• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

22. உன்னாலே உயிரானேன்

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
485
குட்டி போட்ட பூனை போல், அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தவளை நீங்க நேரம் நடுநாயகமாக அமர்ந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தாள் ஹாம்சி.அவளும் தான் என்ன செய்வாள்...? இவள் வாயைத்திறந்தால் அவளுக்கல்லவா பதில் சொல்லியே தலை வலி எடுக்கின்றது.எங்கே மீண்டும் வாயினை விடப்போய், உயிரை எடுத்து விடுவாளோ என்ற அச்சத்தில், எவ்வளவு நேரம் தான் இவளால் அந்த அறையினை இஞ்ச் இஞ்சாக அளந்திட முடியும் என்றே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.


"ஏன்டி! பொறுப்புன்னு ஒன்னு வேண்டாம்.....? முதலாளியே இத்தனை மணிக்கு வந்தா... தொழிலாளிங்க எப்பிடி சரியா இருப்பாங்க.. இவன்லாம் என்னடி முதலாளி?" என்று சீறியவளை உதட்டின் மேல் விரலை வைத்து கண்களை மட்டும் உருட்டிப்பார்த்தாள் ஹம்சி.


எங்கே ஆர்வக்கோளாறில் வாயை விட்டு விடவோமோ என்ற பயம் அவளுக்கு.
ஆனால் மனதுக்குள் அவளை அர்ச்சிக்கவும் தவறவில்லை.'என்னைக்கும் இல்லாத திருநாளா.. இவ காலேஜ் கட்டடிச்சிட்டு எனக்காக வருவா.., இவ விழிகளை குளிர வைக்கிறதுக்கு அவரு ஓடோடி வந்திடனுமாக்கும்..

மூஞ்சிய பாரு..! காலேல இருந்து சாவடிச்சிட்டு...! யாராச்சும் வாங்கப்ப என்னை காப்பாத்த..' என உருண்ட விழிகளை கூட கவனிக்க அவள் தயாராக இல்லை.ஆம் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு, அவனை காண வருவதற்கு அவள் ஒன்றும் பெரிய அளவில் கஷ்டப்படவில்லை.
கல்லூரிக்கு தாமதமாவதை உணர்ந்த வினோத்..


"மதும்மா.... சீக்கிரம் வாடா லேட்டாகுது." என மாடியிலிருந்த அவள் அறை நோக்கி குரல் கொடுத்ததும் தான்.புள்ளி மனைப்போல மாதுளம் பற்கள் மின்ன, புன்னகைத்தவாறு படிகளில் துள்ளி இறங்கி வருபவளை இப்போது மட்டுமல்ல.. எப்போதும் ரசிக்க இருவருக்கு சலிக்காது தான்.. ஆனால் ரசணைக்கும் நேரம் என்று ஒன்று இருக்குமல்லவா..?"மதும்மா... அப்பாக்கு லேட் ஆகிடிச்சாம்... நீ என்னன்னா வெறுங்கைய வீசிட்டு வற... புத்தகப்பை எங்க? சீக்கிரம் போய் எடுத்துட்டு வா..!" என்றார் சித்ரா அவசரமாக.


"நான் காலேஜ் போகலம்மா.. ஆஃபீஸ் தான் போகப்போறேன்." என்றாள் சர்வ சாதாரணமாக."மதும்மா... விளையாட நேரமில்ல... சீக்கிரம் போ!" என அவள் பேச்சில் உண்டான சலிப்பினை மறைத்துக் கொண்டவர் எதிரில் வந்து நின்றவள்."ம்மா... இனிமே நான் காலேஜ்க்கு போகல..." என்றாள்."என்னடி..! நானும் அமைதியா பேசிட்டிருக்கேன். நீ என்னன்னா விளையாடிட்டிருக்க.." அதுக்கு மேல் அவரால் சினத்தினை மறைக்க முடியவில்லை.
"கோபப்படாதிங்கம்மா.. காலேஜ் போகலன்னா என்ன? என் ஃப்ரெண்டுக்கிட்ட நோட்ஸ் வாங்கி படிச்சு, எக்ஸாம்ல பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்றேன்ம்மா." என்றாள்."என்னடி உளர்ற...? காலஜ் போகாம எப்படி படிக்...." என்றவருக்கு அதற்குமேல் மகளிடம் தன்னால் பேசிட முடியாது என்று பாதியில் நிறுத்திக்காெண்டவர்."என்னங்க நீங்க..? அவ பைத்தியக்காரி மாதிரி உளறிட்டிருக்க.. என்னன்னு முதல்ல கேளுங்க." என கணவனிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.அவருக்குமே மகளின் பேச்சில் உடன்பாடில்லை. மனைவி பேசுவது சரியென அவளை பேச விட்டு அமைதியாக இருந்தவர், சித்ரா தன்னிடம் பொறுப்பை ஒப்படைத்ததும், தன்னாலும் இதற்கு ஒப்புக்கொள்ள முடியாது என்பதை கூற வாயெடுத்தவர் கவனம் மதுஸ்ரீயின் பின்னால் நிலைத்தது.


