• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

33. காற்றோடு கலந்த விதையவள்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
வந்தவனை அறியாது அவனை யாரென்று அளவெடுக்கும் பார்வை அவன் மேல் காந்தி வீச,



"யார் தம்பி நீங்கள்? யாரை பார்க்கோணும்" என்றார் ராசா.



புதிதான கார் சத்தத்தில் இளையவர்களும் வெளியே வந்திருந்தனர்.



"யார்றா இது... இவ்ளோ உயரமா?" வாய்விட்டே அதிர்ந்தாள் இலக்கியா.



அவள் கேள்வியில் வந்தவனும் அவளை திரும்பி பார்க,



ராசாவே மீண்டும் பேச ஆரம்பித்தார்.



"கேட்டதுக்கு பதில் சொல்லேலயே தம்பி"



அவருக்கு மதிப்பளிக்கும் விதமாய், வணக்கம் கூறியன்,



தன்னை யார் என்று அறிமுக படுத்தினான்.



"உள்ள வாங்க தம்பி" என்று அழைத்த காந்தியின் அழைப்புக்கிணங்கி அவனும் உள்ளே சென்றான்.



தன்னையே வினோதமாய் பார்த்தவாறு நின்றவர்களை கண்டு ஆச்சரியமானவன்,



"நீங்கள் எல்லாருமே ஒரே குடும்பமா?"



"ம்ம்.. இன்னும் உள்ள நிறைய பேர் இருக்கினம்.... கூப்பிடுறேன்.." என்று அனைவரையும் அழைத்து, அறிமுகம் செய்து வைத்தவர், வேலை விசயமாக மகன்கள் வெளியே சென்றிருப்பதாகவும், துஷா உடம்பு சரியில்லாததனால் ஓய்வெடுக்கிறாள், அவளை தொந்தரவு செய்ய விருப்பம் இல்லை, இன்னொரு நாள் வந்தால் அவளை காணலாம் என்றார்.



தான் கொண்டு வந்த பெரிய பிளாஸ்திக் கவரை அவரிடம் கொடுத்தவன்,



"அப்ப நான் வாரன்" என்றான்.



"வந்திட்டு ஏதுவும் குடிக்காம போக கூடாது." என்றவர், பின்னால் திரும்பும் வேளை, கையில் தேனீர் கோப்பையுடன் நின்றிருந்தாள் புணிதா.



அதை வாங்கி பருகியவன்,



"அவசரமான வேலை இருக்கு.. நான் வாறன்" என்று எழுந்து கொள்ள,



இளையவர்களோ அவனையே ஆ..... என்று பார்தவாறு இருந்தனர்.



பெண்கள் மாத்திரமல்ல... ஆண்களும் தான்.



ஒருவனால் பெண்களை மாத்திரமல்லாது, தன் நிமிர்வினால் ஆண்களையும் இந்த அளவிற்கு கவரலாமா என்றே அவர்கள் பார்வை இருந்தது. கூடவே பாெறாமையும் வந்து ஒட்டிக்காெண்டது.



வள வள என்று இல்லாத அளவான பேச்சு. தொய்வில்லாத நடை... கூர்மையாண விழிகள் கொண்ட பார்வை. அதிலும் அழகன் வேறு.



அவனையே வைத்த கண் வாங்கு பார்த்து நின்ற கன்னியர்கள் ஒன்று கூடி பேசுவதை கண்ட, இளம் காளையர்களோ,



"இவனெல்லம் அழகன் என்டு பெரிசா பீத்துறீங்கள்... என்னை பார்.." என்று தன் சட்டையை தூக்கி காட்டினான் ஜெகன்.



"முதல்ல அதை மூடு.......! திண்டு திண்டு வயித்த தான் வளத்து வைச்சிருக்கிற.



கத்தியே வெடிச்சு சாகிற மாரித் தவக்கை கணக்கா அதை வைச்சுக்கொண்டு, மனசாட்சியே இல்லாம அவனோட போட்டி போடுற.



போடா... போய் அப்பாவோட சேர்ந்து நெல்லு மூட்டை தூக்கி, அதையாவது குறைக்க பார்" சரியான நேரம் பார்த்து காலை வாரினாள் பப்லு.



