தம் கூட்டினாள்.
"எனக்கு இப்போ மேரேஜ் பண்ணிக்கிற ஐடியா இல்ல. புரோமோஷன் கிடைக்கட்டும், பாக்கலாம்", என்று இயல்பாக சொல்லி நடையின் வேகம் கூட்டினாள் பிரியா.
பின்னால் நடந்து வந்த ஆஷா சில நொடிகள் பேசவில்லை.
"மாறனை மறக்க முடியலல்ல!!", சாலையில் குடி கொண்டிருந்த நிசப்தம் கலைத்து கேட்டாள் ஆஷா. சட்டென நின்று திரும்பினாள் பிரியா.
ஆஷா சிரித்தாள். மீண்டும் திரும்பி நடந்தாள் பிரியா.
தமிழ்மாறனை பிரியா முதன் முதலில் சந்தித்தது, சென்னையின் ஒரு ஆடம்பரமான உயர்தர டீக்கடையில்.
அன்று,
அந்த டீக்கடையின், ஒரு மேஜைக்கு கீழே, யாரோ ஒருவன், தனக்கு எதிர் இருக்கையில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்த யாரோ ஒரு பெண்ணின் காலை, தன் காலால் உரசிக் கொண்டிருந்தான்.
பக்கத்து மேஜையில் இருந்து காஃபி குடித்து கொண்டிருந்த பிரியாவின் கண்களில் தெளிவாக விழுந்த இக்காட்சி, அவளை கோபமூட்டியது.
அந்த அறிமுகமில்லாத பெண், தன் கால்களை விலக்கிய திசைகளில் எல்லாம், அந்த சதைப்பித்தனின் கால்களும் சென்று உரசியது. அவனின் சிரிப்பு அருவருப்பை ஏற்படுத்தியது.
அவஸ்தையில் இருந்த அந்த பெண், மேஜைக்கு கீழே, நடப்பதை வெளியே சொன்னால் வரும் அவமானத்தை நினைத்து தான் அமைதியாக இருந்திருக்க வேண்டும்" என்பது பிரியாவின் அனுமானம்.
ஆனால், "தனக்கு அருகில் உட்கார்ந்து டீ குடித்து கொண்டிருக்கும் தன் கணவனிடம் மட்டுமாவது அவள் கூறியிருக்கலாமே!! ஏன் கூறவில்லை" என்று பிரியா நினைத்த போது, அந்த பெண்ணின் கணவன் கடுகடுப்பான குரலில் அவளது காதில் சொன்னான்,
ஏய், என்னடி வர்றவன் போறவனையெல்லா வேடிக்கை பாத்துட்டுருக்ற?! இந்த எழவுக்குத்தா ஒன்னய வெளிய எங்கியும் கூட்டிட்டு வர்றதில்ல. தட்டை பாத்து சாப்டுறி", என்று. உடனே அவள் தட்டிலிருந்த பஜ்ஜியை பார்த்தாள்.
அவன் பேசியதை கேட்ட, பிரியாவுக்கு அந்த பெண் ஏன் தன் கணவனின் உதவியை தேடவில்லை? என்று விளங்கியது.
மேஜைக்கு கீழ், நடந்து கொண்டிருந்த வன்கொடுமை முழங்கால் வரை நீண்டது. பிரியா சட்டென்று கோபமாக எழுந்த போது, வன்கொடுமை நிகழ்த்தியவனின் கன்னத்தில் சத்தமாக விழுந்தது ஒரு அறை.
அந்த ரெஸ்டாரன்ட்டில் நொறுக்கு தீனிகளை கொறித்து கொண்டிருந்த அனைவரும் அதிர்ந்து, எழுந்து நிற்க, வன்கொடுமையாளன் முன் கோபமே உருவாக நின்று கொண்டிருந்தான் மாறன்.
கண்கள் இமைக்காமல் மாறனை பார்த்தாள் பிரியா.
"எவ்ளோ தைரியம் இருந்தா எம்மேல கை வச்சிருப்ப?", என்றபடி எழுந்து வந்து மாறனின் சட்டையை பிடித்தான் அடி வாங்கிய சதைப்பித்தன்.
சட்டென, அவனின் கையை தட்டி விட்டு, வயிற்றில் மிதித்து தள்ளினான் மாறன். வன்கொடுமையாளன் தடுமாறி கீழே விழுந்தான்.
"ஹலோ, இதென்ன சந்தைக்கடைன்னு நினைச்சீங்களா? மரியாதையா வெளிய போங்க. இல்ல, போலீஸ கூப்ட வேண்டியிருக்கும்", தேநீர் விடுதியின் முதலாளி கடிந்து கொண்டார்.
