• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

26. தத்தித் தாவுது மனசு

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
வழமைபோல் தன் அலுவலகம் செல்லத் தயாராகியவன், மாடியில் இருந்து கீழே வந்து மைலியைத் தேடினான்.

அவள் இல்லை என்றதும்,

விஜயா அறையினில் தான் இருப்பாள் என நினைத்து, விஜயாவினை காணச்செல்ல, அங்கு விஜயாவையும் இல்லை என்றதும் வெளியே வந்தவன்,

பூஜை அறையில் நின்ற ஈஸ்வரியிடம் வந்தவன்,
பூஜ முடியும் வரை பொறுமை காத்தான்.


"என்ன ஸ்ரீ... ஆஃபீஸ்க்கு தயாராகியாச்சா..?"

"ஆமா பாட்டி...! அம்மா எங்க...? வீட்டில அவங்க நடமாட்டத்தையே காணோம்"


"ஆமா ஸ்ரீ.. விஜயாவை மைலி தான் வெளிய கூட்டிட்டு போயிருக்கா..
எப்பவும் வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிறால்ல... இன்னைக்காவது வெளி உலகம் பாக்கட்டுமேன்னு நானும் அனுப்பி வைச்சிடேன்." என்றார்.



"அது சரி பாட்டி! ஆனா காலையிலேயே எங்கே அப்பிடி வெளிய போனாங்க?"


"பக்கத்தில இருக்கிற சிவன் கோவிலுக்கு ஸ்ரீ.
மைலிக்கு சிவன் சாமினா ரொம்ப இஷ்டமாம்... நேற்றே இதைப்பத்தி விசாரிச்சா... நானும் பக்கத்தில இருக்குனு சொன்னேன்.


அவங்க ஊர் நகுலேஸ்வர சாமியத்தான் தன்னால கும்பிட முடியல... உங்க ஊர் சிவன் சாமியையாவது கும்பிட்டுக்கிறேன். காலையில நானும் அம்மாவும் போய் வரட்டுமானு கேட்டா....

தப்பில்லையே! சரி விஜயா வந்தான்னா தாரளமா கூட்டிப்போ... தான் என்ன மறுக்கவா போறேன்னு சொன்னேன்.


விஜயாகிட்டேயும் நேத்தே கேட்டு சம்மதம் வாங்கிட்டா போல..... காலையிலேயே எழுந்து அவசர அவசரமா, விஜயாவை தயார் பண்ணி கூட்டிட்டு போயிட்டா. அவளுக்கு சிவன் சாமின்னா ரொம்ப இஷ்டம்ன்னு அவ ஆரவாரமா தயாராகும் போது நல்லாவே தெரியுது.



ரொம்ப நல்ல பொண்ணு.... ஆண்டவனும் யாரை எல்லாம் பிடிக்குமோ அவங்களத்தான் அதிகமாவே சோதிப்பான் போல.

பாவம் சின்ன வயசில என்னெல்லாம் தும்பம் அனுபவிக்கிறா..?" என கவலை கொண்டவராய் பெருமூச்சினை எடுத்து விட்டவர், கையினை பற்றிய ஸ்ரீ.

"விடுங்க பாட்டி! எல்லாமே சரியாகிடும். அப்பிடி இல்லையா... நம்ம சரி பண்ணிடுவோம். நீங்க அவளை பத்தி யோசிச்சு, உங்க உடம்ப கெடுத்துக்காதிங்க." என்று ஈஸ்வரியினை சமாதானம் செய்தவன் பேச்சில் இருந்தது நம்பிக்கேயோ, இல்லை நான் இருக்கும் போது என்னை மீறி அவளை எதுவும் நெருங்காது என்ற உறுதியோ எதுவோ ஒன்று அவன் முகத்தை இறுகச்செய்தது.





"சரி ஸ்ரீ உனக்கு ஆஃபீஸ்க்கு லேட்டாகிடிச்சு, நீ சாப்பிட்டு கிளம்பு." என்றார்.


மைலியை காணதது ஏமாற்றமாக இருந்தாலும், பாட்டியின் பேச்சுக்கு கட்டுப்பட்டவனாய்,
"ம்...." என தலையசைத்தவன் அதன் படியே செய்தான்.

