• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

19. உன்னாலே உயிரானேன்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
670
அவன் அறைவிட்டு சிரித்த முகத்தோடு வெளியே வந்தவளையும், அவள் பின்னால் அவளையே வினோதமாக பார்த்தவாறு வந்தவனையும் கண்ட ஹம்சிக்குத்தான் இது கனவோ என்றிருந்தது.



இருக்காத பின்னே! எப்போதுமே அவன் அறையிலிருந்து வரும்போது மதுஸ்ரீ முகமானது ஒன்றில் சோகமாக இருக்கும் அல்லது அழுததற்கு அடையாளமாக கண்கலங்கி இருக்கும். இன்று இரண்டிற்கும் மாறாக அவள் சிரித்துக்கொண்டே வெளிவர,



அவன் முகம் மாத்திரம் குழப்பத்தை தத்தெடுத்திருப்பதை கண்டவளாள், ஆச்சரிய படாமல் வேறு என்ன செய்ய முடியும்?


அதனால் விழிவிரித்து மதுஸ்ரீயையே பார்த்திருந்தவளாள் பின்னல் வந்து கொண்டிருந்த சௌந்தரீகனை கருத்தில் கொண்டு அதன் காரணம் கேட்க முடியாமல் ஊமையாகி சிலையாய் நின்க,


அவளது அதிர்ந்த முகத்தை கண்ட மதுஸ்ரீக்கு தான் அவளை அறியாது சிரிப்பு உண்டானது.

நின்று திரும்பி சௌந்தரீகனை பார்த்தவள்,




"புரோக்கிராம் ஆரம்பிக்க இன்னமும் பத்து நிமிஷம் இருக்கு தானே...!


அதனால கோவிச்சுக்காம நல்ல பிள்ளையாட்டம் போவீங்களாம், நான் இவளை அனுப்பி வைச்சிட்டு ஐஞ்சே நிமிஷத்தில வந்திடுவேனாம்." என முகத்தை சுருக்கி கொஞ்சலாய் கேட்டவள் செயலில் ஹம்சியை திரும்பி பார்த்தவன், அவள் இருவரையும் கூர்ந்து கவனிப்பதை கண்டதும் ஒரு மாதிரியாகிப்போனது.




இருக்காத பின்னே இந்த நொடி வரை தனிக்காட்டு ராஜா போல் தன் அருகில் எவரையும் அனுமதிக்காது கெத்தாக கர்ஜிததுக்கொண்டே திரிந்தவனை, ஒரு பெண் முன்னர் இன்னொரு பெண் கொஞ்சும் தொணியில் பேசினால் அவனை பற்றி அவள் என்ன நினைப்பாள்?


அதற்குமேல் அங்கு காட்சிப்பொருளாக நின்று மற்றையவள் எண்ணத்திற்கு தீணி போட விரும்பாதவனோ, மதுஸ்ரீயை முறைத்து விட்டு உள்ளே சென்றுவிட்டான்.



அவன் முறைப்பை அலட்சியம் செய்துவிட்டு, துள்ளல் நடையுடன் ஹம்சி முன் வந்தவளை ஆச்சரியமாக பார்த்தவள்,




"என்னடி நடக்குது இங்க....?
எப்பவும் அந்தாள் ரும் போன சோகமா வருவ, இன்னைக்கு இவ்ளோ சந்தோஷமா வரதும் இல்லாம, நீ சொல்ருறதுக்கு எல்லாம் அந்தாளும் தலையாட்டுறாரு,


காலையில அவ்வளவு சூடா இருந்த மனுஷன் இவர் தானான்னு எனக்கே சந்தேகமா இருக்குடி!
அப்பிடி என்னடி மந்திரம் போட்டா....?" என நம்பமுடியாது கேட்ட ஹம்சியின் கன்னத்தை தட்டியவள்,




"இனிமே ஐய்யா என் பேச்சை மட்டும் தான் கேக்கப் போறாரு." என்றவள் பேச்சு புரியாது ஹம்சி புருவம் சுருக்க,




"ரொம்ப யோசிக்காத செல்லக்குட்டி! உனக்கு சொல்லாத அளவுக்கு எந்த ரகசியம் என்கிட்ட எப்பவுமே இருக்காது? கண்டிப்பா உன்கிட்டை இதை சொல்லியே ஆகணும். ஆனா இப்போ அதுக்கு நேரமில்லை.



