• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

2. மெர்லின் - நீலவேணியின் காதல்

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
876
நீலவேணியின் காதல்
உருண்டும் புரண்டும் படுத்துப் பார்த்தாள் அவள். உறக்கம் வரவில்லை. அவ்வப்போது ரேடியம் முட்கள் ஒளிரும் மேசை கடிகரத்தைப் பார்த்துக் கொண்டாள். இப்பொழுது மணி சரியாக இரண்டு. நேரம் நகரவேயில்லை. வெறுப்போடு ஜன்னல் புறமாக திரும்பிப் படுத்தாள். நிலவின் ஒளி திரைச்சீலையின் வழியாகஅறைக்குள் பரவிக் கொண்டிருந்தது.
ஜன்னலைத் திறந்து பார்ப்போமா வேண்டாமா என நினைத்தபடி இரு மனதுடன் எழுந்தாள். மெதுவாக ஜனனலைத் திறந்தாள். சில்லென்ற காற்று முகத்தைத் தழுவி அலைந்து உடல் முழுதும் பரவியது. வானில் தெரிந்த முழு நிலவைப் பார்த்தாள். அதனுடன் மனதுக்குள் பேசினாள். "நிலவே, நீ மட்டும் அவனை நாளை என் முன்னே நிறுத்தி விடு. பிறகு நீதான் என் தெய்வம்" ஜன்னல்களை மூடிவிட்டு வந்து படுத்துக் கொண்டாள்.
லேசாக கண்களை மூடினாள். இரண்டு நிலாக்கள் தெரிந்தது. ஒன்று முழுநிலவு, மற்றொன்று அரை நிலவு. இதற்கு முன்பு இவ்வாறு பார்த்ததேயில்லை. அப்பொழுது கதவு தட்டுவது போல் சபதம் கேட்க, கூடவே "நீலவேணி.. நீலவேணி" என்ற குரலும் கேட்க, இரு நிலவுகளும் மறைய, எங்கோ கேட்ட குரல் போல, கேட்ட பெயர் போல இருக்கிறதே? ஐயோ..நான் தான் நீலவேணி என்று மனதுக்குள் சொல்லியபடி, கண்களை கசக்கியபடி எழும்ப முயற்சித்தேன்.
“இது என்ன அறைக்குள் இவ்வளவு வெளிச்சம்? ஓ..விடிந்தே விட்டதா?” அப்படியென்றால் கூப்பிட்டது கனவில்லை. அம்மாதான் கூப்பிட்டிருக்கிறாள். ஜன்னல்களைத் திறந்தேன். குருவிகளின் குரல்களையோ, அணில்களின் விளையாட்டுக்களையோ ரசிக்க நேரமில்லை.
இன்று மிக முக்கியமான நாள். காதலர் தினம். அவனை எப்படியாவது பார்த்து விட வேண்டுமென்று மனம் துடித்தது. ஏதேதோ நினைத்தபடி டவலுடன் குளியலறைக்குள் நுழைந்தாள்.
குளித்து முடித்து வெளியே வந்து மொபைலை எடுத்துப் பார்த்தாள். முக்கிய தகவல் எதுவுமில்லை. அதனை வைத்து விட்டு அலமாரியை நோக்கி நடந்தாள்.
இன்று புதிதாக அணியவே கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பணத்தில் வாங்கி வைத்திருந்த பெங்கால் காட்டன் புடவையை எடுத்து நுகர்ந்தேன். அணியத் துவங்கினேன். அணிந்து கொண்டிருக்கும் பொழுதே எங்கோ பறப்பது போலிருந்தது. என் உடல் வாகிற்கும், நிறத்திற்கும் பொருத்தமாக இருந்தது.
அணிந்த புதுப் புடவையுடன் கண்ணாடி முன் அமர்ந்தேன். என்னை அவன் பார்ப்பது போல் பார்த்தேன். மற்ற நாட்களைவிட சற்றே அதிகமாக மேக்கப் செய்து கொண்டேன். தலைவாரி பின்னல் போட்டு புத்தகங்களை பேக்கில் வைத்தேன். பிறகு பேக் வேண்டாமென்று இரண்டு புத்தகங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அறைக்கதவை மூடிவிட்டு வெளியே வந்தாள்.
"அம்மா பூ கட்டிட்டியா, டிஃபன் ரெடியா?" என்றபடி படிகளிலிறங்க
எதிரே வந்த அம்மா, "வேணி, புடவை சூப்பரா இருக்குடி"
நல்ல எடுப்பா இருக்கு. சரி வா சாப்பிடு" என்றாள்.
"ஜரிகை பார்டர் சின்னதா இருந்தாலும் எடுப்பா இருக்குதுல்ல."
மகளின் அழகு அவளை பெருமிதப்படுத்தியது.
"உன் அப்பா மட்டும் இப்போ இருந்திருந்தால்" என்றபடி கன்னங்களைத் தொட்டு கண்களில் ஒத்திக்கொண்டாள்.
"அப்பா இல்லைன்னா என்னம்மா? நீ இருக்கும் போது எனக்கென்ன கவலை?"
"ஆமா உன் பிள்ளை எங்கே,காலைலயே நாய் குருவின்னு ஏதும் வாங்கப் போயிட்டானா? இன்னிக்கு இண்டர்வியூ இருக்குன்னானே?"
"அம்மா நீயே ஊட்டி விட்டுடு ஒரு இட்லி போதும்."
"ஹேய் பக்ஸ், குட்மார்னிங்! உன்னை
கொஞ்ச நேரமில்லை வந்து கொஞ்சறேன், ஓகே ? அப்படியே பூவையும் வச்சி விட்டுடும்மா."
ஆங், அப்புறம் வசந்தி வந்தா நான் போயிட்டேன்னு சொல்லிடு" அன்றைய முத்தம் ஒன்றைக் கொடுத்து விட்டு "பை அம்மா" என்றபடி நகர்ந்தாள்.
வேணி வாசலைக் கடந்த பின் அம்மா கதவை மூடிவிட்டு உள்ளே சென்றாள்.
லேசாக வியர்க்கத் துவங்கிய பொழுது தான் குடை எடுத்து வர மறந்தது நினைவுக்கு வந்தது. பரவாயில்லை, பேருந்தில் ஏறும் வரை கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் என்று நினைத்தபடியே நடந்து பேருந்து நிறுத்தத்தை அடைந்தாள்.
எப்பொழுதும் வசந்தியுடன் தான் வருவேன், இன்று வேண்டுமென்றே சீக்கிரம் கிளம்பி வந்துவிட்டோம் என்று நினைத்துக் கொண்டாள்.