காலை பத்து மணியிருக்கும், வேகமாக ஸ்ரீயின் ஆஃபீஸ் உள்ளே நுழைந்த செல்வம்,
கவுண்டரில் எதையுமே கவனிக்கும் நிலையில்லாமல் கடும் வேலையில் இருந்த
காயாவிடம் வந்தவன்,



"கொலைகாரப்பய இருக்கானா?" என்றவன் கேள்வியில், திடுக்கிட்டு தலை நிமிர்த்தி பார்த்தாள்.


கோபத்தில் மூச்சை வேகமா உள்ளிளுத்து வெளியேற்றி விட்டவாறு நின்றவனை கண்டவள்,


"ஓ.. நீங்களா சார்? என்ன கேட்டிங்க?" என்க.


"அந்த கொலைகார கம்மனாட்டி இங்க தான் இருக்கானான்னு கேட்டேன். கரணம் தப்பினால் மரணம் என்று உயிரை கையில பிடிச்சு, ஓட வைச்சிட்டானே நாதாரி.


கொஞ்சம் விட்டிருந்தா என்னை அந்த கொலைகார கனகரட்ணம் போட்டுத்தள்ளியிருப்பான். நல்ல வேளை! அம்மா செய்த புண்ணியம் தான் என்னை காப்பாத்தியிருக்கு.

இப்போ மட்டும் என் கையில கிடைச்சான்.... அந்த நாய் காரினாலையே அடிச்சு கொண்டிருப்பேன். யார் கிட்டை என்னை கோத்துவிட பாத்திருக்கான்?" என்று ஸ்ரீயை தாறுமாறாக திட்டியவன், கோபத்தில் யாரிடம் என்ன பேசுகிறோம் என்பதை மறந்து ஸ்ரீயை திட்டினான்.


"சார்...! கொஞ்சம் புரியுறா மாதிரி பேசுறீங்களா? சும்மா வந்ததில இருந்து, யாரை கேக்கிறீங்கனு தெளிவா சொல்லாம... உங்க பாட்டுக்கு புலம்பிட்டிருக்கிங்க", என்றாள் அவள் கோபமாக.

"ஏன்மா....! இங்க நான் என்ன ஜனாதிபதியையா தேடி வரபோறேன்? என்னை கொலை பண்ண... ஆள் செட் பண்ண அந்த கொலைகார ஸ்ரீ தான் கேட்கிறேன்"

தன் முதலாளியை மரியாதை இல்லாமல் பேசும் செல்வத்தை ஒரு மாதிரியாக பார்த்தவள்,

"புரியல்ல சார்! யாரை சொல்றிங்க?" என்றவள் பேச்சில் கொஞ்சம் மரியாதையாக பேசினால் நன்றாக இருக்கும் என்ற கண்டிப்பு கலந்திருக்க.

அவளது பேச்சில் கடுப்பாகியவன்,


"உனக்கு எப்பவுமே இதே வேலை தானா? அது தான் நான் யாரை சொல்லுறேன்னு தெரியுதுல.. அப்புறம் எப்பவும் போல புரிஞ்சும் புரியாதவ போல, புரியல, புரியலன்னா நான் என்ன லூசா?" என்று சத்தமாக கேட்டவன் கேள்வியில்,

காதில் விரலை நுழைத்து காதின் அடைப்பை கிளியர் பண்ணுவது போல திருகி.


"இப்போ தான் தெரியுதா நீ லூசுன்னு..? இங்க வேலைக்கு வந்த மறு நாளே நான் புரிஞ்சுகிட்டேன்." என்று செல்வத்துக்கு கேட்காமல் தலையை திருப்பி முனுமுனுத்தவள்,

"ஓ... நீங்க ஸ்ரீராமன் சார கேக்கிறீங்களா..? ஆனா கொஞ்சம் மரியாதையா பேசினா நல்லா இருக்கும். ஏன்னா இது அவரோட ஆஃபீஸ். அவரு எங்களுக்கு பாஸ்." என்று கண்டிப்பதைப்போல் கூறியவள்.,
நான் வேணும்னா அவர்கிட்ட நீங்க வந்த விஷயத்தை சொல்லிடவா?" என்று இம்முறை பணிவாக கேட்டவளிடம்,

"அவனெல்லாம் ஒரு பாஸா? அவனுக்கு எவன் ஸ்ரீராமன்னு பெயர் வைச்சானோ அவனை முதல்ல வெட்டணும். நீ அவன்கிட்ட ஒன்னும் கிழிக்க வேண்டாம். அவனுக்கு அந்த மரியாதை ஒன்னு தான் கேடு!


