• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

28. சமித்ரா - வானில் உதித்த வான்நிலவே

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
881
வானில் உதித்த வான்நிலவே..

நாயகன்.. வருணேஷ்

நாயகி.. மதுவர்ஷினி


வருண் மருத்துவமனையின் முன் ஆம்பலன்ஸ் ஒன்று வேகமாக வந்து நின்றது.

அதிலிருந்து வேகமாக இறங்கிய பெண்ணயவளோ ஹாஸ்ப்பிட்டலுக்குள் பதட்டத்தோடு உள்ளே ஓடினாள்.

அங்கிருந்தோர் ஆம்பலன்ஸிலிருந்து மயங்கிய நிலையிலிருந்த பெரியவர் ஒருவரை ஸ்டெக்சரில் ஏற்றி வேகமாக தள்ளிக் கொண்டு எமர்ஜென்சிக்குள் கொண்டு சென்றனர்

அந்தப் பெண்ணோ ரிசப்ஷனிலிருந்த பெண்ணிடம் ''டாக்டரைக் கூப்பிடுங்கள்'',.. என்று அழுதபடி சொல்ல,

அங்கு இருந்த பெண்ணோ '' உள்ளே டாக்டர்ஸ் இருக்கிறார்கள்,பதட்டம் படாதீங்க,'' என்று சொல்லியவள் ''அவர் உங்களுக்கு என்ன வேண்டும், அவருக்கு என்ன பிரச்சினை?'' என்று விசாரிக்க ...

அவளோ '' அவர்.. அவர்..என் அப்பா சாப்பிட்டு பேசிக்கொண்டே இருக்கும்போது மயங்கி விழுந்துவிட்டார்'', சொல்லிக் கொண்டு இருந்தவள் எமர்ஜென்சியிலிருந்து வேகமாக வந்த நர்ஸைப் பார்த்தும் அவரிடம் ஓடினாள்.

''அப்பா .அப்பாவிற்கு எப்படி இருக்கு?,மயக்கம் தெளிஞ்சுருச்சா'', என்று கேட்க..

அவரோ ''நீங்கள் தான் அவருடன் வந்தவர்களா ..உங்களை டாக்டர் உள்ளே கூப்பிடுகிறார் வாங்க'', என்று அழைத்துச் சென்றாள்..

அங்கு அவரையை செக்பண்ணிக் கொண்டிருந்தவர் அவள் உள்ளே வருவதைப் பார்த்து '' நீங்கள் இவருக்கு என்ன வேண்டும்?, எப்பயிருந்து மயக்கமா இருக்கிறார், முதலே இது மாதிரி வந்திருக்கா, சுகர் பிரஷர் எதும் இருக்கா'', என்று ஒன்றன்பின் ஒன்றாக கேள்விக் கேட்டார்..

''அ…அவர் என் அப்பா ராமநாதன், சாப்பிட்டு நல்லா தான் பேசிக் கொண்டிருந்தார்.

திடீரென்று சேரிலிருந்து அப்படியே மயங்கி விட்டார்.அவருக்கு சுகர் பிரஷர் எதும் இல்லை'', என்று திணறியக் குரலில் சொன்னாள்.

டாக்டரோ ''பயப்படாதீங்கமா'', என்று சொல்லிவிட்டு அவரைச் செக் பண்ணிப் பார்த்துவிட்டு அவளிடம் வந்தவர் ''அவருக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லைமா. இரத்த டெஸ்ட், ஸ்கேனிங் எல்லாம் எடுத்து பார்க்கலாம் ஏன் மயக்கம்? எதனால் வந்தது?, என்று அப்ப தான் தெரியும்,உங்கள் கூட வேறு யாரும் வந்திருக்காங்களா'', என்று கேட்க..

'இல்லை ', என்று தலையாட்டிவளை பார்த்துவர், அவரை ''ஸ்கேனிங் கூட்டிப் போவாங்க'', என்று சொல்லிவிட்டு டாக்டர் உள்ளே சென்றுவிட்டார்.

ராமநாதனின் மகள் மதுவர்ஷினி.. சிறு வயதிலே அம்மா தவறிவிட்டதால் அவளுடைய அப்பா தான் தாயுமானவராக இருக்க, அவளுக்கு அவர் என்றாலே உயிர்.... தனக்கென்று இருப்பவர் அவர் ஒருத்தர் தானே ''அவரில்லாத உலகத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியாதே'', என்று அழுதவள்.. டாக்டர் சொன்னபடி வேகமாக வேகமாக பணம் கட்டும் இடத்திற்குச் சென்றவள் தேவையான அளவிற்குப் பணத்தைக் கட்டியவிட்டு ஸ்கேன் எடுக்கும் இடத்திற்கு ஓடினாள்.. ரிப்போர்ட் வரும் வரை அங்கே இருக்கும் நர்ஸ் ''வெளியே உட்காருங்கள்'', என்று சொல்லிவிட்டு சென்று விட, அதை வாங்கக் காத்திருந்தவளுக்குக் கண்கள் கரித்தது.

ஸ்கேன் ரிப்போர்ட் இரத்த டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாம் கைக்கு வந்ததும் டாக்டர் அவளை உள்ளே கூப்பிட்டார்..

டாக்டர் ரூம்மிற்குள் வந்தவள் பதட்டத்தோடு அவர் சொன்ன இருக்கையில் அமர்ந்தவள் ..அவர் என்ன சொல்ல போகிறாரோ? என்று படபடப்போடு அவர் முகத்தை பார்த்தாள்.

