• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

30. தத்தித் தாவுது மனசு

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
எத்தனை நாட்களுக்கு ஒரே வீட்டில் இருந்து கொண்டு, ஸ்ரீயின் கண்களில் படாது ஒழிந்து இருக்க முடியும்?


இதை எப்போது புரிந்து கொள்ளப்போகிறாளோ?

அன்று அவளால் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை.
வயிற்று வலியால் அவளால் எழுந்து நடக்கக்கூட முடியவில்லை.


உடலின் ஒவ்வொரு அங்ககத்திலும் வேவ்வேறு விதமான வலி.
அடிவயிற்றை பிசைந்து கொண்டு அடிக்கடி வாந்திவேறு கொமட்டிக்கொண்டு வந்ததனால் அவள் நிலை இன்னும் மோசமாக்கியது.


எழுந்து பல்லைக்கூட விளக்காமல், இரு கைகளாலும் அடிவயிற்றை அழுத்தி பிடித்தவாறு சுறுண்டு படுத்திருந்தாள் மைலி.


வயதிற்கு வந்த நாளில் இருந்து இதே வேதனை தான்.
எதையும் தாங்கும் மைலியால்
இந்த மூன்று நாட்கள் வலியை மட்டும் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.


ஏன் இந்த மூன்று நாட்களும் நீர் ஆகாரத்தை தவிர சாப்பிடக்கூட செய்ய மாட்டாள்.

'பொழுது விடிந்து பலமணிநேரம் ஆகிற்று, அவளை இன்னும் வெளியே காணவில்லை.

'இந்தநேரத்திக்குள் கோவில் பறந்திருப்பாளே, இன்று பூட்டிய கதவைக்கூட திறக்காமல் உள்ளே என்ன செய்கிறாள்?' என தனக்குள்ளே கூறியவாறு, வீட்டினை ஒதுக்கி பெருக்குவதற்கு தயாரான தெய்வானை,

'என்ன ஏதுன்னு பார்ப்போம்.' என கதவினை தட்டி,

"மைலி...." என்றழைத்தாள்.

சிறு நிமிட அமைதிக்குப் பின்.


"அக்கா கூப்பிட்டீங்களாக்கா?" என கதவினை திறவாமல் முனகலாய் குரலை மட்டும் வெளியே அனுப்ப,
அவளது குரலில் உள்ள வேறுபாட்டினை அறிந்தவள்.


"என்னாச்சு மைலி? ஏன் ஒரு மாதிரி பேசுற?
வெளியே வா!" என்றாள் பயந்து போய்.


"அக்கா ப்ளீஸ்க்கா.... கொஞ்ச நேரம்க்கா... நான் அப்புறம் வந்திடுறேன்." என்றவள் பேச்சிற்கு மேலக.


"நீ தூங்கு பரவாயில்லை... ஆனா உனக்கு என்னனு மட்டும் சொல்லிட்டு தூங்குடி! நீ முனகிறத பார்த்தா பயமா இருக்கு." என்க.


"எனக்கு எதுவும் இல்லக்கா.... வயிறு வலி தாங்க முடியல்ல.. ஒரு அரைமணி நேரத்தில வந்திடுறேன்." என்றவள் மீண்டும் படுத்துக்கொள்ள.

தெய்வாணையும் சூட்டினால் ஏற்பட்ட சாதாரண வயிற்று வலி போல. அரைமணி நேரத்துள் வந்து விடுகிறேன் என்பவளை. எதற்கு தொல்லை செய்வான் என விட்டு விட்டாள்.

மைலியை கஷ்டப்படுத்த விரும்பாமல், விஜயாவைக்கூட தயார் செய்ததும் அவள் தான்.

இது அவளுக்கு பெரும் கஷ்டமான வேலையும் அல்ல. மைலி இங்கு வருவதற்கு முன்னர். வீட்டு வேலைகளையும் பார்த்து, விஜயாவின் கடமைகளை கூட தெய்வாணை தானே செய்தாள்.

