• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

23. தத்தித் தாவுது மனசு.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
அவன் தொடுகையில்
சட்டென உயிர்பித்தவள் போல உடலை உளுக்கி, நிஜ உலகிற்கு வந்தவள், எதிரில் மண்டியிட்டு இருப்பவனைக் கண்டதும் ஒரு நொடி தான் அதிர்ந்தாள்.

மறு நொடி அவனது கையினை உதறி எறிந்து விட்டு எழுந்து, விலகி நின்றவளுக்கு என்ன தோன்றியதோ..


பேசா மடந்தையாகி வேகமாக தன் அறை நோக்கி நடந்தாள்.


தன்னை கண்டு கொள்ளாத மைலியின் செயல் ஏமாற்றத்தை தந்தாலும்,

"தாரை..." என்றழைத்தான்.

அவனது அழைப்பில் நடையினை நிறுத்தி திரும்பி பார்த்தவள்,

"இப்போ உனக்கு என்ன வேணும்?" என திடமாக நெஞ்சை நிமிர்த்திக்கேட்டவள்,
மறுநொடியே அது வடிந்து போனவளாய், உடலை தளர்த்தியவள், கண்கள் கலங்க..


"எதுக்கு என்னை டார்சர் பண்ற....? ஏற்கனவே அடிக்கு மேல அடிவாங்கி முடியாமல் இருக்கேன்... நீயும் என்ன பழிவாங்கிறேன்னு பின்னாடியே திரியாத... யாரையும் எதிர்த்து போராட என் மனசுக்கு சுத்தமா தைரியமில்ல...

இப்போ என்ன.....?
உன்னை பொறுக்கினு சொன்னது என் தப்பு தான்.
உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுக்கிறேன். இதுக்கப்புறமாவது என்னை நிம்மதியா இருக்கவிடு!" என இயலாமையில் உடைந்த குரலில் கூறியவள், அவனிடம் தோற்றுப்போன உணர்வோடு தன் அறை நோக்கி நடந்தாள்.

இத்தனை நாள் எதிர்த்து நின்றவளைக்கூட ஏற்ற அவன் மனம், இன்று பணிந்து போவதை ஏனோ ஏற்க மறுத்தது.



அவள் நடையின் வேகத்திற்கு, தானும் பின்னே சென்றவன்,

"நான் சொல்லுறதை கேளு தாரை...." என்றவனது பேச்சை காதிலும் வாங்காது சென்றவள் கருத்தில் தரையில் சிந்தியிருந்த எண்ணெய் விழவில்லை.

அதில் அவள் காலை வைத்து விட்டாள்.
சும்மாவே வழுக்கும் தரை.. எண்ணெய் கொட்டினால் சொல்லவா வேண்டும்?

பின்புறம் பிடரி அடிபட விழப்போனவளை வேகமாக ஓடிவந்து தாங்கிப்பிடித்தவன், சட்டை காலரை இறுகப்பற்றி கண்களை முடிக்கொண்டவள் உதடுகளோ,


இதழ்களில் ரேகைகளை எண்ணும் அளவிற்கு குவித்து, பற்களோடு அழுத்திக்கொண்டவள் இதழ்கள் நடுக்தத்தில் துடித்தது.

ஒற்றை கையினில் அவளது மொத்த உடலையும் தாங்கி, கைகளில் தவளும் பூக்குவியலை அதே நிலையில் ரசித்து நின்றான்.


பதட்டத்தில் துடித்த அந்த உதட்டின் ஓரம் அவன் உண்டாக்கிய காயம், சற்று வீக்கம் குறைந்திருந்தது. அவளது இதயத்துடிப்பை பறை சாற்றும் விதமாய், வேகவேகமாக சுவாசிப்பது அவளது நாசி நுணியின் அசைவினில் புரிந்து கொண்டவன் இதழ்கள் புன்னகையாய் விரிந்தது.



கிடைக்கும் சிறு நிமிடத்தில் தான் அவளை ரசிக்கின்றான். அதை கூட பொறுக்க முடியாது, அவளது முடியானது முகத்தில் திரையிட்டது.


