• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
காலைக் கடன்களை முடித்துவிட்டு கீழே வந்தவளை கண்ட ரஞ்சினி.



"வந்திட்டியாம்மா! பாரு நீயே ரெடியாகி வந்திட்ட.. உனக்கு முன்னாடி குளிக்க போனவனை இன்னும் காணோம்.


கண்ணாடி கதறுறவரை விடமாட்டான் போலயே!
இவனை சீக்கிரம் அனுப்பினா தானே நாம வேலைய ஆரம்பிக்கலாம்." என்றவர்.



"ஆன்ட்டி காஃபி ஊத்தி வைச்சிருக்கேன்.. எடுத்துட்டு வறேன்." என்று உள்ளே சென்று அவளுடையதை மாத்திரம் எடுத்து வந்து அவளிடம் நீட்டினார்.



அவளும் அதை அவரிடமிருந்து வாங்க கை நீட்டும் சமயம்.


எங்கிருந்தோ வந்தவன் வைஷூவை முட்டி மோதிக்கொண்டு, அவள் எடுப்பதற்கு முன்னர், அதை பிடுங்கிக் கொண்டவன் இதழ்களில் குறும்பாய் ஓர் இளநகை விரிந்தது.



"நீங்க தாம்மா சூப்பர் மம்மி..!
பையன் ரெடியாகி வர நேரம் தெரிஞ்சு.. எனக்காக கையில காஃபி கப்போட நிக்கிறீங்க பாருங்க.. அங்க நிக்கிறீங்கம்மா...." என்றவன் காஃபியினை ஒரு மிடர் வாயினில் சரித்து...



"ஹூம்......." என வேண்டுமென்றே வைஷூவை கடுப்பேற்றுவதற்காக ரசித்து முழுங்கினான்.



"உங்க கை பக்குவம் இருக்கே...! என்ன மணம்? என்ன சுவை? இந்த பக்குவம் யாருக்கு வரும்..? இதை குடிக்கிறத்துக்காகவே விடியலுக்காக காத்து கிடக்கிறேன்."



"நீங்க வேணும்ன்னா இருந்து பாருங்க.. நாளைக்கே எனக்கு கல்யாணமாகி.. என் பொண்ணாட்டி இந்த மாதிரி காஃபி போட்டு தரல்லன்னு வைச்சுக்கங்க... அடுத்த நிமிஷம், டிவோர்ஸ் குடுத்திட்டு உங்ககிட்டையே ஓடி வந்திடுவேன்." என ரஞ்சனியை புகழ்ந்தவாறு தன்னையே பார்த்து நின்ற வைஷூவிடம் திரும்பினான்.


அவளுக்கு ரஞ்சனி தனக்கென்று எடுத்துவந்த காஃபியை தன்னை தள்ளி விழுத்தாத குறையாக, அவன் எடுத்துக் கொண்டதில் ஏமாற்றமாகிப்போனது.



அதுமட்டுமன்றி.. இன்று தான் ஏதோ தாயின் கை பக்குவத்தை ருஷிப்பவன் போலும், அவரை மிஞ்சி எவராலும் நல்ல காஃபியை தயாரிக்க முடியாது என்பதை போல் அடிக்கிக்கொண்டு போன வசனங்களிள், இவன் வேண்டுமென்றே தான் தன்னை சீண்டுகிறான் என்பதை உணர்த்தியது.



அவனது அத்தகைய நடவடிக்கை அவளுக்கு ஆச்சரியத்தை கொடுக்க, அவனையே வாய் பிளந்து பார்த்து நின்றாள்.



அவளது பார்வையை எதிர்கொண்டவன், தனக்குள் எழுந்த புன்னகையினை மற்றவர்களுக்கு தெரியாது மறைத்தவனாய்,



"ஏம்மா...! இவ ஏன் என்னையே வைச்ச கண் வாங்காம பாக்குறா? ஏன் இவளுக்கு காஃபி தரல்லையா?" என்றான் எதுவும் அறியாதவன் போல.



