• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

31. காற்றோடு கலந்த விதையவள்

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
பூமியவள் கரு உடையினை கழைந்து பொன்நிற ஆடை உடுத்துக்கொண்டிருந்தது.
வண்டினங்களின் பாடலோசையில் மொட்டவிழ்ந்த மலர்கள், வெக்கமதை சூடி தன் நறுமணமதை ஜன்னல் வழியே மக்களுக்கு நாசி வழி புகட்டி, விடியலின் வரவை உணர்த்திக் கொண்டிருந்த நேரமது.


மார்கழி குளிரில் எழுந்து கொள்ள மனமில்லாது போர்வைக்குள் தன்னை குறுக்கிப் படுத்துக்கொண்டாள் துஷா.

நீ கடமை தவறினாலும் என் கடமையில் இருந்து தவறமாட்டேன் என்பது போல் நேரமோ தன் பணியை சிறப்பாக செய்ய,

கதவு தட்டுப்படும் சத்தம் கேட்டு, தலையை மட்டும் போர்வைக்கு வெளியில் நீட்டி
"யாரு?" என்ற குரலை மட்டும் வெளியில் அனுப்பினாள்.


"நான் தான்ம்மா அத்தை வந்திருக்கன்" என்றாள் மல்லி.


'எதுக்கு காலங்காத்தால எழுப்புறாங்க.?' மனமே இல்லாமல் எழுந்தவள், கையிரண்டையும் ஒன்றோடு ஒன்று உரசி, அதன் சூட்டை கன்னமதில் வைத்துக்கொண்டு கதவை திறந்தாள்.

"எழும்பீட்டியா...?" என்றவள் அவள் இப்போது தான் எழுந்திருப்பதை உணர்ந்து,

"இப்ப தான் எழும்பினியா? நேரம் எட்டாக போகுநு" என்றவும் தான் நேரத்தை பார்த்தாள்.


"ஐயோ அத்தை! செத்தன் இன்டைக்கு...
மூன்டு நாள் வேறு லீவு.... இன்டைக்கும் பிந்தீச்சு என்டா என்னை கொண்டுடுவானே!
நீங்களாச்சும் எழுப்பி இருக்கலாமே அத்தை!'


"நீ எழும்பி வெளிக்கிட்டிருப்ப என்டு நினைச்சன்... கதைச்ஙு நேரத்தை வீணாக்காம, போய் குளி! அத்தை காப்பி எடுத்து கொண்டு வாறன்." என்றே கிச்சன் ஓடினாள்.

அவள் குளிச்சு வருவதற்குள் வந்தவள் கையிலிருந்த காப்பியை வாங்கி பருகியவள், தயாராகும் சந்தர்ப்பத்தில், இடியாப்பத்தை தேங்காய் பால் சொதியோடு பிசைந்து ஊட்டி விட்டவளை சங்கடமாக துஷா நோக்க,


"வேலை செய்யிற புள்ள, வெறும் வயித்தோட இருக்க கூடாது. நேரமாகுது வாய திற" என்று ஊட்டிவிட்டவளிடம் மறுப்பு கூறாவது வாங்கியும் கொண்டாள் துஷா.


இது போல் ஒரு எதிர் பார்பில்லாத அன்பு இந்த வீட்டில் மாத்திரமே கிடைக்கும் என்றெண்ணியவாறு தயாராகினாள்.

தயாராகி முடியவும் தட்டில் இருந்த சாப்பாடும் முடிந்தது.


தட்டை கொண்டு போய் கிச்சனில் வைத்து விட்டு வந்தவளிடமும் மற்றவர்களிடம் கூறிவிட்டு, பஸ்சுக்காக நடையை கட்டியவளை மறிப்பது போல,


"பஸ்ல போனா நேரமாயிடும் துஷா... நில்லு ஜெகனை கொண்டுவந்து விட சொல்லுறன்" என அன்பாக கூறும் அத்தை பேச்சை தட்ட முடியாமல் சரி என்றாள்.


அவளை அழைத்து செல்வதென்றால் அவனுக்கு கசக்குமா என்ன?
கடையின் வாசலில் காண்டுவந்து இறக்கியவன்,

"இது தான் நீ வேல செய்ற இடமா? அப்ப இனிமேல் அடிக்கடி வரலாம்"


"ஏற்கனவே லேட் .....
வந்து பேசுறன்.. பைய்.." என்று அவள் ஓடிய ஓட்டத்தில் அவளது காலடி தடங்கள் தனியாக கேட்டது.


தனக்கான இருப்பிடத்துக்கு வந்தவள், ரதனது இருக்கையை திரும்பி பார்த்தாள்.
ஏற்கனவே அவன் வந்து விட்டான் என்பதற்கு அடையாளமாக அவனது மடிக்கணனி திறந்திருந்தது. கூடவே அவனது போனும் மடிக்கணனியோடு சாத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவள் சென்ற சமயம் அவன் அங்கில்லை.