பேருந்து நிறுத்தத்தில் இன்று கூட்டம் அதிகமில்லை. ஓரிரு ஜோடிகள் நடந்தும் பைக்கிலும் உற்சாகமாக சென்று கொண்டிருந்தனர் .இவர்களெல்லாம் எங்கு செல்வார்கள் ? சினிமாவுக்கா? அல்லது பார்க்குக்கா? பீச்சுக்கா? என்ன பேசுவார்கள்? நின்றபடியே கனவு காணத் துவங்கினாள். வைத்திருந்த புத்தகத்தில் அந்த கவர் இருக்கிறதா என பார்த்துக் கொண்டாள். என்ன தைரியம் எனக்கு?

ஒரு மாதத்திற்கு முன்பு முதன் முறையாக அவனைப் பார்த்த பொழுது ஏனோ இவன் தான் நமக்கானவன் என்று உடனே தோன்றிவிட்டது. இதனை எப்படி சொல்வார்கள்? ம்ம்..ம் கண்டதும் காதல். அதுதான் இன்று கடிதம் கொடுக்க உள்ளது வரை கொண்டு வந்திருக்கிறது.
அன்பே..
உன்னைக் கண்ட
நொடி முதல்
காதலிக்கத் துவங்கி விட்டேன்
ஒரு பெண் அவளாக
இவ்வாறு கூறுகிறாளே
என்ற எண்ணம்
வேண்டாம்

நீ
தூரத்தில்
வரும் பொழுது
என் கண்களுக்கு
உன்னைத் தவிர
வேறெதுவும்
தெரிவதில்லை

உன் நடை
உடை என
ஒவ்வொன்றையும்
ரசிக்கிறேன்
சில நாட்கள்
பேருந்திற்காய்
என் அருகில்
நிற்கும் பொழுது
வயிற்றுக்குள்
பட்டாம்பூச்சிகள்
சிறகடிப்பது போன்று
இதயத்துடிப்பு
காதுகளில் கேட்கிறது

