• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

18. தீரா - "மௌனமாய் ஓர் யுத்தம்"

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
"மௌனமாய் ஓர் யுத்தம்" என்ற நாவலை இதோ நூறாவது தடவை வாசித்து விட்டான்.
அவன் ரஷி..!!

எழுத்தாளர் மதிநிலா எழுதியது. அதிலுள்ள ஒவ்வொரு சொல்லும் அவனது அடிமனதில் பசுமரத்தாணி போல பதிந்து போனதன் விந்தையை என்னவென்று சொல்வது...!!

அந்த நாவலில் முழுக்க முழுக்க தலைவனால் ஒதுக்கப்பட்ட தலைவியின் காதல் பற்றியே சித்தரிக்கப்பட்டிருந்தது.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த தலைவியோ அழகாக இருந்தாலும் நிறத்தில் தலைவனை விட மங்கியவள். இயற்கையிலே அதி புத்திசாலியானவளோ தனக்குப் பிறகுள்ள சகோதரர்களின் நிலையை கருத்திற் கொண்டு தன் கல்வியை மேற்கொண்டு தொடரவில்லை. அதன் விளைவு இதோ தலைவனின் சுடு வார்த்தைகளுக்கு ஆளாகுகிறாள்.

அவளது தந்தை அவளுக்கு வரன் பார்த்திருப்பதாகக் கூற முதலில் அதிர்ந்து பின் தன்னை சுதாரித்துக் கொண்டவளாக திருமணம் செய்ய மறுக்க தாயின் கூரிய வார்த்தைகளில் மரித்தாள்.

திருமண வயதாகியும் வரன்கள் அமையாததால் மன அழுத்தத்திலிருந்த அவளது தாய், மகளென்றும் பாராமல் வார்த்தைகளை விட்டு விட வலிகளை விழுங்கிக் கொண்ட மதியவளோ தந்தையின் உடல் நிலையைக் கருத்திற் கொண்டு திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டாள்.

அதன் பிறகே அவளுக்கு தன் கணவனாகப் போகின்றவன் பற்றிய உண்மைகள் தெரிய வருகின்றன. அவனை புகைப்படத்திலே முதன் முதலில் பார்த்தாள். சங்க கால இலக்கியங்களில் வர்ணிக்கப்படும் தலைவனைப் போல வசீகரமான சிரிப்புடனிருந்தவன் அந்நொடியே அவளின் மனதில் பச்சைக்குத்தி அமர்ந்து விட்டான். படிப்பிலும் செல்வத்திலும் அவளுக்கு எட்டாக்கனியே அவன்.

"இவர் எப்படி என்னை மணந்து கொள்ள சம்மதித்தார்...?" என்று இவள் இங்கே நினைத்திருக்க அங்கே அவளின் சிந்தனைக்குரியவனோ கோபத்தில் அறையிலிருந்த பொருட்களையெல்லாம் கீழே தள்ளி விட்டு ஆஆஆஆஆ என்று தலையை பிடித்துக் கொண்டு கத்தியவன் "இவளுக்கு என்ன தகுதி இருக்கு என்று என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டாள்..." என சீறிக் கொண்டிருந்தான்.

அவனது தந்தையை மீறி அவனுக்கும் ஒன்றும் செய்து விட முடியாத நிலை. அனைத்தையும் பேசி முடித்து விட்டு, இவள் தான் உன் மனைவியாகப் போகிறவள், நாளை உனக்கு திருமணமென்ற தகவலை மட்டும் தந்தால் அவனும் என்னதான் செய்வான்...!? தனக்கு கொஞ்சம் கூட தகுதியில்லாதவளுடன் தான் வாழ்வதா..?? என்றே இப்படி வெறிபிடித்து நிற்கிறான்.

திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் கடந்திருந்தும் அவர்களிடம் ஓர் ஒட்டுதல் வந்திருக்கவில்லை. அவளை தினமும் வார்த்தைகளால் குத்திக் கிழிப்பவனிடம் நேருக்கு நேர் நின்று வம்பு செய்பவளோ தனிமையில் மன வேதனையில் அழுது தீர்ப்பாள்.

அப்படியிருக்க எப்போது அவளது மனதினுள் அந்த ராட்சசன் நுழைந்தான் என்று தெரியாதளவு அவன் மேல் காதல் பித்தாகி இருந்தவள் தன் மனக்குமுறல்களை இதோ புத்தகமாக செதுக்கி இருந்தாள். ஆம் இது மதிநிலாவின் உதிரத்தில் உறைந்து போன வடுக்கள். அவளே ரிஷியின் மனைவி...!!

அவள் அவனுக்கென்று விட்டுச் சென்றது இந்த நினைவுகள் சுமந்த புத்தகம் மட்டுமே. வழமை போல அதனை வாசித்து முடித்தவனின் விழிகளில் நீர் கோர்த்திருந்தது. நேரத்தைப் பார்க்க நல்லிரவு பன்னிரண்டு மணியென்றிருக்க அப்படியே எழுந்து அருகிலிருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்து கொண்டவன் உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்துடன் அந்த அறையைப் சுற்றிப் பார்த்து ஆழ்ந்து சுவாசித்தான்.

அவனவள் வாழ்ந்த அறையது..! தன்னவளின் வாசத்தை நுரையீரலினுள் நிரப்பிக் கொண்டவன் வேகமாக வெளியேறி தனதறைக்குள் வந்து உறங்கி விட்டான். கடந்த மூன்று மாதங்களாக அவனின் தேடல் தொடர்கிறது. தேடலுக்குரியவளைத் தான் காணவில்லை. தூக்கம் வராமல், கண்கள் மூட மறுக்க பால்கனியில் வந்து நின்று கொண்டான்.

பௌர்ணமி நிலவை வெறித்தவனுக்கு அது அவனது மதிநிலாவை நினைவு கூர்ந்தது. அவளும் இந்த நிலவைப் போலத் தானே. வட்டமான முகத்தில் எப்போதும் ஓர் குறும்புப் புன்னகை ஒட்டியிருக்கும். வேண்டுமென்றே இவனைச் சீண்டி திட்டுக்கள் வாங்குவாள். அதை நினைக்க நெஞ்சம் வலித்தது. மார்பை தடவி விட்டவன் அவள் பிரிந்து சென்ற கணத்தை நினைத்துப் பார்த்தான்.

...


