• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

33. இருளில் ஔிரும் தீபமானாய்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
வழமையாக இரவு எட்டுமணியினைத்தாண்டி வந்தவன், திருவிழா போல் வீட்டில் எரியும் மின்குமிழ்களை கண்டதும்



"என்ன ஒரு அதிசயம்! என்பொண்டாட்டியும் மற்ற பொண்ணுங்களைப்போல புருஷனோட வரவை எதிர்பார்த்து காத்திருக்கா போலயே! இருக்கும்.... மஞ்சள் கயிறு மகிமைன்னா சும்மாவா?" என்றவாறு உள்ளே வந்தான்.



வழமையாக இவர்களுக்குள் நடக்கும் கண்ணாம் பூச்சியாட்டத்தினால் சூரிய வருவதற்கு முன்னரே, எல்லா லைட்டினையும் அணைத்து, ஹால் மின்குமிழை மட்டுமே ஔிரவிட்டு வேளையோடே தூங்கிப்போய் விடுவாள்.



வேலையினை முடித்து வருபவன், சாப்பிடுவதாக இருந்தால், தானே தான் போட்டு உண்ணவேண்டும். மற்றைய தம்பதியினரைப்போல் எந்த வித எதிர்ப்பர்ப்பும் இன்றியே நாட்கள் நகர்ந்தது.



வழமைக்கு மாறாக இன்று வீடே ஜோதிமயமாக காட்சியளிக்க, நடக்கவிருக்கும் விபரீதம் புரியாமல் ஒரு வித குதூகலத்துடன் உள்ளே நுழைந்தவன் காதுகளில் பேச்சு சத்தம் கேட்கவும்,



"இந்த நேரத்தில யாரு?" என்றவாறு முன்னேற, துளசி தன் குடும்பத்தோடு பேசிக்கொண்டிருப்பதை கண்டவனுக்கு



முகம் அப்படியே மங்கிப்போனது.



இருக்காதா பின்னே? அவன் கற்பனை தான் தவுடுபொடி ஆகிற்றே!



"இவங்க இருக்கிறதனால தான் இன்னும் இவ தூங்கவில்லையா?



ஆனா இந்த நேரத்தில துளசி வீட்டை விட்டு வெளியவே வரமாட்டாளே! என்னவா இருக்கும்?" என நினைத்தவாறு வதனியை கேள்வியாய் பார்க்க.



அவளாே அதுவரை இயல்பாக பேசிக்கொண்டிருந்தவள், அவனை கண்டதும் கண்கள் கோபத்தை உமிழ முகத்தை திருப்பிக்கொண்டாள்.



'ம்ஹூம்.... இவளாவது என்னை எதிர்பார்த்து காத்திட்டிருக்கிறவளாவது? இந்த ஜென்மத்தில உனக்கு அந்த பக்கியமில்ல சூரிய' என அவன் உள்மனம் கதற,



அப்பட்டமாக சோகத்தை முகத்தில் காட்டி வதனியை ஏக்கமாக பார்த்தவனை கண்ட துளசி,



"வாங்கண்ணா!" என வரவேற்றவள்,



"வதனி எந்திரி அண்ணா இருக்கட்டும்." என்று அவளை எழுப்பி அந்த இருக்கையில் சுரியவை அமரச்சொல்லி உபசரித்தவள் மனமோ,



"ஆட்டை அறுக்கிறத்துக்கு முன்னாடி இப்படித்தான் மஞ்சத்தண்ணி ஊத்தி மாலை போடுவோம்." என்று முணுமுணுத்தவாறே அவனை பார்த்தாள்.



அவனோ அசதியின் உச்சத்தில் இருந்தவன், அவளது பேச்சை கண்டுகொள்ளாது, கால்கள் இரண்டையும் முன்னால் இருந்த டீப்பாவில் தூக்கி போட்டு, பின்புறமாக முதுகை வளைத்து சாய்ந்து கொண்டவனை பாவமாக பார்த்த துளசி,



"ரொம்ப களைப்பா இருக்கிங்களாண்ணா? கடும் அலைச்சலாே? உங்க வேலையெல்லாம் எந்த அளவில நிக்கிது? பத்திரம் எப்போ ரெடியாகும்?" என்றாள்.



