• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

23. உன்னாலே உயிரானேன்

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
வந்ததும் மடிக்கணினியை இயக்கி விட்டு அதில் மூழ்கிப்போனான் சௌந்தரீகன்.




அவன் அலுவலகம் வந்துவிட்டான் என்று அறிந்ததும், புயல் வேகத்தில் அவன் அறை நுழைந்தவளுக்கு, ஏனோ அனுமதி வாங்கிய பின்னர் உள்ளே வரவேண்டும் என்று மறந்து போனது.



அது நினைவே இருந்தாலும், சௌந்தரீகன் தன்னவன் என்று தெரிந்தன் பின்னர் கேட்டும் இருக்க மாட்டாள் என்பது வேறு விஷயம்.



வேலை என்று வந்துவிட்டால் தன்னையே மறந்து போவான் அவன். எதிரில் நிற்பவர்களையா கணக்கில் சேர்ப்பான்.?




அந்த முடியானது ஆண்மைக்கும் மென்மை உணர்த்த நினைத்தது போல, இதமான காற்றின் உதவியுடன் அவன் பிறை நெற்றியை வருடியது.


சீராக இருந்த புருவங்கள் இரண்டும், வேலையில் மூழ்கியிருந்தவன் மனநிலைக்கு ஏற்றது போல், காதலர்கள் இருவரும் கூடல் கொள்வதும்... பின் ஊடல் கொள்வதுமாக மாறி மாறி தன் காதைலை அரங்கேறிக் கொண்டிருக்க.. அதன் கீழ் செவ்வரி ஓடிய விழிகள் இரண்டிலும், குண்டூசியை பதிக்கியிருந்தானோ என்னமோ..! துளையிடும் கூரிய பார்வை.


ஆண்மகன் நாசியின் அழகை கூற தமிழில் வார்த்தைகளுக்கு பஞ்சமாக..


அழுத்தமான தடித்த உதட்டதில் தவள்ந்திடுவேனோ நான்..? என அடம்பிடிக்கும் சிறு வளைவுப் புன்னகையும்.



ஆர்ப்பரித்து ஓடிவந்தவள், ஏனோ ஆர்ப்பாட்டமே அற்று அவன் எதிரே கைகட்டி அவன் அழகை தன்னை மறந்து ரசித்தது எத்தனை நிமிடங்களோ.. அதை மணிக்காட்டி தான் அறியும்.




மெதுவாக நகர்ந்து வந்து, அவன் மேசையின் எதிரே இருந்த இருக்கையினை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டவள் ரசணை முடிந்ததா என கேட்டால் இல்லவே இல்லை...



ஆண்டாண்டு காலம் கண்களில் சிக்காது, கண்ணாம்பூச்சி ஆடியவனை ரசிக்க சில மணி நேரம் போதுமா என்ன..?



மேசையில் கையூன்றி தாடைக்கு கைகொடுத்தவாறு ரசிக்கலானாள் மதுஸ்ரீ.
உதடு வரண்டதோ என்னமோ...! லாப்டாப்பில் கவனத்தை வைத்தவாறு, தண்ணீர் கிளாஸினை தோடி, கையினை மேசையில் ஊறவிட்டவன் கையிற்கு அது கிடைக்காது போகவே.



லாப்டாப்பிலிருந்து கண்களை மீட்டு, திரும்பியவன் முன் இருந்தவளை கண்டது அதிர்ந்து தெளிந்தவனுக்கு, தன்னையே இமையசையாது நோக்கியவளை கண்டதும் கோபத்தில் மூக்கு விடைக்க ஆரம்பித்தது.




இருக்காதா பின்னே...!
அவனும் கடந்த ஒருசில நாட்களாகக் கவனித்துக்கொண்டு தானே இருக்கின்றான் அவளது செயல்களை.


தன் இருக்கையிலிருந்து அவளருகில் வந்தும், அவளது கண்கள் அவனிடமிருந்து மீளாமல் கனவுலகிலேயே சஞ்சரித்திருக்க.





"ஏய்..!" என்ற அவனது அதட்டிலில் திடுக்கிட்டு சுயம்பெற்றவள், தன்னருகில் கோபமாக நின்றவனை கண்டதும் உதடுகள் புன்னகையாய் விரிந்தது.