அவரோ ''உங்கள் வீட்டில் வேறு யாரும் இருக்காங்களா, இருந்தால் அவங்களை கூப்பிடுங்கள்'', என்று சொல்ல மனதிற்குள் ஒரு பிம்பம் நிழலாக தெரிந்தாலும் அதைத் தவிர்த்தவள் ''இல்லை டாக்டர், நான் மட்டும் தான் வேறு யாருமில்லை'',.

''ம்ம்'',..சொன்னவர் ''உங்க அப்பாவிற்கு பிரஷர் அதிகமாகி மூளைக்கு போகும் இரத்தக்குழாயில் அடைப்பால் திடீரென்று மயக்கம் வந்துவிட்டது…இதுக்கு முன்னாடி இப்படி வந்திருக்கா'', என்று கேட்க..

' இல்லை', என்று தலையாட்டியவள் கண்களில் கண்ணீரோடு ''எனக்கு யாருமில்லை அவர் மட்டும் தான் எப்படியாவது காப்பாற்றிக் கொடுத்துவிடுங்கள்'',என்று அழுதாள்.

டாக்டரோ ''பயப்படதீங்க மா இங்கு அதுக்குரிய ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் வருணேஷ் இருக்கிறார்…அவர் தான் உள்ளே அவரை செக்பண்ணிக் கொண்டுயிருக்கிறார் கவலை படாதீங்க'', என்று சொல்ல...

டாக்டரின் பெயரைக் கேட்டதும் அதிர்ந்தவள் அவரிடம் வேறு என்ன கேட்பது என்றே தெரியாமல் சிலையாக அமர்ந்திருந்தாள் மதுவர்ஷினி.

அவள் அமைதியின்றி தவித்துக் கொண்டிருக்க, ''கடவுளே அப்பாவே எப்படியாவது காப்பாற்றிக் கொடுங்கள் '', என்று வேண்டுதலை வைத்தாள் மது…

அப்போது டாக்டரின் அறைக் கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்த நர்ஸ ''டாக்டர் அந்த பெரியவர் கூட வந்தவங்களே கூப்பிடுகிறார் டாக்டர் சார்'', என்று
சொல்ல,

''நீங்கள் போய் பாருங்கள் மா, அவர் உங்க அப்பாவின் ரிப்போர்ட் பற்றியும் அதற்கான சிகிச்சையும் சொல்வார்'', என்று சொல்லியவரிடம் தலையாட்டி விட்டு சென்றாள் மதுவர்ஷினி.

டாக்டர் வருணேஷ் போர்டு போட்டிருக்கும் அறையின் முன் நின்றவளை பார்த்து ''உங்களுக்காக தான் டாக்டர் வெயிட் பண்ணுகிறார் உள்ளே போங்கள்'', என்று அனுப்ப மனதில் பயத்தோடும் அப்பாவின் நிலமை நினைத்து கவலையோடும் இந்த இக்காட்டான சூழலில் இவனைச் சந்திக்க வைத்துவிட்டாரே என்ற தவிப்புடன் உள்ளே சென்றாள் மதுவர்ஷினி.

ஆறயடி உயரமும் ஆகிருதி முன்னைவிட கம்பீரமாக டாக்டர் கெத்துடன் அவன் இருப்பதைக் கண்டவள் தன் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் நிற்க, அவனோ சைகையாலே அங்குள்ள இருக்கையில் அமரச் சொன்னவனை பார்த்தபடி அமர்ந்தாள் மதுவர்ஷினி.

அதுவரை அவருடைய ரிப்போர்ட் பார்த்து கொண்டிருந்த வருணேஷ் நிமர்ந்து அவளைப் பார்த்து ''உள்ளே இருப்பவர் உங்களுக்கு என்ன வேணும்? கூட யாரும் வந்திருந்தால் அவர்களையும் கூப்பிடுங்கள்''. என்று சொன்னவனைப் பார்த்தவளோ..

தன்னைத் தெரியாத மாதிரி பேசுபவனைக் கண்டு மனம் மருகினாலும், அதைவிட இப்ப அப்பாவின் நிலை என்ன? என்பது தான் முக்கியமான ஒன்றாகபடவும், ''அவர் என்னுடைய அப்பா, அவரை பற்றி என்கிட்ட சொன்னா போதும்'',..என்று தயங்கிப் பேச,

''ஒகே அவருக்கு உடனடியாக ஆப்ரேஷன் செய்யனும், மூளையில் இரத்தகசிவு ஏற்பட்டு இருக்கு.. எட்டுமணி நேரம் நடக்கும் ஆப்ரேஷன் அதில் சில நேரத்தில் பேஷ்ணட் நிலமையை எப்படி ஆகும் சொல்ல முடியாது'' , என்று அவன் சொல்லிக்கொண்டே இருக்க

அவளின் முகமோ இரத்தப் பசையற்று வெளுத்துப் போய் அவனைத் தவிப்பாகப் பார்த்தவள் விசும்பலோடு கண்ணீர் தழும்பிக் கன்னத்தில் வடிந்தது.

ரிப்போர்ட் பார்த்து பேசிக் கொண்டிருந்தவன் நிமர்ந்து அவளை ஒரு நொடி நோக்கியவன் , ''நான் பார்த்துக்கிறேன் மாமாவை, நீ போய் வெளியே வெயிட் பண்ணு நான் ஆபிரேஷன் தியேட்டர்க்கு போகிறேன்'', என்று அதுவரை யாரோ மாதிரி பேசிக் கொண்டிருந்தவன் ஒருமையில் பேசி வேகமாக எழுந்து சென்றுவிட்டான்.