நீ வீட்டுக்கு கிளம்பு நாளைக்கு பேசிக்கலாம்." என்று விட்டு திரும்பி நடந்தவளுக்கு என்ன தோன்றிற்றோ,


நின்று ஹம்சியின் புறம் திரும்பியவள், மறு நொடியே அவளை நோக்கி சிறுகுழந்தை போல் ஓடிவந்து, இறுக அணைத்து கன்னமதில் தன் உதடு புதையும் ஆளவிற்கு முத்தம் ஒன்றை வைத்து விடுவித்தவள்,





"பாய்டி செல்லக்குட்டி.....! பார்த்து பக்குவமா போ!" என்று திரும்பி ஓடினாள்.




ஆழமான நட்பு இருவருக்குள்ளும் இருந்த போதில், குழந்தை தனமாக மதுஸ்ரீ நடந்து கொள்வது இதுவே முதல்முறை.



அவள் எச்சில் படிந்த இடத்தை துடைத்து எடுத்தவளோ,





"என்னாச்சு இந்த பைத்தியத்துக்கு..? புதுசா முத்தம் எல்லாம் கொடுக்குது." என புலம்பியவாறு தன் பைக் நின்ற இடத்திற்கு சென்றாள்.

மறுநாள் தன் புரோக்கிராமை முடித்த ஹம்சி, தனக்கு தரப்பட்ட இன்னும் சில வேலைகளை செய்துகொண்டிருந்தவள் செல்போனானது ஒலிக்க, அதை எடுத்து பார்த்தவள் திரையில் மதுஸ்ரீயின் பெயர் கண்டதும்,





"இவளா...? இது காலேஜ் நேரமாச்சே...! மேடம் இந்த நேரத்துக்கு போன் எல்லாம் தொடமாட்டாங்களே....! இன்னைக்கு என்ன புதுசா....?" என யோசனையோடு காதில் பொருத்தி கொண்டவள்,



"என்ன மேடம் காலேஜ் டைம்ல என்னை கூப்பிட்டிருக்கிங்க? புதுசா என்மேல அப்பிடி என்ன பாசம்......?" என்றாள் குரலை கேலியாக வைத்து,




"உன்மேல பாசம் இல்லாம எப்பிடி போகும் டார்லிங்க்......? எனக்கு கிடைச்ச பொக்கிஷம் இல்லையா நீ.....!" என நேற்றைய தொடர்ச்சியை இன்றும் தொடர்ந்தவள் அன்புத்தொல்லையில் கொஞ்சம் திணறித்தான் போனாள் ஹம்சி.




"ஆமா உனக்கு நேற்றையில இருந்து என்னடி ஆச்சு? என்னை லவ்வர பார்க்கிறா மாதிரி வித்தியாசமா பாக்குற, புதுசா சொல்லக்குட்டி, டார்லிங்க்ன்னு கூப்பிட்டு முத்தம் எல்லாம் வைக்கிற, எதுக்கு திடீர்ன்னு இவ்ளோ பாசமழை பொழியிற?" என தன் சந்தேகத்தை கேட்க.




"ஆட ஆமால்ல....! இதுக்கு உனக்கு விடை தெரிஞ்சே ஆகணும்ல, சரி உடனே கிளம்பி.. நம்ம ஆஃபீஸ் பக்கத்தில இருக்கிற கிட்ஸ் பார்க் வந்திடு, எல்லாத்தையும் விளாவாரியா சொல்லுறேன்." என்றாள்.