மாறன் தன் அலைபேசியை எடுத்து காணொளி ஒன்றை இயக்கினான். அதில் மேஜைக்கு கீழ் அந்த சதைப்பித்தன் செய்த கேவலமான செயல் ஒளிபரப்பானது.
"ஒங்க ஹோட்டலுக்கு வர்ற பொண்ணுங்களுக்கு, பாதுகாப்பு குடுக்க வேண்டிய கடமை ஒங்களுக்கு இருக்கு சார்”, டீக்கடை உரிமையாளரிடம் மாறன் சொன்னான். அவர் உடனே காவல் அதிகாரியை அலைபேசியில் அழைத்தார்.
எல்லோரும் ஒருவருக்கொருவர் ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் பேசிக்கொண்டிருக்க, சில தைரியவான்கள், கீழே கிடந்த சதைப்பற்றாளனின் சட்டைக் காளரை பற்றிப் பிடித்து தூக்கினர்.
"பொம்பளைங்கள ஒரசறதுக்குன்னே வர்றானுங்க, இவனுங்களை எல்லாரும் உயிரோட கொளுத்தனும்", என்று ஒரு பெண்ணின் ஆவேசமான குரல், கூட்டத்துக்குள் கேட்க, சதைப்பித்தனை பிடித்திருந்த கனவான்கள் அவனை நைய அடித்து உதைத்தனர். உடன் இன்னும் சிலர் சேர்ந்து கொள்ள, அந்த இடமே கலவர பூமியானது.
"ஏண்டி மானங்கெட்டவளே! இவ்ளோ நேரம் அவன் ஒரசறத ரசிச்சிட்டுருந்தியா? பொம்பளையாடி நீயி?", பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் கோபமாக கேட்டு அவளை அறைந்தான்.,
"இல்லங்க", என்றவள் கண்களில் நீர் பெருகி வழிந்தது.
பிரியா பற்களை கடித்தாள்.
"இதுக்குதாண்டி பொட்டச்சி வீட்டோட இருக்கணும்னு சொல்றது. மினுக்கி குலுக்கிட்டு வந்தா இப்டித்தா கண்டவனும் கை வைப்பா. வீட்டோட கெடன்னு சொன்னா கேக்குறியா?! நீ இப்போ கோயிலுக்கு வரலன்னு எந்த சாமி அழுதுச்சு. ச்சீ, வெக்கங் கெட்டவளே! ஒன்னால என் மானமே போச்சு", என்று கூறிய அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன், அவளின் கையை பிடிக்கும் போது, அவனது கன்னத்தில் சப்பென்று விழுந்தது மாறன் அடித்த அடி.
அதிர்ந்து மீண்ட பிரியா, விழிகள் விரித்தாள்.
"நீயெல்லாம் ஏண்டா நாய ஒரு பொம்பளைய கல்யாணம் பண்ணிக்கிற?", மாறன் அந்த பெண்ணின் கணவனிடம் கேட்டான். எச்சில் விழுங்கினான் அவன்.
அழுது கொண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மாறன் சொன்னான்,
"மொத வேலையா, ஹியூமன் நேச்சர புரிஞ்சிக்கத் தெரியாத, இந்த ஜந்துவ டைவர்ஸ் பண்ணு. இல்ல, லைஃப் லாங் உன் பிலிங்ஸ்ஸ வெளிய பேச முடியாமலே செத்துருவ", என்று.
அவள் அதிராமல் பார்த்துக் கொண்டிருக்க, மாறன் சலனமின்றி அந்த உயர்தர தேநீர் விடுதியை விட்டு வெளியேறினான்.
உறைநிலை மாறாமல் அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த பிரியா, சில நொடிகளுக்கு பிறகு, நினைவு வந்தவளாக அவன் சென்ற திசையை நோக்கி ஓடினான். அதற்குள் அவன் தன் இருசக்கர வாகனத்தில் பறந்திருந்தான்.
எனக்கெதுக்கு வம்பு?" என்று ஒதுங்கி ஓடும் உலகத்தில், கண்ணெதிரில் நடந்த குற்றத்தை கண்டித்து கேட்ட, மாறனின் தைரியமா?! பிரச்சினையில் இறங்கும் முன்’ ஆதாரத்தை சேகரித்து, தனக்கான பாதுகாப்பை செய்து கொண்ட அவனின் சாதுர்யமா? பெண்ணடிமையை உடைக்கும் பெண்ணியத்தின் வீரியத்தை ஒற்றை வரியில் பேசிய அவனின் அழுத்தமா? ஏதோ ஒன்று பிரியாவின் நினைவில் ஆழ புதைந்து போனது. அதன் பிறகு வந்த அவளது நாட்களில், அவனை நினைக்காத நொடிகளை தேடிப்பிடிக்க வேண்டியிருந்தது.