அவன் போவதைப் பார்த்தவள் எழுந்து வெளியே ஆப்ரேஷன் தியேட்டர் முன்னுள்ள இருக்கையில் அமர்ந்தாள்.. மனதிலுள்ள பயத்தை வெளியே யாரிடமும் பகிர முடியாமல் கண்களை இறுகி மூடியப்படி இறுகிப் போய் அமர்ந்திருந்தாள்..

வருண் தன்னுடைய அப்பாவை மாமா சொல்லி அழைத்து நான் பார்த்துக்கிறேன் சொல்லியதை நினைத்தவள் அவன் துணையிருந்தால் இவ்வளவு கஷ்டம் வந்திருக்காதா…

தன்னுடைய அவசரப் புத்தியால் வாழ்க்கையை தொலைத்துவிட்டு அனாதைப் போல நிற்க்கிறேனே.. என்று மனதிற்குள் புலம்பியவள், 'அப்பா வருண் வந்துவிட்டான் அவன் உங்களை காப்பாற்றி விடுவான், இன்னும் அவன் என்னை வெறுக்கவில்லை பா'',… என்று தன் அப்பா நேரில் இருப்பதை போல எண்ணி மனதிற்குள்ளே சொல்லிய மதுவர்ஷினி கண்களை மூடியபடி பழைய நினைவுகளில் ஆழ்ந்தாள் .

மதுவர்ஷினி அப்பாவின் பிறந்தநாளிற்காக சர்ட் எடுக்க சென்னையிலிருக்கும் ஒரு மாலுக்குச் சென்றவள் அங்கே லைட் கலரில் ஒரு ஷர்ட் எடுக்க அதே ஷர்ட்டை இன்னொரு கை நீண்டு அதை எடுக்க திகைத்து பின்னால் திரும்பினால் அவளை விட உயரமான ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

''சார், இதே நான் தான் எடுத்தேன்.. நீங்க வேறு பாருங்கள்'', என்று சொல்லி எடுத்தவளை..

''நோ அதை நான் தான் எடுத்தேன்'', என்று அவனும் வழக்காட அங்கே இருந்தவர்கள் எல்லாரும் இவர்களைப் பார்க்கவும் அதிலே மதுவர்ஷினி கோபத்துடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.

அவனோ எதுவும் பேசாமல் ஷர்ட்டை எடுக்காமல் போகிறவளைப் பார்த்தவனோ அதைப் பில்லுக்குக் கொடுத்து வாங்கியவன் அவளைத் தேட அவளோ புட்கோர்ட்டில் அமர்ந்து ஒரு ஜூஸை குடித்தப்படி அமர்ந்திருந்தாள்..

அவள் வதனமோ வாடிப் போய் இருந்தது .. தன் அப்பாவிற்காக எடுக்க வந்ததை வாங்காமல் வந்துவிட்ட மடத்தனத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தவளின் எதிரே வந்து அமர்ந்தவனோ…

அவள் முன் அவள் விருப்பப்பட்ட ஷர்ட் பேக்கை வைக்க, அவளோ ஆச்சரியமாக அவனைப் பார்த்தவளை கூர்ந்து பார்த்தவன், ''நீ எடுத்தது'', என்று சொல்ல, அவளோ 'நிஜமா, அந்த ஷர்ட் தானா', என்று திறந்து பார்த்தவள், முகமோ பூவாய் மலர்ந்தது.

அதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவன் ''ஐ எம் வருண்'', என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டவன், நீ ஆசையாக எடுத்தது போல இருந்தது'', என்று சொல்லியவனிடம்,

''ம்ம், ஆமாம் எங்க அப்பாவிற்காக எடுத்தேன் .. அவருக்கு நாளைக்குப் பிறந்தநாள் அது தான்'', என்று சொல்லித் ''தேங்க்ஸ் சார்'', என்றவள் அதற்கான பணத்தை எடுத்துக் கொடுக்க, அதை வாங்கியவன், ''ஒகே உங்க அப்பாவிற்கு என் வாழ்த்துகளை சொல்லி விடு'', என்று சொல்லிவிட்டு சென்று விட்டான் வருண்..

முதலில் தரமாட்டேன் என்று சண்டை போட்டவன் அதன் பின் அதை வாங்கிக் கொண்டு வந்துக் கொடுத்து எண்ணியவள் இவன் யார்? என்ற கேள்வி மனதிற்குள் அலைபாய்ந்தது..

அதன்பின் இரண்டு மூன்று முறை எதார்த்தாமாகப் பார்த்தவர்கள் அதன்பின் சொல்லி வைத்து அந்தந்த நேரத்தில் சந்தித்துக் கொண்டார்கள்..

அவன் மெடிக்கல் காலேஜில் மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறான் என்றும் அவனுக்கும் அவனுடைய அப்பா மட்டுமே இருக்கிறார் என்று தெரிந்தவளுக்கு தன்னை அறியாமலே அவன் மேல் வாஞ்சை உண்டாக அதுவே அவனிடம் காதலையும் நேசத்தையும் வளர்த்தது..

அவனுக்கும் அம்மா என்ற உறவு சிறு வயதிலே இல்லாமல் போக தனக்கும் தாய் இல்லாமல் வளர்ந்தால் என்னமோ அவன் மேல் அன்பு பெருகியது ..

