• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

25. உன்னாலே உயிரானேன்

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
செல்லும் அவரையே குழப்பமாக பார்த்திருந்தவள், அவர் மறைந்ததும் வீட்டினை ஒரு முறை விழிகளால் வலைவிரித்தாள்.



அந்த வரவேற்பறையானது விலையுயர்ந்த வெளிநாட்டு அலங்காரப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு, மிக நேர்த்தியாக மின்னியது.

எழுந்து சென்று ஒவ்வொன்றையும் ஆசையாக வருடிப்பார்த்தவள் கண்களில், சுவற்றில் மாட்டியிருந்த படங்கள் ஈர்க்க.. அதனிடம் சென்றாள்.

பிறந்தது முதல் இப்போது வரையான சௌந்தரீகனது புகைப்படங்கள் மரவடிவில் மாட்டப்பட்டிருக்க, ஒவ்வொனறிலும் ஒவ்வொரு சேட்டைகள் செய்தவாறு நின்றிருந்தவனை விட்டு அவள் விழிகள் மீளவில்லை.


இதழ்களில் தவள்ந்த புன்னகையுடனே ஒவ்வொரு புகைப்படத்தினையும் ரசித்து நின்றாள்.

"காஃபி எடுத்துக்கோம்மா..." என்று அருகில் கேட்ட குரலில் திரும்பியவளது ரசனையையே ஆராய்ந்தவர் உதடுகளுமே, மென்மையான புன்னகை ஒன்றினை பிறப்பித்திருந்தது.

"இது புல்லாவே ஆதி... சௌந்தரீகன் தானே ஆன்ட்டி..?" என்றவள் விழிகள் அவரது பதிலை ஆர்வமாக எதிர்பார்த்திருக்க.

ஆதி... என்று விட்டு சௌந்தரீகன் என்று தடுமாறியவளது தடுமாற்றத்தை கண்டும் காணாதவர் போல,

ம்ம்.. என தலையசைக்க.. மீண்டும் புகப்படத்தில் பார்வையினை நிலைக்க விட்டாள்.

"சின்ன வயசில ரொம்ப சேட்டைக்காரன் போல.."

"ஏன் இப்ப மட்டும் என்னவாம்..? சொல்லு பேச்சு கேட்கிறதில்லை... ரொம்ப பிடிவாதம்.." என்றார்.

"அதான் தெரியுமே... ஆமா ஆன்ட்டி..! இந்த போட்டோஸ் பாரின்ல எடுத்தது போல தெரியலையே.. ஆனா உங்க குடும்பம் தலைமுறையா அங்க தான் இருக்கிறதா கேள்விப்பட்டேன்." என்றாள் பிறந்து சில நாட்களே ஆன சௌந்தரிகனை அவர் முத்தமிடும் புகைப்படத்தை காண்பித்து.

"யாரு சொன்னா..? எங்க ஊர் இது இல்லன்னாலும், எங்களோட சொந்த நாடு இதுதாம்மா.. அது ஒரு சில காரணங்களுக்காக, இங்க இருந்து போக வேண்டியதா போச்சு" என்றவர் நினைவோ அன்றைய நாளை நோக்கிச் சென்றது.



ஆம் இவர்களது தாய் நாடுமே இது தான். ஏன் சௌந்தரிகனது குரலானது முதல் முதலில் ஒலித்ததும் இங்குதான்.

சௌந்தரீகனது குடும்பம் எப்போதுமே வளமான குடும்பம் தான். அவனது தந்தை ராஜேந்திரன் ஓர் ஜமீன் வம்சத்தவன்.

அவனை பெற்றவர்களை இயற்கை அழைக்க, ராஜேந்திரனது சிறுவயதிலேயே இறந்து போயினர்.

அவனைத்தவிர அவர் வம்சத்தை வளர்த்தெடுக்க யாருமே இல்லை என்ற நிலையில தான், கமலினியை சந்தித்து காதல் திருமணம் புரிந்து கொண்டார்.

