• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

27. தத்தித் தாவுது மனசு

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
"ஏன்டா கிழட்டு நாயே...
எல்லாம் செத்துப்போய்.. வாய்கு அரிசி போடவேண்டிய வயசில.. உனக்கு அறுகு அரிசி கேக்குதோ...?

அதுவும் உன் பொண்ணுக்கு சமமான வயசு பொண்ணு வேணும்..... இது இருந்தால் தானே இந்த மாதிரி சின்ன பொண்ணுங்களை கட்டிக்க மனசு ஏங்கும்" என்றவன் மீண்டும் அதில் எட்டி மிதித்தான்.



வலி தாங்க முடியாமல் தன் ஆண் உறுப்பினை பொத்திக்கொண்டு தரையில் சுறுண்டு கதறியவனை அசிங்கமாக பார்த்தவன்,

பக்கத்தில் நின்ற தன் அடியாலின் கையிலிருந்த கத்தியினை பிடிங்கியவன், அவனை கொலை வெறியோடு நெருங்கினான்.

இத்தனை நேரம் கிச்சன் வாசலில் ஓரமாக பயத்தில் நடிங்கியவாறு நடப்பவையை பார்த்து கொண்டிருந்த கனகரட்ணத்தின் மனைவி,
தன் கணவனின் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்து, ஓடிச்சென்று குறுக்கே நின்றவள்,

"ஐயோ அவரை எதுவும் பண்ணாதிங்க. அவரு என்ன தப்பு பண்ணியிருந்தாலும் இந்தளவு தண்டனை போதும்..

திரும்ப இதே தவற செய்ய மாட்டாரு விட்டிடுங்க..." என்று அவள் கெஞ்ச,
அவனோ அவள் மேல் கருணை காட்டாமல், அவளை ஓரமாக தள்ளி விட்டு முன்னோற, அவனது தள்ளலில் தடுமாறி தரையில் விழுந்தவள்,
தனக்கு அடிபட்டு விட்டது என்று பார்த்தால் கணவன் உயிர் போய்விடும் என மூளை எடுத்துரைக்க,

தன் வலியினைக்கூட பொருட்படுத்தாமல், மீண்டும் அவன் கால்களை அசைய விடாது பற்றிக்கொண்டவள்,



"ஐயோ அவரை விடுங்களேன்... இனி அவரு இதே தவற செய்ய நான் விடமாட்டேன். என்னை முண்டச்சி ஆக்கிடாதிங்க... உங்க கூடப்பிறந்த அக்காவா நினைச்சு.. எனக்கு தாலி பிச்சை தாங்க" என கெஞ்ச,
அவளது பேச்சில் மனம் சஞ்சலமானவன்,
அவளை எழுப்பி,

"இந்தளவுக்கு உன் புருஷனுக்காக கெஞ்சிறியே.. அவன் உன் வாழ்கையை ஒரு சின்னப் பொண்ணுகூட பங்கு போட பார்த்தான் தெரியுமா?.." என்றான்.

"தெரியும் தம்பி! ஆனா என்னால என்ன செய்ய முடியும்? நான் தான் எதுவும் சொல்ல முடியாத மலடியாச்சே! என்ன நல்லது சொன்னாலும், பிள்ளை பெத்து தரமுடியாத மலடி. வாயை மூடுன்னு என் வாயை அடைச்சிடுவாரு.



எனக்கு இந்த மைலி பொண்ணு விஷயமும் தெரியும் தம்பி!
அந்த பொண்ண இந்த வீட்டுக்கு இந்த மனுஷன் அழைச்சிட்டு வந்திருந்தாக்கூட,
இந்தாளுக்கு தெரியாமல் அந்த பொண்ணை எங்கேயாச்சும் கண்காணத தேசம் அனுப்பி வைச்சிருப்பேன் தம்பி." என்று தனது எண்ணத்தை கூற.

