• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

31. என்னாளும் உன் பாென்வானம் நான்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
“அவங்க முடிவெடுத்தா சரியாங்க..?
நான் உங்கள விட்டு எங்கேயும் போகமாட்டேன்” என்றவள் பதில் கேட்டு ஆர்வமாய் எழுந்தமர்ந்து அவள் விழிகளையே பார்த்தவன்,


“நிஜமா தான் சொல்லுறியா துளசி! நீ என்னை விட்டு போமாட்டல்ல..?”

“இல்லங்க நிஜமா போகமாட்டேன்” என்றவள் உதட்டினில் மகிழ்வாய் ஒரு புன்னகை.

இருக்காதா பின்னே! கணவன் தான் பிரிந்து போவதை ஏற்க முடியாது தவிக்கும் போது ஆனந்தம் வரத்தானே செய்யும்.

அவள் கைகளை பற்றி தன் கண்களில் ஒற்றியவன்,
“இது போதும் துளசி! இனிமே உன்னை கலங்காம பாத்துக்கிறேன்” என்றவன், அவளது கன்னத்தின் காயத்தினை எண்ணி மீண்டும் கலங்க.



அவனுக்காய் வலித்தும் வலிக்கவில்லை என சமாதானம் செய்ய ஒரு மணி நேரத்தினை கடந்திருந்தது.


எப்படியோ மிகக் கடினப்பட்டு ஒரு வாரம் பத்து நாளை தள்ளிவிட்டிருந்தாள் துளசி.


அவளது காயம் முழுவதுமாக ஆறவில்லை தான். இருந்தும் வீக்கங்கள் வற்றிப்போய் புண்ணும் காய்ந்திருந்தது.

அன்றைய சம்பவத்தின் பின் அவள் கணவன் அவளிடம் வீண் தர்க்கங்களிலோ, சந்தேகங்களிலோ ஈடுபடவில்லை, அதோ போல் அவளை நாடவும் இல்லை.
அந்த வீட்டில் அப்படி ஒருத்தி இருக்கிறாள் என்பதைக்கூட கண்டு கொள்ளவில்லை.


அன்றைய நாள் நீ இல்லாமல் நான் இறந்துவிடுவேன் என்று வசனம் அளந்தவன் இவன் தானா? என்றிருந்தது.
அன்று அப்படி உருகி பேசியவன், ஏன் ஒதுங்கி போகிறான்? என சிந்தித்தவளுக்கு இவனது எதிர்மாறான நடத்தைகளை புரிந்து கொள்ள முடியாது குழம்பிப்போனாள்.


அன்று ஏனோ வழக்கத்தை விட பாக்கியாவோடு கோவில் சென்று விட்டு திரும்பியவள் பாக்கியாவிடம் பிறந்தவீட்டில் பெற்றவர்களுக்கு தான் தெரிந்தும் தெரியாமலும் செய்த குறும்புகளை சொல்லிச் சிரித்தவளுக்கு தெரியவில்லை விதியின் சதிவலையிலிருந்து தான் முழுவதுமாக மீளவில்லை என்று.


இன்னும் ஒரு சில நாட்கள் மாத்திரமே அத்தையின் அரவணைப்பும் அவளுக்கு ஆறுதலாக இருக்கப்போகிறது என்று தெரிந்தால் அவருடனும் மனம்விட்டு பேசாது ஒதுங்கியே இருந்திருப்பாளோ என்னமோ!


அந்தி மாலைப் பொழுதில் இலகுவான பேச்சில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு நடுவே வந்தார் அவளது மாமனார்.

