• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

19. காற்றோடு கலந்த விதையவள்

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
"என்னடி ரெண்டு பேரும் செய்து வச்சிருக்கிறீங்கள்.... மாமியார் மருமகள் சண்டை கூட இப்பிடி இருக்காதே?"

அடுக்கி வைக்கபட்ட புத்தகங்கள். அலுமாரியில் அழகாக மடித்து வைத்த உடைகள்.... கை பைகள், தலையணை இல்லாமல் பஞ்சுகள்... கட்டில் சொல்வே தேவையில்லை. அதை புரட்டி மட்டும் போடவில்லை.... எல்லாமே திக்குத்திக்காக கிடந்தது.

குளியறறை வாசலிலேயே நின்றிருந்தவள், கால் வைக்க இடமே இல்லாமல், கங்காரு போல் தாவி தாவியே வந்தாள்.

பேய் போல் குலைந்திருந்த முடியில் ஆங்காங்கே பஞ்சுகள் ஒட்டியிருக்க, கதவை பிடித்தபடி மூச்சிரைத்துக் கொண்டிருந்த மைனாவை கண்டவளுக்கு, வரும்போது அழகாக வந்தவள், இப்போது இருக்கும் கோலம் கண்டு, சிரிப்பை அடக்க முடியவில்லை.

எங்கே சிரித்தால் தனக்கும் இதே நிலை தான் என நினைத்தவள்,
மெதுவாக அவர்கள் மத்தியில் வந்து நின்றவள் உதடுகளோ அவளையும் மீறி துடித்தது.

என்னதான் அடக்கினாலும், அளவை தாண்டி விட்டால், உணர்வுகள் கட்டுக்குள் வராதல்லவா... அப்பட்டமாகவே அவள் சிரிப்பை அடக்குவது தெரிந்தது.

இருந்தும் மரியாதையாக சிரிப்பை கட்டுப்படுத்தியவள்,

"நான் வரேக்க அறை கிளீனா இருக்கோணும்... இல்லை என்டா ரெண்டு பேரையும் என்ன செய்வன் என்டு எனக்கே தெரியாது.. " எச்சரித்து சென்றாள்.

"உன்னால தாண்டி இவ்வளவும்.... நீயே செய்!" அதற்கும் சண்டை போட்டார்களே தவிர, யாருமே அதை ஒதுக்க நினைக்கவில்லை.


மூவருக்குமான காஃபி தட்டுடன் வந்தவள், இன்னமும் அறை ஒதுக்குப்படமல் இருக்கவே, இம்முறை அடக்க முடியாமல் சிரித்தே விட்டாள்.

"லூசுங்களே...! வயிறு வலிக்குதடி தனிய இருந்து சிரிச்சு. புள்ளையளா நீங்கள்?"

தட்டை மேசையில் வைத்தவள், தானே எல்லாவற்றையும் எடுத்து அதற்கான இடங்களில் ஒதுக்கி வைத்து விட்டு வந்து தன் கப்பினை எடுத்தாள்.

இருவரும் துஷாவையே முறைக்க.

"என்னை முறாச்சது காணும்....இந்த கோலத்தோட எனக்கு முன்னுக்கு நிக்காத... என்னால் சிரிக்க ஏலாது. வாயில் காபி இருக்கு... மூஞ்சயில துப்பிட போறன்." என்றவளால் உண்மையில் சிரிப்படக்க முடியாமல் அதையே செய்தாள்.

அதை கண்டு சைலுவும் சேர்ந்து சிரித்தாள்..

கோபத்தில் துஷாவை துரத்தியவள் ,இரண்டு அடிகளை கொடுத்து விட்டு. குளியலறை சென்று தன்னை சரி செய்து கொண்டு வந்தவளை,

"டீ குடி மைனா... ஏய் அரை மென்டல்.... உனக்கும் வேணும் என்டா.. அறைய கிளீன் பண்ணீட்டு எடுத்து குடி!" என்றவள் சமையலை பார்க்க செல்ல, மைனாவும் அவளுடன் சேர்ந்து கொண்டாள்.





சமையல் முடிந்து சாப்பிட்டு வர நேரம் ஒன்றை தொட்டிருந்தது.