அதை அவள் சிரமமாகக்கூட நினைத்ததில்லை.

நேரம் அதன் பாட்டில் நகர, அரைமணி நேரத்தில் வருகிறேன். என்றவளையும் வெளியே காணோம்.
தெய்வானையும் இருந்த வேலையில் அதை மறந்தே விட்டாள்.

எல்லோரும் சாப்பிட அமர்ந்தாகி விட்டது.
ஈஸ்வரி தான் முதலில் ஆரம்பித்தாள்.


"என்ன தெய்வாணை! இன்னைக்கும் விஜயாவை விட்டுட்டு தனியாவே கோவிலுக்கு போயிட்டாளா மைலி...? எனக்கென்னமோ இவ எங்களுக்கு தெரியாமல் திருட்டுத்தனம் பண்ணுறது போல இருக்கே." என்க.


"ஆமா அத்தை! இவ நடவடிக்கை இப்பல்லாம் கொஞ்சம் வித்தியாசமாவே இருக்கு. இந்த ரெண்டு நாளும் என்னை கோவிலுக்கு வான்னு கேக்கிறது கூட இல்லை.

சூரிய உதயத்துக்கு முன்னாடி தானாவே ஓடிடுறவ, ஒன்பது மணி தாண்டித்தான் வீட்டுக்கே வரா.. என்ன ஏதுன்னு கேட்டா.. ஆற்றை பார்த்தேன். கேணியை பார்த்தேன்னு கதை அளந்திட்டு...," என்று விஜயாவும் மாமியாருக்கு ஒத்து ஊத.

ஸ்ரீ இவர்கள் பேச்சை காதில் வாங்கினாலும், அதை கண்டு கொள்ளாது, தன் தட்டில் உள்ள உணவிலேயே கருத்தாக இருப்பவன் போல் பாவனை செய்தான்.


அவனுக்குத்தான் தெரியுமே! எதற்காக மைலி இவ்வாறு செய்கிறாள் என்று.



"ஐய்யோ.....! நான் மறந்தே போனேன். மைலி இன்னைக்கு கோவிலுக்கு போகல.
ரூம்ல தான் படுத்திருக்கா" என்றாள் அவர்கள் பேச்சில் தான் நினைவு வந்தவளாக.

"என்ன தெய்வானை சொல்லுற? இந்த நேரம் அவ வீட்டிலேயே நிக்க மாட்டாளே!" என்றார் அவள் பேச்சை நம்பாது.


"கோவிலுக்கு போகலன்னா எதுக்கு இன்னும் எழுந்திருக்கல்ல? என்ன ஏதுன்னு பாத்தியா நீ?"


"ஆ... கேட்டேன்ம்மா.... கொஞ்ச நேரம் படுத்துக்கிறேன்னு சொன்னா.... இருந்த வேலையினால நானும் சரின்னு விட்டுட்டேன் "



"என்ன தெய்வானை நீ?" என்று சலித்து கொண்டவர்,


"அவ ஒரு நாளும் இதே போல தாமதமா எழுந்ததே இல்லையே! இன்னைக்கு தாமதமா எழுந்துக்கிறான்னா, அவளுக்கு ஏதாவது உடம்புக்கு முடியல்லையோ என்னமோ!" என்றவாறு சாப்பாட்டு கையினை தட்டில் உதறிய ஈஸ்வரி.


"என்னனு நான் பாத்திட்டு வறேன்." என எழு...

"சாப்பிட்ட பாதியில் எழுந்துக்காதிங்க.. . நீங்க சாப்பிடுங்க. நான் அழைச்சிட்டு வறேன்." என்றவள் அவள் அறை கதவினை திருகிக்கொண்டு உள்ளே சென்றாள்.


உடலை குறுக்கிக்கொண்டு மெத்தையில் படுத்திருந்தவளைக் கண்டு, அவள் அருளில் சென்று அமர்ந்த தெய்வாணை,


"மைலி.." என்று எழுப்பினாள்.

அருகில் கேட்ட குரலில் நிமிர்ந்து பார்த்தவளது முகத்தை கண்டதும் பயந்தே போனாள் தெய்வாணை.