"எல்லாமே சரியாயிருக்கு துளசி! நாளை மறுநாள் பத்திரத்தை மாத்திக்கலாம்ன்னு இருக்கோம்." என்று துளசியின் கேள்விகளுக்கு பதிலலிக்கும் போதே, துளசியின் அருகில் வந்து வதனி, அவள் தோளினை இடித்து கண்களால் ஜாடை காட்டினாள்.



ஒரு கட்டத்திற்கு மேல் வதனியின் இடி தாங்கமுடியாதவளோ,



பேச விடாது இடித்துக்கொண்டு நின்றவள் மேல் சினம் கொண்டு.



"எதுக்குடி இப்போ எருமை மாடு மாதிரி உரசிட்டு நிக்கிற? அது தான் பேசிட்டிருக்கேன்ல, எடுத்ததும் ஏன் அந்தமாதிரி பண்ணேன்னா கேப்பாங்க, பேச்சு குடுத்துட்டு, கதையோட கதையா கேப்போம், எருமை கணக்கா உரசாம நில்லு!." என்று பொய்யாக சினந்தாள்.



"இவன்கூட கதை பேச ஒன்னும் தூக்கத்த தொலைச்சிட்டு இருக்கல, எதுக்காக வந்திங்களோ அந்த வேலைய பாருங்க, பிறகு குசலம் விசாரிச்சுக்கலாம்." என்று வதனியும் துளசிமேல் கோபப்பட.



" உனக்கு எல்லாத்துக்கும் அவசரம். பாவம் ரொம்ப களைச்சுப்போய் வந்திருக்காரு, முகத்தை பாரு சோர்ந்து போய் இருக்கு. கொஞ்சம் களை ஆறட்டும் அப்புறமா நம்ம பஞ்சாயத்தை வைச்சுக்கலாம்." என்றாள்.



"ஆமா அண்ணன் மேல ரொம்பத்தான் கரிசனை. பாவம் பாக்கிறத விட்டுட்டு, பேச வேண்டியதை பேசுங்க, அவன் ஒன்னும் வெட்டி முறிச்சிட்டு வரல. சும்மா ஊர் சுத்திட்டு தான் வந்திருக்கான்" என துளசியிடம் எகிற,



"என்னடி! புருஷனை மரியாதை இல்லாமல் அவன் இவன் என்கிற?." என்று தான் இதுவரை அவனை அப்படி அழையாதவள் போல் சீன் போட,



"ஏன் நீங்க இதுவரைக்கும் இவனை எப்பிடி கூப்பிட்டிங்களாம்? அவன், இவன்னு மட்டுமா கூப்பிட்டிங்க?, சமயத்தில கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லி ஏசினதில்ல." என்று அவனைப்பற்றி துளசி பேசியவற்றை எல்லாம் போட்டுடைக்க,



இருக்கையிலிருந்து வேகமாக எழுந்தவள், அவளை அதற்கு மேல் பேசவிடாது வாயைப்பொத்தி,



"போதும்மா! இந்தளவே போதும்! இதுக்குமேல தாங்காது. இத்தோட நம்ம வாதத்தை நிறுத்திப்போம். " என்று கூறிக்கொண்டே சூரியவின் முகத்தில் ஏதாவது தெரிகிறாதா? என்று பார்ந்தாள்.



"எதுக்கு இப்போ பயப்படுறீங்க? அவனுக்கு ஒன்னும் விளங்காது. அதனால பயப்படாம விஷயத்துக்கு வாங்க" என விட்ட இடத்திலே வந்து நின்றாள் வதனி.



அவளுக்கு அவன் விக்ணேஷ்சோடு எதற்காக பேசினான்? என்று தெரிந்தே ஆகவேண்டும்.



இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த சூரியவிற்கு தான் குழப்பமானது.

'


என்னத்த இவ இப்போ கேக்க சொல்லுறா? முகம்வேற தகதகன்னு நெருப்பா கக்குது. ஏதாவது புது பிரச்சினையை கொண்டு வரப்போறாளா? இவவேற கேளுன்னு வதனி சொல்லாச்சொல்ல கேட்காம பீதிய கிளப்பிட்டு நிக்கிற,



தூங்காமல் காத்திட்டு இருக்கிறத பாத்தா விஷயம் பெருசா இருக்குமோ? ' என தனக்குள் கேள்வி எழுப்பியவன், அவர்கள் இருவரையும் ஆராய்ச்சியாய் பார்த்தவாறு இருந்தான்.