உனக்கும் என்னோட கெத்து தெரியாது கருப்பு.... இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திரு... உலக அழகியையே ஐய்யா வழைச்சு காட்டுறன் .." என்றவனை கேவலமாக ஒரு லுக்கு விட்ட தங்கையர்,



"அடங்குடா டேய்... ஊரழகியே கண்டுக்கேல... இதுல உலக அழகியாம்...,



ஸ்ரீ செல்லம்.. இவனோட சேராத.... சேர்ந்தா, இவன் தம்பியா நீ என்டு ,உன்னோடயும் எந்த புள்ளையும் சேராது... . பிறகு கல்யாணமே ஆகாம, எல்லா கோவில் மூலையிலும் வைச்சிருக்கிற பிள்ளையார் கணக்க, உன்னையும் இருத்தி வைச்சிடுவினம்." என்றாள் அனை எச்சரிப்பது போல்.



கண்ணீர் கன்னங்களை நனைதிருக்க, பலத்த யோசனையில் இருந்தவளின் கதவு தட்டுப்பட்டது, வேகமாக கண்களை துடைத்து கொண்டவள்,



" கதவு திறந்து தான் இருக்கு... வரலாம்" என்றாள்.



கையில் அவளது கைபையுடன் வந்த மல்லி.



" ஏம்மா... காயம் வலிக்குத?" என்றார் அவளது கலங்கிய முகத்தை பார்த்து.



செயற்கையாய் வரவழைத்த புன்னகையுடன்....



"வலியா? உங்களை தாண்டி, அது எப்பிடி என்னட்ட வந்தது? இதெல்லாம் சாதாரண வலியத்த, அத விடுங்கோ... என்ன இந்த நேரம்? நித்திர வரேலயோ!"



"யாரு சொன்னது? நானும் மனுஷி தானே! இந்தா உன்ர கை பை!" என திணித்த பொருளை பார்த்தவள்,



"எப்படித்த இது.? இதை கடையிலயே வைச்சிட்டனே! யார் கொண்டு வந்தது?"



"யார் எடுத்து வந்தது இருக்கட்டும்... அதுக்குள்ள இருந்து அந்த போன் நொய் நொய் என்டுது.. அதை முதல்ல பார்.. தெரியா தனமா என்ர, அறைக்குள்ள கொண்டு போயிட்டன்..



படுப்பம் என்டு கண்ண மூடினா. எங்க அது படுக்க விடுது..



நிறைய தடவை அடிச்சிட்டுது.. யார் என்டு முதல்ல கேளு!" என்றார்.



"நான் கேக்குறன்.. நீங்க போய் படுங்கோ" என்று பாக்கிலிருந்து போனை எடுத்தவள்,



"இவ்ளோ மிஸ்டுகோலா?"



என்று அதிர்ந்த வேளை, மீண்டும் அது சிணுங்கியது.



ஆன் செய்து காதில் வைத்ததும் தான் தாமதம்,



சைலு கத்திய கத்தலில், போனே உடைந்து விடும் போலிருந்தது.

"


நீ என்ன அவ்ளோ பெரிய மனிஷி ஆகிட்டியா? எடுத்தாலும் எடுக்கிறாயில்ல. ஒவ்வொரு நாளும் எடுக்கிற உனக்கு, ஒரு வாரமா என்ன பிரச்சினை...



தலையில காயமே! ரவி சொன்னாரு.. அதான் கேப்பம் என்டு எடுத்தன். ஆனா உனக்கு தான் இப்ப நான் தேவையில்லயே! அது தான் மேடம் என்னை மறந்துட்டீங்கள்." என்றாள் ஆத்திரமாக.



அவளை பேச விட்டு அமைதியாக கேட்டுகொண்டிருந்தவள் மேல் இன்னும் கோபம் உண்டாக,
"என்ன மேடம் லைன்ல இருக்கிங்களா... இல்ல என்டா என்னை தனியா புலம்பட்டும் என்டு வைச்சிட்டு போயிட்டீங்களா?"

"


உன்னட்ட இன்னும் எதிர்பார்த்தன்... இன்னும் ஏதையாவது மறந்திருந்தா தாரளமா திட்டலாம்" என்றாள் துஷா அடக்கமாக.

"


என்னை பாத்தா உனக்கு நக்கலா இருக்கா?



சரி அதை விடு இப்ப எப்பிடி இருக்கு? வலியெல்லாம் குறைஞ்சிருக்கா? திடீர் என்டு மயங்கி விழுகிற அளவுக்கு என்ன நடந்தது?" என்றாள்.



என்ன நடந்திருக்கும் நீயே சொல்லு...." துஷா எதிர் கேள்வி கேட்க.

"


விளையாடுறியா..?"

"


பின்ன என்னடி? திடீர் என்டு நடக்கிறதுக்கு பெயர் தாண்டி விபத்து. இப்ப வலியெல்லாம் இல்ல.. மருந்து போட்டன் இப்ப பறவாயில்லை....



