• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு இரவு உடைக்கு மாறி, கட்டிலில் வந்து விழுந்தவனுக்கு, இன்றைய அலைச்சல் காரணமாக உடல் மிகவும் சோர்வு கண்டிருந்தது.


எப்போதுமே அவன் வேலை அலைக்கழிக்கும் வேலை தான். என்றாலும், இன்று ஏனோ மனக்குழப்பமும், உடலலைச்சலும் சேர்ந்து தூக்கத்தை தூரப்போட்டிருந்தது.


கட்டிலில் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தவனுக்கு, இன்றைய நிகழ்வுகள் யாவும் ஒன்றன் பின், ஒன்றாக அணிவகுத்து, இறுதியில் கோதண்டம் மனையாள் கணவன் உடலத்தை கண்டு மயக்கமடித்து விழுந்த காட்சி அவனை உழுக்கி போட,


படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தவன், எதிரே இருந்த கண்ணாடி சாளரத்தின் வழியாக தெரிந்த இரவின் ரம்மியமான காட்சியில் அத்தனை சிந்தனைகளையும் ஓரம் கட்டிவிட்டு, பால்கனி கதவினை திறந்து கொண்டு வெளியே வந்தான்.



"வட்டத் தங்கத்தட்டிற்கு இத்தனை காவலரா? ஒரு பொட்டு உறக்கமில்லை என்றாலும், கண்சிமிட்டு காவல் காக்கும் அழகோ தனி அழகு." என வானத்தினை பார்த்து, அவசரமாய் வாந்த வார்த்தைகளை வைத்து கவிதை படைத்தவன், சற்று நேரம் வானத்தினையே உற்று நோக்க ஆரம்பித்தான்.



எதையுமே ஒர் அளவிற்கு தான் மனம் ஒன்றி, ரசிக்க முடியும்.
அதே போல் தான் சிறிது நேரம் அந்த இயற்கையின் அமைதியான அழகு அவனை ஆட்கொண்டிருந்தது.


எதை மூளைக்குள் போட்டு, குடைந்து கொண்டிருக்க வேண்டாமென்று, இயற்கையின் துணைதேடி நிசப்தத்தை நாடி வந்தானோ! அதே நிசப்பம் அவனை மீண்டும் பழைய நினைவுகளுக்கு இழுத்துச்சென்றது.



அதிலும் அவன் நினைவு பட்டியலில் முதலிடம் வகித்தவள் வைஷூ.
அதற்கு இன்று நடந்ததென்று ரஞ்சனி சொன்ன கதை பெரிதும் அத்திவாரமிட்டிருந்தது.


முதல் முதலில் பைக்கில் தன்னை மோத வந்த நாள் நினைவில் வந்தது. அன்று அவளை பார்க்கும் போது, தன் மனம் சலனப்பட்டதே தவிர, அவள் மேல் சந்தேகம் கொள்ளவில்லை.



இரண்டாவது முறை, அவன் கண்டதென்னமோ வீட்டில் தான். ஆனால் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அத்தை குடும்பப்படத்தினரை அவள் புகைப்படம் எடுத்ததும்.. அந்த படத்தினை ஏக்கத்தோடு வருடி கண் கலங்கியதும்.. அதை அவன் எதேட்சையாக கண்டு, காரணம் கேட்டதற்கு, தட்டுத்தடுமாறி நடுக்கத்தோடு வீட்டை தான் படம்பிடித்தேன் என பதிலுரைத்தது, என எல்லாமே அவளை சந்தேகமாகவே பார்க்க வைத்தது.



அது மட்டுமா? வைஷூவை அழைத்து வந்த முதல் நாளே, அம்முவின் ஊஞ்சலை கண்டுவிட்டு, அவள் நடந்து கொண்டதனை தான் மறப்பானா?
அதை எல்லாவற்றையும் விட, ரஞ்சனி வைஷூவிடம் ஒட்டி உறவாடுவதும், வைஷூ ரஞ்சனியுடன் ஒட்டி உறவாடுவது மூன்றாம் நபர்களுக்கிடையே இருக்கும் உரையாடல் போல் இல்லாமல், மிக நெருக்கமாகவே இருக்கும்.



