• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

34. இருளில் ஔிரும் தீபமானாய்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
சொன்னது போல் இரண்டு நாட்களிலேயே பத்திரப்பதிவை தன் பெயரில் மாற்றியவன், இத்தனை நாட்களின் வரவு செலவு கணக்குகள் எந்த முறையில் நடந்தது, இப்போது அவற்றை எப்படி மாற்றி அமைக்கலாம், தோட்டத்தை எப்படி விரிவு படுத்தலாம், என்று ஒவ்வொரு விடையமாக பார்த்து பார்த்து செய்வதிலேயே அவனது நாட்கள் நகர, அதனோடே காலநேரம் பாராது ஒன்றித்துப்போனான்.



அன்று சின்னவளை ஸ்கூல் தயார்படுத்துவதற்கு எழுப்பினாள் வதனி.



அவளோ பெட்சீட்டினை தலைவரை இழுத்து மூடியவாறு கிடக்க,



"குட்டிம்மா! அடம்பிடிக்காம இப்போ எழுந்துக்க போறியா இல்லையா?"



"மாட்டேன் போ!.." என்று சிணுங்கினாள் சின்னவள்.



"காலங்காத்தால அடி வாங்காம எந்திரிடி! எத்தனை தடவை தான் எழுப்பறது, எழுந்திரு!" என்றவாறு பெட்சீட்டை இழுக்க, உள்ளிருந்தவாறே தாயின் கையை தட்டி விட்டவள்,



"நான் இன்னைக்கு ஸ்கூல் போக மாட்டேன்னா மாட்டேன் தான். போ!." என்று சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி அவள் அடம்பிடித்தாள்,



"நேற்றையில இருந்து நீ இதே அடம் தான்டி பண்ணுற,



இப்போ மட்டும் நீ எந்திரிக்கல, அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.



வர வர உன் பழக்கம் பத்து பைசாவுக்கு பெறாம போயிட்டிருக்கு, எங்க இருந்துதான் இந்த பழக்கம் வந்திச்சோ? நேரமாகுது முதல்ல எந்திரி" என்றாள் கோபமாக,



"மாட்டேன் போ!." என்று அழுபவள் போல் சொல்ல,



"நானும் சொல்லிட்டிருக்கேன், இரு உனக்கு வாயால சொன்னா புரியாது, பேசவேண்டியது பேசினா, சொல் பேச்சு கேப்ப," என்று கோபமாக திரும்பி வெளியேற,



பெட்சீட்டினை மெதுவாக விலக்கி வதனியை தேடியவள், அவள் இல்லை என்றதும், தலையினை சற்று சரித்து தந்தை படுத்திருந்த இடத்தினை பார்த்தாள்.



சின்னவளின் திருட்டு தனத்தினை கவனித்த சூரியவுக்கு சிரிப்பே வந்துவிட்டது.



நன்கு உறங்கிக் கொண்டிருந்தவனது தூக்கத்தை தான் இருவரும் சத்தமிட்டே கலைத்து விட்டார்களே!



வழமையாக அவன் எட்டுமணிவரை தூங்குபவன், இன்று வழமைக்கு மாறான சத்தத்தில் கண்விழித்தவன், அவர்கள் பேச்சை கூர்ந்து கவனிக்கும் போது தான் சின்னவள், ஸ்கூல் போகமாட்டேன் என அடம்பிடித்த போர்வைக்குள் புகுந்து கொண்டாள்.



'ஏன் இவ இன்னைக்கு அடம்பிடிக்கிற? என நினைத்தவன் நடப்பவற்றை யோசனையுடனே கவனிக்கத்தொடங்கினாள்.



எப்போதுமே அஞ்சலிக்கு ஸ்கூல் போவதென்றால் பிடிக்கும்.



படிக்கிறாளோ இல்லையோ, நண்பர்களோடு விளையாடுறதுக்காகவே ஓடிவிடுவள்.



அவளை எழுப்புதவற்கு தான் வதனி போராட்வேண்டுமே தவிர, எழுந்து விட்டால் தனது வேலைகளை வதனிக்கு சிரமமில்லாமல் தானே செய்து கொள்வாள்.



இன்று அடம்பிடிக்கும் அஞ்சலி வித்தியாசமாக தெரிய, கண்டிப்பா ஏதோ காரணம் இருக்கும் என நினைத்தவன், வதனி வெளியேறும் சமயத்திற்காக காத்திருந்தான்.



