• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

24. தத்தித் தாவுது மனசு

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
தெய்வானை கூறியது போலவே விஜயாவும் எழுந்து கொண்டு விட்டார்.

எங்கு தான் அசைந்தால் தன்னை அணைத்தபடி தூக்குபவளும் எழுந்து கொண்டு விடுவாளோ என்று கண்மூடியே கிடந்தவள்,
கதவு திறக்கும் அரவம் கேட்டு,
யார் என திரும்பிப்பார்த்தாள்.

ஸ்ரீயை கண்டதும் புன்னகைத்தவரை கேள்வியாகப் பார்த்தவன்,

"என்னம்மா இதெல்லாம்....?" என்றான் மைலியை சுட்டிக்காட்டி.

"ஊஸ்ஸ்...... சத்தமா பேசாதே ஸ்ரீ. அவ இப்போ தான் தூங்கவே ஆரம்பிச்சிருக்கா.. போயிட்டு அப்புறமா வா!" என்றார்.



உதட்டை பிதுக்கி சரி என்பதாக தலையை அசைத்தவனுக்கு ஏனோ இன்று பொறாமை எழவில்லை.


குழந்தை போல அன்னையை கட்டிக்கொண்டு தூங்கும் அவள் அழகினை ரசித்தவன்,

"ரொம்ப சின்ன பாப்பா.. தூக்கம் கலைஞ்சிடுமாம்.. இதெல்லாம் ஓவர்ம்மா.. எங்க போய் முடியப்போகுதுன்னு தான் தெரியல்ல." என்று பொய்யாக கண்டித்தவன்,

"மகாராணி தூக்கம் கலையாம ஈவ்னிங்க் சந்திக்கலாம்." என்றவன், மைலி தூங்கும் அழகினை ஒரு நொடி ரசித்துவிட்டே சென்றான்.

விஜயாவிற்குத்தான் இது கனவோ என்றிருந்தது.

ஸ்ரீ இந்தளவிற்கு மென்மையானவன் இல்லை என்பது அவள் நன்கு அறிவாள்.
எப்போதுமே தன்னை கண்டால் எதிரில் நிற்பவர் நடுங்கவேண்டும் என்பது தான் தனக்கான மரியாதை என்பது போல அவன் நடத்தைகள் இருக்கும்.



தாயாக இருந்தாலும் ஸ்ரீயின் திடீர் நடவடிக்கையில் விஜயா கூட கொஞ்சம் அரண்டு தான் விடுவார்.


இன்று காலையில் கூட என்னவென்றே தெரியாத அவனது கோபத்தில், உள்ளே நடுங்கினாலும், வெளியே காட்டிக்கொள்ளாமல், காரணம் தேடியவர்க்கு அதன் காரணம் என்னவென்று பிடிபடவில்லை.


காலையில் கோபமாக கிளம்பியவன் இவன் தானா என்பது போல, நேர் எதிராக இருந்தான்.


அதுவும் வழமைக்கு மாறாக இந்த நேரம் வீட்டில் எனும்போது அதிசயத்திலும் அதிசயம். இதில் ஈவ்னிங்க் வேறு வந்து சந்திப்பானாம்..

மைலியின் உடலசைவில், அவள் எழுந்து விட்டாள் என்பதை அறிந்தவர்,

அவள் எழுந்ததும் வழமையான நடவடிக்கைகளில் இறங்கினார்.


பகலவள் கரிருள் போர்வைக்குள் தன்னை புகுத்திக்கொண்ட நேரம் அது.


"எங்கே தொலைஞ்சான்..? இதோ வறேன் என்கிறானே தவிர, வந்தா தானே...!
நேரம் ஏழாகுதே..." உன சினந்தவாறு, மணிக்கட்டினை திருப்பி பார்த்தவன்.

"இவனை...." என்றவாறு
மீண்டும் அவனது இலக்கத்திற்கு அழைத்தான்.

அவனது அழைப்பினை நிராகரிக்காமல், இரண்டே ரிங்கில் ஆன் செய்த செல்வம்..


"மச்சான் இதோ வந்துட்டேன்டா..." என்றான் அவனை முந்திக்கொண்டு.


"மவனே... நீ மட்டும் இன்னும் அஞ்சே நிமிஷத்தில இங்க நிக்கல.. அப்புறம் நடக்கும் விபரீதங்களுக்கு நான் பொறுப்பு கிடையாது." என எச்சரித்து விட்டே போனை கட் செய்தான்.