"சரி விடு! அம்மாவும் கோவில் வேலையினால ரொம்ப பிஸியா இருப்பாங்க... வேணும்ன்னா இதை குடிக்கிறியா..? உன்னை பார்க்க வைச்சு சாப்பிட்டா.. எனக்கும் வயிறு வலிக்கும்." என தன் எச்சில் கப்பை அவளிடம் நீண்டியவனை பார்த்து முறைத்தார் ரஞ்சனி.


முறைத்தாரே அன்றி, அந்த பார்வையில் பொய்யிற்கும் கோபமில்லை, மாறாக உதட்டினில் புன்னகையே அரும்பியிருந்தது.
பெற்றவளுக்கு தெரியாதா தன் மகனை?
எத்தனை வருடங்கள் அருகில் இருந்து பார்க்கிறாள்.


மற்றைய ஆண்பிள்ளைகள் போல் அவன் ஒன்றும் பெண்கள் பின்னால் அலைபவன் இலலையே!
எந்த பெண்ணிடமும் இன்று வைஷூவை சீண்டியது போல் சீண்டியதும் இல்லை.. எல்லை மீறியதுமில்லை.


எல்லா பெண்களையும் மரியாதையுடனே நடத்துவான்.
அவ்வளவு ஏன்? அனியிடம் கூட அப்படித்தான்.



சிறுவயதிலிருந்து கையணைவில் வளர்ந்ததினால், அவளை தன் குழந்தை போலயே உரிமையோடும், பாசத்தோடும் நடத்துவானே தவிய,
அத்தான் என்ற ரீதியில் சிறு சீண்டல் கூட இருந்ததில்லை.


அது தான் அவனின் இயற்கையான குணமே!
இன்று வைஷூவிடம் குறும்பு செய்யும் மகனின் முகத்தில், இனம்புரியாத பூரிப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.
மகனின் குறும்பானது ரஞ்சனியிடமும் தொற்றிக்கொள்ள..




"வரவர உன் நடவடிக்கையே சரியில்லடா! அவளுக்கு கொடுத்த காஃபிய பறிச்சு குடிச்சதும் இல்லாம... உன்னோட எச்சி காஃபிய அவகிட்டயே நீட்டுறியா?
அவ ஒன்னும் உன் பொண்டாட்டி இல்லடா!
எப்பவும் எப்பிடி நல்ல பிள்ளையா இருப்பியோ..! அப்பிடியே உன் சேட்டைய நிறுத்திட்டு இருந்துக்கோ.


அவ வீட்டுக்கு வந்த விருந்தாளி.. உன் முறை பொண்ணு கிடையாது." என்றவர் கைகள் அவன் காதுகளை திருக.



"போதும்மா! காது கழண்டு கையோட வந்திடப்போகுது.. நான் சும்மா விளையாடினேன்." என்றதும் தான் காதை விடு வித்துக்கொண்டவர்.



"நீ காஃபிய குடிடா! வைஷூக்கு வேற கலந்து வைச்சிருக்கேன். எடுத்துட்டு வறேன்." என அவர் கிச்சனுள் நுழைந்தார்.
இருவரது உரையாடலையும், செல்லமான கண்டிப்பினையும் பார்த்து நின்றவள் முகம் ஏதோ நினைவில் இறுகிப்போனது.


அதோடு கண்களும் கலங்க, அதை மறைப்பதற்கு தலை கவிழ்ந்து கொண்டவளை கடை கண்களால் கண்டுவிட்டான் ஆதி.


அதே நேரம் அவளிடம் காஃபியை காெண்டுவந்து நீட்டிய ரஞ்சனி,



"சாரிம்மா...! இவன் சும்மா உன்கிட்ட விளையாடிட்டான்.. நீ தப்பா எடுத்துக்காத.." என மகன் செயலுக்காய் ரஞ்சனி மன்னிப்பு வேண்டிட.



"அய்யோ....! அத நான் தப்பாவே எடுத்துக்கல." என பதறியடித்து செய்கையில் சொன்னவள் விழிகள், நீர் கோர்த்திருப்பதை கண்டவருக்கு ஒரு மாதிரியாகிப்போனது.