"என்னடி ஆச்சு? கண்ணெல்லாம் சிவந்திருக்கே... காய்ச்சல் ஏதாவது வந்திடிச்சா?" என்றவாறு அவளை தொட்டுப்பார்க்க, அப்படி காய்ச்சலுக்கான அறிகுறி எதுவும் தெரியாததனால்.


அவள் படுத்திருந்த விதமும், சோர்வுமே என்னவென்று உணர்த்த..


"என்ன மைலி டேட்ஸ்ஸா?" என்றாள்.


கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு முறை அவளை படுத்தி எடுத்த அனுபவத்தில் என்னவென தெய்வாணையால் புரிந்து கொள்ளமுடிந்தது.

அவளும் ஆம் என தலையசைக்க,



"அப்போ இன்னைக்கு என் பாடு திண்டாட்டம் தான்னு சொல்லுற...


சரி எந்திரி... இந்த மாதிரி நேரத்தில படுத்திருந்தா ரொம்ப முடியாத மாதிரி இருக்கும். எழுந்து ஓடியாடி திரிஞ்சா தான் வலி தெரியாது." என அவள் கைகளை பிடித்து எழுப்ப..


"ரொம்ப வலிக்குதுக்கா.. என்னால வலி தாங்க முடியல." என்று அடிவயிற்றை அழுத்தி மறுபடியும் படுக்க போக...

"தெய்வானை... மைலி எந்திரிச்சிட்டாளா? அவ உடம்புக்கு எதுவுமில்லையே!" என்று ஈஸ்வரியின் குரல் வெளியே இருந்து வந்ததது.


"ஆ.... எந்திரிச்சிட்டாம்மா.... இதோ இப்போ வந்திடுறோம்." என்று குரலை அனுப்பிவிட்டு,


"முதல்ல எழுந்து முகத்தை கழுவிட்டு வா!
இவ்வளவு நேரம் உன்னை காணாததனால ஆளாளுக்கு பயந்து போய் இருக்காங்க." என்று விரட்ட.

"என்னால முடியும்னா ஏன்க்கா மாட்டேன்னா சொல்ல போறேன்.? சுத்தமா என்னால எந்திருக்க முடியல புரிஞ்சுக்கங்க. நான் அப்புறமாவே வறேன்."

"மைலி இங்க பாரு. இப்போ நீ வெளிய வரல்லனா, உனக்கு ஏதாவதோன்னு அம்மா ரொம்ப பயந்து... ஒரு ஆர்ப்பாட்டமே பண்ணிடுவாங்க.
நானும் வெளிய போய். ஸ்ரீ முன்னாடி உனக்கு பீரியட்ஸ்னு சொல்ல முடியாதுடி.

ஸ்ரீ போகும் வரைக்குமாவது தாங்கிக்கோ. அவன் போனதுக்கப்புறம் உன் நிலமையினை அவங்களுக்கு சொல்லிக்கலாம்
வா எந்திரி!" என அவளை அவசரப்படுத்தினாள்.



உண்மை தானே! ஒர் ஆண் முன்னால் இதை எப்படி கூறமுடியும்? எப்பாடித்தான் நாகரீகம் வளர்ந்து, கல்வியிலும் இவற்றை ஒரு பாடமாக புகுத்தினாலும், ஆண்கள் இதை எப்படி எத்துக்கொள்வார்கள் என்று தெரியாதா என்ன..?

இது இயற்கையே என்றாலும் அதை கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக பெண்களால் தான் கூறமுடியுமா?

தெய்வானையின் நிலை புரிந்தவளாய், தன் வலியை பொருட்படுத்தாது, எழுந்து பாத்ரூம் சென்றவள்,
அவள் கூறியதைப்போல் பெயரளவிற்கு முகத்தை சாதாரணமாக அலசிவிட்டு, இடுப்பு வலியினால் சற்று குனிந்தவாறு நடக்க. அவளை கைதாங்கலாக தெய்வானை பிடிக்க வருவதை உணர்ந்தவள்.



