• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
அதிர்ச்சியின் உச்சத்துக்கு சென்ற ஆதிக்கு, எதிவுமே புரியவில்லை.


அன்னை அம்மு என்று அறிமுகப்படுத்தியவளை.. மீண்டும் மீண்டும் பார்த்தவனுக்கு, ஏனோ அவளை தன் அம்முவாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.



"என்னடா அப்பிடிப்பாக்குற...? உன்னாலயும் நம்பமுடியல்லையா..? ஆமாடா...! என்னாலயும் நம்ப முடியல்ல ஆதி!
சின்ன வயசில இருந்த அம்முவுக்கும், இவளுக்கும் கொஞ்சம் கூட பொருந்தலல்லடா
...
இருந்தாலும் அழகா இருக்கா.." என்று தன் மருமகளை புகழ்ந்து தள்ளியவரைமே கேள்வியோடு நோக்கியவன்..



"ம்மா... இவ தான் நம்ம அம்முன்னா.. இவகூட வந்திருக்கிற இவங்க யாரு..? அத்தையும் மாமாவும் எங்க?" என கண்களால் வலைவீசி தேடியவனுக்கு ஏமாற்றமாகி போக.. அன்னையிடம் திரும்பினான்.


அவனின் ஏமாற்றம் புரிந்தவருக்கும் அதே நிலை
...


"தெரியல்ல ஆதி... நானும் அதைத்தான் கேட்டேன்.
அது பெரிய கதை.. வீட்டில எல்லாரும் வரட்டும்.. சொல்லுறேன்னு சொன்னாங்கடா! அதான் உன்னை அவசரமா கூப்டேன்." என்றவர்.



"எல்லாரும் தான் இருக்கோமே.. இப்பபோவாவது சொல்லுங்க. அண்ணனும் அண்ணியும் எங்க?" என்றார்.


அவர்களது கேள்வியில் இத்தனை நேரம் இருந்த மனநிலை முற்றாக வடிந்துபோக,



"அதை எங்க வாயால சொல்லுறத விட... உங்க வீட்டு பொண்ணு சொன்னாத்தான் சரியா இருக்கும். ஏன்னா அவளுக்கு தான் எல்லாம் தெரியும்." என்றவர்,



"மோணி..! நீயே சொல்லும்மா! நீ தானே எல்லாத்தையும் நேரில பார்த்தவ." என கட்டளையிட்டார் அந்த பெண்.



"மோணி...யா?" என்றவாறு ஆதியும், அவன் குடும்பமும் சந்தேகமாக அவர்களை திரும்பி பார்த்தனர்.


அவர்களது பார்வையின் பொருளறிந்தவர்களோ!"என்ன எல்லாரும் ஒரே மாதிரி பாக்கிறீங்க?


ஓ..! இவளை மோணின்னு கூப்பிட்டதினாலயா? ஆமா இவ மோணி தான்.. மோணிஷா... இது நாங்க இவளுக்கு வைச்ச பேரு." என்றவரை அவர்கள் இன்னமும் நம்பாது பார்க்க.



"பாதியில இருந்து சொன்னா புரியாது... உங்க அம்மு சொன்னா புரியும்." என்
றார்.



சில வினாடிகள் எப்படி ஆரம்பிப்பதென்று தெரியாது, தலை குனிந்திருந்தவள் உடலானது குழுங்கி அவள் அழுவதை வெளிப்படுத்த,
அதை கண்ட வீட்டினர், அவள் அழுவதன் காரணம் தெரியாது முழித்திருந்தனர்.
ரஞ்சனி மட்டும் அவளருகில் சென்று அமர்ந்தவள்,




"என்னம்மா ஆச்சு? ஏன் திடீர்ன்னு அழற? நீ அழறத பாத்தா.. எனக்கு பயமா இருக்குடா! அழாம என்ன ஏதுன்னு சொல்லுமா?" என அவரும் பதறிப்போய் கெஞ்சலாய் கேட்க.



"என்னத்தங்க சொல்ல சொல்லுறீங்க? பத்து நாளைக்கு முன்னாடி இவ காலேஜ்க்கு போறப்பாே, வண்டி ஆக்ஷிடன் ஆகிடிச்சு.


தலையில பலத்த அடிபட்டு, மூணு நாள் மயக்கம் தெளியாம ஐசியூ ல இருந்தா...
முணு நாளைக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா உடம்பு குணமாகி மயக்கம் தெளிஞ்சிச்சு.
எங்க பொண்ணுக்கு குணமாகிடிச்சுன்னு சந்தோஷத்தோட அவள பாக்கபோனோம்.


