• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

27. உன்னாலே உயிரானேன்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
"நீங்க என்ன வேணாலும் சொல்லுங்க.. ஆனா நான் சம்மதிக்க மாட்டேன்."

ஏன் சித்ரா... அவ என்ன எப்போவுமா கேட்கிறா...? பத்தே நாளைக்கு தானே.. போயிட்டு வரட்டும் விடும்மா..." என்றார் மகளுக்கு பரிந்து பேசும் விதமாய்.

"பத்து நாளில்லங்க... அது பத்து மணி நேரமா இருந்தாலும்.. அவ்ளோ தூரமெல்லாம் அவளை அனுப்ப மாட்டேன்."


"அவ மட்டும் போகலம்மா... அவகூட நிறைய பேரு போறாங்க..
அப்புறம் நீ ஏன் பயப்பிடுற...?

ஏதோ உலக சாதனை பண்ணப் போறாங்களாம்.. சாதிச்சு ஒரு மெடலோட நம்ம முன்னாடி நம்மா பொண்ணு வந்து நின்னா நமக்குத்தானே பெருமை..."



"தனிமையில அவ்ளோ தூரமெல்லாம் போய்... இவ தேடிட்டு வர எந்த பெருமையும் எனக்கு வேண்டாங்க.. நான் என்ன டசன் பிள்ளைங்களா பெத்து வைச்சிருக்கேன்? எனக்குன்னு இருக்கிற ஒரு குழந்தை...." என மேல சொல்ல முடியாது தொண்டைக்குள் வார்த்தை சிக்கிக்கொள்ள,

கண்கள் தானாய் தன் வேலையினை ஆரம்பித்திருந்தது. தன் இயலாமையினை மறைப்பதற்காய், முகத்தினை மறுபுறம் திருப்பிக் கொண்டு முந்தானையினால் மூக்கை உறிஞ்சினார் சித்ரா.



அதுவரை சாப்பாட்டு மேசையில் அமர்ந்து, இரு கைகளினாலும் தாடைக்கு முண்டு கொடுத்து அப்பாவி போல், இருவரது வாதத்தினையும் கேட்டுக் கொண்டிருந்தவள், தாயின் கலக்கம் கண்டது, இருக்கையை விட்டு எழுந்து சித்ராவிடம் ஓடியவள்,

அவர் கைகளை பற்றி அழைத்து வந்து, தான் அமர்ந்த இருக்கையில் அமர்த்தி, அவர் மடி மீதே பக்கவாட்டில் அமர்ந்து, அவர் முகத்தை தன்னை பார்க்கும் விதமாய் திருப்பியவள்..

"இப்போ என்னம்மா நடந்து போச்சு....? உன்னை மீறி நான் எங்கம்மா போயிருக்கேன்.
என்மேல உனக்கு நம்பிக்கை இல்லன்னா விடும்மா... நான் எங்கேயும் போகல..
என்ன... உங்க மேல இருக்கிற நம்பிக்கையில எல்லாருக்கும் சம்மதம்ன்னு சொல்லிட்டேன். அதுவுமில்லாம யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு கிடைச்சிருக்கு.. இதனால நிறைய பெயர் வேற கிடைக்கும்.

அதனால என்ன...? உன் நிம்மதிய விட இந்த பெயரும் புகழும் எனக்கு பெருசில்லம்மா..
எனக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம்.

நீ கவலைப்படாதம்மா..! நாளைக்கு காலையில போய், முதல் வேலையா வரலன்னு சொல்லிடுறேன்.. சரியா..?" என்றாள்.


மகள் அப்படி சொல்லும்போதோ அவள் முகத்தில் வருத்தம் தெரிந்தது. அதை மறைப்பதற்கு பொய்யாக புன்னகைத்து தாயை தேற்றுவதை அவள் தந்தை மாத்திரமல்ல. சித்ராவும் கவனித்தாள் தான்.