"வேணாக்கா.. நானே வந்துக்கிறேன். அப்புறம் என்ன? ஏதுன்னு ஆயிரம் கேள்வி கேப்பாங்க. நம்ம தான் பதில் சொல்ல முடியாமல் முழிக்கணும்" என்றவள் சாதாரணமாக நடந்து வெளியே வர,
மைலியை கண்ட மற்றவர்கள்,

"ஏன் மைலி எழுந்துக்க இவ்வளவு நேரம்.?" என்றனர்.

அவர்கள் கேள்வியில் என்ன பதிலை அவளால் ஸ்ரீ முன் கூற முடியும்?

நின்று பதில் சொல்ல முடியாமல் அடி வயிறு பிசைய,
முதலில் ஒரு இடத்தில் இருந்து பதில் சொல்வோம் என நினைத்தவள், அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து, பற்களை கடித்து வலியினை பொறுத்து கொண்டவள், தன் பதிலுக்காக ஈஸ்வரி தன்னையே பார்த்திருப்பதை உணர்ந்தவளாய்.

"இரவு சரியாக தூங்கல பாட்டி!

தலை கொஞ்சம் வலி. அதனால தான் விடிஞ்சது கூட தெரியாம தூங்கிட்டேன்." என்றாள்.


"ஓ... அப்பிடியா? சரிடா....! தெய்வானை அவளுக்கு சாப்பாடு வை" என்றார்.


மைலியோ வேண்டாம் என கண்களால் தெய்வானைக்கு ஜாடை காட்ட.
அவள் ஜாடையை கண்டு கொள்ளாதவள் போல், குறைத்தே உணவினை வைத்தாள் தெய்வானை.

மற்றவர்கள் சாப்பிட மைலியோ அதை பிசைந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.


அதை கண்ட விஜயா,


"என்ன மைலி ரொம்ப நேரம் குழந்தை பிள்ளைங்க போல சாப்பாட்டையே பிசைஞ்சிட்டிருக்க. பிசைஞ்சது போதும் அள்ளி சாப்பிடு!" என்றார்.



"இல்லம்மா எனக்கு பசியே இல்லை." என்றவள் மீண்டும் பிசைய ஆரம்பிக்க.

"ஏன் மைலி..! இன்னைக்கு உனக்கு என்னாச்சு? எதுக்கு வித்தியாசமாவே நடந்துக்கிற? உடம்பு ஏதாவது முடியல்லையா?" என்றார் அக்கறையாய் ஈஸ்வரி.

"என்னத்தை நீங்க? இந்த வயசு பொண்ணுக்கு தூக்கம் வரல்ல. பசியே இல்லன்னா என்ன பிரச்சினைன்னு கூடவா உங்களுக்கு புரியல்ல?

எல்லாம் இந்த காதல் படுத்துற பாடுதான். இல்லையா மைலி?" என வேண்டுமென்றே மைலியை சீண்டியவள்,
பின் எதுவோ தோன்ற,


"ஏன் மைலி... நீ பிறந்தது காங்கேசன் துறை தானே." என்று எதையோ அறிவதற்காக சீரியஸாகவே கேட்டார்.


ஆமா என தலையசைத்தாள் மைலி.


"அப்படின்னா அங்கே ஒரு பழக்கம் இருக்குமே மைலி.
சின்ன வயசிலேயே மாமன் மகனையோ, இல்லை மகளையோ கட்டிக்கிறதுன்ன பேச்சுவார்தையில முடிவு செய்திருப்பாங்களே!


" உனக்கும் அதே போல எதாவது முறைபையன் யாரையாவது முடிவு பண்ணியிருக்காங்களா என்ன..?

அன்னைக்கு உன்னோட அம்மா கூட போன்ல அத்தை தன் பையனை உனக்கு கட்டி வைக்க மாட்டேன்னு ஏதோ சொன்னாங்கனு சொன்னால்ல. அப்போ அவங்க பையனை உனக்கு முடிவு பண்ணி வைச்சிருந்தாங்களா?" என்றார்.