"அப்போ ஏன்ம்மா கண் கலங்கியிருக்கு?" என்றதும்.
உதடுகள் அரை சென்டிமீட்டருக்கு விரிய.


"உங்க இரண்டு பேரையும் பாக்கிறப்போ என் அப்பா, அம்மா நினைவு வந்திடிச்சு.
அவங்களும் இந்த மாதிரித்தான் என்னை செல்லமா திட்டுவாங்க." என கூற.



"இன்னும் அஞ்சே நாள் தானேடா! கண்மூடி திறக்கிறதுக்குள்ள போயிடப்போகுது.. அப்புறம் எப்பவும் அவங்க கூட தானே இருக்க போற." என்றவர் பேச்சில் வைஷூ அதிர்ந்தாளோ இல்லையோ, ஆதி அதிர்ந்தே போனான்.


அப்படி ஏதாவது நேர்ந்துவிட்டால் என்னாவான் அவன்?



"சரி....!" என்பதாக கண்களை துடைத்துக்கொண்டு, இயல்புக்கு மாறியவளையே பார்த்து நின்றவன்.



"ம்மா.....! உங்க போனை ஒருவாட்டி தாங்க"


"என் போன் எதுக்குடா? உன் போனுக்கு என்னாச்சு?"



"அது... வந்தும்மா! என்னன்னே தெரியல்ல.. திடீர்ன்னு ஆஃப் ஆகிடிச்சு. இன்னைக்கு தான் சர்விஸ் பண்ண குடுக்கணும்." என்றான்.



"அது ரூம்லல்ல இருக்கு. அங்க போய் எடுக்கிற நேரம்.. லேன் லைன்ல இருந்து பேசு" என அவன் சுகத்திற்காக ரஞ்சனி கூற.
"இல்லம்மா! போலீஸ் காரன் வீட்டு நம்பர்... யாராவது ஒட்டுக்கேக்க வாய்ப்பிருக்கு.

அதுவுமில்லாம இது முக்கியமான கேஸ் வேற,
பர்ஷனல் நம்பர் யாருக்கும் தெரிய வாய்ப்பில்ல..

அதனால ஒட்டுக்கேட்க மாட்டாங்க.
எங்க வைச்சிங்கன்னு சொல்லுங்க, நானே போய் போனை எடுத்துக்குறேன்." என்றவன்,



அவர் கூறியதும், அறையிலிருந்த போனினை எடுத்து, அதிலிருந்து குறிப்பிட்ட திகதியிலிருந்த நம்பரை தன் போனில் குறித்துக்கொண்டவன், வெளியே வர,



"பேசிட்டியாடா?" என கேட்டவாறு வந்தார் ரஞ்சனி.



"இல்லம்மா...! வேண்டாம்.. இப்போ டேஷன் தானே போறேன். அப்புறம் எதுக்கு உங்க போன்? நான் அங்கேயே பேசிக்கிறேன்." என வாயில் வந்ததை சமாளித்தான்.



"ம்.... சரிடா!
நாளைக்கே பூஜையை வச்சிட்டு, இன்னைக்கு இழவு வீட்டுக்கு போகக்கூடாது...
ஆனா வீட்டில இருந்து ஒருதங்க கட்டாயம் போகணும், இத்தனை வருஷம் எங்களுக்காக உழைச்சவன் வேற... பாடி எடுக்குற நேரம் பார்த்து நீ ஒரு வாட்டி தலையை காட்டிட்டு வரியா?" என்றார்.



"இதெல்லாம் நீங்க சொல்லணுமாம்மா! கண்டிப்பா போயிட்டு வறேன்." என்றவன் வெளியேறினான்.


சுற்றுலிலும் தென்னை மரங்களின் நிழலானது சூரியக்கதிர்களை தரைதொட அனுமதிக்காது, தன் கடமையினை சிறப்புற செய்து கொண்டிருந்தது.