"இப்போ நான் ஆஃபீஸ்ல இருக்கேன்டி."



"ஆமா...... நான் மட்டும் என்ன இல்லன்னா சொன்னேன்."



"என்ன விறையாடுறியா....?"




"யம்மாடி.... சின்சியர் சிகாமணி.... வருஷம் பூர அதுக்குள்ள தானே குப்பை கொட்டுற, இன்னைக்கு ஒரு நாள், ஒரு மணிநேரம் லீவ் சொல்லிட்டு வந்தா.. அங்க யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க,



மரியாதையா வந்து சேரு.... அவ்வளவு தான்...." என்றவள் வேறு பேச்சிற்கே இடமில்லை என்பது போல் போனை வைத்து விட்டாள்.

"மது..... ஹலோ.... ஹலோ...., இவளை.....!" என சினந்தவள், சௌந்தரீகன் ஸ்ரூடியோ வராதது வசதியாகி போக, மேனேஜரிடம் அனுமதி வாங்கிக்காெண்டு அவள் கூறிய பார்க் வந்தாள்.



மதுஸ்ரீயோ ஓர் பெரிய மரத்தின் நிழலில் இருந்த பெஞ்ச்சில் அமர்ந்திருந்து சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க.. அருகில் தானும் வந்து அமர்ந்தாள்.



ஹம்சி அருகில் வந்து அமர்ந்ததும், கவனம் கலைத்து அவள் புறம் திரும்பியவள்,



"வந்திட்டியாடி......?" என கேட்டுவிட்டு, மீண்டும் சிறுவர்கள் புறம் பார்வையை திருப்பிக்கொண்டவள் செயல் தான் ஹம்சிக்கு புரியவில்லை.



'எப்படி புரியும்...? பேசவேண்டும் வா!' என அழைத்துவிட்டு, அவள் வந்து கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களாகியும், எதையும் பேசாது, ஏன்.....? இப்படி ஒருவள் அருகில் இருக்கிறாள் என்பதைக்கூட கருத்தில் கொள்ளாது, சிறுவர்களையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால், என்ன அர்த்தம்? சரி அதை கூட சரியாக செய்கிறாளா....?
அவர்கள் புறம் கவனத்தை திருப்பினாளே தவிர, அவர்களை அவள் ரசிக்கவில்லை.



பார்வையினை மட்டும் அவர்கள் மேல் திணித்திருந்தவள், சிந்தை முழுவது வேறெங்கோ இருப்பதைப்போல் தான் இருந்தது.


பொறுத்து பொறுத்து பார்த்தவள், பொறுமை ஒரு அளவிற்குமேல் நீட்டிக்க முடியாது அவள் தோள்களில் இடித்தாள்,



"எரும.... வா பேசணும்ன்னு சொல்லிட்டு ஊமைச்சியாட்டாம் இருக்க,
உன் பேச்சை கேட்டு என் வேலைய பாதியில விட்டிட்டு வந்தேன் பாரு, என்னை சொல்லணும்." என சினந்தவளை திரும்பி பார்த்தவள், விழிகளில் ஏனென்று புரியாத வலி.




அதன் காரணம் அவளுக்கு தெரியவில்லை.... ஆனால் அந்த நேரம் அவளுக்கு தன் அணைப்பு தேவைப்படுகிறது என உணர்ந்தவள், இழுத்து இறுக அணைத்து, அவள் முதுகினை வருடிக்கொடுத்தவாறே,




"ஏதாவது பிரச்சினையாடி...? போன் பேசுறப்போ நல்லா தானே பேசின? இப்போ என்னாச்சுன்னு இப்படி இருக்க?" என அவளுக்காய் கவலைப்பட,


அவள் அப்படி கேட்டதும் தான் , தன் தவறை உணர்ந்து அவள் தோள்களில் இருந்து சட்டென எழுந்து கொண்டவள்,



"எனக்கு என்ன....? ஒன்னும் இல்லடி...!" என சிரித்து சமாளித்தவள்,


"உன்கிட்ட ஒன்னு கேப்பேன்.... மறைக்காம உண்மையை சொல்லணும்." என்றாள்.