அவரது கேள்வியில் ஏனோ சட்டென ஸ்ரீயை தான் நிமிர்ந்து பார்த்தாள் மைலி.

திடுதிடுப்பென எல்லோர் முன்பும் விஜயா இப்படி கேட்பாள் என்று மைலி சிறிதும் நினைக்கவில்லை.



அந்த கேள்வியை ஸ்ரீ முன்பு கேட்டதும், அதற்கு உண்மையான பதில் கூறவும் அவளுக்கு மனம் வரவில்லை. அதனால் தான் விஜயாவின் கேள்வியில் ஸ்ரீயின் முகத்தில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என ஆராய்ந்தாள்.

அவனோ யாருக்கோ வந்த விருந்து என்பதைப்போல, மைலியின் பதில் என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியும் இல்லாமல், எதுவாக இருந்தால் தனக்கென்ன என சாப்ப்ட்டிலேயே கவனமாக இருந்தவன்,

மற்றவர்களை பார்ப்பது போல் சாதாரணமாகத்தான் மைலியின் பார்வையை எதிர் கொண்டு, மீண்டும் தட்டில் கவனத்தை பதித்தான்.



அவனது நடவடிக்கையில் மைலிக்கு ஏனோ கடுப்பாகிப்போனது.

'முகத்தில் எதாவது தெரிகிறதா பாரு? யாரை நான் திருமணம் செய்து போனாலும் இவனுக்கு கவலையே இராது போல.
நான் தான் இவனை வைச்சிட்டு உண்மையை சொன்னா.. இவன் வருத்தப்படுவான்னு நினைச்சு, சங்கடப்படுகிறேன்.

அது சரி....! இவனுக்கு மனசா தேவை? தன் இச்சை தீர்க்க ஓர் பெண் இருந்தா போதும்.... உண்மை தெரிஞ்சா கவலைப்படுவான்னு நினைச்சது என் தப்பு' என எண்ணியவள்,

'மற்ற பெண்களை போல தான், தன்னை தொடும்போதும் நினைத்திருப்பான்' என நினைக்கும் போதே எரிச்சலாக வந்தது.

நான் ஏன் இவன்கிட்ட மறைக்கணும்.? எனக்காக என் அத்தான் காத்திருக்கிறார். இவனுக்கும் இது தெரிஞ்சே ஆகவேண்டும்.

அப்போது தான்.
என் வாழ்க்கையில தலையிடாம ஒதுங்கிக்கொள்வான். இல்லை என்றால் சமயம் கிடைக்கும் போது அட்டைப்போல் ஒட்டிக்கொள்வான்.' என நினைத்தவள் மனதிலோ இனம்புரியாத ஓர் வலி... அதை தற்காலிகமாக ஒதுக்கியவள்.

"ஆமா" என விஜயாவின் கேள்விக்கு பதிலளித்தவள்,

"அப்பாவோட தங்கை மகனை பேசியிருக்காங்கம்மா.. பெயர் ரஞ்சித்" என்றாள்.


அவளது பதிலில் ஸ்ரீ கவலை கொண்டானோ இல்லையோ.. ஆனால் விஜயாவிற்று இது ஏமாற்றமாகிப்போனது.

"ஓ... அப்பிடியாம்மா.. உனக்கும் அவனை பிடிக்குமா?" என மறு கேள்வி கேட்க.


"ஹீம் பிடிக்கும்மா..." என்றவள், அதற்குமேல் அவ்விடத்தில் நின்று பதில் கூற பிடிக்காததனாலோ, இல்லை பதில் கூற முடியாததனாலோ,

"எனக்கு பசியில்லை... நான் பசிக்கும் போதே சாப்பிட்டுக்கிறேன்." என்றவள் எழுந்து தன் அறை சென்று விட்டாள்.


மற்றவர்களும் ஏனோ அப்போதிருந்த மனநிலையில் மைலியை தடுக்காமல் ஆளாளுக்கு தங்கள் சிந்தனையிலேயே இருந்து விட்டனர்.