சரியாக மூன்று மாதங்களுக்கு முன்.

கட்டுக்கடங்காத தன் கோபத்தை கட்டுப்படுத்த வழியின்றி பற்களை நறநறுத்தவனின் கை முஷ்டியோ நேரம் செல்லச் செல்ல இறுகியது.

அவன் முன்னே ஏழு மாத கருவை சுமந்தவளாக அவனின் நண்பனின் மனைவி பவித்ரா..!

களைப்பில் இடுப்பை பிடித்துக் கொண்டு கணவனின் தோளில் தலைசாய்த்திருந்தாள்.

"எ..என்னங்க..?" என கால் வலியில் முகத்தை சுருக்கியவளைப் பார்க்க அவளது கணவன் மித்ரனுக்கும் பாவமாக இருந்தது. ரிஷியை பரிதாபமாக திரும்பிப் பார்த்தவனின் பார்வையை சந்திக்க முடியாமல் முகத்தை திருப்பியவனுக்கு முன் இன்னேரம் அவள் நின்றிருந்தால் பார்வையாலே சுட்டுப் பொசுக்கியிருப்பான்.

அந்தளவுக்கு அவன் தாலி கட்டியிருந்தவள் கோபப்படுத்தியிருந்தாள். அவர்கள் குடியிருப்பதோ அப்பாட்மன்ட் ஒன்றில். பார்க்க முழுமையான வீடு போலத் தான் இருக்கும். ரிஷியின் வீட்டு முதன்மை நுழைவாயிலைத் திறந்தால் தான் மித்ரன் வசிக்கும் மேல் தளத்திற்கு செல்ல முடியும். அப்படியிருக்க மணி எட்டைத் தாண்டியிருந்தும் அவனது மனைவி இன்னும் வீடு வந்து சேர்ந்திருக்காத கோபமே அவனுள்... ஏனென்றால் சாவி அவளிடம். இவர்கள் மூவரும் கம்பனியொன்றில் வேலை செய்து கொண்டிருக்க அவள் வீட்டில் வெட்டியாகயிருப்பதால் எப்போதும் சாவி அவளிடமேயிருக்கும். தனக்கு தேவையானதை பகலில் வாங்கி வருபவள் இப்படி ஒருநாளும் இரவு வரை வெளியில் நின்றதில்லை.

தன் நண்பன், கர்ப்பமான மனைவியை வைத்துக் கொண்டு குளிரில் வெளியே நிற்பதை அவனால் சகிக்க முடியவில்லை. எல்லாம் அவளால் வந்த வினையென மொத்த கோபமும் அவள் மீது திரும்பியிருந்தது. அவளே மதிநிலா...!

ஆனால் அங்கே இவர்களின் இந்த நிலைக்கு காரணமானவளோ தன் மொத்த சந்தோஷத்தையும் அள்ளிக் கொண்டவளாக கையில் ஓர் பையுடன் முச்சக்கர வண்டியில் வந்திறங்கினாள்.

வண்டி சத்தம் கேட்டு மூவரும் திரும்பிப் பார்க்க அங்கே மதியோ முகத்தில் பூத்த புன்னகையுடன் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

இவளைக் கண்டவுடன் மித்ரனும் பவித்ராவும் நிம்மதி பெருமூச்சு விட்டனரென்றால் ரிஷிக்கோ அவளது சிரிப்பு எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணெய்யை வார்ப்பது போல் தகிக்கச் செய்தது.

மதியோ ஒரு நிமிடம் இவர்கள் வெளியே நிற்பதைப் பார்த்து குழம்பிப் போனாலும் மீண்டும் உதட்டில் உறைந்த புன்னகையுடன் தன்னவனை நோக்கி வந்து "என்ன எல்லோரும் ஜாலியா வெளில நிற்கிற மாதிரி இருக்கு..?" என கண்சிமிட்ட பவித்ராவிற்கும் மித்ரனுக்கும் புஸ்ஸென்றிருந்தது. பின் நண்பனையறிந்தவனாக ரிஷியை திரும்பிப் பார்க்க அவனுக்கோ கோபத்தில் முகம் சிவந்திருந்தது.

"என்ன சார்.. ஆபிஸ் சாப்பாட்டுல காரம் ஜாஸ்தியோ..? முகம் கடுகடுனு இருக்கு.." என தன்னவனை கோபப்படுத்துகிறோம் என்பதையறியாமல் அவள்பாட்டிற்கு வழமை போல ரிஷியை வம்பிழுக்க அவனோ தலையை மேலும் கீழும் ஆட்டி வைத்தான். ஆனால் கண்களில் அத்தனை ரௌத்திரம்..

"ம்ம் அது சரி..." என்றவள் அவர்கள் கேட்காமலே "இன்னைக்கு முக்கியமான வேலை இருந்துச்சு அது தான் லேட்..." என்றவளிடம் "ஓஓஓ மேடம் அப்படி என்னத்த வெட்டி கிழிச்சிட்டு வரீங்க...?" என கிண்டலடித்தான் ரிஷி.

அது கூட புரியாதவளாய் "வெட்டிக் கிழிக்கலங்க.. ஒட்டி ப்ரிண்ட் எடுத்துட்டு வரேன்..." என்று கண்சிமிட்டி சிரித்தவளாக பையிலிருந்த ஏதோ ஒன்றை எடுத்து நீட்டப் போக அடுத்த கணமே அவளுடன் போய் அந்தப் புத்தகமும் தரையில் விழுந்தது.

"டேய் ரிஷி.." என மித்ரன் அதிர்ந்ததெல்லாம் ஓர் வினாடியே என அவளது கற்றை முடியை கையால் பற்றி அவளை தூக்கி நிறுத்தியவன் மீண்டும் மதிக்கு கன்னத்தில் அறைந்த வேகத்தில் மென்மையான பெண்ணவளின் பட்டு உதடு கிழிந்து இரத்தம் கசிந்தது.

கண்களையிருட்டிக் கொண்டு வர அப்படியே தரையில் மயங்கி வீழ்ந்தாள் பேதை.

"டேய் பைத்தியகாரனே.. அறிவில்லையாடா..." என்று மித்ரன் திட்டியதெல்லாம் அவனது செவியில் விழவில்லை.

