• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Bindu sarah

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
65
மூன்று தேவிகளும் சேர்ந்து ஒரு விருந்தே சமைச்சி வச்சி இருந்தாங்க... ஆதிக்குத்தான் ஏகபோக சந்தோசம், அப்பாடா இனி தொல்லை இல்லை, ஜாலியா ஆபீஸ் வீடுன்னு சுத்திட்டு இருக்கலாம்ன்னு நினைத்த மறுநோடி.

ரித்தியும் சாராவும் இரு ஆண்களை பார்த்து "வாரம் புல்லா நாங்க பாத்துப்போம், வீக் எண்டு ரெண்டு நாளு நீங்க பாத்துக்கோங்க, வீட்டு வேலையை."

ஆதி அர்ஜுன் ஒன்றாக "அது தான பாத்தோம், ஏதோ சந்தோசம் கிடைச்ச மறு நொடி இப்படி செஞ்சிட்டீங்களே," என்றனர் இருவரும் பரிதாபமாக.

சுமூகமாக சென்றது இந்த குடும்பத்தின் வாழ்க்கை... தாரா விடாம சேர்ந்து அர்ஜுன் ஆதி குழந்தையாக மாறி இன்னும் இன்னும் குறும்பு செய்து நம்ம மூணு பேருட்ட அடிவாங்கலனா தூக்கம் வராது, சாராவ தான் அவன் விட்டுட்டு போனத திரும்ப திரும்ப சொல்லி அர்ஜுன் கண்கலங்குவான், அவளால அதை ஏத்துக்க முடில.

ஆறு மாதங்கள் கழித்து ரெண்டு ஆண்குழந்தையை பெற்று எடுத்தாள் சாரா... ரொம்ப கஷ்டப்பட்டத பாக்க முடியாத, அர்ஜுன்... டாக்டர் ட ஆப்ரேஷன் செஞ்சி எடுக்க சொல்ல... அந்த வழியிலும் சாரா அர்ஜுனை சமாதானம் படுத்தினாள், நார்மல் ஆக பாஸிபிளிட்டிஸ் இருக்கும் போது எதுக்கு அர்ஜுன் இப்படி இம்சை பண்றன்னு.... அவனை சம்மத படுத்தி வெளியே அனுப்ப முயல.. அர்ஜுன் விடாப்பிடியாக, சாரா கைகளை பிடித்துக்கொண்டு பக்கம் நின்று கொண்டான்... பல மணிநேரத் துடிப்பு, அர்ஜுன் ஒரு வாரம் பித்து பிடித்தது போல சுத்திக்கொண்டு இருந்தான். சாரா கொஞ்சம் கொஞ்சம் பேசி அர்ஜுனை சரிகட்ட... தாராவை தவிர அனைவரும் இரவு ஷிப்ட் வேலை பார்த்து இரண்டு குழந்தையையும் படுத்தி எடுத்து.... பெரும்பாலும் அர்ஜுன் ஆதி மாற்றி மாற்றி பார்த்துட்டு இருப்பாங்க.

தாராவிற்கு செம ஜாலி, ஒரு நாள் புல்லா தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு பாரபட்சம் பார்க்காமல்... எனக்கு 2 தம்பி 2 தம்பி வாங்கிட்டு வந்தோம்ன்னு டமாரம் அடித்து கொண்டு இருந்தாள்...

சாரா, ரொம்ப சோர்வா ஆயிட்டா, அவளையும் சேர்த்து குழந்தையை போல பாத்துக்கொண்டு இருந்தார்கள் குடும்பத்தில் அனைவரும்.. ஒருவர் ஒருவரை புரிந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தர்கள்.

ஐந்து வருடங்கள் கழித்து.

டேய்ய் "ரெண்டு பேரும் என்னடா செய்ரீங்க ஸ்கூல்க்கு டைம் ஆச்சி" வாசலில் நின்றுகொண்டு தாரா கத்திக்கொண்டு இருந்தாள்.

தாராவின் பாசம் படிக்கும் விஷயத்தில் மட்டும் எங்கோ சென்று ஒளிந்து கொள்ளும்.. அவளுக்கு ஸ்கூல், ஸ்போர்ட்ஸ்ன்னு ஒன்னு விடாமல் ஆர்வம், அவளது அப்பாவை போல.

கண்ணன் கிருஷ்ணன் ரெட்டை சகோதரர்கள்....

வெளியே ஓடிவந்து தாராவின் கைகளை ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்து கொண்டு ஸ்கூல் பஸ்காக காத்துக்கொண்டு இருந்தார்கள்.

இவர்கள் சென்றவுடன்... மீராவிற்கு இப்போது எல்லாம் வீட்டில் இருக்கவே பிடிப்பதில்லை... அவர் வயதை ஒத்த நான்கு பேர் சேந்து சிட்டியை வளம்வருவார், எதாவது பொது சேவை, கோவில் குளம் என்று சுத்திகொண்டு இருக்க... மீரா சென்ற மறு நொடி... சமையல் செய்வதை ஒதுக்கி வைத்துக்கொண்டு இருந்த ரித்தி சாராவை சரியாக அழைத்தார்கள்... ஆதி மற்றும் அர்ஜுன்.

சாரா ரித்தி மாற்றி மாற்றி பார்த்துட்டு சிரித்துக்கொண்டே அவர்கள் அறைக்கு சென்ற மறுநொடி...

அர்ஜுன், சாராவை நெருங்க... சாரா திரும்பி டேபிள் மேல இருந்த அழுக்கு துணியை எடுத்து அர்ஜுன் கையிலே திணித்து... அர்ஜுன் இத துவச்சிட்டு வந்து அப்புறம் உன் பொண்டாட்டிய கொஞ்சிக்கோ... என்று திரும்ப கிட்சேன் உள்ளேய நுழைந்து கொண்டாள்.

