• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

33. என்னாளும் உன் பாென்வானம் நான்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
தெரியாது என்பதாக தலையசைத்தவள்,

“எனக்கும் தெரியலத்த,
நீங்க அன்னைக்கு சொன்னதுக்கப்புறம் தான் எனக்கும் அவருமேல இருக்கிற ஆசையே தெரிஞ்சிச்சு.
அன்னைக்கு நானும் பல கனவுகளோடதான் உள்ள போனேன்” என நடந்தவற்றை ஒன்றும் விடாமல் கூறினாள்.


“என்னம்மா சொல்லுற..?” என்றவருக்கும் அதை கேட்கும் போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

“அமாத்த, அவருக்கு நான்னா ரொம்ப பாசம், என்னை விட்டு அவரால இருக்கவே முடியாது. எனக்கு ஒன்னுன்னா துடிச்சு போயிடுராரு. அதே சமயம் என்னை காயப்படுத்துறதும் அவராவே இருக்காரு. என்னால அவர புரிஞ்சுக்கவே முடியலத்த.

நான் யாரு கூடபேசினாலும் உம்பு சுகத்துக்காகத்தான் பேசுறேன்னு என்னை ரொம்ப அடிச்சு காயப்படுத்துராரு.
அதுகூட தாங்கிடலாம். ஆனா இன்னொருத்தன் கூட சேத்து வைச்சு அசிங்க பேசுறத என்னால தாங்கிக்க முடியல” என எல்லாவற்றையும் கூறி கதறியவள்,

ஏனோ மாமனாரை தன்னுடன் இணைத்து பேசியதை சொல்ல முடியவில்லை.
எங்கு தாயே மகனை தவறாக நினைத்து விடுவாரோ என்று சொல்லாது விட்டுவிட்டாள்.


அவளை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டவருக்கு எங்கேயோ தவறு போல் தோன்றியது.

'எதற்காக இப்படி நடந்து கொள்கிறான்..?'
என சிந்தித்தவருக்கு துளசி இந்த வீட்டிற்கு வந்தும் சில காலங்கள் பெண்கள் சகவாத்தை நிறுத்தாதவன் படிப்படியாக பெண்கள் சகவாசத்தை குறைத்துக்கொண்டதும், ஒரு நாள் நடு இரவில் காரணமே இல்லாது புலம்பி அழுது கொண்டிருந்தவனை துளசி தேற்றியதாக சொன்னதும் நினைவில் வந்தது.


'ஒருவேளை மனநலம் தான் பாதிக்கப்பட்டிருக்கிறானோ..? முதல்ல இத பத்தி இப்பவே டாக்டர்கிட்ட பேசணும்' என நினைத்து கொண்டார்,


“சரி சரி அழுதது போதும், என்கிட்ட சொல்லிட்டேல்ல, எல்லாத்தையுமே நான் பாத்துக்கிறேன். இப்போ நீ குளிச்சிட்டு சாப்பிட வா!” என தைரியம் கூறி வெளியே வந்தார்.


வந்ததும் எதை பற்றியும் யோசியாது அழைத்தது என்னமோ மருத்துவருக்கு தான்.
நடந்த அத்தனை விஷயங்களையும் கூறியவர்,


“டாக்டர் எனக்கென்னமோ இவனுக்கு மனநலம் ஏதாவது....”



ச்சீ.. ச்சீ.. அப்பிடி எதுவும் இருக்காது பாக்கியாம்மா!
நான் நேரில வந்து ஒரு கவுண்சிலின் பண்ணா என்ன ஏதுன்னு சொல்லிடுவேன், ஆனா எனக்கு ஒரு விஷயத்த மட்டும் தெளிவா சொல்லுறீங்களா?” என்றார்.


“கேளுங்க டாக்டர் சொல்லிடுறேன்.

அது உங்க பையன்....” என நிறுத்தியவர், தொண்டையை செருமிக்கொண்டு,


“இப்போ உங்க பையனுக்கு பொண்ணுங்க சகவாசம் இல்லாம போச்சா..?”


“ஆமா டாக்டர். இப்போ ஒரு நாலு மாசமா எதுவுமே இல்லை. என்றார்”


“நாலு மாசமாவா? எப்பிடி இந்த திடீர் மாற்றம்? பொண்ணுங்க சகவாசம் மாத்திரம் தானா? இல்ல..... இந்த தண்ணி, தம், கஞ்சா எதுவுமே இல்லையா..?”


