• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

21. அம்புத நல்லாள்

Sahana Harish

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
49
மான்ஸ்டர் கும்பலை பிடிக்க அம்புத்ராவுடன் பிரதியுமன் செல்ல மைத்ரேயனின் உதவி தேவைப்பட்டது..

"ஏய் அம்மு என்ன சொல்ற நீ என்னால இது முடியுமான்னு தெரியல"

"நீ எவ்வளவு பெரிய ஆளு.. உங்க பேச்சு திறமைக்கு முன்னாடி இதெல்லாம் ஒரு விஷயமா மைத்து?"

"போதும்.. நீ கலாய்கிறேன்னு பச்சையா தெரியுது.. பேசித் தொலைக்கிறேன்.. அந்த எருமை எந்த நிலைமையில இருக்கோ நான் வேற கொஞ்சம் ஓவரா சவுண்டு விட்டுட்டு வந்தேன்"

" வீரனுக்கு இதெல்லாம் சகஜமப்பா"

அவளை முறைத்தவன்" அது வீரனுக்கு எனக்கு இல்ல"

" உன் அருமை உனக்கு தெரியாது மைத்து போங்க போங்க நமக்கு டைம் இல்ல.. நீங்க அவரக் கூட்டிட்டு வந்தா தான் நான் நிர்குணாவ கூட்டிட்டு வர கமிஷனர் கிட்ட பேசுவேன்" என கண் சிமிட்டினாள்.

நிர்குணா என்ற பெயர் அவன் காதில் விழுந்த மறுநொடி ஓடியிருந்தான் பிரதியுமனைப் பார்க்க.

அங்கே அவன் இன்னும் நிலையில்லாமல் இருந்தான்.. அம்புத்ராவைப் பற்றிய உண்மை தெரிந்த பின்னர் அவளைப் பார்க்கும் பார்வை மாறியது.. அவ்வப்போது காதல் கண்களால் பார்த்தாலும் அதை பயத்தின் விழிகள் மறைத்தன..அங்குமிங்கும் அலைப்பாய்ந்த பிரதியுமனின் கண்கள் அப்பொழுது தான் மைத்ரேயன் அங்கே நிற்பதை கண்டு கொண்டது.

குழப்பமாய் இருக்கும் சமயத்தில் மைத்ரேயனைக் கண்டால் தாவி அணைத்து கொள்ளும் பிரதியுமன் இன்று ஓர் வெற்றுப் பார்வை வீசினான்.. அந்த பார்வையை கண்ட இவனோ 'இவன் என்ன இப்படி லுக் விடுறான்? இவ வேற என்னை நல்லா கோர்த்து விட்டுட்டு போயிட்டா.. கடவுளே நீ தான் உதவி பண்ணணும்' என மனமாற வேண்டிக் கொண்டவன் ஓர் அடி எடுத்து வைத்தான் அறைக்குள்.

"பிரதி"

அவனிடமிருந்து எந்த ஒரு அசைவும் இல்லை..

ஆழ பெருமூச்சோன்றை விடுத்தவன் பேச ஆரம்பித்தான்.

"பிரதி நாம இன்னைக்கு நைட் மும்பை போகணும் வேலை இருக்கு"

மைத்ரேயன் சொன்னதும் திரும்பி "நான் எங்கையும் வரர்தா இல்லை.. என்னைத் தொல்லை பண்ணாம இங்கிருந்து போ" கோபமாய் வந்தது அவன் வார்த்தைகள்.

"இதை நான் ஊர் சுற்றி பார்க்க கேட்கல பிரதி"

"அப்பறம் வேற எதுக்கு? இன்னும் என்ன சொல்லி ஏமாத்த போறீங்க? எதுக்கு மும்பை போகணும்னு சொல்லு?"

"அதான் சொன்னேனே வேலை இருக்குன்னு" இவனும் காட்டமாகவே பேசினான்.

" என்ன வேலை இருக்கு அங்க அதுவும் உன்கூட?"

"என்கூட வேலை இருக்குன்னு நான் எப்ப சொன்னேன்"என தன் வாய்க்குள்ளே முனங்கியவனை" வாட் சத்தமா சொல்லு மைத்து"

நீண்ட நேரத்திற்கு பின் அவனது மைத்து என்ற அழைப்பு புதிய உத்வேகத்தைக் கொடுக்க தயங்காமல் அனைத்தையும் சொல்லி முடித்தான்.