துளசியோ வதனியை மனதினுள்ளே திட்ட ஆரம்பித்தாள்.



"பாவிமக இவனுக்கு தமிழ் தெரியாதுன்னு என்னல்லாம் பேசுறா? தான் பேசினதோட விடாமல் என்னையும் கோத்து விட்டாளே! இவளுக்கு நல்லது செய்ய நேரம் காலம் பாக்காமல் வந்தேன் பாரு, என்னை சொல்லணும்." என்று முணுமுணுத்தவள்.



"என்னடி உனக்கு? இவனை இப்போ என்னன்னு கேட்கணும் அவ்வளவு தானே? இதை முன்னாடியே சொல்லுறதுக்கு என்ன? அதை விட்டுட்டு தேவையில்லாத பேச்செல்லாம் பேசிட்டு இருக்க." என்றவளை முறைத்தாள் வதனி.



அவன் வந்ததில் இருந்து அதை தானே சொல்லிக் கொண்டிருக்கிறாள்.



"சரிடி முறைக்காத, கேட்கிறேன்." என்றவள்.



சூரியவை கேள்வி கேட்பதற்காகவே தன்னை தயார் படுத்தி,



சூரிய புறம் திரும்பி,



"இன்னைக்கு எங்கயண்ணா போனீங்க?" என்றாள் எடுத்த எடுப்பில்.



சூரியவிற்கு எதைக்கேட்கிறாள் என்பது சரியாக புரியாததனால்.



"ஏன் துளசி ஏதாவது பிரச்சினயா? எங்க போனேன்னா எதை சொல்லட்டும்? எனக்கு நிறைய வேலைம்மா! நிறைய இடத்துக்கு போகவேண்டி இருந்திச்சு, எங்க போனேன்னா?" என்றான் கேள்வியாய்.



" உங்க வேலை விஷயமா நிறைய இடத்துக்கு போய் வரிங்க தான். நானும் ஏத்துக்குறேன்,



இன்னைக்கு காலையில ஒரு ஒன்பது மணியிருக்கும்," என கூறிக்கொண்டிருந்தவள், அந்த நேரம் தான் என சரியாக தெரியாததனால் வதனியிடம்,



"ஒன்பது மணி வரும் தானேடி?" என்று கேட்க,



அவளும் "ஆம்" என தலையசைக்க மீண்டும் தொடர்ந்தாள் துளசி.



"அந்த நேரம் நீங்க நம்ம ஊரு மார்க்கெட்டுக்கு போனிங்களா?" என்றாள்.



ஒரு நிமிடம் அவளது கேள்வியில் அதிர்ந்து விழித்தவன்,



'கேள்வியே வில்லங்கமா இருக்கே! ஒருவேளை விக்ணேஷ்கூட பேசினதை பாத்திருப்பாங்களோ! பாத்திருந்தா பொய் சொல்ல முடியாதே! பொய் சொன்னேன்னா பிறகு எதைச்சொன்னாலும் பொய்யாத்தான் தெரியும்.



ரெண்டும் என் மூஞ்சியையே குறுகுறுன்னு பாக்கிறப்பவே நல்லா தெரியுது.



இவ ஒருத்தி பாக்கத்தான் பைத்தியக்காரியாட்டம் காமடி பண்ணிட்டு திரிவா, ஆனா பாக்கிறது பூராவுமே சிஐடி வேலை. இப்பவே ஏதோ கண்டு பிடிச்சிட்டான்னு இவ பொடி வைச்சு பேசுறதுல புரியுது, இனி என்னாகுமோ?..'



அவனுக்கு ஏற்கனவே தெரியும், இருவருமே சந்தையில் தான் பொருட்கள் வாங்குவார்கள் என்று.



