• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
என்னதான் அவளை சுற்றி இத்தனை உறவுகள் இருந்தாலும், வீட்டுக்கு செல்லும் நாளினை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளையும் நெட்டித்தள்ளினாள்.



பெற்றோரை காணவேண்டும் என்ற ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்தவாறே இருந்தது.



இருக்காதா பின்னே!



இத்தனை ஆண்டுகளில் அவர்களை விட்டு ஒரு நாள் கூட இருந்தறியாதவள், ஏதோ ஆர்வத்தில் அவர்களை பிரிந்து இருபது நாட்களுக்கு அதிகமாகவே தாக்குப்பிடிப்பாள் என்று அவளே எதிர் பார்க்கவில்லையே.



அவர்கள் நினைவில் செல்போனில் இருந்த அவர்களது நிழல் படத்தினையே பார்த்திருந்தவள் செவிகளில், அனியின் குரலானது என்றுமே இல்லாதது போல் பலத்த சத்தமாக கேட்க.



கேள்வியுடனே வெளியே வந்து பார்த்தாள்.



ஹாேலில் தலையில் கைவைத்து சோகமாக அமர்ந்திருந்தார் ரஞ்சனி.



அவரை தவிர அங்கு வேறு யாராவது நிற்கிறார்களா? என சுற்றும் முற்றும் பார்த்தவள், யாருமில்லை என்றதும், ரஞ்சனியின் அருகில் சென்றமர்ந்தவள், அவர் கைகளை மெதுவாக பற்றினாள்.



அவள் தொடுகையில் நிமிர்ந்தவர் கண்களில் இருந்து, உதிர்ந்த கண்ணீரை கண்டவளுக்கு ஏனோ பேச முடியாமல் போனது.



எதற்காக கலங்குகிறார் என்பது தெரியாது, அவரை இன்னும் நெருங்கி அமர்ந்தவள், ரஞ்சனியின் கையினை இன்னும் இறுக பற்றிக்கொண்டவள் செயலானது, ரஞ்சனிக்கு ஆறுதல் கூறுவதாக இருக்க.



"என்னால முடியலம்மா! இவங்க இரண்டு பேரையும் சமாளிக்க சுத்தமா என்னால முடியல்ல...



ஒரு பக்கம் என் அண்ணன் பொண்ணு... ஒரு பக்கம் இவரு தங்கை பொண்ணுன்னு, எடுத்ததுக்கு எல்லாம் சண்டை போடுற இவளுங்கள சமாதாணம் பண்ண சுத்தமா முடியல..



நீயே சொல்லு! இத்தனை வருஷமா எங்களோட அரவணைப்பில்லாம வளந்தவ அம்மு.. அவளுக்கும் தன்னோட சொந்தங்க கிட்ட நெருங்கி பழகணும்னு ஆசை இருக்காதாடா?



இவளுக்கு நான் பரிஞ்சு பேச போனா.. இவளை நாங்க வளர்த்தோம்.. அதனால தான் இவளை மட்டும் தாங்கி பிடிக்கிறோம்... நான் யாரோ தானே, என்னோட அப்பா அம்மா உயிரோட இருந்தா, எனக்கு இந்தமாதிரி இக்கட்டு வர விட்டுருப்பாங்களான்னா எண்ணம் அவ அடிமனசில வரக்கூடாதுன்னு, அவளுக்கு கொஞ்சம் பரிஞ்சு போனேன்... அது தப்பாடா?



எனக்கு இரண்டு பேர்லயும், இவ வேணும்.. அவ வேண்டாம்னு எதுவுமே இல்லம்மா! எனக்கு ரெண்டுபேருமே என் கண்ணுங்க.


ரெண்டில


எந்தக்கண் முக்கியம்ன்னா.. நான் எதைடா சொல்லுவேன்?



கூட இருந்து வளர்ந்தவ இவ தானே! என் நிலமைய புரிஞ்சுக்கணும். இவளே புரிஞ்சுக்கலன்னா
..



