• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

32. காற்றோடு கலந்த விதையவள்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
நாட்களும் அதன் பாட்டில் நகர்ந்தது. எப்போதும் போல் தாமதமாகவே வேலைக்கு வருபவன், அங்கு ஒரு மணி நேரத்தினை மட்டுமே செலவழிப்பான். பின் துஷா கிளம்பியதன் பின்னர் தான் அறைக்குள் வருவான்.


அவனது பாராமுகம் கஷ்டமாக இருந்தாலும், அதை அவனிடம் வெளிப்படுத்த மாட்டாள்.
இரவு வேளைகளில் மாத்திரமே, தனிமை அவஸ்த்தையை தரும்.
அன்று என்ன அவசரமோ.. பரபரவென உள்ள நுழைந்த ரவி,


"ரதன் எங்க" என்றான் அவனில்லாத வெற்று இருக்கையை காண்பித்து.
அவளுக்கென்ன தெரியும்? அவனது பரபரப்பு எதையோ உணர்த்த..

"தெரியேல... இப்பல்லாம் சார் எப்ப வாரார்.. எப்ப போறார் என்டே தெரியிறதில்ல."


"இங்க வரேல என்டா எங்க தான் போய் தொலைஞ்சான்? விடிஞ்சதில இருந்து தேடுறன்."


"ஏனண்ணா இவ்வளவு பரபரப்பு... யாருக்காச்சும் ஏதாவது......?" அவனது பரபரப்பு அவளை பீதியாக்கியது.


"அப்பிடி எல்லாம் ஒன்டுமில்லம்மா...
இன்டைக்கு அவனுக்கு பொண்ணு பாக்க போறம்.. நேற்று வரை அவனே நினைவு படுத்தீட்டு இருந்தான். விடிஞ்சதும் ஆளை காணேல.... போன் எடுத்தா ரீச் ஆகேல." என்றவனது பதிலில்,
துஷாவின் நின்று துடித்தது.


"பெண்ணு பாக்க போறீங்களா?" உதடுகள் அதிர்ச்சியாய் வார்த்தையை மென்று கக்க.


"ம்ம்.. வந்தா சொல்லிடு! அம்மா பதறட்டு இருக்கிறா என்டு"
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி, அவள் வாழ்வில் தொடர்ந்து நிகழ்வது முதல் முறை அல்லவே!
இதிலிருந்து முதலில் மீண்டு வர வேண்டும்.


இதற்கு காரணமே நான் தானே! எனக்கு தான் என் குடும்பம் முக்கியமே! பின் ஏன் இத்தனை தடுமாற்றம்?


என்னதான் அவனை நினைக்க கூடாது என்று நினைத்தாலும், ஆழ் மனம் அதை ஏற்க வேண்டுமே!
அவனே என்னை வெறுக்கும் போது எதற்காக இந்த கண்ணீர்.

ரவி அண்ணா அதை கவனித்திருப்பாரோ...! மற்றவர்கள் முன்பு வரைமுறை அற்று வரும் உணர்வுகளை கட்டுப்படுத்த பழக வேண்டும்.' நொடிப்பொழுதில் அத்தனையையும் அசை போட்டவளாக, ரவியை பார்ப்பதை விடுத்து, தரையில் பார்வையை பதித்தவள்,


"வந்தா கட்டாயம் சொல்லுறேன்ண்ணா" என்ற அதே நேரம், அவன் போனும் அலறியது.


"அவன் தான்..." என்றவாறு ஸ்பீக்கரில் போட்டான்.


"எங்கடா நிக்கிற? பொண்ணு பாக்கோணும் என்டு அவசர படுத்திட்டு, காலங்காத்தால எங்க போன? அம்மா ரெடியாகிட்டா... வேளைக்கு வா!"


"டேய்... விடிஞ்சதூம் சின்ன வேலை திடீர் என்டு வந்திட்டுது.. அத முடிச்சிட்டு வேளையோட வரலாம் என்டுதான் போனன்.


இப்ப வீட்டுக்கு வந்துட்டான்.. நாங்க வெளிக்கிட்டாச்சு... நீ நேரா பொண்ணு வீட்டுக்கு வந்திடு! நல்ல நேரம் முடிய போகுது என்டு அம்மா புலம்புறா..." போன் வழியாக கேட்ட ரதனின் உட்சாக குரலை துஷாவால் நம்பவே முடியவில்லை.