"உனக்கு கொஞ்சம் கூட அறிவு என்கிறது இல்லையா...? எத்தனை வாட்டி எச்சரிச்சிருக்கேன்.. நீ பாட்டுக்கு ஏதோ மாதிரி உள்ள நுழைஞ்சு, என் எதிர்லயே சேரை போட்டு உக்காந்திருக்க...

மழைக்காவது ஸ்கூல் பக்கம் ஒதுங்கியிருக்கியா இல்லையா..?" சீறியவன் கோபத்திற்கு எதிர் வினையாய் அவளுமே கோபப்பட்டிருக்க வேண்டும்.



ஆனால் அவளோ அந்த சூரியனையே உருக வைக்கும் பனிமலையாய், புன்னகை தவள அவனை இன்னு நெருங்கி, அவன் விழிகளையே பார்த்தவாறு நின்று கொண்டாள்.



அவளது நெருக்கத்தில் என்ன உணர்ந்தானோ.. சட்டென தன்னிடம் இருந்து தள்ளி விலக்கி நிறுத்தியவன்...

"ச்சீ... நீல்லாம் பொண்ணு தானா..? இனிமே இந்த மாதிரி ஏதாவது பண்ணேன்னு வையி... நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்.



என்ன கண்ணாலயே மயக்கிறியா..? இதுக்கெல்லாம் மயங்கிப்போறவன் நான் கிடையாது. இந்த வேலையெல்லாம் யாருகிட்டையாவது வைச்சுக்கோ.." என விரல் நீட்டி எச்சரித்தான்.



"ம்ம்... யாருகிட்டையாவது வைச்சுக்கலாம் தான் ஆதிரா.. ஆனா அவங்கள எல்லாம் எனக்கு பிடிக்கலையே.!

எனக்கு உன்னை மட்டும் தானே பிடிச்சிருக்கு." என மீண்டும் அவனை கொஞ்சுவதற்காக நெருங்கியவளை, கோபமாக தள்ளி விட்டவன்.



"கிட்ட வந்தேன்னா சாவடிச்சிடுவேன்." என்றான்.


"நீ திருந்தவே மாட்டியாடா...? எப்போ பாரு எரிமலையா தான் கொந்தளிச்சிட்டிருப்பியா..? இதை பாருடா...! போன தடவை தான், அந்த யாழினியனுக்கு விஸ்வாசமா இருக்கேன் என்கிற பெயர்ல.. உன்னோட காதலை மனசுக்கையே வைச்சு, எனக்கு துரோகம் பண்ணிட்ட.. இந்த தடவை நான் ஏமாற மாட்டேன்...


உன்னோட காதலை என்கிட்ட வெளிப்படுத்தியே ஆகணும்." என்றவளை இமைகள் முடிச்சிட நோக்கியவனுக்கு, அதற்குமேல் இவளது உளறலை கேட்க பொறுமை ஆற்றுப்போனது.




"ஹம்சி.... ஹம்சி..." என அந்த அலுவலகமே அதிரும் அளவிற்கு அலறினான்.
இவன் அலறல் கேட்டு உள்ளே ஓடிவந்தவள், அங்கு செந்தனலாய் நின்றிருந்த சௌந்தரீகன் முன், அவனை இன்னும் கோபப்படுத்துபவளைப்போல், மார்புக்கு குறுக்கே கைகட்டி நின்றவள் அவன் போபத்தினையே புன்னகையோடு ரசித்து நின்பதை கண்டவளுக்கு தான் உள்ளே உதறல் எடுத்தது.



'என்னத்த பண்ணி வைச்சிட்டு இப்பிடி நிக்கிறான்னே தெரியலையே! இவ நிக்கிற தோறணையில எனக்கே கோபம் வருதே.. அந்தாளுக்கு வராதா...? இவளால இன்னைக்கு என் தலை உருளுமோ...?" மனதில் தான் அர்ச்சித்தாள்.



"சார் கூப்பிட்டிங்களா..?" என அவன் கோபம் கண்டு நடுங்கியவள் குரல் தான் வெளியே வரவில்லை.


"இந்த பைத்தியத்தை முதல்ல வெளிய கூட்டிட்டு போங்க ஹம்சி... என்னமோ எல்லாம் சம்மந்தமில்லாம உளறிட்டிருக்கு..." என்றான் இரைச்சலாய்.