பவித்ராவிற்கு எழுந்து நிற்கக் கூட முடியாத நிலை. மதியை கண்கள் கலங்க பார்த்திருந்தவளுக்கு தன்னால் தானே அவளுக்கிந்த நிலை என குற்றவுணர்ச்சியும் மேலோங்கியது.

ஓடிச் சென்று மதியை தாங்கியது என்னவோ மித்ரன் தான். "மதி..மதி.." என கன்னம் தட்ட ம்ஹூம் அவளிடம் அசைவில்லை. அதைப் பார்த்துக் கூட மனம் இரங்காமல் அவளது கணவன் நின்றிருந்தது தான் வேதனைக்குரிய விடயம்..

அவசரமாக நீரெடுத்து வந்து அவளின் முகத்தில் தெளிக்க சிறு அசைவு அவளிடம். மங்கலாக தெரிந்த இடத்தை மீண்டும் கண்களை மூடித் திறந்து பார்த்தாள். எழுந்து கொள்ள முயற்சித்தவளுக்கு அது முடியாமல் போக மீண்டும் தடுமாறி விழப் போனவளை மித்ரன் பிடிக்கப் போக அவனை கையை நீட்டி தடுத்திருந்தவள் தானாக எழுந்து நின்றாள். சுவரை பிடிமானத்துக்காக பிடித்து நின்றவளுக்கு கன்னம் எரிந்தது. வலியில் முகத்தை சுளித்தவள் கன்னத்தை தொட அவளது வாயருகில் கசிந்திருந்த இரத்தம் விரலை நனைத்தது. அதைப் பார்த்து கசந்து புன்னகைத்தவள் தன்னவனை பார்க்க, அவளுக்கு இந்த வலியும் போதாது என நினைத்தானோ இத்தனை நாட்களும் தன்னுள் அடக்கி வைத்திருந்த கோபத்தையெல்லாம் அங்கே ஓர் இதயம் துடிப்பதறியாது வார்த்தைகளால் பொசுக்கி விட்டான்.

அவளருகில் மின்னலென வந்தவனைக் கண்டு பயத்தில் ஓரெட்டு பின்னே சென்றவளிடம் "எங்கடி போன இவ்வளவு நேரமும்...?" என்றான்.

எதற்காக இந்த கோபமும் தண்டனையும் என்பதறியாதவள் "வெ.. வெளியே கொஞ்சம் வேலை இ..இருந்துச்சு.."என்றாள் அங்கே வீசப்பட்டு கிடந்த புத்தகத்தை வலியுடன் பார்த்தவாறு.

"அறிவில்லையாடி.. யூஸ்லெஸ் ஃபெலோ.. அங்க ஒருத்தி கர்ப்பமா முடியாம நிக்கிறா.. இவ என்னடான்னா அழகா அழங்கரிச்சிட்டு வெட்டியா ஊர் சுத்திட்டு வராலாம்..." என வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.

அந்த வெட்டியில் சுருக்கென்று கோபம் வர மதியோ "நான் ஒன்னும் வெட்டியா ஊர் சுத்திட்டு வரல.." என முகத்தை கோபத்துடன் திருப்பியிருந்தாள்.

அதில் அவனோ "அப்படியே அறைஞ்சேனு வை..."என மீண்டும் புறங்கையை நீட்ட அவனை தடுத்திருந்தான் மித்ரன்.

தங்களுக்கு தீர்வைத் தராமல் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதில் கடுப்பானவன் ரிஷியிடம் "மொதல்ல உள்ள போய் பேசிக்கலான்டா .. அவ வேற முடியாம நிற்கிறா.." என பவித்ராவை பார்த்தான்.

ரிஷி மேலிருந்த கோபத்தில் "ஏன் அவங்களுக்கு உள்ள போகத் தெரியாதா..?" என்றதும் இப்போது மூவருக்கும் கோபத்தில் மூக்கு விடைத்தது.

அதில் அவனது வார்த்தைகள் தடித்தன. "என்னடி செய்றதையும் செஞ்சிட்டு திமிரா வேற பேசுறியா. அது சரி உனக்கெல்லாம் இந்த மாதிரி நிலைமை வந்திருந்தா தானே அவட வலி புரியப் போகுது..." என பவித்ராவின் வயிற்றை சுட்டிக் காட்டிவனின் பேச்சில் இவ்வளவு நேரமும் வாயடித்தவளின் வாய் கப்பென மூடிக் கொண்டது.

என்ன சொல்லி விட்டான்..? தாலி கட்டியவனின் பழிச் சொல்லில் நெஞ்சம் காந்தியது. பவித்ராவிற்குமே அவனது பேச்சு அதிகபட்சமோ எனத் தோன்றியது. மித்ரனை அழைத்து இருவரையும் கண்காட்ட அவனும் "மச்சி விடுடா " என தோய்ந்து போன குரலில் கூற "இல்ல மச்சான்.. வந்ததே லேட் இதுல எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா இப்படி பேசுவா..!? படிப்பறிவு இருந்தா தானே இந்தப் பட்டிக்காட்டுக்கு அடுத்தவன்ட கஷ்டம் புரியப் போகுது.. இவளையெல்லாம் கல்யாணம் பண்ணின அன்னைக்கே தொறத்தி விட்டிருக்கனும்... " என்றவனை மித்ரன் தடுக்கத் தடுக்க மீண்டும் "என் அப்பா என்னடான்னா இவள என் தலைல கட்டி விட்டுடாறு.. இவளால தெனம் தெனம் நான் நரக வேதனைய தான் அனுபவிக்கிறேன்..ச்சே..." என இன்னும் என்னவெல்லாம் பேசினானோ தெரியவில்லை. அதனைக் கேட்க முடியாமல் காதை இறுக மூடியவளுக்கு, இருந்த தெம்பெல்லாம் வடிந்த உணர்வு. இதயத்தை யாரோ கசக்கி பிழிவது போலிருந்தது. இனி எத்தனை நாட்களுக்கு இந்த சுடு வார்த்தைகளையெல்லாம் கேட்டு வாழ வேண்டிய அவல நிலையோ என தன்னை நினைத்தே அவளுக்கு கழிவிரக்கம் தோன்றியது.

உஃப் என தாங்க முடியாமல் கண்ணீருடன் காற்றை குவித்து ஊதியவள் இவர்களைத் தாண்டி சென்று கதைவைத் திறக்க அது இன்னுமே பூட்டுடன் இருந்தது.