இத்தனை வருஷம் எங்கேயோ இருந்து வளர்ந்தவளால எப்பிடிம்மா புரிஞ்சுக்க முடியுமா?



கொஞ்ச நாள் விட்டுக்குடுத்து போனா.. அதுவாவே எல்லாம் சரியாகிடும்.. இத சொல்ல போனா, கத்திட்டு போறா" என்றவர் பேச்சு பாதி புரிந்தாலும் மீதி புரியாது போக,



"ஏதோ பிரச்சினை ஆகிருக்குன்னு மட்டும் தெரியுது.. ஆனா நீங்க கவலை படுற அளவுக்கு என்ன பிரச்சினைன்னு புரியல ஆன்ட்டி." என்றாள்.



"அத ஏம்மா கேக்கிற? இப்போ நம்ம அனிக்கு ரியூட்டரி போற டைம்ன்னு உனக்கே தெரியும்ல்லடா! ஏற்கனவே ஒரு கார் ரிப்பயர்.







இருந்த காரையும் வெளிய வேலை இருக்குன்னு இவரு கொண்டு போயிட்டாரு.. இவளை கொண்டு போய் விடுறதுக்கு கார் இல்ல...



இன்னக்கு வேற சென்டர்ல எக்ஸாம் இருக்குன்னு பரபரத்துட்டு நின்னா
..



அந்த நேரம் பாத்து ஆதி வந்தான்.



பதட்டப்படாத... ஆதி வந்திட்டான். பைக்ல அழைச்சிட்டு போய் விடுவான்னு.. நான் தான் சொல்லி ரெடியாக வைச்சேன்.
இவ ரெடியாகிட்டு வந்து ஆதி பைக்ல ஏறப்போன நேரம்.. அவளை முந்திட்டு அம்மு போய் பைக்ல ஏறிட்டா!



தன்னை பியூட்டி பார்லர்ல ட்ராப் பண்ணி விடுங்க அத்தான் என்கிறா...



இவளோ அவகிட்ட போயி
...



உனக்கு இப்போ மேக்கப் தான் முக்கியமா? எனக்கு ரியூசன்ல எக்ஸாம் இருக்கு, நான் ரியூட்டரி போகணும்ன்னு அவளை பைக்ல இருந்து தள்ளி விட பாத்தா...



அவளும் அமைதியா இருக்காம , இவகூட சண்டை போட ஆரம்பிச்சிட்டா... ஆதியும் அமைதியா இருங்கன்னு சொல்லி பாத்திட்டான். அவன் என்ன சொல்ல வரான் என்கிறத இரண்டுபேரில யாருமே கேக்கிறதா இல்ல.. அதான் அவனும் நல்லா சண்டை போடுங்கன்னு இவங்களுக்காக காத்திட்டிருக்காம போயிட்டான்.



இவளாவது கொஞ்சம் நிதானமா.. எனக்கு இந்த மாதரி எக்ஸாம் இருக்கு. நான் அவசரமா போகணும்னு எடுத்து சொல்லியிருந்தா, அம்மு கேட்காமலா போகப்போறா?



எடுத்ததும் சண்டைக்கு போனா.. அவளும் சண்டை தானேம்மா போடுவா! அதை அவளுக்கு தெளிவா சொன்னேன்.




"என்னை விட நேத்து வந்தவதானே முக்கியமா போய்டா.. அவ என்ன செய்தாலும் தட்டிக்கேக்க மாட்டிங்களா? இதுவே நானா இருந்திருந்தா.. கண்டவங்க முன்னால என்னெல்லாம் சொல்லி திட்டியிருப்பிங்க.



உங்க செல்லமருமக கொலையே செய்தாலும் தப்பில்லல்ல.



எவ்வளவு சொன்னேன்.. இன்னைக்கு எக்ஸாம் இருக்குன்னு.



நாளைக்கு சென்டருக்கு எப்பிடி போவேன்
?



மாஸ்டரும் என்ன ஏதுன்னு கூட கேக்காம, அத்தனை பேரு முன்னாடி என்னை எப்பிடி திட்டுவாரு தெரியுமா?



