• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

18. அம்புத நல்லாள்

Sahana Harish

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
49
காதல் ஒர் மாயை.. காணாத காட்சியை உண்மை என சொல்லும்.. காணும் காட்சியை மாயையாய் காட்டும்.. அந்த நிலையில் தான் இருந்தான் பிரதியுமன்.

அம்புத்ரா பற்றிய உண்மை அறிந்து அவளிடம் தனக்கும் அவளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என வந்தவனின் மனநிலை ஓர் நிலையில் இல்லை..அவன் அங்கிருந்த நகர்ந்த அடுத்த நொடி நடந்த விசயத்தை தன் குடும்பத்தினர் அனைவருக்கும் கான்பிரன்ஸ் கால் மூலம் தெரிவித்து இருந்தாள்.. விசயத்தை தெரிந்து கொண்ட நிமிடம் தன் வேலைகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு காண வந்தான் அவன் நண்பனை..

"பிரதி பிரதி கதவை திற.. நான் சொல்றத கேளு.. இதெல்லாம் உனக்காக தான் செஞ்சோம்.. பிளீஸ்"

அவனோ பதிலேதும் கூறாமல் அமைதியாகவே இருந்தான்.

கோபம் வந்தால் அவன் அமைதியாக தான் இருப்பான் ஆனால் இன்று அறையை விட்டு வெளி வராமலும் ஓர் வார்த்தை பேசாமலும் இருப்பதை இவன் நெஞ்சத்தை குத்தி கிழித்து கொண்டிருந்தது.

தன்னால் இயன்ற அளவு பிரதியை வெளியே வரச்சொல்லி கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தான் மைத்ரேயன்.. அப்பொழுதும் அவனிடமிருந்து எந்த ஒரு பதிலும் வராததால் தன் பலம் கொண்டு அவன் அறையின் கதவை ஓங்கி மிதித்தான் அது சிறிது அசைந்து கொடுத்தது.. ஆயினும் அது திறந்த பாடில்லை.. துணைக்கு ஆள் கூட்டி வந்து கதவை உடைத்தேனும் அவனிடம் பேச வேண்டும் என எண்ணம் தோன்ற உடனடியாக விஷாலியின் தந்தையை அழைத்துவந்தான்.

இருவரும் சேர்ந்து கதவை உடைக்க முயற்சி செய்தார்கள். அவர்கள் நல்ல நேரமோ என்னவோ கதவின் தாழ்ப்பாள் உடைந்து திறந்துகொண்டது.

பிரதி எங்கேயோ வெறித்துப் பார்த்தபடி மெளனமாய் அமர்ந்திருந்தான்.

"பிரதி நாங்க செய்தது தப்பு தான் அதை நான் இல்லன்னு சொல்ல மாட்டேன்.. பட் அந்த பொய்ய கூட நாங்க உன்னோட நல்லதுக்காக தான் செய்தோம்.. யோசிச்சு பாரு உனக்கே புரியும்.. இன்னும் எத்தனை நாள் இப்படியே பயந்துகிட்டே இருப்ப?.. அதுக்காக தான் அம்புத்ரா சொல்லவும் நாங்க சரின்னு சம்மதம் சொன்னது.." இவன் பேசி கொண்டே போக அவனிடமிருந்து ஒரு வார்த்தை வரவில்லை.

அறையின் கதவை திறக்க முடிந்த அவனால் பிரதியின் மனக்கதவை திறக்க முடியவில்லை..அவன் பேச பேச பிரதியுமன் அதை செவி மடுத்து கேட்கிறானா என கூட தெரியவில்லை.. அவனின் மெளனத்தை பார்த்த விஷாலியின் தந்தையான ராஜ் " நான் கிளம்பறேன் மைத்து.. பிரதிய பார்த்துக்கோ உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது பட் பிரதி இவன் என்னைக்கும் உனக்கு கெட்டது செய்ய மாட்டான்" என்றவரை பிரதியுமன் பார்த்த பார்வைக்கு அர்த்தம் தான் புரியவில்லை.