தன்னவள் வதனம் தீண்டி,
அவள் முகத்தின் அழகினை மறைத்திருந்த முடிக்கற்றையினை, உதட்டினை குவித்து மிருதுவாக ஊதிவிட்டான்.

அது அவனது சொல்லுக்கு கட்டுண்டு ஓராமாய் விலகிக்கொண்டது. உதட்டில் இருந்த காயத்திற்கும் மருந்திட நினைத்தவனாய், அதற்கும் தன் உதட்டினை குவித்து மென்மையாக ஊதியவனது
சுவாசத்தின் பரிசம் பட்டதும் உடல் சிலிர்த்தாள்.


அச்சத்தினை விடுத்து, மெதுவாக விழிக் குடையினை விரித்தவள் பார்வையில் விழுந்தது, அவளை தாங்கிப்பிடித்து தன்னையே ஆராய்ச்சியாய் நோக்கியவன் காந்த விழிகள்.

அதில் என்ன கண்டாளோ!
மான் விழியவளை கூட மையல் கொள்ளச்செய்யும், காம அம்புகள் களைந்து, காதல் கணைகளில் ஈர்க்கப்பட்டும் பார்வையில் தன்னிலை மறந்தவள், அவனது விழிகளிலேயே, தொலைத்ததை எதையோ தேடும் வேட்கை.
மாறி மாறி அவன் விழிகளையே தன் விழிகளினால் அகழ்வாராய்ச்சி நடத்தினாள்.

யார் சொன்னது ஒத்த முணைகள் இரண்டும் ஒட்டிக் ஒட்டிக்கொள்ளாது என்று?

இங்கு ஒட்டிக்கொள்கிறதே! அவன் விழி என்னும் காந்தம் கொண்டு, அவள் விழிகளுக்குள் கலக்கும் போது, காந்தத்திற்கு நிகரான ஈர்ப்பை இருவராலும் உணர முடிகிறதே!


மேகமும் மேகமும் உரசிக்கொண்டால் மின்சாரம் தெறிக்குமாம். அதே போல் தேகமும் தேகமும் உரசிக்கொண்டதனால் தான் காதலும் பிறககுமோ..?

இரண்டுமே தாக்கிவிட்டால் உயிர் பருகும் வரை அதன் தாகம் தீராது.

விழிவழி உயிர் உறுஞ்சி, இதயம் இரண்டினையும் பரி மாற்றிக்கொள்ளும் வித்தையில் இருவரும் சிலநிமிடங்கள் லயித்திருக்க,

கிச்சனில் இருந்து வந்த பீங்கான் நொருங்கும் சத்தம் உணர்ந்து, முதலில் நடப்பிற்கு வந்தவள் மைலி தான்.


தான் என்நிலையில் யார் கையில் அகப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து , சட்டென அவன் சட்டையை பற்றியிருந்த கைகளை விடுத்தவள், தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, அவன் கைகளிலிருந்து விலகினாள்.


பேசத்துடித்த இதழ்களை கட்டிப்போட்டு, அருகில் இருந்த அறைப்பக்கம் ஓடி மறைந்தவள் மனதிலோ எதையோ ஒன்றை அவ்விடம் விட்டுச்செல்லும் உணர்வு.


அது என்னவென்று அவளாள் புரிந்து கொள்ள முடியவில்லை.

தன்னையே திரும்பி பார்த்தவாறு ஓடுபவளை ரசித்திருந்தவனுக்கு, மெல்லிய தென்றல் காற்று தன்னை தழுவிச்சென்றதாகவே உணர்ந்தான்.

அவள் விழிகள் வருடிய சந்தேஷத்தில் பசியினை மறந்து, தன் அறையினை நாடிச்சென்றான்.

அறை புகுந்தவள் இதயமோ பலத்தவாறு தன் துடிப்பை அதிகரித்திருந்தது.
பதட்டத்தை குறைப்பதற்காக இதயக் கூட்டினை இரு கைகளாலும் அழுத்திப்பிடித்தவளுக்கு,
எதற்காக இந்தப் பதட்டம் என்பது மட்டும் புரியவில்லை.