"பிச்சக்காரன் கணக்கா தெருவிலயே காத்திட்டிருக்கேன். இந்த அரைமணி நேரமா இதையே சொல்லிட்டிருக்கான்... வரட்டும் அவன.." என திட்டிக்கொண்டிருக்க,

வேகமா வந்த கார் ஒன்று... கிரீ....ச் என்ற சத்தத்தோடு அவனை உரசுவதபை் போல சடேன் பிறேக் இட்டு நின்றது.

அதிலிருந்து இறங்கியவன்,
நண்பனின் கடுகடுத்த முகத்தினை கண்டது, அவனது கோபம் புரிந்தவனாய்,


"சாரிடா மச்சான்....! நானும் சொன்ன டைம்க்கு வரத்தான்டா இருந்தேன். இந்த இந்த டாக்டர் லக்ஷ்மிகாந்தன் ரொம்ப அறுத்துட்டார்டா.


ஏதோ நான் தான் மாத்திர தயாரிச்சவன் மாதிரி ஆயிரம் கேள்வி.
அவரை சமாளிச்சு வரத்துக்குள்ள நூறு வாட்டி போன் பண்ணா.. நான் என்னடா பண்ணுவேன்.?


உன்னை மாதிரில்லாம் நூறுபேரை வைச்சு நான் ஒன்னும் வேலை வாங்கல.. என் வேலைய சரியா செய்யலன்னா... நாளையான் ஊவாக்கு... பூ..வா தான்..



முப்பது வயசாகிறத்துக்கு முன்னாடி இந்த டாக்டர்ஸ்ஸினால சொட்டை விழ போகுது.
எல்லா பொண்ணுங்களும் சொட்டை பய எனக்கு வேணாம்னு என்னை தட்டிக்கழிக்க போறாங்க... கடைசி வரை கட்டப்பிரம்மச்சரியா தான் இருக்கப்போறேன்." என்று சலித்தவன் பேச்சை கேட்டு ஸ்ரீ சிரித்துவிட.

"அப்பாடா..! சிரிச்சிட்டான்." என பெரும் மூச்சினை எடுத்து விட்டவன்,


"உன்னை சமாதானப்படுத்த என்னை நானே அசிங்கப்படுத்த வேண்டியிருக்கு" என்றவன்.


"சாரிடா.." என்றான் இம்முறை மானசீகமாக.

"இப்போ ரெடிடா..., யாரோ என்கூட வரான்னு சொன்னல்ல.. அவனை கூப்பிடு கிளம்புவோம்.
வேளையோட போனா தான் நைட்டுக்கு தூக்கிட்டு காலையில அந்த கனகரட்ணத்தை சந்திக்க போகலாம்" என்க.

"இரு கூப்பிடுறேன்." என்றவன், போனை எடுத்து, டெக்ஸ் செய்த மறு நிமிடம், அவன் எதிர் பார்த்தவன் ஸ்ரீ முன் வந்து நின்றான்.



கிட்டத்தட்ட செல்வம் அணிந்திருப்பதைப் போல் தான் உடுத்தியிருந்தான்.


ஆனால் அந்த உடைக்கும் அவனுக்கும் சம்மந்தமே இல்லை. காதில் கடுக்காண், சவரம் செய்யப்படாத தாடி, கத்தரிக்கோள் என்பதை இதுவரை அறிந்திடா முடிகள்... அதையும் பெண்கள் போல ரப்பர் பேன்டில் அடக்கியிருந்தான்.


விரிந்த தோள்கள், சட்டை பட்டனை பிரித்து இதே வெளியே வந்து விடுகிறேன் என்றிருந்த தொப்பை. என அவனை வீதி விளக்கு வெளிச்சத்தில் கண்ட செல்வத்திற்கு,

சிறிதாக விரிந்த சிரிப்பு, கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, ஒரு கட்டத்திற்கு மேல், சிரிப்பினை அடக்க முடியாமல் வாயை இறுக மூடியவன், அதுவும் முடியாமல் போக,


"ப்பூ....." என குழுங்கி சிரித்தவன்,
வேகமாக தன், கையினை வாயில் வைத்து அதை அடக்கமுடியாமல் திணறினான்.