அவர் சென்றுவிட "பிரதி உனக்கு எங்க மேல கோபம் இருக்கட்டும் நியாயம் தான் ஏன் இப்படி செஞ்சோம்னு உனக்கு தெரிய வேண்டாமா?"

அவன் மெளன சாமியார் போல் அமர்ந்திருக்க" இப்ப நீ பதில் பேச போறீயா இல்லையா?அம்மு துரோகம் பண்ணிட்டான்னு பப்ளிக்ல கத்தினீயாமே? ஆப்போசிட் சேனல இருந்து ஒருத்தர் கால் பண்ணி சொல்றார் ஹாட் நியூஸ்னு..உங்க சார் பொண்ணு அசிஸ்டெண்ட் கமிஷனர் மேடம் பேச்சு இல்லாம நிக்குறாங்கனு சொல்றான்.. இது எவ்வளவு அசிங்கம் தெரியுமா அவளுக்கு.. இந்த ஊர்ல இருக்க எத்தனை பேர் அவள மரியாதையா பார்க்குறாங்க தெரியுமா? உன்னால இன்னைக்கு அவள ரொம்ப பாவமா பார்க்குறாங்கனு சொல்றாடா..

உன்னோட நிலைமை எனக்கு புரியுது ஆனா கோவத்தை காட்ட வேண்டிய இடம் அது இல்ல.. நல்ல மெச்சூரிட்டி உள்ள ஆள் தானே நீ? முட்டாள் கூட இப்படி செய்ய மாட்டான்"

சாதாரண நிலையில் மனநிலையில் உள்ள ஒருவனிடம் இவ்வாறு பேசினால் கண்டிப்பாக சினம் எட்டிப் பார்க்க தான் செய்யும்.. ஆனால் பிரதியுமன் கல் போல் அமர்ந்திருந்தான்.

இதற்கு மேல் பேசினால் வார்த்தைகள் தடம் மாறுமோ என தோன்ற வெளியே வந்துவிட்டான் மைத்ரேயன்.

'அவள் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்தேன்? இத்தனை நாட்களாக சிறு பொய் கூட சொல்லாதவர்கள் இவளுக்காக குடும்பமாய் ஒன்றிணைந்து ஏன் இவ்வாறு செய்தார்கள்? அப்படி என்ன என்னை விட என் பயத்தை விட அவள் முக்கியமாக போய்விட்டாள்? என்ன மாயம் செய்து விட்டாள்? என்னை மயக்கிய கள்ளி தானே அவள்!' யோசிக்கும் போதே விரக்தி சிரிப்பொன்று உதிர்த்தது அவன் உதடுகளில்.

அதே நேரம் அறை வாசல் தட்டும் சத்தம் கேட்டதும் மைத்ரேயன் மேல் கட்டுக்கடங்காத கோபம் எட்டிப் பார்த்ததில் வியப்பில்லை.. ஆனால் வந்த உருவத்தை பார்த்ததும் அவன் முகம் வெறுப்பில் தகித்தது.

"யுமன் என் மேல கோபமா இருப்பீங்கனு தெரியும்..ஆனா இது என்னோட தப்பு இல்லை.. உங்களோட நல்லதுக்காக தான் இதை செஞ்சேன்" வார்த்தையை முடிக்க கூட விடவில்லை அவன்.

"ஏய் என்னடி ரொம்ப பேசுற? என்ன என்னோட நல்லது? எனக்கு போலீஸ்ன்னா பயம்னு உனக்கு தெரியும் இல்லையா? அப்பறம் ஏன் என்னை ஏமாத்தின? என் குடும்பத்தை கூட எனக்கு எதிரா மாற்றி வச்சி இருக்க! என்ன கொழுப்பு இருக்கணும் உனக்கு? பேசுடி பேசுடி.. ஏன் அமைதியாகவே இருக்க? குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்குதோ? ஒவ்வொரு கேள்வியும் அவன் கேட்டுக் கொண்டிருக்க அவள் எந்தவித சலனமும் இன்றி அமைதியாக அவன் கண் பார்த்து இருந்தாள்.