கொஞ்சம் ஓய்வெடுத்தா சரியாகும்."
"சரிடி உடம்ப பாத்துக்கோ! அப்பப்ப என்னையும் நினைச்சு போன் பண்ணு. நான் வைக்கிறன்" என்றவள் வைத்து விட்டாள்.

பெருமூச்சொன்றினை வெளியேற்றிய சமயம்.


மீண்டும் செல்போன் சிணுங்கியது.
வழமையான நேரத்திற்கு வரும் இலக்கம் தான். இன்று ஏனாே அதை எடுக்க துஷாவிற்கு மனம் வரவில்லை... போனை சத்தம் வராதவாறு வைத்து விட்டு படுத்துக்கொண்டாள்.







சரியாக சாப்பிடுவதில்லை. தூங்குவதில்லை என தூஷாவை படாது படுத்தினார்கள் துஷாவின் பாட்டி தாத்தா அத்தைமார்கள். பத்தாததுக்கு துஷாவின் மாமான் மக்கள் வேறு.



எப்படியோ அவர்கள் தரும் சாப்பாட்டை மென்று முழுங்கி, தனது உடலை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தவள். முதல் நாளே வீட்டில் உத்தரவு வாங்கி கொண்டு இன்று தான் வேலைக்கு கிளம்புகிறாள்.



அதுவும் தெளிவான மனநிலையாேடு.



என்ன ஆனாலும் இனி தன் மனதில் ரதனை பற்றிய சஞ்சலங்கள் இருக்க கூடாது.
இனிமேல் அவனை மனதால் நினைத்தால் கூட, இதுவரை தன் பெற்றோருக்கும், இப்போது தனக்கு ஒன்றென்றால் துடிக்கும் சொந்தங்களுக்கும் தான் செய்வது துரோகம்.
இனி அவனை நினைத்தால் அவனை மணக்க இருக்கும் பெண்ணுக்கும் செய்யும் துறோகமாகிவிடும்,



அவளும் என்னை போல ஒரு ஏமாளியே!



அவள் வாழ்வாவது நன்றாக இருக்கட்டும்.



தனக்கு எது என்று விதி தன் பாதையில் என்னை அழைக்கிறதோ இனி அதுவே என் பாதை என முடிவெடுத்து விட்ட பிறகு, கடந்த கால நினைவுகளுக்கோ கண்ணீருக்கோ இனி அனுமதி கிடையாது.



இந்த வயதினில் எதையெல்லாம் இழக்க கூடாதோ, அதையே இழந்து வாழ முடிகிறது என்றால், இது ஒரு அற்ப விஷயம் தானே! தனக்குள்ளவே சபதம் எடுத்து கொண்டவள், அவன் அறையை நோக்கி சென்றாள்.



பாவம் காயங்கள் ஆறலாம் அந்த காயத்தால் உண்டான தழும்புகளை ஆற்ற முடியாதென்பதை மறந்து விட்டாள்.



வழக்கம் போல் தன் இருப்பிடம் அமர்ந்தவள், எந்தவித சலனமும் இன்றி புதிய துஷாவாக தெரிய, ரதனால் தான் நம்ப முடியவில்லை.



ஆம் ரதன் இன்று அவள் வரவை எதிர்பார்த்து காலையிலே வந்துவிட்டான்.



அவள் அன்று அடி பட்டதற்கு ரதன் தான் காரணம் என ரவி அவனுடன் இன்றோடு மூன்று நாட்களாக பேசவே இல்லை.



துஷாவிடம் மன்னிப்பு வேண்டினால் மாத்திரமே, அவனுடன் பேசுவேன் என்று கூறியதனால் தான், அவனுள்ளும் இந்த மாற்றம்.



அவளுக்கோ கணக்கை பார்த்ததும் மயக்கம் வராத குறையே! இப்படி கணக்கு குவிந்திருந்தால் எப்படி இதை சரி பார்ப்பது.



ஏதாவது செய்ய வேண்டுமே!' என்று பேனாவை வாயில் கடித்துக்கொண்டு பலவாறு யோசித்தாள்.

'


சரி வேறு வழி இல்ல' என்று கணனியில் அதை பதிவேற்றிக் கொண்டிருந்தவளை பார்த்து செருமினான் ரதன்.



செருமல் சத்தத்தில் தான் ரதன் அங்கு இருப்பதையே கவனித்தாள் அவள்.
"சாரி சார்! குட் மார்ணிங்க். நீங்கள் இருந்ததை நான் கவனிக்கேல" என்றவள்.



இவ்வளவு தான் தனக்கும் உனக்கும் உள்ள உறவென்னும் முறையாய், தன் வேலையில் மூழ்கினாள்.