அதனால் தான் வெளிப்படையாக நின்று தங்கள் பேச்சு வார்த்தையை வைக்காமல், உள்பகுதியில் யாரும் காணாதவாறு மறைவில் விக்ணேஷை வரவைத்து பேசியதே, அவனது கெட்ட நேரமோ என்னமோ, வதனியின் வாடிக்கை கடை உற்புறத்ததில் இருப்பது தெரியாது போனது.

'


சரி பாதிக்கிணறு தாண்டிட்டோம், மீதியையும் தாண்டித்தானே ஆகணும். அதுவரை எதையாவது சொல்லி சமாளிப்போம்.' என்று தனது பொய்யினை அரங்கேற்றத் தயாரானான்.



"ஆமா துளசி! நான் அந்தப்பக்கம் ஒரு வேலையா போனேன். ஊரு கண்ணு முழுக்க என்மேல தான்போல, தகவல் உடனேயே வருது."என்று ஆச்சரியம் போல பேசியவன் காமடியில் யாரும் சிரிக்கவில்லை. மாறாக அவனை முறைத்தார்கள்.







"அப்பிடி உங்களுக்கு அங்க என்ன வேலன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்றாள் துளசி.



"அங்க எனக்கு என்ன வேல இருக்க போகுது துளசி?



எஸ்டேட் பத்தின பத்திரத்தை ரெடி பண்றதுக்கான லாயரை அரேஞ்ச் பண்ணேன். அவரோட வீடு அந்தப்பக்கம் தான் இருக்கு, அவரை சந்திக்க போயிருந்தேன்." என்று மழுப்பினான் சூரிய.



உண்மையில் அங்கு ஒரு லாயர் வீடு உள்ளது தான். ஆனால் அவர் கடும் பிஸியானவர் என்பதனால் அவரை இவனால் சந்திக்க முடியவில்லை. அதனால் வேறு ஒருவரிடம்தான் வேலையை ஒப்படைத்திருந்தான். இவனது பதிலைக்கேட்ட வதனிக்கு கோபம் சுள்ளென்று ஏற,



"பொய்க்கா.... இவனோட வாயில வரதெல்லாமே பொய்! நான் பாத்தேன். இவனும்' அவனும் அப்பிடி உலகத்த மறந்து சிரிச்சு பேசிட்டு இருந்தாங்க.



உண்மையான்னு கேளுங்க இந்த புளுகுனிக்கிட்ட." என்று துளசி கேட்க வேண்டிய கேள்வியை எடுத்துகொடுத்தாள் வதனி.



"ஓ..... இவதான் கண்டாளா? அது தான் வரும்போது அந்த வரவேற்பா? இருக்கட்டும் இருக்கட்டும்,
எவ்வளவு பண்றோம் இதை பண்ண மாட்டோமா?" என்றதை போல் சர்வ சாதாரணமாக இருந்தவன்,



"வதனி கோபமா பேசுறா போல இருக்கே! என்னாச்சு? " என்று எதுவும் தெரியாதவன் போல் துளசியிடம் கேட்டான்.



அவனது தத்துரூபமான நடிப்பினில் 'இவனுக்கு உண்மையிலேயே தமிழ் தெரியாதாே?'என்று துளசியும் ஒருநொடி குழம்பி தான் போனவள்,



'துளசி இவன் மகா நடிகன், அவன் நடிப்ப நம்பாத! அவனை மாதிரியே நடிப்பில நீயும் குறைஞ்சவளில்லன்னு காமிக்கிற நேரம் வந்திடிச்சு, அதனால நீயும் எதுவும் தெரியாதவமாதிரியே நடந்துக்கோ!' என தனக்கு தானே எச்சரித்தவள்,



"இல்ல.... காலையில அந்த விக்ணேஷ்கூட நீங்க பேசிட்டு இருந்தத பாத்திருக்கா, அதுவும் சந்தோஷமா பேசிட்டிருந்திங்களாம், மதியம் சமையல் கூட பண்ணாம ஒரே அழுக.