உங்களுக்கென்ன? நான் தானே திட்டு வாங்க போறேன்.. உங்க செல்ல மருமகள யாரும் திட்டாமலிருந்தா சரி தானே!



இவ இங்க வந்ததில இருந்து, உங்க யாருக்குமே, நான் இங்க இருக்கிறது புடிக்கல.



நானும் இனி இங்க இருக்க மாட்டேன்.. நாளைக்கே அப்பாவ வரவைச்சு, ஊருக்கு போயிடுறேன். நீங்க உங்க மருமகளை வைச்சு நல்லா கொஞ்சிட்டிருங்க." என அழுகையினூடே கத்திவிட்டு தன் அறை நுழைந்து கொண்டாள்.
அம்முவும் எதுவும் பேசாது மாடிப்படியேறி சென்றுவிட்டாள்.



அவர் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்த வைஷூக்கு, என்ன சொல்லி ரஞ்சினியை தேற்றுவதென்பது தெரியவில்லை.



"அவ சின்னப்பொண்ணு ஆன்ட்டி! ஏதோ ஒரு ஆதங்கத்தில பேசிட்டு, நடந்ததை எல்லாம் உடனேயே மறந்திடுவா! அதுவுமில்லாம ஆதிமேல அவ்ளோ பாசத்த வைச்சிருக்கிற அனியினால, ஆதிய விட்டு எங்கேயும் போக முடியாது. " என தேற்றியவள்.



"இப்போ அனி அவ ரூம்ல தான் இருக்காளா?" என்றவள். அவள் அறை நோக்கி நடக்க.



"வைஷூம்மா வேண்டாம்டா! அவ கோபத்தில இருக்கா... உன்னையும் ஏதாச்சும் திட்டிடப்போறா!" என தடுத்தவரை,



உதட்டு வளைவில் சிறு புன்னகையினை உதிர்த்து விட்டு, முன்னேறினாள்.



தாள் போடப்படாமலிருந்த கதவினை திறந்து கொண்டு சென்றவள், உடலினை குறுகிப்படுத்திருந்து, கேவிக்கேவி அழுதவள் கட்டிலின் ஓரத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.



வைஷூவின் அதிர்வில் எழுந்து பார்த்தவள், வைஷூ எதிரில் இருப்பதை கண்டுவிட்டு,



"உன்னையெல்லாம் யாரு இங்க வரச்சொன்னது?.



ஆதரவுக்குன்னு யாருமில்லாத என்னை பாத்து, சந்தோஷ படத்தானே இங்க வந்த? பாத்துட்டல்ல.. இப்போ சந்தோஷம் தானே! வெளிய போ!" என யாரிடமும் காட்ட முடியாத தன் ஆதங்கத்தை~ வைஷூவிடம் கொட்டியவள் வார்த்தைகளை காட்டிலும், அழுகை முந்திக்கொண்டு வர, மெத்தையில் முகம் புதைத்து குமுற ஆரம்பித்தாள்.



சிறுபிள்ளை தனமான அவள் கோபம் எப்போதும் போல வைஷூவிற்கு கோபத்தை உண்டு பண்ணவில்லை...
மாறாக அவள்மேல் இரக்கமே தோன்றியது.



அவள் அருகில் சென்று அவர்ந்தவள் கரங்களே அவள் தலையினை ஆறுதலாக வருட,



அதுவரை மெத்தையில் முகம் புதைத்து அழுதவள், வைஷூவின் கரம் அவளை ஆறுதலாக வருடியதில், பசுவினை தேடி அலைந்து கண்றுக்குட்டியாய், பாய்ந்து வந்து வைஷூவின் மடிமீதி முகம் புதைத்தவள்,



"என்னை யாருக்குமே புடிக்கல வைஷூ... எல்லாருமே என்னை குத்தம் சொல்லிட்டே இருக்காங்க...



அந்த அம்முவ தான் தலையில தூக்கி வைச்சு கொண்டாடுறாங்க.



அவ நல்லவளே இல்ல வைஷூ.