தென்னங்கீற்றினை கிழித்துக்கொண்டு வந்த தென்றல் காற்று அவன் சேசம் கலைத்து விளையாட,
எந்தவித சலனமும் இன்றி பின்னல் இருக்கையில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தான் நந்தான்.




"ஏன்டா..! ஒவ்வொரு நாளும் காலை.. சாயந்தரம்ன்னு என் தோப்பில பதநீர் இறக்கி சம்பாதிக்க தெரிஞ்ச உனக்கு.. மாதம் முடிஞ்சிச்சுன்னா அதுக்கான காச கொண்டுவந்து தரத்துக்கு கொல்லையோ!" என இழக்கமாகப் பேசியவன் முன், கூனிக்குறுகிப்போய் உடல் வளைத்து தின்றவன், தரை தொட்டிருந்த விழிகளை நிமிர்த்தாமல்..



"ஐய்யா....! மன்னிச்சிடுங்கையா! போன மாசம் என் பையனுக்கு உடம்புக்கு முடியல்லை... வைத்தியம்.. அது இதுன்னு உங்களுக்கு தர வைச்சிருந்த காசெல்லாம் தீந்து போச்சு.

அதனால தான்யா மாச முடிவில தர முடியல்ல.
இந்த மாசத்து முடிவில ரெண்டு மாசக் காசையும் சேத்து தந்திடுறேன்ய்யா!" என அழுபவன் போல் அவன் கெஞ்ச.



"என்னடா....! புதுசா கெடு கேக்குற? என்னை பத்தி தெரியும்ல.. இன்னும் ரெண்டே நாள் தான் டைம்.. நீ யாருகிட்ட கடன் மாறுவியோ.. இல்ல உன் பொஞ்சாதிய....." என முடிப்பதற்குள்.
அங்கே வந்து சேர்ந்த பாெண்ணுச்சாமி.




"இங்க என்னைய்யா பண்ணிட்டிருக்கிறீங்க? இழவுக்கு போகல்லையா?" என நக்கல் தோறணையோடு கேட்டான்.
வலது பக்க புருவத்தை கேள்வியாக மேலே உயர்த்தி..



"இழவா...? யாரு போய் சேர்ந்தது? நானே போற அளவுக்கு ரொம்ப முக்கியமானவங்களோ!.." என்றான்.



"என்னய்யா இப்பிடி கேட்டுட்டிங்க?" என மீதியை சொல்ல வாயெடுத்தவன், அப்படியே அதை நிறுத்தி.




"ஏய்....! நீ என்ன இங்க நின்னு வாய் பாத்திட்டிருக்க? வேலை முடிஞ்சுதுல்ல போடா!" என துரத்த, இது தான் தாமதம் என நினைத்தவாறு அவன் ஓடியதும்,



"செத்தவன் கோதண்டம்ய்யா..!" என்றான்.




"அது என்னடா..! ஊரில இப்பல்லாம் நாளுக்கு நாள் சாவு விழுது?
ஆமா யாரந்த கோதண்டம்?" என புரியாது மண்டையை சொறிந்தவனிடம்.



"கிழிஞ்சிது...! உங்களுக்கு இவ்வளவு ஞாபகமறதி இருக்க வேண்டாம்.
நான் கோதண்டம்னு சொன்னது அந்த நொண்டிப்பயல தான்" என்றதும்.



"யாரு...? அந்த போலீஸ் காரன் தோப்பில வேலை பாத்தானே! அவன் தானே?
அவனையும் யாராச்சும் போட்டு தள்ளிட்டாங்களா என்ன?"



"வேணும்டா.. அந்த போலீஸ் காரனுக்கு...! எங்க ஆளுங்கள யாரோ போட்டுட்டாங்க...
என்ன ஏதுன்னு சீக்கிரம் கண்டு பிடின்னு சொல்ல போனப்போ, திமிர்ல பேசினான்ல... அதுவுமில்லாம அவங்க ரெண்டு பேருமே, தற்கொலை செஞ்சுகிட்டாங்கன்னு கேஸ வேற முடிச்சான்.