அந்த சொப்பின் ஒரு நாள் கணக்கு பார்க்கவே ஒன்றரை நாட்கள் தேவை. மூன்று நாட்கள் கணக்கு பார்ப்பதென்றால் நேரம் போவது தெரியாமல் போக வேண்டும் துஷாவுக்கு.


ஆனால் முழுதாக இந்த இரண்டு நாட்கள் ரதனை காணாமல் இருந்தவளுக்கு, இன்றாவது ஒரு தடவை பார்த்து விடலாம் என்று நினைத்தால், இவனை காணவில்லை.


அவனை ஒரு தடவை கண்ணுக்குள் வைக்காமல், வேலையும் ஓடுவேனா என அடம்பிடித்தது.


சும்மா நேரங்களில் என்றால் செல்லம், டார்லிங்க் என்று தொல்லை தருபவன்,
இன்று அவன் வரவுக்காக ஏங்கி கிடக்கின்றவளை, ஏங்க வைக்கிறான் என்று கோபம் தான் வந்தது.


எதற்காக அவனை பார்க்க வேண்டும் என்று தன் மனம் துடிக்கின்றது என்று அவள் சிந்தனைக்கு எட்டவில்லை.


வேலையும் கொஞ்சமும் நகர்ந்த பாடில்லை, வாசலையே பார்த்தபடி இருந்தவளுக்கு, வெளியே சென்று என்னவென்று கேட்போம் என்ற எண்ணமும் வரவில்லை.


நேரமோ மதியத்தை கடந்து மூன்றை நெருங்கி கொண்டிருக்க, வேகமாக உள்ளோ வந்தான் அவள் தேடலுக்குரியவன்.


வந்தவன் எதையும் கவனிக்கவில்லை. இருக்கையில் அமர்ந்த மறுநொடியே, போனையே நோண்டி கொண்டிருந்தான்.


முகமோ வழக்கத்துக்கு மாறாக இறுகி இருந்தது. அவள் புறம் தவறிக்கூட பார்வையை விடவில்லை.
அவளுக்கும் என்ன ஏதென்று புரியாமல் இருக்க.


கடைசியாக அவனை சந்தித்து பேசியது நினைவில் வந்தது.
அவன் செயற்பாடுகளே அவனது மனதை காட்டியது.


'அப்ப என்னை வெறுத்துட்டானா? இவ்வளவுதான் என்னில இருந்த காதலா? ஒரு நாள் பார்க்காம இருக்க முடியாது என்டு, என்னை தேடி ஓடி வந்தவன், இந்த இரண்டு நாளும் பேசாம பார்க்காம, இருந்ததுக்கே என்னை கண்டதும், தன் ஏக்கத்தை போக்கி இருக்கவெல்லா வேணும்.
ஆனால் என்னை கண்டு கொள்ளவே இல்லையே. ஏன் இந்த பக்கம் பார்க்க கூட செத்துட்டுதா?


எல்லாத்துக்கு நான் தான் காரணம். அவன் இப்படி நடக்கிறான் என்டா என்ர வார்த்தை அவனை எவ்வளவுக்கு நோகடிச்சிருக்கும்.


முதல்ல அவனிட்ட மன்னிப்பு கேட்பம்' என்று எண்ணி அவனிடம் திரும்பினாள்.
அவன் கவனம் இன்னும் போனில் இருந்து மீளவில்லை.


'சரி எழும்பி போயே கேட்ப்பம்' என்று அவன் முன் வந்து நின்றவளுக்கு தான் வார்த்தைகள் தந்தியடித்தது.
போனில் இருந்து பார்வையை விலக்காதவனோ,


"என்ன சொல்லு" என்றான் ஒற்றை வரியில்.
ஏனோ அவன் குரலில் இருந்த இறுக்கம் அவளை அவனிடமிருந்து விலக்கி வைப்பதாகவே பட்டது.


"அது சாரி ..... சார்" என்றாள்.
"எதுக்கு?" என்றான் புரியாதவனாட்டம்.


"அது அன்டைக்கு ரதன்.... நான் உங்கள......." என்று அவள் அன்றைய நாளை நினைவு படுத்த,


"மிஸ் துஷாந்தினி! நான் உங்கட பாேஸ்.... சோ.. ரதன் என்டு எனக்கு நெருக்கமானவய மட்டும் தான் கூப்பிட அனுமதிச்சிருக்கிறன். நீங்கள் எல்லோரை போல சார் என்டே கூப்பிடலாம்." என்றான் எச்சரிப்பது போல்.