திருமணமாகி இரண்டு வருடத்திலேயே சௌந்தரீகன் பிறந்து விட்டான்.

அன்றைய நாள் அந்த அரண்மனையே மின்னியது. ஆம் காலையில் தான் பிறப்பு தீட்டு கழித்திருந்தார்கள் ராஜேந்திரனும் கமலினியும். காலையில் அவர்களது குலதெர்வம் கோவிலில் புண்ணியத்தானம் செய்து பெயர் சூட்டும் வைபவமும் நடை பெற காத்திருந்தது.

அவனுக்கு அவர்கள் வைப்பதற்காக தேர்தெடுத்த பெயர் தான் ராகவ்... அழகான பெயர் தான்.. ஆனால் இறைவன் அதை விரும்ப வேண்டுமே...!

சின்னவன் பிறந்து இன்று தான் வானமே பார்க்கப்போகிறான். அவனுக்கு கொண்டாட்டமோ இல்லையோ... பிறை நிலாவினையும் தோற்கடிப்பது போல் விட்டு விட்டு பிரகாசித்த விண்மீன் கூட்டமானது அவனை காண்பதற்காக விழித்துக்கிடக்க..

"டைமாச்சு கமலி.. இப்பவே ஒன்பது மணியாகிடிச்சும்மா.. இப்போ கிளம்பினாத்தான், காலை பூசைக்கு நிக்க முடியும். சீக்கிரம் கிளம்பும்மா" என ராஜேந்திரன் அவசரப்படுத்த..

அலங்கரித்த குழந்தையை கையில் தூக்கியவள்..
"இவனால தாங்க லேட்டு... சட்டைய போட விட்டானா..? சரி வாங்க கிளம்பலாம்.." என முன்னே நடந்தவர் அறை வாசலை தாண்ட அவர் சேலையின் கொசுவம் கால்களில் சிக்குண்டு விழப்போனவரை, அவசரமாக பிடித்துக்கொண்டார் ராஜேந்திரன்.

"பார்த்து வா கமலி...!" என்றார்.

"ஆமாங்க... புடவை கால்ல இடுங்கிண்டுட்டு... இவனை பிடியுங்க புடவையை சரி பண்ணிடுறேன்." கணவனிடம் குழந்தையை கொடுத்தவள், புடவையை சரிசெய்து கொண்டு நடக்க, கணவன் கையிலிருந்த குழந்தை திடீரென வீரிட்டு அழ ஆரம்பித்தது.

"என்னங்க ஆச்சு..? என்கிட்ட அவனை குடுங்க.." என குழந்தையை வாங்கிக்கொண்டவர்,

"பட்டுப்பாக்கு என்னாச்சு..? ஏன் திடீர்ன்னு அழறீங்க..?" என குழந்தை மூக்கோடு தன் மூக்கினை வைத்து மென்மையாக தேய்த்து விட்டவர் கொஞ்சலில் அவன் அழுகையினை நிறுத்த..

"உங்களுக்கு இவனை மென்மையா தூக்க தெரியலங்க... அதான் கை மாறினதும் அழுதிருக்கான். சரி வாங்க போலாம்." என வீட்டின் வாசலை தாண்டவில்லை. மேலே தொங்கிக்கொண்டிருந்த பூந்தொட்டி தரையில் வீழ்ந்து சிதறியது.

ஒரு நொடி தாமதித்திருந்தாலும் அது கலினியின் தலையினை பதம் பார்த்திருக்கும். திரும்பி பார்த்தவருக்கு ஏதோ சரியில்லை என்று இப்போது தான் தோன்றியது.

விழிகளை அகல விரித்து முகத்தில் பயத்தினை பிரதி பலித்தவர்,

"ஏங்க... எனக்கு என்னமோ பயமா இருக்கு.. நாம வேணும்னா இன்னொரு நாளைக்கு குலதெய்வத்திட்ட போலாமா..?" என்றார் உண்டான பயத்தினை மறைக்காது.

