• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

35. இருளில் ஔிரும் தீபமானாய்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
அது ஒரு பெரிய மைதானம். கூட்டமோ மாலை ஆறுமணியளவிலேயே அலைமோதத் தொடங்கியிருந்தது. மைதானத்திற்கு அரை கிலோ மீற்றருக்கு முன்னதாகவே இறக்கிவிட்ட ஆட்டோ சாரதி,
"இதுக்கு மேல ஆட்டோ உள்ள போகாது, இறங்குங்க" என்றார்,

பகல் பொழுதானது மங்கி, இருளவள் பூமியினை முழுங்க ஆரம்பித்திருக்க, ஆட்டோவில் இருந்து இறங்கியதும் சின்னவர்களின் துள்ளளுக்கு அளவே இல்லாது போனது.


ஆட்டோ இறக்கி விட்ட இடத்திலிருந்து மைதானம் வரை கல்யாணப்பந்தல்கள் போல எல்ஈடி பல்புகளின் அணிவகுப்பு, அது போதாதென வீதியின் இரு புறமும் கம்பங்கள் நாட்டப்பட்டு, தென்னை ஈர்க்குகள், மற்றும் மூங்கில் குச்சிகள் கொண்டு ஐங்கோணம், வட்டம் சதுரம் இன்னும் பல வடிவங்களில் கண்ணாடி கலர் பாலித்தீன்களால் அதை சுற்றசுத்தி நடுவில் சின்னதான ஒரு மின்குமிழ் ஔிரவிட்டு வெளிச்சக்கூடுகள் தயாரித்து அந்த கம்பங்களுக்கு இடையிடையே ஐந்து எனும் வீதம் தொங்க விடப்பட்டிருந்தது .

எந்தக்கலரில் பாலித்தீன் இருக்கிறதோ அதே கலரின் அந்த வெளிச்சக்கூடு ஔிரும் காட்சி பார்ப்பவர்களை மனதினை கொள்ளை கொண்டது.

அதிகப்படியாக கூட்டம் கூடும் என்பதை முன்கூட்டையே கணித்தவர்கள், வீதியினை இரண்டாக பிரித்து, மைதானத்திற்கு செல்வதற்காக ஒருவழியையும், மைதானத்தில் இருந்து வருவதற்காக ஒரு வழியையும் பயன்படுத்த கூடியது போல் ஏற்பாடு செய்யப்பட்டு, போலீஸ் காவல்களும் போடப்பட்டிருந்தது.


குட்டிம்மாக்கோ அவற்றை தொட்டுப்பார்க்கும் ஆசையில் தந்தையை தூக்கு என்க, கூட்ட நெலிசலில் சின்னவள் நசுங்கி விடுவாள் என நினைத்தவனும், அவளை தன் தோளுக்குமேலே இருத்தியே நாடந்தான்.


பெர்ணமி வெளிச்சத்தில் எல்ஈடி பல்புகளின் நடுவே செல்வதென்னமோ இருண்ட குகையினுள் நுழைவதைப்போல் ஒரு உணர்வு தேன்ற.

திடீரென சின்னவளோ "அங்க பாருங்க" என பெரிதாக கத்தினாள்.

அவள் கத்தலில் நடந்துகொண்டிருந்த கூட்டம் அத்தனையும் நின்று அவள் காட்டிய திசையினை ஆராய்ந்தனர்.

ஒரே நேரத்தில் பல தீப்பொறிகள் வானத்தை நோக்கி வேகமாக பறந்து "டமார்" என்ற சத்தத்துடன், வர்ண வர்ணமாய் பூவின் வடிவில் விரிந்து அந்த வானத்தினையே அலங்கரிக்க, வானமோ வர்ணக்கோலம் பூண்டிருந்த அழகினை அத்தனை கண்களும் ஆச்சரியமாக பார்க்க,
அங்கு வந்திருந்த சிறுவர்களும் கூச்சலிட்டு கைதட்டி ஆரவாரித்தனர்.

வீதியில் நின்று வானவேடிக்கை பார்த்து போய்வருபவர்களுக்கு இடைஞ்சல் செய்வதை கண்ட காவலர்கள், சூரியவை தட்டி நிற்கவேண்டாம் போய்கொண்டே இருக்குமாறு சொல்ல, வேறுவழியற்று நடந்தனர்.

