• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

18. உன்னாலே உயிரானேன்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
வழமைக்கு மாறாக வேளையோடு வீடு வந்த இருவரையும் எதிர்கொண்ட சித்ரா.



"என்ன அப்பாவும், பொண்ணும் சீக்கிரமா வீட்டுக்கு வந்தாச்சு, என்ன புதினம்?" என்ன வினவிய பின்னர் தான் மதுஸ்ரீ முகம் சோர்ந்து போயிருப்பதை கண்டார்.



"மதும்மா....!" என அவள் அழைத்துவந்து இருக்கையில் அமர வைத்தவர், தானும் அவளை நெருங்கி அமர்ந்து,

"


என்னடா ஆச்சு? ஏன் ஒரு மாதிராயா இருக்க?" என அவள் கேசம் வருடி கேட்டவர் பார்வையோ கணவனை கேள்வியாய் ஆராய்ந்தது.



அவரோ தனக்கு தெரியாது என்பதுபோல் உதட்டை பிதுக்கு தோள்களை குழுக்கினார்.



உண்மை தான் அவளை அழைத்துக்கொண்டு வரும்போதே மகளின் மாற்றத்தை அவரும் கவனித்தார் தான். ஆனால் அவளிருக்கும் மனநிலையை கருத்தில் கொண்டு எதுவும் கேட்கவில்லை அவர்.

"


ஏன்டா...! ஆஃபீஸ்ல ஏதாவது பிரச்சினையாடா?" என பரிவோடு கேட்ட அன்னையை நிமிர்ந்து அவர் விழிகளையே பார்த்தவள் ஆம் என்பதாக தலையசைத்தாள்.

"


எப்பவும் போல உன்னோட பாஸ் சௌந்தரீகன் இன்னைக்கும் சத்தம் போட்டுட்டாரா? அது தான் முகத்தை சோகமா வைச்சிட்டிருக்கியா...?



அவரு குணம் தான் தெரியுமேம்மா..... விடு முதலாளி வர்க்கம் என்டாலே அடக்கத்தான் பார்ப்பாங்க." என தேற்றியவரிடம்,

"


இல்லம்மா..... அவுருமேல தப்பில்ல... நான் தான் புரோக்கிராம் போயிட்டிருக்கிறப்போ கவனத்தை சிதறவிட்டுட்டேன். அதனால தான் என்னை வெளிய போன்னு திட்டிட்டாரு." என்றவளை பெற்றவர்கள் இருவரும் புரியாது பார்த்தனர்.



ஆம்... அவன் தன்னை அறிமுகப்படுத்திய நாளிலிருந்து இன்று வரை அவனை மதுஸ்ரீ அர்ச்சிக்காத நாளில்லை. வீட்டுக்கு வந்ததுமே அவனை பற்றி பாட ஆரம்பித்து விடுவாள். வார்த்தைக்கு வார்த்தை சௌண்டு, அவன், இவன் என்று திட்டி தீர்ப்பவன் இன்று வழமைக்கு மாறாம மரியாதையாக பேசுவது வித்தியாசமாக இருந்தது.

"


சரிடா உன்மேல தான் தப்புன்னா, இனிமே அதே மாதிரி நடக்காம பார்த்துக்கோ. சரியா....?" என்றவருக்கு "ம்ம்.." என அவள் தலையசைக்க,

"


எதை பத்தியும் யோசிக்காம அப்பா கூட பேசிட்டிரு, அம்மா சூடா காஃபி கலந்து எடுத்திட்டு வரேன், அதை குடிச்சதும் எல்லாம் சரியாகிடும்." என கணவனுக்கு கண்ணை காண்பித்து விட்டு கிச்சன் சென்றார் சித்ரா.




நிசப்தமான இரவின் தனிமையில் கட்டிலில் அமர்ந்திருந்தவள் நினைவுகளோ இன்றைய நிகழ்வின் நிழல் படங்களுக்குள் அவளை அழைத்து செல்ல, யார் தொல்லையுமின்றி அதை ஓடவிட்டுக் கொண்டிருந்தவள் கண்களானது கண்ணீரை சுரக்கத்தொடங்கியது.