குட்டிம்மாவ கூட அழைச்சிட்டு வர மறந்து அழுதிருக்கான்னா பாத்துக்கங்க, அவளுக்கு அவனால மறுபடியும் ஏதாவது பிரச்சினை வந்திடுமோன்னு பயப்பிடுறாணனணா,,



இவ்வளவு கெடுதல் செய்தும் அவன்கூட எதுக்கு நீங்க பேசுறீங்க? அப்பிடி என்ன அவன் கூட பேச்சு வேண்டிக்கிடக்குன்னு ரெண்டு பேரு மேலயும் சந்தேகப்படுறா,



உண்மையை சொல்லுங்க, அவ சந்தேகப்படுறதுபோல உச்களுக்குள்ள எதாவது இருக்கா?" என்று தன் சந்தேகத்தை அவளது சந்தேகம் போல் சொல்லி விட்டு அவனை நோட்டமிட்டாள்.



அவனாக உண்மையினை கூறவில்லை என்றாலும், அவனது முகபாவனையினை வைத்து உண்மையினை கண்டுவிடலாம் என்று நினைத்துத்தான் அவனை ஆராய்ந்தாள் துளசி.



சூரியவிற்கு அதளது செயல் புரிந்துவிட்டது. அவளது முதல் கேள்வியில் சற்று தடுமாறினாலும், பின் எல்லாவற்றிற்கும் தயாரானவன்.



"உங்க ரெண்டுபேரோட கேள்வியுமே நிஜாயமானது தான் துளசி! எனக்கும் மட்டும் அவன் கூட பேசணும்ன்னு ஆசையாக என்ன? சொல்லப்போனா எனக்கும் அவன்கூட பேசுறதில இஷ்டமில்ல தான், முதுகில குத்தினவனா மறப்பேனா? அதனால தான் அவனை கண்டும் காணதமாதிரி போனேன்,



ஆனா அந்த நாதாரி என்னைக்கண்டுட்டு, என் பின்னாடியே ஓடி வந்து, சூரிய நான் செய்தது தப்புத்தான், என்னை மன்னிச்சிடு, அந்த சம்பவத்துக்கு பிறகு ஊருக்கு போய் தான் என் தப்பு எனக்கு புரிஞ்சிச்சு.



என்னை நம்பின என் நண்பனுக்கு துறோகம் பண்ணிட்டேன்னு. அதனால ரொம்ப மனமுடைஞ்சு உன்கிட்ட மன்னிப்பு கேக்க திரும்ப வந்தப்போ, நீ ஊரிலையே இல்லன்னு சொன்னாங்க. அதனால நீ வந்ததும் உன்கிட்ட மன்னிப்பு கேட்டு, நீ என்ன தன்டனை தந்தாலும் ஏத்துக்கிறேன்னு தான் இருந்தேன். ஆனா இப்பிடி சந்திப்பேன்னு எதிர்பாக்கல்லன்னு மன்னிப்பு கேட்டு அழ ஆரம்பிச்சிட்டான்.



இவன் இப்பிடித்தான் பொய் பேசி நாடகமாடுவான்னு அவன் பேச்ச நான் நம்பல, போடான்னு திரும்பி நடக்க, சந்தைன்னு கூட பாக்காம கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கிறவன உதறி எறிஞ்சிட்டா போக முடியும்.?



அதான் அவன் மனசு கோணாம ரெண்டு வார்த்தை பேசிட்டு வந்தேன்." என்று பொய் சொன்னவனை முறைத்தவாளே!



"பொய்க்கா.... இவனும் அவன்கூட சேந்து பொய் பேச பழகிகிட்டான்.



இதுங்க ரெண்டும் பேசுறப்போ எதேட்சையா பாத்திகிட்டவங்க போல பேசல,



பலநாள் பழகி பிரிஞ்சு போனவங்க சந்திக்கிறப்போ இருக்குமே அந்தளவு சந்தோஷம் இவன் மூஞ்சையில பாத்தேன்,
யாருகிட்ட பொய் பேசுறான். இவனை நல்லா மிரட்டி கேளுங்கக்கா உண்மை வரும்." என்று வதனி ஆதங்கமாக கூற,

'


இவ ஒருத்தி, என்னை பெரிய பயில்வான் கணக்கா நினைச்சு குத்து, மிரட்டுன்னு, நானே பாவம். இந்த தடிமாட்ட மிரட்ட போய், அவன் என்மேல கையை வைச்சிட்டா யாரு வாங்கி கட்டுவா?' என புலம்பியவளோ!



