• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

17 மனைவியின்...காதலன்!

Bindu sarah

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
65
17காதலன்!

அடுத்த நாள் தலைவலியோடு எழுந்தாள் ராதா, கிருஷ்ணா இரவு முழுவதும் தூங்காமல் அவளை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“டேய் இங்கே என்ன நான் தூங்கரதை சைட் அடிச்சிட்டு இருக்க, என் மேல ஆசை எல்லாம் வளர்த்துக்காத புரியுதா”

‘திமிரை பாறேன்… நானே இவளை வீட்டை விட்டு துரத்த பாடுபட்டால் இவ குடும்ப மானத்தை வாங்கிட்டு இருக்கா இதுல இந்த எகத்தால பேச்சு வேற’

அவ சரக்கு அடிச்சிட்டு புலம்பியதால் ஒன்னும் அவன் முழித்து இருக்க வில்லை.

ராதாவின் இன்ஸ்டா லைவை பார்த்து பிஸ்னஸ் பார்ட்னர் தொடங்கி சொந்தக்காரங்க வரை, ஏன் வீட்டு வேலை செய்யும் அனைவரும் ஏதோ துக்கம் விசாரிப்பது போல.

“என்ன தம்பி இப்படி ஆகிடுச்சி, இனி எப்படி அவளுக்கு கல்யாணம் நடக்கும்”

“அது பிராங்க் சோக்கு நடிச்சது” கிருஷ்ணாக்கு சொல்லி சொல்லி வாய் தான் வலித்தது, ஆனால் அவன் சொல்வதை நம்பத்தான் யாருமில்லை.

தூங்க கண் அசர அசர… போன் மெசேஜ் என்று வந்து ஒரு வழிபடுத்தி விட்டார்கள் அவனது சுற்றமும் நட்பும்.

“நைட்டு முழுக்க, இவ செய்த குளறுபடியில் தூங்காம தவிச்சிடுட்டு இருந்தான், எழுந்ததும் இந்த ரதிதேவியை சைட் அடிச்சி கிழிப்பாங்க”

“ஹா… ஹா சம்பவம் பெருசு போல”

“ஆமா… யாரு சொல்லு நான் அவன் கிட்ட பேசுறேன்”

ராதா முகம் மாறியது.

“கிருஷ்ணா வேண்டாம்டா இட்ஸ் ஓவர்”

“என்னாச்சி சொல்லு நான் பாத்துக்கிறேன் நான் போய் அவன்ட பேசுறேன்”

“இல்லை அவன் என்னை வேண்டா சொல்லி போயிட்டான், எனக்கும் அவன் வேணா”

“சரி பையன் பாக்கட்டா கல்யாணம் செஞ்சிக்கிறியா?” சிறிது நேரம் யோசித்தவள்,

“கிருஷ்ணா எனக்கு ஒன் இயர் டைம் வேணும்”

“சரி.. மாமா மேல பிராமிஸ் செய் தண்ணி இனி அடிக்க மாட்டேன்னு”

“கிருஷ்ணா... ஆஆஆஆ”

“இந்த கொஞ்சல் எல்லாம் வேண்டாம், கேட்டதுக்கு பதில் சொல்லு டி”

“எனக்கு மனசு கஷ்டமா இருக்கும் போது மட்டும்”

“இரு ரகுவரன் கிட்ட சொல்லுறேன்”

“மாமா புரிஞ்சிக்கோ… அதிகம் இல்ல எப்போதாவது கஷ்டமா இருந்தா தான்”

“முடியாது, இதுவரை உன்னை தருதலையா வளர்த்தது போதும், இனி உன் இஷ்டத்துக்கு விடுறதா இல்லை”

“மாமா பிளீஸ் உன் ராதா பாவமில்ல”

“வாயை மூடு, என் ராதாவே லவ் செய்யும் போது தெரியலை பிரேக் அப் ஆகும் போது கூட இந்த கிருஷ்ணா தெரியலை, இப்போ என்ன உன் குடும்பத்து ஆளுங்களா இருந்து இருந்தா, ஒரு வார்த்தை எங்கிட்ட சொல்லி இருப்ப இல்ல”

“கிருஷ்ணா சாரி… சொல்ல கூடாதுன்னு இல்லை டா, அவன் கிட்ட பேசும் போது உலகத்தையே மறந்துட்டேன், வயசு கோளாறு”

“சரி விடு, முடிஞ்சதை சரக்கு அடிக்க கூடாது, அப்புறம் ஒரு வருசத்துல கல்யாணம் புரியுதா. என் கூட ஆபிஸ் வரனும்” வாய் வரை வந்து விழுங்கியவன்.