பிறகொரு நாளில் மாறனை ஒரு நூலகத்தில், புத்தகங்களுக்கு நடுவே பார்த்தாள் பிரியா. தானாகவே சென்று அவனிடம் பேசினாள்.மாறன் ஒரு புகழ் பெற்ற செய்தி சேனலில், செய்தி சேகரிப்பாளனாக பணி புரிகிறான்" என்பதை தெரிந்து கொண்டாள்.
முதலில் அவளை பெரிதாக சட்டை செய்யாத மாறன், பிறகு அவள் பேசும் பொதுவுடமை வாத கருத்துக்களாலும், அவளின் துறு துறுப்பான செய்கைகளாலும் ஈர்க்கப்பட்டான்.
பல மாத நட்பு திடீரென்று காதலாக மலர்ந்ததில் பிரியாவுக்கு சிறிதும் ஆச்சரியம் இல்லை.
ஒரே சித்தாந்தம் கொண்ட இரு காதல் உள்ளங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் போது, தடைகளும் தயக்கங்களும் தானாக உடைபடும்..
"நோ பிரியா, எனக்கு இந்த தாலி, கல்யாணத்துலலாம் நம்பிக்கையில்ல. நா என் காதலை நம்பலன்னா தான, பாதுகாப்புக்கு கல்யாணத்தை கூட்டு சேத்துக்கணும். எனக்கு என் லவ் மேல நம்பிக்கை இருக்கு", என்று மாறன் சொன்ன போது, அவனின் வாதத்தை எதிர்த்து, முன் வைக்க பிரியாவிடம் எதிர்வாதம் இல்லை.
"ஊருக்காக" என்ற வார்த்தை அர்த்தமற்றது என்று நினைத்தாள்.
சில நாட்கள் தீர்க்கமாக ஆலோசித்த பின், தன் சம்மதத்தை சொன்னாள் பிரியா.
இருவரும் இல்லற வாழ்வில் இணைந்தனர்.காதலோடு காதல் கொள்ளும் ஈர்ப்பு விசை இருவரையும் ஈர்த்து இழுத்தது.
கலவிக்கலை இனித்தது. வாழ்க்கை இதமாக நகர்ந்தது.
தனக்கென்று தனக்கு பிடித்தமான ஒரு இணையை, வாழ்க்கைத் துணையாக ஏற்றதை பிரியா தன் பெற்றோருக்கு அறிவித்தாள்.
சாஸ்திர சம்பிரதாயங்களிலும், பழைமையான சமூக கட்டமைப்பின் மீதும், மிகுந்த நம்பிக்கை கொண்ட, பிரியாவின் தகப்பனார் மகளை தலை முழுகினார். தாயால் அழ மட்டுமே முடிந்தது.
சீரிய முற்போக்கு சிந்தனை கொண்ட, முன்னாள் பத்திரிகையாளரான, மாறனின் தகப்பனார் மகனின் காதலுக்கு ஆதரவு தெரிவித்தார்.
"மாறனுடன் வாழ்ந்த அந்த இரண்டு வருடங்கள் தான் பிரியாவின் வாழ்விலேயே நிம்மதியான காலம்” என்று இப்போதும் அவளின் ஆழ் மனம் நம்பிக் கொண்டிருக்கிறது.
நிம்மதி என்பதென்ன?! "யாருக்கும் எதற்கும் அடிமையாக இராமல் எனக்காக நான் வாழ்வதல்லவா நிம்மதி!!
அந்த நிம்மதியை அவனுடன் வாழ்ந்த நாட்களில் மட்டுமே அனுபவித்தேன்" என்று பிரியாவின் உள்ளம் இன்றும் அவளிடம் அடிக்கடி சொல்கிறது..
வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வது, அலுவலக பணிகளில் வரும் சோதனைகளில், குருவாக வழி நடத்துவது, நண்பனாக அவளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவது, அவளின் விருப்பம் அறிந்து இணை சேர்வது, என்று பிரியாவின் வாழ்க்கை முழுவதும் மாறன் நிரம்பியிருந்தான்.