அவன் சொல்லி முடித்ததும்" ஏய் என்ன விளையடுறீயா அவளோட நிழல் கூட படாம இருக்க தான் விரும்பறேன்..உனக்கு போகணும்னு இருந்தா போய்க்கோ என்னை விடு"

"உன்னை விட்டுட்டு போனா என்னை அவ சேர்க்க மாட்டா ஒழுங்கா கிளம்பு" என அவன் தோள் தொட்டு அழைத்தான்.

"மைத்து திஸ் இஸ் ஏ லிமிட் எனக்கு வர இஷ்டமில்லை என்னை தனியா விடேன்" அலுத்துக் கொண்டான் பிரதியுமன்.

" டேய் நான் என்ன உன்னைச் சேர்த்து வைக்க கூட்டிட்டுப் போறேன்னு நினைப்பா? கண்டிப்பா இல்ல நீ எப்படியாவது போய் தொலை இது ஆபிஷியல் டிரிப்"

"எது? என்ன கதை விடுறீயா?"

" ஆமா நீ சின்ன குழந்தை பாரு உன்னை கதைச் சொல்லி தூக்க வைக்க.. போவீயா.. நீயா வந்தா மரியாதை இல்லன்னா உன்னை அவ கட்டி தூக்கிட்டு போனாலும் ஆச்சரியப்படுறத்துக்கு இல்ல"என கூறிக் கொண்டே செல்லும் அவனைப் பார்த்து" என்னால வர முடியாது என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க சொல்லு ஆனா இந்த இடத்த விட்டு எழுந்துக்க மாட்டேன்"

மைத்ரேயன் எதுவும் பேசாமல் சிரித்தபடி சென்றுவிட்டான் சமையலறைக்குள்.

அடுத்த சில நிமிடங்களில் தொலைபேசி அழைக்க அதை எடுக்க மனமில்லாமல் அமைதியாக இருந்தான்.. அது அடித்து முடிந்ததும் இவன் அமைதியை கெடுக்கும் வகையில் அலைபேசி அழைக்க எடுத்துப் பார்த்தவனின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது.

"ஹலோ பாஸ் குட் ஆப்டனுன்"

"மிஸ்டர் பிரதியுமன் உங்களுக்கு ஒரு சீக்ரெட் மிஷன்ல வொர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சு இருக்கு.."

"என்ன மிஷன் யார் கூட? எதுக்காக?"

"போக போறது உங்க சிட்டி அசிஸ்டெண்ட் கமிஷனர் கூட.. மிஷன் பத்தி நீங்க போகும் போது சொல்வாங்க"

அசிஸ்டெண்ட் கமிஷனர் என்ற வார்த்தையைக் கேட்டதும் எண்ணெயில் போட்ட கடுகாய் ஆனது அவன் முகம்.

" ஹலோ பிரதியுமன் வாட் ஹபன்? ஆர் யூ தெர்?"

" எஸ் சார் பட் ஐ காட் டூ இட்..ஐயம் சாரி"

" பிரதி வாட் இஸ் திஸ் நீங்க தான் நம்ம கம்பெனில ரொம்ப டெலண்டான பர்சன் உங்க மேல இருந்த நம்பிக்கையிலையும், என் பேச்சை இதுவரை நீங்க மறுத்தது இல்லன்ற தைரியத்துல தான் அவங்க கூட அனுப்பி வைக்கிறேன்னு நான் சொன்னேன்.."

"சார் நீ வேற என்ன சொன்னாலும் கேட்குறேன் பட் இது என்னால முடியாது.. என்னோட சூழ்நிலை அப்படி"

"பிரதி என்னோட மானம், மரியாதை நம்ம கம்பெனி ஓட நேம் எல்லாம் இந்த மிஷன் முடிச்சி குடுத்தா பல மடங்கா உயரும்.. உனக்கும் இதுல பேனிபிட் இருக்கு" என அவனுக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்பதை எடுத்து சொல்லவும் ஒரு வழியாக ஒரு மணி நேரத்திற்கு பின் ஒத்துக் கொண்டான் பிரதியுமன்.

என்ன தான் ஒத்துக் கொண்டாலும் அவனின் மனது அவளுடன் பயணிப்பதைப் பற்றிய சிந்தனையில் மூழ்க, இவனின் நிலையை பார்த்த மைத்ரேயனோ மடமடவென வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் உணவினை தயாரித்தவன் இவனை அழைக்கவும் வேண்டா வெறுப்பாக வந்தமர்ந்தான்..