நிழல் படங்களாய் விழுந்த காட்சிகள் எல்லாவற்றையும் உள்வாங்கியவளுக்கு அந்த காலத்திலேயே இருப்பை போல் தோன்றியது போல,

"


ஆதிரா......." என தன்னையே அறியாது அலறிக்கொண்டு கட்டிலை விட்டு எழுந்து நின்றவள் உடலோ வியர்வை கண்டிருக்க, தன் வயிற்றை அவசரமாக தடவிப்பார்த்தாள்.
அங்கு எந்தவித காயமும் இல்லை என்றதும் கழுத்தையும் வருடிப்பார்த்தாள். எப்போதும் அவள் அணியும் நூல் செயினை தவிர அங்கும் எதுவும் இல்லை.



அந்த காட்சிகளின் நினைவுகளில் விழிகளை அலைபாய விட்டு மூச்சிறைத்தவளால் ஏனோ நிகழ்காலத்திற்குள் வரமுடியாது அங்கேயே அவள் உலன்று கொண்டு நின்றவளை நிகழ்வுலகிற்கு வரவழைப்பது போல் கதவு தட்டும் ஓசையினை தொடர்ந்து உள்ளே வந்த பெற்றவர்களின் உருவத்தை மிரண்ட விழிகளுடன் பார்த்தவளுக்கு இப்போது தான் இருப்பது இரண்டாயிரத்து இருபத்தி இரண்டு என்பது மூளையில் உறைத்தது.



அவசர அவசரமாக விழிகளை கடந்திருந்த கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.



அறை விளக்கினை வினோத் ஔிரவிட, அவளை நெருங்கியிருந்த சித்ரா,

"


ஏன்ம்மா..... என்னாச்சு..?" என பதட்டமாக வினவியவாறு விழிகளால் அந்த அறைமுழுவதும் வலைவிரித்தவர் கண்களுக்ஓு எதுவும் புலப்படவில்லை என்றதும் மதுஸ்ரீயை திரும்பி பார்த்தார்.



அவளாே உடல் முழுவது வியர்த்து கொட்ட பேந்த பேந்த விழித்தவாறு நிற்பதை கண்டதும் 'கனவு கண்டு தான் பயந்துவிட்டாள்' என நினைத்தவர்.

"


கெட்ட கனவு ஏதாவது கண்டியாடா...?" என அவர் கேட்டதும் நின்ற கண்ணீர் மீண்டும் பெருக்கெடுக்க,

"


சரிடா..... ஒன்னுமில்லை..." என தன் கையணைவில் அவளை அழைத்து வந்து கட்டிலில் அமர்த்தி குடிப்பதற்கு தண்ணீரும் கொடுத்தவர்,
"கனவு தானே...! அதுக்கு இப்பிடியா பயப்படுவாங்க? மதுஸ்ரீ என்டாலே தைரியமான பொண்ணுன்னு தான் அர்த்தம். நீயே பயந்தா எப்பிடி?" என்றவர்,

"


சரி இந்த தண்ணீய குடி! கெட்ட கனவா இருந்தா பலிகாமலே போயிடும்." என அவளை தேர்த்தி நீரை குடிக்க வைத்தவர், "ரொம்ப பயமா இருந்தா அம்மா உன்கூடவே படுத்துக்கவா?" என அக்கரையாய் வினவிய மறுகணபே சித்ராவை இறுக கட்டிக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தவள், சிறிது நேரத்தின் பின்னர் அவரை விலக்கி எழுந்து.

"


சாரிப்பா..... சாரிம்மா.... கனவ நிஜம்னே நினைச்சு பயந்துட்டேன்ம்மா....! இப்போ நான் தெளிஞ்சிட்டேன். நீங்க போய் தூங்குங்க." என புன்னகையோடு கூறி அவர்களை அனுப்பி வைத்துவிட்ஞு கட்டிலில் வந்து அமர்ந்தவளுக்கு தூக்கம் தான் வரமறுத்தது.
நீண்ட நேரமாக அதையே நினைத்திருந்தவள் பொழுது புலரும் வேலையில் தான் கண்ணயர்ந்து போனாள்.




மறுநாள் காலையில் இரவினில் தூக்கத்தை தொலைத்தாள் என்பதற்கு எந்த அறிகுறியும் அற்றவளாய் புத்தம் புது மலர் போல் தயாராகி வந்தவளை கண்டவர்களால் நம்பமுடியவில்லை.