பின் சிறிது நேரம் மௌனமாகி தன்னை நிதானமாக்க முயன்றவன், ஸ்ரீயின் காதினில்,


"யார்றா இவன்...? பாக்க காமடியன் மாதிரியே இருக்கான்.... ட்ரெஸ்கும் ஆளுக்கும் சம்மந்தம் ஏதாவது இருக்காடா...?


நல்ல கொட்டிப்பான் போலயே! எந்தா தண்டி?


விட்டா சட்டையை கிழிச்சிட்டு தொப்பை வெளிய வந்திடும் போலயே.
தலைக்கு என்ன எண்ணெய் யூஸ் பண்றான்னு கேளு.. இவனால ஷாம்பு கம்பனிக்கு நல்ல வருமானம்டா!

இவன் உண்மையிலேயே பைன் தானா..? எனக்கு சந்தேகமா இருக்குடா" என்றவன் திரும்பி இன்னொரு முறை அவனை பார்த்து விட்டு,

"இல்லடா.. இவன் பொண்ணும் இல்லடா.. மூஞ்சி பூராவும் முடியா இருக்கு..


உண்மையை சொல்லணும்னா... கரடிக்கு மனுஷன் ஹாஸ்டியூம் போட்டுவிட்டது போல இருக்கான்டா! " என்று மீண்டும் வாய் பொத்தி சிரிக்க.

அவனது பேச்சிலும் சிரிப்பிலும், ஸ்ரீ அவனை நின்றவனை திரும்பி பார்த்தான்.

அவன் காதிலும் இவனது பேச்சு விழுந்ததோ என்னமோ..! செல்வத்தைப் பார்த்து முறைத்தவன் கண்கள் சிவந்து போயிருந்தது.



அமைதியாகவே செல்வத்திடம் திரும்பிய ஸ்ரீ,

"மச்சா.... உனக்கு நேரம் அவ்வளவா நல்லதில்லனு நினைக்கிறேன். நீ பேசினது அவன் காதிலும் விழுந்திடிச்சு போல.
பாரு அவன் முறைக்கிறான்.

கொஞ்சம் உன் வாய மூடிட்டு இரு! ஏன்னா என்னோட வேலை முடியும் வரை, அவன் உன்கூட தான் இருக்க போறான்.
அப்புறம் உன் பேச்சில காண்டாயி..... ஏதாவது பண்ணிடப்போறான்.

நீயாவே வாய குடுத்து வம்பில மாட்டிக்காத" என்றான ஸ்ரீ அவனை எச்சரிப்பதாய்.

"டேய்.! எதுக்குடா இவனை என்கூட அனுப்புற? இவனெல்லாம் வேணாம்... உனக்கென்ன நீ தந்த பேப்பர்ல சைன் வாங்கணும். அவ்ளோ தானே!

நானே வாங்கிட்டு வந்திடுறேன். இவனை என்கூட அனுப்பினேன்னா.. இவனை பார்த்திட்டு, என்னையும் காமடி கும்பல்ன்னு நினைச்சு, அந்த கனகரட்ணம் கேலி பண்ணுவான்டா!

அப்புறம் போன காரியம் சரியா அமையாது. " என்றவனை முறைத்த ஸ்ரீ..

"சார்..! இங்க உங்க சம்மதம் யாரும் கேக்கல... இவன் கூட போன்னு உத்தரவு மட்டுந்தான் போடுறோம்." என்றவன்,


அந்த தடியனிடம் கண்களால் காரில் ஏறு என்பது போல ஜாடை காட்டி விட்டு.
செல்வத்தின் தோள்களில் தட்டியவன்,


"போயிட்டு வெற்றியோடு வா மச்சான்." என்று அனுப்பினான்.


"காமடியனை என்கூட அனுப்பிட்டி.. வெற்றி எங்கிருந்து வரும் மச்சான்.? நானும் உன்கிட்ட இப்படி ஒருதனை எதிர்பாக்கல." என்றவாறு காரில் ஏறி..


"சரிடா! நான் போயிட்டு வறேன்." என்றவாறு காரினை இயக்கினான்.


பன்னிரண்டு மணியளவில் யாழ்ப்பாணம் சென்று சேர்ந்தார்கள்.

ஏற்கனவே அவன் கம்பனி மூலம் அவனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹாேட்டல் ரூம் சாவியினை பெற்றுக்கொண்டு, இருவரும் ஒரே ரூமில் தங்கிவிட்டு,


காலையிலேயே மாணிக்கம் வீட்டுக்கு சென்றனர்.