அவன் இங்க இருக்கானா? இல்லையா? அதை மட்டும் சொல்லு." என்றான்.


"உள்ள தான் சார் இருக்காரு!" என்றதன் மறு நொடி, அவன் அறை நோக்கி வேகமாக போனவன்,
அனுமதி கேளாமலே கதவை தள்ளிக்கொண்டு நுழைய,

அவனை எதிர்பார்த்திருந்தவன் போல, "வாடா மச்சான்..." என்று புன்னகைத்தான்.

அவனது சட்டையை பிடித்து
எதுக்குடா அந்த கொலைகாரனிடம் என்னை மாட்டிவிடப்பாத்தா, என்று கேட்கத்தான் காலையிலேயே செல்வம் ஸ்ரீயை தேடிவந்தான்.

ஆனால் அவனது வசிகர புன்னகையில் தன் கோபத்தை விடுத்து, அவன் எதிரே இருந்த இருக்கையை இழுத்து அமர்ந்து கொள்ள.

"என்ன மச்சான்.. காலையிலேயே இந்த பக்கம்?" என்று அவனிடம் பேச்சை கொடுத்தவாறு தன் லப்டாப்பில் கவனத்தை செலுத்த,
அவனது கேள்வியில் தான் எதற்கு வந்தேன் என சிந்தித்தவனுக்கு, போன கோபம் மீண்டும் வந்து ஒட்டிக்கொள்ள,

"அடேய்....! கொலைகார பயலே. எதுக்குடா என்னை யாழ்ப்பாணம் அனுப்பினா? உன்னால என்னை எதுவும் செய்ய முடியலன்னு... அந்த கனகரட்ணத்துகிட்ட அனுப்பி, என் சோலிய முடிக்க பாத்திருக்க.


நல்ல வேளை அவனோட அடியாற்கள் தூரத்தில வரப்பவே கண்டுட்டேன். அவங்க கையில மட்டும் மாட்டியிருந்தேன்னா... இன்னைக்கு என்னை சாம்பலா தான் பாத்திருக்கணும்..


அவன் பெரிய ரௌடியா இருப்பான் போலயே! அவனோட அடியாட்கள் மூணு ஜீப்ல என்னென்ன ஆயுதங்களோட இறங்குறாங்க தெரியுமா..?

நான் எல்லாம் அவ்ளோ பெரிய ஆளாடா...? அந்த ஜீப்புக்கு போடுற பெற்றோல்ட விலைக்கு கூட நான் மதிப்பில்ல... என்னை கொல்ல அத்தனை பேரு..!


படங்கள்ல மட்டுந்தான்டா இந்த மாதிரி சீன் எல்லாம் பாத்திருக்கேன்.
நல்ல வேளை..! முன்னாடியே வெளியே போனு சொன்னதனால தான் தப்பிச்சேன். இல்லனா அந்த செவிட்டு பயல மாதிரி நானும் கைசாலம் பாத்திருப்பேன் தெரியுமா?"

"பாவம்டா அவன்! அத்தனை பேரையும் பார்த்திட்டு பயந்தே செத்திருப்பான்.


ஏன்டா இந்த வேலை பண்ணா? நீ போகாமல் என்னை இந்த வேலைக்கு அனுப்புறப்பவே யோசிச்சிருக்கணும்.

இப்போ அதை நினைச்சாலும் நெஞ்சு பதறுதடா.... எனக்காவது ஒரு அறையோட உயிர் தப்பிச்சு... ஆனா அந்த செவிட்டு பயல...?" என்றவன்,



"ஆமா அந்த செவிட்டு பயலுக்கு என்னாச்சுன்னாவது தெரியுமா? இல்ல நீ உயிரோட இருந்தா போதும்.. அவனுக்கு என்ன ஆனா உனக்கென்னனு அப்பிடியே விட்டுட்டியா?" என்றான் கோபமாக,

லாப்டாப்பிலிருந்து பார்வையை அகற்றி அவனை பார்த்து, ஒர் நமட்டுச் சிரிப்பு சிந்தி விட்டு, மீண்டும் லப்டாப்பில் மூழ்கியவன் அருகில் எழுந்து வந்த செல்வம்,



" நான் பாட்டுக்கு என் உயிர் தப்பி வந்து விஷயத்தை மூச்சு திணற சொல்லிட்டிருக்கேன்.. நீ என்னடான்னா எவன் செத்தா உனக்கென்ன எங்கிறது போல உன் வேலையை பாத்திட்டிருக்க.