"கேக்குறதுக்கு மறந்து போனன் துஷா... நெட்டாங்கு ஏதாவது சொன்னானாடி?"

"மேடம் என்ன சொல்லோணும் என்டு எதிர் பாக்கிறீங்கள்?"

"வெள்ளிக்கிழமை குழப்பம் பண்ணீட்டு வந்தமே. அத பற்றி எதுவுமே சொல்லலையே நீ..." கேள்வியில் தீவிரமானாள்.

'அவனுக்கே தெரியும்! நீங்கள் ரெண்டு பேரும் அரை மென்டல் என்டு. அதான் கேக்கேல.."

"நாங்கள் அதென்டா நீயும் அதுதான்...
அது சரி! எனக்கு ஒரு சந்தேகம்"

"என்ன..?"

"அவன் உன்னை லவ் பண்றானோ என்டு.. அது தான் அன்டைக்கே சொல்லிட்டனே! அப்பா முடிவு தான் என் முடிவு என்டு, பிறகு என்ன?"

"இல்லடி ஒரு வேளை நீயும் அவனை விரும்பி, அப்பா சொல்லை உன்னால நிறைவேற்ற முடியாம போனா?"

"என்னை பெத்தவங்க செய்த தப்பை நான் செய்ய மாட்டேன் சைலு.
அவயளும் காதல் கல்யாணம் தான் செய்தீச்சினம்... அதால ரெண்டு பேரோட சைட்டிலயும், அவேன்ர காதலை ஏற்கேல..." என்றவள் மீதியை பேச முடியாது அமைதியானாள்.

"நானும் கேக்கோணும என்டு நினைச்சன்.. நீ எங்கட ஊர் சரி... அது எப்படி உன்கட சொந்தக்காரங்க இங்க...?"

" அது பெரிய கதை" என்றவள் அவர்கள் தாய் தந்தை கதையை கூற ஆரம்பித்தாள்....



💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥


சுற்றிலும் பச்சை விரிப்பு விரித்தால் போல் வயல்வெளிகள். ஆங்காங்கே வாயலுக்கு தண்ணீர் பச்சுவதற்காக குளங்களில் இருந்து வெட்டப்பட்ட வாய்கால்கள்.

குளங்களை சுற்றி விரித்த குடைகள் போல் பனை மரங்கள். வீதி எங்கும் இரு புறங்களிலும் விருட்ச்சம் என வளர்ந்து நிற்கும் பச்சை பசேல் என நிழல் தரும் மரங்கள்.

அந்த ஊரே இயற்கையின் சொற்கா புரிபோல் காட்சி தரும்.

"தேவி இங்க வா.!" பேத்தியை அழைத்தார் தங்கம்மா....

"எதுக்கு என்ன கூப்பிட்டிங்க அப்பம்மா?"

"காலேஜ்கா போற?"
'என்னத்தை சொல்ல போகுதோ இந்த அப்பம்மா' என்று எண்ணியவாறு,

'ம்ம்.... ஏன் கூப்பிட்ட என்டு சொல்லுங்கோ.. நேரமாகுது"

"அடியே! அந்த விளங்காம போன மாசி மகளோட போகாத... அவளை ஊரில குறையா கதைக்கினம்." என்றார்.

"அப்பம்மாஆஆஆஆ.... உங்களுக்கு வேற வேலையே இல்லையே? எப்ப பாத்தாலும், அவளோட போகாத.... இவளோட போகாத என்டு, ஊரில உள்ள எல்லாரையுமே குறை சொல்லிக் கொண்டு...
உங்களுக்கு யாரு இந்த புரளி எல்லாம் வந்து சொல்லுறதோ....
அதுகளோட நாக்கு அழுகி போகும்." என்றவள்,

"உங்கட புரளியள கேக்க நேரமில்ல நான் போறன்" என எழுந்தவளை
இழுத்து பிடித்தவர்,

வீட்டில ஒரே பொம்பிள பிள்ளை என்டு அப்பனும் ஆத்தாளும் தாற செல்லம் கயதாது என்டு, ரெண்டு அண்ணன்கள் வேற பழுதாக்கி வைச்சிருக்கிறாங்கள்...
அதான்டி உனக்கு பெரியவ என்டு மரியாதை இல்லாம, வாய் முளைச்சிட்டுது" என்றவரை வெட்டவா குத்தவா என்பதைப்போல் பார்த்தாள்.