ஸ்ரீ ஏற்கனவே போனில் பேசியிருந்ததனால், அவரும் செல்வத்திடம் கேள்வி எதுவும் கேட்காமல், அவன் வீட்டின் விலாசத்தினை அளித்தார்.



"தம்பி வேற ஏதாவது வேலை இருந்தா.. அதை முடிச்சிட்டே போங்க.. இப்போ அவன் வட்டிக்காசு வாங்க கிளம்பியிருப்பான். " என்றார்.



"சரிங்க சார்! அப்போ நாங்க கிளம்புறோம்." என தலையசைத்து அவரிடமிருந்து விடைபெற்றவன்,
அவனுடன் வந்த தடியனிடம்,

"உனக்கு இங்க யாரையாவது தெரியுமா?" என்றான்.

வழமைபாேல் அவன் மௌமாகவே நிற்க,


"நீ என்ன ஊமையா? எது பேசினாலும் பெரிய ஆர்மி ரேஞ்சுக்கு.. காலை விரிச்சு நெஞ்ச விடைச்சிட்டு நிக்கிற....

இந்த மாதிரி நின்னா மட்டும்.. காமடியன் இல்லனு ஆகிடுமா?
இல்ல நான் தான் உன்னை பார்த்துப் பயந்திடுவேனா?

இங்க பாரு! இங்க ஒரு டாக்டரை பாக்க வேண்டியிருக்கு.... நான் அவரை சந்திச்சிட்டு, ஒரு மணி அப்பிடி இந்த இடத்துக்கு வறேன்.. நீயும் அந்த நேரம் இங்க நிக்கணும்... அப்பிடி நீ இல்லன்னா.. போயிட்டே இருப்பேன்." என்றவன் சென்று விட்டான்.

போகும் செல்வத்தையே முறைத்துக் கொண்டிருந்தான் அவன்.



தடியனுக்கு கூறியதைப்போல் ஒரு மணியளவில் வந்தவன், தான் விட்டுசென்ற இடத்திலேயே அவன் நிற்பதை கண்டதும்.

'இவன் எங்கேயும் போகல்லையா...? போறப்போ எப்படி நின்னானோ.. அந்த மாதிரியே நிக்கிறான்..


பாவிப்பய சாப்பிட்டானா தெரியல்லயே.....!
இன்னைக்கு என் செலவில தான் அன்னதாணமா...?' என அவனையே சிறுநிமிடம் ஆராய்ந்தவன்,


'இவன் வைச்சிருக்கிற தொந்திக்கு.. யாழ்ப்பாணத்துக்கே பஞ்சம் வந்திடும் போலயே...!

இவனுக்கு சாப்பாடு வாங்கி போட நம்ம கிட்டல்லாம் வசதியில்லப்பா.. ஒரு மாச சம்பளத்தை ஒரு நாள்ல காலி பண்ணிடுவான்.
ஆனா நம்பி வந்தவனை பட்டினி போடவும் முடியாதே!' என நினைத்தவன்.

"ஏய்...! வந்து கார்ல ஏறு" என்றான்.

அவனும் அமைதியாக காரின் மறு புறம் ஏறிக்கொள்ள.
அவனை திரும்பி பார்த்தவன்,



"சாப்பிட்டயாடா?" என்றான்.

இப்போதும் அமைதியாக சாலையை வெறித்தான் அவன்.


"ஊமைன்னு தான் நினைச்சேன். காதும் போச்சா? துணைக்குன்னு அனுப்பியிருக்கிற ஆள பாரு...! செவிடு.. ஊமைன்னு...
ச்சைய்...." என்று அவனை தட்டியவன்,


"சாப்பிட்டியா?" என சைகையால் வினவினான்.


அவன் கேட்ட கேள்விகளுக்கு பதிலாக முறைத்தவன்,

"போலாம்.." என்று மீண்டும் அமைதியாக,


"ஓ... நீ பேசுவியா? காது தான் கேக்காதா? அதனால தான் அமைதியா இருந்தியா?" என்றவன் உண்மையில் நினைத்தது என்னமோ அவனுக்கு காது தான் செவிடென்று.

"சாப்பிட்டியா?" என்றான் மீண்டும் அவனை தட்டி.

அவனிடமும் மீண்டும் அதே பதில்..


