• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
இரண்டு நாட்கள் பலத்த சிந்தனையோடு, எவரிடமும் அவ்வளவு பேச்சில்லாமல் திரிந்தவன்.
மூன்றாவது நான் அதற்கான அடையாளமே இல்லாது புன்னகையுடனே வளைய வந்தான்.



ஆனால் ஏனோ வைஷூவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
வைஷூ கடைவிழியில் தென்பட்டால் கூட தலையை திருப்பிக்கொண்டு சென்று விடுவான்.


வைஷூவிற்கு அது கஷ்டமாக இருந்தாலும், அதை அவள் பெரிது படுத்தவே இல்லை.
தன்னை இத்தனை தூரம் வளர்த்து ஆளாக்கிய சுயநலமற்ற அன்பை பொழிந்த, தாய் தந்தையை நினைத்து பார்த்தவளுக்கு, ஒரு சந்தர்ப்பத்தில் இது தான் நல்லதென்றே தோன்றியது.




அவர்கள் நம்பிக்கையை எந்த விதத்திலும் கெடுத்துக்கொள்ளக் கூடாது, கடைசிக்காலம் வரையில் அவர்கள் அருகிலேய இருந்துவிட வேண்டும்.


தெளிவாக முடிவெடுத்தாள்.
அவள் அறிந்த அனுபவத்தின் படி எதுவுவே நிதந்தரமற்றது தானே!
இன்று அருகில் இருப்பவர்கள் நாளை காணமல் போய்விடுவர். இது தான் நிதர்சனம் என உணர்ந்தவளால், ஆதியின் உதாசினம் தாக்கத்தை உண்டு பண்ணவில்லை. ஆனால் அவனை காணும் போது, எங்கே ஒரு தடவை தன்னை பார்த்து விடமாட்டானா? என மனம் சஞ்சலம் கொள்ளாமலும் இல்லை.



சிந்தனை வயப்பட்டவளாய், தன் அறையினில் குறுக்கும் நெடுக்குமாய் அலைந்தவள் மனதானது, உலைக்களமாக கொதித்துக் கொண்டிருந்தது.
இதோ இதோ என்று வீட்டிற்கு திரும்புவதற்கான நாட்கள் இன்றும் மூன்று என்று வந்து நின்றது.



ஆனால் இவள் தேடிவந்த முக்கியமான நபர் மட்டும் அவள் கண்ணில் தென்படவேயில்லை.



அவன் எங்கிருப்பான் என்று கூட தெரியவில்லை. எங்கு சென்று எப்படிப் பார்ப்பது?
இன்னொருவர் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு, யாருக்கும் தெரியாமல் இவளாக தேடி சென்று பார்க்க முடியுமா?



இப்போதெல்லம் ஆதி தன்னை உதாசினம் செய்கிறான் தான். ஆனால் ஏதோ ஓர் இடத்தில் தன்னையே மிக உண்ணிப்போடு கவனிப்பதைப்போல் தோன்றியது.




அதனாலேயே தைரியமாக அடுத்த கட்டத்திற்கு அவளால் முன்னேற முடியவில்லை.
அதை விட, அவள் தனியாக இருக்கும் சமயமெல்லாம், யாரோ அவளை பின்தொடர்வது போல் ஓரு பிரம்மை.




இதற்கிடையில் என்ன செய்வதென தெரியாது சிந்தித்துக் கொண்டிருந்தவளது செல்போன்னானது அலற.



திரையில் தெரிந்த இலக்கத்தை கூட கவனியாது, திரையினை தடவி மடியில் போட்டுவிட்டு எங்கோ வெறித்திருந்தாள்.
சிறு கணம் சலனமே அற்று வெறித்திருந்தவள், கவனத்தை ஈர்த்தது போனிலிருந்து வந்த குரல்.





"மேடம் இப்பாே எந்த கோட்டைய புடிக்கிறதுக்காக இவ்ளோ யோசிக்கிறீங்க.?" என்ற குரலில் திடுக்கிட்டவள், அப்போது தான் மடியினில் கிடந்த போன் திரையில் தெரிந்த இனியாளை கண்டாள்.