"இவ்வளவு கேட்கிறேன்ல பதில் சொல்லு" கோபத்தில் அவன் என்ன செய்கிறான் என தெரியாமல் இருந்தான்.

அவள் கழுத்தில் கைவைத்து அழுத்தம் கொடுத்து கொண்டிருந்தான்.. அவன் செய்கை அவளுக்கு வலிக்கவில்லை போலும்.. நேர்க்கொண்ட அவள் பார்வை இவனை தடுமாற செய்ய கழுத்திலிருந்து அனிச்சையாய் கை எடுத்திருந்தான்.

அவன் கையை எடுத்த அடுத்த நொடி "யுமன் உங்களுக்கு இருக்க பயம் போனது உங்களுக்கு தெரியுதா? நான் என்ன டிரஸ் போட்டு இருக்கேன்னு உங்களுக்கு தெரியுதா? அதுவும் இல்லாம ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனர் என்னையே நீங்க கழுத்தை நெரிச்சி இருக்கீங்க இட்ஸ் அப்பன்ஸ் யுமன்.. இப்ப கூட நான் உங்கள அரேஸ்ட் பண்ணலாம்.." என்றவளின் வார்த்தையில் இருந்தது அடக்கப்பட்ட சினமே.

அப்பொழுது தான் கவனித்தான் அவள் தன்னுடைய அம்புவாக வரவில்லை அம்புத்ரா ஐபிஎஸாக வந்திருக்கிறாள் என.

என்ன தோன்றியதோ" நான் பண்ணது தப்பு தான் என்னோட காதலின்ற நினைப்புல உங்ககிட்ட அப்படி கோவப்பட்டுடேன்.. நீங்க தாராளமா என்னை அரேஸ்ட் பண்ணலாம் அசிஸ்டெண்ட் கமிஷனர் மேடம்.." என்றவன் மயங்கி சரிய அவனை தாங்கி பிடித்தபடி "மைத்ரேயன் கால் தி ஆம்புலன்ஸ்" என்றாள்.

அதன் பின் சிறிது நேரத்தில் மனோதத்துவ மருத்துவரின் எதிரில் அரை மயக்க நிலையில் இருந்தான் பிரதியுமன்.

"சார் இவனுக்கு சின்ன வயசுல ஒரு இன்சிடெணெட் நடந்தது அதை மனசுக்குள்ள போட்டு தான் கஷ்டப்படுறதும் இல்லாம எங்களையும் சேர்த்து கஷ்டப்படுத்துறான்.. இவனோட மனச மாற்ற முடியுமா? பழசையே நினைச்சிட்டு பயப்படாம சக மனிஷனா வாழ வைக்க முடியுமா? கேட்டது மைத்ரேயன் தான்.

" கண்டிப்பா முடியும்.. பட் ஹி ஷுட் ஸ்பீக் அவுட்(he should speak out) அவரோட மனசுல இருக்கறத சில பேர தவிர யார் கிட்டயும் சொல்லாம வாழ்ந்து இருக்கலாம்.. லெட்ஸ் செக்" என்றவர் மைத்ரேயன் மற்றும் அம்புத்ராவை வெளியே தனி அறையில் அவன் பேசுவதை கேட்கவும் பார்க்கவும் முடியமாறு இருக்க சொன்னார்.

"டாக்டர் அவர் சரியாடுவார் இல்லையா? அவரோட பயம் போகணும்.. என்னோட எந்த மன கசப்பும் இல்லாம வாழணும்.. முடியுமா?"

"கண்டிப்பா மேடம் டொண்ட் வொர்ரி இவருக்கு இருக்கறது மன அழுத்தம் தான்.. பயத்தை உண்டாக்கின விசயத்தை அவர் பேஸ் பண்ணினா போதும்"

"பட் அது.."

