• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

28. காற்றோடு கலந்த விதையவள்

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
என்னதான் வசதியாக இருந்தாலும், தரையில் இருந்து சாப்பிடுவது அந்த வீட்டின் வழக்கம்.
விருந்தாளிகள் வந்தால் மாத்திரமே உணவு மேசையில் உணவு பரிமாறபடும்.


உணவினை தரையில்
பரப்பிய காந்தி, இளாவை அமரச்சொல்லி, சாதத்தை பரிமாறி முடிந்தும், அவன் உண்ணாமல் ஏதோ யோசனையில் அமர்ந்திருக்க, அவன் தோளை தொட்டு,


"டேய் இளா..... "என்று உழுக்க,
யோசனையில் இருந்து மீண்டவனாய் "என்னம்மா" என்றான்.


"என்னடா சாப்பாடு போட்டு முடிஞ்சுது.. நீ எங்க வெறிச்சுக்கொண்டிருக்கிற.?" என்றார்.

"ஒன்டுமில்லம்மா" என்றவன் சோற்றை பிசைந்து ஒரு வாய் வைத்தவன், "அம்மா..!" என்றான்.


"என்னடா! நீ அந்த பொண்ண பாத்ததில இருந்து சரியில்லை. என்ன யோசிச்சிட்டு இருக்க. எதன்டாலும் வாயை திறந்து சொல்லேன்டா? மனசுக்க வைச்சிட்டிருந்தா எப்பிடி எங்களுக்கு தெரியும்" என்று சலிக்க.


"அவளைபத்தி தான்ம்மா யோசிச்சிட்டே இருந்தன். நல்லா விசாரிச்சிங்களா? அவ வாசன் அண்ணான்ர சொந்தகார பெண்ணா?" என்றான்.


"ஏன்டா நீ வேற! எதுக்கு அவளை நீ சந்தேக படுற.? அவ என்ன இங்க குண்டா வைக்க வந்திருக்கா? நேற்று கோவில்ல எண்ணெய்ல வழுக்கி விழ இருந்த என்னை தாங்கி பிடிச்சா! அப்ப சாதாரணமா கதை குடுத்தப்ப தெரிஞ்சுகிட்டன்.


அவளோட அம்மா அப்பா சமிபத்தில தான் இறந்திருப்பாங்க போல. அவ கதைச்சதை சை்சே பாத்தா, அப்பிடித்தான் நினைக்கிறன்.

இல்ல என்டா எதுக்கு தனியா வந்து, இங்கு விடுதில தங்கோணும்.?
அப்புறம் வாசன் வந்து அவளோட கதைக்கேக்க தான் தெரிஞ்சுது.. வாசன்ர சொந்தக்கார பொண்ணு என்டே.
அவனும் என் பையன் தானேடா! அவன் சொந்தம் அனாதையா யாரும் இல்லாம நின்டா, அது எங்களுக்கும் தானே கேவலம்..
அதான் இங்க கூட்டி வந்தன்" என்க.


"ஏதோ செய்யுங்கோ! ஆனா எனக்கு இது உண்மை மாதிரி தெரியேல.. எல்லாமே திட்டம் போட்டு நடந்த போல தான் இருக்கு. நல்லா விசாரிச்சா அவள்ன்ர உண்மை தெரிஞ்சிடும்."

" இவர் பெரிய ஜனாதிபதி! இவரை திட்டம் போட்டு தீத்து கட்ட போயினம். பேசாமல் சாப்பிடுடா!" என கண்டித்தவர்,


"என்ன போடட்டும்? பெரியல் வைக்கவா?" என்க.

"எல்லாரையும் நம்பாதிங்கம்மா அவ்ளோ தான்." என்றதோடு பேச்சை நிறுத்தியவன், சாப்பிட்டு விட்டு கிளம்பும் போது துஷாவின் அறை தான்டித்தான் செல்லவேண்டும், என்பதால் திறந்திருந்த அறையை வாசலில் நின்று சிறிது நேரம் பார்த்து விட்டு சென்றன்.


துஷாவோ எதையும் அறியாது உடமைகளை அலுமாரியில் பூட்டி விட்டு திரும்ப, அங்கு வந்த பப்லு,
"வா பாட்டி சாப்பிட கூப்றாங்க..
சாப்பிட போகலாம்" என்றாள்.


"மாமா போயிட்டாங்களா?" என்றாள்.

"யாரு மாமா?" என்று பப்லு எதிர் கேள்வி கேட்க.