என்னோட அம்மா, அப்பா எங்கன்னு எங்களையே பாத்து கேக்க ஆரம்பிச்சிட்டா...
எங்களுக்கு எதுவுமே புரியல்ல.
என்னடா..! நாங்க தானே உன்னோட அப்பா, அம்மா என்றோம்.



ஹாஸ்பிடல்ல கிடந்த எல்லாத்தாளையும், எங்கமேல தூக்கி வீச ஆரம்பிச்சிட்டா..
அப்புறமா இவளை அடக்க மயக்கமருந்தால தான் முடிஞ்சிச்சு. பிறகு கொஞ்சம் கொஞ்சமா உண்மைய எடுத்து சொன்னோம். அப்புறம் தான் கொஞ்சமா தன்னோட நிலமை புரிஞ்சு, சமாதானம் ஆ
னா...
இந்த ஒரு வாரமா இப்பிடித்தான் அப்பப்போ அழுதிட்டிருக்கா... கேட்டா நான் என் ஊருக்கு போகணும்.. என் அத்தை மாமாவ பாக்கணும்ன்னு ஒரே அடம்."



"இத்தனை நாள் அவ அத்த மாமா யாருன்னு தெரியாம, தேடி அலைஞ்சு நேத்து தான் கண்டுபிடிச்சோம்." என்றார்.
இத்தனை கதைகளையும் நம்பமுடியாது கேட்டுக் கொண்டிருந்தவர்கள்..



"என்னங்க புதிர் போடுறீங்கள்?
அம்மு உங்ககிட்ட எப்பிடி வந்தா? நீங்க சொல்லுறதெல்லாம் வைச்சு பாக்குறப்போ, அம்முக்கு புத்தி சுவாதீனம் இல்லாமலா, இத்தனை வருஷம் உங்க கூடவா இருந்தா?
அதுக்கு என்ன காரணம்?
இவள இந்த நிலமையில விட்டிட்டு.. அண்ணனும் அண்ணியும் எங்க போனாங்க?" என எதுவுமே புரிபடாமல் தொடர் கேள்விகள் கேட்டாள் ரஞ்சினி.



"அதை அவளே சொல்லுவாங்க." என்றவர்.



"மோணி அத்த கேட்குறாங்கல்ல சொல்லும்மா...!" என்றவர் பேச்சை மீற முடியாது
ரஞ்சனி புறம் திரும்பயவள்,



"அம்மாவும். அப்பாவும் எங்கள வீட்டு போயிட்டாங்கத்த." என
அழ..



"என்னம்மா சொல்லுற? எங்கள விட்டு போயிட்டாங்கன்ன என்ன அர்த்தம்?" என உடல் நடுங்க ரஞ்சனி வினவ.


"ஆமாத்த.....
அன்னைக்கு உங்கள ஊருக்கு வண்டி ஏத்திட்டு வந்திட்டிருந்தோம்..
அப்போ நல்ல மழை வேற பெய்திட்டிருந்திச்சு.. அப்பா கார் ஓட்டிட்டு வந்திட்டிருந்தப்போ, யாரோ மூணு பேரு அவங்க காரை குறுக்க விட்டு.. வழிமறிச்சி நின்னவங்க,


திடீர்ன்னு பெரிய பெரிய ஆயுதங்களோட அம்மாவையும், அப்பாவையும் துரத்த ஆரம்பிச்சிட்டாங்க.
அந்த மழையில, என்னை தூக்கிட்டு எங்க ஓடுறதுன்னு தெரியாம பக்கத்தில இருக்கிற கிரவுண்ட்டுக்குள்ள நுழைஞ்சு கொஞ்ச நேரம் கூட இல்லை.



அப்பாவை இரண்டுபோர் பிடிக்க, எங்கிருந்தாே முகத்தை மூடிக்கட்டிட்டு வந்த இன்னொருத்தன், அப்பாக்கூட என்னல்லாமோ கோபமா பேசிட்டே.. அப்பாவை வெட்டிட்டான்.


அதை பாத்திட்டு அப்பாக்கிட்ட ஓடின அம்மா.. கடைசி நேரத்தில என்னையாவது, அந்த கொலைகாரங்ககிட்டருந்து காப்பாத்திடுவோம்ன்னு நினைச்சாங்க போல." என விம்மியழுதவள்,



"கிரவுண்டோட மெயின்றோட் கரை மதில்லை ஏத்தி விட்டிட்டு, அம்மா அப்பாவ கூட்டிட்டு வறேன். நீ சீக்கிரம் குதிச்சோடு என்டாங்க.