"சரிம்மா... டைமாச்சு.. நான் போய் தூங்குறேன்." என எழுத்து சென்றவள் நடையில் வழமைக்கு மாறாக உற்சாகம் இல்லை.


அறைக்குள் நுழையும் வரை பொறுமை காத்த வினோத்.



'ஏன் சித்ரா.... எப்போ தான் நீ அவளை புரிஞ்சுக்க போற...?
இந்த தடவை இல்லை.. பல தடவை உனக்கு நான் புரிய வைச்சிட்டேன். அவ கூண்டுக்கிளி இல்லை.. பருந்து.. வானத்தில இருந்து பூமியை ரசிக்க வேண்டியவ..
அவ இப்போ நம்ம பிள்ளையா இருக்கலாம்மா.. ஆனா அவ அந்த பரமேஸ்வரன் குழந்தை... நீ பயப்பிடுற மாதிரி, அவளை யாராளையும் எதுவுமே செய்ய முடியாது. அவளுக்கு துணையா பரமேஸ்வரனே இருக்கிறப்போ.. நீ ஏன்டா பயப்பிடுற..?


நீ முடியாதுன்னு சொன்னதுமே நொருங்கி போயிட்டா.. அதை நமக்கு காமிக்காம... உன்னோட கலக்கம் கண்டு தேற்றிட்டு போறவளை, தேற்ற நாமளும் ரெடியா இருக்கணும்.. கார்ல வரப்போ எவ்ளோ ஆசையா சொல்லிட்டு வந்தா தெரியுமா..?


இந்த வாய்ப்பு யாருக்குமே கிடைக்காதாம்டா.. அவளோட ஆஃபீஸ்ல பத்து பேரை தான் தேர்ந்தே எடுத்தாங்களாம்." என்று அவளுக்கு புரிய வைக்கும் எண்ணத்தில் கூறிக்கொண்டிருந்தவரையே சிறிது நேரம் கவனித்து கொண்டிருந்தவள்.

"பேசி முடிச்சிட்டிங்கன்னா தூங்க போகலாமா...?" உணர்வே அற்ற வார்த்தைகளை உதிர்த்து விட்டு எழுந்து சென்றாள்.

வினோத்திற்கு தான் புஸ் என்று போக, அதன் பிறகு பேசி பயனற்றது என்று அவள் பின்னே சென்றார்.


இங்கோ தன் குருவான வரவை எதிர்பார்த்து காத்து நின்றான் மலைமாறன்.

அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்காது, பன்னிரண்டு மணி என்றதும் ஆயராகி விட்டார் அவனது குரு.


"என்ன மலைமாறா... என்னை எதிர்பார்த்து காத்திருக்கின்றாய் போல.... உன் திட்டங்கள் எப்படிச் சென்று கொண்டிருக்கிறது." என்றார்.



"எல்லாமே அப்படியே தான் இருக்கின்றது குருவே. என்னால் அடுத்த அடியினை எடுத்து வைக்க முடியவில்லை. இப் பிறப்பிலும் மதுஸ்ரீ நிச்சயம் எனக்கு கிடைக்க மாட்டாள்." என்றான் சோர்வாக.

"இதற்கே சோர்ந்து விட்டால் எப்படி...? செல்லும் வழியில் ஆயிரம் தடங்கல் வரலாம். வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்றால்.. அந்த தடைகளை தகர்த்த வேண்டும்."


"தடைக்கல்லாக அந்த பரமேஸ்வரனே இருக்கின்றானே குருநாதா..! எப்படி அவரை என்னால் எதிர்த்திட முடியும்?"



"உன் ஆதங்கம் புரிகிறது மலைமாறா..
மதுஸ்ரீயின் உடல் தீண்டும் பரமேஸ்வரனது பூநூல் இருக்கும் வரை அவளை உன்னால் நெருங்கிட முடியாது. அதை அவளுமே உணர்ந்து எச்சரிக்கையாகி விட்டாள். அதனால் உன்னால் அவளை உன் வசியக்கட்டுள்குள் கொண்டு வரமுடியவில்லை என்ற கவலை.