"அது அது..." என்று தடுமாறியவள். "

'உனக்கு யாரோட கதைக்கிறம் என்டு தெரியாமலா மாமா என்டுவ? இப்ப ஒன்டும் செய்ய முடியாது சமாளிடி!' என்று தனக்கே சொன்னவள்,
"உன்ர அப்பாவைத்தான் சொன்னன்" என்றாள்...


"ஓ...... தாத்தா சொன்னதை அப்படியே சொல்லுற போல.
அப்போ உனக்கு ஆப்பு நிச்சயம்" என்ற பப்லுவை துஷா புரியாமல் பார்க்க.

"என்ன அப்பிடி பாக்கிற.? எங்க அப்பா உனக்கு மாமானார் என்டா, நான் உனக்கு என்ன வேணும்? மச்சினி முறையாகுது.
அப்பிடி என்டா, என்ர அண்ணன்கள் உனக்கு என்ன வேணும் என்டு யோசிச்சு பாரு!
சும்மாவே ஜெகன் அண்ணா காதல் மன்னன். நீ வேறை அழகா இருக்கிற சொல்ல தேவையே இல்லை.
நிச்சயமா நான் சொல்லுவன்... நீ இந்த வீட்டு மருமகள் ஆகுவது உறுதி" என்றாள்.


"சரி வா! சாப்பிட்டு கோவிலுக்கு நாங்களும் போவம்" என்றவள் அவளை இழுத்துக்கொண்டு சாப்பாட்டு இடத்துக்கு சென்றாள்.

இந்த வீட்டு மருகள் என்றதும் தன்னையே அறியாமல் ரதனின் நினைவு வந்து செல்ல, எங்கே பப்லு சொன்னது நடந்து விடுமோ என்று பயம் உடலெங்கும் அமிலத்தை சுரந்தது.


எதையும் அறியாமல் பப்லு சாப்பிட அழைத்து வந்தது, அவள் கருத்தில் பதியவில்லை. ஏதோ கீ கொடுத்த பொம்மை போலவே நடந்து வந்தாள்.
கடமைக்காக அவர்கள் முன் உண்டுவிட்,டு தனதறைக்குள் சென்றவளை பப்லு,

"வா துஷா! கோவில் போகலாம். ஊரில் பாதி பேர் அங்க தான் இருப்பினம். நல்லா பொழுதும் போகும். ஜாலியாயும் இருக்கும்" என்று அவளை அழைக்க.


"இல்லை பப்லு சாரி... எனக்கு கொஞ்சம் அசதியா இருக்கு... நாளைக்கு வாறேனே" என்றாள்.


"ஏய் அங்க வந்தா எதுவுமே தெரியாது. வா!...." என்று கட்டாயப்படுத்த.


"அவதான் சொல்லுறாளே! நீ போ! இப்ப அவ தூங்கட்டும்... தூங்கி எழுந்ததும் அனுப்பி வைக்கிறன்" என்றார்காந்தி.


"எப்பிடியாவது கூட்டிக்கொண்டு போவம் என்டா விடுதா கிழவி? இரு இரு! உன்னை தாத்தாட்ட மாட்டி விடுறேன்" என்று முணுமுணுக்க,


"என்னடி அங்க பல்லை நெருமிட்டு... போடி அந்தப்பக்கம்" என்றவர்,


" நீ போய் தூங்குமா! தூங்கி எழுந்தா எல்லாம் சரியாகிடும்" என்றவர் அனுப்பி வைக்க. துஷாவும தன் அறைக்கு சென்று விட்டாள்.

சிறிது நேரம் தூங்கி எழுந்தவள், மனம் லேகசாக இருக்க.
முகத்தை கழுவி விட்டு அறையை விட்டு வெளியே வந்தவள், யாராவது நிற்கின்றார்களா என்று நான்கு புறமும் சுற்றி பார்வையை பதிக்க, யாருமே கண்களுக்கு அகப்படவில்லை.
எந்தப்பக்கம் சென்றாலும் ஒரே மாதிரியாக இருந்த வீட்டின் அமைப்பை பார்த்து, இது என்ன? திரும்ப திரும்ப ஒரே இடத்திற்கு தான் வருகிறோமா என்ற சந்தேகம் எழுந்தது.