துஷாவுக்கு ஏனோ கண்கள் கரித்துக்கொண்டு வந்தது. அதை வெளிக்காட்டாதவள்,


"ஓகே சார்... பட் நான் சாரி கேட்டது வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்துக்கு" என கூறி முடிக்குமட்டும் பொறுமையாக இருந்தவன், அவள் அடுத்து பேச வருவதற்குள், கையினை உயர்த்தி, அவளை தடுத்த மறு கணமே,
பின்னால் இருந்த அலமாரியை திறந்து ஒரு பைல்லை எடுத்தவன், அதில் கிளிப் செய்ய பட்ட காகிதங்களை எடுத்து வந்து துஷாவிடம் நீட்டி,


"இதை படி!" என்றான்.
அது அவள் கையெழுத்து போட்ட அதே காகிதம் தான்.


"இது நீ போட்ட கையெப்பம் தானே" என்றான்.
அவளும் அதை படித்து விட்டே ஆமோதிப்பதாய் தலையாட்டினாள்.


அவள் கையில் இருந்து அதை பிடிங்கி எடுத்தவன், அவள் முன்னிலையிலேயே சுக்கல் சுக்கலாக கிழித்து, குப்பை கூடையில் போட்டான்.


முடிஞ்சு போன விஷயத்த திரும்ப திரும்ப நினைச்சு கவலை படுறது எனக்கு பழக்கமில்லை. எப்ப பொறுக்கியாக உன்ர கண்களுக்கு நான் தெரிஞ்சனோ அப்பவே இந்த முடிவ எடுத்துட்டன்.


எங்க உனக்கு தெரியாம அதை தூக்கி போட்டா, நீ நம்போணுமே" என்று உதட்டை ஒரு பக்கமாக இழுத்து விரக்தியாய் புன்னகைத்தவன்,


"அது தான் நீ வரட்டும் என்டு, உன்ர கண் முன்னயே கிழித்து எறிஞ்சன். இந்த நிமிஷம் கூட நீ இங்க இருந்து போகலாம்.


யாரும் உன்னை தடுக்க மாட்டம்" என்றவன், விறு விறு என்று அந்த அறையை விட்டு வெளியேறினான்.
அதே நிலையில் உறைந்து நின்றவள் மனமோ,


"எல்லாமே அவ்வளவு தானா?" ஆற்றாமையோடு வடிந்த கண்ணீர், அவள் காதலை அளுக்கே புரிய வைத்தது.


நின்ற இடத்தில் நின்றே தரையில் மண்டியிட்டவள் கண்கள் ஆறு கண்டிருந்தது.
சிறிது நேரத்தில் கண்களை துடைத்து, தன்னை தானே தேற்றிக் கொண்டவள்,

"இதுவம் ஒரு வகையில நல்லது தான்." என எண்ணிக் கொண்டவளால், அவள் மனதை சாமாதானம் செய்ய முடியவில்லை. அதன் வெளிப்பாடாக, எவ்வளவு துடைத்தாலும் கண்ணிர் மட்டும் நிற்க மறுத்தது.

துஷாவை நோகடித்து விட்டு போனவன், வந்த பாட்டைத்தான் காணவில்லை.

அவள் வீடு செல்லும் நேரமும் நெருங்கியது. அவன் வரவை எதிர் பார்த்தே சோர்ந்து போனாள்.


'இதற்கு மேல் வர மாட்டான்.
இப்போது பஸ்ஸும் வேறு, வேளையோடு தயாரானால் தான் நிலவரம் தெரியும்' என்று அறையை விட்டு வெளியே வந்தவளை கடந்து உள்ளே நுழைந்தான் அவளை கண்டும் காணாதவன் போல்.


'இதற்க்காகவா இவனை எதிர் பார்த்து கிடந்தோம்... முன்னரே சென்றிருந்தால், இந்த பாரமுக வேதனையாக இருந்திருக்காது.' என்றாகிப்போனது துஷாவுக்கு.


பஸ்ஸில் வரும்போதே, அழுது வடிந்த முகத்தை மாற்ற வேண்டும்... இல்லையேல்.. என்ன? ஏது? என்ற கேள்வி வரும். பின் இன்று இல்லாவிடினும், நாளை இன்னாருடைய மகள் என்று தெரிய வரும் போது, தாயை போல் தான் மகளும் என்று, அவர் பெயரும் கெட்டுவிடும்.
வேண்டாம்........ யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம்.


அது தான் எல்லாம் முடிந்து போயிற்றே. . இனி எதுக்கு அதையே நினைத்துக்கொண்டு....? இனி இந்த பேச்சுக்கே இடமில்லை.
முன்பு தான் எனக்கு குடும்பமில்லை. இப்போ யாரென்றே தெரியாமல் என்மேல் எந்த அளவு அன்பு காட்டுகிறார்கள். ஒரு நொடி கூட வேற்று மனிதராக அந்த குடும்பத்தில் உணரவில்லையே!
இனி அவர்களுக்காக வாழ்வதில் தான் என் சந்தோஷம். காதலும் வேண்டாம் கத்தரிக்காயும் வேண்டாம்.