வலிகளை மறைத்தவளாக திரும்பியவளிடம் "சாவி உன்கிட்ட தானேம்மா.." என்றான் மித்ரன்.

அவனைப் பார்த்து வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொண்டவள் "இங்க தானேண்ணா சாவியை வச்சிட்டுப் போனேன்..." எனறவளின் பதிலில் மூவரினதும் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாய்..

"அதை சொல்லிட்டுப் போய்க்கனும்.." என இன்னும் அதே அழுத்தத்துடன் ரிஷி கூற, அவனைத் தவிர்த்தவள் மித்ரனிடம் "யாருண்ணா சொல்லாம போனா..? இதோ இவருக்கு கால் பண்ணினேன். ஆனால் சார் அதை அட்டன் பண்ணல்ல.. அண்ணி களைச்சுப் போய் வருவாங்க, சாவிய தேடுவாங்கனு தெரிஞ்சும் சொல்லாம போறது சரியில்லையேனு சாவியை இதோ இங்க வச்சிட்டுப் போறேனு மெசேஜ் அனுப்பிட்டுத் தான்ணா போனேன்.." என்றவள் சொன்னதுமல்லாமல் வைத்த இடத்திலிருந்து சாவியை எடுத்தும் தந்தாள்.

அப்போது தான் ரிஷிக்குமே நினைவில் வந்தது. காலையில் அவளது எண்ணிலிருந்து அழைப்பு வர வேண்டுமென்றே கட் பண்ணி விட்டான். ஃபோனில் பேசுமளவுக்கு அவர்களிடம் நெருக்கம் இருந்ததில்லை. அவள் மெசேஜ் அனுப்பியும் அந்த நொடிபிகேஷனை இக்னோர் பண்ணியவனாக வேலையில் மூழ்கியதன் விளைவு இதோ இங்கே ஒருத்தியின் இதயம் இரத்தம் வராமல் கிழிக்கப்பட்டது.

இவன் அந்த குறுஞ்செய்தியை பார்த்திருந்தால் இந்த தேவையில்லாத வாக்குவாதமும் சண்டையும் வந்திருக்குமா..?

அவளிடமிருந்து சாவியை வாங்கிய மித்ரன் வீட்டை திறந்து பவித்ராவை கை தாங்கலாக அழைத்துச் செல்ல பவித்ராவோ "சாரிம்மா.." என உணர்ந்து மன்னிப்பு கேட்க மதிக்கோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது. தலையை சட்டென குனிந்து கொண்டவள் அப்படியே உள்ளே நுழைந்து கொண்டாள்.

இரத்தக் கறையுடன் உதடு கிழிந்து நின்றிருந்தவளின் அழுத்தம் முதன் முறை ரிஷியை பாதித்திருந்தது. தன்னிடமே தவறென உணர்ந்தவன் தலையில் தட்டிக் கொண்டே திரும்பிப் பார்க்க அங்கே அவளைப் போலவே அநாதரவாக கிடந்தது அவன் தட்டிவிட்ட புத்தகம். அதனை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவனை வரவேற்றதோ மூடியிருந்த மதியின் அறைக் கதவு.

பெருமூச்சுடன் தனதறை வந்தவன் அந்த புத்தகத்தை திருப்பிக் கூட பார்க்காமல் மேசையில் வைத்தது விதி செய்த சதியோ..!?

...

உள்ளே வந்தவள் கதவு நிலையில் சாய்ந்து ஓர் பொட்டு அழுது தீர்த்து விட்டாள்.

இங்கே மீண்டும் வெளியே வந்த ரிஷி அவளறையைப் பார்க்க அவள் வெளியே வருவதற்கான சுவடுகள் தெரியவில்லை.

வழமையாக தன்னைச் சீண்ட சரி வெளியே வருபவள் இன்று அறையே கதியெனக் கிடக்க ஏதோ போலிருந்தது அவனுக்கு. தான் பேசியது அதிகபட்சமோ என்று கூட யோசித்தான். பின் அவனும் சாப்பிட மனம் வராமல் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என தூங்கிப் போனவனுக்காக காத்திருந்ததோ அதிர்ச்சி...!

காலையில் எழுந்து வந்தவன் கண்டதோ எங்கோ செல்லத் தயாராகி நிற்கும் மனைவியை.

அவளைப் பார்த்த மாத்திரம் பூத்த ஏதோ ஓர் புத்துணர்ச்சி அவளருகிலிருந்த பெட்டியைப் பார்த்து அப்படியே உதிர்ந்து விட்டது.

அழுத்தமான காலெட்டுடன் அவளிடம் வந்தவன் பேச வர சட்டென முந்திக் கொண்டவள், அன்று எந்தக் காகிதத்தை நீட்டி அவளை உயிருடன் கொன்று புதைத்திருந்தானோ அதே காகிதத்தை இன்று அவன் முன் நீட்டியிருந்தாள்.

அவனோ அவளையும் காகிதத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே வாங்கிப் பார்த்தவனுக்கு வாரித் தூக்கிப் போட்டது. ஆம் அது அவள் கையெழுத்திட்டிருந்த அவர்களின் விவாகரத்துப் பத்திரம்.

அவர்களின் முதல் ராத்திரியன்று அவளிடம் விவாகரத்து கேட்டு அவன் கொடுத்திருந்ததே அது. அன்று வீம்புக்காக அதில் கையெழுத்திடமாட்டேன் என சொல்லியவளிடம் சைன் பண்ண வைப்பேன் என சவாலிட்டு விட்டுச் சென்றவன் அதில் ஜெயித்தும் போனான்.

தொண்டையடைக்க செறுமியவள் "ஹியர் இஸ் த டிவோர்ஸ் பேப்பர் யூ ஆஸ்க் ஃபோர்.." என அழகாக அத்தனை திருத்தமாக அவளிடமிருந்து வெளிப்பட்டன ஆங்கில வார்த்தைகள்..

அதிர்ந்தான் ஆடவன்..

எதற்காக அவளை மட்டந்தட்டி தன்னிலிருந்து தூரமாக்கி வைத்தானோ அதே நுனிநாக்கில் ஆங்கிலத்துடன் அவனையெதிர் கொண்டாள் பெண்ணவள்.

"நீங்க சொன்ன மாதிரி சவால்ல ஜெயிச்சிட்டிங்க மிஸ்டர்.ரிஷி.. கங்ராட்ஸ்..." என்றாள் அவளையே அசையாமல் பார்த்திருந்தவனிடம்.