அன்று பூங்காவில் அங்கு விளையாடிய குழந்தைகளை ரசித்தபடி அமர்ந்திருந்த மதுவர்ஷினி பூங்காவின் வாசலைப் பார்ப்பதும் குழந்தைகளை பார்ப்பதுமாக நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

அப்போது வாசலைக் கடந்து கம்பீரமாக நடந்து வந்த வருணேஷ்" சாரி சாரி டா வனி செல்லம் லேட்டாகிவிட்டது'', என்று அவள் அருகில் அமர அவனை முறைத்துப் பார்த்தாள் மது..

"என்னடா செல்லம் முறைக்கிற, மாமா பாவமல '', என்று கிண்டலா கேட்டான்.

''உனக்காக எவ்வளவு நேரம் காத்திருப்பது எப்பவும் இப்படி தான் பண்ணுகிறாய். "போ, போ நான் உனக்கிட்ட பேச மாட்டேன்" , என்று முகத்தை திருப்பியபடி திரும்பி அமர்ந்தாள்.

அவள் தோள் மேல் கையைப் போட்டு அவளின் முகத்தை தன்பக்கம் திருப்பியவன் "அழகு குட்டிடா நீ, கோபத்தில் பாரு ,உன்முகம் சிவந்து தகதகவென மாறி நாசி நுனியிலே கோபத்தை வைத்து, அவளின் பூவிதழ்களோ துடிக்க.. ஆஹ… அப்படியே கடித்து தின்றுவிடலாம் போல இருக்கே'',.. என்று அவன் பேசக் கோபத்தில் சிவந்திருந்த முகமோ நாணத்துடன் செந்நிறமாக.. அவன் கையை தட்டிவிட்டு "ச்சூ ,சும்மா இரு மாமு வெளியே இருக்கோம்'', என்று சொல்ல,

''அப்ப வா, நம்ம வீட்டுக்கு போகலாம்''.. என்று கண்கள் மின்னக் கேட்கவனை..,

''போகலாமே நீ, தாலி கட்டி கூட்டி போ, நான் ரெடியா இருக்கேன்'', என்று சொன்னாள் மதுவர்ஷினி.

அவள் முகத்திலிருந்து கையை எடுத்துவிட்டு திரும்பி அமர்ந்தவன் ''சீக்கிரம் தாலி கட்டிவிடுகிறேன் ,நான் மேல் படிப்பை முடித்துவிட்டால் அப்பாவிடம் சொல்லி பேச சொல்கிறேன்... என்று வருண் சொல்ல..

அவளோ 'ம்ம்', சொன்னவள்'' இங்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிருவாங்க. எதாவது காரணம் சொல்லி தட்டிக் கழிக்கிறேன் இன்னும் ஒரு வருஷம் எப்படி தட்டிக் கழிப்பது தெரியல வருண்... நீதான் எதாவது செய்யணும்'', என்று சொல்லியவளை,

தோளோடு இழுத்து அணைத்துவிட்டு ''சரி வனிமா நா பார்த்துக்கிறேன் என்று சொல்லியவன், ''நான் கிளம்பிறேன் டா, நீயும் கிளம்பு, நேரமாச்சு வீட்டுக்கு போய்விட்டு மெசஸ்ஜ் பண்ணு, எனக்கு இப்ப வேலை இருக்கு '', என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்..

அவளுடைய பதிலை எதிர்பார்க்காமலே செல்லபவனைப் பார்த்தவள் சிறு பெருமூச்சுடன் எழுந்தவள் வாரம் ஒருமுறை பார்க்கும்போது அவசர அவசரமா போகிறான். இனி அடுத்தவாரம் தான் பார்க்க முடியும் என்று நினைத்துபடி கிளம்பினாள் மதுவர்ஷினி . அவன் கடைசி வருட படிப்பும் , பகுதி நேரத்தில் சிறு ஹாஸ்ப்பிட்டலில் வேலை செய்வதுமாக அவன் நேரங்கள் அவனுக்கு இல்லாதைப் போல ஓடிக் கொண்டிருந்தான்.

இரண்டு நாட்கள் கழித்து மதுவர்ஷினியோ அங்குள்ள மாலில் வருணின் பிறந்தநாளுக்கு எதாவது கிபட் வாங்கலாம் நினைத்து போனவள் வாட்ச்,சர்ட், இதில் எதை வாங்கலாம் என்று யோசித்தபடி நடந்து கொண்டிருக்க ஒரு துணிக் கடையில் அழகான சர்ட் ஷோகேஸ்ல மாட்டிருக்க அதை பார்க்கலாம்..என்று நுழைந்தாள்.

இதேப் போல தானே அன்று டிரஸ் எடுக்கும்போது அறிமுகமாகி இன்று வாழ்க்கையின் இறுதிவரை அவனே துணை என்ற நிலை மாறியது என்று நினைத்துக் கொண்டு புன்னகை இதழ்களில் தவிழ விட்டபடி கடைக்குள் நுழைந்தாள் மது...

அங்கே ஒரு அழகிய பெண்ணொருத்தி கையில் நிறைய சர்ட் வைத்துக் கொண்டு டிரையல் ரூம்மின் முன் நின்று கொண்டிருக்க மதுவர்ஷினி அவளைத் தாண்டி உள்ளே சென்றாள்.

சேல்ஸ்வுமனிடம் வெளியே கையை நீட்டி அந்த சர்ட் வேண்டும் சொல்ல அதை எடுத்து தந்ததைப் பார்த்துக் கொண்டிருக்க டிரையல் ரூம் கதவு திறந்து வெளியே வந்தவனைப் பார்த்து திகைத்துவிட்டாள்.