:சரி இங்கயிருந்தே ஆரம்பிப்பம்' என்று ஒவ்வொரு இடமாக பார்த்துக்கொண்டு வந்தாள்.
பழைய காலத்து வீடு என்றதனால் மற்ற வீடுகளில் இருந்து நிறைய மாற்றங்களாகவே இருந்தது.
முதலில் பெரிய விறாந்தை வெளிக்காற்று உள்நுழைய கூடிய சுற்ற வர அடைக்கபடாமல் தூண்கள் நிறுத்தப்பட்டு, மேல் பகுதிக்கு ஓடுகளால் வேயப்பட்டிருந்தது.
அதை தாண்டி உள்ளே சென்றால், நாட்சார வீட்டின் தோற்றம்.

அந்த நான்கு பக்கங்களும் இரண்டிரண்டு அறை வீதம் ஒன்றை ஒன்று பார்த்த அறைகள்.

நடுவே வத்தல்கள் காய போட வெட்டை வெளி கொஞ்சம் நேராக சென்றால், ஒடைபோன்ற சமையல் அறை செல்வதற்கான வழி. பிறகு சமையல் அறை.


பின்புறம் கதவு வைக்கப்பட்டு முன்னால் இருந்ததை போன்ற விறாந்தை.
(மொத்தத்தில் சண்டைகோழி வீடு போல கற்பனை பண்ணிக்கங்க.)
சுவர் பூரவும் ஆணி அடிக்கபட்டு குடும்பமாக நின்று எடுக்க பட்ட புகைப்படங்கள் தொங்க விடப்பட்டிருந்தது.


ஒவ்வொன்றாக பார்தவளுக்கு, முதலில் கறுப்பு வெள்ளை படமாக, மேல் ஆடை அணியாமல் ஆண்கள் மரக்கதிரை மேல் இருக்க. ஜாக்கட் அணியாத பெண்கள் கூட்டம் பின்னால் நின்றிருந்தனர்.
அது அறுபதுகளில் எடுக்கபட்ட புகைப்படம் என்று நன்றாகவ தெரிந்தது.


அடுத்ததாக ராசா தாய் தந்தை குடும்பம் நின்றிருந்தது. அடுத்து தான் தேவி உற்பட அவர்கள் குடும்பத்தவர் படங்களை பார்த்தவள், அதிலே பார்த்து யார் யாரென்று தானே குறித்துக்கொண்டிருக்க.


"என்னம்மா எழுந்திட்டியா?" என்ற குரல் பின்னால் கேட்கவும், திடுக்கிட்டு திரும்பியவள் காந்தியை கண்டதும்,


"ம்ம் பாட்டி" என்று படத்தையே பார்த்திருந்தாள்.

"இவங்க தான்டா என்ர புள்ளைகள்" என்று ஒவ்வொருதராக காட்டியவர், தேவியின் படத்தை காட்டி, இவள் தான் என்ர ஒரே பொண்ணு.
இப்போ எங்க இருக்கிறாள் என்டு கூட தெரியேல. ஆனா எங்கயோ நல்லா இருக்கிறாள் என்டு நிம்மதியா இருக்கிறம்" என்றவர் அடுத்த போட்டோவை காட்டி,


"இது எல்லாமே எங்க பேரபசங்கடா" என்று அவர்களையும் ஒவ்வொருவராக கூறியவரை பார்த்து.


"எல்லாருமே இங்க தான் இருக்காங்களா பாட்டி?" என்றாள்.


"எல்லாருமே இங்கே தான். எல்லாம் வந்த வீடே ரெண்டாக்கிடும். இரு நான் காப்பி போட்டுட்டு வாறேன்" என்றவர்" அடுப்படி பக்கம் போக, அவர் பின்னால் போனவள்,

"பாட்டி நான் காப்பி போடவா?" என்றாள்.


"சரி போடு! எங்க என்னதிருக்குனு நான் எடுத்து தாறேன்" என்று எடுத்த கொடுத்தார்.
அவள் காப்பி போட்டு கொடுத்தை குடித்து விட்டு கண் கலங்க.


"ஏன் பாட்டி கண் கலங்குது?"

" ஒன்டும் இல்லம்மா.. அப்பிடியே என் பொண்ணு போட்ட காப்பி மாதிரியே பேட்டிருக்க.
வா தாத்தாக்கும் நீயே குடு!" என்றவள் அவளிடமே குடுத்தனுப்பினார்.
அவரும் காப்பியை குடுத்து விட்டு,


'யாரு காந்தி காப்பி போட்டது? நிச்சயமா நீ இல்லை" என்றவும்,


" ஆமாங்க நான் போடேல... இவ தான் போட்டா"


"துஷா தானே! உன் பேரு... இவளுக்கும் இதே மாதிரி போட கத்து குடும்மா.. காப்பியே தேனாமிர்தம்மா இருக்கு" என்று அவரும் துஷாவை புகழ்ந்து தள்ளிவிட, அவர்களிடம் வாங்கிய பாராட்டில் வானத்தில் பறக்கலானாள்.


