• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

24. அம்புத நல்லாள்

Sahana Harish

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
49
அலைபேசி அழைப்பில் கதிர் என்ன சொன்னானோ தெரியாது ஆனால் ஏதோ பிரச்சனை என்பதை மட்டும் யூகித்துக் கொண்ட பிரதி அவசர அவசரமாக அம்புத்ரா பின்னால் ஓடினான்.. அந்தி சாயும் நேரமானதால் ஹோட்டலில் நடமாட்டம் மிகக் குறைவாகவே இருந்தது.. அது இவர்களின் ஓட்டத்தைத் தடைச் செய்யவில்லை.

என்ன தான் வேகமாக ஓடினாலும் அம்புத்ராவின் மின்னல் வேகத்தை பிரதியுமனால் பிடிக்க முடியவில்லை.. தன்னால் முடிந்த அளவிற்கு வேகமாகவே ஓடினான்..

ஓடிக் கொண்டிருந்த அம்புத்ரா அலைபேசியில் பேசிக் கொண்டு செல்வது தெரிய இவனுக்கு மேலும் குழப்பமாயிற்று.

"என்ன பண்றா இவ? என்ன பிரச்சனைன்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே பெரிய இவ எல்லாம் தனியா ஹாண்டில் பண்ணலாம்னு நினைப்பு.. இல்ல இல்ல அசிஸ்டெண்ட் கமிஷனர்னு தைரியம்.. இவளுக்கு எதாவதுன்னா நான் என்ன செய்றது" தன்னையும் அறியாமல் அவனின் காதல் வார்த்தைகளில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

இதை உணர்ந்தாலோ என்னவோ ஒரு நொடி திரும்பி இவன் பின்னால் ஓடி வருவதைப் பார்த்தவள் தன் பின்னால் வராதே என்பதைப் போல் செய்கை செய்து மறுபடியம் புயலேன ஒட ஆரம்பித்தாள்.

அவனுக்கோ அவள் சொல்வதை கேட்பதில் துளியும் ஆர்வமில்லை தொடர்ந்து ஓடினான்.. சில நிமிடங்கள் ஓடிய பிறகு அவள் நின்ற இடம் ஓட்டல் வெளிப்புறம்.. அங்கே கதிர் மற்றும் மைத்ரேயன் நின்றிருந்தனர்.

அவர்கள் இருவரையும் இவள் சரமாரியாக திட்டிக் கொண்டிருப்பது புரிய அவர்களிடம் சென்றான்.

இவன் வருவதைப் பாரத்தவர்கள் திடீரென அமைதியாகவும் இவனுக்கு நிலைமை சரியில்லை என தெள்ளத் தெளிவாக புரிந்தது.

"ஏய் மைத்து என்னடா என்ன ஆச்சு? ஏன் உங்க யார் முகமும் சரியில்லாம இருக்கு? உனக்கு ஏதாவது பிரச்சனையா? ஏதோ வேலையின்னு போனீயே அங்க?" என்றவன் அவனை தலை முதல் கால் வரை ஆராய ஆரம்பித்தான்.. அவனுக்கு ஒன்றுமில்லை என விளங்க அடுத்து கதிரை பார்த்தான் அவனும் நன்றாகவே இருந்தான்.

அம்புத்ரா தன் எதிரே ஓடி வந்ததால் அவளுக்கும் எதுவும் இல்லை என தெரிய மீதம் இருப்பது நிர்குணா! அட அவள் எங்கே? என கேள்வி எழும்ப "மைத்து நிர்குணா எங்க?"

இவன் கேட்ட அடுத்த நொடி "பிரதி நிர்குணாவ காணும்டா எங்க போனானேன்னே தெரியல, மொபைல் சுவிட்ச் ஆப்ன்னு வருது.. தேவையில்லாம அவளை இங்க கூட்டிட்டு வந்து மாட்ட வச்சிட்டேன்னு தோணுதுடா" எனக் கிட்டதட்ட அழும் நிலையில் இருந்தான் மைத்ரேயன்.