நேற்றைய இரவினில் அலறியவள் இவள் தான் என சத்தியம் செய்து சொன்னால் கூட நம்பமுடியாது. அதன் சிறு தடம் கூட இல்லாது வழமைக்கு மாறாகவே புத்துணர்வோடு வந்தவள்,

"


ம்மா.... சீக்கிரம் சாப்பாட்டை போடுங்க.... ஆஃபீஸ் போய் அந்த சௌண்ட ஒரு வழி பண்ணணும்." என்றவள் பேச்சில் எப்போதுமில்லாத குழந்தை தனம் தெரிய, கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரியாது பார்த்தனர்.

"


என்னடா சொல்லுற இன்னைக்கு உனக்கு காலேஜ்ல?" என்றார் சித்ரா அவள் பேச்சு புரியாது.

"


ஆமாம்மா.....! ஆனா நான் இன்னைக்கு காலேஜ் போகல, நேத்து அவர கோபப்படுத்திட்டேன்ல, அதான் சமாதானம் பண்ண வேண்டாமா?"

"


என்னங்க இவ பேசுற? அவன் கோபப்பட்டா இவ எதுக்கு சமாதானம் பண்ணணும்? செய்யிற வேலைய சரியா செய்தாலே அந்த பையன் கோபம் போயிடுமே! எதுக்கு காலேஜ் கட் பண்ணி ஆஃபீஸ் போகணும்? எனக்கென்னமோ இவ இப்பல்லாம் ரொம்ப வித்தியாசமா நடந்துக்கிறாளோன்னு தோணுது. இதெல்லாம் எங்க போய் முடிய போகுதுன்னு தெரியல." என கணவனுக்கு மட்டும் கேட்கும்படி சித்ர கூற,



அவள் தோளினை அழுத்தி சற்று பொறுமை காக்கும்படி இமைகளை முடி திறந்தவர்,

"


ஆனா மதும்மா அவரை நீ ஏன் சமாதானம் பண்ணணும்? அப்பிடியே சமாதானம் பண்ணித்தான் ஆகணும்னா அது உன் திறமையினால தானே இருக்கணும்.... நேர காலம் இல்லாம காலேஜ் கட் அடிச்சு ஆஃபீஸ் போய் அவரை சமாதானம் பண்ணணும்ன்னு என்ன அவசியம்?" என்றார் தெளிவாய்.

"


அப்பிடில்ல அப்பா...! அவரு எப்பிடி ஓவரா பண்ணலாம்..? அதுக்கு அவருகான......" என முன்னர் போல் குழந்தை தனமாய் பேசிக்கொண்டே பெற்றவர்களை பார்த்தவள் அப்போது தான் அவர்கள் பார்வையில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தாள்.



ஆம் இது இவள் குணமே இல்லை. பெற்றவர்களே அறிவுரை கூறும் அளவிற்கு எதையும் தீர்க்கமாக எடுத்து கூறுபவளுக்கு முதல் முறை தந்தையை அறிவுரை கூற வைப்பது மட்டுமன்றி, அவர்கள் வாய் திறந்து பேசுவதற்கு முன்னர் அவர்கள் மனம் அறிந்து நடப்பவள், இன்று அவர்களே தவறென சுட்டிக்காட்டியும் அதை காதிலே வாங்காது அதற்கு நிகராக பேசும் மகளை பார்த்தால் வித்தியாசமாக தானே அவர்களுக்கு தோன்றும்.



அவர்கள் பார்வையின் பொருள் அறிந்தவள்....

"


ஆமாப்பா...! நீங்க சொல்லுறது தான் சரி... என்னோட திறமையினால நான் அவரை சமாதானம் பண்ணிக்கிறேன். இப்போ காலேஜ் போகலாம்." என குற்றவுணர்வோடு தரை பார்த்து நின்றவளை காண கஷ்டமாக இருந்தாலும், மகளின் மாற்றத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது நல்ல பெற்றவர்களுக்கு அழகில்லையே!

"


சரி உள்ள போய் புத்தக பையை எடுத்திட்டு வா! அதுக்குள்ள அம்மா சாப்பாடு எடுத்து வைப்பாங்க." என அவளை உள்ளே அனுப்பி வைத்தவர்,

"


நீ சாப்பாட்டை எடுத்து வை!" என சித்ராவிடம் கூற,

"


என்னங்க எனக்கென்னமோ இவ....." என மேலே கூற வந்தவளை கையமர்வில் பேச விடாது தடுத்தவர்,

"


எதுக்கு நடக்கிறது எல்லாமே கெட்டதுக்குன்னு நினைக்கணும். நல்லதுக்கு என்டே நினைப்போமே!