கொஞ்சத்தூரம் தான் நடந்திருப்பார்கள், வீதியின் இரு புறங்களிலும், தேர்போன்ற உயரத்தில் ராட்சத வெளிச்சக்கூடுகள் உருவாக்கப்பட்டிருந்தது.
அவற்றின் நடுபகுதியில் புத்தபெருமான் தியான நிலையில் உற்கார்ந்திருக்க, அவரை சுற்றி அகோர சத்தத்துடன் கட்டேரிகள், பேய்கள் என விதவிதமான பேய் பொம்மைகள் பறந்து கொண்டிருப்பதை போல அலங்கரிக்க பட்டிருப்பதே சொன்னது, அவர்கள் மதத்திலும் பேய்களை நம்புகிறார்கள் என்று.


அருகே பெரிய கழுகு வானத்தில் பறப்பதைப்போன்று, பாவித்து தூக்கி வீசப்பட்ட யோக்கட் கப்புகளினால் உருவாக்கியிருந்தனர், இவ்வாறு பல நூற்றுக்கணக்கான ராட்சத வெளிச்சக்கூடுகள் அங்கு காட்சிப்படுத்தபட்டிருந்தது.


அதில் அதிகமான வெளிச்சக்கூடுகள் மனித பாவனைக்கு உதவாத கழிவுப்பொருட்களால் செய்யப்பட்டிருந்தது.
அவைதான் மிகவும் அழகாக இருந்தது.


இறுதியாக புத்தபெருமான் படகில் அவனது சாகாக்களுடன் இலங்கையில் வந்திறங்கிய காட்சியையும் வடிடமைத்திருந்தனர்.
அவற்றை எல்லாம் பார்த்தவாறு மைதானத்தை அடைய பத்து மணியினை கடந்திருந்தது.


அங்கோ அடுத்தடியை எங்கு எடுத்து வைப்பது என திணறும் அளவிற்கு மக்கள் கூட்டமோ அலைமோதியது.

இசை, வானவேடிக்கை, சிங்களவர்களின் பாரம்பரியமான கண்டிய நடனம். பரதநாட்டியம். என எத்தினை திரும்பினாலும் கலை நிகழ்வுகளே இடம்பெற்றுக்கொண்டிருக்க ஒவ்வொன்றையும் சிறுசிறு நிமிடங்கள் நின்று பார்த்தவர்கள்,


சற்றே நகர்ந்த பொழுதுதான் முப்பதடி உயரத்திலும், இருபதடி அகலத்திலும் கட்டம் வைக்கப்பட்டு, புத்தரின் பிறப்பிலிருந்து, இறப்பு வரை அவரது வாழ்கையினை மிக சிறப்பாக படங்களால் சக்கரவடிவில் சித்தரிக்கப்பட்டு, நடுவோ போதிமரத்தடியில் தியான நிலையில் புத்தர் காட்சியளித்தார்.


ஆம்.....! இன்றைய நாளானது அவரது வாழ்க்கையினை சித்தரிக்கும் வகையிலான நாளே.

சாதாரணமான பௌர்ணமி என்றாலே பௌத்தர்களிடத்தில் வழிபாட்டிற்கான சிறந்த நாளாகவே கருதுகின்றது, அதிலும் வைகாசி மாதத்தில் வரும் பெர்ணமி தினமானது அவர்கள் மத்தியில் மிகச்சிறப்பு வாய்ந்த நாளாகும்.

அந்த மாதத்தில் வரும் பௌர்ணமியினை தான் வெஷாக் என்று அழைப்பார்கள். இன் நாளானது புத்தரின் வாழ்க்கையினை மூன்றே நிலையில் எடுத்துரைக்கிறது.

பிறப்புநாள், தவநிலை அடைந்த நாள், மற்றையது பரிநிர்வாணம் அடைந்தநாள் . இம்மூன்றுமே ஒரே நாளில் அமைந்த நாளான இன்றைய நாளினை பௌத்தர்கள் வெஷாக் என அழைக்கின்றனர்.


