• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

36. காற்றோடு கலந்த விதையவள்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
நேரத்துடனே எழுந்து, ரெடியாகி வெளியே வந்தவள், கிச்சனுக்குள் லைட் எரிவதை பார்த்து அங்கே சென்றாள்.



புணிதாவும் மல்லியும் தான், காலை சமையலில் ஈடுபட்டிருந்தனர்.



"எப்பவுமே இந்த நேரத்துக்கு எழும்பிடுவீங்களோத்த?" என்று குரல கொடுத்தவாறு உள்ளே வந்தாள்.



"வாடியம்மா! என்ன... விடியவே எழும்பினதும் இல்லாம, குளிச்சாச்சு போல.. மற்றம்படி எண்டா குளிருது... வேலைக்கு போக அலுப்பாய் இருக்குது என்ப"



"நைட் பூர தூக்கம் வரேல. அதான் வேளைக்கே எழும்பாட்டன்..



உதவி ஏதாவது செய்யவாத்த?"



"செய்யேன்... என்ன செய்து தர போற"



"நானே இண்டைக்கு சமைக்கிறன்"



"சரி நீயும் தான், நிறைய தடவை கேக்குற.. சரி இண்டைக்கு நீயே செய்!" என்றார்.



சப்பத்திக்கு தேவையான மாவை பிசைந்து அழகாக ஒவ்வொன்றாய் சுட்டெடுத்தவள். அதற்கு தொட்டுக்கொள்ள



காரசாரமாக உருளைகிழங்கு பிரட்டி கறி வைத்து விட்டு,



"என்ர வேலை முடிஞ்சுது...



வேலைக்கு ரெடியாக போறன்" என்று சொன்றாள்.



சிறிது நேரத்தில் அவள் அறை வந்த மல்லி



"இந்தாடியம்மா காப்பி!



குசினிக்கயே வைச்சு உன்னட்ட கேட்கோணும் எண்டு நினைச்சன்...



புணிதாக்கா நிக்கிறதால கேக்கேலமா போச்சு..



உண்மய சொல்லு... நேற்று ஏன் லேட்டு...



பெருசா எதையோ மறைக்கிற... உன்ர பதட்டத்திலயே அது தெரிஞ்சது... பாட்டீட்ட நீ சொன்னதெல்லாம் பொய் எண்டு.



அந்த தம்பிக்கும் இந்த களவில் பங்கிருக்கு... அதால தான், அவனுமே உன்ர பொய்யை கேட்டு திகைச்சு நின்டான். அதை நானும் பாத்தன்.



இப்படித்தான் உன்ர அம்மாவும் என்னட்ட எல்லாத்தையும் மறைச்சாள். கடைசியில நானே கண்டு பிடிச்சு கேட்டதும், உண்மைய சொன்னாள்.



அதையே தான் நீயும் செய்கிற" என்ற மல்லியின் பேச்சில் திகைத்தே போனாள் சின்னவள்.



"என்ன முழிக்கிற? உன்னை பார்த்த நொடியே நீ யாரெண்டத கண்டுட்டன்..



என்ன... தேவிய எதிர்பார்த்த இடத்தில, நீ மாத்திரம் வந்தது தான்" என கண் கலங்கியவள்,



"சரி விடு! காலங்காத்தால முடிஞ்சு போனத எதுக்கு கதைப்பான்..." என கண்ணீரை துடைத்தவள்,



"சொல்லு...! நேற்று என்ன பிரச்சனை?"



அவளை சட்டென இறுக கட்டி கொண்டவள், இரவில் தனிமையில் வடித்த கண்ணீருக்கு துணை கிடைத்த ஆறுதலில் விம்பி அழ,



இதமாக அவள் முதுகை வருடி விட்டவளோ,



"சரி சரி... நேரமாகுது... வேளைக்கு வெளிக்கிட்டு வா... சாப்பிடோணும்.! பின்நேரம் வந்து இதை கேக்குறன்." என்று கதையை மாற்றிவிட்டு வெளியேறினாள் மல்லி.



எப்போதும் போல் தரையில் தான் அனைவருக்கும் சாப்பாடு.. அங்கே ஓர் இடத்தை பார்த்து அமர்ந்து கொண்டாள் துஷா.