சூரிய சிரிப்பதைக் கண்ட அஞ்சலி அவனை முறைத்தவாறு மீண்டும் போர்வையை முகம்வரை இழுத்து மூடிக்கொண்டாள்.



போர்வைக்கு மேலாக வருடியவனோ, "குட்டிம்மாக்கு என்னச்சு? ஏன் ஸ்கூல் போக மாட்டேன்னு அடம்பிடிக்கிறா?," என செல்லம் கொஞ்சினான்.



அவனது கையை கோபமாக தட்டிவிட்டாள்.



"அம்மாடியோ! குட்டிம்மாக்கும் இவ்வளவு கோபம் வருமா?



அப்பா என்ன பண்ணிட்டேன்னு அப்பா மேல குட்டிம்மா கோபப்படுறா?" என அதே கொஞ்சலோடு கேட்டான்.



"நீங்க ஒன்னும் என்கூட பேசவேண்டாம், இப்பல்லாம் என்மேல உங்களுக்கு பாசமே இல்ல. அப்புறமெதுக்கு என்கூட பேசுறீங்க?" என்று சின்னவள் முறுக்கிகொள்ள,



"யாரு சொன்னா, என் பொண்ணு மேல அப்பாக்கு பாசமில்லன்னு....?"



"யாரும் எனக்கு சொல்லத்தேவையில்லை. எனக்கே தெரியும், நான் ஒன்னும் சின்னக் குழந்தையில்லை. நான் இப்போ பெரிய பொண்ணாகிட்டேன். எனக்கு இப்போ எபிசீடி லாம் எழுதத்தெரியும். என்னை யாராலயும் ஏமாத்த முடியாது?" என்று உள்ளிருந்தவறே அவள் பதிலுரைக்க,



"ஓ..... என் குட்டிமாக்கு எபிசீடி லாம் எழுதத்தெரியுமா? அப்போ பெரிய பொண்ணுதான்.



சரி அப்போ எதுக்கு அம்முக்குட்டி ஸ்கூல் போக மாட்டேன்னே அடம்பிடிக்கிறா? ஏதாவது வீட்டு பாடம் எழுதலையா?" என்றவாறு போர்வையின் ஓரத்தை சாதுவாக விலக்கி தலையை மாத்திரம் உள்ளே விட்டு கேட்டான்.



"இல்லை...." என்பதாய் தலையசைத்தவள் உதடுகளோ கோபத்தில் பிதுங்கி நின்றுகொண்டது.



அவளது கோபமதை ரசித்தவன், "அப்போ எதுக்கு குட்டிம்மா போகமாட்டேன் என்கிறா?



ஆ... அப்பா கண்டு பிடிச்சிட்டேனே! டீச்சர் குட்டிமாக்கு அடிச்சிட்டாங்க. அதனால தானே குட்டிம்மா அடம்பிடிக்கிறா?அப்பிடி தானே!" என்று அவனும் குழந்தையாக மாறிப்போய் கேட்க,



அவனது பதிலில் ஏமாற்றமாகிப்போக சோகமானவள் தலகணிமேல் முகத்தை அழுத்தி கொண்டாள்.



"இதுவும் இல்லையா? என்னவா இருக்கும்?" என சிந்தித்தவனுக்கு எதுவும் தெரிவாதாக இல்லை.



போர்வையை விட்டு வெளியே வந்தவன்,



"ஏதாவது வேணும்ன்னா கேக்கலாம், அப்பா வாங்கி தந்திடுவேன். எதுவும் சொல்லாமல் இருந்தா நான் எப்பிடி கண்டுபிடிப்பேன்?" என்று இம்முறை சூரிய முறுக்கிகெள்ள,



போர்வையை நீக்கி தந்தையை பார்த்தவள்,



"என்ன கேட்டாலும் தருவீங்களா?" என்றாள்.



"பார்ரா! பொடி வைச்சு பேசுறத, சரி கேளு வாங்கி தரேன்." என்றான் சிரித்தவாறு.



"என் ஃப்ரெண்ஸ் எல்லாருமே வெளிச்ச கூடு பாக்கப்போறாங்க, ஆஷாக்காவ துளசி அத்தையும், மாமாவும் கூட்டிட்டு போறாங்க. என்னை தான் எங்கேயும் அழைச்சிட்டு போறதில்ல.