“ஆபிஸ் பக்கமே வரக்கூடாது” என்று முடித்தான்.

“டேய் கிருஷ்ணா அனுவையும் என்னையும் சேர விட கூடாதுன்னு தானே இப்படி செய்யர. சரி உன் இஷ்டம் ஆனா கஷ்டமா இருக்கும் போது மட்டும் சரக்கு அடிக்கனும்”

“முடியவே முடியாது…” கிருஷ்ணா உறுதியாக சொல்ல.

ஃபோனை எடுத்தவள், “மாமா கிருஷ்ணா நான் எது சொன்னாலும் கேட்க மாட்டங்கிரான்”

ரகுவரன் மாமாக்கு மெசேஜ் தட்டிவிட… அடுத்த செகன்ட் ரகுவரன் கிருஷ்ணாக்கு ஃபோன் போட்டு.

“ஏன்டா கிறுக்கு பயலே, என் தங்கத்தை கொடுமையா படுத்துற. ஒழுங்கா அவ சொல்லுற பேச்சை கேளு” கிருஷ்ணா சொல்ல வருவது காதில் கூட கேட்காமல் கட் செய்துவிட்டார்.

“இந்த அப்பாவை”

“என்ன கிருஷ்ணா திட்டு போதுமா இல்லை இன்னும் ஏத்தி விடட்டா”

“சரி செஞ்சி தொலையுறேன், என்னை குப்பை தொட்டியில் இருந்து எடுத்து வந்து இருப்பாங்க போல. ஒருத்தறாவது மதிக்கறாங்களா ஆனா ஒரு கண்டிசன்”

“என்ன…?”

“மாசத்துக்கு ஒரு முறை தண்ணி, அதுமட்டுமில்லாம வீட்டில் தண்ணி புரியுதா”

“ஒரு நாள் தானா! முடியாது” என்றாள்.

“அப்போ போ ஒரு நாளும் இல்லை”

“சரி சரி விடு… ஒரு நாள் தானே போனா போகுதுன்னு அக்சப்ட் செஞ்சிக்கிறேன்”

“எல்லாம் தலை எழுத்து”

“சரி பத்திரமாக இரு எதாவது வேணும்னா சொல்லு நான் வரும் போது வாங்கிட்டு வரேன். சாப்பாடு சமைத்து இருக்கு சாப்பிட்டு பத்திரமா இரு”

“பாஸ்…”

‘அடுத்த இம்சை வந்திடுச்சி டா’

“கிருஷ்ணா நானும் வரட்டா…”

“ஐஐஐ... ராதாவும் வராலா பாஸ்”

“எதே அவளுமா… அடி பிச்சிடுவேன், அனு கார் கிட்ட வெயிட் செய்"

ராதா புரம் திரும்பி, “பத்திரமாக இரு… நான் வீட்டை பூட்டிட்டு போறேன் உன்னை நம்ப முடியாது. பார் கீருன்னு சுத்த ஆரம்பித்து, கொஞ்ச நஞ்சம் மரியாதையையும் கப்பல் ஏத்திடாத தெய்வமே”

“ஹா ஹா குட் கேர்ள் மாமா… நீ நிம்மதியா போய்ட்டு வா”

“சரி வரேன்… பிரிட்ஜில் ஐஸ் கீரிம் இருக்கு சாப்பிடு ஒரு பாக்ஸ்தான் புரியுதா”

“ஈஈஈஈ… கிருஷ்ணா செல்லக் குட்டி” அவனின் கன்னத்தில் கை வைக்கப் போக.

“ச்சி போடி“ முகத்தை விளக்கிக் கொண்டவன் கையோடு வீட்டை பூட்டிச் சென்றான்.