அது உன் ஸ்பரிசம்
போன்று இருக்கிறது
நீ என்னுடன்
ஏதாவது பேசமாட்டாயா
என நான்
ஏங்கிய நாட்கள்
அதிகம்

உன் முகம்
நோக்கிப் பார்த்து
நான் ஏமாந்த
நாட்கள் பல

நீ எதுவும் பேசாமல்
சில நாட்கள்
என்னை பார்க்காமல்
கடந்து போகும் பொழுது
கண்ணீர் மறைத்து
நின்றிருக்கிறேன்

ஞாயிற்றுக்கிழமைகளில்
உன்னைக் காணமுடியாது
தவித்திருக்கிறேன்

ஒரு மாதம்தான்
ஆனாலும்
ஓராயிரம் ஆண்டுகள்
தனிமையை
உணர்ந்திருக்கிறேன்

இன்று
காதலர் தினமானதால்
ஏதோவொரு தைரியத்தில்
நேற்றிரவே இதனை
எழுதி விட்டேன்
ஐ லவ் யூ
நிராகரித்து விடாதே
அன்புடன்
வேணி (நீலவேணி)
பின்குறிப்பு :
கவிதை போன்று உள்ளதா?
கவிதை என்று எதுவும் எனக்கு
எழுத வராது. நான் என்ன உணர்ந்தேனோ அதனை எழுதியிருக்கிறேன்
ஏதோ உங்கள் மீதான மோகத்தில் நான் இருப்பதாகத் தவறாக எண்ணி விடாதீர்கள். உங்கள் மீதான அளவு கடந்த காதலில் தான் இதனை எழுதியுள்ளேன். உங்கள் பெயர் தெரியாததால் தான் அன்பே என எழுதத்துவங்கினேன்.
அந்தக் கடிதத்தை மீண்டும் மீண்டும் படித்து தவறில்லாமல் இருக்கிறதாவென்று
சரிபார்த்துக் கொண்டேன்.
வந்து நின்ற பேருந்துகளையெல்லாம் விட்டு விட்டு அவன் வருகைக்காகக் காத்திருந்தேன். அவன் வரும் நேரமும் கடந்து கொண்டிருந்தது. அவனைக் காணவில்லை.
தாகமெடுத்தது. பேக் எடுத்து வராததால் தண்ணீர் பாட்டிலும் இல்லை. சுற்றும் முற்றும் பார்த்தேன். சாலையோரக் கடையில் தண்ணீர் பாக்கெட் வாங்கிக் குடித்தேன். என் வாழ்வில் நான் அருந்திய முதல் தண்ணீர் பாக்கெட். இந்த. காதலால் இன்னும் என்னென்னவெல்லாம் முதல்முறையாய் நிகழுமென்றுத் தெரியவில்லை.
மீண்டும் பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். இப்பொழுது தான் ஒவ்வொருவராக வரத் துவங்கினர். தினமும் பார்க்கும் தெரிந்த சிலரைக் கண்டு புன்னகைத்தேன். அப்பொழுது சற்று தூரத்தில் கண்ட காட்சி. கண்கள் இருட்டி வர அப்படியே மயங்கி சரிந்தேன்.
அருகிலிருந்தவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினர்.
அப்பொழுது மிகவும் பழகிய குரலொன்று ஒலிக்க சிறிது தைரியம் வந்தது.
மெதுவாக கண்களைத் திறந்து பார்க்க, வசந்தியின் தாயார் பதட்டமாக நின்றிருந்தார்.
"ஏம்மா வேணி என்ன ஆச்சு? அந்த புத்தகத்தைக் கொடு, தம்பி அந்த ஆட்டோவை நிறுத்துப்பா."
"வா ஆட்டோவில் ஏறு."
" இல்லை மாமி, நான் போய்டுவேன்."
"எங்க போற மயக்கத்தோட? வீட்டுக்கு போகலாம் வா, நானும் உன் அம்மாவைப் பார்க்கத்தான் வந்தேன்."
ஆட்டோ நகர்ந்தது.
"தம்பி, போற வழியில அகர்வால் ஸ்வீட்ஸ்ல நிறுத்துப்பா."
"என்ன வேணி காலைல எதுவும் சாப்பிடலையா? ஏன் கண்கலங்குற? என்ன கவலை உனக்கு? இன்னிக்கு வசந்தி கூட, உன்கூட வர முடியாம போச்சு.
"ஒன்றுமில்லை மாமி" என்றபடி சாலையைப் பார்க்க
"இன்னிக்கு ஏதோ காதலர் தினமாமே? அதான் வசந்தியும், மாப்பிள்ளையும் பைக்கில் கோவிலுக்கு போயிருக்காங்க."
அதைப் பார்த்து தான் மயங்கி விழுந்தேன் மாமி என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். நான் காதலிப்பவன் எப்படி வசந்தியுடன்?