"சரி சார்...!" என தலையசைத்தவள்,
மதுஸ்ரீ அருகில் வந்து... அவள் கைபற்றி அழைக்க. நட்ட மரம் போல் அசையாது நின்றவள் பார்வை இப்போதும் சௌந்தரீகனை தீண்டிவே செய்தது...



"எரும... எனக்கும் திட்டு வாங்கி தராம வாடி...!" என பற்கள் நெரிபட சொன்னவள் கையினை உருவி தன் கையினை விடுவித்தவள்..


"கோபப்படுறப்போ தான்டா நீ என் ஆதிரா மாதிரியே இருக்க.. என்னை விட்டா இப்பிடியே உன்னை நாள் பூராவும் பார்த்திட்டே இருப்பேன்." என அவனை நெருங்கியவள்,



"உன்னோட கோபத்துக்கு பின்னாடி இருக்கிற உண்மை முகம் எனக்கு தான்டா செல்லம் தெரியும். அப்பாே மட்டுமில்ல இப்பவும்.. உன்னோட மனச மறைக்க கோபத்தை ஆயுதமா எடுக்கிறல்ல...


என் அழகன்டா.. எப்படி கோபத்தை வெளிப்படையா என்கிட்ட காமிக்கிறியோ... அதே போல சீக்கிரம் உன் காதலையும் காமிச்சுடுடா செல்லம்.. இல்லன்னா போன தடவை போல.. யாராவது உள்ள புகுந்துட போறாங்க." என அவன் கன்னம் கிள்ளி உதட்டில் ஒற்றிக்கொண்டவள் செயல், ஏனோ அவன் கருத்திலே பதியாது போனது.



எப்படி பதியும்..? அவள் செயலிலும் அழுத்தமாய் அவள் சொற்கள் தான் அவனை தாக்கியது.


அதற்குள் மதுஸ்ரீயை ஹம்சி அவள் மறுப்பையும் மீறி~ வெளியே இழுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
தன் இருக்கையில் வந்து அமர்ந்தவனுக்கு தான் எதுவுமே புரியவில்லை.



'இவ என்ன உளறிட்டு போறா...? இவளை நான் எப்போ காதலிச்சேன்.. அதை எப்போ இவகிட்ட மறைச்சேன்.? இவ சொல்லுறத பார்த்தா உண்மையா இருக்குமோ..!' ஒரு நொடி தான் சிந்தித்தான்.



'அது எப்படி உண்மையாகும்..? அவ சொல்லுறது உண்மையா இருந்தா.. எனக்கென்னா அம்னீஷியாவா புடிச்சிருக்கு...? பழசெல்லாம் மறந்து போக.. அவதான் லூசு போல பேசுறான்னா.. அவ பேச்சை நம்புற...' என தன்னை தானே திட்டியவனுக்கு ஏனோ அவளது இறுதிச் செய்யையினை நினைக்கும் போது உதட்டு வளைவில் புன்னகை அரும்பாமலில்லை.



"சரியான மென்டல்... ரீட்மெண்ட் பண்ணாம இப்பிடியே இவளை விட்டாங்கன்னா.. ஊர்ல இருக்கிறவன பூரா நீ தான் என் லவ்வர்ன்னு கொஞ்சிட்டு திரியப்போறா.." என்று வாய்விட்டே புலம்பியவன் தன் வேலையில் மூழ்கிப்போனான்.



ஆனால் ஹம்சி தான் ருத்ர மூர்த்தியாய் மாறியிருந்தாள்.



"லூசாடி நீ...? எனக்கே நீ பேசினதெல்லாம் கேட்கிறப்போ ஆத்திரமா வந்திச்சு... அவருக்கு வராதா...? நல்ல வேளை ரூம விட்டு மட்டும் வெளிய அனுப்பிச்சாரு.. வேலைய விட்டு அனுப்பிருந்தா உன்னோட கனவு மட்டுமில்ல.. காதலும் போயிருக்கும்.." என அங்கு கலையாடிக்கொண்டிருந்தவளை புன்னகையுடனே பார்த்து நின்றவள் புறம் திரும்பியவளுக்கு, இன்னும் ஆத்திரம் கூடிப்போனது.




