• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

25. அம்புத நல்லாள்

Sahana Harish

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
49
"எங்க போகணும்?" என்ற வார்த்தையை மூவரும் ஒருசேரக் கேட்டதும் இவள் கேரளா என ஒற்றைச் சொல் உதிர்தததும், அதில் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியதும் நாம் அறிந்த விஷயம்..

இனி அவர்களின் உரையாடல்களை பார்ப்போம் (படிப்போம்)

"அம்மு எதுக்காக அங்க போகணும்?"

"எஸ் மேடம் தீடீரென்று ஏன் இந்த பிளான்? நம்ம டார்கெட் எதும் மிஸ் ஆகி போச்சா?"

"கேட்குறாங்க இல்ல பதில் சொல்லாம ஏன் அமைதியா இருக்க?"

இக்கேள்விகளை யார் யார் கேட்டிருப்பர் என நான் சொல்லி உங்களுக்கு விளங்க வேண்டியதில்லை.

(இருக்கறத மூனு பேர் கேள்வி அவங்கள தவிர வேறு யார் கேட்டு இருக்க போறாங்க)

"ஓரே கேள்விய எத்தனை பேர் கேட்பீங்க? இப்ப கிளம்புங்க டைம் ஆச்சு மார்னிங் நாம அங்க இருக்கணும்.."

"எப்படி போக போறோம் மேம்?"

"ஆன் ரோடு" என்றவள் "கிளம்புங்க எதையும் விடாதீங்க எவ்வளவு சீக்கிரம் கிளம்புறோமோ அவ்வளவு நல்லது"

"யாருக்கு" பிரதி தான் கேட்டிருந்தான்.

" நமக்கு தான்.. இதுக்கு மேல விம் பார் போட்டு விளிக்கினா தான் சார் கூட வருவீங்களோ?" ஒற்றை புருவத்தை உயர்த்தி அவள் கேட்கவும் இவன்" எல்லாம் என் தலையெழுத்து" என முனுமுனுத்தவாறே தன் உடைமைகளை எடுத்து வைக்க சென்றான்.

இவளும் சிரித்தவாறே துரிதமாக செயல்பட மற்ற இருவரிடமும் கூறினாள்.

அடுத்த பத்தாவது நிமிடங்களில் அவர்களுக்காக காத்திருந்தது ஒரு எஸ் யூ வி வாகனம்.

"எல்லாரும் ஏறுங்க" என இவள் சொல்ல" யார் ஒட்டுறது அம்மு?"

"நான் தான் மைத்து"

"ஏன் நாங்க தான் இருக்கோம்ல வீ வில் ஹாண்டில் அம்மு.. யூ டேக் ரெஸ்ட்"

சின்ன சிரப்பொன்றை உதிர்த்தவள் "டொண்ட் ஒர்ரி மைத்து.. உங்கள சேப்பா கூட்டிக்கிட்டு போறது என்னோட கடமை.. ஒரு பொண்ண நம்பி எப்படி போறதுன்னு நீங்க யோசிக்கறது புரியுது.. பட் எங்களுக்கு இருக்க மனோதிடம் உங்களுக்கு இல்ல அது தான் உண்மை.."

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல"

"சாதரணமா ஒன்னு சொல்றேன்.. எத்தனை வீட்டுல வெளியே போயிட்டு வந்து எல்லோரும் டயர்டா படுக்க போற நேரத்துல தன்னோட உடம்பு வலியைக் கூட யோசிக்காம விட்ல இருக்கவங்களுக்கு தேவையாத செய்வாங்க? இன்னும் சிலர் நைட் புல்லா கண்ணு முழிச்சி வேலைப் பார்த்துட்டு வந்து கூட வீட்டு வேலைய செய்றத பார்த்து இருக்கீங்க? இவங்களுக்கு உடம்புலையும் மனசுலையும் சக்தி இல்லையா?"

" நான் கேட்டது தப்பு தான்.. பரதேவதை நீயே வண்டி ஓட்டும்மா"

" அது" என்றவள் ஓட்டுனர் இருக்கையில் அமர ஓட்டலில் ஓரே அமளி துமளியாக காட்சியளித்தது.

" மேடம் உள்ள ஏதோ பிரச்சனை போல.. கார ஸ்டார்ட் பண்ணாதீங்க.. போய் என்னனு பார்த்துட்டு வரேன்"

" நோ கதிர் நாம கிளம்பணும்"

" பட் மேடம்"

" ஐ சேட் நோ"

அதன் பின் அவன் எதுவும் பேசவில்லை.. பிரதிக்கும் மைத்ரேயனுக்கும் இவள் ஏன் அப்படி சொல்கிறாள் எனப் புரியவில்லை.. இருந்தும் எதுவும் கேட்காமல் அமைதியாகவே பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தனர்.

