• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

38. விந்தையடி நீ எனக்கு! வீசும் தென்றல் நானுனக்கு!

Aieshak

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
53
5வயது மலர் சமத்து குழந்தை ! பள்ளி முடிந்தபின் அருகில் இருந்த காப்பகத்தில் அவளை பள்ளியின் ஆயா கொண்டு விட்டுவிடுவாள். அங்கே வேலைக்கு செல்லும் பெண்களின் குழந்தைகள் இருந்தனர்! அவர்களுடன் விளையாடிக் கொண்டே தாயின் வரவை எதிர்பார்த்தபடி இருப்பாள்!
அன்றும் மகளை அழைக்க வந்து கொண்டிருந்தாள் மயூரி! சிக்னலில், எதிர் சாரியில் அவனை பார்த்துவிட்டாள்! இந்த ஊரில் அவன் எப்படி வந்தான்? யோசனை ஒருபுறம் ஓடியது! நல்லவேளையாக அவன் இவளை பார்க்கவில்லை! பாதியாக இளைத்திருந்தான்! பணக்கார பெண்ணை கட்டிக்கொண்டவனின் நிலையா இது? அவள் எண்ணும் போதே பச்சை விழ, வாகனத்தை கிளப்பிக் கொண்டு நகர்ந்துவிட்டாள்!
ஆனால் மனம் தான் அவனிடம் போய் நின்றது! ஆயினும் மனதை மகளிடம் திருப்பி, வண்டியை செலுத்தினாள் மயூரி!
மகளின் நினைவில் உதட்டில் புன்னகை தோன்ற, அவளுக்கு வேறு சிந்தனை எழவில்லை! மறுநாள் விடுமுறை என்பதால் சற்று ஆசுவாசமாக உணர்ந்தாள்! வழியில் மகளுக்குப் பிடித்த பலகாரம் வாங்கிக்கொண்டு, மகள் இருந்த காப்பகத்தின் சாலையில் திரும்பும் போது அது நிகழ்ந்தது!
எதிரே வேகமாக வந்த கார், கடைசி வினாடியில் கவனித்த மயூரியும் செய்வதறியாது திகைத்துப்போனாள்! கார் அவளை தாக்கிவிட்டது!
அது பிரதான சாலை அல்ல நிழல்வழிக்சாலை தான்! ஆயினும் மாலை நேரம் என்பதால் போக்குவரத்து சற்று அதிகமாகவே இருந்தது!
மயூரி தலையில் அடிப்பட்டு சரிய, கூட்டம் கூட ஆரம்பிக்க, காரின் பின் சீட்டில் இருந்து இறங்கினான் அந்த உயரமானவன்! தாடியும்,கண்களில் குளிர் கண்ணாடியும் கூட அவனுக்கு ஒரு தனி கம்பீரத்தை கொடுத்தது!
டிரைவர் பதற்றமாக மயூரியை நோக்கி செல்ல," முத்து, நீ தண்ணீரை எடுத்துக் கொண்டு வா, சீக்கிரம்" என்று உத்தரவிட்டவாறே மயூரியை வேகமாக நெருங்கினான்!
அவளை புரட்டிப் பார்த்தவனின் முகம் யோசனையாய் சுருங்கி மீண்டது! அதற்குள் தண்ணீர் வர , அதை அவளது முகத்தில் தெளித்தான், லேசாக கண் விழித்தவள், " மலர் , மலர் என் மகள்" என்றவாறே மயங்கிப்போனாள்!
முத்துவிடம் சொல்லி அவளது பொருட்களை சேகரித்தவன், அவளது வண்டியை பழுது பார்க்க எடுத்து செல்ல பணித்துவிட்டு,
சட்டென்று அவளை தூக்கி காரின் பின் சீட்டில் படுக்க வைத்துவிட்டு, ஒட்டுனர் இருக்கையில் ஏறி அமர்ந்தான் ரிஷி!
🤎🤎🤎
மருத்துவமனையை அடையும்போதே மயூரியின் கைப்பேசி ஒலித்தது!
அதை எடுத்துப் பேசினான்," ஹலோ நீங்க யார்?
" இது மலர் அம்மா நம்பர்தானுங்களே?"
"ஆமா, சொல்லுங்க, என்ன விஷயம்?"
" வழக்கமாக இந்த நேரத்துக்கு மயூரி பொண்ணு வந்துவிடும் சார்! ஆனால் இன்னிக்கு காணோமேனு தான் போன் செய்தேன், பாப்பாவும் வாசலையே பார்த்துட்டு உட்கார்ந்திருக்கு! அவங்ககிட்ட போனை கொடுக்கிறீங்களா?"