அதிர்வேதுமின்றி இனிமையாக கடந்து கொண்டிருந்த வாழ்வில், அந்த ஒருநாள் வராமலே போயிருக்கலாம். குறைந்த பட்சம் நானாவது சூழ்நிலையை சற்று பொறுமையாக கையாண்டிருக்கலாம்" என்று இப்போதெல்லாம் பிரியா அடிக்கடி நினைத்துக் கொள்கிறாள்.
மாறனின் பெண்ணிய சிந்தனை மீது பிரியாவுக்கு தனி காதல் உண்டு. அன்று அந்த காதலின் மீதே கேள்விக்குறி உருவாகும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
அன்று இரவு, அலுவலகத்தில் பணி அதிகமாக இருந்ததால், வேலை முடிய நள்ளிரவாகி விட்டது. ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய முயன்ற போது தான் தெரிந்தது, ஸ்கூட்டியின் ஒரு டயர் பஞ்சர் என்று.
அதனால் தன் அலுவலகத்தில், தன்னுடன் பணி புரியும் நண்பன் கிஷோருடன் வீட்டுக்கு வந்தாள் பிரியா.
மிகவும் சோர்வாக வீட்டுக்குள் வந்த பிரியாவை,
"ஏன் பிரியா லேட்டு?", என்ற மாறனின் கேள்வி வரவேற்றது.
சிரித்தாள்.
"கொஞ்சம் வேலை ஜாஸ்தி மாறா", என்றவள் தன் காலணிகளை கழற்றி அதற்குரிய இடத்தில் வைத்தாள்.
"ஒன்ன டிராப் பண்ணிட்டு போனானே!! யாரவன்?",
பிரியா நிமிர்ந்து பார்த்தாள்.
சோஃபாவில் அமர்ந்திருந்த மாறனின் இறுகிப் போன முகம் பிரியாவை கலக்கம் கொள்ள செய்தது.
"தெரியாத மாதிரி கேக்குற?! அவன் எங்கூட வேலை செய்றவன். என் ஃப்ரெண்ட்டு?", சற்றே குரல் உயர்த்தி கேட்டாள்.
"ஃப்ரெண்ட்டுன்னா?",
"ஃப்ரெண்ட்டுன்னா ஃப்ரெண்ட். ஏன்?", பிரியா குரல் உயர்த்தினாள்.
"சரி, ஒ ஸ்கூட்டி என்னாச்சு?", அடுத்த கேள்வியை கேட்டான்.
"பஞ்சராச்சு. இன்னைக்கு என்னாச்சு ஒனக்கு? ஏன் இப்டி கேள்வி மேல கேள்வி கேக்குற?",
"ஸ்கூட்டி பஞ்சரானதும் என்னத்தான நீ கூப்ட்டுருக்கணும்?!. ஏன் கூப்டல?", அவன் நிதானமாக கேட்டான்.
அவள் பொறுமை இழந்தாள்.
"என்னை சந்தேகப்படுறியா?",
"லூசு மாதிரி பேசாதடி", கோபமாக எழுந்தான் மாறன்.
"பின்ன என்னடா? லேட் நைட்டாயிடுச்சு. ஸ்கூட்டி பஞ்சர். அர்ஜெண்டுக்கு அவன்கூட வந்தேன். இதுக்கு போய் இத்தன கேள்வி கேக்குற?",
"லேட் நைட்டாயிருச்சுன்னு தெரியுதுல்ல. இந்த டைம்ல யாரோ ஒருத்தங்கூட பைக்ல தனியா வர்றது சேஃப் இல்லன்னு கூடவா ஒனக்கு தெரியாது. என்னை கூப்ட்டுருக்க வேணாமா?", மாறன் குரலிலும் கோபம் பிறந்தது.
"அவன் யாரோ இல்ல, என் ஃப்ரெண்ட்",
ஹான்,.. தெரியும் தெரியும் ஒங்க ரெண்டு மாசத்து ஃப்ரண்ட்ஷிப் என்னன்னு", என்றவன் கோபமாக திரும்பிக் கொண்டான்.
வாட் டு யூ மீன்? ", அவள் குரல் உயர்த்தினாள். அவன் திரும்பவில்லை.
வேகமாக வந்து அவனின் முகத்தை திருப்பி கேட்டாள்,
நா அவங்கூட அஃப்ஃபைர் வச்சிருக்கேன்னு நினைக்குறியா?",
பைத்தியக்காரி, அவன் நல்லவன் இல்லடி. அவங்கூட தனியா வர்றது சேஃப் இல்லன்னு சொன்னா, என்ன பேசிட்டுருக்க?", அவனும் கோபமாக குரல் உயர்த்தி சொன்னான்.