"ஏன்ம்மா நல்லா யோசிச்சு சொல்லு.. இவன் உனக்கும் உண்மையானவன் இல்ல. ஊருக்கும் நல்லவன் இல்ல. இவன் கண்டிப்பா உயிரோட இருக்கணுமா?"



"அவர் எப்பிடியோ என் புருஷனாச்சே..! நல்லவரோ கொட்டவரோ காலம் முழுக்க இந்த ஒரு பொட்டு குங்குமத்துக்காகவாவது எனக்கு இவர் வேணும்." என்று அவள் கெஞ்ச.

சற்று தள்ளி வந்தவன், காதில் இருந்து நழுவிப்போன மிஷினை வசதியா அழுத்தியவன்,


" ம்...., சரி,.... ஓகே!" என்று தனக்குள் பேசிவிட்டு அவளிடம் வந்தவன்,


"உனக்காக மாத்திரம் தான் இந்த நாயை உயிரோடேயே விடுறேன். இதுக்கப்புறம் வட்டி, பொண்ணுன்னு திரிஞ்சான்னு கேள்வி பட்டேன்.... அப்புறம் கருணையே இல்லை." என்றவன்,


கிழே கிடந்த கட்டையை எடுத்துக்கொண்டு
கனகரட்ணம் அருகில் சென்றவன், கதறக்கதற, தாறுமாறாக அவனது கால் எழும்பினை அடித்தே நொருக்கினான்,

"ஆயுசுக்கும் நீ எழுந்து நடக்கக்கூடாது. இது மைலிய உன் மனைவியா நினைச்சு பார்த்ததுக்குத்தான்.


பார்த்ததுகே இப்பிடினா.. அவளை மனைவி ஆக்கிருந்தேன்னா உன் நிலமை என்னன்னு நினைச்சு பாரு! இந்த மாதிரி அருமையான மனைவியை ஏமாத்த எப்படிடா உனக்கெல்லாம் மனசு வருது?" என்றவன்.



கையிலிருந்த கட்டையை தூக்கி வீசிவிட்டு, செல்வம் தந்து விட்டு போன காகிதத்தை எடுத்து நீட்டியவன்,


" இதில் உன் சைன் வை! என கட்டளையிட்டான்.

கனகரட்ணம் தயங்க,
"என்னங்க.... முதல்ல கையெழுத்த வையுங்க." என்று அவனை உறுக்கிய அவன் மனைவியின் பேச்சுக்கு கட்டுபட்டு,
மறு பேச்சு பேசாமல் கையெழுத்து வைத்து கொடுக்க, அதை பத்திரமாக மடித்து சட்டை பையில் வைத்தவன், குனிந்து எதையாே எடுக்க வீடியோவும் கட்டானது.

இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த செல்வம், அதிர்ச்சி படிந்த முகத்துடன் ஸ்ரீயிடம்,


"எப்படிடா இதெல்லாம் எனக்கு தெரியாமல் ஏற்பாடு பண்ண?
அப்போ அந்த ஜீப் கும்பல் அந்த தடியனோட ஆளுங்களா?


ஏன்டா எனக்கு அவனோட ஆளுங்க தான்னு சொல்லல... நேற்று அங்க புடிச்ச ஓட்டம்டா! சாதாரணமா நாலுமணி நேரம் ஆகும்டா யாழ்ப்பாணத்தில இருந்து நம்ம ஊருக்கு வர,


ஆனா நான் உயிர் பயத்தில எதிரில வரும் வாகனங்களை கூட கவனிக்காம... தாருமாற காரை ரெண்டுமணி நேரத்துக்குள்ள ஓட்டிட்டு வந்து, வீட்டுக்குள்ள பதுங்கி இருந்தவன் தான்..


உச்சாக்கு கூட அறைய விட்டு வெளிய வரல.... எங்கே வெளிய வந்தா... அந்த கனகரட்ணம் கும்பல் என்னை அழுக்கி பிடிச்சிடும்னு பயம். ஒரு பொட்டு தூக்கம் இல்லாமல் இரவு முழுக்க கண்ணு முழிச்சு நடுங்கிட்டிருந்தேன்டா!