பரிமாறப்பட்ட உணவினை முதலில் உண்ட ராசவோ,



என்ன மருமகளே! இண்டைக்கு ரொட்டி பூ போல மெல்ல தேவையில்லாத மாதிரி உள்ள சர் எண்டு போகுது. ரூசி எல்லாம் ஆளை தூக்குது. என்ன அதிசயம்...?" கேலி பேசினாலும், உணவின் ருசியில் மெய் மறந்து தான் போனார்.



"இண்டைக்கு சமையல் நான் இல்ல மாமா... துஷா தான் ஆசைப்பட்டாள். அதான் அவளை சமைக்க விட்டன்."



"அதானே பாத்தன்... இந்த வீட்டில இப்பிடி ஒரு கை பக்குவமோண்டு... ரொட்டிய கூட இட்லி போல சுடலாம் எண்டு இண்டைக்கு தான் தெரியுது. இனிமேல் நீங்கள் ஒருதரும் சமைக்க வேண்டாம். என்ர பேத்தியே சமையல் பூராவும் பாக்கட்டும்..." என்றார் அவளை மெச்சுவது போல்.



அவர் பேச்சினை கேட்ட மற்றவர்களும் சப்பாதனதியை பீய்த்து மென்றவர்கள், அவர் சொல்வதைப்போல் ருசியாக இருக்கவே, தம் பங்கிற்கும் அவளை பாராட்டினார்கள்.



ஆனார் ஒருவன் மாத்திரம், நடப்பவைக்கும் தனக்கும் கடுகளவும் சம்மந்தம் இல்லை என்பது போல, வழமையாக எப்படி சாப்பிடுவானோ, அதே போல் அமைதியாக உண்டு கொண்டிருந்தான். ஆனால் அவனது பார்வை, எப்போதும் போல் துஷாவை அளவெடுத்தது.



சாப்பிட்டு முடிந்து வேலைக்கு தயாரானவளை, நேரத்துடன் வரவேண்டும் என்று எச்சரித்தே அனுப்பினார்கள்.



கடைக்கு வந்தவள், எண்ணம் என்னமோ நேற்றையது போல, இன்றும் ரதன் வேளையோடு வந்திருப்பான் என்று தான். ஆனால் முன்னையது போல அவன் போக்கு காட்ட,



அவனை அவளால் புரிந்து கொள்ளவே த முடியவில்லை.



தன்னை எந்தளவிற்கு வெறுக்கிறானோ, அதே அளவிற்கு ஆபத்தென்று ஒன்று வரும் போது, அரணாக காக்கின்றான்.



அதற்கு நன்றி கூறப்போனால், மனதை நோகடிக்கின்றான். இவனுக்கு என்ன தான் வேண்டும்.' தனக்குள்ளேயே கேட்டுக்காெண்டிருந்தவள், மேசை மேல் இருந்த அன்றைய நாள் பத்திரிக்கை கண்களில் தென்படவே,



'இத யாரு இங்க வைச்சது?' என்று ஆவலாக ஆராய்ந்தவள் கண்களில் பட்டது, படத்துடன் பெரிதாக பாெறிக்கப்பட்டிருந்த அந்த செய்தி.



ஆம் முத்துவும் அவனது அடியாற்களும், இரத்த வெள்ளத்தில் கோரமாகக் கிடக்கும் படம் தான் அது.



மது போதையில் வாகனம் செலுத்தியதால் கோர விபத்து. சாரதி சம்பவ இடத்தில உடல் சிதைந்து சாவு. இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி அவசரசிகிச்சை பிரிவில்.... என்ற செய்தியை பார்த்தவள் திடுக்கிட்டாள்.



"எப்பிடி இது? அதுவும் மூண்டு பேர் எண்டு போட்டிருக்கு..



நான்கு பேர் தானே இருந்திச்சினம். சாரதி சாவு எண்டிருக்கே... அவர்ட படம் எங்க...?



அப்ப இந்த மூண்டு பேரையும் தான் குறிப்பிட்டிருக்கா.. ஆனா வாகனத்தை ஓட்டினது இவனில்லையே!'