அதன்பிறகு ஸ்ரீயும் சென்று விட்டான். மைலியின் நிலையினை எடுத்துக் கூறினாள் தெய்வாணை.

மூன்று நாட்கள் அவளை எந்த விதத்திலும் யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அவள் அறைக்கே நேரத்திற்கு நீராகாரமாக இருந்தாலும் சத்தான ஆகாரமே செல்லும்.


இப்படியே ஒரு வாரம் கடந்திருந்தது.


ஆனால் மைலி தான் சரியாக இல்லை. எப்போதும் அவள் மனம் கடலின் அலைபோல இரைச்சலாகவே இருந்தது.


ஒரு முறை தான் எடுத்த முடிவு சரி என நினைத்து கொள்பவள், மறு முறை 'அவசரப்பட்டு அவன் மனதை நோகடித்து விட்டோமோ..!'என எண்ணிக்கொள்ளவாள்.

பின் 'அவன் எப்படி நோவான்..?
நான் என்ன என் சிறுவயதில் பெரியவர்கள் எடுத்த முடிவினை இவனிடம் மறைத்து, இவனை உருக உருக காதலித்தா ஏமாற்றினேன்?' என நினைத்தவள்.


'என்ன இது நான் இவனை நான் காதலிக்கிறேனா? எனக்கு என்ன புத்தி பேதலித்து விட்டதா? கண்டதையும் நினைத்து இல்லாத ஒன்றை இருக்கு என்பதாக கற்பனை வேறு.


ச்சைய்... அவன் எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் சாதாரனமாக இருக்கிறான். நான் தான் தேவையில்லாத கற்பனையில் குழம்புகிறேன்.


இதில் அவன் வருந்துவான் என்ற கவலை வேறு.
நீ வருந்த வேண்டியது அவனுக்காக அல்ல.. உன் அத்தானுக்காக என்று அவள் மூளை எடுத்து கூற.

'அத்தானுக்காக நான் ஏன் வருந்த வேண்டும்? அவர் நன்றாகத்தானே இருக்கிறார்' என்றது உள் மனம்.


'அவன் நல்லாத்தான் இருக்கிறான்... ஆனா நீ நல்லா இல்லையே! உன் அத்தானை மாத்திரம் இருத்தி அழகு பாக்க வேண்டிய மனசில இன்னொருத்தனை வைச்சு சலனப்படுவது அவனுக்கு தெரிஞ்சா அவன் கலங்கமாட்டானா?' என மற்றைய மனம் அவனுக்காக வாதாடியது.

உண்மையில் அவள் மனம் அவளுக்கே புரியவில்லை. ஏன் இப்படி இருதலை கொள்ளியாக இருக்கிறேன் என்று.

ஆனால் தவறு தன் மேல் தான். அவன் எந்த சஞ்சலமும் இன்றி சரியாகத்தான் இருக்கிறான். ஆனால் நான் தான் கண்டதையும் நினைத்து குழம்பிக் கொள்கிறேன். இனிமேலாவது தெளிவாக இருக்க வேண்டும்.


'இப்போது தான் எனக்கு சின்னவயதில் இருந்து அத்தானை நிச்சயம் செய்திருப்பது தெரிந்து விட்டதே! இனி என் வழிக்கு வரமாட்டான்.
நானும் தேவையில்லாமல் ஒழிந்து ஓடத்தேவையில்லை.


அப்படியும் எதாவது செய்தான் என்றால், கேட்கிற கேள்வியில் வாழ்க்கையில் என் பக்கம் தலை வைத்து பார்க்க முடியாதவாறு திட்டி விடுகிறேன்.' என தனக்குள்ளே இறுதியாக தீர்மானம் எடுத்துக்காெண்டாள்.


பாவம் தான் கேட்க போகும் கேள்வியினால் தான். தன் வாழ்க்கையே அவனுடனாக மாறப்போவதை அறியவில்லை இந்த பேதை.
 
Top