• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
"அம்மா கூப்பிடுறாங்க." என்றவாறு செல்லினை ஆன் செய்தாள்.

அருகருகே அமர்ந்திருந்த தம்பதியினர்.


"வைஷூம்மா நல்லா இருக்கியாடா?" என்றனர்.



"ம்ம்.. என்ன இன்னைக்கு காலையிலேயே..! எப்போவும் மதியத்துக்கு மேல தானே கூப்பிடுவீங்க?"



"ஆமாடா! ஒரு முக்கியமான விஷயம் பேசணும்... அதான்... அதுக்கப்புறம் நேரம் கிடைக்குமோ தெரியல்ல." என்றவர்கள் முகமானது வாட்டமாக காணப்பட,


"ஏன் ஆச்சு..? இரண்டு பேரும் ஒரு மாதிரியா இருக்கிங்க?" என்றாள்.


கலைவாணி பார்வையோ செல்போனில் இல்லாது சட்டென நேர் எதிரே செல்ல..



"என்னப்பா ஆச்சு? எதுக்கு அம்மா ஒருமாதிரி நடந்துக்கிறாங்க? நான் இங்க பேசிட்டிருக்கேன், அவங்க கவனம் எங்காே போகுதே..! வீட்டில யாராச்சும் வந்திருக்கிறாங்களா?" என்றாள்.



"அப்பிடி எதுவும் இல்லடா! அவ கொஞ்சம் மனசு சரியில்லாம இருக்கா.. அது தான்.."



"ஏன்ப்பா..? " என விழிகள் விரிய பதட்டமாகினாள்.



"ஊரில.. உன் பாட்டி இருந்தாங்கல்ல. அவங்க நேத்து தவறீட்டாங்களாம். அதை கேள்வி பட்டதில இருந்து இப்பிடித்தான்டா இருக்கா...


அம்மாடி...! நாங்க இப்பவே கிளம்ப போறோம்டா... எப்போ வருவோம்ன்னு தெரியல்ல... எப்பியிடியும் பதினாறாம் நாள் காரியம் முடிஞ்சதுக்கப்புறம் தான் வரதா இருக்கோம்.

அதுவரைக்கும் உன்னால அங்கயே தங்கியிருக்க முடியுமாடா!."




"என்னது பதினாறு நாளா?
இல்லப்பா வேண்டாம்... நான் இப்பவே கிளம்பி வறேன். நான் வந்ததும் மூனு பேருமே சேர்ந்து போகலாம்." என்றாள்.



எங்கே இன்னும் பதினாறு நாள் இங்கேயே தங்கவேண்டி வந்து, மாமா சொன்னது போல் பிரச்சினையில் சிக்கிக்கொள்ளவேண்டி ஆகிடுமோ என்று பயந்தவளாய்.




"வைஷூம்மா! நீ என்ன பக்கத்து ஊரிலயாம்மா இருக்க? உடனே கிளம்பி வரத்துக்கு..? அப்பிடி வரான்னாலும் ஆறு மணிநேரம் ஆகும்டா!
ஏற்கனவே அவங்க விருப்பமில்லாம உங்கம்மாவ கட்டிக்கிட்டேன்னு, அவங்களுக்கும் நம்மளுக்கும் நல்ல உறவில்ல.. இதில பெத்தவங்க இறந்துட்டாங்கன்னு சேதி சொல்லியும், இப்படி ஆடி அசைஞ்சு போனா.. அதுக்கும் அப்பாக்கு கெட்ட பெயர் தான்டா வரும்.



அதுவுமில்லாம உனக்கு பேச வராதுன்னு தெரிஞ்சப்போ, பெத்தவங்க சாபம் சும்மா விடுமா? அது இதுன்னு பேசக்கூடாதெல்லம் பேசினவங்கடா!
அதனால தானே நாம அந்த ஊரைவிட்டு வந்தோம்.



அப்போவாவது நீ சின்ன பொண்ணு.. விவரம் அவ்வளவா தெரியாது. இப்போ அப்பிடி இல்லல்லம்மா!
எங்ககூட அழைச்சிட்டு போய்.. எங்க எதிரிலயே வாய்க்கு வந்ததெல்லாம பேசி, உன் மனசு நோகடிப்பாங்க.