"அம்மாடி நீ வா! மிளகாய் செத்தல் கொஞ்சம் காயவைச்சன்.. பொழுது சாயிறதுக்குள்ள அதை ஒதுக்கிடுவம், பாட்டிக்கு நீ உதவி செய்!" என்று அழைத்து போக, அவளும் பாட்டி தன்மேல் எடுத்துக்கொள்ளும் உரிமையில், பேத்தியாகவே மாறிவிட்டாள்.


அவர் பின்னே சென்றவள், சாக்கு பையில் காய்ந்த மிளகாய்களை திணித்து கொண்டே,

" ஏன் பாட்டி நான் இங்க வரேக்க வந்தாரே... அவர் ஏன் அப்பிடி விறைப்பா திருயிறார்? அவரை பாக்கவே பயமா இருக்கு"


"அவன் முன்னம் எப்பிடி இருப்பான் தெரியுமா? இந்த வீட்டிலையே கலகலப்ப திரிஞ்சதே, இவனும் இவன்ர அக்கா தேவியும் தான். வயசு ஒற்றுமையோ என்னமோ, ரெண்டும் அப்பிடி ஒரே பாசக்காறர்.


ஒரே மகள் என்டு, எல்லாரும் பாசமா இருந்தாலும், இவன்ல தான் சரியா பாசம் காட்டுவாள்.
எப்ப அவள் வீட்டை விட்டு போனாளோ,
அப்ப தனிச்சு போனவள்.
பல நாள் புள்ள அவளை நினைச்சு சாப்பிட கூட இல்லை.

பிறகு என்ர மற்ற புள்ளங்க இவனை உறுட்டி வெருட்டி சாப்பிட வைச்சாங்கள். கொஞ்ச நாள் அழுதான்... பிறகு அவன் பாட்டியும் போய் சேர்ந்ததும் இப்பிடி ஆகிட்டான்.

பாட்டி சாவுக்காவது தேவி வருவாள் என்டு நினைச்சு, வாசலையே பாத்திட்டு இருந்தான். அவள் செய்ததும் பிழை தானேடா?
அவனிட்டையாது சொல்லி இருந்தா, அக்காவுக்காக என்னவேணும் என்டாலும் அவன் செய்திருப்பான். இப்ப தன்ர மகளை கூட கண்டிப்பா தான் வளக்கிறான்.


மற்ற பசங்க என்ர மகள்ல கோபமா இருக்காங்களோ தெரியாது. ஆனா இவன் கொலை வெறியில இருக்கிறான். அவளும் போனதில இருந்து ஒரு போன் பண்தேல. எங்க என்ன செய்யிறாள் என்ட தகவல் கூட தெரியாம, கொடுமை அனுபவிக்கிறம் நாங்கள்...
விடும்மா? இதல்லாம் கதைக்க போனா, மனம்தான் வலிக்கும். வயசு போன காலத்தில, ஒரு தடவை அவளை பாத்திட்டா காணும் என்டு இருக்கு இப்ப" என்று கண்ணீரை துடைத்தவரை பார்க்கும் போது அழுகையாக வந்தது.
அவர்கள் நிலையை உணர்ந்து தான் கடவுள் அந்த வீட்டு தொல்லைகளை அனுப்பினாரோ என்னவோ?


"பாட்டி .......தாத்தா......." என்ற கத்தலுடன் பப்லுவின் குரல் தான் முதலில் வந்தது.

பின்னே பல குரல்கள் தங்களுக்குள் பேசியபடி தூரத்தில் வருவது நன்றாகவே கேட்க.

"வந்துட்டாங்கம்மா! இனி ரணகளம் தான் வீடு . ஒன்ட ஒன்டு சண்டை போட்டுக்குங்க.. இப்ப பாரு" என்று யோசியம் சொன்னவர் அவர்கள் குரல் வந்த பக்கம் நடக்கலானார்.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
துஷிக்கு ஒரு பக்கம் அம்மா குடும்பத்தோட உறவாடுறது பிடிச்சிருந்தாலும் இன்னொரு பக்கம் அவ சின்ன மாமாவை பார்த்தாலும் நினைச்சாலும் பயம் தான் 🙄🙄🙄🙄🙄🙄
 
Top