அவன் நல்லவன் இல்லன்னு எத வச்சி சொல்ற?",
அவன் ஆக்டிவிட்டீஸ்ஸ வச்சு!! அவன் ஒன்னையும் மத்த பொண்ணுங்களையும் பாக்குற அசிங்கமான பார்வைய வச்சு. நா மீடியால வொர்க் பண்றேன் பிரியா. தினந்தினம் இந்த மாதிரி ஆளுங்கள சந்திச்சிட்டுருக்கேன். ஒருத்தன் நல்லவனா கெட்டவனான்னு அவனை பாத்தே என்னால சொல்ல முடியும். இன்னைக்கு நடக்குற பெரும்பாலான ரேப் அண்ட் மர்டர் கேஸஸ்லாம், சரியான புரிதல் இல்லாம, ஃப்ரெண்ட், லவ்வர்ன்னு எவனோ ஒருத்தன நம்பி பொண்ணுங்க அவனுங்க கூட தனியா போறதால தா நடக்குது. புரிஞ்சிக்க", என்று அவன் தன்னிலை விளக்கம் சொன்னான்.
சூப்பர்டா, ஒன்ன என்னவோன்னு நெனைச்சேன். ஆனா நீயும் ஒரு சராசரியான, கேவலமான ஆம்பளைதான்னு காட்டிட்ட", என்றாள்.
அவன் புரியாமல் கண்கள் சுருக்கினான்.
ஊருக்குதா பெண்ணியம், ஒம்பொண்டாட்டி ஒரு பையங்கூட ஃப்ரெண்ட்டா பழகுனா, பாதுகாப்புங்குற பேர்ல அவளை கட்டிப்போட பாப்ப, இல்ல", அவள் கேட்க,
ஏய், நா என்ன சொல்றேன். நீ என்னடி புரிஞ்சிக்கிற?",
போதும், ஒன்ன பத்தி நல்லாவே புரிஞ்சிருச்சு. நாந்தா ஏமாந்துட்டேன்", என்றாள். கண்கள் லேசாக பனித்தது.
ப்ச், சொன்னா புரிஞ்சிக்க ட்ரை பண்ணுடி. கதிர் கூட எத்தனையோ நாள் வந்துருக்க. நா எதாது கேட்டுருக்கேனா? ஏன்னா கதிர் ஒன்னோட ஸ்கூல் மெட். அவன் கேரக்டர் என்னன்னு எனக்கு தெரியும். ஹி இஸ் சேஃப். பட், கிஷோர் இஸ் டேஞ்சர்", என்றான் மாறன்.
யா,….. யூ ஆர் ரைட், கதிர் பத்தி ஒனக்கு தெரியும். ஹி இஸ் மேரீட். சோ, அவன பத்தி பிரச்சினை இல்ல. பட், கிஷோருக்கு இன்னும் மேரேஜ் ஆகல. அதனால ஒனக்கு அவன் மேல பொறாமை, சந்தேகம்",
ப்ச்", மாறன் சலித்து கொண்டான்.
நா அவங்கூட பழகுறதுல ஒனக்கு பொஸெஸ்ஸிவ். அதான் இப்டி கேவலமா சந்தேகப்பட்டுட்டு, சேஃப்டி அது இதுன்னு உருட்டுற", என்றாள் பிரியா.
மாறன் தன்னால் இயன்றவரை தன்னிலை விளக்கம் கொடுத்தான். வாக்கு வாதம் தொடர்ந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணிநேரங்கள் நிகழ்ந்த வாக்கு வாதம் சண்டையாகியது. சண்டை மன முறிவை ஏற்படுத்தியது.
ஓரிரு வாரங்கள் இருவரும் பேசிக் கொள்ளாத சூழலில், மீண்டும் ஒருநாள் கிஷோருடன் வீட்டுக்கு வர வேண்டிய சூழ்நிலை பிரியாவுக்கு உருவானது. ஸ்கூட்டி மீண்டும் பஞ்சர் ஆனது
ஆனால் அது மாலை வேளை தான் என்பதாலும், மாறன் இவ்வேளையில் வீட்டில் இருக்க மாட்டான் என்ற தன் யூகத்தாலும், கிஷோருடன் வந்தாள் பிரியா.
ஆனால் பிரியாவின் யூகம் பொய்யானது. அன்று, மாறன் பிரியாவை சமாதானம் செய்யும் நோக்கத்தோடு, சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்திருந்தான். கிஷோருடன் பைக்கில் வந்து இறங்கிய பிரியாவின் மீது, மாறனுக்கு கோபம் அதிகமானது.
அன்று பேச்சை கோபமாகவே தொடங்கினான். முடிவு, பெரும் முறிவானது.