ஆதி மெத்தையில் படுத்துக்கொண்டு கையை அவளை நோக்கி நீட்ட... ரித்தி ஓடி வந்து அவனை அணைத்து கொண்டாள்..

"ஆதி எனக்காக ஒன்னு செய்வாயா?".

"உனக்காக உயிரையேக்கூட தருவேன் டி" என்றான் காதல் மின்ன.

பின்னாடி துணி வச்சி இருக்கேன் துவைச்சு தா" என்று விலகி கொண்டாள்.

'இவ அதிசயமா கிட்ட வரும்போதே தெரியும் ஏதோ பிளான் ஓடதான் வரான்னு'.

"ஆதி" என்றாள் ரித்திகா.

"என்னாச்சி" என்றான் ஆதி.

"மைன்ட் வாய்ஸ் கொஞ்சம் சத்தமா சொல்லிட்டா" என்று சீறிவிட்டு சாராவுக்கு உதவி செய்ய போய்ட்டா.

இப்படியே இவர்களின் நாட்கள், காதலுடன் சென்றது...

கிருஷ்ணா கண்ணன்.. இருவருக்கும் பிறந்தநாள் வர...

கோளாகலமாக கொண்டாடினார்கள்... அர்ஜுன் சாரா, ரித்தி ஆதி, செம்மையா ஒரு டான்ஸ் பர்பாமன்ஸ் கொடுக்க.

செல்வி தயங்கிக்கொண்டே ஒதுங்கி நின்றாள். அதை பார்த்த குடும்பத்தில் இருப்பவர்.. ஆனந்தனும் இந்த ஐந்து வருடத்தில் செல்வியை ஒரு பார்வை பார்த்துவிட்டு கடந்து செல்வான், அவளை எந்த தொந்தரவும் செய்யாமல்... அவர்கள் வீட்டுக்கு மேலையே அவனையும் குடிவைத்து விட்டார்கள் ஆதியும் அர்ஜுனும்.

செல்வி இப்போது ஒரு காலேஜ்ஜில் தலைமை பொறுப்பில் இருக்க.

பங்ஷன் முடிந்து... சாரா ஆனந்தனை பார்த்துட்டு, "டேய்ய் உனக்கு வயசாகுது கல்யாணத்துக்கு பொண்ணு பாத்துட்டேன்" என்று சொன்ன மறுநொடி செல்வி சந்தோஷை முறைக்க, சந்தோஷ் பதரிட்டான்.

"செல்வியை சங்கடமாக பார்த்துட்டு, இல்லை என்பது போல தலையை ஆட்டினான்.

செல்வி கோவமாக அவள் அறைக்கு சென்று அடைந்து கொண்டாள்.

ஆனந்தன் பின்னாடியே சென்று அவளை திட்டி விட்டான் "இவ்ளோ ஆசை வச்சிட்டு ஏன்டி என்ன அஞ்சு வருஷமா காக்கவச்ச" என்று ஒரு அறை கொடுத்து கட்டிக்கொண்டு, சந்தோசமா கண்களங்கினான்.

இவர்களுக்கு திருமணம் முடிந்த இரண்டு மாதத்தில், செல்வியின் அக்காவிற்கு ஒரு பையன், ஒரு பெண் குழந்தை. இரண்டு வருடம் கழித்து, வைத்தியம் செய்ய முடியாததால் நோய்வாய்ப்பட்டு கணவர் இறந்து விட்டார், அந்த துக்கம் தாளாமல் ஆறு மாதத்தில் மகனை தவிக்க விட்டு அவரும் இறைவனடி சேர்ந்தார்... அந்த பையனை, தத்து எடுத்து கொண்டார்கள், அப்போ செல்வி வயிற்றில் குழந்தை உருவாகி இருந்தது, செல்விதான் குழம்பிவிட்டாள். "ஆனந்தன் நம்ம குழந்தை வந்ததுனா, அவங்க ரெண்டு பேரையும் வெறுத்துருவானா?"

"நீ ஏன் உன் அக்கா குழந்தையா நினைக்கற, உன் குழந்தையா நினைத்துகொள்" என்று ஆனந்தன் சாதாரணமாக சொல்வதை பார்த்துட்டு வியந்து தான் போனாள்.

தாராவிற்கும் செல்வி தத்து எடுத்த பையனுக்கும் சுத்தமா ஆகாது... ஆனால் கண்ணனுக்கு அந்த கை குழந்தையை பிடித்துவிட்டது...

கண்ணன் ஒருமுறை தங்கை என்று சொல்ல, கிருஷ்ணாக்கு கோபம் வந்தது, அது அத்தை பொண்ணுடா என்று திட்டிட்டான் அந்த குட்டி வாண்டு..

தாரா, செல்வி மகன், காவியன் வரும்போது எப்போ பாரு போட்டி, எல்லாத்துலயும்... இனிமையான சண்டையுடன் சென்றது இவர்களின் நிறைவான வாழ்கை.

இவர்களை பற்றி அடுத்த கதைல பாக்கலாம்.

முடிஞ்சிடுச்சி ஸ்டோரி.

எனக்கு சப்போர்ட் செஞ்ச எல்லோருக்கும் ரொம்ப தேங்க் யூ.. டெவில்ஸ்... அடுத்த கதையோடு சந்திப்போம் காதல் ரிதம்...2 ( மை டியர் சண்டைக்கோழி )

மக்களே... நன்றி... வணக்கம்...
 
Top