பயத்தினை வெளிக்காட்டாது அதையே அவனிடம் கேட்டாள்.



"ஆமா துளசி! துறோகம் செய்தான் என்கிறதுக்காக, மன்னிப்பு கேக்கிறவன உதாசினப்படுத்த முடியாதுல்லம்மா! கெட்டது செய்யிறப்போ தண்டனை குடுக்க தயாராக இருக்கிற நாம, மன்னிக்கவும் தயாரா இருக்கணும். மன்னிப்பை விட பெரிய தண்டனை எதுவுமே இல்ல, அதே சமயம் மருந்தும் எதுவுமில்லை.



அதோட அவன் எனக்கு கெட்டது செய்யலையே!



பெத்தவங்களே எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சிருந்தாலும் வதனியப்போல ஒரு பெண்ணை எனக்கு கட்டி வைச்சிருப்பாங்களா? அழகிலயும் சரி, குணத்திலையும் வதனியை அடிச்சிக்க இந்த உலகத்திலேயே யாருமில்லை. எனக்கு இவ கிடைக்க அவன் தானே காரணம். அதுக்கு நான் நன்றி சொல்லலன்னாலும் பறவாயில்லை. மன்னிச்சாவது விடுவோம்ன்னு தான் முழுசா அவனை மன்னிச்சிட்டேன்.



அது தப்பா?.." என்று கேட்டான் சூரிய.



வதனியால் அதற்குமேல் பேச வார்த்தை எழாது தலைகவிழ்ந்து கொண்டாள்.



கோபத்தில் சிவந்திருந்த முகம், வெட்கத்தில் சிவப்பதைக்கண்ட துளசியோ,



"அடேங்கப்பா! என்ன ஒரு பதில்? சும்மா சொல்லக்கூடாதுப்பா, எங்க தட்டினா எங்க அடங்குவான்னு நல்லாவே புரிஞ்சிட்டிருக்கான்.



இதுவும் லூசுத்தனமா இவனேட பேச்சை உண்மைன்னு நம்பி வெக்கப்பட்டுட்டு நிக்குது.



பாரு எதிர்த்து ஒரு வார்த்தை பேசுதான்னு? நீ நடத்து ராசா! இப்பிடி ஒரு இளிச்சவாய் பொண்டாட்டி இருக்கும் வரைக்கும் உன்னை அசைக்கவே முடியாது.



உன் காட்டில எப்பவுமே மழை தான் போ! இதுக்குமேல நாம இங்க இருந்த நாகரிகம் தெரியாதவன்னு நினைச்சிடப்போகுதுங்க. " என நினைத்தவள்,



"அப்போ நீ கேட்க வேண்டிய கேள்வியெல்லாம் கேட்டுட்டேன்ல வதனி? இனியாவது நான் போய் தூங்கலாம்ல?" என்று நக்கலாக கேட்டாள்.



ம்... என வெட்கப்பட்டவாறே தலையசைத்தவள், எதுவோ நினைவுவந்தவளாய்,



"அக்கா ஒரு நிமிஷம்" என அவசரமாக துளசியை அழைத்தவள்,



"இனிமேல் அவன்கூட இவனை பேச வேண்டாம்ன்னு சொல்லுங்க, ஏன்னா எப்போ அவன் என்ன செய்வான்னு தெரியாது.



இந்த மன்னிப்பு கேட்டது கூட பொய்யா இருக்கும்,



என்னால அவனை நினைச்சு பயந்திட்டு இருக்க முடியாது, அதனால அவனோட பழக்கம் இவனுக்கு வேண்டாம்ன்னு சொல்லுங்க" என்று கட்டளைபோல் சொல்ல.



"சரிடி சொல்லுறேன். ஆனா எனக்கென்னமோ அவனை அடிமைத்தனம் பண்ணுறியோன்னு தோணுது." என்றவள்,



அதை மொழிபெயர்த்து சூரியவிடம் கூறியதும், அவனும் வதனியின் வெட்கத்தையும், அவளையும் முழுங்குவது போல் பார்த்தவாறு துளசியின் பேச்சிற்கு சம்மதமாய் தலையசைத்தான்.



ஔிரும்......
 
Top