தங்கம்மா கண்டிப்பான அன்னை, மாமியார், பாட்டி... அந்த குடும்பத்திலே வயது கூடியவரும் அவர்தான்.

கணவன் இறந்து விட.
தனது இளைய மகன் ராசா உடனே மீதி வாழ்கையை கழிக்கிறார்.
இராசரட்ணம் காந்தி தம்பதிகளுக்கு நான்கு பிள்ளைகள்.

முத்தவன் மணிவண்ணன். இரண்டாவது பெண்வண்ணன் இருவரும் படித்து விட்டு, அது அவர்களுக்கு ஓடாததால் தகப்பனுடன் சேர்ந்து விவசாயம் செய்கின்றனர்.
மூத்த மகன் மணிவண்ணனை விட, ஆறு வயது சிறியவளே சாந்தினிதேவி.

அவளுக்கு அடுத்தவனே இளவண்ணன். பணக்கார குடும்பம் இல்லை என்றாலும் ஓராளவு வசதியானவர்களே.

"அம்மா....... அம்மா" அன்னையை அழைத்தவள்,

"இந்த கிழவியை சும்மா இருக்க சொல்லுங்கோ... எப்ப பாத்தாலும் குறை சொல்லீட்டு இருக்குது" என்றாள்.

காந்திக்கு அவர் அத்தை மேல் மரியாதையோ இல்லையோ, அவர் வாயை திறந்தால் மூடமாட்டார் என்ற பயம்.

அவரையும் மகளையும் மாறிமாறிப் பார்த்தவர்,

"என்னடி! வாய் கொழுப்பா? பெரியவய மரியாதையா நடத்த தெரியாது?" சத்தம் வராமலே கண்டித்தார்.

"யாரு பெரியவா....? இந்த கிழவியா? பெரியவங்கள மாதிரியா கதைக்குது?
நேற்று மல்லிய குறையா சொல்லி அவளோட சேராத என்டிச்சு... இன்டைக்கு இந்துவ....... நாளைக்கு என்னையே சொல்லும்மா இது....?" என்றவள் தங்கம்மாவை முறைக்க.

"என்ன சத்தம்..?" என்று அங்கு வந்த ராசாவிடம்,

"வாடா வா........! நல்லா புள்ளைய வளத்து வைச்சிருக்கிற.
இவளினர வாய் ஊரு எல்லை வரை கேக்குது.
நேத்துத்தான் என்ர சினேகிதி சரசு சொன்னாள். உன்ர பேத்தி மைக்க முளுங்கிட்டாளா? போடுற சத்தம் ஊர் எல்ல வரை கேக்குது என்டு." வந்ததும் வராததுமாக போட்டு குடுத்தார் முதியவர்.

"என்னம்மா ஆச்சு..." மகளையே கேட்டவாறு அவள் தலையை வருடினார்,

"நான் ஒன்டுமே செய்யேலயப்பா... எல்லாம் இந்த கிழவி தான்"

"இது என்ன புது பழக்கம்? முதல்ல அம்மாட்ட மன்னிப்பு கேளு.! பெரியவைக்கு மரியாதை குடுக்கோணும்.. இதா சொல்லி தந்தன்...?"

"அதில்லப்பா........"

"செய்தது தவறென்ற ஏற்கோணும் தேவி... முதல்ல மன்னிப்பு கேள் அம்மாட்ட...."

"சாரி கிழ... சாரி அப்பம்மா..." என்றவள் அவரை முறைத்தவாறு சென்றுவிட்டாள்.

"இவ ஒரு நாள் இல்ல ஒரு நாள்... உன்ர பேரை கெடுக்கற மாதிரி நடக்க போாற அப்ப நினைப்பீங்க இந்த அம்மா எதுக்கு இவளை இவ்வளவு கண்டிச்சேன் என்டு" என்றார்.

"அவள் சின்ன பிள்ளை அம்மா! ஏதோ விளையாட்டுக்கு செய்யிறாள்... நீயும் சரிக்கு சமமா நின்டு அவளோட மல்லு கட்டுற" என்றவர் வயலுக்கு கிழம்பி விட்டார்.