'அவன் பார்வையில் அப்படி என்ன இருந்தது? எதற்காக அந்த பார்வையில் சித்தம் கலங்கித் தடுமாறிப்போனேன்?

இதுவரை ஓர் ஆணின் பரிஸ்சத்தில் உடல் கூசுபவள், இன்று எப்படி அத்தனை நேரம் அவன் கையனைப்பில் நின்றேன்.' என அதே சிந்தனையில் உலன்றவளுக்கு,
அவனது பார்வையின் பொருளும் விளங்கவில்லை.


உயிர் வரை சென்று தன்னை அவள் உயிரில் கலந்துவிடும் வீரியம் தான் அந்தப் பார்வையில் இருந்ததே தவிர, துளிக்கும் காமம் இல்லை. என புரிந்தவள், ஒரு நிமிடம் அவனைப்பற்றிய சிந்தையில் தடுமாறித்தான் போனாள்.


அது தவறென மூளையானது அவளது தடுமாற்றத்தினை எடுத்துரைக்க, இமைகளை மூடித்திறந்து நடப்பிற்கு வந்தவள்,



'ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிற? இது நல்லதில்ல மைலி.... ஸ்ரீ நல்லவனே இல்லை..
கண்ணால அவனோட செயலை பார்த்துமா உன் புத்தி இப்படிப்போகுது?

அவன் பார்வைக்கே மயங்கிப்போயிட்டியே...! உன்னையே நினைச்சிருக்கிற உன் அத்தான் நிலமையை யோசிச்சியா..? அவனை விட இவன் உயர்ந்தவன் கிடையாது. மனச அலைபாய விடாத...


மைலி எப்பவுமே தீ தான்.
உன் பலவீனம் தெரிந்து தான், இந்த மாதிரி நடந்துக்கிறான்.
இது கூட உன்னை தன் வலையில விழ வைக்கிற யுத்தி தான்." என்று எச்சரித்தது.

தலையை சிலுப்பி தன்னை மீட்டவள்.


"இல்லை... என் மனசில அத்தானை தவிர யாரும் இல்லை.... அப்படி இருக்கிறப்போ எப்படி ஸ்ரீயால உள்ள வரமுடியும்..? அவனைப்பற்றி நல்லா தெரிச்ச நானே.... வாய்பே இல்லை." என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டவளுக்கு,

'தான் ஏன் அவன் பார்வையில் உருகி நின்றேன்....?

அந்தளவுக்கு நான் பலவீனமானவளா?' என்று மீண்டும் அதே இடத்தில் வந்து நின்றவள்,


'ச்சைய்....... என்னதிது திரும்பவும்' என மீண்டும் அங்கேயே போய் நின்ற மனதினை கடிவாளமிட்டு கட்டியவள்.



'என்ன செய்கிறோமோ இல்லையோ.... முடிஞ்சவரை இவனை தவிர்க்கிறது நல்லது.' என தனிமையில் பேசிக்கொண்டிருந்தாள்.



"மைலிம்மா!" என்ற குரல் அவள் பின்புறமிருந்து திடீர் என கேட்க.

பதறியடித்து திரும்பியவள் கட்டிலில் படுத்திருந்த விஜயாவினை கண்டதும், அறையினை அப்போது தான் ஆராய்ந்தாள்.



ஸ்ரீயின் பிடியில் இருந்து விலகியவள், தடுமாறிய தன் மனதினை மறைக்க, அருகில் இருந்த அறையில் புகுந்து கதவடைத்தவள், விஜயா கட்டிலில் தூங்கிக்கொண்டிருப்பதை கவனிக்கவில்லை.



"என்னடிம்மா... இந்த முழி முழிக்கிற? ஆமா சுவத்துக்கிட்ட அவ்ளோ நேரம் என்ன பேசுற.? " என்றார்.


எங்கே தன் புலம்பல் புரிந்திருக்குமாே...! என நினைத்தவளாய்,


"அது.... சும்மா பொழுது போகல்ல.. பேச்சு துணைக்கு யாருமில்லையா... அதனால தான் சுவத்துக்கூட...." என்று இளித்தவாறு சமாளித்தவளை பார்த்து வாய்விட்டே சிரித்த விஜயா.