நல்லா யோசிச்சு பாரு! இதுவரைக்கும் பெததவங்க என்கிற முறையில அவளுக்கு நான் நல்லது கெட்டது சொல்ல வாய்ப்பு அவ தந்ததில்லை. இன்னைக்கு குழந்தை தனமா நடந்துகிட்டு அதுக்கு அவளே சந்தர்ப்பம் அமைச்சு தந்திருக்கான்னு எடுத்துப்போம் சித்ரா." என்றார் சந்தோஷமாகவே.
மதுஸ்ரீ வந்ததும் உணவினை உண்டுவிட்டு காலேஜ் அழைத்து சென்றார்.



எப்போதடா காலேஜ் முடிவடையும் என படிப்பில் நாட்டமில்லாது கல்லூரியையே சுற்றி வந்தவள் எதிர் பார்த்த நேரம் வந்ததும் புத்தகப் பையினை தூக்கிக்கொண்டு, காரில் எறியவள் பொறுமையே காலேஜிலிருந்து அலுவலகம் வரும் தூரம் கூட நீட்டிக்கவில்லை.

"


அண்ணா சீக்கிரமா போங்கண்ணா...!" என ஊந்த, அவளை திரும்பி பார்த்தவருக்கும் அவள் செயல் ஆச்சரியத்தை கொடுத்தது.



இதுவரை ஐந்து பத்து நிமிடம் தாமதமானாலும் பரவாயில்லை... யார் மேலும் வண்டியை ஏத்தாமல் நிதானமா போகச்சொல்லவள் பேச்சு எதிர்மறையாய் இருந்தால் ஆச்சர்யப்படத்தானே செய்யவார்.



பத்து நிமிட தாமதத்தின் பின்னர் அலுவலகத்தில் அவளை இறக்கிவிட சிட்டாய் பறந்து உள்ளே சென்றவளை வரவேற்றாள் ஹம்சி.

"


வாங்க மேடம்..! உங்களை தான் இந்த ஆஃபீஸே எதிர் பார்த்திட்டிருக்கு...." என நக்கல் தொணியில் ஆரம்பித்தவள்,

"


நேத்து என்னடி வில்லங்கத்தை இழுத்து வைச்ச?



உன்னோட சௌண்டு சுடுதண்ணி குடிச்சவனாட்டம் காலையில இருந்து எல்லார் மேலயும் காரணமே இல்லாம எரிஞ்சு விழுந்திட்டிருக்கான்.



நீ வந்ததும் நேரா உன்னை தன்னோட ரூம்க்கு வர சொன்னான்." என்றவள்,

"


ஆமா நேத்து உனக்கும் சாருக்கும் போர் என்டு மாயண்ணா சொன்னாரே! என்னாச்சு?" என அவள் கேட்க.

"


சொல்லுறேன்டி... அதுக்கு முன்னாடி என் சௌண்ட பார்த்துட்டு வரேன்." என சிரித்துக்காெண்டு அவளை மதுஸ்ரீ கடந்து செல்ல,

"


இங்க என்னங்கடா நடக்குது..?



ஆமா இவ நார்மலா இருக்காளா? இல்ல நான் தான் அப்நார்மலா இருக்கேனா?



நேத்துவரை சௌந்தரீகன் என்ட பெயரை கேட்டாலே எரிஞ்சு விழுறவ, இன்னைக்கு நான் பேசிட்டிருக்கிறேன், என்னையே உதாசீனம் பண்ணிட்டு அவனை பார்க்க சிரிச்சிட்டே ஹாப்பியா போறாளே!" என தனக்கு தானே பேசியவளை தமிழ் தூர இருந்து பார்த்தவாறு வந்தவன்.

"


இங்க நிறைய பேரை பைத்தியக்கார ஹாஸ்பிடல்ல சேர்க்கணும்." என்றான் அவளுக்கு கேட்குமாறு.

"


ஆமா ஆமா... முதல்ல உன்னை தான் புடிச்சி குடுக்கணும், ஏன்னா நீதான் முழு பைத்தியம்." என்றவள் கண்கள் காதலாய் அவனை காண, அதை கருத்தில் கொள்ளாதவனோ,

"


மதுஸ்ரீ வந்திட்டாங்களா?" என்றான்.