நண்பர்கள் இருவரும் சாப்பிடுவதற்கு தவிர மறந்தும் வாயை திறக்கவில்லை.. பொறுத்துப் பார்த்த மைத்ரேயன் "பிரதி இட்ஸ் நாட் நார்மல் எதாவது பேசு இப்படியே அமைதியா இருந்தா எனக்கு என்னவோ போல இருக்கு"

அவனை நிமிர்ந்து பார்த்தவன் "சாப்பாட்ல உப்பு அதிகமா இருக்கு" என தன் உணவினை முடித்துக் கொண்டதாய் கைகழுவி விட்டு எழுந்தான்.

"டேய் என்ன நக்கலா? பேசுன்னு சொன்னா உப்பு இருக்கு உரப்பு இருக்குன்னு சொல்லிட்டு போற? என்ன என்னைப் பார்த்தா எப்படி இருக்கு?"

மேலிருந்து கீழ் வரைப் பார்த்தவன் " எல்லாம் நல்லா தான் இருக்க.. அப்பறம் எதாவது பேசுன்னு சொல்லிட்டு இப்ப என்னை குறை சொல்றது எந்த விதத்துல நியாயம்?"

" ஓ சார் அப்படி வரீங்களோ? சரிடா கிளம்பு இன்னைக்கு நைட் பிளைட் என்னென்ன தேவையோ எல்லாத்தையும் எடுத்து வச்சிக்கோ அம்மு மத்த எல்லாரையும் கூட்டிட்டு இங்க வந்துருவா"என எழ போனவனை,

" மைத்து வெயிட்"

அவன் என்ன என்பது போல் திரும்பி பார்த்தான்" அவ எதுக்கு இங்க வரணும்? நாம போகலாம் எங்க வரனும்ன்னு கேட்டு சொல்லு நாம தனியா போவோம்"

'எது? கெட்டது குடி.. இவன் கூட போகவா நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன்.. ஆண்டவா இது என்ன எனக்கு வந்த சோதனை' என வேண்டிக் கொண்டு இருந்தவனை காக்க வந்த தெய்வமாய் உள்ளே நுழைந்தான் கதிர்.

" பிரதி சார் மேடம் உங்க இரண்டு பேரையும் பேஸ் புல்லா கவர் பண்ணிட்டு வர சொன்னாங்க அண்ட் கொஞ்சம் சீக்கரம் யாருக்கும் தெரியாம நாம போய் ஆகணும்" என்றவன் வந்த வேலை முடிந்து விட்டது என்பதைப் போல் கிளம்பியவனை "கதிர் நிர்குணா வந்துட்டாளா?"

அவனும் பிரதியும் ஒரு சேர முறைத்ததில்'கொஞ்சம் ஓவரா தான் போறோமோ? ப்ச் கேட்டாச்சு பதில் என்னனு தெரியற வரை கெத்த மெயின்டெய்ன் பண்ணுவோம்' மனதிற்குள் எண்ணியவனாய் கதிரின் முகத்தை பதிலுக்காக பார்த்திருக்க அவனோ பல்லைக் கடித்துத் தன் சினத்தை அடக்கியவனாய்" வந்தாச்சு சீக்கிரம் வந்து சேருங்க" என்றவன் விறு விறுவென படிகளில் இறங்கிய சத்தம் அவனின் கோப அளவை வெளிப்படையாக காட்டியது.

கதிர் சென்றதும் புன்னகை முகமாக நின்றவனை "ஏய் அறிவு கெட்டவனே கதிர் கிட்ட போய் நிர்குணாவ பற்றி கேட்குற?"

"இது என்னடா வம்பா போச்சு? அவன் தானே நம்மள கூப்பிட வந்தான் பின்ன அவன் கிட்ட கேட்காம வேற யார் கிட்ட கேட்க சொல்ற? சரி சரி வா போகலாம் உன்னோட ஹுடி எடுத்துக்கோ"

இருவரும் தங்களின் முகத்தை மறைத்தவாறு வெளியே வந்ததும் அவர்களுக்கென காத்திருந்த வாகனத்தில் ஏறி அமர அது புயலென சிறிக் கொண்டு கிளம்பியது.

" அம்மு இது என்ன வேஷம்? இவகூட என்னவோ இப்படி இருக்கா? ஏன் இப்படி?"

" சொல்றேன் மைத்து" என்றவள் வாகனத்தை செலுத்துவதிலேயே குறியாக இருந்தாள்.

முக்கால் மணி நேர பயணத்திற்கு பிறகு அவர்கள் விமான நிலையத்தை அடைந்து விட்டிருந்தனர்.