அவனோ அப்பெண்ணிடம் ''இந்த சர்ட் ஒகேயா, இதற்கு மேலே முடியாது தாயே,மீ பாவம்", கண்களில் சிரிப்பும் உதடுகளில் கெஞ்சலுமாகப் பேசப் அப்பெண்ணோ"சரி சரி இந்த ஷர்ட் நல்ல தான் இருக்கு ,அதைவிட இது நல்லாருக்கா பாரு'', என்று சொல்ல .. ,

அவனோ ''இரண்டும் நல்ல இருக்கு எடுத்துக் கொள்ளலாம் வா..இதற்கு மேல் என்னால் முடியாது'',, என்று சொல்லியவன் உள்ளே போய் ஷர்ட்டை மாற்றி விட்டு அதை பேக் பண்ணச் சொல்லி இருவரும் கைகளை கோர்த்தப்படி சென்றனர்.

மதுவர்ஷினியோ அதே இடத்தில் நின்றவளின் இதயத்தின் நாளங்களில் வழிச் செல்லும் குருதியோ உறைந்து போய் கால்களோ அசைக்க முடியாமல் போக , "வருண் நீங்களா, நான் கூப்பிட்ட போது வர முடியாது சொல்லி விட்டு இப்ப யாரோ ஒரு பெண்ணோடு வந்துருக்காங்க'', என்று கண் கலங்க நின்றவள் தான் ஆசைபட்ட ஷர்ட் வாங்கிக் கொண்டு வெளியே வந்தவள் தூரத்தில் இருவரும் சிரித்தும் ஒருவரை ஒருவர் தோளில் தட்டிக் கொண்டும் செல்லவதைக் கண்டு ....

தன் அலைபேசியில் அவனுக்கு ரிங் விட்டாள் மது... முழு ரிங் போய் கட்டாகிப் போக திரும்ப விட எடுத்து பார்த்துவிட்டு கட் பண்ணவும் இவளுக்கு கோபம் ''கிர்னு கிர்னு'', ஏறி அவன் முன் போக வேகமாக நடந்தாள். அவள் வருவதற்குள் வருணோ அப்பெண்ணை காரில் ஏற்றி அழைத்துச் சென்று விட்டான்.

மதுவோ சோர்ந்து போய் வீட்டுக்கு வந்தவளின் முகம் வாடிருப்பதை பார்த்த ராமநாதன் "ஏன்டா முகம் வாடிருக்கு'', என்று கேட்டவருக்கு..

''ஒன்றுமில்லை பா வெயிலில் போனது களைப்பா இருக்கு'', என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றவள் திரும்ப வருணுக்கு போன் பண்ணினாள்.

அவன் திரும்பவும் கட் பண்ண இவளும் விடாமல் போன் பண்ணவும், போன்னை ஆன் பண்ணி காதில் வைத்த வருண் ''நான் தான் வேலையில் இருக்கும்போது போன் எடுக்க மாட்டேன் தெரியாதா,வை போனை அப்பறம் பேசுகிறேன்'', என்று அவளை இடையில் பேசவிடாமல வைத்து விட மதுவோ திகைத்தாள்.

தொடர்ந்து நான்கு நாட்களும் இதே மாதிரி போனை கட் பண்ணவும் எடுத்தால் அவளைப் பேசவிடாமல் எதாவது சொல்லி கட் பண்ணவும் இருக்க மதுவிற்கு என்ன பண்ணவது என்றே தெரியவில்லை. அவளும் அவனும் சந்திக்கும் நாளில் கேட்கலாம் என்று நினைத்தால் வருண் இந்தவாரம் முடியாது, அடுத்த வாரம் பார்க்கலாம்.. என்று மெசஸ்ஜ் அனுப்பிவிட மதுவிற்கு கோபத்தில் ஒன்றும் புரியவில்லை.

''ஏன் இப்படிணு தெரியலடீ ,நீ பக்கத்தில் இருந்தாலே என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியலடீ, என் அம்மு செல்லம்." என்று கொஞசிப் பேசிவிட்டு இப்ப போன் கூட எடுக்கவில்லை ரீப்ளை பண்ணவில்லை. புதியதாக ஒருத்தி வந்ததும் நான் வேண்டவதால ஆகிவிட்டனா.."ஏன்டா இப்படி .. " என்று புலம்பினாள் மது.

''மது, மது என்று அவளின் அப்பா அழைக்க....

'' இதோ வரேன்பா'' என்று வெளியே வந்தவள், ''என்னப்பா வெயிலே எங்கே போனீங்க'', என்று கேட்க

"பேங்க் வரை போனேன்..
கொஞ்சம் ''காபி கொடுடா '' என்று கேட்டவருக்கு,

''இதோ தரேன் பா'', என்று சொல்லிக் காபி போட்டு வந்து கொடுத்தாள்.

அதைக் கையில் வாங்கியவர் ''இங்கு உட்காரும்மா உன்னிடம் பேசணும்'', என்று சொல்ல

"என்னப்பா சொல்லுங்கள்" என்று அருகில் அமர்ந்தாள்.