"இங்க வா....! கையோட அந்த சேரையும் எடுத்துட்டு வா..." என்றார்.



உள்ளே தன் புலம்பலை கேட்டிருப்பாரோ என்ற பதட்டம் இருந்தாலும், சேரை கட்டிலின் அருகில் போட்டு அமர்ந்து கொண்டவள்.

"நான் பேசினது ஏதாவது கேட்டிச்சாம்மா...?" என்றாள்.


உதட்டை பிதுக்கி இல்லை என்பதாக விஜயா தலையசைத்ததும் தான், மைலி நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.


"அப்போ உங்க தூக்கத்தை கெடுத்திட்டேனோ...?

"இல்லடா...
உனக்கு முடியல்லன்னா.. எனக்கும் முடியலன்னது போலதான்.
நீ இல்லன்னதும் பூரா தூங்கிட்டு தான் இருக்கேன்.


நீ இருந்தா தானே தொல்லை பண்ணுவ... இன்னைக்கு அப்படி இல்லல்ல..." என்றவரை பொய்யாக முறைத்தவள்,

"ஓ...!! எனக்கு உடம்பு சரியில்லனா.. உங்களுக்கு சந்தோஷமா? இருங்க இன்னைக்கு ஈவ்னிங்க் வைச்சு செய்றேன். " என்றதும் பெரிதாக நகைத்தவரோ..

"இப்போ தலைவலி... உதட்டு காயம் எல்லாம் பரவாயில்லையா..?" என்று அக்கறையோடு வினவ.

"ம்ம்... தலைவலி இல்ல... காயமும் பரவாயில்லை" என்றாள்.

"சரிடா! நீ ஏன் தூங்காம இங்க வந்து புலம்பிடாடிருந்த..? "



"அது .. அதும்மா"... என தடுமாறியவள்.

"இப்பல்லாம் பகல்ல தூக்கம் வருதில்ல.... எல்லாருமே தூங்கிடுவாங்களா? எனக்கு பேச்சுத் துணைக்கு யாருமில்ல... அதனால சும்மா இங்க வந்து இருப்பமேன்னு வந்தேன்.

நீங்க தூங்கிட்டிருந்திங்களா? அது தான் சுவத்துக்கூட பொழுது போகாமல் பேசினேன்." என்று தலையை சொறியா..

"இப்போ தான் பக்காவா இருக்கு... இந்த மாதிரிய தலையை சொறிஞ்சிட்டு சுவத்துக்கூட போய் பேசு" என்று சிரித்த விஜயாவின் கைமீது செல்லமாக தட்டியவள்.



"என்னை பாத்தா பைத்தியம் போல இருக்கா? நீங்க தூங்கினா.. நான் என்ன செய்யிறதாம். ஊரில இருந்தாலாவது, தேனு வீட்டுக்கு போயிடுவேன். இங்க இந்த வீட்டு சுவருங்கள விட்டா.. எனக்கு யாரு இருக்காங்க?"



"பாத்தா தெரியல்லடி.. பேசினால் தெரியுதே." என்று வம்பிழுத்தவர்,

"ஏன்மா உண்மைக்கு உனக்கு பொழுது போகலையா?" என்றார்.


"ம்...." என மேலும் கீழுமாக அவள் தலையசைக்க.


"சரி.... நீ ஏ.லெவல் செய்திருக்கல்ல... மேல ஏன் படிக்கல."

"படிக்கலாம் தான்.... ஆனா எனக்கிருக்க பிரச்சனைக்கும், கஷ்டத்துக்கும் அதை நினைச்சுக்கூட பாக்க முடியாதும்மா... அப்பா இருக்குறப்பவே அந்த ஐடியா இல்ல...

ஏதாவது தையல் கத்துக்கிட்டு என் வாழ்க்கையை ஓட்டிடலாம்னு தான் நினைச்சேன். ஆனா இந்த கனகரட்ணம் பிரச்சினைக்கப்புறம் எல்லாம் தலைகிழா மாறிடிச்சு." என்றாள் சேர்வாக.