அத்த கூட்டிட்டு போறேன்னு சொன்னாலும், அம்மா வேண்டாம்னு சொல்லிடாடாங்க.



ஆஷாக்காவும் சின்ன பொண்ணு தானே! அவங்க போகலாம் நான் ஏன் போககூடாது?



எனக்கு இந்த அம்மா வேண்டாம்ப்பா, வேற அம்மா வாங்கிப்போம்." என்று முகத்தை ஊர் என்று வைத்து சொல்லும் தன் மகளின் பேச்சின் அழகில் மயங்கித்தான் போனான் சூரிய.



"ஓ...... இதுக்குத்தான் ஸ்கூல்க்கு போகமாட்டேன்னு போராட்டம் பண்ணுறீங்களா? அம்மா என்னடா அழைச்சிட்டு போகமாட்டேன்னு சொல்லுறது! அப்பா எதுக்கிருக்கேன்? நான் அழைச்சிட்டு போறேனே!" என்றான்.



தந்தை அவ்வாறு சொன்னதும், "உண்மையாவாப்பா?, நம்மளும் வெளிச்ச கூடு பாக்க போறோமா?" என்று துள்ளளுடன் கேட்டவள் முகம் அடுத்த நொடி வாடிப்போனது.



அவளது முகமாற்றத்தை பார்த்தவன், "எதுக்கு குட்டிம்மா சோகமாகிட்டா? அப்பா தான் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டேனே?"



"இல்லை! நீங்க பொய் சொல்லுறீங்க, நீங்க தான் இப்போ வேலை வேலைன்னு போயிடுவீங்களே! இப்பல்லாம் நீங்க பாசமா பேசுறதில்லை, விளையாடுறதில்லை,



வேலையினால எங்கள எங்கையும் கூட்டிட்டு போக உங்களுக்கு நேரமே வராதாமே!." என்று சின்னவள் கூறியதும்,



சூரியவிற்கும் ஒரு மாதிரியாகிவிட்டது.



அவள் சொல்வதும் உண்மைதான். கடந்த மாதம் முழுவதும் அவன் குடும்பத்தில் எந்தவித அக்கறையும் காட்டவில்லை. வேலை வேலை என்றே அதன் பின்னே ஓடிக்கொண்டிருந்தான்.



ஆனால் அவனிலும் தவறில்லை. அனுபவமில்லாத ஒரு தொழிலை தொடங்கும் முன் அதை முழுமையாக அறிந்தால் தானே நாளை எந்த சிக்கலும் இல்லாமல் அவனால் வழிநடத்த முடியும். ஆனால் சின்னவள் தன் அன்புக்காக எந்தளவு ஏங்கியிருக்கிறாள் என்பது அவள் பேச்சினில் தெரிய.



"இங்க பாருடா குட்டிம்மா பெரிய பேச்செல்லாம் பேசுறா! அப்பாக்கு வேலைதான்ம்மா, அதுக்காக அப்பாக்கு என் செல்லத்துமேல பாசமில்லன்னு ஆயிடுமா?
இந்த உலகத்திலையே என் குட்டிமா மேல அம்மாக்கு அடுத்ததா அப்பா தான் பாசமா இருப்பேன்.



அது சரி அப்பாக்கு நேரமில்லை, அப்பா ரொம்ப பிஸிணு யாரு சொன்னாங்க?" என கேட்டான்.



"அம்மா.......!
நம்மளும் வெளிச்சக்கூடு பாக்க போலாமான்னு நேத்தே கேட்டேன், அப்பா பிஸி அதனால போகமுடியாதுன்னு சொல்லிட்டாங்கப்பா." என்றாள் உதட்டை பிதுக்கி,



"இன்னைக்கு நைட்டுக்கு வெளிச்சக்கூடு பாக்க போறோம். ஓகேவா? இப்போ பெரிய மனுஷிக்கு சந்தோமா?" என அவளது கன்னத்தை கிள்ளி கேட்க.