அப்பிடி என்னத்தை அந்த லப்டாப்பில நோண்டிட்டு இருக்க?


நீ செய்யிற எதுவுமே எனக்கு பிடிக்கலடா... உன் போதைக்கு நாங்களாடா ஊறுகா...!
பாவம்டா அவன்! அவனுக்கும் குடும்பம்னு இருப்பாங்கல்ல... அவனுக்கும் ஏதாவது ஆகிட்டா... அவன் குடும்பத்தக்கும் தானேடா இழப்பு?

நீ இந்த மாதிரி அக்கறை இல்லாம ஏனோ தானோனு இருக்கிறதைப் பார்க்க கோபமா வருது ஸ்ரீ." என்று உண்மையில் அந்த தடியனுக்காக செல்வம் வருத்தப்பட,

தன் மடிக்கணனியினை அவன் புறம் திருப்பியவன்,

"இதை பாரு செல்வம்." என்று அவன் கோபம் புரிந்தவனாய் ஸ்ரீ தன் லாப்டாப்பினை அவன் புறம் திருப்பி விட,
அதில் வீடியோ ஓபன் ஆவதற்கு சுற்றுவதை கண்ட செல்வம்.


"நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டிருக்கேன்... உனக்கு இப்போ படம் பாக்கிறது தான் முக்கியமா?" என்று உண்மை எதுவென புரியாமல் சீறியவன் காதுகளில்,

"ஓ... நீதானா என் மைலிய கடத்தி வைச்சிருக்கவன்?" என்ற குரல் கேட்டு குரலில் திரும்பி மடிக்கணனியை பார்த்தவனுக்கு, அதிசயமாகிப்போனது.

ஆம் செல்வம் அங்கிருந்து போனதன் பின் நடந்தவற்றை அவனது மடிக்கணனியானது தத்துருவமாக காட்டியது.

செல்வம் அந்த தடியனை மாட்டிவிட்டு போக, போகும் செல்வத்தை கேலியாக பார்த்த கனகரட்ணம், தடியன் புறம் திரும்பி,



"நீ தான் இதுக்கெல்லம் கரணமா? என் மைலியை எங்க வைச்சிருக்க? மரியாதையா அவளை என்கிட்ட கொண்டுவந்து ஒப்படைக்கிறியா? இல்லையா?.." என்றான் மிரட்டலாய்.

அவனோ முன்னர் நின்றதைப் போல் அமைதிகாக்க கோபம் கொண்ட கனகரட்ணம்.
அவனை நெருங்கி அவனது சட்டை காலரில் கொத்தாக பற்றி,



"என்ன தைரியம் இருந்தா... நான் கேட்டிட்டே இருக்கேன், நீ ஏதோ பராக்கு பாக்கிறவன் போல எங்கேயோ பாத்திட்டு நிப்ப?

என் மைலிய ழிச்சு வைத்ததும் போதாதுன்னு, என் முன்னாடியே வந்து நெஞ்ச நிமித்தி விறைப்பா நிப்பியோ.!

என் மைலி மேல கை வைச்ச உன்னை சும்மா விடமாட்டேன்டா.
எங்கோ வந்து மோதிட்டோம்னு உன்னை ஒவ்வொரு நிமிஷமும் கவலைப்பட வைக்கல... நான் கனகரட்டணம் இல்ல " என்றவன்.


"டேய் இவனை கவனிங்கடா!" என்று தன் அருகில் நின்ற இருவரையும் ஏவ,

அவர்களும் தன் ஏஜமானுக்கு கட்டுப்பட்டவர்கள் போல் அவனை நெருங்க, முன்னே வந்தவனுக்கு விட்ட ஒரே அடியில் சுழண்டு கொண்டு போனவன், பின்னே வந்தவனையும் தள்ளிவிட்டு அவன் மீது விழுந்து சுறுண்டு கிடந்தான்.

அவர்கள் இருவரும் அந்த தடியனின் ஒரே அடியில் சுறுண்டிருந்ததை கண்ட கனகரட்ணம்.