தன் முகபாவங்களை இயல்புக்கு கொண்டு வந்தவள்,
இனியாளை பார்த்து உதட்டு வளைவில் புன்னகைக்க.




"எதுக்குடி இப்போ பல்லக்காட்டுற? கேட்டதுக்கு பதில சொல்லு.. அப்பிடி என்ன பலத்த யோசனை?" என சூடாக கேட்டாள்.
எதை சொல்வாள் அவள்?
வெளியில் சொல்வது போல் அவள் யோசனை இருக்கவில்லையே!

அதனால் தானே அழைத்தது யார் என்பதை கூட பாராது, அழைப்பை துண்டிப்பதாக நினைத்து, ரிசீவ் பண்ணியிருந்தாள்.
இப்போது எதை சொல்ல என யோசித்தவள்.




"இல்லை.... ஊருக்கு இன்னும் மூனு நாள்ல கிளம்பிடுவேனே... அதான் ஃபீல் பண்ணிட்டிருக்கேன்." என முகத்தை சோகமாக வைத்தவாறு சைகை செய்ய.


"அடி...ங்க் செருப்பால....! மேடத்துக்கு அதெல்லாம் நினைவிருக்கா?
ஏன்டி ...! தெரியாமத்தான் கேட்குறேன். எதுக்குடி ஊருக்கு வந்த? பண்ணை வீட்டில உக்காந்து, மூனு வேளையும் வாய்கு இதமா முழுங்குறத்துக்கு தான் வந்தியா?
ஒருத்தி தன்னோட கல்யாணம்ன்னு கூட்டி வந்தாளே! அவ உயிரோட தான் இருக்காளான்னு எட்டி பாக்குறியாடி?
என்கிட்ட வந்து முழுசா நாலு நாள் ஆச்சு பன்னி. சரி..! இத்தனை நாள் தான் திருவிழா... இதெல்லாம் உனக்கு புதுசா இருக்கும்..

அதனால வரல்ல பரவாயில்லைன்னு விட்டேன்.

ஆனா மேடத்துக்கு என்கூட போன்ல பேசக்கூட நேரம் வரல்லையோ!"



"இங்க பாருடி..! இந்த திருவிழா சாக்குல்லாம் இனி சொல்லி என்னை ஏமாத்த முடியாது.
பத்து நாள் திருவிழாவம் முடிஞ்சும் போச்சு.


இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம். தெரியும்ல..
எல்லாரும் கல்யாண வேலையினால பிஸியாகிட்டாங்க.




என்னை யாருமே கண்டுக்கிறாங்க இல்லை...
தனிய இருக்க சலிப்பா இருக்கு..
நீ என்ன பண்ணுவியோ..! ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது. இன்னைக்கு சாயந்தரம் வீட்டுக்கு வர்ற." என்றவள், மறு நொடியே,


"வைஷூ வந்துடுவேல்ல?"
என அத்தனை சோகத்தையும் அந்த வர்த்தைகளில் தேக்கிவைத்து கேட்டாள்.



இதற்கு முன் பேசியது அவள் தானா என சந்தேகம் கொள்ளும் அளவிற்கு.
நன்றாக பேசிக்கொண்டிருந்தவள் முகமும், குரலும் சோர்ந்ததில் பயந்தவள்.




"இனியா எதாவது பிரச்சினையாடி! ஏன் ஒரு மாதிரி ஆகிட்ட?" என்க.


"இல்லடி...! எனக்கு அழுகை அழுகையா வருது..
இன்னும் ரெண்டே நாள் தானே இந்த வீட்டுக்கு நான் இளவரசி.



அப்புறம் என் குடும்பம் வேறயாகிடும்..
எப்பவும் போல, உரிமையா அண்ணா கிட்டையோ, அம்மா கிட்டையோ சண்டை போட முடியாதுல்ல...


இங்க நடக்கிற நல்லது கெட்டதுக்கு கூட, விருந்தாளியா வந்து.. ஓரமா நின்னு வேடிக்கை பாத்துட்டு போயிடணும். எதுக்கும் என் கருத்தை சொல்ல முடியாது..