அவளை எனக்கு சுத்தமா புடிக்கல." என சிறுகுழந்தையாய், அழுகையினூடே அம்முவை பற்றி குற்றப்பத்திரிக்கை வாசித்தவள்,



அவள் மடியிலிருந்து எழுந்தமர்ந்து,



"நீ ரொம்ப நல்லவ வைஷீ.. எத்தனை வாட்டி நான் உன்னை கஷ்டப்படுத்தியிருக்கேன்.. இப்போ கொஞ்சம் முன்னாடி கூட, உன்னை நான் திட்டினேன். ஆனா நீ எப்பவும் என்மேல கோபமே பட்டதில்ல.



நான் உனக்கு அவ்வளவு செய்தும், என் அழுகைய தாங்க முடியாம தானே வந்து என்னை சமாதாணம் பண்ற?



உனக்கு தெரியுது.. நான் சின்ன பொண்ணு, இப்பிடி தான் அடம்புடிப்பேன்னு.. ஆனா அந்த அம்மு இருக்கால்ல... அவ பெரிய ராட்சஷி.



ரொம்ப திமிரு புடிச்சவ.



ஆதி அத்தானுக்கு இவ எந்த விதத்திலயும் பொருத்தமே இல்ல வைஷூ.



இவளுக்காக தான் அத்தான் இத்தனை வருஷம் காத்திட்டிருந்தாருன்னு நினைக்கிறப்போ, இவ வராமலே போயிருக்கலாமோன்னு தோணுது.



அப்பிடி இவகிட்ட என்ன இருக்குன்னு இவளையே இத்தனை வருஷம் நினைச்சு உருகிட்டிருந்தாரு? அவ ட்ரெஸ்ஸ பாத்தியா? கிச்சன்ல இருக்கிற கரித்துணி கூட அதைவிட பெரிசா இருக்கும்.



மூஞ்சு பூர சுண்ணாம்பு அடிச்சிட்டா, இவ பெரிய அழகியா?



சரி மூஞ்சிதான் கிழிஞ்சுபோன கோணியா இருந்தாலும் ஏத்துக்கலாம்.. ஆனா அவ மனசும் அவளை மாதிரியே நல்லாயில்லை.



பிடிக்கல வைஷூ! இவளை சுத்தமா எனக்கு புடிக்கவே இல்ல.



முதல் முதல்ல உன்னை பாத்தப்போ உன்கிட்டையும் இதே போல நடந்துக்கிட்டேன்.



ஆனா அதில இருந்தது நீ அழகா இருக்கேன்ற பொறாமை மட்டும் தான். ஆனா இவள பாக்குறப்போ வெறுப்பு தான் வருது.



ஏன் வைஷூ! அத்தான் ஆசைப்பட்ட அம்முவா நீ இல்லாம போன? அந்த அம்மு நீயா இருந்திருந்தா, எவ்ளோ நல்லா இருந்திருக்கும் தெரியுமா?" என தன் மனதிலிருந்ததை எல்லாவற்றையும், வைஷூவை பேச இடம் கொடாதவளாக பேசிக்கொண்டே போனவளையே இமைகள் அசையாது பார்த்துக்கொண்டிருந்தவள்,



அவளது இறுதி பேச்சில் மூச்சு முட்டிப்போனவளாக, கட்டிலை விட்டு வேகமா எழுந்தவள் கையினை பதட்டமா பற்றிய அனிதா.



"வைஷூ...! அந்த அம்முமேல இருந்த வெறுப்பினால, நீ அம்முவா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு ஒரு ஆதங்கத்தில கேட்டுட்டேன்.



எனக்கு தெரியும் இப்பிடி பேசினது தப்புன்னு.. அது உன் மனச காயப்படுத்தியிருந்தா, மன்னிச்சிடு வைஷூ." என தன்பேச்சினால் அவள கோபப்படுத்தி விட்டோமோ! என பயந்து, அப்பாவியாய் கூறியவள் முகத்தில் எதை



கண்டாளோ....
பழையபடி முகத்தை இயல்புக்கு மாற்றி புன்னகைத்தவள்.



