• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

19. என்னாளும் உன் பாென்வானம் நான்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
துளசி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை., அதே சமயம் அவனது சொல்லினை மறுத்தும் பேசமுடியவில்லை. ஏனெனில் வேலையில் சேரும் போதே இதே கூற்றை முன் வைத்திருந்தான்.



அன்று அவளிருந்த நிலையில் அதை மறுக்காமல் ஒப்புக்கொண்டுதான் வேலையிலும் சேர்ந்துகொண்டாள். ஆனால் இன்று ஏனோ உள்ளே பதட்டம் எழலாயிற்று.



'இவனோடு தனியேவா?' என்று தயக்கமாக இருந்தபோதிலும், அவளையே அறியாது அவன்மேல் நம்பிக்கையும் உண்டானது ஏதோ உண்மைதான். ஆனாலும் அவ்வளவு தூரம் எனும்போது என்ன சொல்வதென தயங்கியவாறு அவள் யோசனையில் ஆழ்ந்திருக்க,



"எதுக்கு ருத்ரா இவ்வளவு யோசனை?. இதில யோசிக்க எதுவுமில்லை, இரண்டே நாள் தான் போய் லேண்ட பாத்திட்டு வந்தோம்ன்னா வேலைய ஆரம்பிச்சிடலாம்." என்றான்.



"அது..... போயிடலம் சார்! எனக்கு பிரச்சினை இல்ல, ஆனா திடீர்ன்னு வெளியூர் போறேன்னு அம்மாகிட்ட சொல்லப்போனா என்ன ஏதுன்னு பயந்திடுவங்களோன்னு பயமா இருக்கு" என தயக்கமாகவே துளசி கூற,



"ஆமால்ல... அம்மா மனசுல கண்டத போட்டு அலட்டிக்க் கூடாதுன்னு டாக்டர் சொன்னதா சொன்னிங்கல்ல. ஆனா வேற வழியில்லையே!." என சிந்தித்தவன்,



"ஒன்னு பண்ணலாம் துளசி! நீங்களா சொல்லப்போனாத்தானே அவங்க கண்டதை போட்டு குழப்பிப்பாங்க நானே நேரில வந்து நிலமைய எடுத்து சொல்லுற விதத்தில சொன்னா புரிஞ்சுப்பாங்கன்னு நினைக்கிறேன்." என கூற,



அவன் கூற்றில் அதிர்ந்தவளோ!.. "நீங்களா? வேண்டாம் வேண்டாம்... நானே புரியிறமாதிரி சொல்லிக்கிறேன்." என துளசி அவசரமாக மறுத்தாள்.



"என்ன ருத்ரா நீங்க? இப்போ தானே அவங்களுக்கு எதாவது ஆகிடுமோன்னு பயந்தீங்க, அதுக்குள்ள இந்த மாதிரி சொல்லுறீங்க. நீங்க சொல்லப்போய் நாளைக்கு எதாவது அம்மாக்கு ஆகிடிச்சுன்னா, பாவம் பூரா என்மேல வந்திடும். நானே நேர்ல வந்து சொல்லிக்கிறேன். கிளம்புங்க நேரமாச்சு போகலாம்." என அவசரப்படுத்தினான்.



"அது வந்து சார்... உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்? நானே பொறுமையா எடுத்து சொல்லி புரியவைச்சா புரிஞ்சுப்பாங்க. நீங்க போறதுக்கான ஏற்பாட்ட பண்ணுங்க, நான் போன்லயே சொல்லிக்கிறேன்." என போனை கையில் எடுத்தவள் செல்போனினை பறித்து ஓரமாக வைத்தவன்,



"நான் தான் சொல்லுறேனே ருத்ரதுளசி!. எனக்கு எந்த சிரமமும் இல்லை, போற வழியில தான் உங்க வீடும் இருக்கு. அதனால நேர்லயே பாத்து தகவலை சொல்லிட்டு கிளம்புவோம். எனக்கென்னமோ நீங்க பண்றதெல்லாம் பாத்தா உங்க அம்மாவ நான் பாக்கக்கூடாதுன்னு நினைக்கிறீங்களோன்னு தோணுது. அப்பிடி ஏதாவதுன்னா சொல்லிடுங்க நான் வரல்ல. ஆனா ஏன் நான் உங்க அம்மாவ பார்க்கக் கூடாதுன்னு நினைக்கிறீங்க என்கிறத்துக்கான சரியான காரணம் வேணும்." என தடாலடியாக சொன்னதும் துளசி அதிர்ந்தே போனாள்.