இன்னிக்கு மாப்பிள்ளை அப்பா அம்மா வர்றாங்க, போன வாரம் தான் பூ வச்சிட்டு போனாங்க, முடிவாகாம யாருக்கும் சொல்ல வேண்டாம்னு நான்தான் சொன்னேன், அதான் வசந்தி உன்கிட்டகூட சொல்லியிருக்க மாட்டா, ரெண்டு நாள்ல நிச்சயதாம்பூலம் வைக்கணும், திடீர்னு முடிந்த வரன்."
என் கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது.

போன மாதம் தான் மாப்பிள்ளைக்கு நம்ம ஊர் பேங்க்ல மாற்றலாகி இருக்கு. அவர் தங்கியிருந்த வீடு வசதி இல்லைன்னு, பூ வச்சு ரெண்டாவது நாள் எங்க வீட்டு மாடியிலயே இருக்க சொல்லியிருக்கோம், கூடவே அவர் தம்பியும் இருக்கார்,அதனால் தான் எங்கும் வந்து போக முடியலை, அம்மா எப்படி இருக்கா?"

ஆட்டோ ஸ்வீட் ஸ்டாலில் நிற்க மாமி இறங்கியபடி " வேணி வர்றியா? இல்லை நீ ஆட்டோவிலேயே இரு வந்துடறேன்."
எனக்கு தலையை சுற்றியது.
சிறிது நேரம் கழிந்து ஸ்வீட் கவருடன் மாமி வந்து ஆட்டோவில் அமர ஆட்டோ கிளம்பியது. வீட்டை அடைந்தோம்.
"தம்பி மீட்டர் பார்த்து சொல்லுப்பா."
"இல்ல மாமி நான் குடுத்துடுறேன்."
அதெல்லாம் வேணாம்டி, நான் குடுக்கறேன், நீ முதல்ல வீட்டுக்குள்ள போ. அம்மாவைக் கூப்பிடு. நிச்சயத்துக்கு அழைக்கணும்."
"கமலா கமலா.."
" வாங்க வாங்க.." என வரவேற்ற அம்மா மாமியின் பின்னால் நின்ற என்னைப் பார்த்து, "
“ஏண்டி நீ இன்னும் காலேஜ் போகலை?"
"அதுவா கமலா உன் மகள்.." என்று மாமி கதையை ஆரம்பிக்க நான் மெதுவாக படிகளில் ஏறினேன்.
அறைக்கதவைத் திறந்தேன். புத்தகங்களை வீசியெறிந்தேன். முதல்முறையாக (இரண்டாவது முதல்முறை செயல்) புத்தகங்களை வீசியெறிகிறேன்.
புதிய புடவையை மாற்றாமல் அப்படியே கட்டிலில் குப்புற விழுந்தேன். தலையணையில் முகம் புதைத்து, குமுறிக் குமுறி அழுதேன்.
இடுப்பில் ஏதோ ஈரம்பட விழித்தேன். செல்லநாய்க்குட்டி பக்ஸ் தான் தன் மூக்கால் தொட்டு எழுப்பியிருக்கிறது. அப்பொழுதுதான் கதவை மூடாமல் வந்து படுத்தது ஞாபகம் வந்தது.
மணி மதியம் இரண்டு. தலையை வலித்தது. நான்கு மணி நேரமாய் தூங்கியிருக்கிறேன். காலையில் நடந்தவை ஒவ்வொன்றாய் நினைவில் வர கட்டிலில் அமர்ந்தேன். பசியெடுத்தது. சாப்பிட வேண்டாம்.
சில நிமிடங்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டு குளியலறை வாஷ்பேஷினில் முகம் கழுவி, ஸ்டிக்கர் பொட்டொன்றை வைத்துக் கொண்டு அமர்ந்தேன்.
ஒரு மாதமாக நான் அவனை கவனிப்பது, தேடுவது வசந்திக்குத் தெரியுமே? பூ வைத்து ஒரு வாரமாகியும் என்னிடம் மறைத்து விட்டாளே? அவள் வீட்டு மாடியில் தான் அவன் இருக்கிறான் என்பதையும் சொல்லவில்லையே? ஒருவேளை என்னை அவளுக்குப் போட்டியாக நினைத்து விட்டாளோ? நான் தானே முதலில் பார்த்தேன்? முதலில் பார்த்தால்? எதுவும் பேசாமல், குறைந்தபட்சம் புன்னகைக்காமல் அவனுக்கு எப்படி நீ காதலிப்பது தெரியும்?
வசந்தியை நினைக்க நினைக்க எரிச்சலாக வந்தது. இப்படி எதுவும் சொல்லாமல் அசிங்கப் படுத்திவிட்டாளே. பால்யத் தோழியாக இருந்தும் திருமணம் என்று வந்தால் இப்படியா? இந்த அளவுக்கா மாறிப் போவார்கள். மெகா சீரியலை விடக் கொடுமையாக அல்லவா இருக்கிறது. அவள் நிலைமையில் நீ இருந்தால் நீயும் இதையேதான் செய்திருப்பாய் என்றது நடுநிலையாய் தன்னை நினைத்துக் கொண்ட மனம் கூற, “இல்லை” என்றேன்.