ரெண்டு நாள்ல இந்த வீட்டுக்கும் எனக்குமிருக்கிற உரிமையெல்லாம் பறிக்கப்போறாங்கடி...



ரொம்ப பயமா இருக்கு வைஷூ....! இந்த ரெண்டு நாள்ல
என் மொத்த வாழ்க்கையும் மாறப்போறத நினைச்சா...
அங்கையும் என்னென்ன மாதிரியோ தெரியல்ல.
நான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில இருந்து, ஒட்டு மொத்தமா எல்லாமே மாறப்போதுது.

அதைக்கூட என்னால சமாளிச்சு போக முடியும்.



ஆனா இத்தனை வருஷம் பாத்துப்பாத்து பொக்கிஷமா வளர்த்த, பிறந்த வீடுக்கு காரங்க என் குடும்பமில்லைன்னு நினைக்கிறப்போ தான்.. அழுகையா வருது." என கண் கசிந்தவளை காணும் போது அவள் கண்ணும் கலங்காமலில்லை.



"ச்சீ.. சின்ன பிள்ளை போல அழாதடி...! அவங்க உனக்கு வாழ்க்கை அமைச்சுத்தான் தராங்க. ஒரேயடியா கை கழுவல்ல.
அவங்க வீட்டுக்கு நீ மருமக மட்டும் தான்.




உன் வீட்டுக்கு எப்பவும் நீ தான் மகாரணி... நீ நினைங்கிறதுபோல எதுவுமில்லை.. சும்மா மனச போட்டு குழப்பிக்காம.. கல்யாண பொண்ணாட்டம், உன் புருஷனை நினைச்சு கனவு கண்டுட்டிரு."




"இல்லடி! உனக்கும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வரும் போது தான், என் நிலமை புரியும்.



எனக்கும் இந்த மாதிரி ஒரு இடத்திலயே இருந்து, கண்டதெல்லாம் யோசிச்சு அழறத்துக்கு ஆசையா என்ன?
இத மாதிரி யோசிக்க கூடாது.. நான் கவலை படுறத பாத்தா.. அம்மா மனசு கஷ்டப்படுவாங்கன்னு ஏதாவது வேலை செய்யப்போனா.


கல்யாணப் பொண்ணு.. வேலை எதுவும் செய்க்கூடாது.. அப்புறம் முகம் நல்லாயில்லாம போயிடும்.



போட்டோஸ் கெட்டுப்போயிடும்னு துரத்தி விடுறாங்கடி! நானும் என்ன செய்வேன் சொல்லு? இதெல்லாம் சொல்லி ஆறுதல் தேடிக்க கூட யாருமே இல்ல.

நீயும் தான் எரும..


இப்போ தான் ஃபீல் பண்றேன் வைஷூ!
எனக்கொரு மாமன் மகன் இல்லையேன்னு.
அப்பிடி இருந்திருந்தா.. அவனையே கட்டிக்கிட்டு ஒன்னுக்குள்ள ஒன்னா வாழ்ந்திருக்கலாம். புகுந்த வீடு எப்பிடி இருக்குமோ என்ட கவலையும் இருந்திருக்காது.



என்னை நானாவே ஏத்திருப்பாங்களோன்னு கவலை பட்டுட்டு இருக்கவும் தேவையில்லை." என சோகமாக சொன்னவள், உடனோ தன்னை மாற்றிக்கொண்டு,




"என் வாய பாத்துட்டிருந்தது போதும்.. ஆன்ட்டி கிட்ட சொல்லி, சாயந்தரம் வர வழிய பாரு! பேஷியல் பண்ண பியூட்டிஷியன் வருவாங்களாம்.. அப்போ என்கூட நீ தான் இருக்கணும்." என்று போனை வைக்க போனவள், நினைவு வந்தவளாய்,



"வைஷூ....! உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்டி!
நேத்து ஆதியண்ணா வந்திருந்தாரு..." என்றவள்.


"உண்மைய சொல்லு வைஷூ!
உங்களுக்கு நடுவில எதாவது வண்டி ஓடிட்டிருக்கா என்ன?" என்றாள்.