எங்களாலயும் அதை பார்த்திட்டு சும்மாவும் இருக்க முடியாது.


போன இடத்தில ஏன்ம்மா வீணான சண்டை?
புரிஞ்சுப்பேன்னு நினைக்கறேன்." என கூறியவர் பேச்சை கேட்டு வைஷூவால் மறு வார்த்தை பேசமுடியவில்லை.


உண்மை தானே! அவர்களாக சொல்லி தான் அவளுக்கு அவர்கள் அன்பை உணர்த்த வேண்டிய அவசியமே இல்லை. வைஷூவின் மேல் எந்தளவிற்கு பாசமிருந்திருந்தால், பிறந்த ஊரையும், சொந்த உறவுகளையும் விட்டு மொழியறியா தேசத்திற்கு ஓடி வந்திருப்பார்கள்?



"சரிப்பா...? நான் வரல்ல.. நீங்க மட்டுமே போயிட்டு வாங்க. ஆனா இங்க எப்பிடிப்பா? அது நல்லாவும் இருக்காது... நீங்க ஊருக்கு கிளம்புங்க. நான் வீட்டுக்கு வந்திடுறேன்." என்றாள்.


"வைஷூம்மா! தெரிஞ்சு தான் பேசுறியாடா! உன்னை தனிய விட்டிட்டு நாங்க எப்பிடிம்மா! வீட்டில வேலைக்கு ஆள் கூட இல்லை. துணைக்கு இருக்க.


இப்போ என்ன? இன்னும் கொஞ்ச நாள் தங்கிக்கிறேன்னு கேக்க சங்கடமா இருக்கா? நீ போன ரஞ்சினி அம்மாகிட்ட குடு! நானே பேசிக்கிறேன்." என்றார்.


மாட்டேன் என்பது போல் அவள் அசையாது அமர்ந்திருந்தாள்.



"வைஷூம்மா! உனக்கு அப்பாவோட இக்கட்டான நிலை புரியலையாடா?
ப்ளீஸ்மா.... அப்பாக்கு டைம் ஆகுதடா! சீக்கிரம் போனை குடுமா! தங்கபுள்ளல்ல." என கெஞ்சியவரை, அதற்கு மேல் கெஞ்ச வைக்க மனம் வராதவளாய்,


மாடிப்படி இறங்கியவள் கண்களில், பதிந்தது அந்த காட்சி.


ஹாேல் ஷோபாவில் இருந்து அம்முவும், ரஞ்சனியும் ஏதோ தீவிரமாக பேசியவாறு இருந்தனர்,


அம்முவோ ரஞ்சனியின் பேச்சுக்கு உடன் படாதவளாக, ரஞ்சனியை பார்க்க விரும்பாது தரையினை பார்த்தவாறு குழந்தை போல் அடம்பிடிக்க,



"இன்னும் ரெண்டு நாள் தானேடா! அத்தையால முகம் முறிக்கிறது போல எதுவும் பேச முடியாது. கொஞ்சம் பொறுத்துக்கோம்மா! அத்தை பாவமில்லையா?" என அவள் தாடையை பிடித்து கெஞ்சியவாறு இருந்த இருவரையும் கவனித்தவாறே படிகளில் இறங்கியவள்,
அவர்கள் முன் போய் நிற்க,




"வாம்மா வைஷூ." என்றவருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. எங்கே அம்முவின் பேச்சை அவள் கேட்டிருப்பாளோ என்று.


அவளோ அதை பெரிது படுத்தாது, போனை அவரிடம் தந்தவள்,



"அப்பா லைன்ல இருக்காரு ஆன்ட்டி. உங்க கூட பேசணுமாம்." என்க.




"சொல்லுங்க சார்! என்ன என்கிட்ட திடீர்ன்னு பேசுறீங்க?"


"இல்ல.. உங்க கிட்ட ஒரு உதவி! என் பொண்ணை இன்னும் ஒரு கொஞ்ச நாள் உங்க கூட வைச்சிருப்பிங்களா?" என்றவர், நடந்தவற்றை கூற,




"இதை நீங்க கேக்கவே தேவையில்ல. இன்னும் எத்தனை நாள், அவ இருக்க ஆசைப்படுறாளோ இருந்திட்டு வரட்டும்." என சிறு உரையாடலின் பின் அழைப்பை துண்டித்தார்,


செல்போனை அவரிடம் இருந்து வாங்கிக்கொண்டு திரும்பியவளை,



"வைஷூம்மா!" என தன் அருகில் அழைத்தவர்,



"ஆன்ட்டி ஒன்னு கேப்பேன்... தப்பா எடுத்துக்காம, ஆன்ட்டிக்காக செய்யிறியாடா?" என்றார் சங்கடமாக.