'என்ன ஒரு ஆர்வம்....? ஒருத்தியை நேசித்து விட்டு, அவ்வளவு எளிதில் மறந்திடவும் முடியுமா? இவன் வேகத்தை பார்த்தால், ஒரு வாரத்தில் திருமணம் என்றால் கூட ஆச்சரிய படுவதற்கில்லை.
நேசித்த ஒருத்தியை இலகுவில் மறக்க முடியும் என்றால், என்னால் ஏன் முடியவில்லை?


அவனை போல் உடனே மறந்து போக, உன் காதல் என்ன அவ்வளவு பலவீனமானதா?
வாய் வார்த்தையால் மயக்கி, அந்த காதல் கைகூடவில்லை என்றதும் மறு நொடியே மறந்து போக.

மெல்லவும் இயலாமர். துப்பவும் இயலாமல்.எனக்கு மட்டும் ஏன்? எதற்காக இவ்வளவு வேதனைகள்? இதற்கு நீ என்னை படைக்காமலே விட்டிருக்கலாமே!


பிஞ்சு குழந்தையிடம் இந்தா பிடி இது உன்னது தான் என காட்டி விட்டு, இடையில் அதை பிடிங்கிக் கொள்வது தான் உன் பொழுது போக்கா?
பேசாமல் என்னையும் என்னை பெற்றவர்களோடே அனுப்பி விடு' என்று
ஏதோதோ எண்ணத்தில் உலன்றவள் கண்களை மறைத்து கொண்டு கரும்புள்ளி திரல்கள் மொய்த்துக்கொண்டு வந்தது.


அந்த மங்கல் திரையினூரே ரவியை பார்த்தவள்,
நீங்கள் போங்கோ... உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கப் போயினம்.. நல்ல நேரம் போயிட...." என்று கூற வந்தவள் நாக்கானது துவண்டு போக, அவளையும் அறியாது மேசையில் விழுந்தாள்.


பாவம் அவளும் எவ்வளவு நேரந்தான் மன சோர்வை அவனிடம் காட்டி கொள்ளாது மறைத்து வைப்பாள்.


அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்தால் மூளையும் தான் என்ன செய்யும்? அதன் செயலை கொஞ்ச நேரம் நிறுத்தி வைக்க நினைத்தது போல. அதனால் அவள் நெற்றி தான் பலமாக காயங் கண்டது.


ரதனுடன் பேசிக்கொண்டிருந்தவன், துஷாவின் நிலை கண்டு, துஷா...... என்ற அலறலோடு போனை தூக்கி எறிந்து விட்டு, அவளிடம் ஓடினான்.


நெற்றி பிளந்து ரத்தம் கொட்டியது. அது நகரத்தின் மையபகுதி என்பதால், அருகில் இருந்த தனியார் வைத்தியசாலை ஒன்றில் சேர்த்து விட்டான்.
அவளை பார்வையிட்ட வைத்தியர்,


"பலமான அடி! உடனே தையல் போடவேண்டும்." என்றதோடு நில்லாது தியேட்டருக்கு எடுத்து விட்டார்.
அரைமணி நேரம் கடந்திருக்கும்,


"பயபிட தேவையில்ல.... நாலு தையல் போட்டிருக்கு... சரியாக சாப்பிடுவதில்லை போல.... சரியான வீக்கா இருக்கா.... செலேன் ஏத்தி இருக்கிறம்.. அரைமணித்தியாலத்தில எழும்பிடுவா.. அப்ப நீங்கள் பாக்கலாம்.... உள்ள நிறைய நோயாளிகள் இருக்கினம், அவயலுக்கு தொந்தரவில்லாம பாருங்கோ.." என்றவர் சென்று விட்டார்.


சிறிது நேரம் கதவின் துவாரத்தின் வழியே அவள் எழுந்து கொள்கிறாளா என்று பார்த்திருந்தவனை நாடி வந்தான் ரதன்.


"என்னாச்சுடா...? போன எறிஞ்சிட்டு வந்திட்ட... நான் கத்தீட்டு இருக்கன்.... கடைக்கு வந்து பாத்தா, நடந்ததை சொல்லீச்சினம்" என சீரியஷாக பேசிக்கொண்டு போனவன்
சட்டை காலரை கொத்தாக பற்றி இழுத்தவன்,


"எல்லாமே உன்னால தான்டா? அவளின்ர இந்த நிலமைக்கு, நானும் காரணமாகிட்டன்.... என்னை எதுக்குடா இதில இழுத்து விட்ட..? இன்னும் உனக்கு என்ன வேணும்?
பாவம்டா அவள்.... நாலு தையல்டா....
வீக்கா வேற இருக்காளாம்.? இப்ப நீ நினைச்சது நடந்துதா...? இருபது நாள் அவளை கஷ்டப்படுத்தியும் உன்ர ஆத்திரம் அடங்கேலயா?