“என்ன ரெண்டுபேரும் ரொம்ப சந்தோஷமா இருக்கிங்க போல..? எனக்கும் சொன்னா நானும் உங்ககூட சேர்ந்து சிரிப்பேன்ல..?”
என்றவாறு நுழைந்தவரை கண்டு புன்னகை முகம் மாறாமலே,


“உங்க மருமக வீட்டில செய்த சேட்டைகளை சொல்லி சிரிச்சிட்டிருந்தாங்க. கேட்கிறப்போ பயங்கர சேட்டைகாரியா இருந்திருக்கான்னு தெரியுது, எப்பிடித்தான் வீட்டில இவளை சமாளிச்சாங்களோ..?” என சொன்னவர் முகம் சட்டென வெளுறலாயிற்று.


அவரது முகமாற்றத்தை கண்டு “என்ன பாக்கியா நல்லா தானே இருந்த, இப்போ என்னாச்சு..?” என அக்கறையாேடு அவர் கணவன் வினவ,


“இல்ல எப்பிடி ஜாலியா இருந்த பொண்ண என் பையனுக்கு கட்டிவைச்சு அவ சந்தோஷத்தையே கெடுத்துட்டமே!” என கவலையாக கூறினார்.


துளசியால் அந்த இடத்தில் எதுவும் மறுத்து பேசமுடியவில்லை. அருகில் இருந்து நடப்பவற்றை காண்பவர்களுக்கு எதை சொல்லி மழுப்ப முடியும்,
அவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாது அமைதியாய் தலை குனிந்தாள்.


மனைவியில் பேச்சில் அவள் புறம் பார்வையை திருப்பியவருக்கும் அவள் சங்கடம் புரியாமல் இல்லை.

“ம்ம்... நீ சொல்லுறது சரி தான் பாக்கியா!
இதை சரி பண்ணணும் என்டா இப்போ ஒரு முடிவெடுத்தே ஆகணும்.
துளசிய அவ அம்மா வீட்டுக்கு அனுப்பி வைச்சிடலாம்ன்னு இருக்கேன். இவளோட பிரிவு அவன் புரிஞ்சுக்கிட்டு தன்னை மாத்திக்கிட்டான்னா சரிதான். இல்லையா துளசிக்கு நாமலே ஒரு நல்ல பையனா பாத்து கட்டி வைச்சிடுவோம்.
அவளுக்கும் குடும்பம் குழந்தைங்கன்னு வாழ ஆசையிருக்கும் இல்லையா? அது நம்ம பையனால கெட்டு போக வேண்டாம்.” என்றவர் பேச்சில் அதிர்ந்து கலங்கிய கண்களோடு நிமிர்ந்து பார்த்தவள்,


“மாமா அதெல்லாம்…”என மேலே கூற வந்தவளை இடைமறிப்பது போலே,


“நீ எதுவும் சொல்லாதம்மா..! உன் நல்ல மனசுக்கு நீ எதை ஆசைப்படுறியோ அதே போல எல்லாம் நல்லதா நடக்கணும்ன்னு அந்த கடவுளை வேண்டிப்போம்.” என்றவர், அவளை நெருங்கி தன் மார்போடு அணைத்துக் கொண்டார்.


துளசிக்கு அந்த நிலையில் ஓர் ஆறுதல் தேவைப்பட்டதால் அவளும் அவரை தவறாக நினைக்காது ஓர் தந்தையாய் நினைத்துத்தான் அந்த அணைப்புக்குள் அடங்கிப்போனாள்.


திடீரென ஏதோ ஓர் பலத்த சத்தம் கேட்டு திரும்பினார்கள்.
அங்கு மீன் தொட்டியை தரையில் தள்ளிவிட்டு ருத்ர மூர்த்தியாய் நின்ற மகனை கண்டவர்களுக்கு அவன் கோபத்தின் காரணம் புரியவில்லை.


“ராஜா....” என்றவாறு அவனை நெருங்கிய பாக்கியாவை தள்ளிவிட்டு துளசியிடம் வந்தவன், அவள் கையினை பற்றி தரதரவென தன் அறைக்கு இழுத்துச் சென்றான்.