இதைக் கேட்ட அவனுக்கு எப்படி இருந்திருக்கும்? தன் தங்கையை போலவே அவளைப் பாவித்தவனுக்கு தெரியாத ஊரில் அதும் தீவிரவாத கும்பலைத் தேடி வந்த இடத்தில் காணாமல் போனால் என்னவென்று நினைப்பது? பிரதியுமனுக்கு பூமியே சுற்றுவது போல தோன்றியது.

நிர்குணா வெளியே போனது என்னவோ சில மணி நேரம் முன்பு என ஹோட்டல் சிசிடிவியில் தெளிவாக தெரிய, புதிதாக வந்த இடத்தில் அவள் தனியாக சென்று இவ்வளவு மணி நேரமாகியும் திரும்பி வராதது கிலியை கிளம்பியது.

கதிரும் மற்றவர்களும் பதட்டமாக தேடி செல்ல நினைத்தவர்களை தடுத்தாள் அம்புத்ரா.

"ஏய் எதுக்காக இப்ப எங்கள தடுக்குற?காணாம போனது உன்னோட பிரண்ட் அதாவது நியாபகம் இருக்கா? எங்களுக்கு இருக்க படப்படப்பு கொஞ்சமாவது உனக்கு இருக்கா? பொரிந்து தள்ளினான் பிரதியுமன்.

" பிரதி அமைதியா இரு.. அவள யோசிக்க விடு" வேறு யார் மைத்ரேயன் தான்.

பிரதியுமனிடம் எந்த பதிலையும் உதிர்க்காதவள் மைத்ரேயனிடம் "தாங்க்ஸ்" என்றவள் கதிரிடம் "கதிர் எனக்கு தெரிஞ்சி நிர்குணா எங்கையாவது ஷாப்பிங் போயி இருக்கணும் பிகாஸ் அவளுக்கு எதாவது ஆபத்துன்னா எனக்குள்ள தோணுற இன்டியூஷன் உணர்த்தி இருக்கும்.. லேட்ஸ் வெயிட் பார் சம் டைம்" என அமைதியாக சொல்லவும்

"பிளடி இன்டியூஷன்.. ஹாவ் யூ லாஸ்ட் யூவர் மைண்ட்? அசிஸ்டெண்ட் கமிஷனர் தானே நீ? என்னவோ சாமியார் மாதிரி பேசுற?"

" மைத்ரேயன் அவர அமைதியா இருக்க சொல்லுங்க.. எங்க மேடம் எதுவும் யோசிக்காம செய்ய மாட்டாங்க அண்ட் அவங்களோட இன்ஸ்டிங் பெயில் ஆனதே இல்ல" கதிர் அம்புத்ராவிற்காக பேசினான்.

எவ்வளவு சொல்லியும் கேளாமல் மைத்ரேயனையும் உடன் அழைத்துக் கொண்டு அவளைத் தேட புறப்பட்ட அந்த நேரத்தில் கை நிறைய பைகளுடன் கால் டாக்சியில் ஒய்யாரமாக வந்திறங்கினாள் நிர்குணா.

அவளைக் கண்ட மைத்ரேயன் ஓடிச் சென்று கட்டி அணைத்துக் கொண்டான்.. தாயைத் தொலைத்து பிள்ளையின் உணர்வுகளே அவனிடமிருந்தது..

அவளுக்கோ எதுவும் புரியாத நிலை.. அவனின் அந்த உணர்வுகளை எப்படி எதிர்க் கொள்வது எனப் புரியாமல் இவள் நிற்க, நிர்குணா அருகில் வந்த பிரதியுமன் மைத்ரேயனை அவளிடமிருந்து விலக்கினான்..

"நிர்குணா உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? எங்க போன நீ? தெரியாத ஊர்ல உன்னை காணாம எங்க போய் தேடுறது? அதுவும் இந்த மாதிரி இக்கட்டான வேலைக்கு வந்து இருக்கும் போது.."என அவன் பேசி முடிக்க கூட இல்லை அதற்குள் அவனை கைப்பற்றி தடுத்திருந்தாள் அம்புத்ரா.