அவள் கேள்வி புரியாது இமைகளை நெரித்தவள் செயல் கண்டு..




"தெரியாதவ மாதிரி ரொம்ப நடிக்காதடி! அது தான் எனக்கு தெரிஞ்சு போச்சே! உண்மைய சொல்லு... ஆதியண்ணாக்கும் உனக்கும் நடுவில அது தானே!" என கண்சிமிட்டி கேட்டாள்.



"ஏய் எரும! பைத்தியம் போல உலறாம.. என்ன நடந்திச்சின்னு சொல்லு." என்றாள் கோபமாக.



"என்னடி...! நீ கோபப்பட்டா.. இல்லை என்டாகிடுமா? உங்களுக்குள்ள ஒன்னுமே இல்லாம தான், ஆதியண்ணா
அவ்வளவு தூரம் உன்னை பத்தி விசாரிச்சாரா?" என்றாள்.



அவள் பதிலில் குழப்பமானவள்,



"ஆதி என்ன விசாரிச்சாரு?" என மறு கேள்வி கேட்க.



"ஆ.....! உன்னை எனக்கு எத்தனை வருஷம் தெரியும்.. உன் ஊரு எது? உன்னோட அப்பா அம்மா என்ன செய்றாங்க? நீ பிறந்ததில இருந்து பேசமாட்டியா? இன்னும் நிறைய கேட்டுட்டே போனாரு...


நான் நினைக்குறேன்...
உன்னை புடிச்சுப்போய், பொண்ணு கேட்கத்தான் இதெல்லாம் விசாரிச்சாரோ என்னமோ!" என வம்பாய் கேலி பேசி சிரித்திட,



"போதும் நீ மூடிட்டு வையி! நான் நேர்ல வந்து பேசிக்கிறேன்." என சைகை செய்து போனை வைத்தவள்,



"இது ஒரு லூசு! எதில விளையாடணும்.. விளையாடக கூடாதென்டில்ல... ஆதியாவது என்னை விசாரிக்கிறதாவது..?
தன்னோட கவலை மறக்கிறத்துக்கு என்னை வம்பிழுத்திருக்கா."




"எப்பாே பாரு எல்லாரையும் கலாய்ச்சிட்டும்.. வாயாடிட்டும் திரிஞ்சவளை, இந்தளவுக்கு ஃபீல் பண்ண வைச்சிட்டாங்களே! உண்மையில பொண்ணா பிறக்குறது சாபம் தான் போல."



ஆம்... இனியாள் இந்தளவிற்கு வருந்தி வைஷூ பார்த்ததில்லை. நிஜத்தில் இது எவ்வளவு பெரிய ஓரக வஞ்சகம்.


'உண்மை தானே!
ஆண் பிள்ளைக்கு ஒரு நியாயம். பெண்பிள்ளைக்கு ஒரு நியாயமா?
அது என்ன பெண்ணை கட்டிக்கொடுத்தால், மாத்திரம் இன்னொரு குடும்பம் அவளது குடும்பமாகிறது. அத்தோடு அவள் குடும்பத்திற்கும் அவளுக்குமான நெருக்கமும் குறைந்து விடுகின்றது.


அதே ஆண்களுக்கு மட்டும் எது அவன் வீடோ.. அதுவோ ஆயுள்வரை அவன் வீடாகவே இருக்கிறது.


இருவரையும் அவர்கள் தானே பெற்றார்கள்.


பெண்ணாக பிறந்தது, அவள் தவறா?' என ஆதங்கமாக சிந்தித்தாலும். காலம் காலமாக நடை முறையில் இருப்பதை அவளால் மாற்றமுடியாதே!
இதை நினைத்து வருந்தி நடக்கப்போவது எதுவுமில்லை.

முதல்ல அவளை இந்த கவலையில இருந்து வெளிக்கொண்டு வரவேண்டும்.



'ஆன்ட்டிகிட்ட கேட்போம்.. நானும் வீட்டுக்குள்ளேயே இருந்தா, வந்த வேலையும் முடிய வாய்ப்பில்லை.