" உங்க காப்பகம் எங்கே இருக்கு என்று விலாசம் சொல்லுங்க, மயூரிக்கு அடிபட்டு ஆஸ்பிட்டலுக்கு கொண்டு வந்துருக்கோம்! அதனால நானே வந்து பாப்பாவை அழைச்சுக்கிறேன்!" என்றவன் விலாசத்தை குறித்துக் கொண்டு, மருத்துவமனை விதிமுறைகளை முடித்துவிட்டு, பரிசோதனை முடியும் வரை சற்று நேரம் அங்கேயே காத்திருந்தான்!
மருத்துவர் வந்து "அவங்களுக்கு உயிருக்கு பெரிதாக ஆபத்து இல்லை, அடிபட்ட இடத்தில் தையலா போட்டிருக்கிறது, தலையில் அடிபட்டிருக்கிறதால் ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும், மற்றபடி பிரச்சினை இல்லை! அவங்க சரியாக சாப்பிடாத காரணத்தால், சற்று பலவீனமாக இருப்பதால் ட்ரிபஸ் போட்டிருக்கிறது! முடிந்ததும் அழைத்து போய்விடலாம்" என்றுவிட்டு நகர்ந்தார்!
செவிலியரிடம் சொல்லிவிட்டு, மலரை அழைத்துவரக் கிளம்பினான் ரிஷி!
🤎🤎🤎
குழந்தைகள் பராமரிப்பு இல்லம்!
ரிஷி அங்கே சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டதும், அந்த பெண்மணியின் முகத்தில் ஒரு மரியாதை வந்திருந்தது! மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு, மயூரி அங்கே அனுமதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தான்!
மலரிடம், "இந்த அங்கிள் கூட போ மலர், அம்மாக்கிட்டே கூட்டிட்டுப் போவார்" என்று அந்த அம்மாள் சொன்னபோது அந்த குழந்தை அவனை விழிவிரிய பார்த்துவிட்டு, காதோரம் தன் சின்ன கரத்தை வைத்து, ரகசியக் குரலில், " அம்மா வந்து கூப்பிடாம யார் கூப்பிட்டாலும் போக்கூடாதுன்னு சொன்னாங்களே ஆன்ட்டி ? இவர்கூட போனா அம்மா திட்ட மாட்டாங்களா?" என்றது ரிஷிக்கும் கேட்டது!
புன்னகையுடன் குழந்தையை மெச்சுதலாகப் பார்த்திருந்தான்!
"அம்மா தான் கண்ணு, இவரை அனுப்பி கூட்டிட்டு வரச் சொன்னாங்களாம்! அப்படி இல்லைன்னா ஆன்ட்டி உன்னை அவர்கூட அனுப்புவேனா?" என்று அதே ரகசியக்குரலில் பேசினார் அந்த பெண்மணி!
"உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா பாப்பாவை கூட்டிட்டு என்கூட வர முடியுமா மேடம்? நானே திரும்ப கொண்டு வந்து ட்ராப் பண்ணிடுறேன்! என்றான்!
" மற்ற குழந்தை போல இவள் கிடையாது! சீக்கிரமாக அவள் உறுதியில் இருந்து மாற மாட்டாள்!அதனால நான் இவளோடுவர்றேன் சார்!" என்று அந்த பெண்மணி குழந்தையின் பையை எடுத்துக் கொண்டு அவனோடு காரில் ஏறினாள், மலரை தூக்கிக் கொண்டு போய் முன் இருக்கையில் அமர்த்தி,பெல்ட் போட்டு விட்டான்! ரிஷிக்குள் இன்னதென்று சொல்ல தெரியாத உணர்வு உண்டாயிற்று !
மருத்துவமனைக்கு வந்தபோது மயூரி கண் விழித்து இருந்தாள்! ட்ரிப்ஸ் முடியும் தருவாயில் இருந்தது! அவளிடம் குழந்தையை காட்டிவிட்டு, அங்கே இருந்த கான்ட்டீனுக்கு மலரை அழைத்துப் போய் அவள் விரும்பிய உணவை வாங்கிக் கொடுத்து அவள் சாப்பிடுவதை ரசனையோடு பார்த்திருந்தவனுக்கு, அதை படம்பிடிக்கும் யோசனை உண்டாக, தன் போனில் பதிவு செய்து கொண்டான்!