கடைசியா என்ன சொன்னா தெரியுமா? நல்ல நேரம் முடியிறதுக்குள்ள என்னை போகட்டாம்... அப்ப கூட உன்னோட நல்லதை மட்டும் தான் நினைச்சிருக்கா...

நீயெல்லாம் என்ன மனுசன்டா?
ஒரு பெண்ணோட மனச இன்னும் எந்த விதத்தில கஷ்டப்படுத்த போற.....?
நீ என்ர நண்பன் என்டு முன்னம் பெருமைப்பட்டன். இப்ப இப்பிடி ஒரு பிடிவாத காரன் என்ர நண்பனா இருக்கிறத நினைச்சு வேதனை படுறன்.


போடா போ..... இங்க இருந்து முதல்ல போ.. அவள் எழும்பேக்க நீ இருக்க கூடாது ........ உன்னை பாத்தா அவளுக்கு ஏதாவது ஆகிடும்.... நீ செய்ததெல்லாம் காணும்..." வைத்தியசாலையே அதிருமளவு கத்தினான்.


அவனுக்கு தன்னால் துஷாவுக்கு இப்படி ஆகிவிட்டது என்று குற்ற உணர்வு ஒவ்வொரு நொடியும் கொன்றது.


இந்த பெண் பார்க்கும் படலம் எதுவும் வேண்டாம், துஷா இருக்கும் நிலையில் அவளுக்கு தெரிந்தால், மனசு உடைந்து விடுவாள் என்று எவ்வளவோ எடுத்து சொன்னான்.


ஆனால் ரதன் தான் கேட்வில்லை.
கட்டாயம் இது அவளுக்கு தெரிந்தாக வேண்டும் என்று அடம்பிடித்தான். அது தான் துஷாவின் இன் நிலமைக்கு காரணம்.


இதுவரை எதற்கும் அடங்காதவன், முதல் முதலில் நண்பனின் கத்தலில் அடங்கி வைத்தியசாலையை விட்டு வெளியேறினான்.


கதிரையில் இருந்தவாறு தலைக்கு முன்றுகொடுத்து கொண்டிருந்த ரவியிடம் வந்த தாதிப்பெண்,


"அவா எழும்பீட்டா... போய் பார்க்கலாம்" என்றாள்.
கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவள், அவசரமாக உள்ளே வந்தவனை கண்டதும்,


"சிரமம் நந்திட்டன் என.... எனக்காக இன்னும் ஒரு உதவி மட்டும் செய்யிறீங்களா?" என்றான் கெஞ்சலாக.


"சொல்லும்மா.... என்ன செய்யோணும்.... அண்ணா நான் செய்யிறன்டா..." உணர்ச்சி பொங்க அவன் பேச,


"வேண்டாம் அண்ணா! இதுக்கு மேல உறவென்டு என்னால தாங்க ஏலாது..." குரலில் வருத்தங்காட்டியவள், அவன் முகம் வாடி போவதை கண்டு,


"எனக்கிருக்கிற சொந்தத்தா, நிம்மதியா ஒரு ரொட்டி துண்டையே சாப்பிட ஏலாம, ஒவ்வொரு பக்கத்தால புடுங்கி கொண்டு போகுதுங்கள்" என்று வராத சிரிப்பை சிந்தினாள்.
தனக்காக தான் பேச்சை மாற்றினாள் என்பது புரிந்தாலும், பதிலுக்கு அவனும் சிரித்து வைத்தான்.


"வீட்டு நம்பர் சொல்லுறன்... போன் போட்டு தாறிங்களா?"


"நானும் போனை போட்டுட்டு வந்திட்டனே! கொஞ்சம் இரு! யாரிட்டயாவது வாங்கி வாரன்" என்றவன், சொன்னது போலவே யாரிடமோ வாங்கி வந்து, அவள் கூறிய நம்பரை அழுத்தி பேசுமாறு கொடுத்தான்.