சின்னப்பிள்ளையா இருந்தனால, என்னால அவ்ளோ தூரம் குதிக்க முடியல்ல.. அம்மா, அப்பாவ கூட்டிட்டு வந்திடுவாங்கன்னு அழுதிட்டே பாத்திட்டிருந்தேன்..

அப்போ தான் அம்மா கழுத்தை வெட்டிட்டான், முகத்தை மூடிகட்டியிருந்தவன்.

அந்த ரத்தம் என்னோட முகம் வரை பீச்சியடிச்சதை பார்த்ததும்.. நான் மயக்கமாகி றோட் பக்கம் விழுந்திட்டேன்." என முகத்தினை இரு கைகளாளும் மூடி அழுதவள்,


"என் கண் முன்னாடியே அப்பா, அம்மாவை கொண்ணுட்டாங்கத்த... அம்மா அப்பாவை கூட்டிட்டு வரேன்னு போனவங்க, அப்பிடியே என்னை மட்டும் தவிக்க விட்டு போயிட்டாங்க."
என்று கதறியவள் வார்த்தை கேட்டு அதிர்ந்தவள் உடலில் அசைவென்பது இல்லை.



கண்களோ தாரை தாரையாக நீரை உமிழ, பேச முடியாது வார்த்கைள் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டு, சிலையாகிப்போயிருந்த தாயின் நிலை அறிந்து ஓடிவந்தான் ஆதி.


"ம்மா..... அம்மா.... இங்க பாருங்கம்மா....!" என தாயின் முகத்தை கைகளில் ஏந்தியவனுக்கு தாயின் நிலை புரியாமலில்லை.




அண்ணன் மேல் உயிரையே வைத்திருந்தவளாயிற்றே.
.!
எப்போதாவது தன்னை தேடி வருவார்கள். என எதிர்பார்த்திருந்தவளுக்கு,
எப்போதும் இனி வரமாட்டார் என நினைக்கும் போது எப்படி இருக்கும்?


ஆனால் இதே நிலை நீடிக்குமேயானால் ,அதிர்ச்சி தாளாமல் அவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என பயந்து,



"அனி.... சீக்கிரம் தண்....." என கத்தியவாறு திரும்பியவன் முகத்துக்கு அருகில் தண்ணீர் கிளாஸை நீட்டியவளை நிமிர்ந்து பார்த்தான்.
வைஷூ தான்.. அவன் கேட்பதற்கு முன்னரே, இதை எதிர்பாத்தவள் போல், தண்ணீரை நீட்டியவள் கண்களானது அழுததற்கு அடையாளமாக சிவந்து தடித்திருந்தது.



அவள் உதடுகளோ இன்னமும் தன் துடிப்பினை நிறுத்த முடியாது தந்தியடிக்க.. அதை யாரும் கண்டுவிடக்கூடாது என, பற்களோடு இறுக்கியிருந்தவள் கட்டுப்பாட்டையும் தாண்டி நடுங்கியது.



இத்தனையும் மறைக்க போராடியவள் கண்களில், அப்பட்டமாக தெரிந்த வலியினை ஏனோ அவளால் மறைக்க தெரியவில்லை.



இத்தகையதொரு கதையினை கேட்டால், யார் தான் கலங்கி போக மாட்டார்கள்?
அவள் முகத்தினையே ஆராய்ந்தவாறு கிளாஸினை வாங்கினான்.


"ம்மா... இதை குடியுங்கம்மா!" என்க.

மகனை திரும்பி பாவமாக பார்த்தவர்,



"ஆதி...! உன் மாமா இனிமே நம்மள தேடி வரமாட்டாராம்டா! இத்தனை நாள் இது தெரியாம, மாமா வந்திடுவாருன்னு எதிர்பாத்திட்டிருந்திருக்கோமே!" என அழுதவரை தேற்ற வழியறியாதவன்,



"ம்மா... ப்ளீஸ்மா...!
நீங்களே இந்த மாதிரி அழுதா, அம்முவ யாரும்மா தேற்றுவாங்க?
உங்களுக்கே இந்த மாதிரி இருந்தா.. பெத்தவங்கள, கண் முன்னாடி வெட்டி கொள்ளுறத பாத்தவளுக்கு என்னமாதிரி இருந்திருக்கும்..? அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நேரத்தில, நீங்களே அழுதிட்டிருந்தா அவளுக்கு யாரும்மா ஆறுதல் சொல்லுவாங்க.?


நடந்தத மாத்த முடியாதும்மா! இத்தனை நாள் என்க கூட இல்லாதவர். இனியும் வரபோறதில்லை.. ஆனா இருக்கிறவங்கள அந்த கவலை தெரியாம சந்தோஷமா பார்த்திக்கிறதில தான்ம்மா , மாமாவோட ஆத்மா சந்தியடையும்." என்றவன் பேச்சில் அம்முவின் நிலை உணர்ந்தவர்.