"என்ன பயந்திட்டியா? எத்தனை வாட்ட, என்னை இதே போல மிரட்டியிருப்ப? அதான் சின்ன ஷாக் குடுத்தேன்." என கண்சிமிட்டி சிரிக்க.



"என்னையா ஏமாத்துற? உன்னை......!" என தன் கவலைகளை மறந்து, தலகணியுடன் அடிக்க அவளை துரத்த ஆரம்பித்து விட்டாள் அனி.



அவள் கைகளுக்குள் சிக்காமல், அந்த அறையினையே சுற்றிச்சுற்றி அவளுக்கு போக்கு காட்டி ஓடியவள், ஒரு கட்டத்துக்குமேல், மூச்சிரைக்க முட்டியை பிடித்துக்கொண்டு மூச்சுவாங்கியவளை நெருங்கி அடிக்கத்தொடங்கினாள்.



ஒரு சில அடிகளை சிரித்தவாறே வாங்கியவள், அதன் பின் அந்த தலகணியை பறித்து எறிந்துவிட்டு சின்னவளை இறுக அணைத்துக்கொண்டாள்.



சில நிமிடங்களில் அவளை விடுவித்தவள்,



"இனிமே நம்ம ஃப்ரெண்ஸ் ஓகே!" என்க.



"ஹூம்........ நீ என் ஃப்ரெண்ட்டா......?" என யோசிப்பது போல் நடித்தவள்.



"ஓகே பரவாயில்ல.. இருந்துட்டு போ!" என பொய்யாக சலித்துக்கொள்ள.



"ரொம்ப பண்ணாத... உனக்கெல்லாம் என்னை தவிர எவளும் செட்டாக மாட்டா... எப்பா பாரு உன் அத்தானை மாதிரியே எல்லார் கூடவும் சண்டை இழுத்திட்டு திரிஞ்சா.. எவ வருவா?" என்க.



அவளை சண்டைகாரி என வைஷூ கூறியதும் முகம் கறுத்துப்போக,



"அத்தான் ஒன்னும் என்னை மாதிரி கிடையாது.



அவரு ரொம்ப நல்லவரு." என முகத்தை சோகமாக தொங்கப் போட்டுக்கொண்டு சொன்னவள், பேச்சில் சிரித்து விட்டவள்,



"அப்போ நீ வாயாடின்னு ஒத்துக்கிற?" என்ற வைஷூவின் செய்கையில்.
"என்னை விட அந்த ராட்சஷிக்கு தான் வாய் அதிகம்." என வெடுக்கென சொன்னாள்.



"சரி விடு! அவதான் அந்த மாதிரின்னு தெரியுதுல்ல. அப்புறம் எதுக்கு அவகிட்ட போற?.."



"நானா போனேன்? அவதான் எப்போ பாரு என்கிட்ட வரா.. அதுக்கு அத்தையும் உடந்தை." என குறை கூறியவளின் தோளை பற்றியவள்.



"இந்த மாதிரி பேசுறது தப்பு அனி!



இப்போ உனக்கு ரொம்ப உரிமையானவங்க, ஒரு தப்பு பண்றாங்க.. அதே தப்ப யாருன்னே தெரியாத இன்னொருத்தங்களும் பண்றாங்க.



அப்போ நீ யாருமேல கோபத்த காட்டுவ? யாருன்னே தெரியாதவங்க கிட்டையா?
இல்லல்ல... நமக்கு யார் மேல உரிமை இருக்கோ, அவங்ககிட்டதானே கோபப்பட முடியும்.



அந்தமாதிரி தைரியமா அவங்கமேல கோபப்பட காரணமே, அவங்களால நம்மள புரிஞ்சுக்க முடியும் என்கிற நம்பிக்கையில தான்." என்றவள் அவளுக்கு புரிந்துகொள்வதற்காக சிறு இடைவெளி கொடுத்து,



"ஆன்ட்டியும் அதை தான் செய்திருக்காங்க அனி... நீ அவங்கள புரிஞ்சுப்பேன்னு தான் உன்மேல மட்டும் போபத்தை காமிச்சிருக்காங்க.