அவனது கோபத்தினையும், துளசியை தரதரவென இழுத்து சென்ற வெறியினையும் பார்த்த இருவருக்குமே பீதியாகி போனது.


அவன் பின்னே ஓடியவர்கள் நெருங்குவதற்குள் கதவடைத்துக் கொண்டான்.
உள்ளே வந்ததும் அவளை கட்டிலில் தள்ளிவிட்டு, ஓடிச்சென்று தூக்கியது என்னவோ மது பாட்டிலை தான்.


முழு பாட்டிலின் மூடியினை திறந்தவன் அந்த மூடியினை தூக்கி தூர போட்டுவிட்டு, மூச்சுக்கு கூட இடங்கொடாது மொத்தமாக சரித்து உள்ளே தள்ளி அதையும் தரையில் போட்டு நொருக்கினான்.


துளசிக்கு அவன் செயல் ஒவ்வொன்றும் உள்ளே பயத்தை விதைக்க,
அவனை மிரட்சியாகப் பார்த்தவளை நெருங்கினான்.

அவளை கட்டிலிலிருந்து இழுத்துத் தரையில் தள்ளிவிட்டு, தான் கட்டிலில் படுத்துக்கொண்டவன் கைகளில் அவளது புடவை முந்தானை சிக்கிக்கொண்டிருந்தது.


அதை திரௌபதியின் சேலையை உரிவதைப்போல் இழுத்தெடுத்தவன்.
“இப்போ உனக்கு குழந்தை தானே வேணும்,
சரி உன் ட்ரஸ் புல்லா கழட்டிட்டு வந்து படு!”
என்றவனை அவள் அதிர்ந்து நோக்க.


“என்ன அப்பிடி பாக்கிற..? ரெண்டு பேரும் சேர்ந்தா தானே குழந்தை வரும்.
சும்மா நின்னா வர நீ குந்திதேவியுமில்ல, நான் சூரியனுமில்ல. சீக்கிரம் உன் ட்ரஸ்ஸ அவுத்துட்டு வந்து படு!” என்றான் மிரட்டும் தோரணையில்.


அப்போதும் துளசி அசையாது நிற்க. “இப்போ நீயா அவுத்து போட்டு வந்து படுக்கலன்னா என்னோட வாழ்க்கையில உன்னை தொடவே மாட்டேன்.” என்றவனை செய்வது அறியாது துளசி பாவமாக நோக்க.


“பாத்தது போதும் துளசி. சீக்கிரம் அவிழ்த்திட்டு எனக்கு மூடு வர வைக்கிற வழிய பாரு” என்றான் இரக்கமே அற்றவனாய்.


எதுவும் செய்ய முடியாதவளோ யாருமற்ற அறை என்று தெரிந்தும், தயக்கத்துடனே அக்கம் பக்கம் பார்த்தவாறு தன் மார்பகங்களை மறைத்திருந்த பிளவுஸ்ஸை கழட்டியவள், பாவாடையின் நாடாவினை தளரவிட்டு கால் வழியாக பாவாடையையும் கழட்டி தனியே உள்ளாடையுடன் மெதுமெதுவாக அவன் படுத்திருந்த கட்டிலை நெருங்கினாள்.


“இதுதான் உன் நிர்வாணமா? முழுக்கக் கழட்டு துளசி! திரும்பத் திரும்ப என்னை பேச வைக்காத” என்றான்.


கண்களை கரித்துக்கொண்டு வந்த கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு அவன் சொன்னதை செய்யலானாள்.


ஊடலில் இது அனைத்துமே இயல்பு தான் என்றாலும், கணவனால் நீக்கப்படும் ஆடைக்கும், தானாக நீக்கும் ஆடைக்கும் எவ்வளவு வேற்றுமைகள் உண்டு.