இது சின்ன கிராமம் என்கிறதனால, இனியாள பார்க்க போறப்போ, வழியில அவனை காண்கிறத்துக்கும் நிறைய வாய்ப்பிருக்கு..
முதல்ல அவன பாக்கணும்..
அப்புறம் பேசவேண்டிய பேசிட்டு, வந்திடுவோம்." என்றவள், ரஞ்சினியை தேடி கீழே வந்தாள்.


எப்போதும் போல் ரஞ்சனி இன்நேரம் கிச்சனில் தான் இருப்பாள் என்பதனால், அவளை தேடி நேராக கிச்சனுக்கே சென்னார்.
வைஷூவை எதிர்பார்க்காத ரஞ்சினி.




"வாம்மா..! என்ன இந்தபக்கம்? குடிக்க ஏதாவது வேணுமா?"
இல்லை என்பதாக தலையசைத்தவள்,
உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்பதாக அசைவில் வெளிப்படுத்த.




"ம்ம் சொல்லுடா..." என்றுவிட்டு காய் அரிவதில் கவனமானவர் கையிலிருந்த கத்தியை வாங்கி தான் வெட்ட ஆரம்பித்தவளை,



"இது தான் பேசணுமா? பறவாயில்லை.. என்கிட்டையே குடு! நானே நறுக்கிடுறேன். பழக்கமில்லாத வேலையை செய்து, கைய நறுக்கிடப்போற." என அவளிடமிருந்து அதை வாங்க எத்தணிக்க.


அதை தர மறுத்து, தொடர்ந்து தானே வெட்டியவள்,
தன்னையே பார்த்து நின்றவர் புறம் திரும்பி, இனியாள் வீட்டுக்கு சாயந்தரம் போலாமா? என கேட்பதற்கு ஆயத்தமாகி ஒரே ஒரு செய்கை தான் செய்தாள்.



அதற்குள் "ம்மா.....! ம்மா......!" என ஹாலில் இருந்து வந்த ஆதியின் குரலில், அவர்களது மொத்த கவனமும் அங்கு திரும்பியது.


"இதோ வந்துட்டேன்டா! " என குரல் கொடுத்துவிட்டு,



"என்னாச்சுன்னு இப்போ இந்த கத்து கத்துறான்னு தெரியல்லையே! வாம்மா என்னன்னு பார்ப்போம்." என முன்னே நடந்தவர் பின்னால் வைஷூவும் சென்றாள்.




"என்ன ஆதி? என்னாச்சு? இந்த நேரம் நீ வீட்டுக்க வரமாட்டியே! டேஷன்ல்ல ஏதாவது பிரச்சினையாடா?"


"அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா! நைட்டுக்கு காெழும்பு கிளம்புறேன்.

அதான் உங்ககிட்ட சொல்ல வந்தேன். இப்பவே சொல்லலன்னா கிளம்புற டைம்.. என்ன ஏதுன்னு ஆயிரம் கேள்வி கேப்பிங்க. அப்போ பொறுமையா நின்னு பதிலெல்லாம் சொல்லிட்டிருக்க முடியாதும்மா!
அதனால தான் இப்பவே சொல்லிடலாம்ன்னு வந்தேன்." என்றான்.


"சரிடா..! என்ன திடீர்ன்னு கொழும்புக்கு?"


"அதுவா?" என்று வைஷூவிடம் திரும்பி கூரிய பார்வை பார்த்தவன்.


"நாளைக்கு ஒரு முக்கியமான மீட்டிங்க் இருக்கும்மா..! அதான்." என்றான்.


"திடுதிடுப்பென கிளம்பி போற அளவுக்கு அது என்னடா மீட்டிங்க்."


"ம்மா..... இது என் வேலைம்மா! இதெல்லாம் வெளிய சொல்லிட்டிருக்க முடியாது. காலநேரம் வர உங்களுக்கே தெரியவரும்." என்றவன்.


"சரிம்மா! அப்போ நான் கிளம்புறேன். முக்கியமான கேஸ் ஒன்னு வந்திருக்கு.. அதை பத்த விசாரிக்க போகணும்." என திரும்பியவனிடம்.