பிரதியுமன் என்னச் சொல்கிறான் என அவள் யோசிக்க நேரம் கூடக் கொடுக்கவில்லை அதற்குள் அம்புத்ரா" அது ஒன்னும் இல்ல நிர்குணா புது இடம் இல்லையா அதுவும் நீ எங்க யார் கிட்டயும் சொல்லாம வெளியே போயிட்ட அதான் இவங்க எல்லாம் கொஞ்சம் பயந்துட்டாங்க அவ்வளவு தான்"

அம்புத்ராவின் வார்த்தையில் தெளிந்தவள் "அட இதுக்கா இவ்வளவு ஆர்பாட்டம்.. எனக்கு இந்த இடம் புதுசு இல்ல பிரதி அண்ணா ஏற்கனவே இங்க டிரெயினிங்காக வந்து இருக்கேன்.. இங்க என்னோட பிரண்ட் பக்கத்துல இருக்க ஹாஸ்பிடல வொர்க் பண்ணிட்டு இருக்கா சோ அவளப் பார்க்க போனேன்.. அவ ஷாப்பிங் போகலாம்னு சொன்னதும் உங்க யார்காவது இன்பார்ம் பண்ண நினைச்சேன் பட் என்னோட மொபைல் ஸ்விட்ச் ஆப் ஆகி போச்சி.. சாரி" என்றவளை என்ன சொல்வது எனத் தெரியாமல் பிரதியுமனும் கதிரும் நகர இவர்கள் மூவரும் மட்டும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கொண்டு நின்றிருந்தனர்.

முதலில் பேச்சை துவங்கியது மைத்ரேயன் தான்" குணா நீ போகும் போது என்கிட்டயாவது சொல்லிட்டு போயிருக்கலாம்ல?" ஆதங்கமே அவனிடமிருந்து வெளிப்பட்டது.

"இல்ல ரேயன் நான் உங்கிட்ட சொல்ல தான் நினைச்சேன் பட் உங்க மொபைல் ரீச் ஆகல அதுவும் இல்லாம நீங்க எல்லாம் ஏதோ முக்கியமா பேசிட்டு இருந்த மாதிரி தோணிச்சு சோ அப்பறம் சொல்லிக்கலாம்னு கிளம்பிட்டேன்"

" பட் ஒரு டெக்ஸ்ட் பண்ணி இருக்கலாம் குணா.. நீ காணாம போயிட்ட நான் எதுக்கும் லாயக்கு இல்லன்னு ஒருத்தர் என்னை வசைப்பாட ஆரம்பிச்சிட்டார்" அம்புத்ரா சொல்லியிருந்தாள்.

" அம்மு என்ன இது உனக்கு கூடவா பயம்? நம்பவே முடியலையே!" கேள்வியாய் நிறுத்தினாள் நிர்குணா.

அவளோ" எஸ் எனக்கு தெரியும் ஆனா இவ பெரிய ஜேம்ஸ் பாண்ட், உனக்கு எதாவது ஆகி இருந்தா மைத்துக்கு யார் பதில் சொல்றது?"

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த மைத்ரேயனுக்கு எதுவுமே விளங்கவில்லை" ஏய் ஸ்டாப் என்ன நடக்குது இங்க? நீ எங்க போன? அவ போன இடம் உனக்கு தெரியுமா?" என இருவரையும் பார்த்து கேட்டான்.

அதற்கு சின்ன சிரிப்பை பதிலாக அளித்த அம்புத்ரா" கொஞ்ச நேரம் வரை தெரியாது மைத்து"

"அப்படின்னா"

"அதாவது நான் எங்க போனேன்னு கொஞ்சம் நேரம் முன்ன தான் அம்முக்கு கூட தெரியும்னு அர்த்தம்" என்றாள் நிர்குணா.

" குணா விளையாடாத யாராவது ஒருத்தர் ஒழுங்கா பதில் சொல்லுங்க" எரிச்சலுடன் சொன்னான் அவன்.

"சரி சரி.. சொல்றேன், நீங்க எல்லாம் உள்ள பேசிட்டு இருந்தீங்க இல்லையா அப்ப பர்தா போட்ட ஒரு ஆள் ரூம் வாசல்ல நிற்குறத பார்த்தேன்.. அம்மு தான் வெளியே வந்து இருக்கா போலன்னு கிட்ட போய் நீ எப்ப வெளியே வந்தன்னு கேட்டேன்.. அவ்வளவு தான் நான் இல்லன்னு நான் இல்லன்னு ஓட ஆரம்பிச்சான் ஒரு நோஞ்சான்..