காப்பகத்தின் பெண்மணி மயூரியிகம் பேசிவிட்டு, விடைப்பெற்றுக் கொள்ள, இருசக்கர வாகனத்துடன் சென்றிருந்த முத்து திரும்பியிருந்ததால், அவனுடன் அவரை அனுப்பி வைத்தான் ரிஷி!
அதன் பிறகு, "மயூரி, என் டிரைவரின் கவனக்குறைவால் தான் இந்த விபத்து நேர்ந்திருக்கிறது! அதற்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்! உங்கள் வண்டியை சரி பார்த்தாகிவிட்டது! இந்த ட்ரிப்ஸ் முடிந்ததும் உங்களை வீட்டில் சேர்ப்பது என் பொறுப்பு! நீங்க வீணாக மனசைப் போட்டுக் குழப்பிக்காதீங்க"!
ரிஷியைப் பார்த்த மயூரிக்கு எங்கோ அவனை பார்த்த ஞாபகம்! ஆனால் எங்கே என்று நினைவு வரவில்லை!
மகளை அவன் தூக்கி வைத்திருந்தது ஏதோ மனதுக்குள் கலவரத்தை உண்டாக்கியது! யாரிடமும் போகாத மகள் இன்று இத்தனை நெருக்கமாக ஒரு அந்நியனின் கழுத்தை கட்டிக்கொண்டிருக்கிறாளே? எண்ணம் ஒருபுறமிருக்க , அவனது பேச்சுக்கு, அவசரமாக பதில் சொன்னாள்!
"இல்லை, அதெல்லாம் வேண்டாம்! நாங்கள் என் வண்டியிலேயே போய்விடுவோம்! விபத்து நேர்ந்ததும் விட்டுப் போகாமல் இந்த அளவுக்கு உதவி செய்ததே பெரிய விஷயம் ! ரொம்ப நன்றி!"
பதில் சொல்லாது தலையை மட்டுமாக அசைத்துவிட்டு வெளியே வந்து அமர்ந்து கொண்டான்! ரிஷிக்கு புரிந்தது தனியாக குழந்தையுடன் வாழும் பெண், ஒருவனின் காரில் சென்று இறங்கினால் அக்கம்பக்கம் பேச்சு எழும் என்று அவள் தயங்குகிறாள் என்று! ஆனால் அதற்காக அவளை தனியே போகவிடுவதும் சரியில்லையே!
காப்பகத்தின் பெண்மணி சொன்னதை வைத்துப் பார்த்தால், அவள் இந்த ஊருக்கு கணவனை இழந்தவளாகத்தான் வந்திருக்கிறாள் என்று புரிந்தது! இந்த காலத்தில் விதவைகள் ஒரு சின்ன ஸ்டிக்கர் பொட்டாவது வைக்கத்தான் செய்கிறார்கள்! இவளானால், பொட்டு இல்லை, அழுந்த வாரிய தலையில் கொண்டை போட்டு, கண்ணில் பழைய காலத்து மாடல் கண்ணாடி அணிந்து என்று அவளது தோற்றத்தில் கொஞ்சமும் அக்கறையற்றவளாக இருக்கிறாள்!
யார் செய்து வைத்த கொடுமை இது? ஒருவேளை மாமியாராக இருக்குமோ?
" சார் அவங்களுக்கு ட்ரிப்ஸ் முடிஞ்சிருச்சு, போறதுக்கு முன்னாடி டாக்டரை பார்த்துவிட்டு போங்க!" என்ற செவிலியரின் குரலில் கலைந்து நிமிர்ந்தவன், அப்போதுதான் மலர் அவன் தோளில் சாய்ந்தவாறே உறங்கிவிட்டிருந்ததை கவனித்தான், சின்ன முறுவலுடன், அவளை வாகாக தோளில் படுக்க வைத்தபடியே, உள்ளே சென்று மயூரியையும் அழைத்துக் கொண்டு மருத்துவரை பார்க்க சென்றான்!
மயூரிக்கு உடம்பில் அங்காங்கே வலி இருந்தது! ஏனோ மனதும் பலவீனமாகிவிட்ட உணர்வு! அதனாலேயே மலரை அவள் தூக்கிக் கொள்ள முனையவில்லை!
💙🤎💙
ரிஷி , மயூரியையும், மலரையும் இறக்கிவிட்டு, அவளது பொருட்களையும் கொடுத்து அனுப்பினான்! அவர்கள் பின்னோடு வந்த முத்து அவளது வண்டியை கொணர்ந்து நிறுத்திவிட்டு சாவியை மயூரியிடம் கொடுத்தவன், காரில் ஓட்டுனர் இருக்கையில் ஏறிக் கொண்டு வண்டியை கிளப்பினான்!