"ஐய்யோ ஆன்ட்டி! என்கிட்ட என்ன ஆன்ட்டி சங்கடம்? தாராளமா கேளுங்க. " என புன்னகையுடன் வைஷூ கூற,



"அது வந்துடா! நைட் பூரா அம்முக்கு தூக்கமே வரல்லையாம்.. புது இடமில்லையா...?

அதுவுமில்லாம, இங்க வந்ததில இருந்து அவளோட அம்மா அப்பா நினைவாயே இருக்காம்..


அவங்க கட்டில்ல தூங்கின அவங்க மடியில படுத்த சுகம் கிடைக்கும்ன்னு அந்த அறைய கேக்கிறாம்மா!
அவகிட்டையே அந்த அறைய குடுத்திடுவோமா..? இதில உனக்கு எந்த பிரச்சினையும் இல்லையே!" என்றவர்,



"இவ கேக்குறப்போ இன்னும் ரெண்டே நாள் தானே! நீ ஊருக்கு போனதும் மாத்திக்கலாம்ன்னு தான் சொன்னேன். ஆனா நீ போக ரொம்ப நாள் ஆகும்ல.

அதனால இவகிட்டையே மாத்தி தந்திடலாம்.
இவ இப்போ இருக்கிற அறையிலயும், எல்லா வசதியும் இருக்கும்மா! உனக்கு எந்த கஷ்டமும் இல்லை." என்க.

அவர் அப்படி கூறியது அம்முவின் புறம் திரும்பியவள், அவளை இமைகள் இடுங்க கேள்வியாக பார்த்தாள்.



இதற்கெல்லாம் சளைத்தவள் நான் இல்லை என்பதைப்போல, வைஷூவின் பார்வையை மிக எதார்த்தமாகவே எதிர்கொண்டவள்,

வேண்டுமென்றே உதட்டை சுழித்து கேலியாக நகைக்க,
பதிலுக்கு தானும் இயல்பாக தோள்களை குழுக்கி புன்னகைத்தவள்..



"அதுக்கென்ன ஆன்ட்டி?
இது அவங்க வீடு.. அவங்க ஆசைப்படியே செய்திடுவோம். இதுக்கு எதுக்கு கெஞ்சுறீங்க? நான் பாேய் என் துணிய எடுத்திட்டு வந்திடுறேன்." என்றவாறு மாடிப்படி ஏறி தன் அறைக்குள் சென்றாள்.


அவள் போவதையே பார்த்துக்கொண்டு நின்ற அம்மு,


"அத்த.. நானும் அவகூட போய் அந்த அறைய பாத்திட்டு வந்திடுறேன்." என அவள் பின்னாலேயே ஓடினாள்.


பீரேவில் அடுக்கியிருந்த துணிகளை அள்ளி, தன் பையிணுள் திணித்துக்கொண்டிருந்தவள் அருகில் இருந்த கட்டிலில் அமர்ந்தவளை, கண்டும் காணாதவளாய் உடையினை அடுக்க,



"மெத்தை சும்மா மெதுமெதுன்னு இருக்கே! படுத்தா சொர்க்கம் தான் போல." என இருந்தவாறே துள்ளி பார்த்தவள், சுவற்றில் தொங்கிய போட்டோவை கண்டுவிட்டு,



"இவங்க யாரு? ஓ..!! இவங்க தான் என்னோட அப்பா, அம்மாவா?" என அதனருகில் சென்று வருடிப்பார்த்தவள் புறம் திரும்பிய வைஷூ.
அவளை தட்டி...



"உங்க அம்மா, அப்பாவையே மறந்து போயிட்டிங்களா?. அட... ஆமால்ல. நான் தான் மறந்திட்டேன்... கொலை நடக்கும் போது உங்களுக்கு ரொம்ப சின்ன வயசா இருந்திருக்கும். அதனால பெத்தவங்க முகம் நினைவில இருந்திருக்காது." என்றவள்.