"ஒன்ன மாதிரி சேடிஸ்ட் கூட என்னால வாழ முடியாது. நா போறேன்", சத்தமாக சொன்னாள் பிரியா.
"போடி, போய்த்தொல!! ஒன்ன மாதிரி லூசு கூட என்னாலயும் இருக்க முடியாது", வேகமாக வந்த கோபத்தில் ஆத்திரத்தோடு கத்தினான்.
"நான் போறேன்" என்று அவள் சொன்னதால், அவனுக்கு வலித்ததை அவள் உணரவில்லை.
"போடி" என்ற சொல்லால் அவளுக்கு ஏற்பட்ட வலியை அவன் அறியவில்லை.
வேகமாக தன் துணிகள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு வெளியேறினாள் பிரியா.
பிரியா மாறனை பிரிந்து வந்ததில் பிரியாவின் அப்பாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
"ஒம்பொண்ணு அந்த வரைமொறை தெரியாத பைய கூட வாழ்ந்த கண்ட்ராவி, நம்மூரு பையலுவளுக்கு தெரியாது. நம்மூர்ல ஒரு பையல பாக்கேன். கண்ண மூடிட்டு கழுத்த நீட்ட தயாரா இருக்க சொல்லு", என்று பிரியாவின் தாயாரிடம் சொன்னார் பிரியாவின் தந்தை.
தகப்பனாரின் கெடுபிடியால் சொந்த ஊரில் இருக்க முடியாத பிரியா, டெல்லியில் இருக்கும் தன் அலுவலக கிளைக்கு பணியிட மாற்றம் வாங்கி வந்து ஆறு மாதங்கள் ஆகிறது.
பிரியாவின் அப்பா புது மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார்.
பிரியா தொலைந்து போன தன் மனதை தேடிக் கொண்டிருக்கிறாள்.
ஓரிரு நாட்களுக்கு பிறகு,
டெல்லி விமான நிலையத்தின் வாசலில்,
"ஹே மாறா”, சத்தமாக அழைத்து கையாட்டினான் ஒருவன்.
"ஏ ஹாய்”, சொல்லி, வேகமாக வந்து அவனை கட்டிக் கொண்டான் மாறன்.
"எப்டிறா வினோத் இருக்க? பிஸினஸ்லாம் எப்டி போகுது?”, மாறன் கேட்க,
"அதுக்கென்னடா? ஜிஎஸ்டி தயவுல டல்லாவே போகுது”, சொல்லி சிரித்தான் வினோத்.
"டல்லாவா?”,
"பின்ன என்ன நல்லாவா போவும்? வரிக்கொடுமை தாங்க முடிலடா மச்சான்?”,
"சத்தமா பேசாதடா. தேசத்துரோகின்னு சொல்லிட போறாங்க”, சொல்லி சிரித்தான் மாறன்.
அந்த பளபளப்பான மாருதி ஹுண்டாய் டெல்லியின் தேசிய நெடுஞ்சாலையில் மிதமான வேகத்துடன் போய்க் கொண்டிருந்தது. டெல்லி மாநகரின் வெப்பம் கலந்த காற்று மாறனின் கன்னத்தில் மோதி கடந்து சென்றது. காற்றை ஆழமாக உள்ளிழுத்து மெதுவாக வெளியே விட்டான் மாறன்.
"நீ டெல்லி வந்துருக்கன்னு பிரியாவுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டியா?”, வினோத் கேட்டான்.
"இல்ல, சர்ப்ரைஸ்”, என்றான் மாறன்.
"பாத்துடா மச்சான், எதையாவது தூக்கி அடிச்சிர போறா”, வினோத் சொன்னான்.
மாறன் சிரித்தான்.
"பிரியா அட்ரஸ் குடு”, மாறன் கேட்டான்.
வினோத் முகவரியை சொன்னான்.
அது ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு. அதன் மூன்றாவது மாடியில், பிரியா தங்கியிருக்கும் வீட்டின் வாசலில் நிறைய செருப்புகள் கிடந்தன.
"பையனுக்கு பொண்ண புடிச்சு போச்சு. ஒங்க பொண்ண ஒரு வார்த்த கேட்டுட்டா நாள் குறிச்சிரலாம்”, பட்டுப்புடவை உடுத்து, நகைகள் அணிந்து அமர்ந்திருந்த, ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி சொன்னாள்.
"அவள என்ன கேக்குறது. நா முடிவு பண்ணா எம்பொண்ணு தட்ட மாட்டா. நீங்க நாள குறிங்க”, என்றார் பிரியாவின் அப்பா.