புத்தரின் வாழ்கையினை விளக்குவதற்காகவே இன்றைய நாளில் பல சமய சம்பிரதாயங்கள் நிகழ்த்துவார்கள். இந்த நாளில் வெளிச்சக்கூடுகளை தம் கைகளினாளேயே தயாரித்து, வீடுகள் முழுவதுமாக தொங்கவிட்டு நடுப்பகுதியில் ஒரு மெழுகுவத்தி ஏற்றி, புத்தரை வழிபடுவது அவர்கள் மரவு.


அதை சில நிமிடங்கள் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேற,
பெருய வரிசையில் மக்கள் கூட்டாம் நெரித்தபடி நிற்பதை கண்ட துளசி, சூரியவிடம் சிங்களத்தால் எழுதப்பட்டிருந்ததை பதாகையினை காட்டி,


"அண்ணா உள்ள போய் பார்க்கலாமா?." என்று கேட்டாள்.


"வேண்டாம் துளசி ஆஷாவும், குட்டிம்மாவும் பயந்துடுவாங்க. இந்தளவு பார்த்ததே போதும் வீட்டுக்கு போகலாம்." என அவன் மறுக்க,


"ப்ளீஸ் அண்ணா! இன்னைக்கு விட்டா ஒரு வருஷம் காத்திருக்கணும். போயிட்டே போகலாமே" என்று கெஞ்சலாக கேட்டவள், வதனியிடம்,


"உனக்கும் சம்மதம் தானடி!" என்றாள்.
வதனிக்கு சிங்களம் பேசவே தெரியாது, இதில் வாசிக்கத்தெரியுமா?

"அங்க என்ன நடக்குதென்னே தெரியல, வரியான்னா என்ன சொல்ல?." என்றாள்.


"ஏய் அது பேய் குகைடி!. உள்ள போனா செம திகிலா இருக்கும். புது அனுபவமா இருக்கும்?." என்றாள் துளசி.


வதனிக்கு பேய் என்றால் சற்று பயம் தான். ஆனால் மற்றவர்கள் முன்பு தன்னை பயந்தவள் போல் கட்டிக்கொள்ள விரும்பாமல் சம்மதமாய் தலையசைக்க,


"அப்புறம என்ன? வதனியும் பாக்க ஆசைபடுறா." என வதனியை காரணம் காட்டி வற்புறுத்தினாள் துளசி.


"அது இல்ல துளசி, நான் சொன்னது நம்ம பொண்ணுங்க பயப்படுவாங்கன்னு."


"இல்லப்பா போகலாம். நான் பயப்பட மாட்டேன்." என்று ஆர்வமாய் கூறிய அஞ்சலி, ஆஷாவிடம், "நீ பயப்படுவியாக்கா?" என்றாள்.

"இல்லை" என்று அவளும் தலையசைக்க,


" சின்னதுங்களே சம்மதிச்சாச்சு பிறகென்ன? " என்றதும், வதனிக்கு தான் நடுக்கம் தொற்றிக்கொண்டது.


"ஆனா அக்கா இவ்வளவு பெரிய லைன் நிக்குதே!, இவங்க எல்லாம் போய், நாங்க போறதுக்குள்ள ரொம்ப நேரமாகிடுமே" என தன் பயத்தினை மறைத்து இந்த வழியில் தடுக்க நினைக்க,


"ஆமாடி அதெல்லாம் வேகமா போயிடலாம்." என்று கூறியவளும் தன் முடிவிலிருந்து மாறுவதாக இல்லை என்பதுபோல் வரிசையில் நின்று கொண்டாள்.


அந்த வரிசை நகர நகர வதனிக்கு பீதி தொற்றிக்கொண்டது.

அது செயற்கை குகைதான் என்றாலும் பார்ப்பதற்கு உண்மையான குகைபோல தான் இருந்தது.

பத்து பத்து நபர்களாகவே உள்ளே அனுமதிக்க பட,
துளசி, சூரிய குடும்பத்தோடு இன்னும் நான்கு நபர்கள் உள்ளே அனுப்பி வைக்கப்பட்டனர்.


உள்ளே பயங்கர இருட்டு, இருபது அடிக்கு ஒரு மெழுகுவத்தி மாத்திரமே ஔிரவிடப்பட்டு, பாதி வெளிச்சம் பாதி இருட்டாகத்தான் அந்த குகை இருந்தது.