"ஆனா அப்பா அம்மாவையே மறந்த உங்களால.. நடந்த கொலை மட்டும் எப்பிடி அவ்ளோ தெளிவா சொல்ல முடிஞ்சிச்சு?" என்றாள் சந்தேகமாக.



"நீ ஏதேதோ எனக்கு சொல்ல வரன்னு புரியுது... என்னன்னு தான் புரியல. ஆனா நல்லா கிண்டல் மாத்திம் பண்றேன்னு உன்னோட நெளிவு சுழிவில தெரியுது.
ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ வைஷூ! இதுக்கெல்லாம் நான் கவலையே படமாட்டேன்." என தன் தோள்களை குழுக்கியவள்,



"இந்த போட்டோவ பாரேன்! என்னோட அம்மா ரொம்ப அழகா இருக்காங்கல்ல.. நான் ஏன் இவங்க மாதிரி இல்லாம பொறந்தேன்." என வைஷூவின் புறம் திரும்பியவள்.



"உனக்கொரு ரகசியம் சொல்லவா?" என ரகசியம் போலவே குரலை தணித்து கேட்டவள்,
எனக்கே இல்லாதா என் அம்மாவோட ஜாடை... லைட்டா உன்மேல இருக்கு வைஷூ.

ஆனா அது எப்பிடின்னு தான் தெரியல.. உனக்கு எதாவது தெரியுமா?" என்றாள்.


சின்னதாய் ஓர் புன்னகையினை அவளை நோக்கி உதிர்த்து விட்டு, தன் பையை தூக்கியவள்,


"இந்த கேள்விய என்கிட்ட கேக்கிறத விட, உன்கிட்ட கேளு! பதில் தானா தெரியவரும்." என தன் மொழி அவளால் புரிந்துகொள்ள முடிந்தால் புரிந்து கொள்ளட்டும். என செய்கையில் கூறிவிட்டு வெளியேறினாள்.


போகும் அவளையே விசித்திரமாக பார்த்திருந்தவள் உதட்டிலோ மர்மப்புன்னகை உதிர்த்து,



"எங்க ஓடிப்போற? அவ்ளோ சீக்கிரம் விட்டிடுவேனா?" என்றவாறு கட்டிலில் சரிந்துவிட்டாள்.


அப்படி இப்படி என பொழுதை நகற்றியவள், மாமன் அழைப்பை எதிர் பார்த்திருக்க, அவளை ஏமாற்றாது தொடர்பு கொண்டவருக்கு தகவலை சொன்னதும் அதிர்ந்தே விட்டார்.


அவருக்கும் இதை விட்டால் வேறு பாதுகாப்பான இடம் தெரியாததனால் கொஞ்சம் கவனத்தோடே இரு!

' அம்முவிடம் வீண் விவாதங்களுக்கு செல்லாதே! அவளே உன்னை தேடி வந்தாலும், விலகி வந்து விடு!' என பலமுறை எச்சரித்து விட்டே அழைப்பினை துண்டித்தார்.



இரவு ஒன்பது மணியினை நெருங்கிக்கொண்டிருந்தது.
எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாது வீட்டினுள் நுழைந்தவன், சாப்பிட்டு முடிந்து அனைவரும் ஹாேலில் இருந்து பேசிக்கொண்டிருப்பதை கண்டு,


"என்ன நான் இல்லன்னதும், எல்லாரும் செம ஜாலியா இருந்து பேசிட்டிருக்கிங்க போல?" என அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவன் கவனமோ, எதிலும் ஒட்டியும் ஒட்டாமலு ஓரமாக இருந்தவளிடமே பலமுறை சென்று மீண்டது.



இது அவளுக்கும் தெரியாமல் இல்லை. எங்கு அங்கேயே அமர்ந்திருந்தால் அவனது வித்தியாசமான பார்வையானது மற்றவர்கள் கண்களில் விழுந்து, வேண்டாத பேச்சிற்கு ஆழாகிடுவோமோ என பயந்தவளாய்,




"எனக்கு தூக்கம் வருது... நாளைக்கு இனியாள் கல்யாணம்.. நான் சீக்கிரமா எழுந்துக்கணும். அதனால நான் போய் தூங்குறேன்." என எழுந்து கீழே இருந்த அறைக்குள் சென்று கதவடைத்தவளை பார்த்தவன்.