"ம்ம் கேளு.... உன்கிட்ட மறைக்கிற அளவுக்கு எனக்கு ஒன்னுமில்லப்பா...!" என அவளும் கைகளை விரித்து இயல்புக்கு மற,



"உனக்கு என்னை முன்னாடியே தெரியாமா...? ஐ மீன்.... என்னை இந்த ஆறு மாசத்துக்கு முன்னாடி வேற எங்கேயாவது பார்த்த மாதிரி தோணிருக்கா? இல்லை எதாவது நினைவு வந்திருக்கா?" என்றாள்.


"ம்ம்......" என யோசிப்பது போல் இழுத்தவள்,



"இல்லைடி....! அப்படி எதுவும் தோணல, பட் முதல் முதலா உன்கூட பேசினப்போ ரொம்ப நாள் நம்ம பேசிப் பழகின ஃபீல் மட்டும் வந்திச்சு, இப்ப கூட நம்ம பேச ஆரம்பிச்சு ஆறு மாதம் தான் முடிஞ்சிருக்கு என்கிறத என்னால நம்ப முடியல,


ஏதோ பல வருஷமா நமக்குள்ளான நட்பு தொடர்ந்திட்டிருக்கா மாதிரி தான் இருக்கு" என்றவள் கையினை பற்றி தன் கைகளுக்குள் பத்திரப்படுத்திக்கொண்டவள், அவள் விழிகளையே பார்த்தவாறு,



"உனக்கு இந்த ஜென்மங்கள் மேல நம்பிக்கை இருக்கா ஹம்சி?" என்றாள் புதிரோடு.




"ஏன்டி நீ வேற காமடி பண்ணிட்டு...? இந்த ஜென்மத்துக்கே முழுசா தாக்குப்பிடிப்பனோன்னு தெரியல, இதில ஜென்மங்......" என அவள் சொல்லி முடிப்பதற்குள் அவசரமாக அவள் வாயினை அடைத்தவள் விழிகளோ கலங்கிவிட்டது.




"இதை பாரு ஹம்சி! நீ என்னவும் பேசு நான் ஏத்துக்குறேன்,
ஆனா இனி ஒரு தடவை இதை மாதிரி அபசகுணமா பேசினேன்னா நானே உன்னை கொன்னுடுவேன்டி...!


என்ன ஒவ்வொரு தடவையும் என்னை தவிக்க விடலாம்ன்னு பாக்குறியா...?" என்று ஆதங்கமாக கேட்டுவிட்டு, கோபமாக திரும்பி அமர்ந்தவள் போபமும், பேச்சும் சுத்தமாக ஹம்சிக்கு புரியவில்லை.




"ஏய் என்னடி இப்போ தப்பா சொல்லிட்டேன்...? நெருப்புன்னா சுட்டுடவா போகுது? ஏதோ விளையாட்டா சொன்னத பெருசா எடுத்திட்டு கோபப்படுற?" என அவளை தன்புறம் திருப்பி சமாதானம் கூறியும் முகத்தை ஊர் என அவள் வைத்திருக்க,




"சரிடி...! சாரி.... மன்னிச்சிடு.... தெரியாம சொல்லிட்டேன்.. இப்போவாவது பேசு! இதுவும் போதலையா.. கால்ல விழுறேன். எட்டி வேணா மிதிக்கிறியா?" என காமடியாய் கேட்டாலும் சற்று கடுப்போடும் கேட்டு வைத்தாள்.