“கண்டிப்பாக நான் அவளைப் போல் நடந்திருக்க மாட்டேன்” என்றேன். “வேறென்ன செய்திருப்பாய்?” என்றது. தெரியவில்லை. ஒன்றும் புரியவில்லை.
“ச்சை..என்ன பொண்ணு இவள்?” என்ன வாழ்க்கை? என நினைத்தபடி வேறு உடை மாற்றிக்கொண்டு, பக்ஸை தூக்கிக் கொண்டு படியிறங்கினேன்.
";அம்மா " சாப்பிடுகிறாயா? என்றாள்.
"கொஞ்ச நேரமாகட்டும்" என்றேன்.
அண்ணன் மீன் தொட்டியின் பாசியை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான்.
மாமி சொன்னதைக் கேட்டு பதறிட்டேண்டி. என்ன ஏதுன்னு கேக்குறதுக்குல்ல மேல போய் படுத்துட்ட..என்னடி பண்ணுது?"
"அம்மா அவளைப் பார்த்தா அனீமிக் போல இருக்கு. ஈவினிங் ஹாஸ்பிடலுக்கு அழைச்சுக்கிட்டுப் போ."
“அதெல்லாம் ஒண்ணுமில்லைன்னா, வெயில்ல குடை எடுத்துக்கிட்டு போகாததால மயக்கம் வந்துட்டு, ஹாஸ்பிடல்லாம் வேண்டாம்."
"சொன்ன எதையும் கேக்க மாட்டியே?"
அது கிடக்கட்டும்ணா, இண்டர்வியூ போனியே? என்ன ஆச்சு?"
"எங்க, அவங்களுக்கும் ஃப்ரெஷர்ஸ் தான் தேவையாம், பார்ப்போம் அடுத்த வாரம் ஒரு இண்டர்வியூ இருக்கு."
" அம்மா பசிக்குதும்மா."
"கைகழுவிட்டு வா, எடுத்துட்டு வர்றேன்." (காதலையும் சேர்த்தே கை கழுவச் சொல்கிறாளா?")
சாப்பாட்டு மேசையில் அமர்ந்தாள். அவளுக்கு மிகவும் பிடித்த எலுமிச்சை சாதமும், உருளை ரோஸ்டும் வந்தது. ஆனால் அவற்றின் ருசியை ரசித்து உண்ண முடியவில்லை. சிறிது சாப்பிட்டு விட்டு எழுந்து விட்டாள்.
"வசந்தி அம்மா ஒரு வரன் சொன்னாங்கடி, வசந்திக்கு பார்த்திருக்கிற பையனோட தம்பியாம். நல்லா படிச்சிருக்கானாம். பேங்க் எக்ஸாம் எழுதியிருக்கானாம். எப்படியும் வேலை கிடைச்சுடுமாம். இரண்டு பேரும் வசந்தி வீட்டு மாடியில்தான் தங்கி இருக்காங்களாம்." அம்மா சொல்லிக் கொண்டே போனாள்.
நான் பதிலொன்றும் சொல்லவில்லை.
நல்ல வரன்னா பாருங்கம்மா." என்றான் கண்ணன்.
நீ என்னடி சொல்ற? உன் விருப்பம்தானே முக்கியம்."
"இது ஃபைனல் இயர், காலேஜ் முடியட்டும்மா. இப்போ என்ன அவசரம்?" என்றபடி தோட்டத்து ஊஞ்சலில் அமர்ந்தேன். வசந்தி முகத்தில் எபபடி முழிப்பது? அவளுக்கு பார்த்த மாப்பிள்ளையை அவளுக்குத் தெரிந்தே தினமும் தேடியிருக்கிறேன்.
இரண்டு நாட்கள் கல்லூரிக்கு விடுமுறை எடுத்தேன். முதல் நாள் தூக்கத்திலேயே கழிந்தது. எதிலும் விருப்பமில்லை. அடுத்த நாளும் விடிந்தது. இன்று நான் காதலித்தவனுக்கும், வசந்திக்கும் நிச்சயத்தாம்பூலம். பேசாமல் மொபைலை அணைத்து விட்டு உடம்பு சரியில்லையென்று வீட்டிலேயே இருந்து விடலாமா? என யோசித்தேன்.
மொபைலை அணைக்க முடிவெடுத்து கையில் எடுக்க, திரையில் வசந்தி சிரிக்க மொபைல் ஒலித்தது.
"போனை எடுக்கலாமா? வேண்டாமா? சில வினாடிகள் யோசித்து போனை எடுத்தேன்.
"ஹாய், சொல்லுடி, குட்மார்னிங், ம் ம்,
வாழ்த்துகள் டி."
" தாங்க்யூ டி, எழும்பிட்டியா?"
"சொல்லுடி."
"அலங்காரத்துக்கு யாருக்கிட்டயும் சொல்லலடி. நீதான் வந்து புடவை கட்டி அலங்காரம் பண்ணி விடணும், சீக்கிரமா வந்திடுடி."

"அது வந்துடி, நான் எப்படி அங்க..

நான் பேசுவதற்குள் போனை வைத்து விட்டாள்.
மீண்டும் அவளைக் கூப்பிட்டு நான் வரவில்லை என்று சொல்ல நினைத்தேன். ஆனால் இந்த விஷயத்தில் வசந்தி ஒரு மாதிரி நடந்து கொண்டாலும், இவள் கேட்காமலேயே வசந்தி பல உதவிகள் செய்துள்ளாள்.
குளித்தாள். அலமாரியிலிருந்த ஆரஞ்சு வண்ண சேலையை எடுத்தாள். தலைவாரிப் பின்னலிட்டு, சின்னதாக மேக்கப் இட்டுக் கொண்டாள். சிம்பிளாக இருந்தால் போதும்.
அறைக்கதவை மூடிவிட்டு படிகளில் இறங்கினாள்.
அம்மா அங்கிருந்தே பார்த்துவிட்டு, “கண்ணா, இந்த புடவைல வேணிய ஒரு போட்டோ எடுடா."
"போம்மா, வசந்தி அவசரமா கூப்பிட்டா, போட்டோல்லாம் அப்புறம் எடுத்துக்கலாம், அண்ணா என்னை பைக்ல வசந்தி வீட்ல கொண்டு விட்டுடுறியா?"

“கொஞ்ச நேரம் இருடி அம்மா சொன்ன மாதிரி போட்டோ எடுத்துடறேன்.” வேணியை கண்ணன் நான்கைந்து புகைப்படங்கள் எடுத்தான்.
“பூ இல்லாமலே போட்டோ எடுத்திட்டோம். இருடி பூ வச்சி ஒரு போட்டோ எடுக்கலாம்."
" அம்மா, நேரமாயிட்டு இன்னொருநாள் பூ வச்சி எடுக்கலாம்.”
ஆள விடு, வாண்ணா போகலாம்."
வசந்தி வீட்டில் இறங்கினாள்.
"அண்ணா நீ அம்மாவை அழைத்துக் கொண்டு மண்டபத்துக்கு வந்திடு, நான் இவர்களுடன் வந்திடுறேன்."
" சரி, நான் கிளம்பறேன்."
வசந்தியின் வீட்டில் ஒருசிலர் தானிருந்தார்கள். “எல்லோரும் மண்டபத்திற்கு போய் விட்டார்களோ என்னவோ?.”
நேராக வசந்தியின் அறைக்குள் சென்றேன்.
"வாடி, நீ எங்கே லேட்டா வருவியோன்னு நினைச்சேன். "
“உனக்கு வராம வேற யாருக்குடி வரப் போறேன்."
இருவரும் கட்டிக்கொண்டோம்.
பட்டுப்புடவையைக் கட்டிவிட்டேன். தலைஅலங்காரப் பூக்கள், நகைகள் அனைத்து அலங்காரங்களும் அரைமணி நேரத்தில் முடிந்தது.

இருவரும் செல்ஃபீ எடுத்துக் கொண்டோம். எங்களுக்காக காத்திருந்த காரில் ஏறினோம். வசந்தியின் அம்மா முன்பே மண்டபம் சென்று விட்டார்களாம்.
கார் கிளம்பியது. “வேணி, உன்கிட்ட முந்தியே சொல்லலன்னு கோபமாடி? அம்மா தான் யார்கிட்டயும் சொல்ல வேணாம் நிச்சயத்துக்கு சொல்லலாம்னு சொல்லிடுச்சி, என்னடி ஆச்சு ரெண்டு நாள் முன்னாடி நீ மயங்கி விழுந்துட்டேன்னு அம்மா சொன்னுச்சி."
" ஒண்ணுமில்லைடி, காலைல சரியா சாப்பிடாம லேசா தலைசுத்தல், அவ்ளோதான், உன் அம்மா தான் ஆட்டோ வச்சி வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு போனாங்க."
"அதான் அம்மா சொல்லிச்சு."

மண்டபம் நெருங்கியது. மாப்பிள்ளை பற்றி அவளும் பேசவில்லை. நானும் கேட்கவில்லை. இருவருக்கும் தர்ம சங்கடம் ஏற்படுத்தும் விஷயமாதலால் இருவருமே அப்பேச்சைத் தவிர்த்தோம்.
காரிலிருந்து இறங்கி மண்டபத்திற்குள் நுழைந்தோம். யாரோ உறவுக்காரர்கள் ஆரத்தி எடுத்தார்கள். புகைப்பம், வீடியோ எடுக்கப்பட்டது.
பெண்ணின் அறையை அடைந்ததும் இருவருக்கும் டிஃபன் வைத்தார்கள். சாப்பிட்டு முடித்ததும், வசந்திக்கு சில டச்-அப்கள் செய்தேன்.
வசந்தியை மேடைக்கு அழைத்துச் செல்ல, நல்ல நேரத்துக்காக காத்திருந்தார்கள். சிறிது நேரத்தில் அறைக்கு வந்த வசந்தியின் அம்மா
" வேணி வசந்தியை மேடைக்கு அழைத்து போம்மா.. என்று கூற, உடல் முழுவதும் ஒருவித நடுக்கத்துடன், கால்கள் பின்ன வசந்தியை அழைத்துக் கொண்டு மேடையை நோக்கி நடந்தேன். தப்பித்தவறிக் கூட மேடையைப் பார்க்கவில்லை. இன்னொரு மயக்கத்துக்கு நான் தயாராகயில்லை.
மேடையேறி, வசந்தியை அலங்கரிக்கப்பட்ட இருக்கையில் அமர்த்தி விட்டு, அருகில் அமர்ந்திருந்த அவனை கடைக்கண்ணால் பார்த்தாள். கடந்த சில நாட்களாய் பார்த்ததை விட சற்று குண்டாகியிருந்தான். கல்யாண மகிழ்ச்சியோ? முகத்தில் எந்த சலனமுமில்லை.
சில வினாடிகள் அங்கிருந்து விட்டுத் திரும்பிய பொழுது, புடவைத் தலைப்பு எதிலோ சிக்கிக்கொள்ள..
"எக்ஸ்க்யூஸ் மீ.." என்ற குரல் கேட்டுத் திரும்ப..
உடலில் மின்னதிர்ச்சி ஏற்பட்டது போல் சிலிர்க்க பார்த்தேன்.. என்னவன்.. என் காதலன்.. அதே உடலமைப்புடன், மேடையமைப்பின் இடுக்கில் சிக்கிய என் சேலையை எடுத்து விட்டான்.
வசந்தியின் அருகில் அமர்ந்திருந்த மாப்பிள்ளையைப் பார்த்தேன். அங்கும் இவனே இருந்தான். எனக்கு இப்போது தலையை சுற்றியது.