"


ம்ம் வந்திட்டா தமிழ். சாரை பார்க்க போயிருக்கா" என்க.

"


ஓ..." என்றவன், "நீங்க வீட்டுக்கு கிளம்பல.?"

"


கிளம்பணும்... இவ இப்ப தானே உள்ள போயிருக்க, வரும்போது அருவியை திறந்துவிட்டு வருவா, அவளை தேர்த்துறத்துக்கு நின்னே ஆகணும். கொஞ்ச நேரம் நின்னு பார்த்திட்டு போவாம்." என சிரித்தவாறு சொன்னவள் பேச்சில் அவர்கள் நட்பின் ஆழத்தை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.



அவனும் மதுஸ்ரீ வந்த நாளிலிருந்து இருவரது நட்பினையும் பார்த்துக்கொண்டிருக்கிறான். குறுகிய கால இடைவெளியில் ஒருவரை ஒருவர் இவ்வளவு இலகுவில் புரிந்து கொண்டு, யாரிடமும் விட்டுக்கொடாது நடப்பதென்பது யாருக்கும் கிடைத்திடாத அரிய வரம் ஆயாற்றே!



சொல்லப்போனால் தமிழுக்கே இவர்களது நெருங்கிய உறவில் பொறாமை எழாமல் இல்லை.

"


சரி சரி அவங்க வந்ததும் ஆறுதல் பா படிச்சிட்டே கிளம்புங்க.." என சிரித்துவிட்டு கடந்து சென்றவன் புன்னகையில் வசீகரிக்கப்பட்டு செல்லும் அவனையே பார்த்து நின்றாள் ஹம்சி.



இங்கு அத்தனைநேரம் அவனை காணும் ஆவலில் இருந்த மதுஸ்ரீ. உத்தரவு வேண்ட மறந்து ஆர்வமிகுதியில் உள்ளே நுழைந்தாள்.



அதுவரை முகத்தை கடுகடுவென வைத்திருந்த அவனுமே, கதவு திறக்கும் ஓசைகேட்டு ஆர்வமாக நிமிர்ந்து பார்த்தவன் அவளை கண்டதும் மலர்ந்த வழிகள் மறு நொடியே அலட்சியத்தை வெளிப்படுத்தியது.

"சென்ஸ்


இருக்கா உனக்கு? எதை முதல்ல கத்துக்குறோமா இல்லையோ நாகரீகத்தை கத்துக்கணும், இன்னொருதங்க ரூம்க்குள்ள வரும்போது உத்தரவு கேட்டுட்டு உள்ள வரது தான் பண்பு. ஆனா நீ திறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழையிறது போல உள்ள வர," என அவள் மனதை நொருக்குவதற்காக சொன்னவன் பேச்சு அவளிடம் சற்றும் எடுபடவில்லை.



மாறாக சிரித்த முகமாக அவன் முன் கைகட்டி நின்று அவனை ரசித்தவள் செயல் என்றுமில்லாது வினோதமாக இருந்தாலும் அதை தான் கண்டுகொண்டேன் என்பதை காட்டிக்கொடாமல்,

"


நான் உன்கிட்ட தான் பேசிட்டிருக்கேன். நீ என்னடான்னா ஏதோ நான் பாராட்டிட்டு இருக்கிறமாதிரி சிரிச்சிட்டே கேட்டுட்டிருக்க, ஆமா நீ தான் நேத்து போன்னு சொன்னதும் இது தான் வாய்ப்புன்னு ஓடினவளாச்சே! அப்பிடியே போக வேண்டியது தானே? இப்போ என்னத்துக்கு இங்க வந்து நிக்கிற?" என மீண்டும் அதே தோறணையுடன் அவன் வினவ,



அதே புன்னகை மாறாது நின்றவளை கண்டதும் இம்முறை கோபம் எல்லை கடந்தது.



இருக்கையிலிருந்து கோபமாக எழுத்து அவள் ரசனையை கெடும்கும் விதமாய் மேசைமேல் பெரிதாய் ஓர் தட்டு தட்டி அவள் கவனத்தை திசை திருப்பியவன்,

"


நான் பாட்டுக்கு கத்திட்டிருக்கேன், நீ என்னடான்னா பல்ல காட்டிட்டிருக்க, உன் மனசில என்ன பெரிய அழகின்னு நினைப்பா?" என சற்று கோபமாகவே கேட்டான்.