"ஊர்மியத்தையா.... நான் துஷா அத்தை. சின்னதா ஒரு அடி! இப்ப ஆஸ்பத்திரியில இருக்கன்.... வாரீங்களா..?"

"..............."


"ஐயோ அத்தை.... பெருசா எதுவுமில்லை..... சின்ன அடி தான்.. என்னோட அண்ணா ஒருதர் நிக்கிறார்... என்னால அவருக்கு ஏன் சிரமம்..? நீங்கள் வாங்கோ.." என்றவர் வைத்திய சாலையின் இருப்பிடத்தையும் கூறி வைத்து விட்டாள்.


"தாங்க்ஸ் அண்ணா...
உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்.. நீங்கள் போங்கோ... இப்ப அத்த வந்திடுவா..." என்றாள்.

அதன் பிறகு அவனுக்கும் அங்கு நிற்பது சங்கடமாகி போக,


"சரி நான் வாறேன்... மனச போட்டு குழப்பாம உடம்ப கவனி" என்றவன் சென்று விட்டான்.
இருபது நிமிடமிருக்கும் மொத்த குடும்பமும் வைத்தியசாலையை நிறைத்தது.
அவர்களது கேள்வியில் மூச்சு திணறியவள்,


'என்னை காப்பாத்த யாரும் வரமாட்டினமா?' மனதில் புலம்பியவள் அலறல் கடவுள் காதில் விழுந்ததோ என்னவோ,


"இங்க என்ன கூட்டம்...? முதல்ல வெளிய போங்கோ.... மற்ற பேஷன்ட் இருக்கிறது தெரியேலையோ... சத்தம் போடுறீங்கள்..." உள்ளே வந்த நர்ஸ் அவர்களை விரட்ட, அமைதியாகி வெளியேறினார்கள்.


"பாட்டி.... நீங்கள் என்னோடயே இருங்கோ பாட்டி!" என்றாள் போபவரை அழைத்து.
அவரது பார்வையோ அவர்களை விரட்டிக்கொண்டிருந்த தாதி பெண்மேல் பதிய,


"அவா ஒன்டும் சொல்ல மாட்டா! எனக்கு இப்ப பசிக்குது.. ஏதாவது தாங்கோ" என்றாள் உதட்டை பிதுக்கி பாவமாக.


"ஏன்டாம்மா... இன்னும் நீ சாப்பிடேலயா...? இரு ஏதாவது வாங்கி வர சொல்லுறன்." என்று வெளியே சென்று ஸ்ரீயை அனுப்பி வைத்து விட்டு மீண்டும் அவளிடமே வந்தார்.

"எப்பிடி இந்த அடி..?"


"லேசான தலை சுத்து.... தரையில விழுந்துட்டன்." என்றாள்.
பக்கத்தில் நின்ற தாதியோ!


"சின்ன அடியா...? வீட்டு காறங்களிட்டயே பொய் சொன்னா... உன்ர நிலமை அவயலுக்கு எப்பிடி தெரியும்"என்றவள்,
இவள் சரியான வீக்கா இருக்கிறாள்ம்மா.... வீட்டில சரியா சாப்பிடுறேலயோ...? சத்தான சாப்பாடா செய்து குடுங்கோ....
இப்ப அடிபட்டதில நாலு தையல் போட்டிருக்கு" என்றாள் அவள் நிலை விளக்கி.
நாலு தையலா? சரியா நோகுமே!" என்று அவளை ஆராய,


"வலியே இல்ல பாட்டி! விறைப்புக்கு மருந்து ஏத்தி இருக்கினம்... குடிக்கிறதுக்கும் மருந்து தந்தவ" என்றாள்.


"என்னமோ சொல்லு.... எங்கட காலத்தில ஆஸ்பத்திரி பக்கமே வந்ததில்லை. இப்ப எதுகெடுத்தாலும் மருந்து ஆஸ்பத்திரி என்டுட்டு.... கொஞ்சம் படுக்கிறியா.... ஸ்ரீ வந்தோன்னா, பாட்டி சாப்பாடு ஊட்டி விடுறன்." என்றதும் ஆமோதிப்பதாய் தலையசைத்தாள்.