தன் சோகமதை உள்ளே புதைத்துவிட்டு, கண்ணீரை அழுத்தி துடைத்தார்.


"நீ சொல்லுறது சரி தான்டா! என்னோட அண்ணா.. அண்ணி எங்கயும் போகல... அவங்க அம்மு ரூபத்தில நம்ம கூடவே தான் இருக்காங்க.



அவளை சந்தோஷமா பாத்துக்கிறது தான் இனி என்னோட சந்தோஷமும்." என அழுது கொண்டிருந்தவள் முகத்தினை கைகளில் ஏந்தி, கண்ணீரை துடைத்து விட்டு, நெற்றியில் மிருதுவாக இதழ் பதித்தார்.


"உனக்கு இனி எல்லாமுமா நான் இருப்பேன்ம்மா! அம்மா அப்பா உன்கூட இல்லன்னு கவலை இனி
எப்பவும் உனக்கு வரக்கூடாது." என்க.

கண்ணீரினூடே உதட்டை இழுத்து புன்னகைத்தவள்,

"ம்ம்..". என்பதாய் தலையசைத்தாள்.


"ஆமா நீங்க யாரு...? அம்மு எப்பிடி உங்ககிட்ட? ஏன் இத்தனை வருஷம் அம்மு எங்கள தேடி வரல்ல?" என அம்முவாேடு வந்தவர்களிடம் ஆதி வினவ.


"அதை ஏன் கேக்கிறீங்க தம்பி.
.!
கொலை நடந்த அன்னைக்கு நானும் இவரும் இவரோட அம்மா வீட்டுக்கு போயிட்டு, ஆட்டோவில ஊருக்கு திரும்பிட்டிருந்தோம்.


அப்போ தான்.. அந்த சுவரில இருந்து ஏதோ ஒன்னு விழுறது போல தெரிஞ்சிச்சு... ஆட்டோ டிரைவர் தான் ஆட்டோவை நிறுத்திட்டு பக்கத்தில போய் பார்த்தான்.


இவ தான் மயக்கமாகி கிடந்தா.. உடம்பு பூர ரத்தமா இருந்ததினால, இவளுக்குத்தான் ஏதோன்னு நினைச்சிட்டு, தூக்கிட்டு ஓடி வந்து எங்க மடியில கிடத்திட்டு, இவளை ஹாஸ்பிடல் சேர்த்திட்டு போவோம்ன்னு சொன்னாரு.
அந்த நேரத்தில என்ன செய்யுறோம்ன்னு தெரியாம, சரின்னு ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போயி ரீட்மென்ட் பண்ணோம்.


ஒருமணி நேரத்தில கண்முழிச்சிட்டா! ஆனா அவளுக்கு தான் யாருன்னே தெரியல்ல.


இவரை பாத்ததும்.. அப்பா வந்திட்டிங்களான்னு கட்டிப்பிடிச்சிட்டா.
.
அவ அந்தமாதிரி செய்ததும், இவருக்கும் அவமேல ஒரு பாசம் வந்துட்டு. அதனாலயே நம்ம கூட அழைச்சிட்டு போனோம்.


என்னையும் எந்தவிட தடங்கலும் இல்லாம அம்மான்னு கூப்பிடுவா... எனக்கு இவளவிட சின்ன வயசில ஒரு மகளும் இருக்கா
..

அவளை தங்கச்சியாவே இவ ஏத்துக்கிட்டதனால, நாங்களே யாராவது இவளை தேடி வரவரைக்கும் வைச்சிருப்போம்ன்னு வைச்சிருந்தோம்.

பத்து நாளைக்கு முன்னாடி வரை இவ யாருன்னும் தெரியாது, யாரும் இவளை தேடியும் வரல்ல.. இப்போ நடந்த ஆக்ஷிடன்ல தான்.. சின்ன வயசில நடந்த எல்லாமே நினைவு வந்து சொன்னா.
அதனால தான் உங்க வீட்ட தேடி புடிச்சு அழைச்சிட்டு வந்தோம்.


உங்க பொண்ண.. உங்ககிட்டயே ஒப்படைச்சிட்டோம். அப்போ நாங்க கிளம்புறோம்." என எழுந்து கொள்ள,


"ஏன் இன்னைக்கே..? ஒரு நாள் தங்கிட்டு போகலாமே!" என பிரகாஷ் கேட்க.


"இல்லங்க.. எங்க பொண்ணு தனிய இருப்பா.. நாங்க வறோம்." என்றவர்கள்.