“அது... முன்னாடி கொஞ்ச நாள் பொண்ணுங்க சகவாசத்த மாத்திரம் தான் விட்டிருந்தான், அப்புறம் அன்னைக்கு ஒரு நாள் நைட்டு அழுதிட்டு இருந்தான்னு சொன்னேன்ல, அப்போ துளசிகிட்ட நான் தனிச்சு போனேன், என்னை எல்லாரும் ஒதுக்கி வைக்கிறாங்க, ஒரு மாதிரியா பாக்கிறாங்கன்னு ஏதேதோ எல்லாம் சொல்லி பினாத்தினானாம்.


அப்போ துளசி அவனை சமாதானம் பண்ணி நான் உங்க கூட இருக்கேன். நீங்க இந்த குடி பழக்கத்தை எல்லாம் விடுங்கன்னு சொன்னதில இருந்து எல்லாத்தையும் அவளுக்காக விட்டிட்டான்.


இப்போ என்னாச்சுன்னு தெரியல்ல, மறுபடியும் குடிக்க ஆரம்பிச்சிட்டான்” என்றார்.


“ஓ.... அப்பிடியா..?” என்றவர்,

“குடிக்க மட்டுந்தானா? இல்ல மறுபடியும் பொண்ணு..”


“இல்லை... இல்லை டாக்டர்! குடி மட்டும் தான், கஞ்சா கூட இல்லை” என்றார்.


“ஓ....” என யோசனையோடே இழுத்தவர்,

“உங்க பையன் எப்போ வீட்டில இருப்பாருன்னு சொல்லுங்க நான் வந்து பாத்துக்கிறேன்” என்றார்.


“ரொம்ப நன்றி டாக்டர்” என போனை துண்டித்த நேரம் துளசியும் வந்து விட்டாள்.


இரண்டு நாட்கள் கடந்திருந்தது. துளசி அறையினை விட்டு வெளியே வருவதே இல்லை. அவளை அவன் தொந்தரவு செய்யவுமில்லை.


அன்று ஞாயிற்று கிழமை ஆகையால் வீட்டில் தான் இருந்தான்.


மருத்துவருக்கு அழைத்து வரச்சொல்லிவிட்டு காத்திருந்தார் பாக்கியா.


“என்ன டாக்கர் இந்தப்பக்கம்? என்றவர்களிடம்,

ஏன் நான் வரக்கூடாதா?” எனக்கேட்டவர்,

“இங்கே பக்கமா ஒரு பேஷன்ட் பாக்க வந்தேன், அப்பிடியே உங்களையும் பாத்திட்டு போகலாம்ன்னு, ஆமா உங்க மருமகளுக்கு உடம்புக்கு நல்லாச்சா..?” என எதேட்சையாக வந்ததுபோல் அவர்களிடம் காட்டிக்கொண்டார்.


“ஓ... அவ நல்லாகிட்டா டாக்டர். ஆனா உடம்பு சோர்வு மட்டும் அப்பிடியே இருக்கு, அதனால ரூம்லயே தூங்குறா” என்று பாக்கியாவும் தன் நடிப்புத் திறமையினை அவிழ்த்து விட,


“சரி சரி தூங்கிறது நல்லது. நான் அவங்கள பத்தி உங்க பையன் கிட்ட பேசணும், அதனால உங்க ராஜாவ என்கூட அனுப்ப முடியுமா?” என்க.


“ஏன் டாக்டர்? அவளுக்கு வேற எதாவது பிரச்சினையா? என்ற வீட்டு தலைவரிடம்,


பயப்படாதீங்க சார்! பேசணும்ன்னு சொன்னாலே பயப்படணுமா..? சும்மா பேசப்போறேன், அவ்வளவு தான்” என்றவர்,


“நீங்க என்கூட வாங்க” என ஒரு தனியறைக்கு அவனை அழைத்துச் சென்றார்.
அங்கு ஒரு சில நலன் விசாரிப்புகளை அவனிடம் கேட்டுவிட்டு,


“அப்புறம் ராஜா சொல்லுங்க” என்க.

“என்ன டாக்டர் நீங்களும் அம்மாவப் போலவே ராஜா என்குறீங்க..?” என முகம் சிவக்க,


“ஏன் உங்க அம்மா கூப்பிட்டா தான் ஏத்துப்பிங்களா? நான்ல்லா ராஜான்னு கூப்பிடக்கூடாதோ..?” என கேலி பேசியவர்.