''பேங்க் போய்விட்டு வரும் போது சிறு வயது நண்பனைப் பார்த்தேன். நானும் அவனும் ரொம்ப நாட்கள் கழித்து இப்ப தான் பார்த்தோம்.அவன்கிட்ட பேசும்போது உன்னை பற்றி சொன்னேன்…உடனே அவன் நண்பர்களாக இருப்பதைவிட சம்மந்தி ஆகிவிடலாமா ,என் பையனுக்கு உன் பொண்ணை கொடுப்பியா ...என் பையன் டெல்லியில் ஐடியில வேலை செய்கிறான் ஒரே பையன் தான் என்ன சொல்லற? என்று கேட்டான்…

நான் ''வீட்டுக்கு போய் மதுவிடம் கேட்டு விட்டு சொல்கிறேன் சொன்னேன். மாப்பிள்ளை பார்ப்போம் உனக்கு பிடித்தால் மேற்கொண்டு பேசலாம்'', என்று சொல்ல..

மதுவோ திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள். முகமோ பேயறைந்து போல மாறியது.
வருணின் ஒதுக்கம் அப்பாவின் ஆசை இதை எப்படி சமாளிக்க போறேன் என்று தெரியலயே கடவுளே..

அவளைப் பார்த்த ராமநாதன் ''என்னம்மா சொல்லற'', என்று கேட்க,

''அப்பா ..பா.. திக்கித் திணறியவள், இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம் பா இன்னும் கொஞ்ச நாள் உங்களோட இருக்கேன் பா பிளீஸ்'', என்று கெஞ்ச..

அவரோ ''இது நல்ல இடம் மா சிறு வயதிலிருந்து தெரிந்தவர்கள், உன்னை நன்றாக பார்த்துக் கொள்வார்கள். தெரியாத இடத்தில் கொடுப்பதைவிட தெரிந்த இடமென்றால் எனக்கு நிம்மதியா இருக்குமா நீயும் யோசித்துச் சொல்லு நான் உள்ளே போய் படுக்கிறேன்'',.

''ம்ம்..தலையாட்டியவள், வருணை இன்றே சந்தித்து அப்பா எடுத்த முடிவை சொல்லனும்,அப்பறம் அவன் கூட இருந்தவள் யார்,எதனால் எனக்கு போன் பண்ணுவதில்லை சந்திப்பதில்லை, எல்லாம் கேட்டு ஒரு தெளிவான முடிவை எடுத்தே ஆகணும் என்று நினைத்தவள் அவனுக்கு மெசஸ்ஜ் அனுப்பினாள்.

இன்று கண்டிப்பா பார்க்க வரணும்.எவ்வளவு நேரமானலும் காத்திருப்பேன் அனுப்பிவிட்டு வீட்டில் அப்பாவிடம் ''கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன் பா'', என்று சொல்லி பூங்காவிற்கு கிளிம்பினாள்.

நேரம் ஆக ஆக வருண் வருவானா, வர மாட்டானா தெரியலேயே." பூங்காவின் வாசலைப் பார்க்க அவன் வரவில்லை.

இருட்டாகவும் இனி காத்திருப்பதில் சாத்தியம் இல்லை என்று எழுந்தவள் கோபமும் எரிச்சலுமாக பூங்காவின் வாயிலை நோக்கி நடக்க அங்கே வேகமாக வந்தான் வருண்.

வந்தவுடனே ''எதுக்கு இவ்வளவு அவசரமா வர சொன்ன மது'', என்று எடுத்தவுடன் கேட்க..

அவளோ எரிச்சலுடன் ''ம்ம்.பல்லாங்குழி விளையாட'', என்று நக்கலா பதில் சொல்லியவள்" ஏன்? இத்தனை நாட்களா என்னைப் பார்க்க வரவில்லை, பேசவில்லை மெசஸ்ஜ் பண்ணினால் ரீப்ளையும் பண்ணவில்லை.. என்று அவனைப் பார்க்காத கோபத்தில் கத்திக் கேட்க,

அவனோ கோபத்துடன் "ஏய் ஏன் இப்படி பத்து பேருக்கு கேட்கிற மாதிரி கத்தற..நான் தான் வேலை இருக்கு சொன்னேன்ல ஹாஸ்பிட்டல் அலைச்சல், .. எக்ஸ்சாம்க்குப் படித்துக் கொண்டு இருக்கேன் சொன்னது தெரியாதா .. என்று அவன் சொல்லவும்.. , அவள் கோபம் கரைகடந்த புயலாய் கத்தினாள்.

''ஆமாம் படிக்கிற லட்சணம் தெரிகிறது, மாலில் ஒரு பெண்ணுக்கு சர்ட் மாற்றி அழகு காட்டுவதும் அவளை அழைத்துக் கொண்டு கண்ட பக்கம் சுற்றுவதும் பார்த்துக் கொண்டே தானே இருக்கேன்,

அவள் சொல்வதைக் கேட்ட வருண் மிதமிஞ்சிய கோபத்துடன் "என்னடீ சொன்ன, சந்தேகப்படுகிறாயா.. என்று கேட்க..

அவளும் தன்னை மறந்து மனக் குழப்பத்திலும் அடங்காத கோபத்திலும் "ஆமாம் சந்தேகம் தான்.. எப்ப பார்த்தாலும் வேலை காரணம் சொல்லிவிட்டு பெண்களோடு சுற்றி கொண்டு இருக்கே.என்கிட்ட பேச கூட நேரமில்லை உனக்கு'',...