எந்த அளவு கண்டிப்பானவர்களோ அந்தளவு பாசமான குடும்பம்.
தேவி என்றாலே அண்ணன் மார் அவளை தலைக்குமேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

என்னதான் அண்ணன்கள் பாசத்தை காட்டினாலும் அவளக்கு, தன்னை விட இரண்டு வயது குறைவான தம்பி மீதே அதிக பாசம். அது அவர்கள் வயதால் கூட இருக்கலாம்.

அதற்காக தமையன் மீது பாசம் இல்லாமல் இல்லை. இளாவும் அவளுடன் அப்படித்தான்.

கல்லூரி மூன்று ஊர்களுக்கு ஒன்று என்பதனால், ஊர் எல்லையிலே இருந்தது. தோழிகளுடன் நடந்தே செல்வாள்.

அவள் தமையன் மார்கள் பலமுறை கேட்டு விட்டார்கள்... தங்கள் பைக்கில் அழைத்து போகிறோம் என்று. அவள் மறுத்துவிட்டாள்.




காலை நேரம் என்ற படியினால் வீதி நெரிசலாகவே இருந்தது.
சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவரை, எதிரே வந்த லாறி, தன் கட்டுப்பாட்டை இழந்து, அவரை இடித்து தள்ள, தூக்கி வீசப்பட்டார் அந்த முதியவர்.

அதை கண்டதும் ஓடிய தேவியும் அவள் தோழிகளுக்கும் ஓடிச்சென்று பார்த்தனர்.

தலை பிளந்து ரத்த ஆறே ஓடியது.

சாதாரணமாக விபத்து என்று சொன்னாலே நடுங்குபவள், கண் முன் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்க, அந்த இடத்திலே மயக்க முற்றாள்.






அவளை தாங்கி பிடித்து ஓரமாக கொண்டு சென்ற தோழியர்ள், கையில் இருந்த புத்தகத்தால் விசுக்க.

அதற்கிடையில் முதியவரை சுற்றிவளைத்த கூட்டம், ஆட்டோவில் ஏற்றி வைத்திய சாலை அனுப்பிவிட்டனர்.

தேவிதான் மயக்கத்தில் இருந்து எழுவது போல் தெரியவில்லை.
இன்னமும் மயக்கத்திலே இருப்பதை கண்டு பயங்கொண்டு மல்லி,

" யாரவது தண்ணி வைச்சிருக்கிங்களா?" யாரிடமும் தண்ணீர் இல்லை.

சுற்ற முற்றம் பார்த்தவள், வீதிக்கு அந்த பக்கம் கடை இருப்பது தெரியவும், வேகமாக கடையை அடைந்தவள்,

" தண்..... தண்ணீர்" என்றாள் மூச்சிரைக்க

"என்ன தங்கச்சி ஏன் இப்பிடி களைக்குது"

"அங்க... அங்க..." சொல்ல முடியாமல் திணற,

"சரிமா பதறவேண்டாம்... இந்தா முதல்ல இந்த தண்ணிய நீ குடி!" என்று போத்தலை நீட்டவும் அதை மறுத்தாள் மல்லி.

"சரி வா! அங்க என்னவென்டு பார்ப்பம்" என்றவன்
கையோடு தண்ணீர் போத்தலையும் எடுத்து சென்றான்.
அங்கு இரு பெண்கள் தரையில் இருப்பது தெரிய, அருகில் சென்று பார்த்தான்.
மயங்கிக்கிடந்தவளை கண்டு,

"என்னாச்சு?"

"அங்க விபத்து நடந்துது அண்ணா ... அதை பாத்து பயந்து மயங்கினவள், இன்னும் எழும்பேல"
அருகில் சென்று, முட்டி போட்டு அமர்ந்தவன், தண்ணீரை கொண்டு முகத்தில் அடித்தான்.


"பயப்பிட வேண்டாம்" என்றவன் ஆட்டோவை அழைத்து, அவளை தூக்கி ஆட்டோவில் இருத்தியதும் தான், அவள் முகத்தை பார்த்த டிரைவர்,

"தேவிம்மா...." என்றார்.