"உண்மையாவாப்பா? அப்பிடினா பிராமிஸ் பண்ணுங்க," என்று எழுந்து அமர்ந்தவள் கையினை நீட்ட, அவளது சந்தோஷம் கண்டு,



"பிராமிஸ்டா!.." என்று சத்தியம் செய்தவன்,



"ஆனா இப்போ அடம்பிடிக்காம ஸ்கூல்க்கு போகணும்." என்று அழுத்தமாக சொன்ன மறு நொடியே, தந்தை வயிற்றில் ஏறி அமர்ந்தவள், அவனது கன்னங்கள் இரண்டையும் பிடித்து ஆட்டி,



"அப்பான்னா அப்பா தான். அம்மா தான் கூடாது, சீக்கிரமா புது அம்மாவை மாத்திடலாம்ப்பா!" என்று தந்தையை செல்லம் கொஞ்சும் அதே நேரம்,



கையில் குச்சியோடு உள்ளே வந்த வதனி சின்னவள் இறுதி பேச்சு காதில் விழ,



"சொல்லுவேடி! இதில்ல இன்னும் சொல்லுவ, நீ இப்பிடி சொல்லுறத்துக்காகத்தான் இத்தனை கஷ்டங்களை தாங்கினேன் பாரு?
செல்லம் கொஞ்சினது போதும். முதல்ல ஸ்கூல்க்கு ரெடியாகு," என்று சின்னவள் பேச்சில் வந்த கோபத்தை அடக்கத்தெரியாமல் வார்த்தையில் காட்டவும், சின்னவளோ பயந்தவாறு சூரியவை பார்த்தாள்.



"எதுக்கு இப்போ அப்பாவை பாக்கிற? யாரு சிபாரிசு பண்ணாலும் இன்னைக்கு நீ ஸ்கூல் போய்தான் ஆகணும்." என்ற



அவளது பேச்சை காதில் வாங்காதவள் அவனது காதுகளுக்குள் எதுவோ சொன்னாள்.



அவனும் சிரிப்பினூடே சம்மதாமாய் கண்களை மூடித்திறந்ததும் தான் அவன் வயிற்றில் இருந்து எழுந்து கொண்டாள்.



"பெரிய சிதம்பர ரகசியம், அது இவனுக்கு புரிஞ்சிட்டாலும்? புரியலனாலும் கண்ணசைச்சே நல்லா சமாளிச்சிடுறான்." என்றவாறு சின்னவள் கையை பிடித்து இழுத்து சென்றாள்.



சூரிய முன்கூட்டையே சொன்னதின் படி வதனியும் தான் தினமும் தோட்டத்தொழிலாளர்களுக்கு கொடுக்கும் சாப்பாட்டை நிறுத்தி விட்டாள். அதனால் நிதானமாகவே தன் வழமையான பணிகளை செய்தவளுக்கு, இப்போது மதியம் கூட சிறு தூக்கம் போட்டுவிட்டு எழுந்து கொள்வதற்கு நேரம் அமைந்தது.

மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு


சிறிது கண்ணயர்ந்தவள், மாலை நான்கு மணியளவிலேயே கண்விழித்தாள்.



எழுந்தவள் குட்டிம்மா தூங்குவதைக்கண்டு, அவள் தூக்கத்தை கெடுக்காமல் மெதுவாக எழுந்து தனது வேலைகளில் கவனமானாள்.



பின்னே.......! சின்னவள் எழுந்தாளேயானால் வெஷாக் பார்க்க போகவேண்டும் என்று அடம்பிடிப்பாளே!



இந்த சமயம் தானே துளசியும் தயாராவாள், அவளை கண்டுவிட்டாளேயானால் தன் பாடு திண்டாட்டம். என நினைத்தவள்,



முகத்தினை அலசிவிட்டு,



மதியம் சமையலின் பின் இருந்த பாத்திரங்களை கழுவி அதனிடத்தில் அடுக்கி, இரவு உணவாக எதை செய்வதென சிந்தனைக்குள் இருந்தவளை கதவு தட்டும் சத்தமே கலைத்தது.



"கதவே உடைஞ்சு வர அளவுக்கு யாரு தட்டுறது? இவவேற இந்த சத்தத்திலயே எழுந்திட்ட போறாளே!" என ஓடிச்சென்று கதவை திறந்தவள் சூரியவை கண்டதும்,



"இவனா? இவன் எப்பவும் பொழுது சாய்ஞ்சதுக்கு அப்புறம் தானே வருவான். இன்னைக்கு என்ன வேளையாட?
இவன் குரல் கேட்டி குட்டிம்மா எழுந்திடுவாளே!." என்று நினைத்தவள் சூரியவிற்கு வழிவிடாது வாசலிலேயே நிற்க,



வேண்டும் என்றே அவளை முட்டிக்கொண்டு ஒட்டி நின்றவன் உரசலில் சிந்தனையை கலைத்தவள், அவன் நெருக்கம் கண்டு, அன்று முற்றத்தில் நடந்தது நினைவு வர, அவசரமாக விலகி நின்று கொண்டாள்.