அவன் சொல்வது உண்மை தானே! அவள் நினைப்பதும் அதுதான், இவனை அன்னபூரணி கண்டுவிட்டால் அதன் பின் என்னாகுமோ என்ற பயம் அவளுக்கு.



அதை காரணம் கேட்கும் இவனிடம் என்னவென்று அவளால் கூறமுடியும்?. உள்ளே வியர்த்துக் கொட்டினாலும் அதை முகத்தில் பிரதிபலிக்காதவளோ!.



"அப்... அப்பிடி எதுவுமில்ல சார்!, நீங்க அவங்கள பாக்கிறதனால எனக்கு என்ன பிரச்சினை வந்திடப்போகுது?. அவங்களுக்கென்ன உங்கள முன்னாடியே தெரியுமா என்ன?. உங்களுக்கு ஏன் என்னால சிரமம்ன்னு தான் யோசிச்சேனே தவிர, வேற எதுவுமில்லை." என எச்சி விழுங்கியவாறு சொல்லி முடித்தவளையே ஆராயும் பார்வை பார்த்தவன் அறிவான், அவள் இயல்பிலுருந்து நழுவியிருப்பதை.



"அப்புறமென்ன பேசிட்டு....? கிளம்புங்க போகலாம்." என நடந்தவன் பின்னால்,



கை பையினை எடுத்து நடந்தவள் மனம் முழுவதும் அடுத்து என்னாகுமோ! என்ற பதட்டமே தொற்றிக்காெண்டது.



'முருகா நீதான் எல்லாத்தையும் பாத்துக்கணும்' என அவசரமாக ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு காரில் ஏறி அமர்ந்துகொண்டாள்.



அவள் வீட்டுவாசலில் காரானது ஓரங்கட்டி நின்று கொள்ள, அதிலிருந்து அவசரமாக இறங்கியவளோ! "சார் நீங்க கார்லயே இருக்கிங்களா? நான் அம்மாக்கிட்ட சொல்லிட்டு ஓடி வந்திடுறேன்." என்றவளின் கள்ளத்தனம் புரிந்து போனவனாே, குறும்பாக அவளைப் பார்த்து நகைத்தவாறு காரிலிருந்து இறங்கியவன்,



"ஏன் நான் உள்ள வந்தா என்ன?.." என கேட்டான்.



"உள்ள வந்தா எனக்கொன்னும் இல்ல, எங்க வீட்டில பெருசா எந்த வசதியுமே இல்ல சார்! நீங்க ஏசியிலயே பிறந்து வளந்திருப்பிங்க, சாதாரண பேன் கூட இல்லாத வீட்டுக்குள்ள வந்தா உங்களுக்கு தான் கஷ்டமா இருக்கும். அதனால தான் சொல்லுறேன்." என மழுப்பினாள்.



"அவ்வளவு தானா? நான்கூட வேற ஏதாவது காரணம் இருக்குமோன்னு நினைச்சிட்டேன். ஏசி தான் உங்களோட பிரச்சினைன்னா நான் சமாளிச்சுக்குறேன்." என்றவாறு அவளை விலக்கி முன்னே நடந்தவன் தீவிரத்தை பார்க்கும் போது துளசிக்கு பயமாகத்தான் இருந்தது.



ஆனால் இது பயந்து ஒதுங்கும் நேரமில்லை. அவளது முகத்தில் சிறிதளவு மாற்றம் தெரிந்தாலும் தாயிடமும், முரளியிடமும் சிக்கிக் கொள்ளப் போவது அவள் தான். அதனால் முடிந்தவரை உணர்வுகளை முகத்தினில் பிரதிபலிக்காது இருப்பது தான் இதற்கு ஒரே வழி என நினைத்தவள் சென்று கொண்டிருந்தவனை முந்திக்கொண்டு உள்ளே சென்றாள்.



"போகும் போதே "மதி..." என குரல் கொடுத்தவாறு வந்தவள் குரல் கேட்டு கிச்சனில் வேலையாக இருந்த மதி,



"அக்கா நான் கிச்சன்ல்ல இருக்கேன். இதோ வந்திடுறேன்" என்றவாறு தன் வேலையினை அப்படியே விட்டிவிட்டு வெளியே வந்தவள்.