அவசரமாக விரிவான செய்தியை ஆராய்ந்தாள்.



எந்த இடத்திலும் அவர்கள் மூவரின் பெயரை தவிர, வேறு எந்த பெயரும் அடிபடவில்லை.



ஆக... இதில வேற ஏதோ நடந்திருக்கு...



ஒருவேளை ரதன் அடிச்சதை பார்த்துட்டு ஓடியிருப்பாரோ....



இவங்களும் அடி தாங்காமல, தப்பினா போதும் எண்டு, கண்முன் தெரியாம வாகனத்தை ஓட்டி, விபத்து நேர்ந்திருக்குமோ?



இப்படித்தான் நடந்திருக்கோணும்..' பலவாறு சிந்தித்தவள்,



விளக்கம் கேட்க ரதன் தான் வரவேண்டும் என்று அவன் வரவையே எதிர் பாத்திருந்தாள்.



அவள் எதிர் பாத்திருந்தாலே தவிர, ரதன் வந்த பாடில்லை.



வீடு செல்லும் நேரமும் ஆனது.



வீட்டின் பெரியவர்களின் கண்டிப்பு நினைவில் வர,



"சரி... இனியும் சரி வராது. திங்கள் கேப்பம்" என நினைத்து புறப்பட்டவள் மனம் பூரகவும் குழப்பம்.



என்ன நடந்தது என்பதே அது.



இன்று முழுவதும் ரதனையும் காணவில்லை. இது சம்மந்தமாக எதிலாவது சிக்கி விட்டானா? தன்னால் எத்தனை பேருக்கு சிக்கல். முதல்ல அங்கிள்.. இப்ப அவன்.



நல்ல வேளை... சைலுவோட இருக்கேக்கு இந்த முத்து என்னை காணேல... கண்டிருந்தா அவளையும் ஏதாவது செய்திருப்பான். என்ற சிந்தனையிலேயே வீடு வந்தாள்.



இரண்டு நாட்களும் தூக்கமில்லாத இரவாகிப் போனது.



என்னதான் தூங்கவில்லை என்றாலும், காலமும் நேரமும் தன் கடமையை சரி வர செய்யுமே!



இந்த நாளாவது நிம்மதியான நாளாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் எழுந்து கொண்டாள்.



எங்கு நாம் நினைப்பது நடக்கிறது.? அப்படி நடந்தால் தான் கடவுள் ஒன்றிருப்பதையே மறந்து விடுவாேமே.!



எப்படித்தான் அனைவரிடமும் இயல்பாக பேசினாலும், அவள் முகத்தில் தெளிவென்பது இல்லாமலே இருந்தது.



என்னமோ தெரியவில்லை ஏதோ இன்று அசம்பாவிதம் நடக்க இருப்பது போல் தோன்ற, தந்தையை அவள் மனம் நாடியது.



அதற்கு தான் வழியில்லாமல், அவரைத்தான் கொன்று விட்டானே அந்த முத்து.



"ஏன் மனசுக்க ஏதோ போல இருக்கு? அப்படி என்ன நடக்க போகுது" என்று நினைத்தவள், தனிமை தேவைப்பட தன் அறையிலே முடங்கினாள்.



இரண்டு நாட்கள் இல்லாத உறக்கம், மன சஞ்சலத்தில் இப்போது அவளை முட்டி மோதி உறங்க அழைத்தது. படுத்தவள் தான், நான்கு மணியளவிலேயே எழுந்தாள்.



முகத்தை அலசி வெளியே வந்தவளை கண்ட காவியா,



"என்னோட வாரியா துஷா? அப்பா வயல்ல இருக்கிறார்... ஒருக்கா போயிட்டு வருவம்" என அழைத்தாள்.



இதுவரை அவளிடம் காவியா பேசுவாள் தான், ஆனால் பெரிதாக பேசியது கிடையாது. இன்றைய அவளது உரிமையான அழைப்பில், கேள்வியாய் அவளை காண,



"இண்டைக்கு அப்பாக்கு டீ குடுக்கிறது என்ர முறை... நீயும் வாவேன்.. ப்ளீஸ்" என்றாள் கெஞ்சலாய்.