"என்ன கமலி பேசுற..? எங்க சம்பிரதாயப்படி, நாட்பத்தி ஓராவது நாள் குழந்தைய சாமி பாதத்தில வைக்கணும்மா.. இல்லன்னா சாமி குற்றம் ஆகிடும். பிடிமானம் இல்லாம விழுந்து நொருங்கின பூந்தொட்டிய பார்த்து ஏன் பயப்பிடுற..? இப்போ சாமிக்கிட்ட தானே போறோம்.. அப்படியே இருந்தாலும், அவரு பார்த்துக்க மாட்டாரா..? பயப்படாம வாம்மா..." கையணைவில் அழைத்துச் சென்றார். அடுத்து நிகழப்போகும் அசப்பாவிதம் தெரியாமல்.

கிட்டத்தட்ட நாலுமணிநேரப் பயணம் அவர்கள் குலதெய்வம் கேவிலை அடைவதற்கு எடுக்கும்.. இரண்டு மணிநேரத்தை எப்படியே கடந்திருக்க... குழந்தையை மடியில் வைத்து உறங்கிப்போனவரை தன் தோளோடு சாய்த்துக்கொண்டார் ராஜேந்திரன்.

"கொஞ்சம் சீக்கரமா போப்பா.. போனாத்தான்.. கொஞ்சமா தூங்கி காலையில அசதி இல்லாம எந்திரிக்கலாம்." என டிரைவருக்கு கூற...

சரி என்றுவிட்டு அவரும் வேகமாக வண்டியை ஓட்டினார்.

இன்னுமும் அரைமணி நேரப்பயணம் தான். திடீரென காருக்கு என்னானதோ.. கார் மக்கர் பண்ணி சாலையிலேயே நின்று விட்டது கார்.

"என்னாச்சுப்பா..?" என ராஜேந்திரன் வினவ.

"தெரியலைய்யா.. என்னன்னு பார்க்குறேன்." என்றவாறு கதவை திறந்து கொண்டு இறங்கியவருக்கு, இனம்புரியாத குளிர்மையான உணர்வு.

சட்டென காருக்குள் இருப்பவர்களை குனிந்து பார்த்தவர், என்ன நினைத்தாரோ...

"சீக்கிரம் ரெடி பண்ணிடுறேன். நீங்க வண்டியவிட்டு இறங்காதிங்க." என்றுவிட்டு முன் புறம் சென்று ஆராய்ந்தார்.

காரில் பிரச்சினை இருப்பது போல் தோன்றவில்லை. உள்ளே சற்று பயம் எழுந்தாலும் அதை முகத்தில் பிரதிபலிக்கவில்லை அவர். முடிந்தவரை பிரச்சினை ஏதாவது தென்படுகிறதா என ஆராய்ந்தார்.

நீண்ட நேரம் ஏசி இல்லாத காருக்குள் ராஜேந்திரனால் உக்கார முடியவில்லை. வியர்த்து கொட்டியதில் கமலியும் எழுந்து விட்டாள்.

"ஏன் கார் இங்கேயே நிக்குது...?" என்க.

"கார்ல ஏதோ ரிப்பயர் போல.. இரு நான் என்னன்னு பார்த்திட்டு வரேன்." என டிரைவரிடம் சென்றவர்.

"என்னாச்சுப்பா..?" என்றார்.

சட்டென பின்னால் கேட்ட குரலில் பயந்து திரும்பியவர். ராஜேந்திரனை கண்டதும் "நீங்களா..?" என்றவனுக்கு அவர் கேள்விக்கு உடனேயே பதில் சொல்லத்தெரியவில்லை.