ஆசையோட தொடும் கணவனின் தொடுதலில், வெட்கத்தோடு அவனுக்கு இசைந்து கொடுத்து கூடுவதும், மிரட்டலுக்கு பயந்து கைப்பாவையாய் அவனுடன் கூடுவதும் ஒன்றா?
அவனது சொற்படி செய்தவள் அவனை நெருங்க,


“அங்கேயே நில்லு துளசி! இந்த மாதிரியே உன் அழகை நான் ரசிக்கணும்”
என்றவன், சிறிது நேரம் அவளது ஒவ்வொரு அங்கங்களையும் மேலும் கீழுமாக பார்க்கலானான். ஆனால் அந்த பார்வையில் எதுவுமே இல்லை. கடமைக்கு பார்த்தான் போலும்.


“சரி வா! அப்பிடியே வந்து என்னை இறுக கட்டிக்கிட்டு கிஸ் பண்ணணும்” என்றவன். அவள் அணைப்புக்காக காத்திருக்க,

அவன் சொற்படி இயந்திரமாய் இயங்கியவள் செயலில் சட்டென கீழே போட்டு அவள் மேல் கவிழ்ந்து கன்னத்தோடு கன்னம் உரசியவன் என்ன நினைத்தானே?
வேகமாக அவளை உதறி எறிந்துவிட்டு வெளியேறியவன் கதவினை கூட சாற்றவில்லை.


வேகவேகமாக கட்டிலின் விரிப்பை தன்மேல் போர்த்தி நிர்வாணத்தை மூடிக்கொண்டவள், ஓடிச்சென்று கதவை தாளிட்டுவிட்டு தன் உடைகளை எடுத்து தன்னை போர்த்திக்கொண்டாள்.


அவளால் அவனை புரிந்து கொள்ளவே முடியவில்லை.

'எதற்கு இப்படி சொய்தான், பின் ஏன் விட்டுப்போனான்.
ஒருவேளை என் காதலை இந்த முறையில் அடையக்கூடாது என்று நினைத்து எழுந்து சென்றானோ?


இல்லையே நான் மறுத்தேன் என்றால் அடவாடியாக என்னை அடையலாம், நான் தான் ஏற்கனவே என் விருப்பத்தை தெரிவித்து விட்டேனே! பின் ஏன் இப்படி?'
எப்படி யோசித்தாலும் அவளுக்கு அவனை புரிந்து கொள்வது பெரும் சவாலாகிப்போனது.


இவனது செயலில் சொல்லமுடியாத வலி வந்து அவளைத் தாக்க, யோசனையின் மத்தியில் கரையைத் தொடங்கியவளை கலைப்பது போல் பாக்கியா அழைத்தார்.


“இதோ வரேன் அத்த” என கண்களை துடைத்துக்கொண்டு வேசம் போட தயாராகினாள்.


பின் அவர்கள் கேட்டும் கேள்விகளுக்கு வழக்கம் போல் மழுப்பலான பதில்களை சொல்லி சமாளித்தவள், இரவு உணவினை உண்டு விட்டு தூங்கும் நேரமாகியும் போனவனைக் காணவில்லை.


“நீ போய் தூங்கும்மா! போனவனுக்கு வரவா தெரியாது?” என அவளை அனுப்பி வைத்தனர் அவர்கள்.

தனக்கான அந்த சந்து அறையில் நுழைந்து கதவினை பூட்டிவிட்டு படுத்துக்கொண்டாள்.
என்னதான் மற்றவர்களுக்கு வேசம் போட்டாலும், தனிமை என்ற ஒன்று வரும்போது துணைக்கு கண்ணீரினையும் அழைத்தவள் மனம் முழுவதும் கணவனது இன்றைய கேவலமான செயலிலேயே உழன்றது.


கண்ணீருக்கும் தூக்கத்துக்கும் இடையே நடந்த போட்டியில் பலமணி நேரம் தாக்குப்பிடித்த கண்ணீர், ஒரு கட்டத்தில் தன் தோல்வியினை ஒப்புக்கொண்டு பின்வாங்கிவிட,


நீண்ட போராட்டத்தின் பின்னரே தூக்கத்தை தழுவியிருந்தாள் துளசி.


ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு உடலில் ஏதோ சுள்ளிடும் உணர்வு தோன்ற திடுக்கிட்டு எழுந்தாள்.


அவள் கால்களுக்குக் கீழே பற்றவைத்த சிகரெட்டோடு அவள் முகத்தினை பார்த்தவாறு இருந்தவனை கண்டு படுக்கையினை சுருட்டியடித்து எழுந்தவள் முதலில் ஆராய்ந்தது கதவினை தான்.


ஆம் அவள் சாவி கொண்டு கதவினை இறுக பூட்டுவிட்டு தான் படுக்கையிலே சரிந்தாள்.

ஆனால் பூட்டிய கதவினையும் மீறி எப்படி இவன் உள்ளே! என்று அவனையும், கதவினையும் மாறி மாறிப் பார்த்தவளின் பார்வையின் பொருள் புரிந்தவனாய்,

“இது என்னோட ரூம் துளசி! இந்த கதவுக்கு சாவி செய்விக்கிறது ஒன்டும் எனக்கு பெரிய விஷயமில்லை” என அலட்டிக்காமல் சொன்னான்.


அவன் பதில் அவளுக்கு பீதியாகிப்போன அதே சமயம், அவள் தொடைப் பகுதியில் பயங்கர எரிச்சல் எடுத்தது.

“ஸ்.....” என வாய்விட்டே முணங்கியவாறு குனிந்து பார்த்தாள்.
தொடைக்கு மேலாக புடவையினை உயர்த்தி விட்டு தொடையிரண்டிலும் பொட்டுப் பொட்டாய் சிகரெட்டின் சூடுபட்டு வெந்துபோய் இருந்த காயங்களில் காந்தல் எடுக்க, கலங்கிய கண்களோடு அவனை பாவமாய் நிமிர்ந்து பார்த்தாள்.


அவள் கலக்கம் பற்றி கவலையே அற்றவனாய், உதட்டில் வெற்றி புன்னகை தவழ,

“ஏன் இப்பிடி பண்ணேன்னு பாக்கிறியா துளசி?
அது ஏன்னா…! உன்னோட மார்பில பெருசா ஒரு தழும்ப பாத்தேன்.
அது எப்பிடி வந்திச்சுன்னு எனக்கு காரணம் தேவையில்ல, அதே சமயம் அந்த இடத்தில ஏதேட்சையா காயம் வரவும் சாத்தியமில்ல. நீயா தான் அந்த காயத்தை உண்டு பண்ணிருக்கணும். அதுவும் உன்னோட காதலனுக்காக வைச்சுகிட்டதா இருக்கணும்.
உன்னை வேண்டாம்ன்னு கழட்டி விட்டவனுக்காகவே ஒரு அடையாளத்தை சுமந்திட்டிருக்கிறப்போ, தொட்டு தாலி கட்டின என்னோட அடையாளமும் உன் உடம்பில இருக்கணும்ல..? அதான் வைச்சேன்” என்றவன்,
அவள் எதிர்பாராத சமயம் இன்னும் அணையாது புகைவிட்டுக் கொண்டிருந்த சிகரெட்டின் மீதி நெருப்பினை அவள் கையிலே நசுக்கு அணைத்தான்.


வலியில் அவள் “அம்மா....!” என கத்த,

“ஊஸ்.......” என உதட்டில் விரல் வைத்து அடக்கியவன்,

“வலிக்குதா?..... ரொம்ப வலிக்குதா....? இந்த மாதிரி தானே எனக்கும் வலிச்சிருக்கும் என் அப்பாவ நீ கட்டிப்பிடிக்கும்போது..?” என்றவன் பேச்சில் அதிர்ந்து விழித்தாள் துளசி.