நீயெல்லாம் ஒரு நண்பனாடா?"

"ஆனா அந்த தடிமாட்டுப்பய கூட என்னை ஏமாத்திட்டான் மச்சான். அவனை பார்க்குறபோ காமடி பீசு போல இருந்தான்... ஆனா என்ன மிதி மிதிக்கிறான்..." என ஆச்சரியம் காட்ட.

"டேய் அவனு அப்பாவிப்பயலா? உனக்கு எல்லாரையும் பாராத்தா அந்த மாதிரித்தான்டா தெரியும்..

ஏன்னா நீதான் ஒரு காமடி பீசாச்சே!
நீ ஓயாமல் கலாச்சியே அவன் யாரு தெரியுமா? இந்த ஊரோட நம்பர் ஒன் ரவுடி.. அந்த கும்பலோட தலைவனே அவன் தான்.
எந்த காரியத்தை எடுத்தாலும், மத்தவங்கள நம்பி அனுப்பாம.. தானே களத்தில இறங்கி வெற்றியோடு தான் வருவான்." என்று அவனை பெருமையாக ஸ்ரீ பேச.

"அப்படியா மச்சா?" என ஆச்சரியமாக கேட்டவன் எதுவோ தோன்ற,


"ஆனா ஏன்டா மச்சான் அந்த கனகரட்ணம் என்னை அடிக்குறப்போ அவனை எதுவும் செய்யாமல் வேடிக்கை பாத்தான்? ரெண்டு சாத்து சாத்திருந்தா நான் சந்தோஷபட்டிருப்பேன்ல."

அவன் கேள்வியில் சட்டென சிரித்த ஸ்ரீ,


"மச்சா நீ கனகரட்ணம் கையால அடி வாங்கலன்னா அந்த தடியன் கையால நிச்சயம் அடி வாங்கி இருப்ப டா... உன்னை அந்த கனகரட்ணம் தான் காப்பாத்தியிருக்கா." என்றவன் பேச்சில் குழப்பமானவன்,

"என்னடா சொல்லுற?"

"பின்னே...! உன் வாய்க்கு வேற என்ன பண்ணுவாங்களாம்? உன்னை நான் அவன் கூட அனுப்புறப்பவே எச்சரிச்சேன்.. நீ தான் கேக்கல... அவ எனக்கு போன் போட்டு ரொம்ப ஓவரா பேசுறான்.. யாரும் இந்தளவுக்கு என்னை அசிங்கப்படுத்தினதில்லை..

உங்களுக்காகத்தான் அமைதியாவே இருக்கேன். இந்த பொறுமை எவ்வளவு நேரம் இருக்கும்ன்னு தெரியல... அப்புறம் எதாவது உன்னை பண்ணிட்டேன்னா தான் பொறுப்பில்லனு என்கிட்ட சொன்னான்.

நான் தான் உன் இயல்பே இது தான். நம்ம ப்ளான் அவனுக்கு தெரியாததனால.. நீ என்ன செய்தாலும் கண்டுக்காதன்னு சொன்னேன்..

பாவம் அவன் இதுவரை இந்தளவுக்கு பொறுமையா போனதே கிடையாது. உன் விஷயத்தில எனக்காகத்தான் பொறுமையா இருந்தான்.


கனகரட்ணம் உன்னை அறையுறப்போ அதை அவன் கண்டுக்காததுக்கு, இது தான் காரணமா இருக்கணும்.
தன்னால தான் உன்னை அடிக்க முடியல.. அவனாவது அடிக்கட்டுமேனு வேடிக்கை பாத்திருக்கான்.


உன் வாயை வைச்சிட்டு சும்மா இருந்தா... ஏன்டா உன்னை தேடி வம்பு வர போகுது." என்றான் சிரித்தவாறு.

"என்னடா சொல்லுறா? நீ சொல்லுறதை பார்த்தா.. என்னை இவன் அடிச்சிருப்பான் போலயே!