"அப்பறம்" கண்கள் விரிய கேட்டான் மைத்து.

அவ ஓடுறத பார்த்ததும் நானும் பின்னாடியே ஓடினேன்.. எவனோ ஒரு புண்ணியவான் ப்ளோர்ல தண்ணிய கொட்டி வச்சி இருந்தான்.. அதுல அவன் வழுக்கி விழ.. பின்னாடியே ஓடின நான்..

"நீ.. நீ.. சீக்கரம் சொல்லுடீ.. டென்ஷன் ஆகுது" வேறு யார் மைத்ரேயன் தான்.

விஷம சிரிப்பை உதிர்த்தவள், பின்னாடியே ஓடின நான்.. அவன, அவன் மேல

"அடியேய் சீக்கரம் சொல்லு..சஸ்பென்ஸ் வச்சி டென்ஷன் ஏத்தாத"

ஒன்னுமில்லை ரேயன் அவன் விழுந்ததும் அங்க இருந்த சோப்பு தண்ணிய எடுத்து அவன் முகத்துல கொட்டிடேன்.. அவன் சுதாரிக்கறத்துக்குள்ள நான் அடி வெளித்துட்டேன், அவன் ஓட ஆரம்பிச்சான், நானும் ஓடினேன்.. அங்க இன்னும் இரண்டு பேர் என்னை சூழந்துக்கிட்டாங்க..

அவங்க பேசுற பாஷை வேற மாதிரி இருந்தது.. பார்க்க டெரரிஸ்ட் போல இருந்தது.. அவங்க என்ன பேசுறாங்கனு தெரிஞ்சிக்க என்ன செய்யலாம்னு யோசிச்ச போது தான் என் கையில இருந்த ஸ்மார்ட் வாட்ச் ஞாபகம் வந்தது.. அதுல இருக்க ரெக்கார்டிங் பட்டன யாருக்கும் தெரியாம அழுத்தினேன்.. அண்ட் எமர்ஜென்சி மெசேஜ் ஒன்னு அம்முக்கு அனுப்பினேன்..அங்க எத்தனை பேர் இருக்காங்க, என்ன வச்சி இருக்காங்கனு மறக்காம அதுல சொன்னேன்

அதை வச்சி என்னை டிராக் பண்ணி அங்க 10 பெளன்சர்ஸ் அனுப்பி வச்சா.. அப்பறம் என்னை அவங்க காப்பாற்றி கொஞ்ச தூரத்துல இறக்கி விட்டுட்டு இவளுக்கு இன்பார்ம் பண்ணி இருப்பாங்க போல.. அதனால தான் மேடம் டென்ஷனே ஆகாம கூல்லா இருக்காங்க.. என நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

அவள் சொல்லி முடித்ததும் அம்புத்ராவைப் பார்த்தவன் "ஏன் அம்மு என்கிட்டயாவது சொல்லி இருக்கலாம் இல்லையா? எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா?"

சிரித்தவள் "யுமனுக்கே சொல்லல அப்பறம் உங்க கிட்ட மட்டும் சொல்லுவேனா?" அவள் சொன்ன பதிலில் அவன் தான் தனக்கு முக்கியம் என்பது போல் உரைத்தது அவனுக்கு புரியாமல் இருக்குமா?.

"அண்ட் குணா நீ இதுக்கு மேல இங்க இருக்கறது சேப் இல்ல.. சோ நைட் கிடைக்குற பிளைட்ல ஊருக்கு போ.." சொல்லி விட்டு அவள் தன் வேலை முடிந்தது என்பது போல் தனது அறையை நோக்கி நடக்க, மைத்ரேயன் நிலை தான் சொல்ல முடியாமல் இருந்தது.

"ஏய் என்ன இது இவ பாட்டுக்கு உன்னை ஊருக்கு கிளம்பு னு சொல்றா?"

அவள் பின்னாடியே நடந்தவர்கள் நிர்குணாவின் அறைக்கு வந்திருந்தனர்.. அவர்களின் தனிமையை கெடுக்க விரும்பாத அவளோ கதிரிடம் ஏதேனும் பிரச்னை என்றாள் கூப்பிடுமாறு சொல்லி விட்டு சென்றாள் தன்னவனை தேடி.