"என்ட் இது..?" என கேள்வியாய் நிறுத்தியவள் சிறிய பையை தூக்கிக் காட்ட, கண்கொட்டாமல் பார்த்து நின்றிருந்தவனின் கண்களில் என்ன என்ற கேள்வி..

அதனை புரிந்து கொண்டவளாய் உள்ளிருந்த தாலியை எடுத்து அவன் முன்னே ஆட்ட சர்வமும் ஆட்டம் கண்டது ரிஷிக்கு.

"நீங்க கேட்டது போல டிவோர்சே தந்துட்டேன். அப்பறம் இதுக்கு வேலை இருக்காதுனு நினைக்கிறேன்..." எனக் கூறியவளே "இந்தப் பை எதுக்குன்னா..!? இந்த அசிங்கமானவ, பட்டிக்காடு, அப்பறம் யூஸ்லெஸ் ஃபெலோ, ஆங் உங்களுக்கு கொஞ்சங் கூட தகுதியேயில்லாதவட கழுத்துல இத்தனை நாளும் கிடந்த தாலிய தொடுவீங்களோ என்னவோ..??? இன்ஃபெக்ட் அருவெறுப்பா கூடயிருக்கலாம். அதுக்காக தான் இது.." என பையைத் தூக்கிக் காட்டிவளின் பேச்சில் குற்றவுணர்ச்சியில் தலை குனிந்தான் ரிஷி.

இன்னொன்னுமிருக்கு என்றவள் மற்றைய பொதியை தூக்க புரியாமல் விழித்தான் ஆடவன்.

"இது இத்தனை நாளும் இங்க கெஸ்டா இருந்ததுக்கு நீங்க தந்த பணம்.." என உதட்டுக்கும் வலிக்காமல் சிரித்தவளின் கண்களில் அத்தனை வலி...!

நெஞ்சமதிர அவளை பார்த்தவனுக்கு இதயத்தில் சுருக்கென்று ஏதோ தைத்தது. என்ன பணமா..? எனதிர்ந்தவனிடம் "எஸ் மிஸ்டர்.ரிஷி. திஸ் இஸ் யுவர் ஓன் மணி தட் யூ கேவ் மீ. இதை பத்திரமா இவ்வளவு நாளும் சேமிச்சேன். இனி இத பாதுகாக்குற தொல்லை எனக்கில்லை..." என சிரித்தவள் அவன் முன் பலவீனமானவளாக காட்டிக் கொள்ளக் கூடாதென வெகுவாக அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு அழுத்தமாக நின்றிருந்தாள்.

அவளது முகமே அவள் அழுகையை கட்டுப்படுத்த போராடுவதை பறைசாற்ற முதன் முறை அவளைப் பார்த்து அவனது கண்கள் கலங்கின.

பணத்தை நீட்டியவள் "இத்தனை நாளும் வீம்புக்காக உங்க கூட சண்டை போட்டிருக்கேன். அதுக்காக முடிஞ்சா மன்னிச்சுருங்க. அப்பறம் என் தகுதியென்னனு கன்னத்துல அறைஞ்சு புரிய வச்சிட்டீங்க. அதுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. இனி என தொல்லை உங்களுக்கு எப்பவுமே இருக்காது. உங்க தகுதிக்கு ஏத்த மாதிரி, அழகான, வாயைத் திறந்தா இங்கிலீஷ் பேசுற பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்க என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..." என்றவளுக்கு எவ்வளவு தடுத்தும் தன்னை மீறி விம்மல் வெடித்திருந்தது.

இரு கைகளாலும் முகத்தை அழுந்த துடைத்தவள் பணத்தை சுட்டிக் காட்டி "நீங்க தந்த பணத்துலயிருந்து ஒரு பைசா கூட நான் எடுக்கல.. வேண்ணா எண்ணிப் பாருங்கள்.." என்றவளின் பேச்சு செருப்பால் அடித்து போலிருந்தது அவனுக்கு.

தொடர்ந்தவளாக "இங்க வந்த பிறகு எனக்கும் ரோஷம் வந்துச்சோ என்னவோ.. என் தகுதியை கொஞ்சோ கொஞ்சம் உயர்த்திக்கிட்டேன். அதை நீங்க அன்னைக்கு என்னைத் தூக்கி எறிஞ்சது போல தூக்கிப் போட்ட புத்தகத்துல பார்க்கலாம்...அதுல இருந்து தான் நான் செலவழிச்சேன்.." என்றாளே பார்க்க அவன் கண்களில் ஓர் தேடல்.

அதைப் பார்த்து உதட்டை வளைத்தவள் "இன்னைலிருந்து உங்களுக்கு விடுதலை தான். யு கேன் எஞ்சோய் யுவர் லய்ஃப். வரட்டா..சாரி சாரி.. போகட்டா..." என்றவள் அந்த வீட்டை விட்டும் ரிஷி என்றவனின் வாழ்க்கையை விட்டும் நிரந்தரமாக நீங்கிச் சென்றாள்.

..


மித்ரன் வந்து தோளில் கை வைக்க திரும்பியவனின் கண்களிலிருந்து இவ்வளவு நேரமும் தேக்கி வைத்திருந்த விழிநீர் வடிந்தது. பதறிய மித்ரன் "டேய் ரிஷி என்னாச்சுடா..?" என்றான்.

அசைவில்லாமல் நின்றிருத்தவனை உலுக்க திடுக்கிட்டு கலைந்தவன் மித்ரனைப் பார்த்து இயலாமையுடன் உதட்டை பிதுக்கினான்.

"டேய் ஏன்டா கண் கலங்குற..??" என தவிப்பாய் வினவிய நண்பனிடம் அவள் விட்டுச் சென்றவற்றைக் காட்ட அதிலிருந்த காதிதத்தை எடுத்துப் பார்த்த மித்ரனின் முகத்தில் அதிர்ச்சியின் ரேகைகள்..

நண்பனை வெறியுடன் திரும்பிப் பார்த்தவனுக்கு அவனை திட்டவும் மனம் வரவில்லை. இருந்தும் "எல்லாம் நீ ஆசைப்பட்டது தானே.. இப்போ சந்தோஷமா இருக்கு வேண்டிய நீ ஏன் அழுற..? ஓஓ ஒருவேளை ஆனந்தக் கண்ணீரோ..?" என்றவனின் நக்கலில் உடைந்து தொப்பென கதிரையில் அமர்ந்தவன் "வலிக்குதுடா..." என நெஞ்சை நீவி விட மித்ரனுக்கும் தொண்டையடைத்தது.