அவள் சூடாகிவிட்டாள் என்பதை உணர்ந்தவளோ,



"ஈஈஈ...... உன் காமடிக்கு சிரிச்சிட்டேன் போதுமா?" என வேண்டுமென்றே இளித்து வைத்தவள் செய்கை ஹம்சிக்கு சிரிப்பை ஏற்படுத்தாமலில்லை. அதை மறைக்காமல் வெளிக்காட்ட,
அவள் புன்னகைக்கும் அழகினையே தன்னை மறந்து ரசித்தவள், அவள் எதிர்பாராத நேரம் அவள் கன்னங்களை கைகளில் ஏந்தி,




"உனக்கு எல்லாமா நான் இருக்கேன் ஹம்சி. உன்னையும் தமிழையும் சேர்த்து வைக்கிறது என்னோட கடமை!


அவன் உனக்கு கிடைக்க மாட்டான்னு.. நீயா கற்பனை பண்ணிட்டு எந்த விதமான விபரீத முடிவும் எடுத்திடாதடி!
எதுவா இருந்தாலும் என்கிட்ட மறைக்காம சொல்லிடுடி..!

உனக்காக எந்த எல்லை வரை போய் உன்னையும், அவனையும் சேர்த்து வைப்பேன்." என புரியாதவாறே பேசியவள் கையினை தட்டி விட்ட ஹம்சி.





"என்னையும் தமிழையும் சேர்த்து வைக்கிறதிருக்கட்டும், நீ என்ன பகல்லையே தண்ணி அடிச்சிருக்கியா?
விபரீதம் அது இதுன்னு இங்க வந்து உளறிட்டிருக்க, விட்டா பாய்ஷன் பாட்டில நீயே வாங்கி என் வாயில ஊத்தி விட்டிடுவ போலயே...!" என்றவள்,




"என் தங்க குட்டில்ல... ரொம்ப டென்ஷன் பண்ணாதடி!
வேலை எல்லாம் பாதியிலேயே விட்டிட்டு வந்திருக்கேன். எதுக்கு கூப்பிட்டேன்னு மட்டும் சொல்லு...? நான் போயிடுறேன்." என்றாள் இம்முறை கெஞ்சலாய்.




அவளிடம் எல்லாவற்றையும் சொல்லாம் என்று தான் மதுஸ்ரீயும் இங்கு அழைத்தாள். ஆனால் ஹம்சியின் ஒற்றை பதிலே அவளிடமிருந்து எல்லாவற்றையும் மறைக்க செய்தது.


'இன்றுவரை தமிழுக்கு தன்மேலான எண்ணப்பாட்டிலோ, பார்வையிலோ மாற்றமில்லை.



இப்போதும் தமிழ் தன்னை விரும்புவது தெரிந்தால், எனக்கும் அவன் மேல் ஈடுபாடு இருப்பதாக நினைத்து, அவனையும் என்னிடம் விட்டுக்கொடுக்க முடியாமல், என் சந்தோஷத்திற்கும் தான் குறுக்கே நிற்க கூடாதென , தப்பாக கணக்கிட்டு மீண்டும் அதே விபரீத முடிவினை ஹம்சி தழுவிக்கொள்வாள்.' என்ற பயம் எழுந்தது
.




எதை சொல்வதாக இருந்தாலும், தமிழை ஹம்சியோடு சேர்தது வைத்த பின்னர் சொல்வதாக முடிவு செய்தவள்,
கூறவந்ததை அப்படியே மறைத்து,




"அது.... அது.... "என்று அவசரமா சிந்தித்தவள்,




"ஆ...... நேத்து என்ன மந்திரம் போட்டு சௌண்டை மயக்கினேன்னு கேட்டேல்ல..., அது சொல்லத்தான் கூப்பிட்டேன்.



உனக்கும் அந்த மந்திரம் சொல்லித்தரேன், ஆனா அதை நீ தமிழுகிட்ட மட்டும் தான் யூஸ் பண்ணணும்! என்றவள்,



"அந்த மந்திரத்தோட பெயர் காதல்..." என சொன்னவள் வெட்கத்தில் நகத்தை கடிக்க ஆரம்பிக்க,



"என்னது காதலா..?
என வாயை கோணலாக்கி கேட்டு,
அதுவும் சிரிக்க கூட தெரியாத அவன் மேல....." என்றவளை முறைத்தாள்.