“நான் உங்ககிட்ட கொஞ்சம் முக்கியமா பேசணும் என்கிறதனால தான் தனிமையில கூப்பிட்டேன் ராஜா!
திடீர்ன்னு நல்லா இருந்த ஒய்ஃப்க்கு வலிப்பு வார அளவுக்கு பெரிய பீவர் வந்திருக்கு.
காரணத்தை ஆராஞ்சப்போ அவங்க கையிலயும் தொடையிலயும் தீக்காயத்தப் பாத்தோம்.

அதனால தான் காய்ச்சல் வந்திருக்கும்.
அந்த காயத்தை வைச்சு என்னால நிச்சயம் சொல்ல முடியும், இது கண்டிப்பா எதேட்சையா நடந்திருக்காது. அந்த இடத்தில தவறுதலா அந்த மாதிரி பொட்டுப்பொட்டா காயம் உண்டாக சாத்தியமில்ல.
அதுவுமில்லாம தன்னை தானே காயப்படுத்திக்க உங்க ஓய்ஃப்பும் முன் வந்திருக்க மாட்டாங்க. ஏன்னா அது சிகரெட்டினால உண்டான காயம்”
என நிறுத்தி அவன் முகத்தை ஆராய்ந்தார்.


அவனோ சொல்வது அறியாது முழிக்க.

“ராஜா! எதுவா இருந்தாலும் என்கிட்ட மறைக்காம சொல்லுங்க.
முன்னைய மாதிரி நீங்க இல்லன்னு அம்மா என்கிட்ட சொல்லி சந்தோஷபட்டாங்க.

ஆனா நீங்க இப்போ இப்பிடி நடந்துக்கிறத பாத்து ரொம்பவே வருத்த படுறாங்க.
உண்மைய சொல்லப்போனா உங்களோட மனநிலை தான் சரியில்லாம போச்சோன்னு பயப்படுறாங்க.
நிச்சயம் நான் சொல்லுவேன். நீங்க தெளிவாத்தான் இருக்கிங்க,


ஆனா ஏதோ ஒன்னு உங்கள டிஸ்டர்ப் பண்ணுது, அது உங்கள, நீங்களா இருக்க விடுதில்லை. அப்பிடி தானே..?” என அவனை பார்த்தார்.


அவனோ அவர் பேச்சை கேட்டு சொல்வது அறியாமல் பேந்தப் பேந்த விழிக்க.


“என்கிட்ட எதுவும் மறைக்காதீங்க ராஜா, இந்த உலகத்தில எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு உண்டு, ஆரம்பத்திலயே பிரச்சினை என்னன்னு கண்டு பிடிச்சிட்டோம்ன்னா அத சரிப்பண்ணிடலாம்.
இப்போ நீங்க உங்க பிரச்சினைய சொன்னாத்தான் அதுக்கான மருத்துவத்தை ஆரம்பிக்கலாம், சீக்கிரமே நீங்க குணமாயிட்டீங்கன்னா உன்க ஒய்ஃப் கூட நினைச்ச மாதிரியே சந்தோஷமா வாழலாம்..” என விடாப்பிடியாக கேட்க,


அவரை பாவமாக பார்த்தவனை சிறு புன்னகையுடன் ஏறிட்டர்,

“எனக்கு தெரியும் ராஜா உங்க பிரச்சினை என்னன்னு.!” என்று நிறுத்தியவர்,

“உங்களோட அதிக போதை பழக்கம் எந்தளவுக்கு பாதிப்ப ஏற்படுத்தியிருக்குன்னு இப்போ புரியுதா..? பெரியவங்க ஏதாவது சொன்னா புரிஞ்சுக்க முயற்சி பண்ணணும், அதவிட்டிட்டு நாகரீகம் என்கிற பெயரில கண்டதையும் பழகிட்டு வந்தா இந்த மாதிரி நரம்புத்தொகுதி பாதிக்க பட்டு ஆண்மைய இழக்க நேரும்."
என்க..

“டாக்டர்…” என உள்ளே போன குரலில் அழைத்தவன் கையினை பற்றிக்கொண்டவர்,


“பயப்படாதீங்க, நான் கேக்கிற கேள்விக்கு மட்டும் தெளிவான பதில தந்தா சீக்கிரம் அதுக்கான ட்ரீட்மென்ட ஆரம்பிச்சிடலாம்.
எவ்ளோ காலமா பொண்ணுங்க கூட உங்களால உறவு வைச்சுக்க முடியல..?” என்றார்.