"சரி அதை விடு! இப்போ ஏதாவது வேலை தேடிக்கிறமாதிரி படிக்கலாமே மைலி!

இந்த கம்ப்பியூட்டர், ஜீ.ஐ.கியூ, பியூட்டிஷன் அப்பிடினு வெளிவாரியா படிச்சு சர்டிபிக்கட் வைச்சிருந்தாக்கூட வருங்காலத்தில சொந்தக்கால்ல நிக்க உதவியா இருக்கும்மா"



"அதுக்கு ரொம்ப செலவாகும்மா... இப்போ எனக்கு அந்த கனகரட்ணம் தொல்லைய முடிக்கணும். என் தங்கையை படிக்க வைக்கணும். அப்பாக்கு அடுத்தபடியா... குடும்பப் பொறுப்ப நான் தான் பார்த்துக்கணும். நானும் படிப்புன்னு இருந்துட்டா நிலமை...?

ஒரு ரூபா கூட இப்போ எனக்கு புதையல் தான். அதை பத்திரப்படுத்தினாலும் என் கடனை அடைக்க முடியுமோ தெரியல"


"உன் குடும்பத்தை கவனிச்சுக்கிறதும், கடனை அடைக்கிறதும் எவ்வளவு முக்கியமோ... அந்தளவுக்கு முக்கியம் உன் வருங்காலம்.


நாளைக்கு ஏதாவதுன்னா.. உன் கால்ல நிக்க தெரியணும்மா...
உன் பிரச்சினை என்ன..? பணமா..? படிக்கத்தானே நான் தறேன்."

"அதெல்லாம் வேண்டாம்மா... உங்கள பார்த்துக்க வந்துட்டு.. படிப்புன்னு கிளம்பிட்டா.. அப்புறம் யாரு உங்கள கவனிச்சுப்பா?

அப்படி வாங்கிற காசுதான் நிலைக்குமா..? அதெல்லாம் சரி வராதும்மா..." என்று மறுத்தவளை முறைத்தவர்.



"ஓ...! அந்த ஆசை வேற இருக்கா? எங்களுக்கு அந்தளவுக்கு பெரிய மனசு ஒன்னும் கிடையாது.. சும்மா இருக்கிறவளுக்கு சம்பளமும் தந்து படிக்க வைக்க" என்றவர்,



"நாள் முழுக்க ஒன்னும் நீ படிக்க வேண்டாம்.. ரெண்டு மணிநேரம் படிச்சா போதும்.
இப்போ யாருக்கு வேலை தராங்களோ இல்லையோ! இந்த கம்பியூட்டர் வந்ததுக்கப்புறம், அது தெரிஞ்சவங்களுக்கு தான் வேலை.



நீ அதையே படி!
நம்ம வீட்டுக்கு தெரு முன்னாடி ஒரு கம்ப்பியூட்டர் சென்டர் இருக்கு. அங்க உன்னை சேர்த்து விடுறேன்.

நீ விரும்பின நேரத்துக்கு போய் படிச்சுக்கலாம். மதியம் நாங்க தூங்குற நேரம் சுவத்துக்கூட பேசாம.. அந்த கம்பியூட்டர் கூட பேசு.
பிரியோசனமாவது இருக்கும்.


அத்தை கிட்ட இதைபத்தி இன்னைக்கே பேசுறேன்... நாளையில இருந்து போ மைலி." என்றார்.



பாதி மனதுடனே தலையசைத்தவள்.

"எழுந்துக்க இன்னும் நேரமிருக்கு.. கொஞ்ச நேரம் தூங்குங்க."


"அப்போ நீ்....?" என்ற விஜயாவிடம்.

"நானும் கொஞ்சம் தூங்கணும்.. தள்ளி படுங்க" என்று உரிமையோடு விஜயாவை விலகிப் படுக்க வைத்து, தானும் அவளை நெருங்கி படுத்துக் காெண்டாள்.