அவளது பதட்டத்தை கண்டு இதழ்களை புன்னகையினை உதிர்க்க, புருவங்கள் இரண்டையும் உயர்த்தி அவளது விலகலின் காரணத்தை சைகையால் கேட்டு, போற போக்கிலே ஒற்றை கண்ணடித்து அவள் மனதை கலைத்து விட்டே குட்டிமாவை நாடிச்சென்றான்.



அவனது சீண்டலையும் புன்னகையினையும் தன்னை மறந்து ரசித்து நின்றவள், அவன் அஞ்சலி தூங்கும் அறையை நாடிச்செல்வதை உணர்ந்து

'


ஐயோ இப்போ எதுக்கு அவகிட்ட போறான்? அவளை எழுப்பிட்டு வேலைன்னு இவன் போயிடுவான். அப்புறம் வெஷாக்குக்கு கூட்டிட்டு போன்னு அடம்பிடிப்பாளே!



பிறகு நான் தான் அவகூட மல்லுக்கட்டணும்.' என நினைத்தவள் சத்தம் எழுப்பாது அவன் முன் ஓடிச்சென்றவள்,
அவனை முன்னேற விடாது வாசலுக்கு குறுக்கே கைகளை விரித்து வழிமறித்து நின்றாள்.
அவளுக்கும் அவனுக்குமான ஒரு அடியேயான இடைவெளியில்
திடீரென வழிமறிப்பாள் என தெரியாது நடந்தவன் அவளை மோதி நின்றதில், அவளது உடல் பாகங்களின் தீண்டியதில் சிலிர்த்தே போனான்.




"குட்டிம்மாவ எழுப்ப வேண்டாம். அவ தூங்கட்டும்" என்று அவசரத்தில் அவனுக்கு தமிழ் தெரியாததையும் மறந்து வேகமாக கூறியவளுக்கு அஞ்சலியை அவன் எழுப்பி விடக்கூடாது என்ற எண்ணம் இருந்ததே தவிர, வேறு எதுவும் கருத்தில் விழவில்லை.



தன்னை நெருங்கி நின்றவளை மயக்கும் பார்வை பார்த்தவனாே,



இன்னும் அவளை நெருங்கி நின்று, அவளது இடையினை வளைத்து தன்னோடு இறுக்கியவன்,
அவள் முகத்திற்கு நேராகக்குனிந்து அவளது கன்னத்தினை தன் உதட்டினால் பூவினை வருடுவது போல் இதமாக உரசி, காதுவரை உதட்டினாலே ரோந்து பயணத்தை நீட்டியவன்,
காது மடலினை பல்படாது இதழ்களால் கவ்வி இழுத்து, அவளது நெருக்கம் தந்த உஷ்ணத்தை அவள் காதுக்குள் மூச்சுக்காற்றாய் அவளுக்கு உணர்த்தியவன்,



"எனக்குத்தான் தமிழே தெரியாதே!" என்று ஹஸ்கி வாய்சில் கிறக்கமாகவே அவள் காதுகளுக்குள் ரகசியம் சொன்னான்.
அவனும் சராசரி மனிதன் தானே! பெண்ணவளின் மென்பாகங்களின் தீண்டலினால் அவனுள் ஆண்மையின் சிலிர்ப்பு உண்டாகத்தானே செய்யும்?



முதலில் அவனது தீண்டலில் கட்டுண்டவள், கன்னம் தீண்டிய அவனது இதழ்பரிசமதில் மெய்மறந்து அவனுக்குள் அடைக்கலமாகி அவனின் தீண்டல்களை ரசிக்கத்தான் செய்தாள்.



அவனது சூடான மூச்சுக்காற்றினை தொடர்ந்து, எனக்கு தமிழ் தெரியாதே! என்றதில் தான் மயக்க நிலையிலிருந்து மீண்டவள், அவனது இடைவளைத்த கையினை கடினப்பட்டு பிரித்தெடுத்து விலகி நின்றவளுக்கு கூச்சமாகிப்போக, தலையினை தாழ்த்தி கொண்டாள்.



அவளது தடுமாற்றத்தை ரசித்தவாறு சூரியவும் நிற்க,



"வதனி...." என்று துளசி அழைத்தவாறு உள்ளே வரும் அரவம் கேட்டதும்,



வதனியோ செய்வதறியாது முழிக்கத்தொடங்கினாள்.