அதே நேரம் அங்கு வந்த காந்தி.



"போட்டு வா துஷா... காலமேல இருந்து ஒரு மாதிரியே இருக்கிற... இவளோட போட்டு வந்தா, உனக்கும் கொஞ்சம் மாறுதலா இருக்கும்." என்ற, மறுப்பு கூற முடியாது சம்மதித்தாள்.



வயலுக்கு வந்த இருவரும், தந்தை மார்களுக்கு கொண்டு வந்ததை கொடுத்து விட்டு, ஏதேதோ பேசியவாறே வந்தனர்.



பச்சை பசேல் என்ற அந்த இயற்கை கொஞ்சும் அழகில், சலனங்கள் மறைந்து போனவளாய்,



கதிர் விட்டிருந்த நெல் மணிகளையும், அதை கொண்டாடும் பறவைகளையும் இமையசையாத பார்த்தவாறு வந்தவள், ஒரு குழந்தையாகவே மாறிப்போனாள்.



வரப்பு வழியே நடந்து வந்தவர்கள், எதிரே ஒரு ஆணை கவனிக்கவும் தவறவில்லை..



"ஏய்...! ராமு நீயாடா? பாத்து கன நாள் ஆச்சு? எங்க போயிருந்த? படிக்கேக்க சின்ன பொடியனா இருந்த... இப்ப மீசை எல்லாம் வளர்ந்து பரிய ஆம்பிள ஆயிட்ட" சிறு வயது நண்பனை நீண்ட நாட்களின் பின் கண்ட சந்தோஷத்தில் ஆரவாரமாகிப்போனாள் காவியா.



அவளது பேச்சிலே அவன் யாரென்பது புரிந்து போக, அவர்களுக்கு நடுவில் நின்று, வாய் பார்க பிடிக்காதவளாய், சற்று தொலைவிலேயே நின்று கொண்டவள் கவனம், அருகே ஓடிக்காெண்டிருந்த நீரோடைக்கு திரும்பியது.
தன் கவனத்தை வேறு புறம் திருப்பி சில வினாடிகள் தான் கடந்தியிருப்பாள்.
"
காவியா..!" என்ற ஆணின் குரல் அதிகாரக் குரலில் வேகமாக திரும்பியவள், அங்கு கண்களில் கோபம் தெறிக்க நின்ற இளாவை கண்டாள்.

'என்ன நடந்துட்டு எண்டு இந்த கோபமும் கத்தலும்....?' தனக்குள் நினைத்தவளாய் அவர்களை நோக்கி வந்தாள்.

"


எல்லாம் உன்ர வேலை தானாே?" அவளை பார்த்து இழிவாக கேட்டவன், சரீரென காவியாவின் கையை ஆக்ரோசமாக பற்றி,
"வீட்ட வா..." என்று கோர இழுவையில் இழுத்துக்கொண்டு, வீடு நோக்கி நடந்தான்.
பாவம் பெண்களுக்கு தான் எதற்காக இந்த கோபம் என்று புரியவில்லை. பயத்துடனே அவன் இழுவைக்கு காவியா போக, அவள் பின்னே ஓடினாள் துஷா.






"
அம்மா,........ அப்பா........" வாசலில் நின்று கத்தியவன் கத்தலில் ஒன்று கூடியது மொத்த குடும்பமும்.


கையோடு இழுத்து வந்தவளை, புணிதாவின் மேல் மோதுண்டு போக தள்ளி விட்டவன்,

"இவள் என்ன காரியம் செய்திருக்கிறாள் தெரியுமா?" என்றான்.
அவர்களுக்கு எப்படி தெரியும்...?
ஏன் காவியாவிற்கே, தான் என்ன தவறு செய்தேன் என்பது தெரியாதே!



"இவள் இருக்கிறாளே...! இந்த ஓடுகாளியோடு சேர்ந்து, எவனோ ஒருத்தனோட பல்லை காட்டி கதைச்சுக் கொண்டிருக்கிறாள்... இந்தம்மா யாராச்சும் வரினமோண்டு பாக்கிறாள்.. இவள் அந்த தைரியத்தில கதைக்கிறாள்.