விஜயாவிற்கு இது எல்லாமே புது அனுபவங்கள்.

அவருக்கும் மைலி உரிமையாக பழகுவது பிடித்திருந்தது.

ஸ்ரீயின் ஏழு வயதின் பின்னர் விஜயா பிள்ளையின் பரிஸ்சத்தை உணரவில்லை.


நடக்கமுடியாது காயப்பட்டவள் அருகில் சென்றால், விபரம் அறியாது ஸ்ரீ தாங்கி விடுவானாே என்று, ஈஸ்வரி தான் விஜயா அருகில் அவனை விடுவதில்லை.


அவளை ஸ்ரீ பார்க்க விரும்பினால் தன்னோடே அழைத்துச் செல்பவர், கையாடே அழைத்து கொண்டு போயும் விடுவர்.


பல வருடங்கள் கழிந்து, அந்த பரிஸ்ஷத்தினை இன்று மைலி தன்னிடம் ஆறுதல் தேடிய நொடியில் இருந்து உணர்கிறாள்.

கன்றுக் குட்டியானது தனக்கு ஆபத்து நேரும் போது, தாயிடம் அடைக்கலம் தேடுவதைப்போல தான் மைலியும், யார் எவர் என்ற பாகுபாடின்றி விஜயாவின் ஆதரவை நாடினாள்.


இப்போது கூட ஒரு வார்த்தைக்கு நான் உங்களுடன் தூங்கவா? என்ற கேள்வியின்று, அவள் பதிலையும் எதிர்பாராது ஒட்டிக் கொண்டு படுத்தவளை தாயின் மன நிலையுடன் தடுக்கும் எண்ணமின்றி,
தானும் அவளை அணைத்தவாறே தூங்கியும் போனாள்.



தன் அணைப்பில் இருந்து விலகியவள் தடுமாற்றத்தினை, சிந்தித்து தனக்குள்ளேயே சிலிர்த்தவனுக்கு, அலுவலக நினைவும் கூடவே வந்தது.


சாப்பிடுவதற்காக வந்து விட்டு இத்தனை நேரம் மைலி நினைவில் கரைத்திருக்கிறோமே! என நினைத்தவனாய், வேகமாக ஷோபாபில் இருந்து எழுந்து கொண்டவன், அறையிலிருந்து வெளியே வந்தான்.


ஹால் தரையினை தெய்வானை துடைப்பதை கண்டவனாய்..
அவள் அருகில் சென்றவன்.




"இந்த நேரம் எதுக்குக்கா தரையை துடைச்சிட்டிருக்கிங்க?"



அவன் கேள்வியில் நிமிர்ந்து அவனைப் பார்த்தவளுக்கு, இதுவரை இல்லாத ஆச்சரியம் கூடிப்போக, புருவத்தை விரித்து அவனை நோக்கியவள்.



"என்ன தம்பி...! இந்த நேரத்தில...? " என அப்பட்டமாக முகத்தில் ஆச்சரியத்தை காட்டி வினவ.


அந்த கேள்வியினை தெய்வானையிடம் இருந்து எதிர் பாராதவனோ...


"அது... அதுக்கா... இந்த பக்கமா ஒரு வேலையா வந்தேன்.. அதனால தான்...

ஆமா நான் வர்றப்போ நீங்க இல்லையே! எங்க போனிங்க?" என்றான் பேச்சினை மாற்றும் பொருட்டு.


"சாப்பிட்டதும் கொஞ்சம் அசதியா இருந்திச்சு தம்பி! அதனால தூங்க போயிட்டேன்."

"ஓ...! சாரி சரி. எல்லாரும் சாப்பிட்டாங்களாக்கா...? " என்று அந்த எல்லோரும் என்ற வார்த்தையில் அழுத்தத்தை கூட்டி கேட்டான்.


"ஆமா எல்லாருமே சாப்பிட்டோமே.. நீங்க சாப்பிட்டாச்சா தம்பி.? நான் வேணும்னா எடுத்து வைக்காவா?" என்றாள்.