அவளுக்கு துளசி தங்கள் இருவரது அந்த நிலையைும் பார்த்திருப்பாளோ? அன்றுபோல் இடைபுகாமல் ஒதுங்கி நின்றுவிட்டு, இப்போது வருவதுபோல் பாசங்கு செய்கிறாளோ! என்று நினைத்தவள், அன்றைய துளசியின் கேலி நினைவில் வர,



இன்றும் அதே போல் தான்



கேலிசெய்யப்போகிறாள். என்று நெளிந்து கொண்டிருந்தவள் அருகில் வந்த துளசி.



"நீ இன்னும் ரெடியாகலையா?" என்று கேட்டதும், ஏற்கனவே முழித்தவள் இவளது கேள்வி இன்னும் முழிக்க ஆரம்பித்தாள்.



"என்னடி! இந்த முழி முழிக்கிற? அப்போ நீ வெஷாக் பாக்க வரலையா?" என்றதும் சூரியவை திரும்பி பார்த்தாள் வதனி.



"என்னண்ணா நீங்களும் ரெடியாகாம நிக்கிறீங்கள்? குட்டிமா எங்க? அவளாவது ரெடியாகிட்டாளா இல்லையா?" என்று கேட்டுக்கொண்டு அவர்கள் இருவரிடமும் இருந்து பதில் வராமல் போக, வீட்டின் உள்ளே சென்று பார்த்தாள்.



"இவ என்ன வதனி தூங்கிட்டு இருக்கா? அப்போ நீங்க யாருமே வரலையா? காலையில அண்ணா சொன்னாரே நாங்களும் உங்ககூட வாறோம்ன்னு." என்றாள்.



இது எதுவும் தெரியாத வதனியின் பார்வையோ சூரியாவிடம் திரம்பியது,



அவனோ அவளை அணைத்து விடுவித்த சம்பவத்தில் இருந்து மீளாமல் இருந்தவன் வதனியை முழுங்குவதைப்போல பார்த்திருந்தான்.



அவனது பார்வையின் அர்த்தம் புரிந்த வதனி அவனது பார்வையின் வீச்சு தாங்காமல் தலைதாழ்த்தி கொள்ள,



இருவரின் செயற்பாடுகளையும் கவனித்துக்கெண்டிருந்தவள்,



'ஆகா....! சின்னவளை தூங்க வைச்சிட்டு இது தான் நடக்குதா? மறுபடியும் நான் தான் கரடியாட்டம் தப்பான நேரம் வந்துட்டேனோ?'என்று நினைத்தவள்,



'இதுங்க இப்பிடியே ரொமான்ஸ் பண்ணிட்டிருந்தா கூட்டம் அதிகமாயிடுமே! நேரத்தோடு போயிட்டு வந்தா தானே சின்னதுங்க அங்கு தூங்கி வழியமாட்டுதுங்க" என நினைத்தவள்,



"க்ஹூம்........" என்று பெரிதாக செருமி அவள்கள் கவனத்தை தன்புறம் திருப்பியவளை சூரிய முறைக்க,



"என்னண்ணா அப்போ நீங்க வரலையா? குட்டிமா ரொம்ப ஆசைப்பட்டாளே!" என்று குட்டிமாவின் பெயரை சொல்லி அவன் முறைப்பிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைத்து கூறினாள்.



குட்டிமா ஆசை என்றதும் தான். தான் எதற்காக வந்தேன் என்பது நினைவில் வர,



"ஆமா துளசி! அவ ரொம்ப ஆசைப்பட்டா, வதனியை தயாராகச்சொல்லு நான் குட்டிமாவை எழுப்பி தயார் பண்றேன்." என்றவன் தான் அவ்விடத்தில் நின்றால் சங்கடத்தினாலேயே வதனி ரெடியாக மாட்டாள் என அவள் முன் நில்லாமல் சென்றுவிட்டான்.



வதனியோ "நான் வரமுடியாது. சமையல் எதுவுமே செய்யல. நைட்டுக்கு சமைக்கணும்." என்று அடம்பிடிக்க,



"சமையல் எதுவும் தேவையில்லை. கடையில பாத்துக்கலாம்." என்று அவளும் அடம் பிடித்து கூட்டிச்சென்றாள் துளசி.
 
Top