வெகு தூரம் சென்றதும் ஒரு தாபாவில் இரவு உணவை முடித்துக் கொண்டவர்கள் வண்டியில் அமர "அங்க ஹோட்டல நம்மள கொல்ல தான் ஆள் வந்திருந்தாங்க.. நம்ம ரூம்ல இல்லன்னதும் மத்த ரூம்ல தேட போய் தான் பிரச்சனை இப்ப அவங்க எல்லாரும் போலீஸ் கஸ்டடியில் இருக்காங்க பட் வித் இன் டூ டேஸ் தே மே டேட்(but within two days they may dead)"

இவள் சாதரணமாக சொன்னதும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

" இதை அங்கேயே சொல்லி இருக்க வேண்டியது தானே.. அவ்வளவு நேரம் நின்னு கிளாஸ் எடுக்க தெரிஞ்ச உனக்கு இதைச் சொல்லணும்னு ஏன் தோணல?" பிரதி தான் அவள் முகத்தைக் கூடப் பார்க்காமல் கேட்டான்.

ரியர் வீயூ கண்ணாடி வழியே அவனைப் பார்த்தவள் "அங்கேயே சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க?"

" சீக்கரம் கிளம்பி இருப்போம் இல்லையா? அட்லீஸ்ட் உன்கிட்ட ஆர்கியூ பண்ணாம வந்து இருப்போம்"மைத்து.

" கண்டிப்பா இல்ல.. நான் சொல்லி இருந்தா கதிர் கூட கொஞ்சம் பேனீக் ஆகி இருப்பார் நீங்க இரண்டு பேரும் இன்னும் மோசம் உங்க முகத்துல பயத்தைப் பார்க்க எனக்கு விருப்பம் இல்ல.. அதனால தான் சொல்லல.. அண்ட் நிர்குணாவ ஊருக்கு போக சொன்னதும் அவளுக்கு எதுவும் ஆக கூடாதுன்னு தான்"

அதன் பின் இவர்களால் என்ன பேச முடியும்? மற்ற மூவரையும் இவள் உறக்க சொல்ல முன்னாளில் சரியாக உறங்காத கலைப்பிலும் லாவகமாக இவள் வண்டி ஓட்டும் திறமையும் சேர்ந்து அவர்களை ஆழ்ந்த நித்திரைக்கு இட்டுச் சென்றது.

பகலவன் அவர்களின் நித்திரை கலையச் செய்ய மூவருக்கும் அப்பொழுது தான் எவ்வளவு மணி நேரம் உறங்கி விட்டோம் என்பது புரிந்தது.

எழுந்து அமர்ந்து அம்புத்ராவைத் தான் பார்த்தனர் மூவரும்.. இரவு முழுவதும் வண்டி ஓட்டிய களைப்பு அவளிடம் சற்றும் இல்லை.. மாறாக வேட்டையாட போகும் வேங்கையின் நிதானம் , கண்களில் இரையை தேடும் வெறி என மாறி மாறி இருந்தது.

"அம்மு எங்க இருக்கோம்.. கேரளா வந்துடோம்னு மட்டும் புரியுது பட் எந்த இடத்துல இருக்கோம்?"

"குட் மார்னிங் மைத்து.. இப்ப நாம இருக்கறது திருவனந்தபுரம்"

"வாவ் சூப்பர்..எனக்கு ரொம்ப பிடிச்ச பிளேஸ்" என்றவனை பிரதி முறைத்த முறைப்பில் அமைதியாகி கொண்டான்.

"மேடம் அடுத்த பிளான் என்ன? இப்ப நாம ஏன் இங்க வந்து இருக்கோம்?" கதிர் கேட்டான்.

"இவ்வளவு நேரத்துல யூகிச்சு இருப்பிங்கனு நினைச்சேன் சோ சேட் கதிர்.. முன்ன மாதிரி நீங்க துடிப்பா இல்ல"

" அய்யோ மேடம் அப்படி எல்லாம் இல்ல"

"அவ தேடி வந்த கும்பல் இங்க எங்கையாவது இருக்கும் அதுக்காக தான் நைட்டோட நைட்டா இங்க கூட்டிட்டு வந்து இருக்கா.. சரியான்னு கேளு"பிரதி தான்.