பின்னே இன்று நேற்றல்ல.... பதின்மூன்று வருடங்களாக வண்டி ஓட்டுபவனுக்கு, காரில் ஒரு கோளாறு வந்திருக்கிறது. அதை அவனால் கண்டு கொள்ள முடியவில்லை என்றால், அதை விட கேவலம் என்ன இருக்கமுடியும்.?

"அது ஐய்யா... எஞ்சின் சூடாகிடிச்சு.. தண்ணி எடுத்து வைக்க மறந்திட்டேன். குடிக்க வைச்சிருந்த தண்ணியும் தீர்ந்திடிச்சு.." என முழுப்ப..


"என்னப்பா நீ.. இந்த இருட்டில தண்ணிக்கு எங்க போறது.? என்றவர் கண்களில் தூரத்தே இருந்த குடிசையில் விளக்கு எரிவது தெரிந்தது..

"எனக்குன்னா எஞ்சின் சூடானது போல தெரியல.. இருந்தாலும் நான் தண்ணி எடுத்துட்டு வறேன். நீ வண்டில வேற ஏதாவது பிரச்சினை இருக்கான்னு பாரு.." காரில் இருந்த கேனினை தூக்கிக்கொண்டு அந்த குடிசை நோக்கி விரைந்தார்.


தன்னிடம் எதுவும் கூறாமல் செல்லும் கணவனையே உள்ளிருந்து பார்த்திருந்த கமலி, குழந்தையை தூக்கிக்கொண்டு காரிலிருந்து இறங்கியவள்.

"இந்த இருட்டில இவரு எங்கண்ணா போறாரு?"


"எஞ்சின் சூடாகிச்சும்மா... அதான் சார் தண்ணி எடுத்துவர போயிட்டாரு.. நீங்க உள்ள உக்காருங்கம்மா..."

"இல்லண்ணா உள்ள உக்கார முடியல.. ஒரே சூ..." என கூற வந்தவளுக்கு அப்போது தான் வெளிச்சுழல் உறைத்தது.

ஆம் கணவன் வேகம் கண்டு இறங்கியவள், ஊசிபோல் மயிர் கால்களுக்குள் நுழைந்த குளிரை அப்போது உணரவில்லை.
குளிர் கட்டியில் நின்றால் கூட இப்படி ஓர் குளிர் உடலில் ஊடுருவி இருக்குமோ என்னமோ..?

குழந்தையை தன்னோடு இறுக அணைத்துக்கொண்டு காருக்குள் நுழைவதற்கு கதவை திறக்க எத்தணித்தவள் கைளை தட்டிக்கொண்டு, காருக்கும் அவளுக்கும் இடையே கண்களுக்கு புலப்படாத ஏதோ என்று காற்றின் வேகத்தில் அவளை கடந்து சென்றது போல் தோன்றியது.

சட்னெ தலை திருப்பி பார்த்தவளுக்கு இருள் சூழ்ந்த அந்த இடம் பயத்தினை உண்டாக்க..

"அண்ணா உங்களுக்கு ஏதாவது வித்தியாசமா தெரியுதாண்ணா?" என்றாள்.

நிஜத்தில் அவருக்கு வித்தியாசம் தெரியாமல் இல்லை. எங்கு தன் பீதியினை சொல்லப்போய், அவளும் பயந்து விடுவாளோ என நினைத்தவராய்.

"இல்லயேம்மா... பயமா இருந்தா நீங்க உள்ள உக்காருங்கம்மா" என்றான்.

எங்கு மீண்டும் காரில் கையினை வைக்கப்போய், மறுபடியும் அதே நிகழ்வு நடந்திடுமோ என்று பயம் கொண்டவள்.

"கையில குழந்தையை வைச்சிட்டு கதை திறக்க முடியல... நீங்க வந்து திறந்து விடுங்கண்ணா.." என்று விட்டு ஒதுங்கி நின்க. அவள் நின்ற பக்கம் கதவினை திறந்தவனை, கயிறு கட்டி இழுத்ததைப்போன்று தூக்கி விசப்பட்டு மரத்தோடு அடிபட விழுந்து மயக்கமானான்.

இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை கமலினி.. கண்கள் மிரட்சியை கண்பிக்க.. தெரியாத உருவத்தை இருட்டினில் தேடியவளுக்கு, எந்த உருவமும் தெரியவில்லை. மாறாக தூரத்தே கேட்ட சிரிப்பொலியானது மெல்ல மெல்ல அவளருகில் கேட்க.. பின்னோக்கி பயத்தில் தடங்களை எடுத்து வைத்தவள்,


"என்னங்க... எங்க இருக்கிங்க.. சீக்கிரம் வாங்க.." என பெரிதாக கத்தியவள் குரல் எங்கோ நின்றவனுக்கு எப்படிக் கேட்கும்.

எத்திசை சிரிப்பொலி கேட்கிறது என்று தெரியாமல் எங்கு திரும்பி ஓடுவாள் அவள்.?

குழந்தையை நெஞ்சோடு இறுக்கிக்கொண்டவள்.

"யாரது.. எதுக்கு இப்பிடி ஒழிஞ்சிருந்து என்னை மிரட்டுற..? தைரியம் இருந்த நேரில வா..!" பயம் தான்.. தைரியமாக ஒன்றும் இந்த வார்த்தையை கூறவில்லை அவள். பதட்டத்தில் தானாக வந்த வார்த்தை அது.

"நானா...? நான் யாரென்று நீ அறிய சாத்தியமல்ல.. உனக்கும் எனக்கும் எந்த ஜென்மத்து தொடர்பும் இல்லை.. ஆனால் உன் கையில் தவள்கிறானே.. நீ பெற்றெடுத்தவன்.. அவனுக்கு என்னை நன்றாகத் தெரியும்.

அவன் உயிரோடு இருந்தால் என் ஆசை அனைத்தும் நிராசையாகிவிடும். அதனால் தான்.. அவன் சனித்த நாள் முதல் அவனை அழிக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தேன்.

உன் வீட்டை சுற்றிலும் வில்வ மரங்கள் இருந்ததனால், அவனை என்னால் நெருங்க முடியவில்லை.

எப்போது வீட்டை விட்டு அவனை அழைத்து வந்தாயோ.. அந்த பரமேஸ்வரன் மூச்சுக்காற்றுக்கு இணையான வில்வமரங்கள் சுவாசிக்கும் காற்றின் பரிசம் அவனை தீண்டவில்லை., அவனை சுழ்ந்திருந்த பாதுகாப்பு வளையம் உடைக்கப்பட்டு விட்டது. அவனை அழிப்பதில் இனி எந்த தடையும் இல்லை" என்ற ஆண் குரல் கேட்டு பயந்தே போனாள் கமலினி.

"மாட்டேன்.. என்னோட உயிரே போனாலும்.. என் குழந்தையை யாரும் எதுவும் செய்ய விடமாட்டேன்." பிறவிக் குருடன் போல் குரலுக்குரிய ஆண் கண்களில் தெரியாததனால், அங்கும் இங்குமாக அவனை தேடியவாறு குழந்தையை இன்னும் இறுக நெஞ்சோடு அணைத்து கொண்டவள் காதை கிழிப்பது போல் பலத்த சிரிப்பொழி.

நீ என்னை அனுமதிப்பது...? வீணாக தர்க்கம் செய்து உன் உயிரையும் மாய்த்துக்கொள்ளாதே..." என்று எச்சரித்து அந்தக்குரல் அடங்கிய மறு நிமிடம்.. தூரத்தே கருநிற புகைக்கூட்டம் மென்று திரளாகக் கிளம்பி அவளை நோக்கி நகர்வதை கண்டவளுக்கு உடலில் குளிர் பரவத்தொடங்கியது.