எவ்வளவு உறுதியான காதலாக இருந்தால், ஒரு வார்த்தையில் அறுந்து போயிருக்கும்.
பொய் ......எல்லாமே பொய்....... காதல் என்பதே பொய்..... உருக்கும் வார்த்தைகளை உண்மை என்று நம்பி, நாமும் காதலித்தால் போதும்..... வெளிப்படையாகவே காதல் என்றால் என்னவென காட்டி விடுவார்கள்.


முதலில் புரிந்து கொள்ளவில்லை தான்.... ஆனால் புரிந்து காெள்வதற்கான நேரத்தை தந்திருக்கலாமே!
வேண்டாம் துஷா! எதுவுமே வேண்டாம். கண்டதை நினைத்து அவதிப்படாதே! முதலில் எடுத்த முடிவுதான் சரி.
உன் வாழ்க்கை இன்னொருவர் அமைத்து தருவதாக இருக்கட்டும. நீயாக ஒரு முடிவை எடுத்தாலா, உன் பெற்றோர்கள் போல தான் தனிமையில் நிற்க நேரிடும்.' தெளிவான முடிவெடுத்தவளாய் வீடு வந்து சேர்ந்தாள்.


எவரையும் எதிர்கொள்ளாது தனதறைக்குள் வந்தவள், குளியலறை புகுந்தாள். அனைவரும் வேலையாக இருந்ததால் அவளையும் யாரும் கவனிக்கவில்லை.


சோக ரேகை முகத்தில் தெரியாதவாறு குளித்து விட்டு வந்தவள், அடுப்படியுள் நுழைந்தாள்.
அவளை கண்டதும் ஓடிவந்த காந்தி,

" எப்பம்மா வந்த?"


"இப்ப தான் பாட்டி! நான் சமைக்கவா?"


"ஒன்டும் வேண்டாம்.... வேலையால வந்து களைப்பா இருக்கும்... அந்த மூலையில இரு! அத்தை காப்பி போட்டு தாறேன்" என்றாள் மல்லி.


"இல்லத்த எனக்கு களைப்பெல்லாம் இல்ல. நானே சமைக்கிறனே" என கெஞ்ச.
"அடி வேணுமாடீ? பேசாம அத்த சொல்லுறதை செய்!" என்று கண்டித்தவர் காப்பி கலந்து கொடுத்து.


"இத குடிச்சிட்டு போ...ய் அவங்களோட இருந்து வம்ப வள...
அத விட்டுட்டு, இரவு சாப்பாட்டில மண்ணை போட்டுடாத... இரவு சாப்பிடாட்டிக்கு.. நித்திரை வராது." என்றார் கேலிபோல.


"அவ்வளவு கேவலமா எல்லாம் இருக்காது என்ர சமையல். அம்மாவே என்னை பாராட்டுவாங்க தெரியுமா? உங்கட சாப்பாட்டில தான் உப்பே இல்லை." என்று விட்டு ஓடியவளை துரத்தியவள்,


"இதுவும் இதுகளோட சேந்து வாயடிக்க வெளிக்கிட்டுது. இனி திண்டாட்டம் தான் அத்த உங்களுக்கு" என்றாள் மல்லி காந்தியிடம்.


"அவளை பாக்க எல்லாம் எனக்கு வித்தியாசமா இல்ல மல்லி. இப்ப எல்லா இளசுங்களும் இப்பிடித்தான்.... ஆனா நீ தான் நேற்றேல இருந்து புதுசா இருக்கிற... அதுவும் இவளிட்ட கூட உரிமை எடுத்துக்கிற போல."
என்றார் அவளது மாற்றம் கண்டு.


"அது அத்த எனக்கு பொட்டை புள்ளை இல்ல... அதான்" என அவள் தடுமாற..


"உனக்கில்ல தான்... ஆனா இங்க தான் பெரிய பட்டாளம் இருக்கே! சரி அவளும் தாய் தகப்பன் இல்லாதவள்.... அவளுக்கும் ஒரு ஒட்டு தேவை தானே!" என்று அந்த கதையை முடித்து விட்டார் காந்தி.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,971
துஷாவுக்கு ஒரு பக்கம் அவனின் பாராமுகம் இன்னோரு பக்கம் அன்பான குடும்பம் ரெண்டு வித உணர்வுகளில் சிக்கிட்டு இருக்கா 🙄🙄🙄🙄🙄🙄
 

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
துஷாவுக்கு ஒரு பக்கம் அவனின் பாராமுகம் இன்னோரு பக்கம் அன்பான குடும்பம் ரெண்டு வித உணர்வுகளில் சிக்கிட்டு இருக்கா 🙄🙄🙄🙄🙄🙄
நன்றிக்கா
 
Top