அது தான் ஆண்டுக்கு ஒரு முறை வரும் அமாவாசை திதி நெருங்குகிறதே!. அப்போது உன் எண்ணம் ஈடேறும்." என்றவரை மலைமாறன் புரியாது நோக்கினான்.

"என்ன மலைமாறா மறந்து போனாயா...?
மனிதர்களின் ஒரு வருடமானது.. தேவர்களுக்கு ஓர் நாள் கணக்கு. ஆறு மாதகாலங்கள் பகல் பொழுது என்றால்.. ஆறு மாத காலம் இராப் பொழுது. அதாவது ஆடி மாத அமாவைசை நாளில் ஆரம்பிக்கிறது அவர்கள் உறக்கும் நேரம்.

அந்த காலப்பகுதிக்குள் தான் அவர்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் ஆன்மாக்களுக்கு விடுமுறை வழங்கப்படும்.

தேவர்கள் தம் கடமையினை உலகாழும் பரமேஸ்வரனிடம் கொடுத்து விட்டு.. உறங்க சென்று வினாடி நேரத்தின் பின்னர் தான், தன் தியானநிலை கலைப்பார் பரமேஸ்வரன்.


அந்தக் குறுகிய காலப்பகுதிக்குள் எந்தவொரு தெய்வத்தின் சத்தியாலும் எந்த ஒரு கிரகத்தையும் ஆழ முடியாது.

அதாவது அண்டம் சத்தியற்று ஸ்தம்பித்து விடும்.

அந்த சிவனைக்கூட அந்த நேரத்துள் தீய சத்தி ஆட்டி வைக்கலாம். அந்த நேரத்தில் மதுஸ்ரீயை நீ உன் கட்டுக்குள் கொண்டு வா மலைமாறா..

யாராலும் உனக்கு தடை போடமுடியாது. அதற்கு இன்னும் மூன்றே நாட்கள் தான் மீதமாக இருக்கின்றது." என்றார்.

அவர் கூறக்கூற விழி விரித்து ஆனந்தமானவன், திடீரென பியூஸ் போன பல்புப்போல் சோகமாக.



"நான் கூறிய தகவல் சாதகமான தகவல் தானே மலைமாறா.. பின் எதற்கு கவலை.."

"இல்லை குருவே.. மூன்று நாட்களுக்குள் மதுஸ்ரீயால் ஆதிரனுக்கு நினைவு வந்து, அவனுடன் இணைந்து விட்டாள்."



"இல்லை மலைமாறா... அங்கு தான் அந்த பரமேஸ்வரன் அழகான முறையில் ஓர் நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்." என்றார் மீண்டும் மலையாறனை குழப்பும் முயற்சியில்.


"புரியவில்லையே.. குருவே!" என்றான் இமைகள் விரித்து.

'ஆம் மலைமாறா.. அவன் நினைவலைகளை உன்னாலும், என்னாலும் அன்றி, அந்த மதுஸ்ரீயால் கூட கொண்டு வரமுடியாது.

அதுவுமின்றி பார்வதி தேவியரின் மாங்கல்யத்தை மதுஸ்ரீ கழுத்தில் ஆதிரன் கட்டினாலே அன்றி, அவர்கள் திருமணம் முழுமையாகாது." என்றார் பூடமாய்.


"இல்லை..! எனக்கும் இன்னமும் குழப்பமாக உள்ளது. பார்வதி தேவியரின் மாங்கல்யாம் இன்றி, அவர்கள் வாழ்வில் இணைய முடியாது. அது தெரியும்..
இது என்ன புது குழப்பம்..
எதிரியால் அவன் நினைவுகள் மீழ்வதா..?"