“ஒரு வருஷத்துக்கு அதிகமாகிடிச்சு டாக்டர். முன்னாடில்லாம் ஒரு நாளைக்கு நாலு பொண்ணுங்க கூடல்லாம் உறவு வைச்சுக்க முடிஞ்சிது, அப்புறம் என்னமோ தெரியல எனக்கு ஆர்வமில்லாம படிப்படியா குறைச்சுக்கிட்டேன். ஒரு கட்டத்துக்கு மேல எந்த உணர்ச்சியும் எனக்குள்ள வரல்ல.


முன்னாடில்லாம் பெண்களை பார்த்தாலே உள்ளுக்குள்ள சில்லிடுற உணர்வு தோணும்.
ஆனா இப்போ பொண்ணுங்க என்முன்னாடி நிர்வாணமா நின்னாக் கூட சாதாரண பொருள பாக்கிற மாதிரி எதுவுமே தோண மாட்டேங்குது. அதனாலயே எல்லாரும் என்னை வினோதமா பாக்கிற மாதிரி உணருவேன், அதே சமயம் ஒதுக்கி வைக்கிறதா தோணும்.


அதிக நேரம் தனிமைய நாட ஆரம்பிச்சேன்.
அப்போல்லாம் என்னோட பிரச்சினை எனக்கு புரியல்ல. ஏதோ எனக்கு இப்போ வேண்டாம் என்டது போலதான் நினைச்சேன்.


அப்புறம் இப்போ துளசி என்கூட நெருங்கி பழக ஆரம்பிச்சதும் தான் ஏன் இப்பிடி இருக்கேன் என்ற கேள்வியோட என்னோட பிரச்சினை இது தான்னு புரிய ஆரம்பிச்சிது.

ஆனா அதை நான் வெளிய யாருக்கும் சொல்ல விரும்பல, அப்பிடி சொன்னாலும், இந்த நாட்டுக்காரங்களோட முட்டாள் தனமான பேச்சு எப்பிடி இருக்கும் தெரியுமா..?
இவன் எத்தனையோ பொண்ணுங்களோட வாழ்க்கையோட விளையாடினான், அந்த பாவம் தான் இவனுக்கு இந்த மாதிரி குழந்தையே பிறக்காத அளவுக்கு பண்ணிடிச்சுன்னு வாய்க்கு வந்தத பேசுவாங்க. அதான் அமைதியா இருந்துட்டேன்” என்றான்.


“அப்போ இப்ப கூட உங்க தப்ப நீங்க ஒத்துக்கிறதா இல்ல..?” என அந்த மருத்துவர் அவனை கூரிய பார்வையோடு வினவ.


“மிக சாதாரணமாக தோள்களை குழுக்கியவனோ!
இதில தப்பு என்ன இருக்கு டாக்டர்..? இது மனுஷனோட ஒரு உணர்வு. பசி, தாகம் எப்பிடியோ அதே போல தான் செக்ஸ்ஸும்.

பசி, தாகத்தை அடக்கிட்டு இருக்காத நாம எதுக்கு செக்ஸ்ஸ மட்டும் அடக்கிக்கணும்?
இத தப்புன்னு சொன்னிங்கன்னா, சாப்பிடுறதும் தப்புன்னு தான் நான் சொல்லுவேன்.” என பேசியவன் பேச்சையே நன்கு கவனித்திருந்தவர் உதடுகளில் வெறுமையாய் ஒரு புன்னகைத்தது.


“நல்ல விளக்கம் ராஜா!
அதாவது நம்மளோட உடம்பு தன்னோட தேவைகளையும், தாக்கங்களையும் ஏதோ ஒரு வகையில நமக்கு உணர்த்துறது தான் உணர்வு!

சரி உங்க விளக்கத்துக்கே வந்திடுறேன், பசி, தாகம், செக்ஸ் மட்டும் உணர்வு கிடையாது,
கோபம், கண்ணீர், பொறாமை இப்பிடி நிறைய இருக்கு,


இப்போ உங்களுக்கு ஒன் பாத்ரூமாே, இல்ல ட்டூ பாத்ரூம் வருது. அப்பிடின்னா உணர்வுகளை அடக்க முடியலன்னு ஒரு பொது வெளியில கூச்சமே இல்லாம உங்களால போகமுடியுமா?

இல்லல்ல.... அதுக்குன்னு ஒரு இடம் இருக்குன்னு அங்க தானே ஒதுங்குவீங்க.
அதை தான் இங்க என்க பண்பாடு சொல்லுது.


மனுஷங்களுக்குன்னு ஒரு கோட்பாடு இருக்கு ராஜா! அது இல்லன்னா விலங்குங்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும்” என்றவர்.