இதையே தான் அன்றும் அவள் மயக்கத்தில் இருக்கும்போது சொன்னான். ஆனால் சுயநினைவில்லாத போது பேசியதால் அவளுக்கு அது தெரியவில்லை,
தெரிந்திருந்தால் இன்றைய அவன் பேச்சுக்கு இடம் கொடாது அன்றே என்னவானாலும் பரவாயில்லை என்று வீட்டை விட்டு சென்றிருப்பாள்.


பின்னே தந்தை ஸ்தானத்தில் இருந்து ஆறுதல் கூறும் பெற்ற தந்தையையே கட்டிய மனைவியோடு சேர்த்து வைத்து பேசுவானா எந்த கணவனும்..?

இவன் பேசுகிறான் என்றால் எந்தளவிற்கு இவனது கேவலமான புத்தி இருந்திருக்க வேண்டும்.
மருமகள் என்ற வார்தைக்கு அர்த்தமே மறு மகள் என்பதுதானே.

அணைத்து ஆறுதல் கூறினால் தவறான எண்ணத்தோடு அணைப்பதாக நினைப்பவனோடு இன்னமும் எதற்காக இவற்றை எல்லாம் சகித்துக்கொண்டு வாழவேண்டும்? முடிவெடுத்து விட்டாள் துளசி.


இதற்குமேல் தன்னுடைய வாழ்க்கையானது இவனோடு இல்லையென்று. பின் ஏன் அமைதி காக்கவேண்டுமென நினைத்தவள்,
உடல் எரிச்சல் எடுத்தாலும் அதை கணக்கில் எடுக்காது,


“என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா? அவரு உங்க அப்பா! அவரைப்போய் என்கூட.....”
என சொல்வதற்கே அசிங்கப்பட்டு தலை திருப்பி அத்தோடு நிறுத்திக்கொள்ள,


“ஆமால்ல.... அவரு என்னோட அப்பா தானே?
ஆனா அப்போ உனக்கது ஏன் தெரியாம போச்சு..? நடு ஹால்ல ரொம்ப இறுக்கமா கட்டிப்பிடிச்சிட்டு நிக்கிறீங்க.
அதை பாத்த எனக்கு எப்பிடி தகதகன்னு எரிஞ்சிருக்கும்..?”


“கெஞ்சம் நிறுத்துறீங்களா..? கட்டிபிடிச்சிட்டு நின்னோம், கட்டிப்பிடிச்சிட்டு நின்னோம்ன்னு கேவலமா பேசாதிங்க. அந்த நேரம் நான் கொஞ்சம் மனசு சரியில்லாம இருந்தேன், அதனால அவரு சும்மா ஆறுதல் படுத்தினாரு. அதுக்கு பெத்தவரையே சந்தேகப்படுவிங்களா?” என அவளும் விடாது கேட்டாள்.


“ஓ.. எதிர்த்து பேசக்கூட ஆரம்பிச்சிட்டிங்க. உனக்கு என்ன கேடு வந்திச்சுன்னு அவரு உனக்கு ஆறுதல் சொல்லணும்ன்னு, அதுவும் கட்டிப்பிடிச்சு..? ஏன் பக்கத்தில தானே அம்மாவும் நின்னாங்க. அவங்ககிட்ட தேடிக்க வேண்டியது தானே ஆறுதல்” என்றவனுடம் இதற்குமேல் பேசி புரிய வைக்க முடியாது என நினைத்தவள்.


“ச்சீ..... உங்ககூட மனுஷன் பேசுவானா..? எதுக்கெடுத்தாலும் சந்தேகம், யார்கூட பேசினாலும் சந்தேகம்.

இப்பிடியான மனுஷன்கூட வாழ்றத விட எங்கேயாவது போய் சாவுறேன்”
என வாசலை நோக்கிப் போனவளை இழுத்து ஒரு அறைவிட்டு அந்த ரூமிலே அடைத்தான்.
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
Ammaadii.. idhenna ippadi kadavule.....
 
Top