இவ்வளவும் போகட்டும் என விட்டால். அன்றைக்கு அவளது அறையில் அவன் கண்ட காட்சியை அவனால் எளிதில் கடந்து வரமுடியவில்லை.


அதனாலேயே இவளின் நடவடிக்கைகளை சற்று உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தவனுக்கு, இந்த இரண்டு நாட்களிலும் வைஷூவிடம் இருந்து மூளைக்கு தீணி போடுவதைப்போல் எதுவும் கிடைக்கவில்லை.



ஆனால் அவள் மேல் தன் முழுக்கவனத்தையும் வைத்திருந்தான்.



இப்படி அவளைபற்றிய ஆயிரம் கேள்விகளும், குழப்பங்களும் இருக்கும் போது, ரஞ்சனியின் கதையானது அவனையே திசை திருப்ப தொடங்கியிருந்தது.



ரஞ்சனி சமாதியைப்பற்றி கேட்ட கேள்விகள் அவனுக்கே தோன்றினாலும், அதை இரண்டாம் பட்சமாக போட்டு விட்டான்.
ஆனால் வைஷூவின் நடவடிக்கைகளை அப்படி ஒன்றும் விடமுடியவில்லை.


"எதற்கு அங்கு சென்றதும் அப்படி மாறிப்போனாள்?
இந்த ஊரில் எத்தனையே மக்கள் இருக்கும் போத, இவளை மட்டும் அந்த அமானுஷ்யம் பிடித்து கொண்டதா?
குடோனுக்குள் நுழைந்ததும் நேராக போய், அதன் முன் நிற்கின்றாள் என்று அன்னை கூறினாரே!


அப்படி என்றால்... அம்மா சொன்னது போல், உள்ளே போனதும் அவளுக்கு அந்த மாதிரி ஆகவில்லை. வெளிய இருந்து போகும் போதே, அவளுக்கு அங்க சமாதி இருப்பது தெரிந்திருக்கிறது.

அதனால தான் அங்கே அழைத்து போக சொல்லி கேட்டிருக்கிறாள்.



ஆனா எப்பிடி....?
இந்த ஊரில் இத்தனை வருடம் இருக்கும் எமக்கே, அங்கு சமாதியிருக்கும் விஷயம் தெரியாத போது, நேற்று வந்த இவளுக்கு எப்பிடி தெரிந்தது? அப்போ நிஜமாவே அமானுஷ்யம் தானா?"


"இல்லை....
அப்பிடி இருக்க வாய்பே இல்லை..
இதுவேறு எதுவோ..
அப்பிடி ஒன்று இருந்திருந்தால், இந்த ஊர் காரர்களை விட்டு விட்டு, வெளியூர் பெண் மேலா ஏறும்?
இவ இந்த ஊருக்கு வருவாள் என்று காத்திருந்ததா என்ன?
யாருக்கும் தெரியாத ஒன்று இவளுக்கும் தெரிஞ்சிருக்கு... ஏதோ ஒன்று நமக்கே தெரியாம திரைமறைவில நடந்திட்டிருக்கு.



அது என்னவா இருக்கும்? எதுக்கு சமாதிக்கிட்ட போய் நின்னு வித்தியாசமா நடந்துக்கிட்டா?
அந்த சமாதி யாரோடது?
இவ செய்யிறதெல்லாம் பாக்குறப்போ,

எனக்கென்னமோ இவ...." என அதற்குமேல் சிந்திக்காது தவிர்த்து கொண்டவன்,



"இல்லையே! இவ அவளா இருக்க வாய்ப்பில்லை.. அவ அம்மா போன்ல பேசும் போது, அவங்களை நானும் தான் பாத்தேனே!
அதுவுமில்லாம இவ வாய் பேச முடியாதவள்." என வாய்விட்டு புலம்பியவன்,



"அட ச்சீ..." என தன் இயலாமையின் உச்சத்தில் கையினை காற்றில் உதறினான்.