எதை பேசினாலும் புன்னகை ஒன்றினை பதிலாக வைத்திருப்பவளை பார்க்கும் போது ஆத்திரம் வராது என்ன செய்யும்..?


ஓடிவந்து அவள் கழுத்தை பிடித்தவள்.. "இதுக்கப்புறமும் அந்தமாதிரி சிரிச்சேன்னு வையி.. சங்கை நெரிச்சு கொன்னுடுவேன் பார்த்துக்கோ...



எப்படிடி கொஞ்சம் பயமில்லாம அந்தாள்கிட்ட இப்படி நடந்துக்கிட்ட..? காதல் வந்திட்டா கோட்டி தனம் பண்றது தான்.. அதுக்காக காதலிக்கிறவனுக்கு ஆத்திரம் உண்டாக்கிறது மாதிரியா பண்ணுவ..?
காதல் வற்புறுத்தி வராதுடி..! அதை நீ உணர்ந்தா மாத்திரம் போதாது.. அவனுமே உணரணும்.


பொறுமையா அவனுக்கு உணர்த்தப்பாரு.. அப்போ தான் அந்த காதலுக்கும் ஆயுள் அதிகமா இருக்கும்." என்று முதலில் சூடாய் ஆரம்பித்து தன்மையாய் முடித்தவளுக்கு தெரியாதே..!




அவன் மனசில் அவள் சின்மாதனம் இட்டு அமர்ந்து ஆண்டாண்டு காலம் கடந்துவிட்டது என்றும், அதை அவன் உணரும் சமயத்தில் தானே அவர்களை பார்த்து பொறாமை கொள்ளப்போகிறோம் என்று.



அவள் பேச்சில் புன்னகை தோன்றினாலும்.. எங்கே அதை பிரதிபலிக்க போய், மீண்டும் தோழியின் பொறுமையினை சோதிக்க விரும்பாதவளாய். தன் கழுத்திலிருந்த அவள் கையினை விலக்கி விட்டவள்.



"காதல்ல இதுவும் ஒரு வகை தான் டார்லி.... இப்படியும் காதலை உணர்த்தலாம். இந்த காதல் எத்தனை ஜென்மம் ஆனாலும் மாறாது." என்றவளை ஹம்சி முறைக்க.




"சரி சரி... வா.. இப்பிடியே பேசிட்டிருந்தோம்ன்னா வேலை செய்யலன்னு அதுக்கும் கத்துவான்." என்று அவளை இழுத்துக்கொண்டு சென்று விட்டாள்.

நாட்களோ வேகமாக ஓடிமறைந்தது. அவளும் எத்தனையோ முறைகளில் தன் காதலை வெளிப்படுத்தி விட்டாள். ஆனால் சௌந்தரீகன் தான் அவள் காதலை உணர்ந்த பாடில்லை.
அவ்வளவு ஏன் அவன் மனதில் என்ன தான் இருக்கென்று மதுஸ்ரீயாலும் கண்டுகொள்ள முடியவில்லை.


அவளை கண்டதும் ஆர்வமாய் விரியும் அவன் விழிகள்.. மறு நொடியே அனலை கக்கவும் மறுப்பதில்லை.




அவள் அவனை நெருங்கும் போதெல்லாம், சத்தமிட்டு வெளியே போ என்றும் கத்துபவன், வேலையை விட்டு மாத்திரம் அனுப்ப மாட்டான்.


ஹம்சியும் மதுஸ்ரீயிடம் அட்வைஸ் என்று ஆரம்பிக்கும் வகுப்பானது நாளுக்கு நான்கு நிமிடம் என்று கூடுமே தவிர குறையாது.


ஆனால் அதை கேட்கத் தான் மதுஸ்ரீ தயாராக இல்லை.


அவளுக்கு தெரியும்.. வரும் ஆடி மாதம் அமாவாசை திதிக்குள், ஆதிரன் தன்னையும் தன் காதலையும் உணரவில்லை என்றால், அனைத்தும் சர்வ நாசம் ஆகிவிடும் என்பது.


அதற்குள் அவனுக்கு அவனை யார் என்று அவள் உணர்த்தி விடவேண்டும். என்பதிலேயே அவள் கவனம் முழுவதும் இருந்தது.
 
Top