கனகரட்ணம் இவனை ஏதாவது பண்ண போறான்னு இவனுக்காகவா பயந்தேன்.? இவனால அவனுக்குத்தான் ஆபத்துனு கொஞ்சமும் எதிர்பார்கலடா!


கரட்டணம் அடிச்சதை கூட தாங்கிக்கலாம்டா!
இவன் அங்கேயே மிதிப்பான் போலயே! அப்புறம் என் கேபிலே கட்டாகிடுமே!

அப்புறம் எப்படிடா நான் படம் பார்க்க. நல்ல வேளை என் சந்ததி என்னோடேயே அழிஞ்சு போயிருக்கும்..
முதல்ல என் வாயை யாருக்காவது வாடகைக்கு விட்டுடணும்." என்று கூறி தன் வாயை பொத்தியவன்,

"ஆமா எதுக்கு எனக்கு தெரியாமல் இந்த அடியாற்கள் எல்லாம் செட் பண்ண?"


"தெரிஞ்சா மட்டும் என்ன பண்ணுவ? நீதி நியாயம்னு பேசி கடுப்படிச்சிருப்ப..., அதனால தான் உன்கிட்ட சொல்லல.
உனக்கும் சந்தேகம் வரக்கூடாதுன்னு உன்னைப்போலவே அவனையும் ட்ரெஸ் பண்ணச் சொன்னேன். அவன் மாறு வேஷம் போட்டும் கடுக்கான், தலை முடி, தொப்பை எல்லாமே அவனை அப்பட்டமா ரௌடினு காட்டிக்குடுத்திச்சு.

நீ தான் இதைக்கூட கண்டுபிடிக்க தெரியாத தத்தியாச்சே! உன்னப்போலயே அவனையும் காமடியனா நினைச்சிட்டா...

எப்பவும் நம்ம எதிரியை நம்மள விட குறைச்சு எடை போடக்கூடாது செல்வம்.
நம்ம விட ஒரு படி மேல அவங்கள நினைச்சு.. அடுத்த அடியை எடுத்து வைக்கணும். நீ தனிய போயிருந்தேன்னா... உன் நிலமை என்னனு இப்போ புரியுதா?" என்க.


"ம்...." என தலையசைத்தவன்,

"எல்லாம் சரிடா...! இந்த வீடியோ எப்படி?."

"அதுவா....? ஒரு பென்ல காமெரா செட் பண்ணி குடுத்தேன். அவனும் அங்க இருந்த டீப்பா மேல வைச்சவன், அங்க போனதும் போனை எனக்கு போட்டு... நடக்கிறத கேட்கச்சொல்லி புளூதூத் மூலம் என் கூட தொடர்பில இருந்தான்" என்க.

"ஓ... அது தான் கடைசியா அவனோட சம்சாரம் அவ காலை பிடிச்சு கெஞ்சும் போது தனியா போய் பேசினானா?" என தன் சந்தேகத்தை உறுதிப்படுத்தி கொள்ள கேட்க,



"ம்... நான் தான் அவனை உயிரோட விடு! ஆனா கால் மட்டும் இனி வட்டிகாசு கேட்டு அலையக் கூடாதுனு சொன்னேன்." என்றான்.

"நீ பெரிய தொழிலதிபர்... என்ன எப்போ செய்யணும்னு உனக்கு தெரியும். ..நான் அப்படியா? வாயாலயே வாழ்க்கை ஓட்டணும்.



இருந்தாலும்.. எனக்கும் முன்னாடியே இது தான்னு சொல்லியிருக்கலாம். நைட் முழுக்க நான் தூங்கல... இப்போ கண்ணை கட்டுது... நான் இன்னைக்கு லீவ் போட்டுட்டு. வீட்டுக்கு போய் நிம்மதியா ஒரு தூங்கம் போடபோறேன்." என எழுந்து கொண்டவனுக்கு சட்டென நினைவு வந்தவன் போல், ஸ்ரீயின் புறம் திரும்பியவன்.