"மோணிம்மா..! நாங்க வரோம்டா! பார்த்து பத்திரமா நடந்துக்கோ." என்றவாறு விடைபெற்றனர்.


அதன் பின்னர் அம்முவை தாங்கு தாங்கென்று ரஞ்சனி தாங்குவதை பார்ப்பதற்கு, ஏனோ மாடியில் நின்று அத்தனையையும் வேடிக்கை பாத்துக்கொண்டிருந்த அனிக்கும், வைஷூவிற்கும் பிடிக்கவே இல்லை.


வேகமாக தன் அறைக்குள் நுழைந்து கொண்ட வைஷூவின் சிந்தனைகள் எங்கெங்கோ போய் அவளையே பயமுறுத்தத் தொடங்கியிருந்தது.
அடுத்து என்னாகும்? என்பதை அவளால் கொஞ்சமும் கணிக்க முடியாது, கை நகங்களை பற்களால் பிய்த்து துப்பியவள் செல்போனானது அழைக்க.


திரையில் தெரிந்த இலக்கத்தை கண்டுவிட்டு வேகமாக ஆன் செய்தவள்.


"மாமா....! " என்றாள் பரிதவிப்போடு.


"என்னம்மா நடந்திட்டிருக்கு அங்க?
இது என்ன...? நாமளே எதிர்பாராத திருப்பமா இருக்கு. ஆமா...! எங்க இருந்து இந்த அம்மு வந்தா?." என
எதிர்முனையில் கேட்க.


"தெரியல்ல மாமா! எனக்கென்னமோ பயமா இருக்கு.. ஆழம் தெரியாம காலை விட்டுட்டேனோ....?
ஆனா மாமா அவ சொன்ன....." என எதுவோ சொல்ல வந்தவளை, பேசவிடாது குறுக்கே புகுந்தவர்,


"வைஷூம்மா....! நீ எந்த விளக்கமும் சொல்லிட்டிருக்க வேண்டாம்.. எனக்கு எல்லாமே தெரியும்.


எனக்கென்னமோ நடக்கிறத பாத்தா நமக்கு இது அவ்வளவு நல்லதில்லையோன்னு தோணுது.


யாருகிட்டையாவது மாட்டிக்கிறத்துக்கு முன்னாடி, அங்க இருக்கிறவங்களுக்கு ஏதாவது காரணம் சொல்லிட்டு, நாளைக்கு பொழுது சாயுறத்துக்குள்ள ஊரை விட்டு நீ கிளம்பு." என கட்டளையிட,


"எப்பிடி மாமா...? வந்த வேலை பாதியில நிக்குதே! என்ன ஏதுன்னு உண்மை எதுவும் தெரியாம எப்பிடி?"


"வைஷூம்மா இங்க பாரு! உன்னோட வேலை எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு எனக்கு நீ முக்கியம்....! இன்னைக்கு இல்லன்னாலும் எப்பவாச்சும் நீ நினைச்சதை செய்துக்கலாம்.

ஆனா இப்போ சறுக்கிட்டோம்ன்னு வையி...! மொத்தமா எல்லாம் போயிடும்.


சுவர் இருந்தா தான்டா சித்திரம் வரைய முடியும்..
மாமா எதையும் யோசிக்காம சொல்ல மாட்டேன், நாளைக்கே கிளம்புற வழிய பாரு!" என கட்டளையிட்டார்.



"ம்ம்... சரி மாமா! ஆனா அந்த அம்மு......." என இழுக்க,


"அதை பத்தி நீ கவலை படாதடா! அது தான் ஆதிக்கு உண்மை தெரிய வந்திடிச்சே.
அதை அவன் சும்மா விடுவான் என்டா நினைக்கிற? யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு வேலைய முடிச்சிட்டு அப்புறம் வந்து சொல்லுவான்.


அம்முவோட அப்பா.. அம்மாவ கொன்னது யாருன்னு.
கண்டதை போட்டு மனச குழப்பிக்காத."


"சரிடா! ரொம்ப நேரம் பேசமுடியாது. யாராவது ஒட்டுக்கேட்டா.. எல்லாம் முடிஞ்சிடும். மாமா வைச்சிடுறேன். சொன்னத மறந்திடாத." என்று போனை வைத்து விட்டார் அவர்.



தொடரும்....
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
மர்மமா இருக்கே திடீர்னு வைஷு மாமா ஒருத்தர் பேசுறாரு ஆதிக்கு எல்லாம் தெரிஞ்சுடுச்சுன்னு சொல்லறாரு 😲😲😲😲😲😲🤔🤔🤔🤔🤔
 
Top