"ம்மா...! வைஷூ ரூம் மாறி தூங்க போறாளா?" என்றான்.


"இல்லடா....!" என விஷயத்தை சொன்னதும், அம்முவை திரும்பி பாத்தவன் பார்வையில் இருந்தது எதுவென்றே இனங்கான முடியவில்லை.
அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காதவனாக,



"எனக்கும் ரொம்ப அசதியா இருக்கும்மா! நானும் தூங்குறேன்." என எழுந்தவனை,


"என்னடா எந்திரிச்சிட்டா! போன வேலை எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? சாப்பிட்டியா? என்ற ரஞ்சினியிடம்.



அதெல்லாம் நல்லாவே முடிஞ்சுதும்மா! இத்தனை வருஷம் மர்மமா இருந்த நிறைய விஷயம் தெரிய வந்திருக்கு." என அம்முவை ஓரப்பார்வை பார்த்தவாறே கூறியவன், கொஞ்சம் முன்னாடி தான் வர வழியில சாப்பிட்டேன்ம்மா. இப்போ நல்லா தூங்கணும்." என படியேறி சென்றான்.

இனியாளின் திருமணத்தோடு, அன்றைய நாள் கேலியும், கிண்டலுமாக அவளை இன்னும் சிவக்க வைத்து பார்த்து, மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்புவதிலேயே கரைந்து போனது.



கிட்டத்தட்ட இரண்டு நாள் கழிந்திருக்கும், மாமன் சொற்படி எந்த ஒரு விதாதங்களுக்கும் வைஷூ மூக்கை நுழைத்துக்கொள்வதில்லை. முடிந்தவரை அறையிலேயே முடங்கி விடுவாள்.


ஆனால் அடிக்கடி அனிக்கும், அம்முவிற்கும் இடையே விவாதம் எழுவதும், அதை ரஞ்சனி பிரித்து விடுவதும் என அறையில் இருந்தாலும், காதுகளில் விழும் சத்தத்தை வைத்து புரிந்து கொள்வாள்.
அன்று இப்படித்தான்..

இருவருட்குள்ளும் எழுந்த வாக்குவாதத்தை தீர்த்து, அவரவர் அறைகளுக்கு அனுப்பிவிட்டு கிச்சன் நுழையவே மதியம் ஆகிவிட்டது ரஞ்சனிக்கு.


"இதுங்கள அடக்குறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுது.
ஒன்னாவது விட்டு குடுத்து போகுதுங்களா? தொட்டதுக்கெல்லாம் வாக்குவாதம். இதற்கு மேல எப்ப சமைச்சு.. சாப்பாடு போடுறது." என விழித்தவருக்கு உதவியாக வைஷூ அவருடன் கூடிவிட,
அவளிடம் சிறு சிறு வேலைகள் வாங்கிக்கொண்டிருந்தார்.


வெளியே கதவு தட்டும் சத்தம் கேட்க.


"யாரிது நேரம் காலம் தெரியாம?" என்றவர்.



"வைஷூம்மா யாரோ வந்திருக்காங்க போல... நீ என்ன பண்றேன்னா பொரியல திருப்பிட்டிரு.. யாருன்னு பாத்துட்டு.. இப்போ வந்திடுறேன்." என்றவாறு வெளியே சென்று கதவை திறந்ததவர், எதிரே நின்றவனை கண்டு அதிர்ந்தே போனார்.


அடுத்த நொடியே தன் அதிர்ச்சியை வெளிக்காட்டாது,


"உ... உள்ள வாங்க." என அழைத்து உக்கார வைத்து, தானும் எதிர் இருக்கையில் அமர்ந்தவர்,



"சொல்லுங்க.. என்ன திடீர்ன்னு வீட்டுக்கெல்லாம்?" என்க.


"என்னம்மா நீங்க? உங்கள ஊரே கொண்டாடுது... நான் கொண்டாட கூடாதா? நானும் ஊரில ஒருத்தன் தானே!" என புன்னகையுடன் அவன் கூற,



"அ..... அது சரி தான்! நீங்க ரொம்ப பெரிய அரசியல் வாதியாச்சே! உங்களுக்கு ஆயிரம் வேலையிருக்கும்.. அதெல்லாம் விட்டுட்டு, என் வீட்டுக்கு காரணமில்லாமலா வருவீங்க?" என்றார் ரஞ்சனி.