"உங்களுக்கு இவாவ தெரியுமா?"
என்ர சொந்த கார பிள்ளை தான்" என்றவன், நடந்தவற்றை கேட்டறிந்தார்.

'கடையில யாருமில்லை... அப்பிடியே விட்டுட்டு என்னால வரேலாது.. நீங்கள் சொந்தம் என்று வேற சொல்லுறீங்க... நீங்களே இவாவ ஆஸ்பத்திரி கூட்டிக்காண்டு போயிடுறிங்களா?" என்றான்.


"யாரென்டு தெரியாத நீங்களே இவ்வளவு செய்யேக்க, என்ர தங்கச்சிக்கே நான் செய்ய மாட்டேனா?" என்றவன், நன்றி கூறி விடைபெற்றான்.

ஆம் அந்த ஓட்டோ டிரைவர் வாசன் தான்.
அவன் பெற்றவர்கள், அவனது சிறு வயதிலே, வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கணவனுக்கு, மதிய உணவு எடுத்து சென்ற மனைவி, தென்னை மர நிழலில் இருந்து உணவு பரிமாறும் போது, திடீர் என இடியுடன் கூடிய மழை பெய்ததால், மின்னல் தாக்கி, அந்த இடத்திலே உடல் கருகி பலியாகினர்.

அந்த சம்பவத்திற்கு பிறகு, வாசன் தனது பேத்தியுடனே வளர்ந்தான்.

என்னதான் பேத்தியார் வளர்த்தாலும், வருடம் இருநூறுக்கு மேற்பட்ட நாட்க்கள் மணி வண்ணன் வீட்டில் தான் தங்குவன்.

வாசனுடைய தந்தையும், ராசாவும் நல்ல நண்பர்கள். அதனாலே தன் நண்பன் இறந்த பிறகு, அவனையும் தன் மகன் போலவே நினைத்து தங்களுடனே வைத்து கொள்வார்.

அவனும் படிப்பை பாதியில் விட்டு விட்டு, ராசாவின் தோட்டம் வயல் என்றுதான் வேலை செய்தான். பின்னர் பேத்தியார் அவனுக்கு திருமணம் செய்து வைத்ததால், அவன் மாமனார் ஆட்டாே எடுத்து கொடுக்க, அதையே இப்போது தொழிலாக செய்கின்றான்.


மருத்துவர் பரிசோதித்து விட்டு, சாதாரண பயத்தால் வந்த மயக்கம் தான் பயப்பட ஒன்றுமில்லை என கூறி, அனுப்பி வைத்தனர்.





பறவைகள் பாடல்களோடு அழகாய் விடிந்தது அன்றைய நாள்.
வேக வேகமாய் எழுந்து தயாராக,

"என்ன இன்டைக்கு இடியோட மழை வரும்போல இருக்கு" என்று தன் கணவனிடம் கூறுவது போல சத்தமாக காந்தி கூற.

"எனக்கு தெரியும்.... நீ என்னைத்தான் நக்கலடிக்கிறா என்டு.
ஒரு நாள் காலேல எழும்ப விடமாட்டியே!
சும்மா போம்மா... உனக்கு நான் வேளையோட எழுந்தாலும் குற்றம், எழேல என்டாலும் குற்றம்"
புத்தகங்களுடன் வெளியேறினாள்.

அவளுக்காக தெரு முக்கில் காத்திருக்கும் தோழியற்கும் இன்று பெரும் அதிசயமே.

"என்னடி அதிசயமா இருக்கு... கால் கடுக்க நின்டாலும் வர மாட்ட.. . இன்டைக்கு என்ன...?"

"நேற்று எனக்கு உதவி செய்தவரை உனக்கு தெரியும் தானே"

"தெரியும் அந்த கடையில தான் வேலை செய்யிறார் என்டு நினைக்கிறான்"

"அப்ப என்னை கூட்டிக்காண்டு போ"

"எதுக்கு? உன்ர பாட்டி என்னை அரிவால் எடுத்து துரத்துறதுக்கா.."

"அதில்லடி நன்றி சொல்லோணும்..."