கொஞ்சம் விட்டா, இவளின்ர அம்மா மாதிரியே, இவளையும் எவன் கூடயாவது அனுப்பி வைச்சிருப்பாள்" என்றான் இல்லாத பழியை அவள் மீது சுமத்துவதாய்.

"


என்னடா சொல்ற...?" என்றார் காந்தி அவனது உலறல் புரியாது.

"


நான் ஒண்டும் உலறேல.. நேர்ல பார்த்ததும் இல்லாம, கையும் களவுமாக பிடிச்சுக் கொண்டு வந்திருக்கிறன்." என்றான் அதே கொதி நிலை குறையாது.

"என்னத்த பாத்தனீங்கள் சித்தப்பா..?"


அவனுக்கு நிகராக இம்முறை குரலை உயர்த்தினாள் காவியா.

"ஒருத்தனோட கதைச்சா, அதுக்கு பிழையான அர்த்தம் சொல்லுவீங்களோ...!


என்னை யாரும் அப்பிடி வளக்கேல.. எனக்கும் நல்லது கெட்டது தெரியும்.... தேவையில்லாம பழிய என்னில போடாதீங்கோ..." என்றாள்.



அதற்குள் காவியாவை இளமாறன் கோபமாக இழுத்து சென்ற தகவல், மணிவண்ணனுக்கு கிடைக்க, வேலைகளை கிடப்பில் போட்டு விட்டு, தம்பியரையும் அழைத்துக்கொண்டு வீடு விரைந்தார்.


தன்னை எதிர்த்து பேசியவளை முறைத்தவனோ,






"உன்னை வளர்த்து நாங்கள்.... நல்லா தான் வளர்த்திருப்பம்.. ஆனா இவள வளர்த்து இவளின்ர அம்மா.. எப்பிடி நல்லா வளர்ந்திருப்பாள்?" என்று இகழ்வாக பேசியவன் பேச்சின் உள்ளர்த்தம் யாருக்குமே புரியவில்லை.
"என்ன எல்லாரும் என்னை வினோதமா பாக்குறீங்கள்... என்னாட உலர்றன் எண்டா..? இருங்கோ..." என்றவன்,
விறு விறுவென உள்ளே சென்று, வெளியே வந்தவன் கையில், ஓர் பிறேம் இருந்தது.
அதை நடு முற்றத்தில் வீசி எறிந்தான். "இதை பாத்தா என்ர உலறலுக்கு காரணம் தெரியும்.. இவளும் வந்த நோக்கம் தெரியும்." என்றான்.

கையில் பிறேமோடு வரும்போதே


துஷாவிற்கு புரிந்து விட்டது.



சின்ன மாமனுக்கு உண்மை தெரிந்து விட்டதென்று.


ஆனால் உண்மை தெரிந்தும் மௌனம் காத்தவனது, தற்போதைய கோபத்தின் காரணம் தெரியவில்லை.

'


அவள் தன்ர நண்பனோட பேசினாள்... இதில நான் என்ன செய்தன்?

அம்மாவை வேற எதுக்கு இழுக்கிறார்...?

நீ செத்தும் உனக்கு நிம்மதி இல்லையேம்மா! நான் பிழை செய்து உன்ர பேர் கெட்டிருந்தாலும் ஏற்றிருக்கலாம்.. ஆனா.. யார் என்ன செய்தாலும் உன்னை ஏன்ம்மா திட்டினம்?' மனம் உள்ளே ஓலமிட, ஓடிச்சென்று தரையில் கிடந்த படத்தை எடுத்து நெஞ்சோடு அணைத்து கொண்டவள், மாமானாரை எதிர்த்து பேச வழியின்றி, கண்ணீர் சொரிந்தாள்.



அவள் அணைத்திருந்த படத்தை வலுகட்டாயமாக பிடுங்கி எடுத்தவன்,



"இவளே இங்க வேண்டாம் எண்டிருக்கிறம், இவளோட ஓடிப்போனவன் படத்தையும், எங்கட வீட்டிலயே காெண்டுவந்து ஒழிச்சு வைச்சிட்டு, நல்லவள் போலவா நாடகமாடுற..? " என்றவனது பேச்சின் வீரியம் தாங்காது தலைகவிழ்ந்து அழுதவளால் எதையுமே கூற முடியவில்லை.