"அதே சந்தேகம் தான் எனக்கும். ஆதிரன் பிறந்திருந்த பொழுது, அவனை கொள்வதற்காக நானே நேரடியாக சென்றேன் மலைமாறா... அவனை கொள்வதற்குள் அந்த சுடலையை ஆண்ட ஈஸ்வரன் வந்து தடுத்ததும் இல்லாமல், நான் அறியாதவாறு சூழ்ச்சி ஒன்றினையும் வகுத்திருக்கிறார்." என்றார்.


"சரி தான் குருவே...! ஆனால் இப்போது என் சந்தேகம் என்னவென்றால்,
ஒருவேளை நான் என் சுய முகத்தோடு இருந்திருந்தால்.. முதல் பார்வையிலேயே என்னை அந்த ஆதித்தியன் இனம் கண்டிருப்பானா..?" என்றான்.


"இருக்கலாம் மலைமாறா... அதே சமயம் இப்படி இலகுவான முறையில் தீர்வொன்றினை அவர் வைத்திருக்க மாட்டார்.

அப்படி கொடுத்தால் அவர் பொழுது கழிவது கடினமாயிற்றே.. நம்மை ஆட விட்டு அதை இரசிப்பதில் தான் அவர் ஆனந்தமே.

என்னை பொறுத்தவரை உள்ளே ஓர் சூழ்ச்சியை வைத்திருக்கிறார் என்று தான் தோன்றுகிறது. எதற்கும் எச்சரிக்கையாக இரு. முடிந்தவரை ஆதிரனை நெருங்குவதை தவிர்த்துக்கொள்!" என எச்சரித்தார்.


"தவிர்ப்பதா...? அது எப்படி...? இன்னும் இரண்டே நாளின் பின்னர், பத்து நாட்களுக்கு அவனுடன் தானே முழுப்பொழுதினையும் கழிக்க முடியும்." என்றான்.


"நல்லது தானே மலைமாறா.. முன்றாவது நாள் அமாவாசை திதி.
ஆதிரனோடு மதுஸ்ரீயும் உன்னுடன் தானே இருப்பாள்.
அப்போதே ஆதிரனை கொன்று... மதுஸ்ரீயை மணந்து கொள்!" என பெரும் சதி வகுத்துக்கொடுத்தார்.




நினைப்பது எதுவும் நடந்து விடுவதில்லை.. அதே வேளை நம் எண்ணங்களே அதை நிறைவேற்றித் தரும். என்பது நம்பிக்கை.

இங்கு இவர்கள் திட்டம் பலிக்குமா என்று அந்த பாராழும் பரம் ஜோதி தான் முடிவெடுக்க வேண்டும்.




இன்றும் காலையில் பரபரப்போடு எழுந்து தயாராகியவள் கையினில், பத்து நாட்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பெட்டியினை மதுஸ்ரீ கையில் கொடுத்த சித்ரா.


"பத்திரமா போயிட்டு வாடா..? அடிக்கடி அம்மாவுக்கு கால் பண்ணி.. எங்க இருக்கிங்க.... எப்படி இருக்கிங்கன்னு தகவல் தரணும்.. இல்லன்னா நானும் அப்பாவும் கிளம்பி வந்திடுவோம்." என்றவர் கன்னத்தை கிள்ளி வாயில் ஒற்றிக்காெண்டவள்,

"ஏம்மா நான் என்ன பக்கத்து தெருவுக்கா போறேன். உடனேயே கிளம்பி வந்து என்னை பார்க்க..?

பத்து நாளைக்கு கடலுக்கு நடுவில ட்ராவல் பண்ணப் போறோம்மா.. சாட்லைட் மூலமா நிகழ்ச்சியை நேரடி தொகுத்து வழங்கி சாதணை பண்ணபோறாேம். இதை முதல் முறையா நாங்க தான் முயற்சி பண்ணுறோம்.

இந்த ப்ராஜெக்ட் மட்டும் ஓகே ஆகிடிச்சுன்ன... பெரிய அளவில சாதிச்ச பெருமையோட.. கௌரவ விருதும் கிடைக்கும்." என மேடை ஏறும் அந்த தருணத்தை நினைத்து கனவு கண்டவள் அறியவில்லை.