வாசலில் நின்றவனை கவனியாது "என்னக்கா இன்னைக்கு சீக்கிரமாவே வந்திட்டிங்க? என்ன பாஸ் மண்டைய போட்டுட்டாரா? அதனால தான் சீக்கிரம் ஆபீஸ இழுத்து மூடிட்டாங்களா?" என்று எப்போதும் போல் குறும்பு பேச்சு பேசியவாறு வர,



தன் வாயின் மேல் விரலை வைத்து கண்ணால் வாசலை நோக்கி ஜாடை காட்டியவள் செயலை கண்டுகொள்ளாதவளோ,



"என்னக்கா புதுசா! கண்ணடிச்சு ஓரமா கூப்பிடுற அளவுக்கு என்மேல அவ்வளவு லவ்வு?" என கேலி பேசி துளசியை வம்புக்கிழுக்க.



இதற்குமேல் இவளை பேசவிட்டால் தன் மனம் போகப்போவது உறுதியென நினைத்து, சடசடவென அவளருகில் ஓடிச்சென்றவள்,



"கொஞ்சம் உன் லொடலொட வாயை மூடிட்டு, வாசலை பாரு! என்னோட எம்டி வந்திருக்காரு, கொஞ்ச நேரத்துக்கு வாயை திறந்தேன்னா மூக்குமேலயே குத்திடுவேன்!" என பற்களை கடித்து அவளுக்கு மட்டும் கேட்டும் குரலில் எச்சரித்தவள்.



"அம்மா என்ன தூங்கிட்டாங்களா?.." என்றவள் அவளை அவனிடம் மாட்டிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.



அவள் சொன்னதும் தான் வாசலை பார்த்தவளுக்கு வாசலில் நின்றவனை கண்டு ஒரு மாதிரியாகிப்போனது.



ஈ..... என இளித்து வைத்தவளோ. "நீங்கதான் அக்காவோட எம்டி யா? எதுக்கு வந்ததும் வாசல்லையே நிக்கிறீங்க? உள்ள வரலாமே!



நல்ல வேளை அக்கா மட்டும் நீங்க தான் அவங்க முதலாளி என்று சொல்லலன்னா, மிச்சிப்போன பழைய சாதத்தை எடுத்துவந்து தட்டு எங்கப்பான்னு கேட்டிருப்பேன்." என அவனை சமாளிப்பதாக நினைத்து அதே பொய் புன்னகையோடு கூறியவளை முறைத்தவனுக்கும் அவளது குறும்புத்தனம் பிடிக்காமலில்லை.



அவன் முறைத்ததும் தன் பேச்சினில் கோபம் கொண்டுதான் முறைக்கிறான் என்பதாக நினைத்தவள்,



"நீங்க உள்ள வாங்க சார்! நான் குடிக்க எதாவது எடுத்துட்டு வரேன்." என சமையலறை நோக்கி ஓடியவள் உதடுகளோ!.



'ஏன்டி வாயை விடுறதுக்கு முன்னாடி வாசல பாக்க மாட்டியா? அவசரப்பட்டு வாயை விட்டிட்டியே! இவரு போனதும் உன் நிலமை என்னன்னு யோசிச்சு பாத்தியா?' என முணுமுணுத்தவாறு போனவள் பேச்சானது முரளி காதினிலும் விழுந்தது. அதை கேட்டவன் உதடுகளோ அவனை அறியாமலே விரிய உள்ளே சென்றான்.



எங்கே அங்கேயே நின்றால் மதி மானத்தையே வாங்கிவிடுவாள் என தப்பித்து உள்ளே ஓடிவந்தவள், கட்டிலில் அன்னபூரணி வழக்கம் போல் கண்மூடி படுத்திருக்க,



அவர் அருகில மண்டியிட்டு அமர்ந்தவள் கரங்களோ அன்னையில் கேசத்தினை இதமாக வருடிக்கொடுத்தது.



அந்த இதமான கரங்களின் ஸ்பரிஷமே மகளின் வரவை உணர்த்த, கண்விழித்தவர் எதிரில் மகளின் முகம் தெரிய உதட்டை பிரித்து புன்னகைத்தவர்,



"வந்திட்டியாம்மா?. என்ன இன்னைக்கு சீக்கிரம்?." என்றவர் புன்னகையினையே பார்த்திருந்தவள், தன்னோடு வந்தவனை கண்டதும் இதே புன்னகை நீடிக்க வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு,



"அது.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்ன்னு தாம்மா சீக்கிரம் வந்தோம்." என்றாள்.



"என்ன புதுசா அம்மாகிட்ட பேசுறத்துக்கு நேரம் எல்லாம் ஒதுக்கிட்டு?, இராவுக்கு வந்து பேசலாமேடா!. நீ இந்த மாதிரி பாதியில வந்தா வேலை தந்தவங்களுக்கு நஷ்டமாகிடாதா?." என குறைபட்டவரிடம்.