மெழுவத்தியின் மங்கலான வெளிச்சமே அவர்களின் நிழலையே பயங்கர உருவம் போல் காட்டி பயமுறுத்திக் கொண்டிருக்க, குகையின் ஓரங்களில் மனித எலும்புக்கூடுகள், மிருகங்களின் மண்டை ஓடுகள், இரத்த கறைகள், மான் கொம்புகள் என்று பல வகையான பயமுறுத்தும் விதமாக எலும்புகள் தொங்கிக்கொண்டிருந்தன,


ஒலிபெருக்கி மூலம் நிதப்தமான இடத்தில், கொடிய விலங்குகளின் சத்தங்களும், நரியின் ஊலையும், அந்தையின் அலறல்களும், அந்த மங்கல் இருட்டில் பயத்தை அதிகரித்து கொண்டிருந்தது.


துளசியோ பயத்தில் கணவனின் கையினை இறுக பற்றிக்கொள்ள, ஆஷாவை தூக்கிக்கொண்டார் அவர்.

குட்டிம்மாவாே எந்த வித பயமும் இல்லாது தந்தை கழுத்தை கட்டிக்கொண்டு அந்த இடத்தை பார்க்க,

வதனிக்குத்தான் ஏன் வந்தோம் என்று ஆகிவிட்டது.


உள்ளுக்குள்ளே அத்தனை பயத்தினையும் மறைத்தவள் ஆதரவுக்கு கூட யாரையும் பற்றிக்கொள்ளவில்லை.


அந்தக்குகையின் நீளமோ நீண்டுகொண்டே போவதைப்போல அவளுக்கு தோன்றியது.


எப்போது முடியும் என நடந்தவள் முகத்துக்கு நேர தொங்கவிடப்பட்ட எழும்புக் கூடுகளில் ஒன்று அலறல் சத்தத்தோடு தொம் என விழுந்ததும்,
ஐயோ.......! எனக்கத்திக்கொண்டு சூரியவின் கையினை இறுகப்பிடித்தவள்,
இம்முறை வீம்பினை விடுத்து,

"வாங்க திரும்பி போயிடலாம், எனக்கு ரொம்ப பயமா இருக்கு" என பயத்தில் புலம்பத்தொடங்கினாள்.


"திரும்பல்லாம் போக முடியாது வதனி, இன்னும் கொஞ்ச தூரம் தான். வேகமா போயிடலாம்." என்று துளசி கூற,


"முடியாது! நான் போறேன்." என்று அடம்பிடித்தவளை, தன் தோளோடு அணைத்த சூரிய,


"பயப்படாத வதனி! திரும்பி எல்லாம் போக விடமாட்டாங்க, இன்னும் கொஞ்ச தூரம்தானே, நான் உன்னை அணைச்சிருக்கிறப்போ என்ன பயம்? போயிகலாம்.வா!" என்று கூறியதும், அவனது அணைப்பினில் சற்று பயம் தெளிந்தவள் அவனோடு சேர்ந்தே நடந்தாள்.


உள்ளே போகப்போக அலறல் சத்தங்கள் அனைத்துமே ஆக்ரோசமாக கேட்க,
தூரத்தினில் சில உருவங்கள் மின்னல் வெளிச்சத்தில் தோன்றி மறைவதைப்போல இருந்தது.


அத்தனையும் தலைவிரி கோலமாக முகம் எரிந்து அடையாளமே தெரியாமல் வெள்ளை உடையில் தான் வந்து மறைந்து கொண்டிருந்தது. அடுத்த அடியை முன்னோக்கி எடுத்து வைக்க துளசிக்கும் இப்போது பயமாகத்தான் இருந்தது.


ஆனால் வெளியே போகவேண்டுமானால் முன்னோக்கித்தான் செல்லவேண்டும்.
வதனி பயந்தவாறே சூரியவை ஒட்டியவாறே நடந்துகொண்டிருக்க, தூரத்தே வெளியே செல்லும் பாதை சிறு வெளிச்சம் போல் கண்ணில் பட்டது.


அதைக்கண்டவள், அந்த இடத்தை விட்டு தப்பினால் போதும் என்று சூரிய அணைப்பிலிருந்து விடுபட்டவள் வெளிச்சம் வந்த திசைநோக்கி ஓட, அவளை போகவிடாது அவள்முன் மேலிருந்து ஒரு வெள்ளை உருவம் தொபீர் என குதித்தது.