ஏனோ மறுப்பாய் பேசவந்தவர்,
"உனக்கு என்ன தோணுதாே.. அதை செய்...! அப்பா மறுப்பு சொல்ல மாட்டேன்.

ஆனா சொன்னது போல எக்ஸாம்ல பர்ட்ஸ் கிளாஸ்ல வரணும்." என்றார் அவள் ஆசைக்கு மறுப்பு தெரிவிக்காதவராய்."ஏங்க.... நீங்க...." என ஏதோ கூற வந்தவள் தோளினை அர்த்தமாய் பற்றி, அழுத்தமாய் விழிகளை மூடித்திறந்தவர் செயலில் எதை கண்டாளோ..!"ம்ம்..." என்று தலையினை ஆட்டியதோடு அமைதியாகி விட்டாள் சித்ரா."அம்மாடி...! நீ போய் கார்ல உக்காரு.. அப்பா வந்திடுறேன்." என்றவர் கன்னத்தை கிள்ளியவள்,"அப்பான்னா அப்பா தான்.. அம்மாக்கும் புரிய வைச்சிட்டு, நிதானமா வாங்க.. நான் கார்ல வையிட் பண்றேன்." என முத்தம் ஒன்றை வைத்து விட்டு, அதே துள்ளலுடன் காரை நோங்கி சொன்றாள் மதுஸ்ரீ..


அவள் வாசலை தான்டும் வரை தான் பொறுத்திருந்தார் சித்ரா."ஏங்க நீங்களும்....." என மேலே சொல்ல வாய் எடுத்தவரை தடுத்தார் வினோத்.
"எனக்கும் அவ பேசுறதில உடன்பாடு இல்லம்மா... ஆனா கொஞ்சம் யோசிச்சு பாரு....!
அன்னைக்கு அவங்க என்ன சொன்னாங்கன்னு மறந்திட்டியா..?
அதோ பின்னாடி பாரு..!" என மதுஸ்ரீ நிற்கும் போது அவள் புன்புறம் தான் பார்த்ததை சுட்டிக் காட்டினார்.அவர் காட்டிய இடத்தில் பார்வையை திருப்பினாள் சித்ரா...


அங்கே எந்த வித விசையுமற்று, சிவன் உருவம் பதித்த நாட்காட்டி தாறுமாறாக அசைவதை கண்டவர் கணவனை கேள்வியாக நோக்க."ஆமாம்மா... இது இப்ப இல்ல.. நீ அவளோட ஆசையை மறுக்குறப்பவே அசைஞ்சிச்சு..
ஜன்னல் எதுவுமே திறந்தும் இல்ல... பேனும் போடல... அதை பார்த்ததும் தான் நானும் அமைதி ஆகினேன்.நல்லா யோசிச்சு பாரும்மா... அன்னைக்கு நம்ம பொண்ணு பிறக்குறப்போ... பிரசவம் பார்த்த அவங்க ரெண்டு பேரும் என்ன சொன்னாங்க...?
அவ போன ஜென்மத்தில அடைய முடியாத எதையோ, அடைய தான் இந்த ஜென்மமே எடுத்தான்னும்... அவ ஆசைக்கு நாங்க எந்த விதத்திலயும் தடையா இருக்க கூடாதுன்னு சொன்னாங்கல்ல...


ஆமாம்மா... நாம தடுமாறுறப்போ அந்த சிவனே நமக்கு எதையோ உணர்த்தி இருக்குறாரு..


நல்லது எது கெட்டது எதுன்னு அவளுக்கும் தெரியும்... நம்ம சுதந்திரத்தையும் அவ தவறா பயன்படுத்திக்க மாட்டான்னு..
அந்த கடவுளே நம்பிக்கை தந்ததுக்கப்புறம் என்னம்மா..!
மனச போட்டு குழப்பி்காம ரிலாக்ஸா இரு..!
எல்லாமே சரியா நடக்கும்.


நான் வறேன்டா.." என மனைவியை சமாதானப்படுத்தும் விதமாய் அவள் கன்னத்தை தட்டிவிட்டு வெளியேறினார்.