"கிழிஞ்சுது போ...! இந்த நாதாரிக்கு காது தான் கேக்காதுனு பார்த்தா.. சைகையும் புரியாதா..?

சரி இவன் சாப்பிடலனா லாபம் தானே! எங்க சாப்பிடல்லனு சொல்லி காசை கரியாக்கிடுவானோனு பயந்தேன். சரி நமக்கென்ன வந்திச்சு?" என்றவாறு காரை இயக்கி கனகரட்ணம் வீட்டை அடைந்தான்.


வாசலில் இருந்த ஹாலிங்க் பெல்லை அழுத்தி காத்திருக்க, சிறுது நேர தாமதத்தின் பின், பாதியாக திறந்த கதவின் உள்ளிருந்து,


"யாரு வேணும்?" பெண்ணொருவரின் குரல் கேட்டது.

"கனகரட்ணம் வீடு இது தானே!"

"ஆமா இது தான்.... ஆனா அவரு வெளிய போயிருக்காரு.. ஏதாச்சும் அலுவலா?"


"ஆமாம்மா.... பணம் செட்டில் பண்ணணும்.. ஊர்ல இருந்து வந்ததனால திரும்ப முடியாது... எப்போ வருவார்ன்னு தெரியுமா?"



"சாப்பாட்டுக்கு வர நேரந்தான் தம்பி! உள்ள வந்து உக்காருங்க... அரைமணி நேரத்துக்குள்ள வந்துடுவாரு." என உள்ளே அழைத்து ஜூஸினை கொடுத்தாள்.

செல்வம் எடுத்துக்கொள்ள, மற்றவானோ மறுத்து விட்டான்.

"ஏன்டா....? சாப்பிடவும் இல்ல. இதையாவது குடியேன்." அவன் காதுக்குள் கூற.., அவனோ செல்வத்தின் பேச்சு காதிலேயே வாங்காதவனாட்டம் இருந்துவிட்டான்.

"வேண்டாம்னா போ..! எனக்கென்ன வந்திச்சு.
திமிரு பிடிச்சவன்." என்றுவிட்டு, அந்த ஜூஸினை உசிஞ்சுக் குடித்து மற்றையவனை வெறுப்பேற்றினான்.




ஆனாலும் பாவம் தான்டா அவன். ரெண்டு லட்ஷத்துக்கு பன்னிரண்டு லட்ஷம் பெறுமதியான வீட்டை என் பெயருக்கு மாத்திட்டேன்.

இதெல்லாம் என்கிட்ட கடன் வாங்க முன்னாடி யோசிக்கணும்." என்று தன் புகழை பாடியவாறு வந்த கனகரட்ணத்தையும், அவன் பின்னே வந்த இருவரையும் கண்டு,

ஜூஸ் கிளாஸ்ஸினை டீப்பாவில் வைத்து விட்டு எழுந்து கொண்டனர் இருவரும்.

அவர்கள் இருவரையும் புருவ உயர்வில் கேள்வியாய் நோக்கியவன்,


"யாரு நீங்க..?" என்றான்.

"பண விஷயமா தான் வந்திருக்கோம்." என்றான் செல்வம்.


"பணமா...? உன்னை இந்த ஊர்ல நான் பார்த்ததில்லையே!
தெரியாதவங்களுக்கு வட்டிக்கு குடுக்கிறதில்லை.. கிளம்பு...," என்றான் விரட்டுவதைப்போல.

"ஓ...! சார் நான் கடன் வாங்க வந்தேன்னு நினைச்சு விரட்டுறீங்களா? நான் கடன்லாம் வாங்க வரல்ல... உங்க கடனை அடைக்க வந்திருக்கேன்." என்றவனை புரியாது பார்த்தவன்,



"என்ன கடன்...? உன்னையே தெரியாது என்கிறேன். கடனை அடைக்க என்கிற..."



எனக்கு தெரிஞ்சவங்க உங்க கிட்ட கடன் வாங்கினாங்க... இப்போ அவங்க ஊரில இல்ல. அதனால என்னை அனுப்பி வைச்சாங்க."

அவன் பேச்சில் குழம்பியவன், தன் அடியாற்களிடம்,

"ஏன்டா...! யாராவது என்கிட்ட கடனை வாங்கிட்டு ஊரை விட்டு போயிருக்காங்க என்ன?"