"ஏன் ஆதி? ட்ரெஸ் ஏதான் பேக் பண்ணி வைக்கணுமாடா?" என்றார்.


"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்மா... நைட்டு கிளம்பினா, நாளைக்கு நைட் வந்திடுவேன். அதனால அதெல்லம் தேவைப்படாது."


"அப்போ சரிடா! நீ போயிட்டு வா!" என அவன் வெளியேற அனுமதி தந்தவர்,


"நீ சொல்லும்மா! சாயந்தரம் இனியாள் வீட்டுக்கு போகலாமான்னு தானே கேட்ட?
நானும் நினைச்சேன்ம்மா! நம்ம திருவிழாக்கு அப்புறம் ரொம்ப வேலை இருந்ததினால, அவ வீட்டுக்கு போகவே இல்ல... உன்னை ரொம்ப எதிர்பாத்திட்டிருந்திருப்பா... இன்னைக்கு கட்டாயம் போறோம்." என்றார்.

நேரமோ தன் பணியினை சிறப்புற செய்து கொண்டிருக்க, கடமையே கண்ணென வேலையில் மூழ்கியிருந்தவன், பாக்கெட்டினில் இருந்த செல்போன் மணியானது ஒருமுறை ஒலித்து அடங்கி, மறு வினாடியே மறுபடியும் ஒலித்தது.


"யாரிது? ஒரு தடவை எடுக்கலன்னா.. முக்கியமான வேலையில இருக்கேன் என்கிற மேனஸ் கூடவா தெரியாது?" என சினந்தவாறு போனை எடுத்த திரையில் தெரிந்த இலக்கத்தை பார்த்தான்.

அது வேறு யாருமல்ல. அவன் அன்னை ரஞ்சினியே தான்.


"அம்மா ஏன் கால் பண்றாங்க? எப்பவும் வேலை நேரத்தில கால் பண்ணவே மாட்டாங்களே!

ஒரு வேளை ஏதாவது........" என மீதியை நினைத்து பார்ப்பதற்கு கூட விரும்பாமல், தொடு திரையினை தொட்டு காதில் ஒட்டிக்கொண்டான்.




"ஆதி.... ஆதி... நீ எங்க இருக்க? சீக்கிரம் வீட்டுக்கு வா! உன்னை தேடி ஒருதங்க வந்திருக்காங்க." என்று ஓங்கி ஒலித்த அவரது குரலானது, எதை உணர்த்துகிறது என்பதே அவனுக்கு புரியவே இல்லை.


'எப்பவும் அம்மா இந்த மாதிரி பேசினதே இல்லையே.. ரொம்ப உணர்ச்சி பொங்க சந்தோஷத்தில பேசினமாதிரி இருந்திச்சா? இல்லை பயத்தினால நடுங்கிட்டு பேசினாங்களா?" என நினைத்தவன்.


"வேலண்ணா....! நான் வீட்டுக்கு கிளம்புறேன். நாளைக்கும் லீவ்வு. டேஷன நல்லபடியா பாத்துக்கங்க. ஏதாவது அவசரம் என்டாலோ, சந்தேகம் இருந்தாலோ என்னை கூப்பிடுங்க." என்று விட்டு தன் பைக்கை முறுக்கிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்.


பதட்டமாகவே வீட்டிற்குள் நுழைந்தவன், அங்கு புதிதாய் சிலர் ஷோபாவில் அமர்ந்து தாய், தந்தையரோடு இயல்பாக பேசுவதை கண்டு யாரென தெரியாது அவர்களையே கேள்வியாய் நோக்கினான்.


இதில் அதிசயம் என்னவென்றால், தொடை தெரியும் அளவிற்கு குட்டையான, அங்கங்களை தத்துருவமாக எடுத்தியம்பும் உடையும், இதற்குமேல் பூசுவதற்கு முகத்தில் இடம் இல்லை என்பதைப்போல் முக ஒப்பனையுமாக அமர்ந்திருந்தவளை ஒட்டியவாறு ரஞ்சினி பேசிக்கொண்டிருந்தது தான், அதிசயத்திலும் அதிசயம்.