"மச்சா.... எனக்கொரு சந்தேகம்டா! இப்போ தான் மைலிக்கு ஊரில பிரச்சினையாக இருந்த கனகரட்ணத்தை ஒரு வழியாக்கிட்டியே! இனி அவளை அவ ஊருக்கே அனுப்பி வைக்கலமே!."

இதுவரை அதைப்பற்றி சிந்தனையே இல்லாமல் இருந்தவன், செல்வத்தின் கேள்வியில் அடுத்து என்ன செய்வதென தெரியாமல் முழித்தான்.



ஆம்.... இதை அவனும் சற்றும் யோசிக்கவில்லை. இனி அவள் தன் ஊருக்கு போகலாமே..

ஆனால் அதை அவன் மனம் விரும்பவில்லை. தன்னை விட்டு அவளை தூரமாக செல்வதில் இஷ்டமில்லை.

ஆனால் அவள் பிரச்சினை தான் முடிந்ததே! இன்னும் என்ன காரணத்தை கூறி அவளை தன் பார்வையில் வைத்திருக்க முடியும்? என அவசரமாக சிந்தித்தவன்.

பிரச்சினை முடிந்தது தான்... ஆனால் முடிந்தது என்று எனக்கு மாத்திரம் தானே தெரியும். அவளுக்கோ, அவள் குடும்பத்திற்கோ கனகரட்ணத்தை மிரட்டி கையெழுத்து வாங்கிய விஷயம் தெரியாதே!

'இதை நானா சொன்னா தானே தாரை தன் ஊருக்கு போவாள். அதை சொல்லாமல் மறைத்தால் என் பார்வையில் தானே இருப்பாள்.' என நினைத்தவன்,

"இல்ல மச்சான்.... அவ இங்க தான் இருப்பா... நான் இதை யாருக்கும் சொல்ல போறதில்ல.
நீயும் இந்த மாதிரி நடந்தது என்கிறத மறந்திடு! இப்போ கொஞ்ச நாளாகத்தான் அம்மா சந்தோஷமா இருக்காங்க. அதுவும் அவளால தான்.

அவ போயிட்டான்ன பழையபடி அம்மா அறையிலேயே அடைஞ்சிடுவாங்க.
அவ எத்தனை காலம் இங்க இருக்காளோ அதுவரைக்கும் இருக்கட்டும்." என்று முகத்தில் உணர்ச்சியே இல்லாமல் வெறுமையாக பதிலுரைத்தவன் முகத்தினில் அப்பட்டமாகத்தெரிந்தது.


மைலி இவனை விலகிச்சென்றால் இவன் நிலமை எப்படி இருக்கும் என்பதை.


"சரிடா மச்சான்!" என்று அவன் தோள்களை தட்டி இயல்புக்கு கொண்டு வந்தவன்.

"இதுக்கு மேல இங்கேயே நின்னேன்னா தூக்கத்தில இங்கேயே படுத்துடுவேன். நான் வாரேன்டா!" என திரும்பி நடக்க,


"மச்சான்.." என்று அவனை அழைத்து, அவன் எதிர்பார சமயத்தில் இறுக அணைத்து கொண்டவன்,


"ரொம்ப தாங்க்ஸ்டா! எனக்காக உன் உயிரையே பணையம் வைச்சிருக்க.. நீ கிரேட்டா மச்சான்." என்க.


"என்னது பணையமா? நானா? உனக்கா? நீ வேற... என்னை காமடியன் எண்டுட்டு, நீ காமடி பண்ணாதடா!


என் உயிர் எவ்வளவு முக்கியம்னு காரை எந்த வேகத்தில ஓட்டி ஊருக்கு வந்தேன்னு நீ பாத்திருந்தா... இந்த வார்த்தை சொல்லிருப்பியா?

சும்மா போடா அங்கிட்டு..." என்று அவனை தள்ளிவிட்டு, கொட்டாவியை விட்டவாறு வெளியேறினான் செல்வம்.



தாவும்......
 
Top