அவள் பேசவதைக் கேட்ட வருண் ''இப்படி சந்தேகப்படும் உன் கூட என் வாழ்க்கை முழுவதும் உன்னிடம் ஒப்படைக்க நினைத்தேனே என்னைச் சொல்லனும்'', என்றவன் அவளைத் திட்டிக் கொண்டிருக்க…

அவளோ ''அப்படி கஷ்டப்பட்டு என்னை கல்யாணம் பண்ண வேண்டாம். யாரை வேண்டுமானலும் கட்டிக் கொள்ளுங்கள் .எங்கப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டார். அதைச் சொல்ல தான் கூப்பிட்டேன்.இனி உங்களுக்கு எனக்கும் எதுவுமில்லை. நீங்கள் யாரோ ..நான் யாரோ. இனி வாழ்க்கையில் உங்களை சந்திக்கும் நிலமை வரவேக் கூடாது'', என்று சொல்லிவிட்டு அவன் பேச வருவதை காதில் வாங்காமல் விருட்டென்று கிளம்பி போய்விட்டாள்.

அவள் போவதைப் பார்த்தபடி நின்றவன் "ச்சே" என்று வெறுத்துச் சொன்னவன் ''அவசரம் முந்திரிக்கொட்டை, எல்லாவற்றிலும் அவசரம் தான், எதையும் புரிந்து கொள்ளாமல் போகிறாளே '', என்று நினைத்தவன் ..கோபத்துடன் வருணும் கிளிம்பிவிட்டான்.

இரண்டு வருடங்களுக்கு அப்பறம் இன்று தான் வருணை பார்க்கிறாள் மது.

அவனுக்கு அந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகி இருக்குமோ, என்று நினைத்தவள் , "அய்யோ, இவளோ நேரம் பழையதை நினைத்துவிட்டு அப்பாவுக்கு எப்படி இருக்கு தெரியலயே'', என்று கவலையோடு ஆப்ரேஷன் தியேட்டர் கதவைப் பார்த்தக் அமர்ந்திருந்தாள் மது.

கதவை திறந்து வெளியே வந்த வருண் அவளை நெருங்கி ''ஆப்ரேஷன் முடிந்துவிட்டது. அவர் ஐசியுல இருப்பார்... இருபத்திநான்கு நேரம் முடிந்தால் தான் அவர் நிலையை சொல்ல முடியும்'', என்று சொல்லவும் அப்படியே மயங்கி சரிந்தாள் மதுவர்ஷினி..

அவளைத் தாங்கிய வருண் தூக்கியபடி பக்கத்தில் இருக்கும் ரூமில் படுக்க வைத்து செக் பண்ணியவன் பயத்திலும் கலக்கத்திலும் உண்டாகும் மயக்கம் தான் என்று உணர்ந்தவன் அவளுக்கு ட்ரீப்ஸ் போட்டுவிட்டு கட்டில் அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தான்.
 

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
881
அவளைத் தாங்கிய வருண் தூக்கியபடி பக்கத்தில் இருக்கும் ரூமில் படுக்க வைத்து செக் பண்ணியவன் பயத்திலும் கலக்கத்திலும் உண்டாகும் மயக்கம் தான் என்று உணர்ந்தவன் அவளுக்கு ட்ரீப்ஸ் போட்டுவிட்டு கட்டில் அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தான்.

சிலபல மணி நேரம் கழித்து விழித்தவள் அமர்ந்தபடி வருண் தூங்குவதைப் பார்த்துக் கொண்டிருக்க அவனிடம் அசைவு தெரியவும் கண்களைத் திருப்பிக் கொண்டாள்.

விழிகளை தேய்த்தபடியே விழித்த வருண் ''இப்ப ஒகே தானே " என்று கேட்டவனிடம் .. தலையசைத்தவள் ''அப்பாவிற்கு எப்படி இருக்கு'' என்று அவளும் கேட்க..

'' அவர் நல்ல இருக்கார்..ஒன்றும் பிரச்சினை இல்லை கவலைப்படாதே .
என்றவன், நீங்கள் உங்கள் கணவரை வரச் சொல்லுங்கள் கூட துணைக்கு உங்களையும் உங்க அப்பாவையும் பார்த்துக் கொள்வார்'', என்று யாரோ மாதிரி பேசுவதைக் கேட்ட மதுவோ முகம் கசங்கி ''எனக்கு யாருமில்லை, நானும் அப்பா மட்டும் தான்'', என்று சொல்லியவளை.. ,

''ஏன் கல்யாணம் சொல்லிவிட்டு போனாயே? அவனையும் சந்தேகப்பட்டு துரத்தி விட்டாயா ,இல்லை உன் அவசர புத்தியைப் பார்த்ததும் அவனே ஓடிவிட்டானா'',… என்று அவன் கோபத்துடன் பேசுவதைக் கேட்ட மதுவோ மனதினுள் அடிப்பட்டவள் ''இல்லை" எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல'', என்று சொல்ல ..