சாதாரணமாக இவளைப்போல் நவநாகரீக மங்கையர்களுடன் ரஞ்சினி பேசவே மாட்டாள்.
கிராமத்தில் பிறந்து வளர்ந்ததனாலோ என்னமோ..? அது அவருக்கு சற்றும் பிடிக்காது.


ஆனால் இன்று இந்தளவுக்கு நெருக்கம் காட்டும் அளவிற்கு இவள் அப்படி என்ன ஸ்பெஷல்?'
என சிந்தனை வயப்பட்டவனை பேச்சுவாக்கில் திரும்பும் போது கண்ட ரஞ்சனி.


"ஆதி....!" என்ற துள்ளலோடு எழுந்து அவனிடம் ஓடியவர்.


"உள்ள வாடா...! யாரு வந்திருக்காங்கன்னு பாரு!" என கைபிடித்து அழைத்து சென்றார்.


ரஞ்சினி ஆதி என்றதும் மற்றவர்கள் கவனமும் அவனிடம் திரும்பியது.


இதில் அந்த நவநாகரீக மங்கையோ ஆதியை கண்டுவிட்டு, அவன் அழகில் தன்னை மறந்து, அவனையே வாய் பிளந்து பார்த்து நின்றாள்.


ஆறடி உயரத்தில் ஆண் சிங்கமாய் வந்து நிற்கும் ஆடவனை யாருக்குத்தான் பிடிக்காது?
கற்றோடு போராடினாலும், கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் சிகை.
எதையுமே அவ்வளவு எளிதில் நம்பிடாத கூரிய பார்வை!
அந்தப்பார்வைக்கு ஏற்றாற்போல் வார்த்தைகளே இல்லாது கேள்விகளை தொடுக்கும் புருவங்கள்.


அவ்வளவு எழிதில் பேசி விடுவேனா? என்பது போல் இறுக்கமான உதடுகள்.
எங்கே என்னை வென்று பார் என்பதைப்போல் நிமிர்ந்து நிற்கும் திடமான மார்பு.


எதையும் தீர்கமாகவே செய்வேன். என சொல்லாமல் சொல்லும் அவன் எடுத்து வைக்கும் அழுத்தமான காலடித்தடங்கள்.


என அவனையே வைத்தகண் வாங்காது பார்த்து நின்ற பெண்ணை கண்டவனுக்கு, ஏனோ அவள் பார்வை பிடிக்கவில்லை.


அவள் மேலிருந்த பார்வையை விலக்கியவன்.


"யாரும்மா இவங்க? எதுக்கு என்னை தேடி வரணும்?" என தன் தாய் தந்தையின் வயதை மதிக்கத்தக்க மற்ற இருவரையும் பார்த்து கேட்டான்.



"ஆதி நல்லா பாரு! இவங்க யாருன்னு தெரியலையாடா!. என்றவர்,


"அவங்கள விடு! அவங்கள எனக்கே இப்போ தான் தெரியும். ஆனா இந்த பொண்ணு யாருன்னு சொல்லு பாக்கலாம்." என்றவரை புரியாது புருவங்கள் உயர்த்தி கேள்வியாக நோக்கியவன்.


மீண்டும் அந்த பெண்ணை சரியாக ஒரு தடவை பார்த்துவிட்டு.


"யாரும்மா..? நிஜமாவே யாருன்னு தெரியல"


"என்னட...! இத்தனை நாள் யாருக்கு காத்திட்டிருந்தியோ, அவளையே தெரியல்ல என்கிற.


இவ தான்டா நம்ம அமுதநிலா.. உன்னோட அம்மு.!" என குரலில் சந்தோஷத்தை வெளிப்படுத்தி, உணர்ச்சி பொங்க சொன்னவர் பேச்சில் அதிர்ச்சியானவன் விழிகள், பக்கவாட்டில் கதவோடு ஒட்டி இவற்றை எல்லாம் பார்ததுக் கொண்டிருந்த வைஷூவிடம் சென்று மீண்டது.


தொடரும்.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
அச்சோ வைஷுவுக்கு போட்டியா ஒருத்தி வந்திருக்காளே 😲😲😲😲😲😲
 
Top