"இவளை பத்தி தெரிஞ்சுக்க, எந்த வகையில யாேசிச்சாலும் எல்லாமே ஒன்னுக்கொன்னு, சம்மந்தமே இல்லாம, மர்மமா இருக்கு."



"இப்பிடித்தான் சாயந்தரமும் தோப்பில விறைச்சமேனிக்கு முறைச்சிட்டு நின்னா,
என்ன பண்றேன்னு கேட்டதுக்கு பயந்து போய் திரும்பினதும், ஏதோ திருட்டுத்தனம் செய்திட்டு, மாட்டிட்டமோன்னு முழிச்சா!

காரணம் கேட்டா கண்ணுக்குட்டி.. எரும குட்டின்னு காரணம் வேற," என அவன் நினைவுகள் அந்த நிகழ்வுகளுக்கு செல்ல, சட்டென எதுவோ புரிந்தது போல் அதிர்ந்தான்.


"அப்போ வைஷூ முறைச்சு பாத்திட்டு நின்னது கண்ணுக்குட்டிய இல்ல... என்னை திசை திருப்பிறத்துக்குத் தான் இந்த கண்ணுக்குட்டி நாடகமா?"



"கிஃப்ட் பார்ஷல் தவறவிட்டு போனது... அம்மாவ கால் வலின்னு இனியாள் வீட்டில விட்டிட்டு வந்தது எல்லாமே அவளோட பிளான்...."



"ஆனா என்ன காரணம்? எதுக்கு இதெல்லாம் பண்றா? இவளுக்கும் கோதண்டத்துக்கும் என்ன பகை? இவளோட டார்கெட் இவன் மட்டும் தானா? இல்லை இவ லிஸ்ட்டில இன்னும் யாராச்சும் இருக்காங்களா?" என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு போனவனுக்கு,

அப்போதுதான் அந்த ஊரில் நடந்த மற்றைய கொலைகள் ஞாபகத்தில் வந்தன.


"அப்பிடின்னா....! அந்த கொலைகளுக்கும் இவளுக்கும் தொடர்பிருக்குமோ?"
எனும்போது, கிணற்றில் தற்கொலை செய்து இறந்துபோன மாணிக்கத்தின் இறப்பு எப்படி என்றது நினைவில் வர,
அவன் இறப்புக்கு முன்னைய நாள்.. மாலைப்பொழுதில், கையில் நாணல் புற்கட்டுடன் தொப்பலாக வாய்க்காலில் விழுந்து, நனைந்து வந்த வைஷூ கண்முன் வந்து போனாள்.


அந்த காட்சி இதுவரை அவனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை.
இன்று ஏனோ அதற்கும் காரணம் இருப்பது போல் தோன்றியது.


"அப்பிடின்னா இதுவரை நடந்தது கொலை தான்?
இதை செய்தது வைஷூ தான்." என உறுதியாக நம்பியவனுக்கு, முதலாவது கொலையும், கொலை நடந்த இடமும் உறுத்தியது.


"வைஷூ நம்ம ஊருக்கு வந்தது இப்போ தானே! அதுவுமில்லாம அவ நீர்கொழும்பு..


கொலை நடந்த ப்ளேஸ் முல்லைத்தீவு. அதுவும் தெருவை ஒட்டினாப்போல காட்டுப்பக்கம். இவ அங்க போக சாத்தியமில்லை." என பலமாக யோசித்தவனுக்கு, ஏதோ ஒரு இடத்தில் முட்டிக்கொண்டு மேல அவனை சிந்திக்க விடாது தடைபோட்டது.