எங்கே இன்னும் சிறிது தாமதித்தால் ஏதாவது நேர்ந்து விடுமோ என பயம் கொண்டவளாய், ஓட அரம்பித்தவள் வலது காலினை எதுவோ பற்றிக்கொண்டது போன்ற பிரமை எழு.. குனிந்து பார்த்தாள்.

தார் சாலையானது பிளந்து உள்ளோடுய மரவேர் ஒற்று, அவள் கால்களை நகரவிடாது இறுகப்பற்றிகொண்டு அவளை இம்மியும் நகரவிடவில்லை.

காலினை அசைத்தசைத்துத்தான் பார்த்தாளே.. எங்கே.. இன்னும் சில வினாடிகளுக்குள் அவளை தொட்டுவிடும் அந்த கருநிறை புகைக்கூட்டம்.

இதற்குமேல் முடியாது என்று அதே இடத்தில் அமர்ந்து விட்டாள் அவள். ஆனால் குழந்தையை நெஞ்சுக்கிட்டுக்குள் அமத்திப்பிடித்த பிடி மட்டும் விலகவில்லை.


தலையினை மட்டும் நிமிர்த்தி பார்த்தவள் முன் அந்த கரும் புகையானது புகைத்தவாறு இருக்க.. திடீரெ அந்த புகைக்குவியலுக்கு நடுவே சம்மந்தமற்றித் தோன்றிய வெள்ளை நிறக்கண்களாே.. கொடு குழந்தையை என்றது அடித்தொண்டையால் சீறுவதைப்போல.

மாட்டேன் என தலையசைத்தவள், இப்போதாவது கணவன் வருகிறானா என திரும்பி பார்த்தாள்.
யாருமற்ற வெறும் சாலை.

"நீ என்ன தான் மனக்கணக்கு போட்டாலும்.. உன்னால் என் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது." என்ற அந்த உருவத்தின் விழிகள் ஏனோ அவளது பின்புறம் பார்த்து விட்டு பெரிதாக விரிந்தது.

அது விழி விரித்து பார்த்த பார்வையிலேயே அதன் பயமானது அப்பட்டமாகத் தெரிய.

தானும் அத்திசை திரும்பினாள் கமலினி.

இளுளைக் கிழித்துக்கொண்டு புயல் வேகத்தில் அவளை நாடி வந்துகொண்டிருந்தார் அந்த துறவி.

அவர் நடையின் வேகத்திற்கு ஏற்றாற்போல், உச்சந்தலையில் அணிந்திருந்த ஜடாமுடியும், கழுத்தில் போட்டிருந்த மண்டை ஓட்டு மாலையும் இதோ கழண்டு விடுகிறேன் என்பது போல் அசைய,

அதை எல்லாம் பொருட்படுத்தாது, கையில் ஒரு கோளோடு வேகமாக நடந்து வந்து வந்துகொண்டிருந்தவர் கண்களோ செவ்வானம்போல் சிவந்திருப்பது அவரைச்சுற்றி வட்ட வடிவில் வீசிய ஔிப்பிழம்பில் தெள்ளத்தெளிவாகவே தெரிந்தது.

பார்ப்பதற்கு பயங்கொள்ள செய்யும் தோற்றம் தான். இந்த நேரத்தில் இவர்களது நடமாட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்பதை அவளது சிறுவயதில் பாட்டி சொன்ன கதைகள் வழியே கேள்விப்பட்டிருக்கிறாள்.

இன்று அவளே இவற்றை எல்லாம் நேரில் காண்பாள் என்பதை அவளே நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள்.

இரண்டு திசைகளிலுமே அமானுஸ்ய உருவங்கள். நப்பிக்க வழி தெரியாது புகையுருவத்தை திரும்பிப்பார்த்தாள்.

வெளுறிக்கிடந்த கண்களும் கெஞ்சம் கொஞ்சமாக கருமையுற.. அந்த புகைக்கூட்டமும் சட்டென காற்றோடு கலைந்து அவள் கண்முன்னேயே மறைந்தது.
 
Top