"அவன் இவன்னு சொன்னேன்னா பல்லை ஒடைச்சிடுவேன்டி! அவனை அவன் இவன்னு சொல்லிக்கிற உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு.



என்னை பெத்தவங்களா இருந்தாலுமே அவரை மரியாதையா தான் கூப்பிடணும்.



அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.... இனிமே அவரை சௌண்ட் என்கிற வேலையெல்லாம் வைச்சுக்காத. பாஸ்க்கு என்ன மரியாதை குடுக்கணுமோ, அதை இனிமே அவருக்கு குடுக்கணும்." என கண்டிப்போடு சொன்னவளை உதட்டை சுழித்தவாறு பார்த்திருந்தவள்,





"நான் வேணும்னா பாஸ் நேசமணின்னு கூப்பிடவா...?" என சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தவள் மண்டைமேல் கொட்டொன்று வைத்தவள்,


"என்ன நக்கலா....?" என்றாள்.



"பின்ன என்னடி.....? உன் காதல் கதைய கேட்டா சிரிப்பு வராம என்ன வரும்....?
இத்தனை நாள் எலியும் பூணையுமா திரிஞ்சிட்டிருந்திட்டு, திடீர்ன்னு அவன் மேல....." என்றவளை மதுஸ்ரீ முறைக்க,



"சரி சரி.... அவருமேல காதல்ன்னா, இந்த காதல் எப்பிடி பட்ட காதல்ன்னு எனக்கு விளக்கி சொல்ல முடியுமா...?" என்றாள்.



"மோதல்ல ஆரம்பிக்கிற காதலுக்கு தான் ஆயுள் அதிகம்மா....! அப்பிடியான காதல் தான் என்னோடது.


எத்தனை ஜென்மம் ஆனாலும் மாறாது." என்றாள்.




"ம்ம்..."
என உதட்டை பிதுக்கி கேட்டவள்,




"திடீர்ன்னு பத்திக்கிட்டிருக்குன்னா எப்பிடின்னு தான் தெரியல," என்றவள்,



"ஆமா.....
இதை உன் சௌண்ட்...." என்றவள் அவள் முகம் போன போக்கில்,



"சௌந்தரீகன் சார்கிட்ட உன் காதலை சொல்லிட்டியா..?" என்றாள்.


"இல்லை..... ஆனா சீக்கிரம் சொல்லிடுவேன்."



"அடிபாவி.... நீ என்னை விட படு வேகம் தான்டி. என்னை பாரு எத்தனை வருஷமா சொல்ல முடியாம தவிச்சிடடிருக்கேன்னு.



சரி.....! இப்போ தான் எனக்கு குருவா நீ வந்திட்டியே! உன்னை பார்த்து கத்துக்கிட்டா போச்சு." என்றவள்,





"சரிடி ஒரே மணிநேரம் தன் லீவ் கேட்டிருந்தேன். இப்போ ஒரு மணியை தாண்டி போயிட்டிருக்கு. நான் கிளம்புறேன். நீயும் பார்த்து போய்கோ!" என்க.




"நான் எங்க போக? உன்கூட பேசுறதுக்காக காம்பவுண்ட் சுவத்தை தாண்டி தான் வந்தேன். மறுபடியும் என்னால தாண்ட எல்லாம் முடியாது. நானும் உன்கூடவே வரேன்.

அடுத்து அங்க தானே!
என் ஆளு வந்துட்டான்ல " என்று கேட்டவாறு அவள் தோள்களில் கைப்போட்டு சென்றவள் அறியவில்லை.....


தாம் பேசியவற்றை எல்லாம் நீண்ட நேரமாக ஒருவன் கவனித்துக்கொண்டிருப்பதை.
கவனித்திருந்திருந்தால் அந்தகைய பேச்சினை எடுத்திருக்க மாட்டார்களோ என்னமோ.....!
 
Top