"முதல்ல இவ யாருன்னு கண்டுபிடிக்கணும். இவளே அறியாம பின்தொடர்ந்தா, பல மர்மங்கள் வெளிய வரும்.
ஆனா எப்பிடி?" என பலவாறு எண்ண ஓட்டங்கள் தொடர்ந்து வட்டமடிக்க,

அந்த பால்கனியையே பலமுறை அளந்து வந்தவனுக்கு, அன்று வைஷூ இனியாள் வீட்டிலிருந்து ரஞ்சனியின் போனில் அவள் அன்னையோடு பேசியது நினைவில் வந்தது.



ஏதோ உடலில் புதுவித தென்பும், நம்பிக்கையும் வந்ததைப்போல் மாடியிலிருந்து தாவி இறங்கியவன், ரஞ்சினியின் அறை கதவினை தட்ட கையினை தூக்கியதும் தான் நல்லிரவை தாண்டி விட்டது என்பதை உணர்ந்தான்.



இதற்குமேல் தாயை எழுப்பி சங்கடப்படுத்த விரும்பாது,

"எங்கே போய்யிட போகுது..? காலையில் பார்த்துக்கொள்ளலாம்." என தன் அறை சென்றான்.


தன் ஊகங்கள் பாெய்யாக இருக்க வேண்டுமென, கடவுளிடம் ஒரு பிராரத்தனையினை போட்டுவிட்டு, கட்டிலில் விழுந்து கண்களை மூடிக்கொண்டான்.


எப்போதும் போல் விடியலை உணர்த்துவதற்காய், தம் சங்கீத இசையினை அவிழ்த்து விட்ட, பலவித பறவைகளின் பாடலோசையினை மல்லார்ந்து விழிகளை மூடி படுத்திருந்தவள் கால்களோ, அந்த இசையோடு ஒன்றிவிட்டதற்கு அடையாளமாக அசைந்தாடியவாறு இருந்தது..


இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து இது அவளுக்கு பிடித்தமான ஒரு செயல்.


கண்விழித்ததும் உடனே எழுந்து கொள்ளமாட்டாள்.
அந்த கிராமத்தின் ரம்மியமான தருணங்களை பார்ப்பதிலும், கேட்பதிலும் அலாதி பிரியம்.


அந்த ரம்மியமான இயற்கையின் சங்கமங்கள் நிறைந்த தருணங்களில், பல நிகழ்வுகளை மீட்டிப்பார்க்க உதிவியதோடு,
அதற்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பதையும் சிந்திப்பதற்கு பெரும் துணை புரியும்.



காதுகளை பட்டை தீட்டி, குருவிகளின் கீச்சொலியினை கேட்டு நின்றவளுக்கு திடீரென பெரிதாய் அலறும் ஆணின் குரல் கேட்டு படுக்கையிலிருந்து வேகமாக எழுந்தமர்ந்தவள்,


தன்னை சமநிலை படுத்திக்கொள்ள சிறு வினாடிகள் அவகாசம் அளித்தாள்.


"யாருக்கு என்னாச்சு? அதுவும் காலங்காத்தால இந்தமாதிரி கத்துற அளவுக்கு என்ன நடந்திருக்கும்?" என அறிவதற்காக, அறைக்கதவை திறந்துகொண்டு வெளிய வந்தவளை கவனிக்காது,

அவளை கடந்து ஆதியின் அறை நோக்கி ஓடிய ரஞ்சனியை புரியாது பார்த்து நின்றவள்,


"எதுக்கு ஆன்ட்டி ஆதி ரூம் பக்கம் பதட்டமா ஓடுறாங்க? அப்பிடின்ன இப்போ அலறினது ஆதிதானா? என்னாகிருக்கும்?" என்ற கேள்வியோடு பதட்டமும் வந்து ஒட்டிக்கொள்ள, ரஞ்சனியின் பின்னால் தானும் ஓடினாள்.


முத்து முத்தாய் வியர்வை துளிகள் முகமெங்கும் படர்ந்திருக்க..
பார்வையை ஓரிடத்திலே நிலைக்கவிட்டவன் உடலோ விறைத்திருந்தது.
அவன் அருகில் அமர்ந்து அவனின் கேஷம் வருடிக்கொடுத்தவாறு இருந்த ரஞ்சனி.