பசியாக இருந்தாலும்.. இத்தனை நேரம் ஏன் சாப்பிடவில்லை என்ற கேள்வி வந்தால், பதில் சொல்லத் தெரியாது முழிப்பதை காட்டிலும், சாப்பிட்டேன் என்றே சொல்வோம். என அவசரமாக தனக்குள் சொல்லிக்கொண்டவன்.



" சாப்பிட்டேன்க்கா! ஆனா நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வே இல்லையே"




'சொல்லலையா..?' என தெய்வானை முழிக்க


"அட.. இந்த நேரம் எதுக்கு தரையை துடைக்கிறீங்கன்னு கேட்டேன்க்கா?
காலையில தானே இந்த வேலை எல்லாம் செய்வீங்க? இப்போ இதை துடைக்க என்ன அவசியம் வந்திச்சு?" என்றான்.

"ஓ.... அதுவா தம்பி?

பெரியம்மா கால் ரொம்ப வலிக்குதுனு சொன்னாங்க. அதுதான் சாப்பிட்டதுக்கு அப்புறம், மஞ்சள் போட்டு எண்ணெய் காய்ச்சி ஒரு சின்ன கின்னத்தில அம்மா காலை உருவிவிட எடுத்துட்டுப்போனேன்.


கால் இடுங்கி எண்ணெய் தரையில சிந்தியிருக்கு நான் கவனிக்கல... இப்போ தான் கவனிச்சேன். நல்ல வேளை பெரியவங்க யாரும் மிதிக்க முன்னாடி கண்டேன்.
இல்லனா என்னவாகியிருக்கும்? " என்றாள்.


"ஓ...." என்றவனுக்கு இப்போது தான் புரிந்தது.

மைலி வழுக்கியதற்கு இந்த எண்ணெய் தான் காரணம் என்று நினைத்தவன் சிந்தையில், மைலியை காணும் ஆவல் எழ,

"நீங்க மட்டும் ஏன் எல்லா வேலையும் செய்றீங்க? புதுசா வந்த அந்த பொண்ணுகிட்டையும் உங்க வேலையில பிரிச்சு குடுக்க வேண்டியது தானே!" என்றான் எதையோ அறியும் நோக்கத்தோடு.



"ஐய்யோ தம்பி ...! அவளும் தான் எல்லாம் செய்வா... இன்னைக்கு தலைவலினு சாப்பிட்டு தன்னோட ரூம்ல படுத்திருக்கிறவள எப்பிடி தம்பி வேலை செய்ய சொல்ல முடியும்?

இதெல்லாம் பெரிய வேலையா என்ன? நானே பார்த்துக்கிறேன்." என்று சங்கடமாக கூறியவளிடம்.

"சரிக்கா உங்க இஷ்டம்.! அம்மா எழுந்துட்டாங்களாக்கா?"


"இந்தநேரம் எழுந்திருப்பாங்க.. மைலி தூங்கிட்டிருக்கிறதனால அவங்கள ஹாேலுக்கு அழைச்சிட்டு வரல்ல.. என் வேலைய முடிச்சிட்டு அழைச்சிட்டு வருவோம்னு பார்க்கிறேன்.
அம்மாவை பாக்கணும்னா. போய் பாருங்க தம்பி." என்றவள், மைலி தன் அறையில் தான் தூங்குகிறாள் என நினைத்து.

"சரிக்கா..... நான் பாத்துக்கிறேன்." என்று. விஜயா அறைக் கதவினை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றவன் அங்கு கண்ட காட்சியில் அதிர்ந்தே விட்டான்.




தாவும்........
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,971
என்ன ஆச்சு விஜயா தூங்குற மைலிக்கு எதுவும் சேவகம் செய்றாங்களோ அத பார்த்துதான் ஸ்ரீ ஷாக் ஆகி நிக்கிறானோ 😍😍😍😍😍😍
 

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
என்ன ஆச்சு விஜயா தூங்குற மைலிக்கு எதுவும் சேவகம் செய்றாங்களோ அத பார்த்துதான் ஸ்ரீ ஷாக் ஆகி நிக்கிறானோ 😍😍😍😍😍😍
ஆமா ஆமா
 
Top