"ம்ம்.... அது என்னமோ உண்மை தான்ம்மா. உங்க மருமக கிடைச்சிட்டான்னு கேள்வி பட்டேன். அதான் என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு போகலாம்ன்னு வந்தேன்."



"ஆமா... ஆமா..! அது ஒரு பெரிய கதை!" என பட்டும் படாமலும், அவள் கூறிய கதையினை மேலோட்டமாக சொல்ல,



"நம்ம ரமேஷ் நல்ல மனுசனாச்சே! அவருக்கு இந்த மாதிரி கூட எதிரிங்க இருந்திருக்கிறாங்களா?.." என பரிதாபப்பட்டவன்,



"அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்!
உங்க புள்ள காத்து, என் குடோன் பக்கம் அடிக்கடி வீசுதுன்னு கேள்வி பட்டேன்.
அங்க இருக்கிற சமாதிய பாத்திட்டு என்ன, ஏதுன்னு ரொம்ப குடையிறானாம்."




"அதை பார்த்தா.. யாருக்கும் சந்தேகம் வரத்தான் செய்யும்.

ஆனா அது வேற யாரோட சமாதியும் இல்ல.
தற்கொலை பண்ணி செத்துப்போன என் பொஞ்சாதி, புள்ளைங்களோட சமாதி!


எனக்கும் அவங்க மேல பாசம் இருக்காதா?
என் சொந்தம்ன்னு இருக்கிறது அந்த சமாதி ஒன்னு தான்..
அந்த இடத்த நான் கோவில் பாேல வைச்சிருக்கேன்.. அதனால தான் வெளியாட்களை உள்ள விடுறதில்ல.. இத உங்க புள்ளைக்கிட்டயும் சொல்லி புரிய வையுங்க."
என்றவன்,


"அப்போ நான் கிளம்புறேன்." எழுந்து கொள்ள போனவனிடம்,


"வீட்டுக்கு வந்துட்டு.. எழுதுவும் குடிக்காம போனா எப்பிடி! இருங்க நான் சூடா எதாவது எடுத்து வரேன்." என திரும்பியவரிடம்..


"இந்த வெயிலுக்கு சூடாவா? அதெல்லாம் வேண்டாம்.. நான் கிளம்புறேன்."என அவனும் அவசரப்பட்டான்.



"சூடா வேணாம்... குளிரா ஜூஸ் ஏதாவது கொண்டுவரேன்." என்க..



"வந்தவங்களுக்கு உபசாரம் பண்ணாம, இங்க இருந்து போகமுடியாதுன்னு தெரிஞ்சும்.. அவசர பட்டது என் தப்புத்தான். சரி கொண்டு வாங்க." என நகைத்தவனுக்கு
தானும் பதிலுக்கு சிறு புன்னகையினை உதிர்த்து விட்டு, கிச்சன் சென்று அவசர அவசரமாக ஃப்றிஜ்ஜிலிருந்து பழங்களை எடுக்க,


அவர் கையிலிருந்த பழங்களை வாங்கியவள்,


"ஏன் பதட்டப்படுறீங்க? நீங்க போய் பேசுங்க... நான் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வறேன்." என அவரை வலுகட்டாயமாக அனுப்பி வைத்து விட்டு, ஜூஸினை போட்டு எடுத்து வந்தவள், ரஞ்சனியிடம் கொடுக்கும்படி கொடுக்க,



"நீயே குடுத்துடும்மா!" என்றார்.
சரியென்ற தலையசைப்புடன் அங்கிருந்தவனுக்கு புன்னகையுடன் ஜூஸினைக் கொடுத்தாள்.


அவனும் அவள் முகத்தையே ஆராய்ந்தவாறு அதை எடுத்தவன்,


"இந்த பொண்ணு தான் உங்க மருமகளா?"என்றான்.