அங்கு நடப்பது எதுவும் யாருக்குமே புரியவில்லை மல்லியை தவிர. அவளாலும் பயத்தில் அந்த நொடி வாய் திறக்க முடியவில்லை.

"என்னடியம்மா இங்க நடக்குது?
அவன் என்னவோ எல்லாம் சொல்லுறானே! அது எல்லாம் உண்மையா?" என்றார் பரிவோடு.

"


என்னம்மா நீங்கள்! அவளிட்ட போய் உண்மையா எண்டு கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்... அது தான் ஆதாரத்துக்கு, குடும்பமாக எடுத்த போட்டோவ காட்டுறனே!
அவளும் மாட்டிட்டன் எண்டு பயத்தில அழுது கொண்டிருக்கேக்க தெரியேலயா உண்மை எது எண்டு?




தான் ஒரு ஓடுகாளி... மகளையும் அப்படியே வளத்து, சொந்தம் கொண்டாட அனுப்பி வைச்சிருக்கிறாள்.



நான் நினைக்கிறேன் சாப்பாட்டுக்கு வழியில்லாம நிண்டிருப்பினம்...
தன்ர பங்க வாங்கி வா என்டு அனுப்பி இருப்பாள்.
இதில வினோதம என்னென்டா சொத்த வாங்குறத்துக்காக, நாங்கள் செத்திட்டம் எண்டு நாடகமாடு... முழு சொத்தும் உன்ர கைக்கு வருமென்டு சொல்லி அனுப்பியிருக்கிறாள் போல.." வாய்க்கு வந்ததை சொல்லிக் கொண்டு போனவனை அடக்கியது அவளது மாமா என்ற அதட்டல்.



"நான் ஒண்டும் உங்கட சொத்துக்காக இங்க வரேல..." என்றவளை முறைத்தவன்,

"யாரு
யாருக்கு மாமா?" என்று இறுமாப்புடன் ஆரம்பித்தவன் குரலானது இயலாமையில் இறுதியில் உடைந்து போக.
"இங்கயிருந்து போனாளே... ஒரு தடவையாவது என்னை நினைச்சிருப்பாளா? எவனோ ஒருத்தனை கண்டதும், எங்கள மறந்து போனவள் தானே அவள்.
புதுசா எங்கயிருந்து வந்தது இந்த பாசம்.?" என்றவன் அழவே ஆரம்பித்தே விட்டான்.

சிறு வினாடி தான் அந்த கண்ணீர். மறு நொடியே


கண்களை துடைத்து கொண்டவன்,

"யாருமே அங்க சாகேல.. எல்லாமே பொய்....! இவள் இங்கயிருந்தா.. எங்கட புள்ளைகளும் கெட்டு போடுங்கள்.. முதல்ல இவளை இங்கயிருந்து அனுப்புங்கோ" என்றான் ஆண் சிங்கமாய் மாறி.

துஷா தம் பேத்தி என்றதும், அவள் தம்மை விட்டு போகப்போகிறாள் என்ற ஏக்கமும் தொற்றிக்கொண்டது.


முன்னரே அவள் தம் பேத்தி தான் என்று தெரிந்திருந்தால், தம்மை தேடி வந்த அவளை தங்கத்தட்டில் வைத்து தாங்கியிருப்பார்கள்.


அவளை அனுப்பவும் மனம் வராது,


மகனை சமாதனம் செய்ய வழியும் தெரியாது பாவமாய் பார்த்திருந்தனர்.
தம்பியின் கண்ணீரை பார்த்த தமயன் மார்கள். அவனை தேற்ற,



எதுவும் புரியாமல் வேடிக்கை பார்த்தனர் மற்றையவர்கள்.
மல்லியோ யார் திசை செல்வதென்று தெரியாமல் நடுவில் தவித்து கொண்டிருந்தாள். மனதில் துஷாவை விடமாட்டேன் என்ற உறுதியிருந்தது.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
துஷாவுக்கு என்னைக்கு தான் நிம்மதி கிட்டும் பிள்ள பாடா படுது மனசால 😔😔😔😔😔
 
Top