ஏற்கனவே பீதியில் இருந்தவள், தன் முன் குதித்த உருவத்தினை கண்டு மயக்கம் போட்டு அந்த இடத்திலேயே விழுந்துவிட்டாள்.


திடீரென தோன்றிய அந்த உருவத்தினை கண்டு அத்தனை பேரும் கதிகலங்கித்தான் போனார்கள்.

விழுந்த அந்த உருவம் மறு நொடியே இருட்டில் மறைந்தும் போனது.


அந்த அதிர்ச்சியில் இருந்து முதலில் மீண்டவன் சூரியதான்.
வதனி தரையில் மயங்கியிருப்பதைப் பார்த்தவன், அஞ்சலியை கீழே இறக்கி விட்டு,


"இவளை பிடி துளசி!" என்றவாறு வேகமாக சென்று வதனியை தட்டி எழுப்ப முயட்சி செய்ய,
இவர்களுடன் வந்தவர்களில் ஒருவரது கையில் தண்ணீர் இருக்கவும், அதை வாங்கிய சூரிய அவளது முத்தில் அடித்து தெளித்த சிறிது நிமிடத்தில் கண்விழித்தவளுக்கு, தான் அதே இடத்தில் இருப்பதை உணர்ந்து,


"அஞ்சலி எங்க?, முதல்ல வாங்க இங்கேயிருந்து வெளிய போகலாம்." என்று பதறியவாறு வேகமாக எழுந்தாள்.

அவளை கைதாங்கலாக பிடித்து எழுப்பியவன், கை வளைவிலேயே அழைத்துக்கொண்டு வெளிச்சம் வந்த பாதையைநோக்கி நடந்தான்.


வெளியே வந்தவன் வதனியை ஆராய, அவள் உடல் முழுவதும் வியர்த்து நீராய் வடிந்தது, கால் வேறு நடுங்கிக்கொண்டிருப்பதை பார்த்தவன், அருகே கண்டிய நடனத்தை கண்டுகழிப்பவர்களுக்காக அடுக்கப்பட்டிருந்த இருக்கையின் இறுதிவரிசையில் வதனியை இருத்தியவன், துளசியிடம்


"ரொம்ப பயந்திருக்கா துளசி. கொஞ்சம் பாத்துக்கோ! குடிக்க ஏதாவது வாங்கிட்டு வறேன்." என்று துளசியின் கணவனையும் தன்னோடு அழைத்து கொண்டு சென்றுவிட்டாள்.


அவளருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவள்,

"நீ என்னடி சின்ன குழந்தையா? இதுக்கெல்லாம் நீயே பயந்தா எப்பிடி அஞ்சலிக்கு தைரியம் சொல்லி வளர்க்கபோற? அது உண்மையான பேயா இருந்தா கூட பரவாயில்லை. பேய் போல வேஷம் போட்டு நடிக்கிறவங்கள பாத்து பயந்து மயங்கி விழுவாங்களா?" என்று கேலி பேசுவதைப்போல தேற்றவும்.


"எனக்கு சின்ன வயசில இருந்து பேய்னா ரொம்ப பயம் தெரியுமா?.." என்றாள்.

"அப்போ எதுக்குடி நான் போகலாமான்னு கேட்டப்போ, மண்டைய ஆட்டின?" என கோபமாக துளசி கேட்க.


"எல்லாருமே போவோம் என்கிறப்போ, நான் மாட்டேன்னா எனக்கு அசிங்கமா இருக்காதா? அதனால தான் சரின்னேன்." என்றாள்.


"கௌரவம்.....!" என்றவள்.

"இப்போ நார்மலாகிட்டியா? இல்லைனா இப்போவும் பயம் தெளியலையா?" என்க.

ம்ம்.. என தலையசைத்தாள் வதனி.
இவர்கள் பேசிக்கொண்டிருக்க, அருகில் ஸ்மைலி பலூன்கள் விற்கும் வியாபாரி அவர்களை கடந்து பாேவதை கண்ட ஆஷா,



"அம்மா!" என அதை பார்த்தவாறே துளசியை தட்டியவள்,
"எனக்கு அது வேணும்" என்று சென்றுகொண்டிருந்த வியாபாரியை காட்டினாள்.