''சரி சரி உன்கதை எனக்கு எதற்கு?'', எழுந்த வருணின் கையைப் பிடித்து "வருண் என்னை மன்னித்துவிடுங்கள் பிளீஸ், இப்படி யாரோ மாதிரி பேசுவது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு'', என்று சொல்லியவளை ,

அவனோ ''அன்று நீயும் விட்டு தானே போனாய்,அன்றைய விசயம் இன்னும் அப்படியே தான் இருக்கு தீர்க்கப் படாமல்'', என்று சொல்லியவனிடம்

''வேண்டாம் நீங்க எதுவும் சொல்ல வேண்டாம், உண்மையான காதலிருந்தால் அங்கு சந்தேகம் வராது.உங்களை எத்தனை பெண்களோடு பார்த்தாலும் நான் மட்டும் தான் உங்களுக்கு வேறு யாருமில்லை இடையில் இல்லை... கொஞ்ச நாளிலே புரிந்துக் கொண்டேன்...திரும்ப உங்களை பார்க்க என் ஈகோ தடுத்தாலே இன்று வரை வர முடியவில்லை. அந்த ஈகோவும் உங்களை பார்த்தவுடன் மறைந்து விட்டது… என்னை மன்னித்து விடுங்கள்'', என்று கெஞ்சியப்படி அவன் முகத்தைப் பார்த்த மதுவின் கையை விலக்கிவிட்டு ''உன் சந்தேக நோய் நம் வாழ்க்கை அழித்துவிடும்… மன்னிப்பு என்ற வார்த்தையில் எல்லாம் மறைந்து விடுமா என்று கேட்டான்'',..

''இல்லை தான்… நான் என்ன செய்தால் உங்க கோபம் குறையும்:', என்று மது கேட்கவும்,

''அதற்குமுன் என்கூட இருந்த பெண்ணை பற்றி சொல்லி விடுகிறேன்.. என்று வருண் சொல்லவும்

''வேண்டாம் அதைபற்றி எதுவும் தெரிய வேண்டாம்'', என்று கதறியவளை பார்த்த வருண்…

''ம்ம்'', சொன்னவன் ''அவள் என் நண்பனின் தங்கை சிறு வயதிலிருந்து என்னுடன் பழகுவதால் உரிமையா இருப்பாள்...அன்று எனக்கு பிறந்தநாளுக்காக ஷர்ட் வாங்க வர வேண்டும் அடம் பண்ணவும் வந்தப்ப தான் நீ பார்த்தாய்.அடுத்த வாரம் எக்சாம் பிரிபேர் பண்ணிக் கொண்டிருந்தாலே வர முடியவில்லை…

அன்று எனக்கு வேலையும் அதிகம் அதனால் டென்ஷனில் நான் இருக்க.நீயும் பேச நானும் பேச ஏதோ ஏதோ நடந்துவிட்டது'', என்று அவன் பேசவதைக் கேட்டவள் ''நானும் உங்கள் பிறந்தநாளுக்கு ஷர்ட் எடுக்க போனப்ப தான் பார்த்தேன்…

"போனில் உங்களுக்குக் கூப்பிட நீங்க கட் பண்ணவும்..,வீட்டில் அப்பா மாப்பிள்ளை பற்றி பேசவும் அளவுக்கு மீறிய கோபம்,அவசரபுத்தி அதுதான்'' என்று தயக்கத்துடன் மது சொல்வதைக் கேட்ட வருணோ ஒன்றும் சொல்லாமல் நிற்பதைப் பார்த்தவள் கண்களில் கண்ணீரை தேக்கி ''இன்னும் என்னை மன்னிக்க மாட்டிங்களா வருண்'', என்று கேட்டாள்.

அவனோ "ம்ஹூம்" உன்னை மன்னிக்கனும் என்றால் இங்கு ஒன்று தந்தால் மன்னிக்கப்படும் '', என்று கன்னத்தை காட்டிக் கேட்க அவள் முகமோ செந்நிறப் பூவொன்று பூத்தது..

அவள் அருகில் அமர்ந்த வருண் ''மாமா விழித்தும் நம்மைப் பற்றிச் சொல்லி அடுத்தவாரத்திலே நம்ம கல்யாணத்தை வைக்கச் சொல்லணும், இனி காத்திருக்க முடியாது'', என்று பிரிவு தாபத்தை வார்த்தைகளால் கொட்ட..

அவன் பேசுவதைக் கேட்ட மதுவோ
'ம்ம்' என்று தலையசைத்தாள்.

''இதைப் போல எப்பவும் மாமா எது சொன்னாலும் தலையாட்டனும் வனி செல்லம் '', என்று வருண் கிண்டல் பண்ணவும்

''போ மாமு உனக்கு எப்பவும் விளையாட்டு தான் '' என்று சொல்லிவிட்டு அவன் தோளில் தலை சாய்ந்தாள் மதுவர்ஷினி…

அங்கே சந்தேக நோயால் பிரிவில் தொடங்கி இன்று வாழ்க்கையில் ஒன்று சேர்ந்த இருவரும் மனதிற்குள் அந்தக் கசப்புமின்றி வாழணும் என்று வாழ்த்துவோம் …
 

Attachments

  • 1675920747119.png
    1675920747119.png
    268 KB · Views: 27

வித்யா வெங்கடேஷ்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 8, 2022
Messages
239
எனக்கென்னவோ மது மேல தவறே இல்லை என்று தான் தோன்றுகிறது.

காதலில் ஒளிவுமறைவே இருக்கக்கூடாது...அப்படியிருக்க, வருண்
என்னம்மோ முக்கியமான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டதைப் போல, தோழியுடன் ஊர் சுற்றும் போதும், படிக்கும் போதும் காதலியின் ஃபோன் அழைப்பு கூட ஏற்காமல் இருந்திருக்கிறான்....போதாக்குறைக்கு மது சந்தேகம் கொண்டதாக பழி சுமத்துகிறான்

Sorry to say this ஆத்தரே...பக்கா ஆண் ஆதிக்கம் போல இருந்தது அவன் காதல் & கோபம்.

மதுவின் நற்குணத்திற்கு, she deserves a better “better half!”
 
Top