அவனருகில் அமர்ந்தவன் "நீ மதிய லவ் பண்ணுறியா..?" எனக் கேட்க குழந்தை போல விழித்தான்.

"த்..த்தெரிலடா.. ஆ..ஆனா ஆனா இன்னைக்கு அவள் மனசொடஞ்சு பேசும் போது வலிச்சுதுடா.. இதோ இங்கே .." என இதயத்தை சுட்டிக் காட்டினான்.

மித்ரனுக்கு என்ன பேசுவதென புரியவில்லை. "ஆரம்பத்துல அவள எனக்கு பிடிக்கல தான். ஆ..ஆனால் போகப் போக அவ பண்ணுற சேட்டைக்காகவே அவ மேல எறிஞ்சு எறிஞ்சு விழுவேன். அவ அமைதியா இருந்தா எனக்கு புடிக்காது. அதனாலே என்னை சீண்ட சரி வாய் தெறப்பாலேனு அவ முன்னாடி முறைச்சிட்டு நிற்பேன்.. இன்னைக்கு..?? என்னை தனிய விட்டுட்டு போய்டாடா மச்சான்..." என ரிஷி அவனை அணைத்து அழ ஆதரவாக அவனது முதுகை தடவி விட்ட மித்ரன் "சீ.. அவ எங்கேயும் போய்க்கமாட்டா. உன் மாமனார் வீட்டுத் தான் போய்ப்பா.. அவ போய் பிரச்சினை பெருசாகுறதுக்குள்ள வா போய் தங்கச்சிய கூட்டிட்டு வருவோம்..." என பொறுப்பான அண்ணனாக பேசினான் மித்ரன்.

கண்களை துடைத்துக் கொண்டவன் அவனுடன் எழுந்து சென்றான்.

அங்கே மதியின் வீட்டிற்கு சென்று விசாரிக்க அவள் வரவில்லை என்ற செய்தி காதையடைய அதிர்ந்தனர் இருவரும். மகளைத் தேடி வந்திருந்த மாப்பிள்ளையைப் பார்த்து பெற்ற உள்ளம் துடித்துப் போக அதை இதைச் சொல்லி சமாதானப்படுத்தி விட்டு இவளைத் தேடி அழைந்தனர்.

இரவு நேரமாகியும் அவளை தேடிக் கண்டு பிடிக்க முடியாமல் போக தலையில் கை வைத்து பாதையிலமர்ந்து விட்டான் ரிஷி.

"நிலா..நிலா.." என அவனுள்ளம் ஊமையாக கதறியழ அவளுக்கு எதுவுமாகி விடக்கூடாது என இதோ நூறாவது தடவையாக கடவுளிடம் கை கூப்பி வணங்கி விட்டான். அது இறைவனின் காதில் விழவில்லை போல.. மூன்று மாதங்களாக அவளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறான்.

இந்த இடைப்பட்ட காலத்தில் அவனுள் எத்தனையோ மாற்றங்கள். தன் காதலை உணர்ந்து மனதில் அவளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

வாழ்க்கை முழுக்க தொடர்ந்த ஊடல் நிரந்தர பிரிவொன்று வந்த பின்னே முற்றுப் பெற்றிருந்தது.

...
 

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
சிந்தனையிலிருந்து கலைந்தவன் மனதில் ரணங்களுடன் கட்டிலில் தலை சாய்த்தான்.

அடுத்த நாள் காலை எழுந்தும் எழாமலும் மதியின் தந்தையிடமிருந்து அழைப்பு வர அவர் கூறிய செய்தியில் பூமியே தலை கீழாய் சுத்தியது ஆடவனுக்கு.

அறக்கப்பறக்க அவர் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தவன் கண்டதோ உடல் முழுவதும் போர்த்தியிருந்த ஓர் உயிரற்ற ஜடத்தை.

இதயம் படுவேகமாக துடிக்க தடதடுத்த மனதை அடக்கிக் கொண்டவனாக மூச்சை இழுத்துப் பிடித்து நின்றிருந்தவனிடம் மதியின் தந்தை அழுகையோடு கையோந்தினார்.

"நோ..நோ..இல்ல அவ இல்லை" என தனக்குத் தானே சமாதானம் கூறியவனாக அந்தத் துணியில் கை வைக்கப் போக பின்னாலிருந்து "அப்பா..." என்றழைத்த குரலில் அவனின் கைகள் அந்தரத்தில் அப்படியே நின்றன.

சட்டென திரும்பியவனின் கண்களைப் பொய்யாக்காமல் அவன் கண்களுக்கு விருந்தாகினாள் அவனது மனம் கவர்ந்த காரிகை.

எதிர்பாராமல் கிடைத்த ஆனந்தத்தில் ரிஷியுட்பட மதியின் தாய் தந்தையும் அதிர்ந்து நிற்க அவர்களருகில் வந்தவள் "எப்டிப்பா இருக்கிங்க...?" என்றாள்.

"அ..அம்மாடி மதி..." என மகளை இழுத்தணைத்து அழுதவர் "இத்தனை நாளும் எங்கம்மா போன..அ..அப்பாக்கு நெஞ்சே வெடிச்சிருச்சுமா..." என்றதற்கெல்லாம் சிலை போல் நின்றிருந்தாள்.

அவளது தாய் அவளை உச்சி முகர்ந்து அழ உதட்டை பிரித்தவளிடம் "எங்கம்மா போன..வாய தெறந்து சொல்லேன்டி.." என்ற தாயிடம் அருகிலிருந்த ஆச்சிரமத்தை கண்காட்ட பகீரென்றிருந்தது அவர்களுக்கு.

என்ன என்றதிர்ந்தவர்களிடம் "உங்க பொண்ணு வாழா வெட்டியா வந்தா உங்களால தாங்க முடியாதுனு தான்ம்மா இங்க வந்து ஓர் அநாதையா வாழ்ந்திட்டிருந்தேன்.." என்றவளைப் பார்த்து அதிர்ந்தான் ஆடவன்.