"சரி... காலேஜ் போற வழி தான்... சொல்லீட்டு போவம்" என்றவள், கடை நெருங்கியது,

"அதோ.. அது தான் கடை! போய் சொல்லீட்டு வா!" என்றாள்.

"என்னடி! நீயும் வா" என்று அவளையும் அழைக்க..

"தொல்லைடி" என்று இருவரும் சேர்ந்து போக, நிமிர்ந்து பார்க்காமலே

" என்ன வேணும்" என்றான்.
அவள் மல்லியிடம் திரும்ப.

"அண்ணா" என்றாள் மல்லி. அண்ணா என்றவும் நிமிர்ந்தவன், அடையாளம் கண்டான் போல.

"நீயா... அந்த புள்ளைக்கு இப்ப சுகம் தானே!"

"ஓமண்ணா... உங்களிட்ட நன்றி சொல்லோணும் என்டாள்.. அதான் கூட்டி வந்தன்.."

"ஓ... இவா தானா? நேற்று சரியா கவனிக்கேல.. இப்ப நல்லா இருக்கிறீங்களா?" என்றான் அவளிடம்.
தெரியாத ஒருவரின் மேல் காட்டும் அக்கறை அவளுக்கு பிடித்து போனது. அவன் கேட்ட கேள்விக்கு பதில் வராமல் தலையை மட்டும் ஆட்டியவள்.

"நன்றி சார்" என்றாள்.

"சாரா? அண்ணா என்டே கூப்பிடலாம்" என்றான்.
மறுப்பாக தலை அசைந்தவள்.

"நாங்க வாறம் சார்...." என்று விட்டு ஓடிவிட்டாள்.

சுதாகரன் அந்த ஊரின் பெரியமனிதரான கணபதிபிள்ளை, விஜயலஷ்சுமி தம்பதிகளின் இரண்டாவது மகன்.

முத்தவன் சுந்தரம் அவன் மனைவி கலாவதி வசதியான இடத்து பெண். அவள் செல்லமாக வளர்ந்ததினாலோ என்னவோ, தான் சொல்வதே சரி என்று நினைப்பவள்.

எவ்வளவு தான் பணக்கார பெண் என்றாலும், சொத்தில் ஆசை மட்டும் குறையவில்லை. இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை. இப்போது அவனுக்கு ஒரு வயதை தாண்டி இரண்டை நெருங்குகிறது.

தந்தை கணபதிபிள்ளையை போல், அவனும் தந்தையை விட கொஞ்சம் பெரிய அளவிலான வாணிபம் தான்.

தந்தையினுடைய கடையை சுதாகரன் தான் கவனித்து கொள்கிறான்.

நாட்களும் இறக்கைகட்டிக்கொண்டு பறந்தது.
அந்த கடையை தாண்டி செல்லும்போது அவன் இருக்கிறானா என்று அவன் கடை பக்கம் பார்வையை செலுத்துவாள் தேவி.

அப்படி அவனை வெளியில் காணவில்லை என்றால், ஏதாவது வாங்குவது போல தோழியரை நிக்க விட்டு, தனிமையில் அவன் நிற்கிறானா என்று கண்களால் தேடுவாள்.

சுதாகரும் இவள் செயல்களை ரசிக்காமல் இல்லை.
வேண்டும் என்றே அவள் வரும் நேரம் பார்த்து உற் புகுந்து கொள்வான். தன்னை அவள் தேடுகிறாளோ என்றறிய.

இப்படித்தான் கால்லூரி நேரம் கடந்து போக, சுதாகரனை காணாதவள், தோழியரை நிக்க விட்டு, பேனா வாங்க போதவாத கூற,

"அங்க யாரிட்டயாவது மாறி வாங்கலாம் வா" என்றாள் மற்றவள்.

"இல்ல நீ போ... நான் வாறன்" என்றவளிடம்,

"வர வர உன் போக்கே சரியில்ல... இந்த இடம் வந்தா, மந்திரிச்சு விட்டவ போல ஆகுற," என்றாள் எதையோ அறிந்தவளாய்.

"சும்மா போடி.. உனக்கு தான் நேரம் பேச்சு என்னடா எல்லா" என்றவள் கடைப்பக்கம் ஓடினாள்.
 
Top