ரதனுக்கு ஏகப்பட்ட குழப்பங்கள். இரண்டு நாட்களுக்கு முன்னம் இருந்த துஷா எங்கே? இப்போதிருக்கும் துஷா எங்கே? முற்றிலும் மாறு பட்டிருந்தாள்.
துஷாவை சந்தித்த இத்தனை நாட்களில் இவளில் இப்படியான ஒரு தெளிவை அவன் பார்த்ததில்லை.



முன்னைய துஷா என்றால், தன்னுடன் பேசும் போது ஒரு பதட்டம் இருக்கும். ஆனால் இன்று அந்த பதட்டம் கொஞ்சமும் அவளிடம் இல்லை.
நடிக்கின்றாளோ என்று கூட அவளை உண்ணிப்பாக கவனித்தான்.



நடிப்பவர்கள் எப்படியும் ஒரு கட்டத்தில் தப்பு விடுவார்கள், ஆனால் துஷாவின் செயற்பாடுகளில் அவள் நடிக்கிறாள் என்று கூட தெரியவில்லை.



அவனோ அவளையே பார்த்திருக்க, துஷா வேலைக்குள்ளவே இறங்கி, வேலையில் கவனம் செலுத்தியதால் சுற்ற நடக்கும் விஷயங்களை கவனிக்க முடியவில்லை.

"


துஷாந்தினி" என்றான்.
அவள் காதுக்கு தான் அது எட்டவில்லை.



எழுந்து வந்தவன் அவள் மேசைமுன் நின்று, அவள் மேசையை தட்டி,
"உங்களை தான் கூப்பிடுறன்" என்றான் அழுத்தமாக.



திடுதிடுப்பென வந்த சத்தத்தில் திடுகிட்டவள், ரதன் முன் நிற்பதை பார்த்து விட்டு சாதாரணமாக
"சாரி சார்! கொஞ்சம் கூட வேலை... அது தான் நீங்கள் கூப்பிட்டது கேக்கேல.

"


சொல்லுங்கோ.. என்ன" என்றாள்.

"


அது அது.." என்று இது வரை இல்லாத தடுமாற்றம் இம்முறை ரதனிடம்.

"


நிறைய வேலை இருக்கு.... வேற கணக்கிருந்தா இப்ப ஏலாது. வேணும் என்டா இருக்கிறத முடிச்சிட்டு உன்கடய முடிஞ்சா பாக்குறன்." என்றாள் அவளும்.

"


இல்லை.... அதில்ல" என்றவனை கேள்வியாய் பார்த்தவள்,
"அப்ப என்ன?"

"


அது அது...." என்று இழுதடித்தவன், சங்கடமாகவே,
"சாரி" என்றான்.

"


எதுக்கு சாரி?"
எதை சொல்வதென்று முழித்வனால் அவளிடம் ரவிக்காக தான் கேட்க்கிறேன் என்று கூற முடியவில்லை.

"


ஏதோ கேட்கோணும் என்டு தோன்டிச்சு.. அதான்"

"


தப்பு செய்தா மட்டும் சாரி கேளுங்கோ சார். சும்மா எல்லாத்துக்கு கேட்டா.. சாரிக்கு மரியாதை இல்ல... காரணமே இல்லாம மன்னிக்க நானும் கடவுளில்ல" என்றவள் வேலையில் கவனமானாள்.



அவனோ அந்த இடத்தை விட்டு அசைவதாக இல்ல.. நிமிர்ந்து அவனை கேள்வியாய் நோக்கியவள்,
"இப்ப என்ன?" என்றாள் அழுத்தமாக.

"


அது... ரவிட்ட போன் போட்டு சொல்லுறீயா? இப்ப நமக்குள்ள எந்த பிரச்சனையும் இல்ல என்டு"

"


நமக்குள்ள எப்ப பிரச்சினை வந்திச்சு.? முன்னம் யாரென்டு தெரியாம, வீதியில நடந்த சண்டை... பிறகு...." என்றவள் ஏதோ நினைவு வந்தவளாக,
"நானும் வர்மன் சாரும் பழகிற விதம் தப்பு என்டும், இங்கே பாக்கிறவ தப்பா எடுக்க கூடாது என்டும் எடுத்து சொன்னீங்கள், நான் தான் புரிஞ்சுக்காம உங்க மேல கோபபட்டு, நீங்க கழுத்த பிடிக்கிற அளவுக்கு வந்துட்டுது.