"நிலா.." என்ற வித்தியாசமான விழிப்பில் திரும்பியவள் பார்த்த அந்நியப் பார்வையில் மரித்தான் ஆடவன்.

"ஐ எம் சாரி..." என உதட்டசைத்து எதையோ யாசகம் கேட்டவனின் பார்வை அவளுக்கு விளங்கவில்லை.

அவளருகில் வந்தவன் எதிர்பாராத நேரம் அவள் முன் மண்டியிட்டு அவளை இடுப்புடன் கட்டிக் கொள்ள அவளது உடல் சிலிர்த்தடங்கியது.

விலக நினைத்தவளை இன்னுமின்னும் இறுக்கி அணைத்தவனின் உடல் அழுகையில் குலுங்கியது. அவளால் நம்ப முடியவில்லை. ரிஷியோ "ஐ எம் சாரிடி.. சாரி நிலா.. ஏன்டி என்னை விட்டுட்டு வந்த..? ரொம்ப தவிச்சுப் போய்டேன்டி. ஐ லவ் யூ நிலா.." என காதல் பித்தனாகி பிதற்றியவனின் வார்த்தைகள் அவளை மயிலிறகு கொண்டு வருடின.

அதில் அனிச்சையாக அவளது கை அவனது சிகையைக் கோத அவனுக்கும் ஆச்சரியம் தான்.தன்னை மன்னித்து விட்டாளா என நிமிர்ந்து அவள் முகம் பார்க்க கண்ணீரில் சிவந்து போயிருந்தது அவளது வதனம். எழுந்தவன் அவளது கண்ணீரை துடைத்து விட்டு கன்னம் தாங்கி "நான் எவ்வளவோ உன்னை காயப்படுத்தி இருக்கேன். என்னை மன்னிச்சிரு நிலா. நீ என்னை விட்டு வந்த அந்த செக்கன் உன் மேல உள்ள காதலை புரிஞ்சிக்கிட்டேன். இனியும் என்னால சத்தியமா முடியாதுடி. வா நம்ம வீட்டுக்கு போகலாம்..." என கையை பிடித்தழைத்தவனின் கையை தட்டி விட்டவள் "நான் உங்களுக்கு தகுதியானவ இல்லையே..." என அவனுக்கு சாட்டையால் அடிக்க மனம் அடிபட்டுப் போனவன் "தகுதின்னு பார்த்தா இந்த திமிர் பிடிச்சவன், உன்ன மாதிரி நல்லவளுக்கு முன்னாடி தகுதி குறைஞ்சவன் தான்..." என்றான்.

"இப்போ கூட இதுல நமக்கு மேட்ச் ஆகல.."என நிறத்தை சுட்டிக் காட்ட குற்றவுணர்ச்சியில் தலையை தொங்கப் போட்டவன் "ஆரம்பத்துலயிருந்த ரிஷின்றவன் இந்த கலர் தகுதியெல்லாம் பார்த்தவன் தான். ஆனால் இப்போ இருக்கிறது என் நிலாவோட ரிஷி. அவனுக்கு இந்த கலரெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.." என்றவனின் கண்ணக்குழி சிரிப்பில் சொக்கிப் போனவள் "தாலி இல்லாம சேர்ந்து வாழுறது கஷ்டம் மிஸ்டர்..." என்றாள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே. அதற்குள் அவள் முன் அவன் கட்டிய மாங்கல்யம் ஆட அவள் கண்ணிமைக்கும் நேரத்தில் மனதார மனம் விரும்பியவளுக்கு தாலி கட்டி மீண்டும் அவளுக்கு தன் மனைவியென்ற ஸ்தானத்தை வழங்கி இருந்தான் ரிஷி.



முற்றும்.



தீரா
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,989
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️
மௌன யுத்தம் நடத்தியது மதி அல்ல ரிஷி. மதி ஆரம்பதிலிருந்தே ரிஷியை விரும்பியதால் அவனின் அனைத்தையும் சகித்து தன்னையே உளிக்கொண்டு செதுக்கிகிட்டாள்.
ரிஷி மதியை மனபூர்வமாக உணரும்போது அவள் உடன் இல்லை. தன்னவளை காணும் வரை ரிஷி அனுபவித்ததே மௌன யுத்தம் 👍👍👍👍👍👍👍👍
 

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
448
சிந்தனையிலிருந்து கலைந்தவன் மனதில் ரணங்களுடன் கட்டிலில் தலை சாய்த்தான்.

அடுத்த நாள் காலை எழுந்தும் எழாமலும் மதியின் தந்தையிடமிருந்து அழைப்பு வர அவர் கூறிய செய்தியில் பூமியே தலை கீழாய் சுத்தியது ஆடவனுக்கு.

அறக்கப்பறக்க அவர் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தவன் கண்டதோ உடல் முழுவதும் போர்த்தியிருந்த ஓர் உயிரற்ற ஜடத்தை.

இதயம் படுவேகமாக துடிக்க தடதடுத்த மனதை அடக்கிக் கொண்டவனாக மூச்சை இழுத்துப் பிடித்து நின்றிருந்தவனிடம் மதியின் தந்தை அழுகையோடு கையோந்தினார்.

"நோ..நோ..இல்ல அவ இல்லை" என தனக்குத் தானே சமாதானம் கூறியவனாக அந்தத் துணியில் கை வைக்கப் போக பின்னாலிருந்து "அப்பா..." என்றழைத்த குரலில் அவனின் கைகள் அந்தரத்தில் அப்படியே நின்றன.

சட்டென திரும்பியவனின் கண்களைப் பொய்யாக்காமல் அவன் கண்களுக்கு விருந்தாகினாள் அவனது மனம் கவர்ந்த காரிகை.

எதிர்பாராமல் கிடைத்த ஆனந்தத்தில் ரிஷியுட்பட மதியின் தாய் தந்தையும் அதிர்ந்து நிற்க அவர்களருகில் வந்தவள் "எப்டிப்பா இருக்கிங்க...?" என்றாள்.

"அ..அம்மாடி மதி..." என மகளை இழுத்தணைத்து அழுதவர் "இத்தனை நாளும் எங்கம்மா போன..அ..அப்பாக்கு நெஞ்சே வெடிச்சிருச்சுமா..." என்றதற்கெல்லாம் சிலை போல் நின்றிருந்தாள்.