" வாவ் சூப்பர் யுமன் இது தான் கெமிஸ்ட்ரின்றது நான் நினைக்கறத சரியா கேட்ச் பண்ணிங்க பாருங்க அங்க இருக்கு நம்ம லவ்"

"ப்ச்" அவன் அதற்கு மேல் ஒற்றை சொல் உதிர்க்கவில்லை அவளிடம்.

"ஏம்மா அம்மு இதுல உங்க லவ்வு எங்க வந்தது? முடியல உன் அலப்பறை.. இப்ப என்ன பண்ண போற அதைச் சொல்லு"

" நான் தூங்க போறேன்.. நீங்க மூனு பேரும் ஷாப்பிங் பண்ண போறீங்க"

"வாட்?" என்றனர் மூவரும் ஒரு சேர.

" எஸ் நாம இன்னைக்கு திருவனந்தபுரம் காட்டுக்குள்ள போக போறோம்.. அங்க நாம சாப்பிட, அப்பறம் எமர்ஜென்சிக்கு தேவையான பொருள் எல்லாம் வேணும்.. வாட்டர் ப்ராப்ளம் இல்ல அங்க தண்ணீர் கிடைக்கும்.. பாக்கெட் புட் ஐடம்ஸ் வாங்கிகோங்க, சோலர் ஆர் காம்பிங் ஸ்டவ் வாங்கிகோங்க.. அப்பறம்.."

"தாயே நிறுத்து.. லிஸ்டு போயிட்டே இருக்கு.. நாம பிக்னிக் போறோமா இல்ல வேலைக்கு போறாமா?"

" அதுல உனக்கு என்ன சந்தேகம் மைத்து.. அப்கோர்ஸ் வேலைக்காக தான்"

" அப்பறம் நீ என்னவோ இதெல்லாம் வாங்கிட்டு வா இவ்வளவு பெரிய லிஸ்ட் போடுற?"

" வேலைக்கு வந்தா சாப்பிட மாட்டியா? சரி உனக்கு வேண்டாம்ன்னா போ எங்களுக்கு வேணும்"

" அப்படி எல்லாம் எதுவுமில்லை எனக்கு சோறும் முக்கியம்"

சிரித்தவள்" சரி சரி நான் பக்கத்துல இருக்க ஹோட்டல் போய் ரூம் போட்டு தூங்குறேன்.. நீங்க திங்க்ஸ் வாங்கிட்டு அதெல்லாம் கார்ல வச்சிட்டு சாப்பிட்டு ரூம் புக் பண்ணி ரெஸ்ட் எடுங்க மதியம் அங்கயே லன்ச் சாப்பிட்டு கிளம்புவோம்"

" அவ என்ன சாப்பிடுவான்னு கேளு" வேறு யார் பிரதியுமன் தான்.

" ஏன் அதை நீ கேட்டா குறைஞ்சு போயிடுவீயா?"

" கேளுடா" என்றதும் இவன் அவளை நோக்க" நான் அங்கயே வாங்கி சாப்பிட்டுக்கிறேன் யுமன்"

தலையசைத்தவன்" எந்த ஹோட்டல்னு மெசேஜ் பண்ண சொல்லு"

" ஹம்" என்றவள் நடந்து சென்று அருகிலுள்ள ஹோட்டலில் ஏற்கனவே தயாரித்து வைத்த போலி அடையாள அட்டையை காண்பித்து அறை எடுத்து தங்கினாள்.. உள்ளே நுழைந்ததும் நிர்குணா தான் பத்திரமாக வீட்டிற்கு வந்து விட்டதாக சொல்லவும் இவளுக்கு பெரும் நிம்மதி.

அதன் பின் குளித்து, காலை சிற்றுண்டி உண்டு பகலவன் கண்ணை பறிக்கும் பிரகாசத்தை வாரி வழங்கினாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அமைதியாக உறங்கினாள் நம் நாயகி.

நேரம் கழிந்தது.. ஒரு மணி நேரம் ஆகி இருக்கும் அவள் சொன்ன அனைத்தையும் வாங்கி காரில் வைத்து விட்டு பிரதி தன் அடையாள அட்டையை கொண்டு அறையை பதிவு செய்து கொண்டனர்.. சில மணி நேரம் தான் என்பதால் அவர்கள் மூவரும் தங்கிக் கொள்ள சம்மதித்து இருந்தனர்.

அறையில் "ஏன் கதிர் அம்மு எப்பவும் இப்படி தானா?" என மைத்ரேயன் கேட்கவும் "புரியல எப்பவும்ன்னா எதைப் பற்றி கேட்குற?"