"அதெல்லாம் ஒன்னுமில்லம்மா!. வேலை விஷயமா தான் உங்க கூட பேசணும். அது.. என்னன்னா" என்று அந்த பேச்சை இடையே நிறுத்திக்கொண்டவள்,



"ம்மா... நான் எதை செய்தாலும் சரியா இருக்கும்ன்னு நம்புறீங்களாம்மா!." என்ற கேள்வியை முன்வைக்க,



"ம்ம்... நீ என்ன செய்தாலும் பலதடவை நல்லா யோசிச்சு தான் செய்வ. இப்போ அதுக்கு என்னடா!. நீ என்ன கேக்கணும், அதை சொல்லு. "என விஷயத்துக்கு வந்தார் அன்னபூரணி.



"அது அது... நான்..." என தடுமாறியவள், "நான் வேல பாக்கிற கம்பனி எம்டி வந்திருக்காரும்மா!. அவரு உங்கள பாத்து ஏதோ கேக்கணுமாம். அவரு அதோ அங்க தான் நிக்கிறாரு." என அவள் கைகாட்டியது அவரின் கால் புறம் என்றதனால் அன்னபூரணியால் தன் உடலை அசைத்து அவனை பார்க்க முடியவில்லை.




"என்னம்மா முதலாளி என்கிற. அவரை நிக்க வைச்சா பேசுவ?.. முதல்ல சேர் போட்டு உக்கார வைம்மா!" என மகளிடம் குறைபட,



"ம் சரிம்மா!." என்றவள்.



"சார் இவங்க தான் என்னோட அம்மா!. எப்பவும் இப்பிடித்தான். விருந்தாளிங்கள எப்பிடி உபசரிக்கணும் என்று இவங்ககிட்ட தான் கத்துக்கணும்." என அருகில் இருந்த பிளாஸ்டிக் இருக்கையினை இழுத்து தாயின் எதிரே போட்டவள்.


"வந்து உக்காருங்க சார்!" என அன்னபூரணியை புகழ்ந்து அவரை சிவக்க வைத்தாள்.



அவள் சொல்லுக்கு இசைந்து அந்த இருக்கையின் அருகில் வந்தவன் அன்னபூரணியிடம் வணக்கம் ஒன்றினை வைத்தவாறு அதில் அமர்ந்து கொண்டான்.



மகளின் புகழ்ச்சியில் அவளை செல்லமாக முறைத்தவரோ, முரளி வணக்கம் வைத்ததும் மறு வணக்கம் கூற திரும்பியவர், இருக்கையில் அமர்ந்தவனை கண்டதும் உடலைப்போல் விழிகளும் சற்று நேரம் செயலிழந்து போயிற்று.



அவனையே அதிர்ச்சியோடு பார்த்தவர் உதடுகள் துடிக்க, பேச வார்த்தையற்று ஸ்தம்பித்து போனவராய் விழிகளை மட்டும் அசைத்து துளசியை பார்த்தார்.



அவரது அசைவுகளையே பார்த்து நின்றவளுக்கு அவர் நிலை புரியாமலில்லை.



ஆனால் தமக்கு தெரிந்தவற்றை அவனுக்கு காட்டிக்கொள்ளக் கூடாது. அதே சமயம் தாயின் உடல் நலனிலும் மாற்றம் தெரிகிறதா? என அவரையே ஆராயலானாள்.



துளசியை வலிநிறைந்த பார்வை பார்த்தவள் விழியினை எதிர்கொண்டவளுக்கு தெரியாதா? அந்த பார்வையில் இருப்பது இவன் தானா அவன்? என்ற கேள்வி
.



ஆம் என்பது போல் தன் விழிகளை அழுத்தமாக மூடித்திறந்தவள் செயலை கண்டவர் ஏன்ம்மா? என்பது போல் அவளை பாவமாக பார்த்தவர் விழிகளானது நகர்ந்து மீண்டும் அவன் மீதே படியலாயிற்று.



அவனும் இவர்களையே தான் வினோதமாக பார்த்திருந்தான்.



பின்னே முதல் முறை தன்னை கண்ட துளசி எப்படி அதிர்ந்தாளோ, அதே போல் அன்னபூரணியும் அதிர்ந்தால் அவனால் என்னவென நினைக்க முடியும்? ஆனால் ஏன் இந்த அதிர்ச்சி என்பது தான் அவன் கேள்வியாக இருந்தது.



"ஏன் என்னை பாத்ததும் எல்லாரும் இந்த மாதிரி சாக் ஆகுறீங்க?. துளசியும் இதே தான் பண்ணா. நீங்களும்...." என சந்தேகமாக அவன் வினவ.