அவளது தாய் அவளை உச்சி முகர்ந்து அழ உதட்டை பிரித்தவளிடம் "எங்கம்மா போன..வாய தெறந்து சொல்லேன்டி.." என்ற தாயிடம் அருகிலிருந்த ஆச்சிரமத்தை கண்காட்ட பகீரென்றிருந்தது அவர்களுக்கு.

என்ன என்றதிர்ந்தவர்களிடம் "உங்க பொண்ணு வாழா வெட்டியா வந்தா உங்களால தாங்க முடியாதுனு தான்ம்மா இங்க வந்து ஓர் அநாதையா வாழ்ந்திட்டிருந்தேன்.." என்றவளைப் பார்த்து அதிர்ந்தான் ஆடவன்.

"நிலா.." என்ற வித்தியாசமான விழிப்பில் திரும்பியவள் பார்த்த அந்நியப் பார்வையில் மரித்தான் ஆடவன்.

"ஐ எம் சாரி..." என உதட்டசைத்து எதையோ யாசகம் கேட்டவனின் பார்வை அவளுக்கு விளங்கவில்லை.

அவளருகில் வந்தவன் எதிர்பாராத நேரம் அவள் முன் மண்டியிட்டு அவளை இடுப்புடன் கட்டிக் கொள்ள அவளது உடல் சிலிர்த்தடங்கியது.

விலக நினைத்தவளை இன்னுமின்னும் இறுக்கி அணைத்தவனின் உடல் அழுகையில் குலுங்கியது. அவளால் நம்ப முடியவில்லை. ரிஷியோ "ஐ எம் சாரிடி.. சாரி நிலா.. ஏன்டி என்னை விட்டுட்டு வந்த..? ரொம்ப தவிச்சுப் போய்டேன்டி. ஐ லவ் யூ நிலா.." என காதல் பித்தனாகி பிதற்றியவனின் வார்த்தைகள் அவளை மயிலிறகு கொண்டு வருடின.

அதில் அனிச்சையாக அவளது கை அவனது சிகையைக் கோத அவனுக்கும் ஆச்சரியம் தான்.தன்னை மன்னித்து விட்டாளா என நிமிர்ந்து அவள் முகம் பார்க்க கண்ணீரில் சிவந்து போயிருந்தது அவளது வதனம். எழுந்தவன் அவளது கண்ணீரை துடைத்து விட்டு கன்னம் தாங்கி "நான் எவ்வளவோ உன்னை காயப்படுத்தி இருக்கேன். என்னை மன்னிச்சிரு நிலா. நீ என்னை விட்டு வந்த அந்த செக்கன் உன் மேல உள்ள காதலை புரிஞ்சிக்கிட்டேன். இனியும் என்னால சத்தியமா முடியாதுடி. வா நம்ம வீட்டுக்கு போகலாம்..." என கையை பிடித்தழைத்தவனின் கையை தட்டி விட்டவள் "நான் உங்களுக்கு தகுதியானவ இல்லையே..." என அவனுக்கு சாட்டையால் அடிக்க மனம் அடிபட்டுப் போனவன் "தகுதின்னு பார்த்தா இந்த திமிர் பிடிச்சவன், உன்ன மாதிரி நல்லவளுக்கு முன்னாடி தகுதி குறைஞ்சவன் தான்..." என்றான்.

"இப்போ கூட இதுல நமக்கு மேட்ச் ஆகல.."என நிறத்தை சுட்டிக் காட்ட குற்றவுணர்ச்சியில் தலையை தொங்கப் போட்டவன் "ஆரம்பத்துலயிருந்த ரிஷின்றவன் இந்த கலர் தகுதியெல்லாம் பார்த்தவன் தான். ஆனால் இப்போ இருக்கிறது என் நிலாவோட ரிஷி. அவனுக்கு இந்த கலரெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.." என்றவனின் கண்ணக்குழி சிரிப்பில் சொக்கிப் போனவள் "தாலி இல்லாம சேர்ந்து வாழுறது கஷ்டம் மிஸ்டர்..." என்றாள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே. அதற்குள் அவள் முன் அவன் கட்டிய மாங்கல்யம் ஆட அவள் கண்ணிமைக்கும் நேரத்தில் மனதார மனம் விரும்பியவளுக்கு தாலி கட்டி மீண்டும் அவளுக்கு தன் மனைவியென்ற ஸ்தானத்தை வழங்கி இருந்தான் ரிஷி.



முற்றும்.



தீரா
கதை மிக அருமை மா😍😍 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😍😍
 

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️
மௌன யுத்தம் நடத்தியது மதி அல்ல ரிஷி. மதி ஆரம்பதிலிருந்தே ரிஷியை விரும்பியதால் அவனின் அனைத்தையும் சகித்து தன்னையே உளிக்கொண்டு செதுக்கிகிட்டாள்.
ரிஷி மதியை மனபூர்வமாக உணரும்போது அவள் உடன் இல்லை. தன்னவளை காணும் வரை ரிஷி அனுபவித்ததே மௌன யுத்தம் 👍👍👍👍👍👍👍👍
Thanks sago 😘
 

Sampavi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 21, 2022
Messages
135
வாழ்த்துக்கள் மா
அருமையான கதை
 

Thani

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 2, 2023
Messages
59
ரிஷியின் கர்வத்தை சுக்கு நூறாக்கி உடைச்சு அவன் மனதில் சிம்மாசனம் போட்டு உக்கார எத்தனை வலிகளை தாங்கியிருப்பாள் மதிப்பொண்ணு😢
தன்னம்பிக்கையுடன் தனது தகுதியை வளர்த்து அவனுக்கே சவால்விட்ட மதி சூப்பர் 👏
இப்போதாவது தனது மனதை புரிந்து தனது நிலாவை கைபிடித்தானே ரிஷி😀
வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐
சூப்பர் ❤️
 
Last edited:

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
Thanks for your rply nanba..
 

வித்யா வெங்கடேஷ்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 8, 2022
Messages
239
மிகவும் எதார்த்தமான அழகான கதை தோழி!தொடக்கம் முதல் இறுதி வரை நிலாவின் நிமிர்வான குணம் சூப்பர்.
💕💕💕💕💕
 

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
மிகவும் எதார்த்தமான அழகான கதை தோழி!தொடக்கம் முதல் இறுதி வரை நிலாவின் நிமிர்வான குணம் சூப்பர்.
💕💕💕💕💕
Thanks sago
 
Top