“ஓகே அதெல்லாம் உங்க பிரச்சினை. அத பத்தி இங்க நான் பேச வரல்ல.
ஒரு வைத்தியரா உங்க நோய குணப்படுத்த நினைக்கிறேன். அதுக்கு நீங்க சம்மதிக்கிறீங்களா?” என நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.


“வேணாம் டாக்டர், நான் இப்போ ரீட்மென்ட் பண்ண போனா எல்லாருக்கும் என் குறை தெரிஞ்சிடும், அப்புறம் என்னை ஒரு மாதிரி பாப்பாங்க, அதை என்னால ஏத்துக்க முடியாது”


“அப்பிடின்னா இப்பிடியே இருந்திட்டு உங்கள சுத்தியிருக்கிறவங்கள கஷ்டபடுத்த போறீங்களா?” என்றவர்,

“இங்க பாருங்க ராஜா! சரியா எதுவுமே தெரியாம நீங்களா ஒரு முடிவுக்கு வரது சரியில்ல.
ஏற்கனவே நான் சொன்னத போல எந்த ஒரு நோயையும் ஆரம்பத்திலயே கண்டு பிடிச்சிட்டோம்ன்னா அதை முற்றிலுமா சரி பண்ணிடலாம்.

அதுவுமில்லாம உங்க ஒய்ஃவ் துளசி உங்களால ரொம்பவே பாதிக்கப்பட்டிட்டிருக்காங்க.
உங்களுக்கு உள்ள பிரச்சினையினால தினம் தினம் அவங்க உங்கள விட்டிட்டு போயிடுவாங்களோன்னு பயந்திட்டே அந்த பொண்ணுமேல அபாண்டமா பழிய தூக்கி போட்டு டார்சர் பண்ணிட்டிருக்கிங்க.

இதுக்கு தீர்வு வரணும்ன்னா கண்டிப்பா நீங்க இதை ஏத்துக்கிட்டு தான் ஆகணும்” என்றவர்.


“எடுத்ததும் நான் ரீட்மென்ட் பண்ண போறதில்ல ராஜா.
முதல்ல என்ன தான் பிரச்சினைன்னு அடிப்படையான டெஸ்டிங்க் பண்ணி பாப்போமே!” என்க.


அரை மனதாகவே தலையசைத்தவன் தோள்களை தட்டிக்கொடுத்தவர்.

“பயப்படாதீங்க ராஜா! வெளிய தெரியிறது தான் பிரச்சினைன்னா வெளிய தெரியாத அளவுக்கு பாத்துக்கிறது என்னோட பொறுப்பு.

நாளைக்கு அம்மாவை கூட்டிட்டு ஹாப்பிடல் வந்திடுங்க” என ஒரு சில விளக்கங்களை கொடுத்து வெளியேறினார்.


மறு நாள் அவர் சொன்னதற்கு இணங்கி அவரது மருத்துவமனை சென்றவனை அழைத்து டெஸ்டிங்க் சாம்பிளை சேகரித்தவர்,
ஒரு வாரம் கடந்த பின்னர் தான் இதன் ரிப்போர்ட் கையில கிடைக்கும். கிடைத்ததும் அடுத்த கட்ட சிகிச்சைக்கு தயாராக இருக்கும் படி கூறியே அனுப்பி வைத்தார்.


அவர் சொன்னது போல மறு வாரமே ரிப்போர்ட் கையில் கிடைக்க, ரிப்போட்டினை எடுத்துக்கொண்டு வீட்டுக்கே வந்துவிட்டார் மருத்துவர்.


வைத்தியசாலைக்கு அழைத்திருப்பார் தான். ஆனால் அவருக்கு தனிமையில் பேச வேண்டியது நிறையவே இருந்ததனால் தான் வீட்டிற்கே எடுத்து வந்தார்.


வழமை போல் ராஜா அலுவலகம் சென்றுவிட்டிருந்தான். அவன் தந்தையை முன் கூட்டியே தொடர்பு கொண்டு வீட்டில் நிற்குமாறு மருத்துவர் கூறியதனால் தலை வலி என்று கூறி மட்டம் போட்டுவிட்டார்.


பரபரத்த மனதோடு இருந்தவர்களிடம் வந்தவர் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாது அமைதி காத்தார்.
அமைதி காப்பது ஒன்றும் இதற்கு தீர்வு கிடையாதே! எப்படியாவது தகவலை கூறித்தான் ஆகவேண்டும் என்ற இக்கட்டான நிலையினை உணர்ந்து,


“க்ஹூம்..” என்ற செருமலோடு பேச்சினை ஆரம்பித்தார்.
 
Top