அவன் ஆட்களையும் யாரையாச்சும் போட்டாத்தான்.. அவனுக்கும் விளங்கும்." என உண்மை தெரியாது மூச்சுமுட்ட அவன் பேச.


"நீங்க நினைக்கிறது போல அவனை யாரும் கொலை பண்ணல... நேத்து அவனை தோப்பில விஷப்பாம்பு கடிச்சிடிச்சாம். அதனால தான் இறந்திருக்கான்.



இப்போ தான்.. என் வீட்டு பக்கத்தில இருக்கிற முத்து, இழவுக்கு போயிட்டு வந்து தகவலை சொன்னான். அங்க அந்த போலீஸ் காரன் தான் முன்னாடி நின்னு எல்லாத்யைும் கவனிக்கிறானாமே.. அதுதான் உங்களுக்கும் தெரிஞ்சவன்னு தகவல் சொல்லவந்தேன்." என்றான்.


இத்தனையும் சொல்லும் பொண்ணுச்சாமியை, விழிகள் சுருங்க கூரிய பார்வை பார்த்த நந்தன்.




"ஏன் பொண்ணுச்சாமி! இது உன் பையனுக்கு தெரிஞ்சிருக்குமாடா! அவன் தானே கோதண்டத்துக்கு கொள்ளி வைக்கணும்." என்றான் நத்தன்.



"என் பையன் அந்த நாய்க்கு எதுக்கு கொள்ளி போடணும்?
இங்க பாருங்கைய்யா.! அவனுக்கும், என் பையனுக்கும் இருந்த உறவு பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னாடியே முடிஞ்சு போச்சு..

அந்த உறவை திரும்ப ஒன்னும் ஆரம்பிக்க வேண்டாம். என் பையனும் அதை விரும்ப மாட்டான்." என திமிருராக பேசி திரும்பிக்கொள்ள.



"சரி சரி! பழசுங்கள விட்டு தொலைடா! நீயும் இழவுக்கு போகாத.. நானும் போகல்ல.
என்ன ரொம்ப வேண்டப்பட்டவனாச்சே! ஒரு காலத்தில வலது கை போல எல்லாத்திலையும் கூடவே இருந்தவன், நம்மளுகுள்ள என்ன பகையா இருந்தாலும், நான் அவமேல வைச்ச நம்பிக்கையை இன்னைக்கு வரை காப்பாத்தினவன்.


முக்கியமா அந்த ரமேஷ்...... " என கூறிக்காெண்டே போனவது முகம், திடுதிடுப்பென இருண்டு போய், பேச்சினை இடைநிறுத்திக் கொண்டான்.


காலுக்குமேல் கால் போட்டு பந்தாவாக இருந்தவன் கால்கள் தானாக இறங்கி கொண்டன.


இம்முறை வசியாக நிமிர்ந்து அமர்ந்தவன் புருவங்களோ, ஏதோ பலமான சிந்தனையில் பலமுறை சுருங்கி விரிந்தது.


அவனது திடீர் முகமாறுதலையும், சிந்தனையையும் எதுவும் புரியாமல் பார்த்திருந்த பொண்ணுச்சாமி.



"என்னைய்யா! ஏன் திடீர்ன்னு இந்த மாதிரி ஆகிட்டிங்க? நான் இந்தமாதிரி எடுத்தெறிஞ்சு பேசினதனால என்மேல கோபமா? நான் அப்பிடி பேசினதுக்கு காரணம்.. உங்க பேச்சினால இல்லைய்யா! அவன் மேல உள்ள கோபத்தில தான்." என அவன் நயக்கமாக சமாதானம் செய்ய.


"இல்லை பொண்ணுசாமி..! உன்மேல எந்த வருத்தமும் இல்லை... இது வேற." என குரலில் அழுத்தத்தை காட்டி கூறியவன்.


"சரி நட! ஏகப்பட்ட வேலை இருக்கு... இங்கேயே நின்னு பேசிட்டிருக்க நேரமில்லை." என எழுந்தவன், அவன் தோள்களில் கையினை போட்டவாறு நடந்தான்.


தொடரும்........
 
Top