இந்த பத்து நாட்கள் தாம் எதையும் சாதிக்கப்போவதில்லை.. மாறாக துன்பங்களை பலவற்றை சந்திக்கப் போகிறோம் என்பதை.


"கடலுக்கு நடுவிலன்னா போன் கூட பேச முடியாதேடி..! அப்புறம் எப்படி கால் பண்ணுவ.."

"இதை தானேம்மா அப்பா நீ சம்மதிச்ச நாள்ல இருந்து சொல்லுறார்." என்றாள்.

ஆம் சித்ரா அவளது மயனத்திற்கு சம்மதித்து விட்டார்.

மகளது வாடிய முகமும், வினோத்தின் பேச்சுமே அவரை மாற்றியிருந்தது. அதனால் விடியலின் போதே மகளுக்கு இன்ப அதிர்ச்சியாக தன் சம்மதத்தை கூறி விட்டார்.

அதன் பின் மதுஸ்ரீயை பிடித்திட முடியுமா..?



"எனக்கு எதுவுமே ஆகாதும்மா.. உன் பொண்ணு கெட்டிக்காரியாக்கும்.. கப்பலே கவிழ்ந்தாலும்... நிச்சலடிச்சு உன்னை தேடி வந்திடுவேன்." என்றவள்.

"அப்பா போட்டோ எடுத்து வைச்சியாம்மா... பத்து நாளைக்கு போட்டோவில மட்டும் தான் முழிக்கணும்." என்றாள் கவலையாக.

"அதெல்லாம் வைச்சாச்சு வைச்சாச்சு... கூடவே என் போட்டோவும் இருக்கு. என்னை விட்டு போறல்ல.. தண்டனையா அப்பாகூட சேர்ந்து... என்னிலயும் முழிச்சுக்கோ." என்றார் முகத்தை திருப்பி.


செல்லக் கோபம் தான். அதில் மகளை பிரியும் கவலை அப்பட்டமாகவே தெரிந்தது.

"அம்மான்னா அம்மா தான்.. நானே சொல்லணும்னு நினைச்சேன் டியர். என்னை நல்லா புரிஞ்சு வைச்சிருக்கிங்க." என அன்னையை வாரி அணைத்துக்கொண்டவள், தந்தையையும் ஆசையாக அணைத்து கன்னத்தில் முத்தம் வைத்தவள்,

"டைமாச்சுப்பா... போலாமா..?" என்றாள்.

ஏனோ வினோத்திற்கு பேச்சு வரவில்லை. வெறுமனையே தலையினை ஆட்டிவிட்டு, முன்னே நடந்தவர் கண்கள் கலங்கியதை கண்டுவிட்டாள் மதுஸ்ரீ.

இதுவரை மகளை பிரிந்தறியாதவர் ஆயிற்றே.. முதல் முறை தூரப் பயணம் எனும்போது, அந்த பிரிவு கண்ணீரை வரவைத்தது. எங்கே பேசப்போய் குரல் காட்டிக்காெடுத்து விடும் என்றுதான், தலையினை மட்டும் ஆட்டிவிட்டு நடந்தார்.

ஆனால் கண்ணீர் அப்படி இல்லையே.. எங்கே காட்டிக்கொடுக்கலாம் என்றல்லவா நிற்கும்.

அவருடன் அமைதியாகவே காரில் ஏறப்போனவள், ஓடி வந்து மீண்டும் அன்னையை கட்டிக்காெண்டாள்.


"அப்பாவை நல்லா பார்த்துக்கோம்மா.. எனக்கு அப்பாவ இருந்தாலும்.. குணத்தில குழந்தைம்மா.. உன்னை நம்பி விட்டுட்டு போறேன். நல்லா பார்த்துக்கோ" என மீண்டும் மீண்டும் எச்சரித்ததன் பின்னரே காரில் ஏறிக்கொண்டாள்.
 
Top