"இல்லை. இல்லை... இவ வெளியூர் பொண்ணு.. திருவிழாக்காக வந்திருந்தா... சின்ன ஒரு பிரச்சினையினால, இன்னும் போகல்ல."
.
"ஓ...!" என அவளையே பார்த்தவனிடம், வணக்கம் என்பதாய் கை கூப்பிட,


"இருக்கட்டும் இருக்கட்டும்மா! உன் பேரு?" என வினவினான்.
அவளோ ரஞ்சனியை திரும்பி பார்த்தாள்.


"அவபோரு வைஷூ...! அவளுக்கு பேச வராது." என்றார்.


அதற்குமேல் அங்கு நின்று அவர்கள் பேசுவதற்கு இடைஞ்சலாக இருக்க விரும்பாதவள்,



"நீங்க பேசுங்க... எனக்கு உள்ள வேலையிருக்கு, நான் அதை கவனிச்சுக்கிறேன்." என ரஞ்சனிக்கு சைகையினால் கூறிவள்,

வந்தவன் புறம் திரும்பி,
புன்னகை முகம் மாறாமலே, தலையசைத்து விட்டு உள்ளே சென்றவள் திசையினையே யோசனையுடன் நோக்கியவன்.


"அப்போ நானும் வறேன்.. வெளிய ரொம்ப வேலையிருக்கு" என விடைபெற்றுக்கொண்டான்.

கிச்சனுகுள் மறுபடியும் அவசரமாக புகுந்தவர்,



" நானே அவசரத்தில இருக்கேன். இந்த நேரத்தில தான் இவனெல்லாம் வரணுமா? இந்த பிராடு நலம் விசாரிக்கலன்னு எவன் அழுதான்?" என சிடுசிடுக்க.




"அவர பார்த்தா அப்பிடி தெரியலையே! எதுக்கு அவரை பிராடு என்கிறீங்க?"




" யாரு இவனா நல்லவன்? வெள்ளையும் சொள்ளையுமா அலைஞ்சா.. நல்லவனா? நாம அன்னைக்கு போனோமே, அந்த குடோன்... அது இவனது தான். ஊரில இருக்கிற அயோக்கியத்தனம் பூர செய்யிற நந்தன் இவன் தான்." என்ற ரஞ்சனியின் பேச்சில் ஒரு வினாடி தான் வழிவிரித்து ஆச்சரியம் காட்டினாள்.



மறு நொடியே, தன்னை சரி செய்து கொண்டு, வேலையில் ஈடுபட்டவள் சிந்தையெல்லாம்,
இவனை போய் கையெடுத்து கும்பிட்டோமே! இந்த கையினை அடுப்பில் வைத்து கருக்கினால் என்னவென்றிருந்தது.

ஆனால் இது தன்மேல் கோபம் கொள்ளும் நேரமில்லை.



இத்தனை நாள் தேடியும் கிடைக்காதவன், இன்று அவனாக முன் வந்து நிற்கும் போது அவளால் அவனை இனங்கான முடியாது போனது கஷ்டமாகி போனது.



ஆனால் இவனாக வீடு தேடி வந்திருக்கிறான் என்றால், காரணமில்லாமல் இருக்காது என்பது மட்டும் அவளுக்கு நன்கு தெரியும்.



அவளை ஆராச்சியாக அவன் பார்த்த பார்வையின் அர்த்தம் இப்போது தான் புரிந்தது.



'அதாவது தன்னை பார்த்தால் என்னோட ரிஜாக்ஷன் எப்பிடி இருக்குன்னு பார்க்க தான் வந்திருக்கானா? நல்ல வேளை இவனை எனக்கு தெரியாது என்கிறதனால, இயல்பா நடந்துக்க முடிஞ்சிருக்கு. இல்லன்னா நானே என்னை காட்டிக்குடுத்திருப்பேனே!


நிலமை ரொம்ப சீரியஸா போயிட்டிருக்கு போல.


ஊருக்கு போற வரைக்கும் மாமா சொன்னது மாதிரியே வெளிய போகாம, யாரையும் பாக்காம இருக்கிறது தான் எனக்கு நல்லது.' என நினைத்துக்கொண்டவள் வேலையில் கவனமானாள்.



தொடரும்.....
 

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
நந்தன் யாருன்னு தெரியாததால வைஷு சாதாரணமா நடந்துக்கிட்டா இனி என்னாகுமோ 😳😳😳😳😳😳
எதிர்பாராத திருப்பம் தான்க்கா
 
Top