அறைக்குள் மணப்பெண் அலங்காரத்துடன் அமர்ந்திருந்த பிரியாவின் கண்களின் நீர் வழிந்து கொண்டிருந்தது. மடிக்கணினி வழியாக, தன் அலுவலகத்தின் ஆஸ்திரேலிய நாட்டு கிளைக்கு பணி இடமாற்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தது பிரியாவின் கைகள். அருகிலிருந்த ஆஷாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
திடீரென்று வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. பிரியாவின் தாயார் சென்று கதவை திறந்தாள். விழிகள் விரித்தாள்.
மாறன் வீட்டுக்குள் வந்தான்.
"யார் தம்பி நீங்க?”, பிரியாவின் அப்பா கேட்டார்.
மாறன் சிரித்தான்.
"நா மாறன். ஒங்க மருமகன்”, என்றான்.
திடுக்கிட்டு எழுந்தார் பிரியாவின் தகப்பனார்.
மாறனின் குரல் கேட்டு அறையை விட்டு வெளியே வந்தாள் பிரியா. மாறன் பிரியாவை பார்த்தான். அவளும் பார்த்தாள். அவன் சிரித்தான். நொடியும் தாமதிக்கவில்லை. ஓடி சென்று மாறனைக் கட்டிக் கொண்டாள் பிரியா. மாறனும் அவளை அணைத்து கொண்டான்.
புது மாப்பிள்ளையும் மாப்பிள்ளை வீட்டாரும் அதிச்சியோடு எழுந்தனர்.
"என்ன கருமமுய்யா இது?”, புது மாப்பிள்ளையின் தாய் சீறினாள். ஆஷா சிரித்தாள்.
பிரியாவின் தாய், வெளிக்காட்டிக் கொள்ளாமல் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
"ஊருக்குள்ள அந்தாஸ்தான குடும்பம்ன்னு சொன்னாங்க. சரியான கேடு கெட்ட குடும்பமால்ல இருக்கு. வாடா போலாம்”, ரோஷத்துடன் மாப்பிள்ளை வீட்டார் கிளம்பி விட,
"நா செத்தா கூட ஊர் பக்கம் வந்துராத. இன்னையோட ஒன்னய தலை முழுகிட்டேன்”, என்றபடி வெள்ளை நிற துண்டை உதறி தோளில் போட்டார் பிரியாவின் அப்பா.
மாறனும் பிரியாவும் சொரணையின்றி பேசாமல் நின்றனர்.
"என்னங்க,.. நம்ம பொண்ணு வாழ்க்க”, பிரியாவின் அம்மா பேச முயன்றார்.
"ஒனக்கு புருசன் வேணுன்னா கெளம்பு. இல்ல ஒம்பொண்ணுதா வேணுன்னா அவ கூடயே இருந்துக்க. ஆனா அதுக்கு முந்தி, நா கட்டுன தாலிய கழத்தி தந்துரு”, என்று சற்றே பழமையான வசனத்தை பேசி, தன் உரிமையை நிலை நாட்டியதன் மூலம், தன் மனைவிக்கு பேசும் உரிமை இல்லை என்பதை சொல்லாமல் சொன்னார் பிரியாவின் அப்பா. பிரியாவின் தாய் கண்ணீர் நிறைந்த கண்களுடன், தன் கணவன் பின்னால் நடந்தாள். ஆஷாவும் வெளியே செல்ல முயன்றாள்.
"நீ எங்கடி போற?”, பிரியா ஆஷாவிடம் கேட்டாள்.
"டீ குடிக்க,….. வர டூ ஹவர்ஸ்ஸாவும்”, சொல்லி நயமாக சிரித்து விட்டு சென்றாள் ஆஷா.
எல்லோரும் சென்று, தனிமை கிடைத்தது தான் தாமதம், மாறனின் கன்னத்தில் அறைந்தாள் பிரியா.
ஏய்”, மாறன் சிரித்தான்.
"ஏண்டா எரும, இவ்ளோ நாளாச்சு? ஆறு மாசம் நா இல்லாம ஒன்னால இருக்க முடியுதுல்ல!!. தினமும் ரோட்ல போகும் போது, எங்கியாது ஒ முகம் தெரிஞ்சிராதான்னு பாத்துட்டே போவேன் தெரியுமா?. ஒரே ஒரு ஃபோன் கால் பண்ணிட மாட்டியான்னு எவ்ளோ ஏங்குனேன் தெரியுமா? கொஞ்சமாது பொறுப்பு இருக்காடா ஒனக்கு?”, பட படவென்று பேசிக் கொண்டே மாறனின் நெஞ்சிலும் தோளிலும் மீண்டும் மீண்டும் அடித்தாள் பிரியா. அடித்துக் கொண்டிருந்த அவளின் கைகளை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்தணைத்தான். முத்தமிட்டான்.