"வாய்ப்பே இல்லை... கடனை வாங்கிட்டு ஊரை தாண்ட விட்டிடுவோமா? வீடு மாறி வந்துட்டான் போல..." என்றான் ஒருவன்.

"இல்லயே! நான் விசாரிச்சு தான் வந்திருக்கேன். உங்க பெயர் கனகரட்ணம் தானே."



"ஆமா அது நான் தான்... ஆனா உன்கிட்ட பணத்தை யாரு குடுத்தனுப்பினது ?" என்றான் இன்னும் குழப்பம் தீராது.


பையிலிருந்த பத்திரத்தை எடுத்து அவனிடம் நீட்டியவன்.


"இதை படிச்சிட்டு.. நீங்களாவே தெரிஞ்சுக்கங்க சார்!" என்று அதை அவன் கையில் திணிக்க,

பத்திரத்தை நழுவவிடாது பற்றி, படிக்க ஆரம்பித்தவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது.


படித்து முடித்ததும் பத்திரத்தை செல்வம் முகத்தில் வீசியடித்து,

"யார்றா நீ..? என்னோட மைலி உங்கிட்டத்தான் இருக்காளா..?" என கண்கள் சிவக்க கேட்டவன்,


"மரியாதையா அவளை என்கிட்ட கொண்டுவந்து ஒப்படைச்சிடு இல்லனா உன்னை..." என்று அவன் கூறும் முன்னர்.

"என்ன செய்வ...? உன்னால என்னை என்ன செய்ய முடியும்? அவளை கடனைக்காட்டி மிரட்டின... என்னை என்னத்தை காட்டி மிரட்டுவ?


உனக்கு தேவை உன் பணம். அவ உன்கிட்ட ஆறு மாசம் டைம் கேட்டா... ஒரு மாசத்துக்குள்ள இப்போ அதை தந்தாச்சு.... அவ்ளோ தான் உனக்கும் அவளுக்கும் இருக்கிற உறவு.


அதை விட்டுட்டு.. உன் வயசுக்கு அந்த பொண்ணுமேல ஆசைப்படுறியே! நீயெல்லம் என்ன ஜென்மம்டா?" அதுவரை மரியாதையில் பேசியவன் இப்போது சிங்கமாக சீற.

"ஏய்.... எங்க வந்து என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா? உயிரோட ஊர் போய் சேர மாட்ட." என்றான் மிரட்டும் தேரணையில்.



"நால்லா தெரியுமே..!
அப்பன் ஸ்தானத்தில இருக்க வேண்டிய கிழட்டுப்பயலுக்கு, சின்னப்பொண்ணு மேல ஆசை வந்து, அவளை தன்னோட இச்சைக்கு இணங்க வைக்க, குடும்ப வறுமையை பயன்படுத்திக்க பாக்கிற காமப்பிசாசுக்கிட்ட பேசுறேன்னு நல்லாவே தெரியும்"





"என்னடா ரொம்ப பேசுற?" என்று செல்வம் கன்னத்தில் பளார்.. என அறை விட்டான் கனகரட்ணம்.

இதை எதையும் கண்டுகொள்ளாதவனாட்டம் அமைதியாக நின்றிருந்தான் அந்த தடியன்.

"நானும் அமைதியா போவோம்ன்னு பார்த்தா.. ரொம்ப ஆடுற..!
என்ன நீ அவளை வச்சிருக்கியா?

அதனால தான் இந்த கோபமோ? அவளுக்கு நான் வேண்டாம்.. ஆனா உன்னை மாதிர வெள்ளையும் சொல்லையுமா இருக்கிறவன் தான் வேணுமாமோ?

இந்த பணம் உன்னோட சன்மானம் தானே..

இல்லை.. இதில உன்னோட பணம் மட்டும் இருக்காது... உன்னைப்போல பலரோட இருந்து தான் இந்த பணத்தை சம்பாதிச்சிருப்பா?

இல்லனா இந்தளவு பணத்தை ரெண்டே வாரத்தில எப்படி அவளால சம்பாதிக்க முடியும்?


உங்க கூட கிடக்கிறவளால ஏன்டா என்கூட கிடக்க முடியல...?
கிழட்டுப் பய.. உணர்ச்சி செத்திருக்கும்ன்னு நினைச்சிட்டாளா?

ஒரு நாள் வந்தான்னா தெரியும்....