"என்னடா! என்னைக்கும் போல கனவில அம்மு தானா! தூங்கும்போது ரொம்ப நேரம் அவளை நினைச்சிட்டு தூங்கினா இப்பிடித்தான் ஆகும்.


கொஞ்ச நாள் எதுவுமால்லாம நல்லா இருந்த... இன்னைக்கு மறுபடியும் ஆரம்பிச்சாச்சு."
என்றவாறு தன் புடவை தலைப்பினால் அவன் வியர்வையை துடைத்தவர் கைகளை பிடிமானத்துக்காக பற்றிக்காெண்டவன்.



"இல்லம்மா...! இது என்னைக்கும் காணுற கனவு போல இல்ல.. யாரோ நாலு பேர் ஒரு பொண்ண துரத்துறாங்க. அவ என்னை காப்பாத்து ஆதி. என்னை காப்பாத்துன்னு என் பெயரை கத்திட்டே ஓடுற...


நானும் பயப்பிடாத அம்மு.. நான் இருக்கேன்னு அவ பின்னாலயே ஓடிப்போறேன்.
அதுக்குள்ள துரத்தினவன்ல ஒருதன் அவ பின்னாடி அருவாளால வெட்டிட்டான்.

அப்ப கூட என் பேர சொல்லிட்டே ரத்த வெள்ளத்தில விழுந்து மயக்கமாகிட்டா.
எனக்கு முன்னாடி ஓடிப்போறதனால அவ யாருன்னு முகத்த பாக்க முடியல்ல...


அது என் அம்மு தாம்மா...!
நான் கூட அம்முன்னு தான் கூப்பிட்டுட்டு ஓடினேன்.
என் அம்மு ஏதோ ஆபத்தில இருக்கா... அவளுக்கு ஏதோ நடக்கப்போகுது." என வார்த்தைக்கு வார்த்தை என் அம்மு, என் அம்மு என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி, புலம்பியவனை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்தவர்..



"இங்க பாரு ஆதி! உன் அம்முக்கு எதுவுமில்ல.. அவ எங்க இருந்தாலும் நல்லா இருப்பா... அவளை நினைச்சிட்டே தூங்கிருப்ப.

அதுவுமில்லாம உன் வேலையும் நாளுக்கு நாள் திகிலான வேலை.
இந்த வெட்டுக்கொத்தான கேஸுங்க, அடிக்கடி பாத்துப்பாத்தே, அதே மாதிரி கனவிலயும் வந்திருக்கு.


முதல்ல இந்த வேலைய தூக்கி எறின்னா கேக்குறியா?
சரி சரி...! இந்த கனவை எல்லாம் மறந்துட்டு எந்திரிச்சு போய் குளி! அம்மா சூடா காஃபி எடுத்திட்டு வறேன்." என எழப்போனவர் கையினை இறுகப்பற்றியவன்,



"ம்மா...! அம்முக்கு எதுவும் ஆகாதில்லம்மா! அவ நல்லா இருப்பால்ல.." என சிறுபிள்ளைபோல் அப்பாவியாய் கேட்ட மகளின் தலைமுடியினை கலைத்து விட்டவர்,



"இல்லடா! உன் அம்மு நல்லா இருக்கிறது மட்டுமில்லை.. தன்னோட ஆதி அத்தானையும் தேடி சீக்கிரம் உன்கிட்ட ஓடி வரப்போறா...
அதனால இந்த பயத்தை எல்லாம் ஓரங்கட்டிட்டு, உன் அம்முக்கு பிடிக்கிறமாதிரி இருக்க பாரு." என தோளுக்கு மேல் வளர்ந்தாலும்,

குழந்தையாய் மாறிப்போன மகனின் கேள்வியில் மலர்ந்த முகத்துடன் பதிலுரைத்து விட்டு, திரும்பும் போது தான் வாசலில் நின்றிருந்த வைஷூவை கண்டார்.