அதுக்கு பிறகு பிரச்சினை என்டு நடக்கலையே! சில பேச்சு வார்த்தைகள்ல எங்க ரெண்டு பேருக்குள்ளயும் புரிந்துணர்வு இல்லாம போச்சே தவிர, சண்டை இல்லையே!
எனக்கு என்னன்டா... முன்னாடி செய்த தவறுகளுக்கு, கேட்காத மன்னிப்பு... இப்ப செய்யாத தவறுக்கு எதுக்கு?
நான் ஏன் ரவி அண்ணாட்ட சொல்லணும்?" என்றாள் புரியாது

"


நீ என்னை மன்னிச்சிட்ட என்டு சொல்லும் வரை, என்னோட அவன் கதைக்க மாட்டானாம்"

"


ஓ... இது தான் காரணமா? இப்பவும் மனசு உறுத்தி, மன்னிப்பு கேக்கேல... எப்பிடி அது உறுத்தும்.? அதுக்கு முதல்ல மனசு இருக்கோணும்..."

"


இப்ப என்ன? உங்களோட எந்த பிரச்சினையும் இல்லை என்டு ரவி அண்ணாட்ட கதைக்கோணும்... அவ்வளவு தானே!



இதை நானா அவரிட்ட சொல்லேல என்டாலும், உண்மை இது தான்.... போன் பண்ணி தாங்கோ கதைக்கிறன்" என்றாள்.

உடனே தன் செல்லிலிருந்து அவனை அழைத்தான். அவன் எடுக்கவே இல்லை.


"


எடுக்கிறான் இல்ல.... உன்ர போனில இருந்து எடுத்து பாக்கிறியா" என வார்த்ததைகளை விட்ட பின்னர் தான், தன் தவறை நினைத்து விழி பிதுக்கினான்.

அவன் வார்த்தைகள் அவள் காதுகளில் எட்டியும், அதை ஆராயும் எண்ணம் ஏனோ அவளுக்கு தோன்றவில்லை.


"சரி


நம்பரை சொல்லுங்கோ" என்று கேட்டு வாங்கியவள் மறு முணை பதிலுக்காக காத்திருந்தாள்.



"ஹலோ...."



"நான் துஷாண்ணா.... நல்லா இருக்கிங்களா?" என்று சாதாரண நலன் விசாரிப்புடன் ஆரம்பித்து,



"என்னண்ணா உங்களுக்குள்ள பிரச்சினை...? சார் சரியா கவலை படுகிறார்... நீங்கள் கதைக்கேலயாமே...!
எங்களுக்குள்ள எந்த சஞ்சலமும் இல்லண்ணா...
சாரோட கதைக்கிறீங்களா..?" என்றவள் அவன் பதிலை எதிர் பாரமலே அவனிடம் தந்து விட்டு ஒதுங்கி கொண்டாள்.

"


இப்ப ஓகே தானே! சரி வை! பிறகு கதைக்கிறன்" என்றவன் போனை துஷாவிடம் கொடுத்து.



"தாங்க்ஸ் துஷா" என்றான்.
"என்னை ரெண்டு விதமாக நீங்கள் கூப்பிடேக்க எனக்கே குழப்பமா இருக்கு.. நீங்களும் என்னை எப்பவும் போல துஷாந்தினி என்டே கூப்பிடுங்கோ" என்றாள் இனிமேல் உரிமையுடனான உன் அழைப்பு தேவையற்றது என்பது போல்.



ரதனால் சற்றும் நம்பவ முடியவில்லை.



அவளுள் மாற்றம் என்ற ஒன்றை எதிர் பார்த்தான் தான், ஆனால் இவ்வளவு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை.

'


எவ்வளவு தூரம் போகுது என்டு நானும் பார்கிறன். கொஞ்சம் விட்டா காணும்...



இரு உனக்கு இது போதாது. இன்னும் அதிரடியாய் இறங்குறன்.' மனதில் குறித்துக் கொண்டவன்,

"


ஓகே துஷாந்தினி.. உங்கட வேலைய பாருங்கோ" என்று தன் இருக்கையில் சென்று அமந்தவன், அவளது ஒவ்வொரு அசைவகளையும் கவனிக்க தொடங்கினான்.



அவள் அவனை கண்டு கொள்ளவே இல்லை. கண்டு கொள்ளும் அளவிற்கு வேலையும் இடங்கொடவில்லை.



பாவம் தனக்கு இன்று நடக்க இருக்கும் விபரீதம் தெரியாமல், வேலையே கதியென மூழ்கிப்போயிருந்தாள்.

அப்பிடி என்ன நடக்க போகுது என்டு கேக்குறீங்களா...? அடுத்த பகுதிக்காக காத்திருங்க....
 
Top