முத்தங்களின் ஈரம், நான்கு கண்களில் சுரந்த கண்ணீரின் ஈரத்தில் கரைந்தது. ஊடலின் காயங்கள் கூடலின் நேயத்தில் தொலைந்தது.
காதலுக்கும் காதலுக்கும் இடையில், இறவாமல் இருக்கும் ஈர்ப்பு விசையை தடுக்கும் ஆற்றல் எவருக்கு உண்டு?!
"சாரிடா......, நீ சொன்னத நா சரியா புரிஞ்சிக்கல”, கட்டிலில் படுத்திருந்த மாறனின் ஆடையில்லா நெஞ்சில், தலை சாய்த்திருந்த பிரியா சொன்னாள்.
"ம்ம்”, கொட்டினான்.
"அந்த கிஷோர் ஒரு பொறுக்கின்னு அப்போ எனக்கு தெரீல”,
"ம்ம்”,
"அன்னைக்கு என் ஸ்கூட்டிய பஞ்சர் பண்ணது கூட அந்த நாய்தான்னு அப்புறமாதா தெரிஞ்சது”,
"ம்ம்”,
"சிசிடிவி கேமரா செக்ஷன்ல வேலை செஞ்ச வேலய்யண்ணன் சொல்லித்தா தெரிஞ்சிக்கிட்டேன்”,
"ம்ம்”,
"ஒம்புருஷன் கூட சண்ட போடாத, அவங்கிட்ட பேசுன்னு வேலய்யண்ணன் சொன்னாரு”,
"ம்ம்”,
"என்னடா ம்ம், ம்ம், ம்ம்?. பேச மாட்டியா?”, எழுந்து அவனின் முகம் பார்த்து கேட்டாள்.
"நா ஒம்புருஷனா?”, கேட்டான்.
"இல்லியா?”, கனிவான குரலில் கேட்டாள்.
சிரித்தான்.
"நடந்தது மிஸண்டர்ஸ்டாண்டிங்க்தான்னு தெரிஞ்சதும் எனக்கு ஒரு கால் பண்ணிருக்கலாம்ல?!”, அவன் கேட்டான்.
"ஒ மொகத்த பாத்து பேச தைரியம் வரலடா”, என்றாள்.
"கல்யாணம் பண்ணிக்கலாமாடி?”, மாறன் கேட்டான்.
அவள் அதிசயமாக பார்த்தாள்.
"தாலி மோதிரமெல்லாம் கிடையாது. ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல ரிஜிஸ்டர் பண்ணிக்கலாமா?”, கேட்டான்.
"என்ன திடீர்னு?”,
"எதோ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்க்ல கொஞ்ச நாள் பிரிஞ்சி இருந்ததுக்கே ஒங்கப்பா வேற மாப்ள பாத்துட்டாரே. அதான் நா ஒனக்குத்தான்னு….., என்னை உன் வாழ்க்கை துணைன்னு ரிஜிஸ்டர் பண்ணிரலாம்னு முடிவு பண்ணிருக்கேன்”, என்றான் மாறன்.
நெகிழ்ச்சி நிறைந்த கண்ணீருடன் அவனை கட்டிக் கொண்டாள். அணைத்துக் கொண்டான்.
"ஒன்ன என் வாழ்க்கை துணையா ரிஜிஸ்டர் பண்ணி தர, ஒனக்கு ஒகேவா?”, கேட்டான்.
"ம்ம்”, அவனை கட்டியணைத்த படியே, கண்ணீருடன் மேலும் கீழுமாக தலையாட்டினாள் பிரியா.
அணைப்பின் அழுத்தம் கூட்டினான்.
ஒரே ஒரு கொழந்த பெத்துக்கலாமாடா?”, அவன் முகம் பார்த்து கேட்டாள்.
சிரித்தான்.
ம்ம், பெத்துக்கலாம். அப்போத்தா ஒங்கோவங்கொறையும்”, என்றான். செல்லமாக மாறனின் கன்னத்தில் தட்டி, மீண்டும் அவனை அணைத்துக் கொண்டாள் பிரியா. அரவணைப்பில் காதல் பாதுகாப்பை உணர்ந்தது..
காதல் மீது
காதல் கொள்ளும்
நம்பிக்கை தான் காதல்…….
முற்றும்……..
சக்தி மீனா,………..

Last edited: