• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

20. இதயம் பகிர்ந்திட வா

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
738
162
93
Jaffna
"வீட்டுப் பாடம் செய்திட்டு வந்திங்களாடா...?" பாடசாலை முடிந்து களைத்து வந்திருப்பவளுக்கு, ஓய்வு என்பதே இ்ல்லாதது போல, மாறி மாறி வயது அடிப்படையில் டியூசன் சொல்லித் காெடுப்பவள் முகத்தில் என்றுமில்லாத ஓர் வாட்டம்.
நெற்றியை நீவி விட்டவளோ,

"அம்மா சூடா ஒரு காஃபி தரியாம்மா...." குரலை அனுப்பி விட்டு மீ்ண்டும் பாடம் சொல்லித் தந்தவள் முன்பு ஐந்தவது நிமிஷம் காஃபி கப்பினை நீட்டினார் காஞ்சனா.

"ஸ்கூல் முடிஞ்சு வந்ததில இருந்து பார்த்துட்டு தான் இருக்கேன். உடம்புக்கு முடியலன்னா பசங்கள அனுப்பீட்டு படுக்க வேண்டியது தானேடி.." பிள்ளை மீது அக்கறை இராதா பெற்றவளுக்கு.

"படுக்கிற அளவு எந்த வியாதியும் இல்லம்மா... லேசா தலவலி. காஃபி சாப்டா சரியாகிடும்" என்றளை முறைத்தவர்,

"நீயும், உன் தம்பியும் எப்போ என் பேச்சு கேட்டீங்க. நீங்க சொல்லுறது தானே சரின்னு நிப்பீங்க." தன் பேச்சை கேட்காது சாக்கு போக்கு சொல்லும் மகளிடம் அலுத்து கொண்டவாறு தன் வேலையினை கவனிக்க சென்று விட்டார் காஞ்சனா.

"என்னங்கடா கேட்டதுக்கு பதில் யாருமே சொல்லல... அப்போ யாருமே வீட்டுப்பாடம் சொய்யலையா?" அவர்கள் பதில் சொல்வதற்கு முன்னர் அவள் அருகில் கவிழ்ந்திருந்த செங்கல் செல்போனானது ஓலித்தது. அதை திருப்பிப் பார்த்தாள் பாரதி.

"காலேல இருந்து இந்த நம்பர் வந்திட்டே இருக்கே! யார் நம்பர் இது?" யோசித்தவளுக்கு நிஜத்தில் அது யார் இலக்கம் என்பது தெரியவில்லை. பாரதியை பொறுத்தவரை பெயரிடப்படாத புது இலக்கத்துடன் எல்லாம் அவ்வளவு இலகுவில் பேசிட மாட்டாள். மீண்டும் மீண்டும் அழைப்பு வரவே, பேசினால் என்ன எண்ணம் தோன்றிய மறுகணம் அதை தடுப்பது போல்,

"நான் செய்துட்டேன் மிஸ்" என்று அவள் முகத்துக்கு நேரே நோட் புக்கினை நீட்டினாள் ஒரு சிறுமி.

"ஓ... வெரி குட்" என நோட்டினை ஆராயப் போனவளுக்கு, அதன் பின் செல்லினை தூக்கிட நேரமே வரவில்லை. வேலை என்று இறங்கி விட்டால் கடமையே கண் என மூழ்கிப் போவபவளை செல்போனா கலைத்து விடும்.

இரவு உணவினை முடித்துக் கொண்டு அப்பாடா என மெத்தையில் விழுந்தவள் கவனத்தை ஈர்ப்பது போல், செல்போனின் வாட்ஸ்ஆஃப் குறுஞ் செய்தி ஒலி கேட்க எடுத்துப் பார்த்தாள்.
காலையில் இருந்து அழைத்த அதே இலக்கம். " என்கூட பேச மாட்டீங்களா...?" அழும் எமோஜி வந்திருந்தது. யாரென்ற யோசனை பரவினாலும், அந்த எமோஜி அவள் உதட்டில் புன்னகையினை தவள விட,

"நீங்க யாரு.." யோசிக்கும் எமோஜியை தட்டி விட்டாள் அவளும்.

"உங்களுக்கு தெரிஞ்சவங்க தான்." கண்ணல் நட்சத்திர எமோஜி.

"இப்போ நீங்க யாருன்னு சொல்லுறீங்களா? இல்லன்னா பிளாக்ல போடவா..." எமோஜிக்கு வேலை தர விரும்பவில்லை அவள்.

"அய்யைய்யோ வேண்டாம்... நான் சொல்லிடுறேன்." அவசரமாக தட்டி அனுப்பப்பட்ட செய்தியை தொடர்ந்து, மேலும் இரு செய்திகள் வந்து விழுந்த திரையை பார்த்தவள் விழிகள் விரிந்தது.

ஆம் அந்த செய்தி தாங்கி வந்தது வேறு எதுவுமில்லை. அவனது தம்பி தசரதனும், அவன் நண்பன் சந்ரூவும் நின்று எடுத்திருந்த புகைப்படத்தை தான் அனுப்பியிருந்தான் அவன்.

"சாரிங்க... தசரதன் தான் தன்னோட போன் ரிப்பயர் ஆகிடிச்சு. என்னை காண்டாக் பண்ணணும்னா இந்த நம்மருக்கு கூப்பிடுன்னு உங்க நம்பர தந்தான். நீங்க அவனோட அக்கா பாரதி தானே!" இம்முறை வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தான். அதை கேட்டவளுக்கு ஒரு மாதிரியாகிப் போக.

"சாரிங்க... அவன்கிட்ட போனை குடுக்கணுமா...? ஏதாவது அவசரமா?" அவள் டைப் செய்து தான் அனுப்பினாள்.

"இல்லை வேண்டாம்...ஏற்கனவே லேட் நைட் ஆகிடிச்சு. ஆன்ட்டிக்கு தெரிஞ்சா திட்டுவாங்க. நாளைக்கே நான் அவனை வந்து சந்திக்கிறேன். அப்புறம் ஏன் சாரி...?" கூடவே டைப் செய்து அனுப்பியவன் கேள்வியில் சட்டென உதட்டை கடித்தவள்,

"அது நீங்க பிளாக் பண்ணுவேன்னு சொன்னதுக்கு அப்புறமும் யார்ன்னு சொல்லலன்னா, அசிங்கமா திட்டுவோம்ன்னு நினைச்சேன்." என நாக்கினை துருவிக்காட்டி கண்ணடிக்கும் எமோஜியை போட்டாள் பாரதி.

அதற்கு முழிக்கும் எமாஜியை போட்டவன், "பார்க்கத்தாங்க நீங்க சாதுவா இருக்கிங்க. ஆனா பெரிய ரௌடி பொம்பளையா இருப்பிங்க போலயே!"

ஸ்மைலி எமோஜி அனுப்பியவள். "நம்ம வீக்கான ஆளுன்னு தெரியாதவங்களுக்கு தெரிய கூடாதுல்ல.." அதனால தான்.

"ஓ... சூப்பர் அப்பிடியே மெயிண்டேன் பண்ணுங்க. அப்போ சரிங்க. ரொம்ப லேட்டாகிடிச்சு.. இதுக்கு மேல முழிச்சிருந்தா கண்ணு எரியும்.. பைய்..."

"ம்ம்.... பைய்.. குட்நைட் " என்று மெசேஜ் டைப் செய்வதற்குள். "ஒரு நிமிஷம்." என்ற செய்தி வந்து விழுந்தது.

"சொல்லுங்க சந்ரூ.." என்றாள் ஏதோ முக்கியமான விஷயமோ என்று.

"உங்க கூட சேட்டங்கில பேசலாம் தானே!" என்ற மெசேஜ் கண்டவளுக்கு, ஒரு மாதிரியாகிப் போனது. இவனும் மற்ற பசங்கைப் போல், பேசினதும் வழியிறானாே என்றே நினைக்க தோன்றியது.

"என்னங்க பேச்சை காணோம். தப்பா எடுத்திட்டீங்களா..." அழும் எமோஜி வந்து விழ. தம்பியினது நட்பினை மனதில் வைத்து, கராறாக பேசாது.

"அப்பிடி எதுவும் இல்ல.. ஆனா அதுக்கெல்லாம் எனக்கும் டைம் இருக்கணுமே.... நீங்க சேட் பண்றப்போ டைம் இருந்தா பார்க்கலாம்." முடியாது என்பதை நாசுக்காக கூறி வைத்து விட்டாள்.
நாட்கள் இரண்டு மாதங்களுக்கு மேலாக ஓடியிருந்தது. அன்று சேட்டிங்கின் பேசலாமா என்று சந்ரூ கேட்டதோடு சரி. பெயருக்கு கூட அவளை தொடர்பு கொள்ளவில்லை.

தம்பியுடன் அவனை பார்க்கும் சமயங்களில் தான், அப்படி ஒரு கேள்வியை தன்னிடம் கேட்டான் என்பதே அவளுக்கு நினைவில் வரும்.

ஆனால் அவனோ அவளைக் கண்டதும் எப்போதும் போல், மெழுகிய புன்னகையினை உதிர்த்து விட்டு கடந்து போவதை கண்கையில், அன்று அப்படி ஒரு கேள்வியினை கேட்டது இவன் தானா என சந்தேகம் கொள்ளச் செய்யும் அளவுக்கு எந்த வித நெருடலும் இல்லாது இலகுவாக விலகிச் செல்வான்.

'ஒருவேளை சாதாரணமா தான் கேட்டிருப்பானோ... நான் தான் தப்பா எடுத்திட்டேனோ...? ஆமா நான் தான் தப்பா நினைச்சிட்டேன். ஏதாவது அவசரத்துக்கு பேசுறேன் என்கிற அர்த்தத் தோடு தான் கேட்டிருப்பான். என் புத்திக்கு தான் கிறுக்கு புடிச்சு, அவனை தப்பா நினைக்க வைச்சிருக்கு." தன்னைத் தானே திட்டி விட்டு அவளும் அத்தோடு அதை மறந்து விட்டாள்.

அன்று இரவு பதினொரு மணி இருக்கும். ஏதோ பாடம் சம்மந்தமாக அவளுக்கே மாணவர்களுக்கு சொல்லாத் தருவதில் சந்தேகம் எழுந்தது. அதை தெளிவு படுத்தும் முகமாக, கூகுளில் தேடியவள் அதை சிரத்தையோடு படித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு நாெடி திரையினை மறைத்து ஓரமாய் ஒழிந்து கொண்ட குறுஞ்ச் செய்தி அறிவிப்பினை கண்டவள்,

'இந்த நேரத்தில எனக்கு மெசேஜ்...!' யாரென திரையினை இழுத்துப் பார்த்தாள்.
அவனே தான்.

'தூங்கிட்டீங்களா...?" சோகமான எமோஜி. அதை ஓபன் செய்தவளுக்கு, அந்த எமோஜிக்கு காரணம் தெரிய வேண்டும் என்று உள்ளம் பரபரக்க, இந்த நேரத்தில் பதில் அளிப்பது தவறு என்று தெரிந்தும்,

"இல்லை.. ஸ்கூல் வேலை கொஞ்சம் இருக்கு, பார்த்திட்டு இருக்கேன். நீங்க தூங்கலயா...?" பதில் அனுப்பி விட்டு அவன் செய்திக்காக காத்திருந்தாள்.

"இல்லை தூங்கணும்... ஆனா தூக்கம் வரணுமே!"

"அரை சாமம் ஆகுது. ஊரே தூங்கி இருக்கும். நீங்க ஏன் தூங்கல?" என்ன கேட்க வேண்டுமோ அதை தனக்கு தெரிந்த விதத்தில் கேட்டு விட்டாள்.

"ஊர்ல எல்லாருக்கும் என்னை போலவா சோலி இருக்கும். நான் தான் சாபம் வாங்கிட்டு வந்தவன் ஆச்சே! எப்பிடி தூக்கம் வரும்.?"

அவன் சொல்ல வருவது புரியாது, யோசிக்கும் எமோஜயை தட்டி விட்டவள், ஊர்ல யாருக்கும் பிரச்சினை இல்லன்னு உங்களுக்கு எப்பிடி தெரியும்? எல்லாருக்குமே கண்டிப்பா பிரச்சினை இருக்கும். ஆனா அதுக்கான தீர்வை தேடிக்கலாம்ன்னு நம்பிக்கையில தூங்குவாங்க. உங்களுக்கும் ஏதோ தீர்வு கண்டிப்பா இருக்கும். எல்லாத்தையும் யோசிச்சிட்டு இருக்காம தூங்க பாருங்க." முன்னால் கேட்டிட வேண்டும் என்ற மனநிலை, இப்போது விட்டால் போதும் என்றிருந்தது.

"தீர்வா... அது கடவுள் நேர்ல வந்தாலும் தீராது."

"ஓ.... கடவுளே வந்தாலும் தீர்க்க முடியாது என்கிற அளவுக்கு என்ன பிரச்சினை?"

"அது எப்பிடி சொல்லுறதுன்னு தெரியல... அதை சொல்லலாமா என்கிறதும் தெரியல.. சொன்னா நீங்க என்ன நினைப்பீங்களோ என்கிற பயம் வேற..."

"என்கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சனைன்னா வேண்டாம் சந்ரூ... கொஞ்ச நேரம் தியானம் செய்யுங்க.. மைன்ட் ப்றீ அகிடும்" நழுவிக் கொள்ள நினைத்தவளை அவன் விட வேண்டுமே.

"உங்ககிட்ட சொல்லுறதனால என்ன பிரச்சினை... ஆனா எப்பிடி...? சரி சொல்லிடுறேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி அம்மா மயங்கி விழுந்துட்டாங்கன்னு வீட்டில இருந்து கால் வந்திச்சு. வீட்ட போனா அம்மாக்கு சுய நினைவே இல்ல. என்னன்னு தங்கச்சிய கேட்டேன். காலேல இருந்த வயிறு வலின்னு சொல்லிட்டே இருந்தாங்கண்ணா... அப்புறம் பாத்ரூம் வருது. போயிட்டு வரேன்னு எழுந்தங்க தான், அந்த இடத்திலயே மயக்கம் அடிச்சு விழுந்துட்டாங்க. என்ன செய்தும் எழும்பலன்னு அழுதுட்டே சொன்னா.. உடனேயே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் செக் பண்ணா, கிட்னியில கல்லாம்...

காலம் தாழ்த்தாம சீக்கிரம் ஆபரேஷன் பண்ணி ஆகணுமாம்... இல்லன்னா உயிருக்கு ஆபத்துன்னு சொல்லிட்டு இப்போதைக்கு மாதனதிர தந்திருக்காரு... உங்களுக்கே தெரியும்... நம்ம ஊரு கவர்ண்ட் ஹாஸ்பிடல்பத்தி... எந்த வசதியா இருந்தாலும் வெளி மாவட்டத்துக்கு தான் கொண்டு போய் ஆகணும். அங்க ரீட்மெண்ட் ப்றீயா செய்யலாம் எண்டாலும், ஊர் பேர் தெரியாத இடத்துக்கு போகப் போறோம். எங்க தங்கியிருந்து மருத்துவத்த பார்க்க முடியும்? எத்தனை நாள்ன்னு கூட தெரியாது. எல்லாத்துக்கும் பணம் வேணும். நான் செய்யிற வேல என் குடும்பத்த நடத்தவே போததே!
இதை எப்பிடி சமாளிக்க போறேன்னு யோசிச்சுட்டு வீட்டுக்கு வந்தா... மூத்த தங்கச்சி வாந்தியா எடுக்கிறா.... இவளுக்கு என்னமோன்னு பயந்து பக்கமா இருந்த வைத்தியர்கிட்ட கூட்டிட்டு போனேன். அவர் தலையில குண்ட தூக்கி போட்டா மாதிரி, மாசமா இருக்கான்னுட்டாரு.." டைப் செய்து அனுப்பியவனுக்கு கை வலித்ததோ என்னமோ.. அதுரை காத்திருந்து படித்தவளுக்கு மூச்சு முட்டியது.

"தங்கச்சி விஷயத்தை விடுங்க. அது நல்ல விஜஷயம் தானே, இப்போ அம்மாக்கு என்ன செய்ய போறீங்க.?" என்றாள் உண்மை தெரியாது.

"எது நல்ல விஷயம்... கல்யாணமே ஆகாம புள்ளை பெத்துக்கிறதா...? அம்மா பிரச்சினைய கூட ஓரமா போட்டிடலாம். இந்த விஷயம் ஊருக்கு தெரிஞ்சா குடும்பத்தோட சுடுகாடு ஏற வேண்டியது தான்."

"என்னது...! கல்யாணமே ஆகலயா...??" என்றாள் தனக்குள் இருக்கும் அதிர்வை வெளிப்படுத்தும் விதமாய்.

"ஆமா... யாரையோ லவ் பண்றேன்னு அவன்கிட்ட கெட்டு போய் வந்திருக்கா... அவன் வீட்ட போய் கேட்டா, அவன் தான் தான் காரணம்ன்னு குற்ற உணர்வே இல்லாம ஒத்துக்கிறான். அப்போ தாலிய கட்டுன்னு சொன்னா, அதெப்பிடி நான் ஒத்துப்பேன்.. பத்து பவுன் இருந்தா பையன கேட்டு வாங்க.. இல்லன்னா வெளிய போங்கன்னு அவன் அம்மா மல்லுக்கு நிக்கிறாங்க. மேல நியாயம் பேச போனா சத்தம் போட்டு மானத்தை ஏலம் விடுறாங்க.

என்ன தான் தப்பில ரெண்டு தரப்புக்கும் பங்கிருந்தாலும், பாதகம் என்னமோ பொண்ணு சைட் தானே! தர்கம் பண்ணி எதுவும் ஆகப் போறதல்ல. அடுத்து என்ன செய்யணுமோ அதை பார்க்கலாம்னு வந்திட்டேன்.

ஆனா யாரு உதவுவங்க? எதையுமே கால தாமதம் பண்ண முடியாது. அஞ்சு மாதம் ஆனாலே வயிறு காட்டி குடுத்திடும். இந்த இக்கட்டில அம்மா நிலை வேற.. என்ன செய்ய பாேறன்." பாரமெல்லாம் கொட்டி விட்டான். இனியாவது உறக்கம் வரும் என்ற எண்ணம் போல.
எதிர் புறம் நீண்ட அமைதி.

"இருக்கிங்களா..... ? தூங்கிட்டிங்களோ....!" புளூ டிக் விழுந்தும் கேட்டான்.

"இருக்கேன்.... உங்க சிஸ்டர நான் சந்திக்கலாமா...?" என்றாள்.

"அவளை நீங்க ஏன் சந்திக்கணும்... அட்வைஸ் பண்ண போறீங்களோ.. கண்ணு கெட்டு போச்சு... இனி எதுக்கு நமஸ்காரம்...? விடுங்க எங்க கஷ்டம் எங்களோடயே போகட்டும்."

"அட்வைஸ் பண்ற அளவுக்கு நான் பெரிய மனுஷி இல்ல... ஆனா அவங்கள பார்க்கணும்.. அவங்கள கூட்டிட்டுவர முடியுமா? முடியதா..?" என்றாள்.

"முயற்சி செய்யிறன்."

"ஓகே அப்பிடின்னா நாளைக்கு வீட்டுக்கு வாங்க. இப்போ நோட்ஸ் எடுக்கணும், பைய்." சேட்டிங்கை விட்டு வெளியே வந்தவள் மூளையோ தான் எடுத்த முடிவு சரி தானா என ஆயிரம் முறை சிந்திக்க ஆரம்பித்தது.
 
Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
738
162
93
Jaffna
வீட்டுப் பாடம் செய்திட்டு வந்திங்களாடா...?" பாடசாலை முடிந்து களைத்து வந்திருப்பவளுக்கு, ஓய்வு என்பதே இ்ல்லாதது போல, மாறி மாறி வயது அடிப்படையில் டியூசன் சொல்லித் காெடுப்பவள் முகத்தில் என்றுமில்லாத ஓர் வாட்டம்.
நெற்றியை நீவி விட்டவளோ,

"அம்மா சூடா ஒரு காஃபி தரியாம்மா...." குரலை அனுப்பி விட்டு மீ்ண்டும் பாடம் சொல்லித் தந்தவள் முன்பு ஐந்தவது நிமிஷம் காஃபி கப்பினை நீட்டினார் காஞ்சனா.

"ஸ்கூல் முடிஞ்சு வந்ததில இருந்து பார்த்துட்டு தான் இருக்கேன். உடம்புக்கு முடியலன்னா பசங்கள அனுப்பீட்டு படுக்க வேண்டியது தானேடி.." பிள்ளை மீது அக்கறை இராதா பெற்றவளுக்கு.

"படுக்கிற அளவு எந்த வியாதியும் இல்லம்மா... லேசா தலவலி. காஃபி சாப்டா சரியாகிடும்" என்றளை முறைத்தவர்,

"நீயும், உன் தம்பியும் எப்போ என் பேச்சு கேட்டீங்க. நீங்க சொல்லுறது தானே சரின்னு நிப்பீங்க." தன் பேச்சை கேட்காது சாக்கு போக்கு சொல்லும் மகளிடம் அலுத்து கொண்டவாறு தன் வேலையினை கவனிக்க சென்று விட்டார் காஞ்சனா.

"என்னங்கடா கேட்டதுக்கு பதில் யாருமே சொல்லல... அப்போ யாருமே வீட்டுப்பாடம் சொய்யலையா?" அவர்கள் பதில் சொல்வதற்கு முன்னர் அவள் அருகில் கவிழ்ந்திருந்த செங்கல் செல்போனானது ஓலித்தது. அதை திருப்பிப் பார்த்தாள் பாரதி.

"காலேல இருந்து இந்த நம்பர் வந்திட்டே இருக்கே! யார் நம்பர் இது?" யோசித்தவளுக்கு நிஜத்தில் அது யார் இலக்கம் என்பது தெரியவில்லை. பாரதியை பொறுத்தவரை பெயரிடப்படாத புது இலக்கத்துடன் எல்லாம் அவ்வளவு இலகுவில் பேசிட மாட்டாள். மீண்டும் மீண்டும் அழைப்பு வரவே, பேசினால் என்ன எண்ணம் தோன்றிய மறுகணம் அதை தடுப்பது போல்,

"நான் செய்துட்டேன் மிஸ்" என்று அவள் முகத்துக்கு நேரே நோட் புக்கினை நீட்டினாள் ஒரு சிறுமி.

"ஓ... வெரி குட்" என நோட்டினை ஆராயப் போனவளுக்கு, அதன் பின் செல்லினை தூக்கிட நேரமே வரவில்லை. வேலை என்று இறங்கி விட்டால் கடமையே கண் என மூழ்கிப் போவபவளை செல்போனா கலைத்து விடும்.

இரவு உணவினை முடித்துக் கொண்டு அப்பாடா என மெத்தையில் விழுந்தவள் கவனத்தை ஈர்ப்பது போல், செல்போனின் வாட்ஸ்ஆஃப் குறுஞ் செய்தி ஒலி கேட்க எடுத்துப் பார்த்தாள்.
காலையில் இருந்து அழைத்த அதே இலக்கம். " என்கூட பேச மாட்டீங்களா...?" அழும் எமோஜி வந்திருந்தது. யாரென்ற யோசனை பரவினாலும், அந்த எமோஜி அவள் உதட்டில் புன்னகையினை தவள விட,

"நீங்க யாரு.." யோசிக்கும் எமோஜியை தட்டி விட்டாள் அவளும்.

"உங்களுக்கு தெரிஞ்சவங்க தான்." கண்ணல் நட்சத்திர எமோஜி.

"இப்போ நீங்க யாருன்னு சொல்லுறீங்களா? இல்லன்னா பிளாக்ல போடவா..." எமோஜிக்கு வேலை தர விரும்பவில்லை அவள்.

"அய்யைய்யோ வேண்டாம்... நான் சொல்லிடுறேன்." அவசரமாக தட்டி அனுப்பப்பட்ட செய்தியை தொடர்ந்து, மேலும் இரு செய்திகள் வந்து விழுந்த திரையை பார்த்தவள் விழிகள் விரிந்தது.

ஆம் அந்த செய்தி தாங்கி வந்தது வேறு எதுவுமில்லை. அவனது தம்பி தசரதனும், அவன் நண்பன் சந்ரூவும் நின்று எடுத்திருந்த புகைப்படத்தை தான் அனுப்பியிருந்தான் அவன்.

"சாரிங்க... தசரதன் தான் தன்னோட போன் ரிப்பயர் ஆகிடிச்சு. என்னை காண்டாக் பண்ணணும்னா இந்த நம்மருக்கு கூப்பிடுன்னு உங்க நம்பர தந்தான். நீங்க அவனோட அக்கா பாரதி தானே!" இம்முறை வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தான். அதை கேட்டவளுக்கு ஒரு மாதிரியாகிப் போக.

"சாரிங்க... அவன்கிட்ட போனை குடுக்கணுமா...? ஏதாவது அவசரமா?" அவள் டைப் செய்து தான் அனுப்பினாள்.

"இல்லை வேண்டாம்...ஏற்கனவே லேட் நைட் ஆகிடிச்சு. ஆன்ட்டிக்கு தெரிஞ்சா திட்டுவாங்க. நாளைக்கே நான் அவனை வந்து சந்திக்கிறேன். அப்புறம் ஏன் சாரி...?" கூடவே டைப் செய்து அனுப்பியவன் கேள்வியில் சட்டென உதட்டை கடித்தவள்,

"அது நீங்க பிளாக் பண்ணுவேன்னு சொன்னதுக்கு அப்புறமும் யார்ன்னு சொல்லலன்னா, அசிங்கமா திட்டுவோம்ன்னு நினைச்சேன்." என நாக்கினை துருவிக்காட்டி கண்ணடிக்கும் எமோஜியை போட்டாள் பாரதி.

அதற்கு முழிக்கும் எமாஜியை போட்டவன், "பார்க்கத்தாங்க நீங்க சாதுவா இருக்கிங்க. ஆனா பெரிய ரௌடி பொம்பளையா இருப்பிங்க போலயே!"

ஸ்மைலி எமோஜி அனுப்பியவள். "நம்ம வீக்கான ஆளுன்னு தெரியாதவங்களுக்கு தெரிய கூடாதுல்ல.." அதனால தான்.

"ஓ... சூப்பர் அப்பிடியே மெயிண்டேன் பண்ணுங்க. அப்போ சரிங்க. ரொம்ப லேட்டாகிடிச்சு.. இதுக்கு மேல முழிச்சிருந்தா கண்ணு எரியும்.. பைய்..."

"ம்ம்.... பைய்.. குட்நைட் " என்று மெசேஜ் டைப் செய்வதற்குள். "ஒரு நிமிஷம்." என்ற செய்தி வந்து விழுந்தது.

"சொல்லுங்க சந்ரூ.." என்றாள் ஏதோ முக்கியமான விஷயமோ என்று.

"உங்க கூட சேட்டங்கில பேசலாம் தானே!" என்ற மெசேஜ் கண்டவளுக்கு, ஒரு மாதிரியாகிப் போனது. இவனும் மற்ற பசங்கைப் போல், பேசினதும் வழியிறானாே என்றே நினைக்க தோன்றியது.

"என்னங்க பேச்சை காணோம். தப்பா எடுத்திட்டீங்களா..." அழும் எமோஜி வந்து விழ. தம்பியினது நட்பினை மனதில் வைத்து, கராறாக பேசாது.

"அப்பிடி எதுவும் இல்ல.. ஆனா அதுக்கெல்லாம் எனக்கும் டைம் இருக்கணுமே.... நீங்க சேட் பண்றப்போ டைம் இருந்தா பார்க்கலாம்." முடியாது என்பதை நாசுக்காக கூறி வைத்து விட்டாள்.
நாட்கள் இரண்டு மாதங்களுக்கு மேலாக ஓடியிருந்தது. அன்று சேட்டிங்கின் பேசலாமா என்று சந்ரூ கேட்டதோடு சரி. பெயருக்கு கூட அவளை தொடர்பு கொள்ளவில்லை.

தம்பியுடன் அவனை பார்க்கும் சமயங்களில் தான், அப்படி ஒரு கேள்வியை தன்னிடம் கேட்டான் என்பதே அவளுக்கு நினைவில் வரும்.ஆனால் அவனோ அவளைக் கண்டதும் எப்போதும் போல், மெழுகிய புன்னகையினை உதிர்த்து விட்டு கடந்து போவதை கண்கையில், அன்று அப்படி ஒரு கேள்வியினை கேட்டது இவன் தானா என சந்தேகம் கொள்ளச் செய்யும் அளவுக்கு எந்த வித நெருடலும் இல்லாது இலகுவாக விலகிச் செல்வான்.

'ஒருவேளை சாதாரணமா தான் கேட்டிருப்பானோ... நான் தான் தப்பா எடுத்திட்டேனோ...? ஆமா நான் தான் தப்பா நினைச்சிட்டேன். ஏதாவது அவசரத்துக்கு பேசுறேன் என்கிற அர்த்தத் தோடு தான் கேட்டிருப்பான். என் புத்திக்கு தான் கிறுக்கு புடிச்சு, அவனை தப்பா நினைக்க வைச்சிருக்கு." தன்னைத் தானே திட்டி விட்டு அவளும் அத்தோடு அதை மறந்து விட்டாள்.

அன்று இரவு பதினொரு மணி இருக்கும். ஏதோ பாடம் சம்மந்தமாக அவளுக்கே மாணவர்களுக்கு சொல்லாத் தருவதில் சந்தேகம் எழுந்தது. அதை தெளிவு படுத்தும் முகமாக, கூகுளில் தேடியவள் அதை சிரத்தையோடு படித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு நாெடி திரையினை மறைத்து ஓரமாய் ஒழிந்து கொண்ட குறுஞ்ச் செய்தி அறிவிப்பினை கண்டவள்,

'இந்த நேரத்தில எனக்கு மெசேஜ்...!' யாரென திரையினை இழுத்துப் பார்த்தாள்.
அவனே தான்.

'தூங்கிட்டீங்களா...?" சோகமான எமோஜி. அதை ஓபன் செய்தவளுக்கு, அந்த எமோஜிக்கு காரணம் தெரிய வேண்டும் என்று உள்ளம் பரபரக்க, இந்த நேரத்தில் பதில் அளிப்பது தவறு என்று தெரிந்தும்,

"இல்லை.. ஸ்கூல் வேலை கொஞ்சம் இருக்கு, பார்த்திட்டு இருக்கேன். நீங்க தூங்கலயா...?" பதில் அனுப்பி விட்டு அவன் செய்திக்காக காத்திருந்தாள்.

"இல்லை தூங்கணும்... ஆனா தூக்கம் வரணுமே!"

"அரை சாமம் ஆகுது. ஊரே தூங்கி இருக்கும். நீங்க ஏன் தூங்கல?" என்ன கேட்க வேண்டுமோ அதை தனக்கு தெரிந்த விதத்தில் கேட்டு விட்டாள்.

"ஊர்ல எல்லாருக்கும் என்னை போலவா சோலி இருக்கும். நான் தான் சாபம் வாங்கிட்டு வந்தவன் ஆச்சே! எப்பிடி தூக்கம் வரும்.?"

அவன் சொல்ல வருவது புரியாது, யோசிக்கும் எமோஜயை தட்டி விட்டவள், ஊர்ல யாருக்கும் பிரச்சினை இல்லன்னு உங்களுக்கு எப்பிடி தெரியும்? எல்லாருக்குமே கண்டிப்பா பிரச்சினை இருக்கும். ஆனா அதுக்கான தீர்வை தேடிக்கலாம்ன்னு நம்பிக்கையில தூங்குவாங்க. உங்களுக்கும் ஏதோ தீர்வு கண்டிப்பா இருக்கும். எல்லாத்தையும் யோசிச்சிட்டு இருக்காம தூங்க பாருங்க." முன்னால் கேட்டிட வேண்டும் என்ற மனநிலை, இப்போது விட்டால் போதும் என்றிருந்தது.

"தீர்வா... அது கடவுள் நேர்ல வந்தாலும் தீராது."

"ஓ.... கடவுளே வந்தாலும் தீர்க்க முடியாது என்கிற அளவுக்கு என்ன பிரச்சினை?"

"அது எப்பிடி சொல்லுறதுன்னு தெரியல... அதை சொல்லலாமா என்கிறதும் தெரியல.. சொன்னா நீங்க என்ன நினைப்பீங்களோ என்கிற பயம் வேற..."

"என்கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சனைன்னா வேண்டாம் சந்ரூ... கொஞ்ச நேரம் தியானம் செய்யுங்க.. மைன்ட் ப்றீ அகிடும்" நழுவிக் கொள்ள நினைத்தவளை அவன் விட வேண்டுமே.

"உங்ககிட்ட சொல்லுறதனால என்ன பிரச்சினை... ஆனா எப்பிடி...? சரி சொல்லிடுறேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி அம்மா மயங்கி விழுந்துட்டாங்கன்னு வீட்டில இருந்து கால் வந்திச்சு. வீட்ட போனா அம்மாக்கு சுய நினைவே இல்ல. என்னன்னு தங்கச்சிய கேட்டேன். காலேல இருந்த வயிறு வலின்னு சொல்லிட்டே இருந்தாங்கண்ணா... அப்புறம் பாத்ரூம் வருது. போயிட்டு வரேன்னு எழுந்தங்க தான், அந்த இடத்திலயே மயக்கம் அடிச்சு விழுந்துட்டாங்க. என்ன செய்தும் எழும்பலன்னு அழுதுட்டே சொன்னா.. உடனேயே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் செக் பண்ணா, கிட்னியில கல்லாம்...

காலம் தாழ்த்தாம சீக்கிரம் ஆபரேஷன் பண்ணி ஆகணுமாம்... இல்லன்னா உயிருக்கு ஆபத்துன்னு சொல்லிட்டு இப்போதைக்கு மாதனதிர தந்திருக்காரு... உங்களுக்கே தெரியும்... நம்ம ஊரு கவர்ண்ட் ஹாஸ்பிடல்பத்தி... எந்த வசதியா இருந்தாலும் வெளி மாவட்டத்துக்கு தான் கொண்டு போய் ஆகணும். அங்க ரீட்மெண்ட் ப்றீயா செய்யலாம் எண்டாலும், ஊர் பேர் தெரியாத இடத்துக்கு போகப் போறோம். எங்க தங்கியிருந்து மருத்துவத்த பார்க்க முடியும்? எத்தனை நாள்ன்னு கூட தெரியாது. எல்லாத்துக்கும் பணம் வேணும். நான் செய்யிற வேல என் குடும்பத்த நடத்தவே போததே!
இதை எப்பிடி சமாளிக்க போறேன்னு யோசிச்சுட்டு வீட்டுக்கு வந்தா... மூத்த தங்கச்சி வாந்தியா எடுக்கிறா.... இவளுக்கு என்னமோன்னு பயந்து பக்கமா இருந்த வைத்தியர்கிட்ட கூட்டிட்டு போனேன். அவர் தலையில குண்ட தூக்கி போட்டா மாதிரி, மாசமா இருக்கான்னுட்டாரு.." டைப் செய்து அனுப்பியவனுக்கு கை வலித்ததோ என்னமோ.. அதுரை காத்திருந்து படித்தவளுக்கு மூச்சு முட்டியது.

"தங்கச்சி விஷயத்தை விடுங்க. அது நல்ல விஜஷயம் தானே, இப்போ அம்மாக்கு என்ன செய்ய போறீங்க.?" என்றாள் உண்மை தெரியாது.

"எது நல்ல விஷயம்... கல்யாணமே ஆகாம புள்ளை பெத்துக்கிறதா...? அம்மா பிரச்சினைய கூட ஓரமா போட்டிடலாம். இந்த விஷயம் ஊருக்கு தெரிஞ்சா குடும்பத்தோட சுடுகாடு ஏற வேண்டியது தான்."

"என்னது...! கல்யாணமே ஆகலயா...??" என்றாள் தனக்குள் இருக்கும் அதிர்வை வெளிப்படுத்தும் விதமாய்.

"ஆமா... யாரையோ லவ் பண்றேன்னு அவன்கிட்ட கெட்டு போய் வந்திருக்கா... அவன் வீட்ட போய் கேட்டா, அவன் தான் தான் காரணம்ன்னு குற்ற உணர்வே இல்லாம ஒத்துக்கிறான். அப்போ தாலிய கட்டுன்னு சொன்னா, அதெப்பிடி நான் ஒத்துப்பேன்.. பத்து பவுன் இருந்தா பையன கேட்டு வாங்க.. இல்லன்னா வெளிய போங்கன்னு அவன் அம்மா மல்லுக்கு நிக்கிறாங்க. மேல நியாயம் பேச போனா சத்தம் போட்டு மானத்தை ஏலம் விடுறாங்க.

என்ன தான் தப்பில ரெண்டு தரப்புக்கும் பங்கிருந்தாலும், பாதகம் என்னமோ பொண்ணு சைட் தானே! தர்கம் பண்ணி எதுவும் ஆகப் போறதல்ல. அடுத்து என்ன செய்யணுமோ அதை பார்க்கலாம்னு வந்திட்டேன்.ஆனா யாரு உதவுவங்க? எதையுமே கால தாமதம் பண்ண முடியாது. அஞ்சு மாதம் ஆனாலே வயிறு காட்டி குடுத்திடும். இந்த இக்கட்டில அம்மா நிலை வேற.. என்ன செய்ய பாேறன்."ே பாரமெல்லாம் கொட்டி விட்டான். இனியாவது உறக்கம் வரும் என்ற எண்ணம் போல.
எதிர் புறம் நீண்ட அமைதி.

"இருக்கிங்களா..... ? தூங்கிட்டிங்களோ....!" புளூ டிக் விழுந்தும் கேட்டான்.

"இருக்கேன்.... உங்க சிஸ்டர நான் சந்திக்கலாமா...?" என்றாள்.

"அவளை நீங்க ஏன் சந்திக்கணும்... அட்வைஸ் பண்ண போறீங்களோ.. கண்ணு கெட்டு போச்சு... இனி எதுக்கு நமஸ்காரம்...? விடுங்க எங்க கஷ்டம் எங்களோடயே போகட்டும்."

"அட்வைஸ் பண்ற அளவுக்கு நான் பெரிய மனுஷி இல்ல... ஆனா அவங்கள பார்க்கணும்.. அவங்கள கூட்டிட்டுவர முடியுமா? முடியதா..?" என்றாள்.

"முயற்சி செய்யிறன்."

"ஓகே அப்பிடின்னா நாளைக்கு வீட்டுக்கு வாங்க. இப்போ நோட்ஸ் எடுக்கணும், பைய்." சேட்டிங்கை விட்டு வெளியே வந்தவள் மூளையோ தான் எடுத்த முடிவு சரி தானா என ஆயிரம் முறை சிந்திக்க ஆரம்பித்தது.
 
Vimala Ashokan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 9, 2021
291
114
43
Tanjur
இவ என்ன செய்ய போறா
ஆனா அவன் சொல்றது உண்மையா இருக்கும் போல தெரில, அவளை பேச வைக்க பொய் சொல்ற மாதிரி இருக்கு
 
  • Like
Reactions: Balatharsha

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
738
162
93
Jaffna
இவ என்ன செய்ய போறா
ஆனா அவன் சொல்றது உண்மையா இருக்கும் போல தெரில, அவளை பேச வைக்க பொய் சொல்ற மாதிரி இருக்கு
தெரியலயே சிஸ்.. ஒருவேளை உண்மையாவும் இருக்கலாம்ல.... உங்க கருத்துக்கு மிக்க நன்றி சிஸ்