"சும்மா இரு ஆஷா" என அதட்டியவள். வதனியோடு பேச்சை தொடர.
ஆஷாவோ விடுவதாக இல்லை.
அவள் அடம் கூடிப்போக, அத்தனை பேர் மத்தியில் சங்கடமாக உணர்ந்தவள்,


"இருடி! அதை வாங்கி குடுத்துட்டு வந்திடுறேன்." என்று வதனியிடம் கூறியவள்.

"வா எருமை! எங்க போனாலும் உன்னோட தொல்லை தான்." என்றவாறு ஆஷாவின் கையினை பிடித்து இழுத்தவாறு பலூன் வியாபாரியை நோக்கி ஓடினாள்.


பாவம் அவர் ரொம்ப தூரம் சென்றதனால் அவளும் அவர் பின்னாடியே செல்லவேண்டியதாயிற்று.
இங்கு வதனிக்கு தலை வலிப்பது போல் இருக்க, முன்னால் இருந்த இருக்கையின் பின்புறம் கையினை வைத்து, கைமீதே படுத்துக்கொண்டாள்.


அப்போது தான் யாரென்றே அறியாத இரு பெண்களின் உரையாடல் அவள் காதினில் விழுந்தது.


அவர்கள் பேச்சை கேட்க வேண்டும் என்று அவள் சிறிதும் எண்ணவில்லைத்தான். ஆனால் அதுவாகவே கேட்டால் அவள் என்ன செய்வாள்.


"எப்படி இருக்க?" என்ற கேள்வியை தொடர்ந்து மற்றைய பெண்மணியோ,

"வாய் வார்த்தைக்கு மட்டும் நல்லா இருக்கேன்னு சொல்லலாம்க்கா. ஆனால் என் மனசு வேதனை யாருக்கு தெரியும்?
புருஷன் ஒரு பக்கம், புள்ள ஒரு பக்கம்ன்னு இவங்க ரெண்டு பேருக்கும் மத்தியில நான் ரொம்ப நொந்துட்டிருக்கேன்.

இவரும் தன்னோட கௌரவத்தை விட்டு குடுக்க மாட்டேன் என்கிராரு, அவனும் தன் முடிவில எந்த மாற்றமும் இல்லன்னு தெளிவா சொல்லுறான்.
இவங்களுக்கிடையில நான் தான் என் பிள்ளைங்கள பறிகொடுத்துட்டு அனாதை போல நிக்கிறன்." என்று அவர் கவலையுடன் கூற,



"என்ன கமலி சொல்லுற?, அந்த பொண்ணு உன் பிள்ளையை நல்லாத்தான் மயக்கி வைச்சிருக்கா போல, ஒரு விஷயம் கேள்வி பட்டியா கமலி? உன் பிள்ளை புதுசா தொழில் தொடங்கி இருக்கானாமே?" என்க.


"ஆமாக்கா! நானும் கேள்வி பட்டேன். அவன் தான் திறமைசாலியாச்சே!. எங்க இருந்தாலும் நல்லா தான் இருப்பான்.


ஆனா அவனோட வாழ்கை தான் நல்லவிதமா அமையலையே! இவனுக்குத்தான் புத்தி பேதலிச்சுப்போய் அவதான் வேணும்ன்னு நிக்கிறான்னா, அவளுக்கு அறிவு எங்க போச்சு?


ஏதோ என் பையன் தான் தன்மேல தப்பில்லன்னு நிருபிக்க தாலியை கட்டிட்டான்னா, இது தான் சாக்குன்னு அவனை தன்கூடவே பிடிச்சு வைச்சிக்கிறதா?

இவ சரியானவன்னா என்ன செய்திருக்கணும், இது தப்பு,
நீ செய்தது நான் ஏத்துக்கிட்டேனா அவங்க போட்ட பழி உண்மையா ஆகிடும்ன்னு அவனுக்கு புத்தி சொல்லி அனுப்பாம, தன்கூடவே அவனை வைச்சிருக்கிறதா?,


அப்பன் பேரே தெரியாம தனக்கு ஒரு பொண்ணு இருக்கு, அதுக்கு இவன் அப்பான்னு சொல்ல இவளுக்கு எங்கிருந்து மனசு வந்திச்சு? இவ கண்டவனோட ஊர் மேஞ்சு அவனுக்கெல்லாம் புள்ளை பெத்துப்பா, என் பிள்ளை அதுங்களுக்கு எல்லாம் அப்பனா இருக்கணுமா?
பெண்ணா இருந்தா கொஞ்சமாவது மனசாட்சி வேணும்.