பெற்றவர்களே அனுமதி தந்ததன் பின்னர், மதுஸ்ரீக்கு என்ன கவலை.?
காலையிலேயே மதுஸ்ரீ அலுவலகம் வந்துவிட்டாள்.
இனிமேல் அவளது தலையாய கடமைகளில் முதல் கடமையாக ஆதிரனை தன்னை நேசிக்க வைத்து, தான் யாரென்பதை உணர்த்த வேண்டும். அதற்காக தான் காலையிலேயே அவன் தரிசனம் நாடி வந்தாள்.ஆனால் அவள் நினைத்த நேரத்திற்கு அங்கு நின்ற அவன் ஒன்றும் சாதாரணமானவன் இல்லையே...!
சிறிது நேரம் அமைதியாக நடந்தவள்..."உண்மைய சொல்லு ஹம்சி... ஆதிரன் வருவானா? வரமாட்டானா..?" என்றாள் பொறுமை இழந்தவளாய்.
அதுவரை எங்கே வாய் விட்டால் மறுமுறை முதலில் இருந்து ஆரம்பித்து விடுவாளோ என்று அமைதி காத்தவளுக்கு, அவளது ஆதிரன் என்ற பேச்சில் எல்லாம் மறந்து போக.
"ஆதிரனா...? அது யாருடி.?" என்றாள் ஆர்வக்கோளாரில்.


"வேற யாரு உன்னோட சௌண்டு தான்.""என்னது...! என்னோட சௌண்டா..?" என வாய் பிளந்தவள்,


"இருக்கட்டும்... ஆமா அது என்ன ஆதிரன்னு புதுசா..?""மறந்திட்டியாடி.. அவன் பேரு ஆதிரன் தா...." என அவளும் நடப்பை மறந்து எதையோ சொல்ல முயன்றவள்... சட்டென பேச்சை இடைநிறுத்தி ஹம்சியை திரும்பிப்பார்த்தாள்.அவளோ இமைகள் முடிச்சிட புரியாது நோக்க.. தன் தவறை உணர்தவளாய் சிறு நொடி தான் முழித்தவள், மறு நொடியே தன்னை சரி செய்து கொண்டவளாய்.."காதல்ன்னு வந்திட்டா... நாளுக்கு ஒரு பேருன்னு செல்லமா கூப்பிடுறது எல்லாம் சகஜம்மா... மனசுக்க அதை எல்லாம் புதைச்சிட்டு இருக்கிற உனக்கு இதெல்லாம் சொன்னா புரியாது." என்றாள் அவளது கன்னம் கிள்ளி.."அது சரி..! நாள் நட்சத்திரம்ன்னு பார்த்து பார்த்து அவங்க அம்மா அவனுக்கு சௌந்தரீகன்னு அழகான பேரு வைச்சா.. நீ நாளூக்கு ஒன்னுன்னு சொல்லி கூப்பிடுறதும் இல்லாம என்னையே கேலி பண்ணூவியா...?" என அவளும் விடாது பேச.."உண்மை தானேடி.. காதலையும் கருவாட்டையும் மறைக்கவே முடியாது. அப்பிடியே மறைச்சு வைக்க நினைச்சோம்ன்னு வையி... வேற எதாச்சும் கவ்விட்டு போயிடும். அதான் இன்னைக்கே என் காதலை ஆதிரன் கிட்ட சொல்ப்போறேனே...!" என்றவளை அருவெருக்கும் பார்வை பா்த்தவள்.
"நல்ல உதாரணம் சொன்ன போ..!
காதலை கொண்டுபோய் கருவாட்டோட சேர்க்கிற...
உன்னை மாதிரில்லாம் என்னால இருக்க முடியாதும்மா...!" என சோகமாய் ஹம்சி கூற.
"உன்னால முடியலன்னா என்ன...? நான் தான் உனக்கு இருக்கேன்ல.. முதல்ல என் காதலுக்கு ஒரு முடிவு கண்டுட்டு வந்து, உன் காதலுக்கு தூது போறேன். ஓகேவா... ?" என்றவளை கண்கள் கலங்க இறுக கட்டிகொண்டாள் ஹம்சி.
அதே நேரம் மாயன் தோளில் கை போட்டவாறு உள்ளே வந்தான் தமிழ்.


"என்னடா இது? இதுங்க அன்பை பார்த்து நல்ல நட்புன்னு நினைச்சிட்டிருந்தா... இதுங்க ரெண்டும் தனிமையில இந்த மாதிரி கட்டிப்பிடிச்சிட்டிருக்காங்க..? அப்போ இது நட்பில்லையா...?" என இருவரது
நெருக்கத்தையும் பார்த்து தமிழ் காதை கடித்தான் மாயன்.


அப்படி சொன்ன அவன் வாயிலே ஒன்று விட்ட தமிழ்."தப்பா பேசாத எரும..!" என்று அவனை அடக்கியவன்,"இங்க என்ன நடந்திட்டிருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா...?" என்ற தமிழின் குரல் கேட்டு அவசரமாக பிரிந்த ஹம்சி.