அவள் படுக்க வசதி செய்து விட்டு வெளியே வந்தவர். மல்லியின் தவிப்பை கண்டு,


"நீ ஏன் இப்ப பதறுற.? அவளுக்கு ஒன்டுமில்ல... நீயும் பதறி மற்றவையையும் பயப்புடுத்தாத... ஸ்ரீ வந்தோன்னா நீயே சாப்பாட்டை கொண்டுபோய், அவளுக்கு ஊட்டி விடு! வயசு போன நேரத்தில உன்னை பாக்க எனக்கு பயமா இருக்கு.. என்றவர். ஸ்ரீ வருகிறானா? என்று அவன் சென்ற திசையையே பார்க்கலானார்.


ஸ்ரீ வந்து விட, வேகமாக சென்று அவனிடம் பார்சலை வாங்கி கொண்டவள், கண்மூடிக் கிடந்தவள் நற்றியை இதமாக வருடி விட்டாள்.


அவள் தொடுதலில் விழித்து கொண்டவளோ,
தன் முன் கண்ணீருடன் நிற்கும் அத்தையை கண்டு.


"என்னத்த.... சின்ன பிள்ளை மாதிரி அழுகுறீங்கள்... அடி பட்டது எனக்கு தானே! அது எப்பிடி உங்ளுக்கு வலிக்கும்?" என்றாள் கேலியாக.


"உனக்கு எல்லாம் விளையாட்டு...
சரி சாப்பிடு.. பிறகு கதைகமகலாம்..." என்றவள் பார்சலை பிரித்து இட்லியை ஊட்டி விட்டாள்.

"எப்ப அத்தை விடுவினம்.. நாத்தம் வயித்த புரட்டுது." என்றவளை வினோதமாக பார்த்தவள்,


"உண்மைய சொல்லு... நீ மெடிசின் படிச்சியா? இல்ல எங்கள ஏமாத்துறியா?" என்றாள்.


"உண்மைய சொல்லோணும் என்டா, ரீச்சர் ஆகிறது தான் என்ர கனவு... அப்பாக்காக படிச்சன்.... ஆனா" என்றவளை எங்கு தந்தையை தான் நினைவு படுத்தி, ஏற்கனவே வருத்தத்தில் இருப்பவளை எதற்கு இன்னும் நோகடிப்பான் என நினைத்தவள்.


"சரி சரி நான் கைய கழுவீட்டு வாரன்.. இல்லட்டி காஞ்சு போயிடும், பிறகு கத்தி வைச்சு தான் சுறண்டோணும்" என்றவள் சிரித்து விட்டு போக. துஷாவும் அத்தையின் பேச்சில் தன்னை மறந்து சிரித்தாள்.


செலேன் முழுமையாக ஏறியது,ம் அவளை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்றதும். மருத்துவத்திற்கு உண்டான பணத்தை கட்டிய காந்தி, அவளை வீட்டிற்கு அழைத்து சென்றார்.


அவளது அறையில் அவளை ஓய்வெடுக்க சொல்லி கட்டி வைக்காத குறை ஒன்று தான். தண்ணீர் என்று கூட வெளியில் வர விடவில்லை. எல்லாவற்றையுமே அவர்களே கவனித்து கொண்டார்கள்.

பொழுது சாய்ந்திருந்தது. சாய்வு நாட்காளியில் அமர்ந்திருந்த கணவனிடம் பேசிக்கொண்டிருந்தால் காந்தி.
வாசலில் நிறுத்தபட்ட காரிவிருந்து இறங்கி, அவர்களை நோக்கி வந்தான் ஆறடி உயரத்தில் அந்த ஆண் மகன்.

"யாரிது?." என்றார் கேள்வியாய் கணவனை நோக்கி.

"இருடி கிட்டவா வரட்டும்.. சும்மாவே எனக்கு கண் தெரியாது. இதில தூரத்தில வாறவனை யாரென்று கேட்டா எனக்கெப்பிடி தெரியும்?"
"உங்கட நொள்ள கண்ணுக்கு கிட்ட வந்தாலும் தெரியாது.

அதை எதுக்கு கண் என்டு வைச்சிருக்கிறீங்கள்.. பேசாம நோண்டி போடுங்கோ" என்றார் கணவனின் தன் மேலான அதட்டலில் கோபமாய்.

இவர்கள் பேச்சு வார்த்தைக்கு இடையில் அந்த நெடியவனும் அவர்களை நெருங்கியிருந்தான்.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
துஷாவுக்கு பெற்றோர் பார்த்த பையனை தான் கட்டிக்கணும்னு நினைக்கிறா ஆனால் மனசு காதலில் இருக்கே 🙄🙄🙄🙄🙄🙄
 
Top