உங்க ரெண்டுபேர்ல உன்னை மட்டும் தான் அவங்க உரிமையானவளா நினைக்கிறாங்க.. அதனால தான் உன்னை திட்டுறாங்க." என்றாள்.



அவள் பேச்சில் தெளிந்தும் தெளியாமலும் வைஷூவை சின்னவள் ஏறிட,



"என்னடி! நான் சொன்னது உனக்கு புரியலையா? அப்போ இவ்ளோ நேரம் கையை போட்டு அசைச்சு என் எனர்ஜி எல்லாம் வீணாக்கிட்டேனா?" என பாவமாக கேட்டவள் செயலில், பொங்கி வந்த சிரிப்பை அடக்கமுடியாது சத்தமாக சிரித்தவளையே பார்த்திருந்தவள்.



"நீ சிரிக்கும் போது தான் அனி அழகா இருக்க." என்றாள் அவள் சிரிப்பபை ரசித்தவாறு.



"ரொம்ப ஐஸ் வைக்காத.. நான் எப்பவோ சரியாகிட்டேன். சும்மா நடிச்சேன்." என்றவள்
,



"சரி வா..! அத்தைய போய் சமாதானம் பண்ணலாம்.. அவங்கள வேற ரொம்ப திட்டிட்டேன்... அதை நினைச்சு ஃப்பீல் பண்ணிட்டிருக்க போறாங்க." என வைஷூவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.



தன் சொல்லினை கேளாது, அனியை சமாதானம் செய்யப்போனவள் என்னானாளோ என்று பயந்தவராய், அனி அறை கதவினையே வெறித்திருந்தவருக்கு, இருவரும் ஒருவரை ஒருவர் கை கோர்த்தவாறு வெளியே வரும் காட்சியை கண்டதும், சிறுதும் நம்பமுடியவில்லை.



பின்னே.... வைஷூவை கண்டாலே எப்போதும் முறைத்து நிற்பவள், இன்று அவள் கைபற்றி அழைத்து வந்தால், ஆச்சரியப்படாமல் என்ன செய்வார்?
அதுவும் சற்று முன்னர் தன்னோடு கத்தி அழுதுவிட்டு சென்றவள், இவள் தானா என்ற கேள்வி சிரித்த முகமாய் வந்த இருவரையும் கண்டு எழாமல் இல்லை.



எதுவும் புரியாத குழம்பி நின்றவர் பார்வையோ, வைஷூவின் புறம் கேள்வியாய் திரும்ப,



அவரை பார்த்து ஒற்றை கண்ணடித்து சிரித்தவள் செயலே சென்னது.. அவளின் கெட்டிக்காரத்தனத்தை.



அதன் பின் பொய்யாக முறுக்கிக்கொண்டிருந்த அத்தையை, தாஜா பண்ணி எப்படியோ சமாதாணம் செய்வதில் அன்றைய பொழுதானது அவர்களுக்கு இனிமையாகவே கழிந்தது.



அதன் பின் வந்த நாட்களிள் வைஷூவும், அனியும் மிகவும் நெருங்கி பழக ஆரம்பித்தனர்.
ஆனால் அம்முவின் பக்கம் தலைவைத்து பார்ப்பதில்லை.



அன்று நடுச்சாமம் பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.



ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அம்முவின் கதவோ படு வேகமாக தட்டுப்பட்டது.



அந்த சத்தத்தில் திடுக்கிட்டு கண்விழித்தவளுக்கு, கதவிலிருந்து வந்த பலத்த சத்தத்தில் பயந்தவள் முகமானது வியர்வையில் குளித்துவிட்டது.



நாவு நந்தியடிக்க..
"யா..... யாரு...?" என்றவள் குரலானது வெளியே கேட்டதும் கதவின் சத்தம் அடங்கிப் போனது.




தொடரும....
 
Top