"ஏன்டா நாய்ங்களா! உங்களுக்கு வெக்கமா இல்ல. அவனோட ஒரே அடிக்கு இந்த மாதிரி சுறுண்டு கிடக்கிறீங்களே!


நீங்க எல்லாம் ஆம்பிளங்க தானா?" என தரையில் அடித்தவலி தாங்காமல் உருண்டவாறு கிடந்தவர்களிடம் கோபமக சீறியவன்.
அந்த தடைியனை தான் அடிப்பதற்காக நெருங்க, காலால் எட்டி அவன் நெஞ்சின்மேல உதைந்தான்.



அந்த உதை இடிபோல் நெஞ்சில் இறங்க, நான்கு அடி தள்ளி மல்லாக்காக விழுந்தவன் அருகில் சென்று மறுபடியும் நெஞ்சின் அவன் மிதிக்கும் போது தான், ஜீப்பில் வந்தவர்கள் ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்தனர்.

அவனது காலின் அடியில் கிடந்த கனகரட்ணத்தை கண்டவர்கள்,


"பாஸ் நீங்க விலகுங்க... நாங்க கவனிச்சுக்கிறோம்." என்க.


"இவனை நான் பாத்துக்கிறேன். இவன் வட்டிக்கு விட்டு, ஏழைங்க வயத்தில அடிச்சு சம்பாதிச்ச பணத்தினால தான்டா இந்த வீடு இந்த ராஜகம்பீரத்தோட இருக்கு. இந்த டீப்போவை தவிர, ஒரு சென்கல்லை கூட மிச்சம் வைக்காமல் எல்லாம் அடிச்சு நொருக்குங்கடா...! எந்த பொருளும் உருப்படியா இருக்க கூடாது." என்று ஆக்ரோஷமாக அவன் கர்ஜிக்க.

அவன் கூறிய மறு நொடியோ வந்த கும்பல் ஜன்னல், கதவில் இருந்து.. சிறு கிளாஸினை கூட விடாமல் தாறுமாறாக நொருக்கித் தள்ளினார்கள்.

எந்த பொருளுமே உருப்படியாக இல்லை. போரினால் குண்டு விழுந்து சிதைந்த வீடுபோல் சல்லி சல்லியாக தரையில் கால் பதிக்க இடமில்லாமல் பொருட்கள் எல்லாம் நொருங்கி இருந்தது.

கனகரட்ணம் கூட அவர்களின் ஆக்ரோஷத்தினை கண்டு கதி கலங்கிப்போனான்.


"யார்டா நீங்க எல்லாம்? எதுக்குடா இப்பிடி பண்றீங்க?" என்று அவனும் தன் கம்பீரத்தை விட்டுக்கொடுக்காமல், நெஞ்சை அழுத்தியிருந்த அவனது காலை தட்டி விட்டு எழுந்து அமர்ந்தவன், வாய் மீது ஒரு குத்து விட்டவன்.


"யார் கிட்ட பேசுறோம்னு தெரிஞ்சு மரியாதையா பேசுடா!" என்றவன்,
மறுபடியும் மூன்று குத்து தொடர்ந்து விட்டு, அவனது ரத்தம் கக்கும் வாயினையே பார்த்தவாறு.

"இது எதுக்கு தெரியுமா? எதுவும் அறியாத அப்பாவி பொண்ணை ஏமாத்தி எக்கச்சக்கமா வட்டி கேட்டதும் போதாதுன்னு.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தப்பு தப்பா பேசினியே அதுக்குத்தான்." என்றவன்,


அவன் சட்டை காலரை பிடித்து தூக்கி நிறுத்தி, தாறுமாறாக உடல் பாகங்களின் எலும்புகள் நொருங்கும் வரை அடித்து உடைத்து கனகரட்ணத்தை பந்துபோல் விளையாடினான்.
அவன் தன் உடலைக் கூட தூக்க முடியாமல் தொய்ந்து, நிற்க முடியாமல் நிற்க,

அவனது ஆண் உறுப்பின் மீது ஓங்கி ஒரு உதை விட்டவன்,


தாவும்......
 

Smiley

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 28, 2022
Messages
14
Super adi...thadiyannu solli selvam sonnadhu ivana adhunnu selvathuke peedhi aagitukkum😅😅😅👌👌👌kanagu ku idhulam thevaithaan.avan wife ennachu therilaye.. nice ud
 
Top