ட்வின்ஸ்..!

இவனைத் தான் தம்பி என்றார்களா?

மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்தேன்.

மெல்ல நகர்ந்து சுவரோரமாக வந்து நின்று திரும்பினேன். என்னெதிரே அவன்.. என்னவன் ..பேசினான்.

" உங்களை பஸ் ஸ்டாப்பில் பார்த்திருக்கிறேன், கேன் ஐ ஹேவ் யுவர் நம்பர்?" என்றான்.

நான் வசந்தியைப் பார்க்க, அவள் சிரித்துக் கொண்டே தன் கட்டைவிரலை உயர்த்திக் காட்டினாள்.
“தெரிந்தே..வேண்டுமென்றே..என்னை ஏமாற்றி இருக்கிறாள்...கள்ளி..” இதயத்துடிப்பு, என் உடல் முழுவதும் கேட்க.. மகிழ்ச்சியின் உச்சத்தில், வெட்கத்துடனும், படபடப்புடனும்,, எனது மொபைல் எண்ணை என்னவனிடம் கூறத் தொடங்கினேன்..
 
Kanavu Kadhali Ruthitha

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 16, 2021
Messages
5

வாவ்... நான்கூட பயந்துட்டேன்... நல்லவேளையா நீலவேணியின் லவ் சக்ஸஸ் ஆகிடுச்சு... சில இடத்திலே தானே சொல்றது போலவும் சில இடத்திலே விவரிப்பு போலவும் இருக்குது டியர்.. வெற்றி பெற வாழ்த்துகள்..
 
Sampavi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 21, 2022
Messages
135
சூப்பர்
 
Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
சூப்பர் சிஸ். நீலவேணியின் காதல் கை கூடியதும் தான் படபடப்பு குறைந்தது.
 
Thani

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 2, 2023
Messages
59
அழகா ஆரம்பித்து அழகா முடித்துள்ளீர்கள்😍
வசந்தி நல்ல நட்பு இல்லை என தோணவச்சு விட்டீங்க ....😂அங்கதானே டுவிட்ஸ்😀
சூப்பர் ❤️
வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
 
Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
466
நீலவேணியின் காதல்
மெர்லின்.....
கண்டதும் காதல் கொண்டேன் கண்ணாளனே
காதலை சொல்ல
காதல் கடிதத்துடன்
காத்துக் கொண்டிருக்க
காலத்தின் கோலம்
காட்சிப்பிழையாய் என்தோழியுடன்
கண்ணில் தோன்றி மறைய
கன நொடியில்
கண்கள் சுழன்று மயங்கி விழ...
காதலை இழந்தேனே
கண்ணாளனே.....
காதலை சொல்லும் முன்
கைவிட்டு போனதடா _ என்
காதல்....
தோழியின் மணவாளனாய்
எண்ண முடியவில்லை
தோழியும் என்னிடம்
சொல்லவில்லை
மனதை வருத்தினாலும்
மனதார தோழியை வாழ்த்த செல்ல மனமேடையில் இருவரை பார்த்துவிட்டு
மனதில் கலக்கத்துடன் இறங்கி வர
காதலே தேடி வந்து
கண்முன் என் நம்பரை
கேட்கிறதே _ என் கண்ணாளன்....
நீலவேணியின் காதலை நீலமேனிக்கண்ணன்
ஒத்துக் கொள்வானா 🤩🤩🤩
வாழ்த்துக்கள் சகி 👏👏👏👍💐💐💐....
 
வித்யா வெங்கடேஷ்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 8, 2022
Messages
239
அழகான கதைக்களம் தோழி! மாப்பிள்ளை தம்பியுடன் மாடியில் தங்குகிறார் என்று மாம்மி சொல்லும் போதே லேசா ஒரு டவுட் வந்துது😜😜😜😜😜😜

சில இடங்களில் first person POV, சில இடங்களில் 3rd person POV மாதிரி எழுதிருக்கீங்க... அது கொஞ்சம் குழப்பமா இருக்கு🧐🧐🧐🤨
 
Top