இவங்க இரண்டு பேரும் என்ன பேசுறாங்கனு பார்ப்போமா..

" அவ சொல்றத கேட்குறது தான் நமக்கு சேப் மைத்து.. உனக்கு தெரியாது அங்க இருந்தவங்கள பார்த்து நான் ரொம்ப பயந்து போயிட்டேன்.. பட் அவங்க எல்லாம் காசுக்காக சொல்றத செய்றவங்கனு அவங்க பேசுனத வச்சி புரிஞ்சிக்க முடிஞ்சது.. அதுவும் இல்லாம என்னை அம்மு ன்னு நினைச்சி கடத்தி இருக்காங்க போல.. அவன் ஓடினது நான் துரத்தினது எல்லாம் டிராப் ரேயன்"

" என்னது?"

" எஸ்.. ஐ அம் செண்ட் பர்சென்ட் ஷூயூர்..என்னை அவங்க இடத்துக்கு கூட்டிட்டு போய் யாருக்கோ வீடியோ கால் பண்ணி கேட்டாங்க அதுக்கு அங்க நான் இல்லன்னு சொன்னதும் என்னை என்ன செய்யறதுன்னு கேட்டாங்க.. எப்பவும் போல நம்ம இரகசித்திய தெரிஞ்சிக்கிட்டா அந்த பொண்ண கொன்னுடுன்னு இங்கிலீஷ்ல சொல்லிட்டு கட் பண்ணிட்டான்" என்றாள் தோளைக் குலுக்கியவாறு.

" எவ்வளவு கூலா சொல்ற?"

" நான் இங்க வந்த போது எதுக்காக வந்தேன்னு தெரியாது.. ஆனா இப்ப புரியுது.. ஏதோ ஒரு பெரிய காரியத்துக்காக அம்மு வந்து இருக்கா.. அதை நம்மளால முடிஞ்ச அளவு காப்பாற்ற பார்க்கணும் பட் இவ இங்க வந்து இருக்க விஷயம் நம்ம யாரனாலையோ தெரிஞ்சி இருக்கு போல.. அதனால வந்த பிரச்சனைகள் தான் இது.. எனக்கு அம்மு சொல்றத கேட்குறத தவிர வேற ஆப்ஷன் தெரியல.. நீங்க அவ கூடவே இருங்க, அவ தைரியசாலி தான் ஆனாலும் அவளுக்கு சின்ன காயம் பட்டாலும் என்னால தாங்க முடியாது" என முகத்தில் சோகம் பிரதிபலிக்க சொன்னவளை,

" ஏன் குணா உனக்கு என் மேல பாசமே இல்லையா?"

" என்ன ரேயன் இப்படி கேட்கறீங்க?"

" பின்ன அவ அசிஸ்டெண்ட் கமிஷனர், இந்த மாதிரி நிறைய சூழ்நிலைய பார்த்து இருப்பா, நிறைய அடிகளும் விழுந்து இருக்கும்.. ஆனா நான் அப்படியா? உனக்கே தெரியாதா?"

இவளோ புரியாமல் "என்ன ரேயன் இப்ப எதுக்காக இதெல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க?"

" அடியேய் புரிஞ்சி தான் பேசுறீயா? எனக்கு துணையே அவ தான்.. உன்கூட சேர்ந்து நீயும் ஊருக்கு போடான்னு ஒரு வார்த்தை சொன்னா போதும்.. அப்படியே பெரிய கும்மிடு போட்டுட்டு வந்துருவேன்"

" அது நடக்காது மைத்து"என அங்கு வந்து நின்றாள் அம்புத்ரா.

அவளை முறைத்தவன்" அம்மு நாங்க இரண்டு பேரும் பேசிட்டு இருக்கும் போது ஏன் உள்ள வந்த?"

" வாட் நீ என்னையே கேள்வி கேட்பீயா? நான் ஒரு போலீஸ் ஆபிசர்.. அதுவும் இல்லாம இவள என் பொறுப்புல அனுப்பி வச்சி இருக்காங்க"

" என்ன போலீஸ்ன்னா பயந்து நடுங்கனுமா? நான் பிரஸ்ல இருக்கேன்.."