"இல்லை அவ என்ன செய்யுறா, எதுக்காக செய்யுறா ன்னு எதுவும் புரிய மாட்டேங்குது.. புரியற நேரத்தில அது பெரிய விஷயமா இருக்கு"

"மேடம் அப்படி தான்.. தன்னால தன்னை நம்பி வந்தவர்களுக்கு எதுவும் ஆக கூடாதுன்னு நினைப்பாங்க.. நிர்குணாவ கூட நீங்க கேட்டதுனால தான் கூட்டிட்டு வந்தாங்க.. ஆனா எப்படியும் அவங்கள இந்த பிரச்சனையில இழுத்து விட நினைச்சு இருக்க வாய்ப்பில்லை.. அண்ட் இப்ப இது நடக்கறது முன்னாடி அவங்களுக்கு வேற எதுவோ நடந்து இருக்கணும் இல்லன்னா இவ்வளவு சீக்கரமா நிர்குணாவ வீட்டுக்கு அனுப்ப அவசியம் என்ன?"

'அடடா என்ன இவன் போலீஸ்காரன்னு நிரூபிக்கிறான்.. இதுக்கு மேல இவன் கிட்ட எதுவும் கேட்க கூடாது' என நினைத்தவன்" கதிர் நான் உங்கிட்ட கேள்வி கேட்டா நீங்க என்னை கேட்கறீங்க"

" அதெல்லாம் அப்படி தான்.. மழுப்புறீங்க சோ எதுவோ நடந்து இருக்கு.." என்றவனை ஒரு நொடி தான் பார்த்தான் மைத்ரேயன் அதில் அவனுக்கு என்ன புரிந்ததோ "சரி கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுங்க கார்ல கைய கால அசைக்க முடியாம தூங்கினது ஒரு மாதிரி வலியா இருக்கு"

" ஆமா ஆமா" என்றவன்" ஏன் பிரதி உனக்கு அப்படி இல்லையா?"

" நாம ஏதோ பெரிசா வந்து சிக்கி இருக்கோம்னு தோணுது"

"ஏன் ஏன்?" இருவரும் அதிர்சியாகவே கேட்டனர்.

"தெரியல மனசுக்கு அப்படி தான் தோணுது.. எனக்கு தெரிஞ்சி கேரளால்ல 70 சதவீதம் காடு இருக்கு.. சில காட்டுல வன விலங்குகள் கூட இருக்கு,சில இடம் அமானுஷ்யம் நிறைந்தது.
இதுல நாம எதை தேடி போறோம்னு இன்னும் தெரியல ஆனா ஆபத்து இருக்குன்னு மட்டும் புரியுது"

"காம் ஆன் பிரதி.. துணிஞ்சி இறங்கியாச்சு அதுல என்ன இருக்குனு பார்ப்போமே"

" நீயா இப்படி எல்லாம் பேசுற?"

" அடியேனே பிரதியுமா"

" அடச்சி சாதா தமிழே கொல்லுவ இதுல தூய தமிழ் வேற"

கதிரவன் நடு வானத்தில் விஸ்தாரமாக இருக்க விழிப்பு வந்து எழுந்தாள் அம்புத்ரா.. அவளின் அந்த உறக்கம் போதுமானதாக இருக்க தன்னுடன் வந்த அதி வீரர்கள் என்ன செய்கிறார்கள் எனக் கேட்க கதிருக்கு அழைத்தாள்.
அவன் தாங்கள் உணவை உண்டு தயாராக இருப்பதாக சொல்லவும் சரி என்றவள் தனக்கு வேண்டியதை வரவழைத்து சாப்பிட்டு முன்னதாக சென்று ஹோட்டல் அறையை காலி செய்துக் காரில் அனைத்தும் இருக்கறதா என சாளரம் வழியாக கவனித்தாள்.. அனைத்தும் இருக்கவே நிம்மதியடைந்தவள் மூவர் கூட்டணி வரவும் வண்டியை சாவியை வாங்கி கொண்டு வண்டியை கிளப்ப தயாரானாள்.

"மேடம் இப்ப எங்க போக போறோம்?"

"போனாகார்டு பங்களா"

பங்களா என்றதும் மைத்ரேயன் குதூகலிக்க மற்ற இருவரின் முகமும் அதிர்ச்சியில் உறைந்தது.

அவர்கள் அதிர்ச்சிக்கு காரணம் என்ன? அம்புத்ரா மான்ஸ்டர் கும்பலை அழிப்பார்ளா? பிரதியுமன் தன் மன குழப்பத்திலிருந்து மீண்டு வருவானா? அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

தொடரும்..
 
Top