கலங்கிய விழிகளை அவர்களிடம் வெளிப்படுத்த விரும்பாது, தலையினை குனிந்து கண்ணீரை துடைப்பதை கண்டவன்
மாயனை திரும்பி முறைத்தான்."எருமை...! உன் பேச்சை நான் கூட ஒரு நிமிஷம் நம்பீட்டேன்டா...! " என்றான் மாயனுக்கு மட்டும் கேட்டும் குரலில் பற்களை கடித்தபடி..
"விடு மாப்பிள்ளை..! நீயே உன் ஆள அந்த மாதிரி அந்த மாதிரி நினைக்கிறப்போ... நான் நினைச்சதில என்னடா தப்பு?" என்று நியாயம் கேட்டவன் காலினை ஓங்கி ஒரு மிதி மிதித்தான்."ஆ....." என வலியில் அலறியவன் கழுத்தில் தொங்கிய கழுத்து பட்டியினை எடுத்து, அவன் வாயினையே அடைத்தவன்.."இனிமே எதையாவது பேசினேன்னு வையி... உள்ள போட்டிருப்பேல்ல... அதை உருவி தொண்டை குழியையே அடைச்சிடுவேன்." என்க.


அவன் எதை சொல்கிறான் என்று தெரிந்ததும், வாயில் திணித்திருந்த டையோடு
"அய்யே..." என முகம் சுருக்கியவனிடம்,


"அந்த ஓட்டை ஜட்டி உன் வாயிலன்னு நினைக்கிறப்பவே கேவமா இருக்குல்ல.. அப்பிடி நடக்கக்கூடாதுன்னா.. மூடிட்டு நில்லு." என்றான் முன்னையது போல் தமக்குள் மாத்திரம் கேட்கும் விதமாய்.அதன் பின்பு பேசிடுவானா அவன்..? வாயில் திணித்திருந்த டையுடன், அப்பாவியாய் நின்றவனை பார்த்து பெரிதாகவே சிரித்து விட்டாள் மதுஸ்ரீ.ஆம் அவளும் இவர்களை தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.


அவர்கள் பேச்சு புரியவில்லை என்றாலும், மாயனுடனான தமிழின் செய்கைகளே சொன்னது. மாயனை தமிழ் மிரட்டுகிறான் என்று.
"என்னாச்சு தமிழ்? ஏன் அந்த அப்பாவிய மிரட்டிட்டு இருக்கிங்க..? என்றாள் சிரிப்பின் நடுவே.அவ்வளவு எழிதில் புன்னகக்காதவள் புன்னகை பூத்ததுமே, அரிய மலலொன்று மலர்ந்து பிரகாசித்தது போல் தோன்றியது போல தமிழுக்கு.
அவளையே வைத்த கண் வாங்காது நோக்கியவன் பார்வையின் தடுமாற்றம் புரிந்து போனவள், எங்கே அவன் பார்வையில் உள்ள வித்தியாசத்தை ஹம்சி கண்டு கொண்டிடுவாளோ எனப் பயந்தவளாய்.."தமிழ்..." என அவசரமாய் உரக்க அழைத்து, அவன் சிந்தையை கலைத்தவளால் அதற்குமேல் இயல்பாக பேச முடியவில்லை.
"என்ன ரெண்டு பேரும் சேர்ந்து..." என்றாள் மீதி வார்த்தையை முடிக்காது."அது... அது..." என இன்னும் அந்த மந்திரப்புன்னகையின் தாக்கத்திலிருந்து வெளிவராதவனாய் தமிழ் தடுமாற.."அதுவா மதுஸ்ரீ..? பாஸ் வந்தது கூட தெரியாம.. ரொம்ப நேரமா ஸ்டாப் ரூம்லயே ரெண்டு பேரும் இருக்கிங்களா..! அதான் என்ன ஏதுன்னு பார்க்க வந்தோம்." என்றான் நண்பனது தடுமாற்றம் புரிந்தவனாய் மாயன்."என்னது....! பாஸ் வந்திட்டாரா...?" என விழிவிரித்து கேட்டவளுக்கு, இருந்த தயக்கம் எங்கு போனதென கேட்டால் அவளுக்கே தெரியாது."நீங்க பேசிட்டிருங்க.. நான் வந்திடுறேன்." என்றவள் தான் சிட்டாய் பறந்து போனாள்.
"மாப்ள....! என்னடா நடக்குதிங்க...? அவரு வந்திட்டாருன்னா... இவ ஏன் இந்த ஓட்டம் ஓடுற...? ஏதோ சரியில்லாத மாதிரி இல்ல...?" என ஆர்ப்பரித்து ஓடியவளையே பார்த்தவாறு சொன்னவன் கைகளை அமர்த்தி, அமைதி காக்க சொன்னவனுக்கும் நடப்பவற்றை பார்க்கும் போது, ஏதோ சரியில்லை என்று தான் தோன்றியது.
 
Top