"நான் அவர கேட்டு தெரிஞ்சிக்கிறேன் மேடம் நீங்க போகலாம்"

அவளும் வேறு வழியின்றி தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றாள்.

"உங்க பெயர் என்ன?" பிரதியுமனிடம் தனது கேள்வியை ஆரம்பித்து இருந்தார்.

"நான் பிரதியுமன் கந்தசாமி"

" குட் என்ன செய்யறீங்க? என சில பொதுவான கேள்விகளை கேட்டவர் "நீங்க பாரக்க ரொம்ப ப்பிட்டா(fit) இருக்கீங்களே ஒய் காட் யு டிரை இன் போலீஸ் டிபார்ட்மென்ட்?"

" நோ நோ எனக்கு போலீஸ்ன்னா பயம்.. என்னால முடியாது.."என பயத்தில் அவன் கை கால்கள் துடிக்க ஆரம்பித்தது.

வெளியே இருந்து இதைப் பார்த்து கொண்டிருந்த இருவரின் மனநிலை இறுக்கமாக இருந்தது.

"ஓகே ஓகே ரிலாக்ஸ் பிரதி.. ஏன் என்ன ஆச்சு எதுக்காக பயம்?எதனால வந்த பயம்? எப்ப வந்தது இந்த பயம்?"

"எனக்கு அப்ப ஒரு 10 வயசு இருக்கும்..நானும் என்னோட பேமலியும் கேரளா போய் இருந்தோம்..

இனி பிரதி சொல்வது நம் கண்ணோடத்தில்.

இயற்கை அன்னையின் வரத்தை பெற்ற பகுதிகளில் கேரளாவும் ஒன்று.. காணும் இடம்மெல்லாம் பசுமையை போர்த்தி கொண்டிருக்கும்.. வருடா வருடம் சுற்றுலா பயணிகளின் வருகை அங்கே உயர்ந்து கொண்டே செல்லும்.. அந்த வருடமும் அப்படி தான்.. கந்தசாமிக்கு ஒரு வாரம் விடுமுறை இருக்க குடும்பத்துடன் வெளியே செல்ல திட்டமிட்ட இடம் கேரளா..

சந்தோஷமாய் கிளம்பிய அவர்களின் வாழ்க்கையில் பெரும் புயல் ஒன்று வரவிருப்பது தெரிந்திருந்தால் அப்பயணத்தை வேண்டாம் என விட்டு இருப்பார்களோ என்னவோ? விதி யாரை விட்டது.

இரு குடும்பமும் சுற்றுலா வந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் அன்று கோழிக்கோடு பகுதிக்கு வந்தனர்.. அப்பொழுது படகு சவாரிக்கு கூட்டம் அதிகமாக இருக்கவே சிறிது நேரம் காத்திருக்க எண்ணி ஒர் இடத்தில் அமர்ந்தனர் அக்குடும்பத்தினர்..

"மைத்து வாடா பசிக்குது எதாவது ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிட்டு வரலாம்"

"இல்ல பிரதி எனக்கு பசிக்கல நீ போயிட்டு வா எனக்கு உச்சா வருது நான் அந்த பக்கமாக போயிட்டு வரேன்" பெற்றவர்களிடம் சொன்னார்கள்.

"மைத்து இரு நான் வரேன் உன்கூடவென குருசாமி செல்ல பிரதி நான் வரேன் வா என கந்தசாமி சொல்லவும் வேண்டாம் அப்பா ஆப்போசிட்ல தானே இருக்கு நான் போயிட்டு வரேன்"

எதிரில் இருப்பதால் சரி என்றவர்" சீக்கரம் வா பிரதி தெரியாத ஊர் நான் உன்னை பார்த்துக்கிட்டே தான் இருப்பேன்"

" சரி அப்பா" என சென்றவனை அதோடு நிலைகுலைந்து நிலையில் பார்க்க போவது தெரிந்தால்?"

தொடரும்.
 
Top