“ஆமா பெரிய பூட்டு தப்பிக்க முடியாது பாரு… பசிக்குது என்ன சமைச்சி வச்சி இருக்கான்” பாத்திரத்தில் தலையை விட்டு வாசம் பிடித்தாள்.

“ஐ… பூரி மசாலா ஜாலி” சாப்பிட்டவள் தலைவலி மருந்து போட்டு படுத்துவிட்டாள்.

காரில் போகும் அனு, கிருஷ்ணாவை பார்த்து.

“சார் இது எல்லாம் டு மச், எதுக்கு பூட்டிட்டு வரிங்க ராதா பாவம்”

“எனக்கே கஷ்டமாதான் இருக்கு அனு, நேத்து பார்த்த இல்லை என்னால அவளை திரும்ப அந்த நிலையில் பார்க்க முடியாது அது மட்டுமல்லாமல், ரகுவரன் என்ன வளர்த்தான்னு தான் பேசுவாங்க அந்த பெயர் வர நான் இனி விட போவதில்லை”

“சரி சார்… நீங்க சொல்வது சரி தான்”

வேலை எல்லாம் முடித்து கிருஷ்ணாவும் அனுவும் வீட்டுக்கு வர, அனு அவளது போர்சனில் புகுந்து கொண்டாள்.

வீட்டை திறந்தவன்… கைநிறைய அவளுக்கு பிடித்த இனிப்பை கையில் வைத்துக்கொண்டு கூவினான்.

“ராதா உனக்கு பிடிச்ச ஸ்வீட்ஸ் வாங்கி வந்திருக்கேன், வந்து சாப்பிடு” குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே வந்தான்.

கவரில் இருந்த இனிப்புகள் அடங்கிய டப்பாவை எடுத்து டேபிலில் வைத்தவன், பிரிட்ஜில் அடுக்கினான்.

“ராதா… இக்கட ரா… ரா…” என்ற ஸ்வீட் சொன்னதும், நாய் குட்டி போல துள்ளி குதித்து வந்திருப்பாளே எங்கே போயிட்டா ராட்சசி”

அவளது அறையில் எட்டி பார்க்க, படுக்கையை மடித்து வைக்காமல் இருந்தது.

“எருமை மாடு பொண்ணுன்னு ஒரு நினைப்பு கூட இல்லை பைத்தியம், இவளை கட்டி குடுக்கறதுக்குள்ள நானும் ரகுவரனும் என்னென்ன பாடுப்படப் போறோமோ, அந்த இறைவனுக்குர்தான் தெரியும்” படுக்கையை மடித்து வைத்தவன்.

நடக்கும் போது, கிளிப் மேல் கால் வைத்து கிருஷ்ணா காலை அது நன்கு பதம் பார்த்தது.

“ஆஆஆ… பிசாசு ஒழுங்கா வைக்க வேண்டிய இடத்தில் ஒன்னும் வைக்கறது இல்லை. பிசாசு” சிதறிக்கிடந்த அனைத்தையும் அடுக்கத் துவங்கினான்.

“இப்போ தான் ரூம் போல இருக்கு, எங்கே இவளோட சத்தத்தையே காணோம்”

வீடு முழுக்க தேடி விட்டான் ஆளையே காணவில்லை.

“ச்சே…” தரையில் காலை வேகமாக மிதித்தவன்.

அவளது போனுக்கு கால் போட நான் இங்கே தான் இருக்கேன் என்று சோப்பாவில் இருந்து கத்தியது.

“போனைக் கூட எடுக்காம எங்கே போய் தொலைந்தாள், வீடு நல்லா பூட்டிட்டு தானே போனோம்”

கிருஷ்ணா… வண்டியை எடுத்தவன் ஒரு ரோடு கூட விடாமல் தேடினான். அவள் வழக்கமாக போகும் இடம் அனைத்தையும் அலசி தேடியவனுங்கு ராதா கிடைக்கவில்லை.

அனுக்கு தெரிந்த போலிஸ் நண்பனுக்கு விஷயம் சொல்லி தேட சொல்லிட்டு.