இப்போதும் அதே புன்னகை மாறாது கட்டியிருந்த கைகளை இறக்கி விட்டு அவன் மேசையின் முன்பு வந்து அதில் தன் கைகள் இரண்டையும் உன்றி அவன் முகத்துக்கு நேரே தன் முகத்தை கொண்டு சென்றவள்,



"உன்னோட இந்த மாதிரி பேச்சுக்கு எனக்கில்லை, யாருக்கா இருந்தாலும் கோபம் வரும், ஆனா பேசிட்டிருக்கது என்னோட உயிர் என்கிறப்போ எனக்கு கோபமே வரல, மாறா ரசிக்கத்தான் தோணுது.


உனக்கு ஒன்னு தெரியுமா ஆதிரா....? நீ சாதாரணமா இருக்கிறதவிட, கோபப்படுறப்போ தான் அழகா இருப்ப? அதுவும் என்கிட்ட மட்டும் கோபப்படும் போது பேரழகனா தெரியுற," என்றாள் ரகசியம் போல் அவன் காதின் அருகில்.


அவள் பேசியதும், பேசிய விதமும் அவனுக்கு பிடிக்கவில்லை போல சட்டென அவளை தன் முகத்துக்கருகிலிந்து தள்ளி விட்டவன்,


"லூசா நீ......? உன் இஷ்டத்துக்கு உலறிட்டிருக்க. நான் என்ன கேட்கிறேன் நீ என்ன பேசிற? நேத்து பெரிய இவ மாதிரி போன்னு சொன்னதும் போனவ அப்பிடியே போக வேண்டியது தானே! எதுக்கு இங்க வந்து என் உயிரை வாங்கிற?" என கொந்தளித்தவன் கோபம் அவளை எதுவும் செய்தது போல் தெரியவில்லை.

"அது எப்பிடி ஆதிரா.....? உன்னை விட்டு போறதுக்கா இத்தனை வருஷம் தவமிருந்தேன்.
என்மேலான காதலை உனக்குள்ள ஒழிச்சு வைச்சு இந்த வாட்டியும் என்னை ஏமாத்தலாம்ன்னு பார்க்குறியா?


மாட்டேன்.... உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன்.
இந்த வாட்டி கண்ணுமட்டும் உன் காதலை சொன்னா போதாது. உன் மனசில இருக்கிற என்மேலான காதலை வார்த்தையாலும் கேட்கணும். கேட்கிறது மட்டுமில்லை,
உன்கூட சேர்ந்து பலவருஷம் வாழணும். அதுவும் இனி நமக்கு பிறப்பொன்று ஒன்று வேண்டாம் என்கிற அளவுக்கு சந்தோஷமா வாழணும்." என்றவள்,


"டைம் ஆச்சு போலாமா?" என்றாள்.


அதுவரை அவள் பேச்சினை ஒற்றை புருவ உயர்வில் புரியாது கேட்டுக்கொண்டிருந்தவன், அவள் போலாமா என்றதும் எங்கு அழைக்கிறாள் என்றது தெரியாமல்,


"எங்க போலாமா?" என்றான் எப்போதும் போல் இறுகிய குரலில்.


அவன் கேட்ட விதம் சிரிப்பை வர வழைக்க அதை மறைக்காது இதழ்களினை பிரித்து புன்னகைத்தவள்,


"


இந்த நேரம் எங்க கூப்பிட போறேன்? ஐந்து மணிக்கு இன்னும் பத்தே நிமிஷம் தான் இருக்கு. புரோக்கிராம் ஆரம்பிக்க போகுது. இங்கேயே நின்னு பேசிட்டிருந்தா உனக்கும் பொறுப்பில்லன்னு சொல்லுவாங்க." என சிரித்தவாறு கூறிவிட்டு நடந்தவள், நின்று திரும்பி அவனை பார்த்து,

"அதுக்குள்ள என்கூட வந்திடணும்ன்ன அவசரம் போல?" என கூறி சிரித்துவிட்டு நடந்தவளை பார்த்தவனுக்கு,
"நேத்துக்கூட நல்லா தானே இருந்தா! இன்னைக்கு திடீர்ன்னு என்னாச்சு?" என புலம்பியவாறே பின்னே சென்றான்.
 

Vimala Ashokan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
274
Ada.. ivalukku ennamo aachu...
intha kaththu kaththuraan loosu pola sirichittu irukka..
 
Top