சும்மாவா கூப்டேன்.. தரவேண்டிய பணத்துக்கு பதிலா கூப்டேன்.

அவளுக்கு ஒருத்தன் போதாது போல..." என்று கேவலமாக பேசியவன், பேச்சை கேட்க முடியாமல் முகம் சுழித்தவன்,
தன்னோடு வந்தவனை திரும்பிப் பார்த்தான்.


எப்போதும் போல எதற்கும் சம்மந்தமில்லாதவனாட்டம், நெஞ்சை நிமிர்த்தி, வேறெங்கோ பார்த்துக்கொண்டு நின்றவனை கண்டு, ஆத்திரம் தான் வந்தது.


இங்க பெரிய ரணகளமே நடக்குது. இந்த தடிமாட்டுப்பய எதுவுமே நடக்காதவன் போல நிக்கிறான்..

நிக்கிற ஸ்டைல்ல பாரு..! மினிஸ்டருக்கு மெய் பாதுகாவலராக வந்தவன் போல.

உடம்பை சினப்பன்னி கணக்க வளத்து வச்சிருக்கான்... என்ன ஏதுன்னு கேக்கிறானா...? அவன் அறையிறதைக்கூட பார்த்திட்டு அமைதியா நிக்கிறான்.

இவனை எனக்கு துணைக்கு அனுப்பின அந்த பண்ணாடைய கொல்லணும்..


இ்ந்த நாதாரிய நம்பி பிரியோசனம் இல்ல.
நாமதான் ஏதாவது செய்யணும்' என நினைத்தவனாய்.


"ஒரு பொண்ண அசிங்கமா பேசுறியே? நீயெல்லாம் மனுஷன் தானா...? நல்லவங்க பேச்சுக்குத்தான் மரியதையே தரணும்.

உன்ன மாதிரி கேடுகெட்டவன் பேச்சை காதிலயும் விழுத்திக்க கூடாது. ஏன்னா உன்னைப்போல தான் எல்லாரையுமே நீ தப்பா எடை போடுவ.
உங்கூட பேச்சு வைச்சுக்க எனக்கு இஷ்டமில்ல. முதல்ல இந்த பத்திரத்தில சைன்ன வைச்சிட்டு.. உன் பணத்தை வாங்கிக்கோ.. நான் கிளம்பணும்." என்றான் பேசப்பிடிக்காது.

"மரியாதையா இதை எடுத்துட்டு போயி, அவளை கொண்டு வந்து விடு! அது தான் உனக்கு நல்லது" என்று மிரட்டிக்கொண்டிருந்த நேரம்,



"அடியே அழகே...! என் அழகே அடியே! பேசாம நூறு நூறா கூறு போடாத....." என்ற பாடலோடு கைபேசி ஒலிக்க,

கனகரட்ணம் மிரட்டலை காதில் வாங்காதவனாய், போனை ஆன் செய்து,

"ஹலோ" என்றான்.



"செல்வம் நீ அங்க நிக்காத கிளம்பு" என்றவன் குரலில் யாரென்பதை உணர்ந்தவன்.


"மச்சான் அவன்...."

"எனக்கு எல்லாம் தெரியும்...
முறைப்படி அவன் பணத்தை கொடுத்துட்டு ரெண்டு காட்டு காட்டுவோம்னு தான் நினைச்சேன்.
அவன் வாய்கு வாஸ்த்து சரியில்ல...

அவன் பேச்சுக்கு ரொம்பவே அனுபவிக்க போறான்.." என்று பற்களை கடித்து கூறியவன்.


"பத்திரத்தை கொடுத்துட்டு.. செக்க மட்டும் எடுத்திட்டு கிளம்பு" என்று கோபமாக ஸ்ரீ அங்கே கத்துவது, செல்வத்தின் காதில் சிங்கம் கர்ஜிப்பது போல் இருக்க,

"சரிடா கத்தாத.. பத்திரத்தை யார்கிட்ட குடுக்குறது?" என்றான்.


"உன்கூட வந்தவன் கிட்ட குடுத்துட்டு நீ கிளம்பு" என்றான் இம்முறை நிதானமாக,


"அவன் செவிட்டு பயடா.... அவனையும் கூடவே அழைச்சிட்டு வந்திடுறேன். என்னையே அடிச்சிட்டான் மச்சான். இவனால இந்த கும்பல சமாளிக்க முடியாதுடா...! பாவம்டா அவன்." என்று அந்த தடியனுக்காக செல்வம் இரக்கப்பட.