அவனுக்கு நல்லது நினைக்கிறவளா இருந்தா, இவகூட அவன் கையை பிடிச்சு போன அன்னைக்கே அவனை உன் வீட்டுக்கு போன்னு துரத்தி விட்டிருக்கணுமா இல்லையாக்கா?

எல்லாமே போச்சு! என் சந்ததியே என்களோட முடிஞ்சிடும் போல" என்று வேதனையோடு மற்றைய பெண்மணிக்கு கூறிக்கொண்டிருந்தார் மற்றைய பெண்மணி.


ஆம் அது வேறு யாருமில்லை, கமலியே தான்.
அவர்கள் பேச்சை தலைநிமிராமல் கேட்டுக்கொண்டிருந்த வதனிக்கு நன்றாக தெரியும் அது சூரியவின் தாய் தான் என்று.

அவர்கள் பேச்சில் தன் பிள்ளையை இழந்த தவிப்பு நன்றாகத்தெரிந்தது.
தான் எந்தளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்பது இப்போது தான் வதனிக்கே புரிந்தது.


"உண்மை தானே!
நான் சரியானவளாக இருந்திருந்தால் அன்றே அவனை விரட்டியிருக்கவேண்டும்.
அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டினை உண்மை என்பதைப்போல் தானே இத்தனை காலமும் சூரியவை என்னோடு வைத்திருந்திருக்கிறேன்.


என் பொண்ணையே இவனிடமே விட்டுக்கொடுக்க முடியாமல் நானே அவன்மேல் கோபப்பட்டிருக்கிறேன்.
ஆனால் விரும்பாத பெண்ணிடம் தன் மகனை விட்டுக்கொடுக்க எந்த பெற்றவளுக்கு தான் மனம் வரும்? அவர்கள் என்மேல் கோபப்பட்டு, ஆதங்கப்படுவதில் தவறு இருப்பதைப்போல் தோன்றவில்லை.


அவங்களோட பிள்ளை அவங்ககிட்ட பேசம இருந்ததுக்கு நான் தான் காரணம். அதை நினைச்சு அவங்க எவ்வளவு வேதனை பட்டிருப்பாங்க.


வெளி நாட்டில் இருந்து வந்ததும் அவனை எங்கேயாச்சும் போகவிட்டிருக்கணும், கொஞ்ச நாளைக்கு தனியே இருந்து பார்த்திட்டு, தனிய இருக்கிறதனால ஆகப்போறது எதுவுமில்லன்னு புரிஞ்சுக்கிட்டு பெத்தவங்ககிட்டையே போயிருப்பான். என நினைத்தவளுக்கு இப்போது அவனை பிரிவது சாத்தியமா என்றிருந்தது.


முன்னாடி என்றாலும் இலகுவாக அவனை விட்டுக்கொடுத்திருப்பாள். இப்போது அவளது மனம் முழுவதும் நிறைந்திருப்பவனை விட்டு கொடுப்பாளா என கேட்டால் அவளிடமே அதற்கு பதிலிருக்காது.

அப்படி அவளே விட்டு கொடுத்தாலும் அப்பா.. அப்பா.. என்று உருகும் அவளது மகள் தான் விடுவாளா?

ஆனால் அவர்களின் சுயநலத்திற்காக அவனது பெற்றவர்களை கலங்கவிடக்கூடாது. அவனது வாழ்கையும் வீணாகக்கூடாது.

பெற்றவர்கள் மனம் நொந்தால் என் சந்ததியே வேரோடு கருகிவிடும்." என அந்த சிந்தனையில் இருந்தவள் விழிகளோ குளங்கட்டி அருவிபோல் கண்ணீரை இறைக்க,


அவள் தோள்களை பற்றி ஒரு கை அவளை எழுப்பியது.

ஔிரும்............
 
Top