“இப்போ வீட்டுக்கு வந்து இருக்கனும் கடவுளே” வேகமாக வந்தவன் ராதா ஹாலில் உட்கார்ந்து கிருஷ்ணா வாங்கி வைத்த இனிப்பை பதம் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“ப்பா.. ரசகுல்லா ரசகுல்லாதான்” சரியாக அவள் வாயில் போடும் போது.

வேகமாக வந்த கிருஷ்ணா… ஒரே அறை தான் ரசகுல்லா எங்கு சென்று விழுந்தது என்றே தெரியவில்லை.

“கிருஷ்ணா எதுக்கு அடிச்ச… இரு மாமாக்கு போன் போடுறேன்” ராதா தனது போனை எடுக்க, கிருஷ்ணா பிடுங்கி சுவற்றில் விட்டெறிந்தான்.

“இனி மாமா கீமான்னு எதாவது வாயில் இருந்து வந்தது மகளை புதைச்சிடுவேன், எங்கே டி போன”

“இங்கே தானே இருந்தேன் வீட்டை பூட்டிட்டு போயிட்டு பேசுறான் லூசு போல”

“தேடின நான் லூசா…”

“ஆமா டா நீ லூசுதான் நான் தோட்டத்தில் இருந்தேன்”

“தோட்டத்துக்கு எப்படி போன நான் தான் பூட்டிட்டு போனேனே”

“லூசு முன் வாசலை தானே பூட்டின, பின் வாசல் திறந்து தான் இருந்தது”

“சாரி டா ராதா”

“எவ்வளவு தைரியம் இருந்தா என்ன அடிச்சி இருப்ப” கிருஷ்ணாவை தள்ளி விட்டவள்.

அவனது தலை முடியை பிடித்து.

“ஏன்டா உனக்கு எவ்வளவு தைரியம், என்னை அடிச்சது கூட மன்னிச்சிடுவேன், என் செல்லக் குட்டியை தட்டி விட்டதை நான் ஏத்துக்கவே மாட்டேன் டா”

“எதே செல்ல குட்டியா?”

“நீ அடிக்கும் போது என் ரசகுல்லாவை தட்டி விட்டுட்ட, பாவம் அது என் வாயில் போய் மோச்சம் பெற இருந்ததை கெடுத்துட்ட, இனிப்பு விக்கிற விலைக்கு வேஸ்டா செய்யற டுபுக்கு பையா”

“அடியே ஒரு ரசகுல்லா தானே விடு என் முடி போச்சி, பிச்சி சொட்டையா ஆக்கிடாத எவன் பொண்ணு கொடுப்பான் எனக்கு”

“இந்த ஜன்மத்தில் உனக்கு கல்யாணம் நடக்க விடமாட்டா டா இந்த ராதா. ஒரு அப்பாவி பெண் வாழ்க்கையை நான் கெடுக்க விடமாட்டேன்”

கிருஷ்ணாவுடன் பேசிக்கொண்டே ராதா எதையோ தேடினாள்.

“ராதா வேண்டா கட்டையை எல்லாம் எடுத்து அடிக்கக்கூடாது”

“ச்சே சே… கிருஷ்ணா உன்னை போய் நான் அடிப்பேனா”

‘ஐயோ எதோ பிளான் போட்டுட்டா கிருஷ்ணா எஸ்கேப் ஆகிடு’ அவளது கையை விளக்கி விட முயற்சி செய்ய.

“அவ்வளவு சீக்கிரம் விட மாட்டேன் டா” கீழே விழுந்த ரசக்குல்லாவை தேடி எடுத்தவள்.

“அழகா இதை சாப்பிடு நான் உன்னை விட்டுடறேன்”

“எனக்கு இது புடிக்காது டி”

“அதுக்கு தான் சாப்பிட சொல்லுறேன்”

கிருஷ்ணா வாயில் போட்டு அடைத்தாள் தினற தினற அவன் விழுங்கியதும்தான் விட்டாள்.

மனதில் ஆயிரம் வலி இருந்தாலும் ராதா அதை மறைத்து இப்படியே அடிதடியாக இந்த ஒரு வருடம் சென்றது.

அவளது வலியை கண்டு கொண்டாலும் கிருஷ்ணா தூண்டி துருவி அவளிடம் எதும் கேட்கவில்லை
 
Top