"அது... அம்மா ஏன் இந்த மாதிரி பாக்கிறாங்கன்னா, அவ... அவங்க முதலாளி என்றதும் வயசானவரா இருப்பார் என்னுதான் எதிர்பாத்தாங்க. அதான் உங்களமாதிரி இளைமையானவரை கண்டதும் அதிர்ச்சியாகிட்டாங்க." என அவசரமாக ஒன்றை யோசித்து கூறிட.



"அப்பிடியா?. ஏன் நீங்க அம்மாகிட்ட எதுவும் சொன்னதில்லையா?." என நம்பாது அவன் மறு கேள்வி கேட்டான்.



"அது... இல்ல சார்!. நான் எதுவும் அம்மாக்கு சொல்லமாட்டேன். சொன்னாலும் அது அவங்களுக்கு தேவையற்றது தானே!.." என்றாள்.



"ம்ம்.. அதுவும் உண்மை தான்." என்றவன் பேச்சானது அன்னபூரணிக்கு புரியவே இல்லை.
அதே சமயம் இவன் அவன் தானா என்ற சந்தேகமானது இன்னும் தீரவே இல்லை.
துளசியோ அவன் தான் என்கிறாள். ஆனால் இவன் தன்னை தெரியாதவன் போல பேசுகிறான். அதோடு பேச்சும், செயலும் முன்னுக்குப் பின் முரனாக இருக்க. மீண்டும் துளசியை ஏறிட்டவரை,
அவனறியாது அவசரமாக இப்போ எதுவும் வேண்டாம். பிறகு சொல்கிறேன். என தலையசைத்து அன்னையின் கவனத்தை தன்னிடமிருந்து திருப்பியவள்,
"சார் டைம் ஆகுது. அம்மாகிட்ட கேட்க வந்ததை கேளுங்க." என்க,


"ஆமால்ல ஃபிளைட்டுக்கு டைம் ஆகுது." என்றவன்.

"ம்மா... அது என்னன்னா. ஆபீஸ் சம்மந்தமா வெளியூர்ல சின்ன வேலை இருக்கு. எப்பவும் வெளியூர் போறது என்னறால் என்கூட மேனேஜர் தான் வருவாங்க. இன்னைக்கு என்னாச்சுன்னா அவனுக்கு வீட்டில சின்ன பிரச்சினை ஆகிடிச்சு. அதனால அவன் வரமுடியாது அப்பிடின்னு சொல்லிட்டான்.

அவனுக்கு அப்புறம் ஆபீஸ்ல நம்பிக்கையானவங்கன்னா உங்க பொண்ணு ருத்ரா தான். அது அவங்க கடமையும் கூட.

இப்போ அவங்களை அழைச்சிட்டு போகத்தான் உங்ககிட்ட அனுமதி கேக்க வந்திருக்கோம். போயிட்டு இரண்டே நாள்ல திரும்பிடுவோம்." என அவன் கேட்டு முடிப்பதற்குள் மகளை நிமிர்ந்து பார்த்தார் அன்னபூரணி.


எப்போதும் போல அவள் இலகுவாகவே நிற்பதில் அவரால் எதுவும் கண்டுகொள்ள முடியவில்லை.

இவனோடு இரண்டு நாள் எனும்போது பயமாகத்தான் இருந்தது.
பதிலுக்காக தன் முகத்தை ஏறிட்டவனுக்கு பதில் சொல்லத் தெரியாது மகளை மீண்டும் பார்த்தவர் பார்வையில் என்ன செய்யட்டும் என்றகேள்வி தேங்கியிருக்க. சம்மதமாய் தலையசைத்தாள் துளசி.


அவள் பதில் மனதில் பீதியை கிளம்பினாலும், மகள் எதை செய்தாலும் அது சரியாகவே இருக்குமென நம்பியவர்,


"இதில நான் என்ன சொல்ல தம்பி. இது அவளோட வேலை என்கிறீங்க. அவ சம்மதிச்சா அழைச்சிட்டு போங்க. அவ என்ன முடிவெடுத்தாலும் அது எப்பவும் சரியாத்தான் இருக்கும். இதில நான் மறுப்பு சொல்லமாட்டேன்." என ஒதுங்கிக்கொண்டார் அன்னபூரணி.



தொடரும்....
 

Fa. Shafana

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
38
Amnesia va evanukku. Yethuvum niyaabagam ella.....
Accident ல எல்லாம் மறந்து போச்சுனு அவனோட அப்பா துளசி கிட்ட சொன்னத மறந்துட்டீங்களா??
 
Top