"ஆமா மைத்து.. ஆனா அந்த பிரஸ் என் அப்பாவோடதுன்னு நீங்க மறந்துட்டு பேசறீங்களே"

'அடச்ச இதை வேற அப்ப அப்ப மறந்து போயிடுறேன்' என நினைத்தவன்" ஏன் உங்க அப்பா ஆபிஸ் விட்டா வேற யாரும் வேலை தர மாட்டாங்களா என்ன?"

" ஓ அப்படி சரி சரி" என்றாள் நிர்குணா பக்கம் திரும்பி" குணா இன்னும் இரண்டு மணி நேரத்துல உனக்கு பிளைட்.. நான் உன்னை டிராப் பண்றேன் வா.. ரிஷப்ஷன்ல சொல்லி கார் அரேன்ஞ் பண்ணி இருக்கேன்.. குயிக்" என்றவள் மைத்ரேயன் புறம் திரும்பி" அப்பறம் நீங்களும் ரெடி ஆகுங்க"

அதைக் கேட்டதும் முகம் மலர்நதவன் "நானும் ஊருக்கு போறேனா?"

முறைத்தவள்" அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம், சொல்றத செய்யுங்க.. குணா இன்னும் ஐந்து நிமிடம் தான் டைம் அதுக்குள்ள நீ வெளிய வரணும்" அதிகாரமாய் வந்தது அவளின் வார்த்தைகள்.

"இவ அவனோட பேசலன்னு என்னையும் பேச விடமாட்டேன்றா ராட்சஷி" மனதில் நினைப்பதாக எண்ணிக் கொண்டு சத்தமாகவே கூறி விட்டான் மைத்ரேயன்.

" ஹலோ நீங்க மனசுல நினைக்கிறது எனக்கும் கேட்குது"

" கேட்கணும்னு தான் பேசுனதே"

" உன்ன.." போயிட்டு வந்து பேசிக்கிறேன்.

அதன்பின் அவள் பத்திரமாக நிர்குணாவை, விமானம் புறப்படும் வரை உடனிருந்து பெங்களூர் சென்று இறங்கியதும் மறக்காமல் தனக்கு தெரிவிக்கும் படியும் அங்கு அவளை அழைத்துச் செல்ல வரும் நபரின் கைபேசி எண் மற்றும் அவரின் புகைப்படம் என அனைத்தையும் அவளிடம் அளித்த பின்னரே இவளுக்கு திருப்தியாக இருந்தது.

பின் வந்த வண்டியில் அம்புத்ரா ஓட்டல் அறைக்கு செல்ல அங்கே மறுபடியும் பிரதியுமன் கத்திக் கொண்டிருந்தான் 'அய்யோ இந்த யுமன என்ன தான் செய்யறது?' என யோசித்தவள் கன நேரத்தில் அறைக்குள் நுழைந்தாள்.

உள்ளே மைத்ரேயன் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருந்தான் உடன் கதிர் அலைபேசியில் வைஷாலியுடன் உரையாடிக் கொண்டிருக்கிறான் என்பது அவனின் குழையும் பேச்சிலே தெரிந்துக் கொள்ள முடிந்தது.

"என்ன பிரச்சனை இங்க?"

"நீ தான் பிரச்சனை போதுமா?"பிரதியுமன்.

"இது நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்ல யுமன்" பொறுமையாகவே சொன்னாள்.

"நிர்குணா எங்க?"

"ஊருக்கு அனுப்பி வச்சிட்டேன்" அவளிடம் எந்த அலட்டலும் இல்லை.

"இந்த நேரத்துல ஒரு பொண்ண தனியா அனுப்பி வச்சி இருக்கியே உனக்கு கொஞ்சமாவது ஏதாவது இருக்கா? இதுல அசிஸ்டெண்ட் கமிஷனர் வேற" நக்கலாகவே வந்தது அவனின் மறுமொழி.

"அவ இங்க இருந்தா சேப் இல்ல.. அதுவும் இல்லாம நாம இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பனும்"

இதைக் கேட்டதும் அனைவரும் ஒருசேர" எங்க கிளம்பனும்?"

" கேரளா"

தொடரும்..
 
Top