அவளது முகத்தில் அத்தனை பாவங்கள்...
அது ஆச்சரியமா? சந்தோஷமா? சோகமா? பூரிப்பா? பெருமிதமா? எதுவென்று சற்றும் இனங்கான முடியாது, ஆதியையே வைத்த கண் வாங்காது பார்த்தவாறு நின்றிருந்தாள்.



"வைஷூம்மா!" என்றவர் குரலில் ஆதியிடமிருந்து பார்வையை மீட்டவள்.



"ம்...." என்பதாக ரஞ்சனியை பார்க்க.


"என்னடா காலங்காத்தால இந்த பக்கம்?
ஓ......! நீயும் சத்தம் கேட்டுத்தான் ஓடிவந்தியா?." என்க.



"ம்..". என தலையசைத்தவள், எந்த வித உணர்வினையும் வெளிக்காட்டாது, மீண்டும் ஆதியிடம் பார்வையை பதித்தாள்.
அவளை கேள்வியாக ஒரு தரம் நோக்கியவன், உதட்டினை ஓரம் நகர்த்தி,

"க்ஹூம்..." என அவளுக்கு பழிப்புக்காட்டி விட்டு,


"ம்மா...! நான் குளிச்சிட்டு வறேன். சூடா காஃபி போட்டு வையுங்க." என அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவாறு குளியலறை புகுந்தான்.



"ஆமா இவனுக்கு இன்னைக்கு என்னாச்சு? யாருகிட்டையும் இந்தமாதிரி நடந்துக்காதவன், எதுக்கு உன்கிட்ட மட்டும் வித்தியாசமா நடந்துக்கிறான்?" என ஆதியின் நடவடிக்கையில் தெரிந்த மாற்றத்தால் ரஞ்சனி அவளிடம் கேட்க.


வைஷூவோ அவர் பேச்சினை காதிலும் வாங்காது, சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களிலே கவனத்தை பதித்திருந்தாள்.
அருகில் வந்தவர்...


"இது தான் ஆதியோட அம்மு. உனக்கு தான் ஏற்கனவே சொல்லியிருக்கோமே!. அம்மு மேல அவ்ளோ பிரியம். அதான் இவ்ளோ போட்டோஸ்."


"அவளை நினைச்சிட்டும், பாத்திட்டும் தூங்கிறதனாலயோ என்னமோ, எப்பவுமே இந்த மாதிரி கத்திட்டே தான் எந்திரிப்பான். இங்க எங்களுக்கு இதெல்லாம் பழகிப்போச்சு... அதனால மத்தவங்க இதை கண்டுக்கிறது இல்ல.. நான் அவனை பத்து மாசம் சுமந்து பெத்தவளாச்சே! கொஞ்சம் பதட்டம் இருக்கத்தானே செய்யும்.


ஆனா என்னமோ தெரியாது! இப்போ கொஞ்ச நாளா இந்த மாதிரி அலறுறது இல்லை.. இன்னைக்கு மறுபடியும் ஆரம்பிச்சிட்டான்.


உனக்கு இது கஷ்டமாத்தான் இருக்கும்... கிளம்புற வரைக்கும் பொறுத்துக்கோம்மா!" என்றவரை கனிவோடு பார்த்து புன்னகைத்தவளை, அவன் அறையினை விட்டு அழைத்து வந்தவர்.


"நீயும் குளிச்சிட்டு ரெடியாகி வா! நாளைக்கு நம்ம பூஜை என்கிறதனால, வீட்டில நிறைய வேலையிருக்கு.
இப்பவே ஒன்னொன்னா செய்தா தான், நாளைக்கே காலையில டென்ஷன் இல்லாம பூஜையில கலந்துக்கலாம். " என்றவர் கீழுறங்கி சென்றார்.


தொடரும்...
 
Top