ஆனால் உள்ளே செல்ல எத்தனித்தவர்களை தடுத்து நிறுத்தினான் கதிர்.

என்ன என்பது போல் பார்த்த பிரதியிடம்" நாம இங்கிருந்து பிளைட்ல போகல ஆன் ரோடு தான் போக போறோம் வேற கார்ல" என்றவன் அம்புதராவை பார்க்க அவளும் ஆமாம் என்பதாய் தலையசைத்தாள்.

ஏன் என்று வாயெடுத்த மைத்ரேயனை சொல்கிறேன் என்பது போல் செய்கை செய்யவும் வேறு வழியின்றி அமைதியானான்.

அவளை முறைத்தவாறே பிரதியுமன் அவள் காட்டிய காரில் அமர அதன் பின் ஏறிய மற்றவர்களையும் சுமந்து கொண்டு பயணிக்க துவங்கியது அந்த எஸ்யூவி வாகனம்.

காருக்குள் அத்தனை அமைதி பிரதியுமனும் அம்புத்ராவும் ஒரு வார்த்தை பேசவில்லை, இவர்களின் நிலையை பார்த்த மைத்ரேயனும் நிர்குணாவும் கூட அமைதியாகவே பயணிக்க வேண்டியதாக இருந்தது.. கதிர் மட்டும் ஓட்டுனரிடம் வளவளத்துக் கொண்டே வந்தான்.

கிட்டதட்ட 13 மணி நேரம் பயணம்.. எவ்வளவு நேரம் அமைதியாக இருந்து விட முடியும் அதுவும் மனங்கவர்ந்தவர்களை அருகில் வைத்துக் கொண்டு? இரவு உணவை முடித்துக் கொண்டு காரில் ஏற போன நிர்குணாவை "குணா நீ என் பக்கத்துல உட்காரு" என தன்னோடு இருத்திக் கொண்டான் மைத்ரேயன்.

வேறு வழியின்றி பிரதியுமன் அம்புத்ராவின் அருகில் அமர்ந்தான்.. தன்னவளின் உடல் உரச அமர்ந்தவனின் மனம் ஊமையாய் கதற மெல்லமாய் அவள் அறியாத வண்ணம் பார்த்தான்..

அவன் பார்ப்பதை இவள் அறிந்தும் தன்னவனை திரும்பி பார்த்தால் எங்கே அவன் பார்வை தன்னை விட்டு அகன்று விடுமோ என்ற எண்ணம் தோன்ற சாளரம் வழியே வாகனத்தின் மேல் பார்வையை செலுத்துவதைப் போல நடித்துக் கொண்டிருந்தாள் அந்த காவல்துறை அழகி.

இருவரின் செய்கைகளை சிறியவர்கள் கண்டுக் கொண்டாலும் மென்னகை சிந்தியவர்களாக தங்களின் பேச்சுகளை தொடர்ந்தனர்.

ஒருகட்டத்தில் அம்புத்ரா, கதிர், வாகன ஓட்டுநரை தவிர மற்ற மூவரும் உறங்க.. ஒரு மேட்டில் கார் ஏறி இறங்க பிரதியுமனின் தலை அம்புத்ராவின் தோள் மேல், தீடீரென்று அவன் கணம் இவள் தோள் மேல் இருக்கவும் திடுக்கிட்டவளாய் திரும்பியவள் அவன் முகத்தைப் பார்த்ததும் தன்னையும் அறியாமல் ரசிக்க துவங்கினாள்.

எத்தனை நேரம் ரசித்தாளோ அவளையும் அறியாமல் இவளும் அவன் மேல் சாய்ந்து உறங்க அங்கே இதமான சூழல் உருவானதை போன்று கார் மிதமான வேகத்தில் மறுநாள் முற்பகல் மும்பை வந்தடைந்தது.

மும்பை வந்ததும் முன்னரே ஏற்பாடு செய்து வைத்த ஒரு நட்சத்திர ஓட்டலின் வரவேற்பறையில் இவர்கள் காத்திருக்க அங்கே வந்த மேலாளர் "மிஸஸ் பிரதியுமன் உங்களுக்கான ஹனிமூன் சூட் ரூம் ரெடி அண்ட் மற்றவர்களுக்கான தனியறையும் ரெடி ஹாவ் எ நைஸ் டேஸ்" என அவர் நகர இவன் அவளை முறைத்ததில் திருதிருவென முழித்தாள் அந்த பேதை.

தொடரும்..
 
Top