"டேய்...! என் பொறுமைய சோதக்காதடா..
உனக்கு அஞ்சு நிமிசம் தான் டைம்.. அதுக்குள்ள அந்த வீட்ட விட்டு கிளம்பு." என்றான் கத்தலாய்.

"சரிடா சரி! எனக்கென்ன வந்திச்சு? செவிட்டு பய விதி அவ்வளவு தான்னு எழுதியிருக்கு" என்றவாறு,
கனகரட்ணத்தை கடந்து சென்று, தடியனிடம் வந்து பத்திரத்தை நீட்டியவன்.

"சாரிடா உன் முடிவு என்கூட வந்ததனால தான்னு எழுதியிருக்கு போல. ஏதாவது புனித தீர்த்தத்தில போய் என் பாவத்த கரைச்சிடுறேன். அப்பிடியே உனக்கும் சொர்க்கம் கிட்டணும்னு வேண்டிக்கிறேன்." என பத்திரத்தை அவனிடம் கொடுத்து விட்டு,
கனகரட்ணம் அருகில் வந்தவன்.



"எனக்கும் இந்த பிரச்சினைக்கும் எந்த சம்மந்தமில்ல சார்!

பித்துப்பிடிச்சு ரோட்டில சுத்திட்டு இருந்தேன். இதோ இந்த சார் தான்.. என்னை அழைச்சிட்டு வந்து, உங்கள கேள்வி கேக்க சொன்னாரு! நீங்க விட்ட அறையில என் பித்தம் தெளிஞ்சிடிச்சு சார்! நீங்க அவரு கூடவே உங்க பிரச்சினைய பேசிக்கோங்க. எனக்கு அவசரமா ஒரு வேலை இருக்கு... நான் போகணும்." என்றவாறு வாசலை நோக்கி நடந்தவனை,


"அடேய் பொட்டப்பயலே! எதுக்குடா பயந்து ஓடற?" என்று ஓடுபவனை இகழ்சியாக அவன் பேச,

"சார்....! உங்க பேச்சுக்கு எனக்கு ரோஷம் எல்லாம் வராது சார்! இப்போ தான் எனக்கு பித்தம் தெளிஞ்சிடிச்சே... நான் பைத்தியமா இருக்கும் போது பேசிருந்தா கோபம் வந்திருக்கும்." என்றவாறு வாசலை நோக்கி நடந்தவன்,


"முதல்ல இந்த வாயை ஹார்ப்பிக் போட்டு அலசனும். இவனை எல்லாம் சார் போட்டு கூப்பிட்ட வேண்டியதாகிடிச்சு." என்று முனுமுனுத்தவாறு முற்றத்திற்கு வரவில்லை..

மூன்று ஜீப்பினில் உருட்டுக்கட்டை, அருவாள் என்று பல ஆயுதங்களுடன், கிட்டத்தட்ட பதினைந்து பேர்களுக்கு மேல் ஆக்ரோஷமாக கத்திக்காெண்டு இறங்க,
அவர்களைக்கண்டதும் தென்னை மரத்தின் பின் ஒழிந்து கொண்டவன்,

"அய்யையோ.. இந்த கனகரட்ணம் பெரிய ரவுடிப்பயலா இருப்பான் போலயே!


அவனோட அடியாட்களை நம்மளை கவனிக்க வரவைச்சிட்டான் போல.. இந்த ஊமையனுக்கு இன்னைக்கு சங்கு தானா...?



நல்ல வேளை நாம தப்பிச்சோம். ஸ்ரீ மட்டும் என்னை கட்டாயப்படுத்தி வெளிய அனுப்பலனா என் நிலமை?

நண்பா நீ வாழ்கடா...' என்று அவர்கள் வீட்டின் உள்ளே செல்லும் வரை மறைந்திருந்தவன், அவர்கள் உள்ளே சென்றதும் வேகமாக வெளியே ஓடிச்சென்று காரில் ஏறியவன்,

'சிறு நிமிடம் தாமித்தாலும் தன்னை விரட்ட ஆள் அனுப்பிவிடுவான்' என்று காரினை தன் ஊரின் திசைக்கு திருப்பி ஜெட் வேகத்தில் பறந்தான்.



தாவும்....
 
Top