மயூரிக்கு சோர்வாக இருந்தது! ஆயினும் உடை மாற்றிவிட்டு, ரிஷி வாங்கிக் கொடுத்திருந்த இரவு உணவை தானும் உண்டு மகளுக்கும் கொடுத்துவிட்டு படுத்தவளுக்கு ஏனோ உறக்கம் வரவில்லை!
மயூரி பெருமூச்சுடன் புரண்டு படுத்தாள்! மாலையில் வழியில் பார்த்த அவனது நினைவு வந்தது! அவன் சங்கர்! கடைசியாக அவனை பார்த்து ஐந்து வருடங்களாகிவிட்டது! இத்தனை ஆண்டுகளில் அவனை அவள் நினைக்கவில்லை என்பதை ஒரு திடுக்கிடலுடன் உணர்ந்தாள்! அப்படி என்றால் அவனை அவள் விரும்பவில்லையா? இல்லை என்றது மனது!
சங்கர் ஒரு காலத்தில் அவளை காதலித்தவன்! ஆம் அவளுக்கு அவனிடம் பெரிதாக குறை காண முடியவில்லை! ஆகவே அவன் சொன்ன காதலுக்கு சம்மதம் சொன்னாள்! அவள் யாருமற்றவள்!
அவளது பின்புலம் பற்றி அவன் ஆராயாமல் திருமணம் செய்துகொள்ள கேட்டவன்! அப்போது அவளுக்கும் கணவன் குழந்தை, குடும்பம் என்று வாழும் ஆசை உண்டாகியிருந்தது! ஆளும் பார்க்க நன்றாக இருந்தான்! யாரோ ஒருவனுக்கு மனைவியாகத்தான் போகிறாள்! அந்த ஒருத்தன் அவள் அறிந்தவனாக இருப்பதில் கூடுதல் நன்மைதானே என்று நினைத்தாள்! அத்தோடு,இருவர் சம்பாதித்தால் கடன்கள் சீக்கிரமாக தீர்ந்து, இருவரும் நல்லதொரு குடும்ப வாழ்வை வாழலாம் என்று அவன் உருவேற்றியிருந்தான்! அதனால் அவள் சிந்திக்கவில்லை! ஆனால்..!
ஆறு வருடங்களுக்கு முன்பு
மயூரியும், மான்சியும் ஆதரவற்றவர் இல்லத்தில் ஒன்றாக வளர்ந்தவர்கள்! மான்சி , மயூரியைவிட இரண்டு மூத்தவள்! ஆனாலும் பயந்த சுபாவம் கொண்டவள்! படிப்பை முடித்ததும் பெரிய கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது! மயூரிக்கும் வேறு ஒரு கம்பெனியில் வேலை கிடைத்தது! ஆகவே இருவருமாக பெண்கள் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கிக் கொண்டு வேலைக்கு சென்று வந்தனர்! ஆரம்பத்தில் சந்தோஷமாக சென்றது அவர்களது வாழ்க்கை!
மயூரியுடன், சங்கர் என்பவன் வேலை செய்தான்! அவளை விட ஏழு வருட சீனியர்! நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன்! அவனுக்கு இரண்டு சகோதரிகள் ! இருவருக்கும் திருமணம் ஆகியிருந்தது! ஆனால் அதற்காக வாங்கிய கடன்கள் அவன் மீதுதான் இருந்தது! சொந்தமாக வீடு இருந்தது! அப்பா இல்லை ! அம்மா மட்டும்தான்! வாங்கும் சம்பளம் கடனை அடைக்கவும், அன்றாட செலவுக்கே சரியாக இருந்தது! இதில் சேமிப்பு என்பது பெருங்கனவாகிப் போனது!
மயூரியிடம் அவன் நல்லவிதமாக பழகினான்! தன்னைப் பற்றி எல்லாமும் சொன்னான்! மயூரிக்கு அப்போது உலகம் எப்படி என்று தெரியாது! குடும்பம் என்றால் எப்படி இருக்கும் என்பதும் அவள் பார்த்து வளரவில்லை! அவன் தன் குடும்ப விஷயங்களை பேசும்போது, அவனது கஷ்டத்தை போக்க வேண்டும் என்று தோன்றும்! ஆனால் எப்படி என்பது தான் அவளுக்கு புரியவில்லை! மயூரியின் சம்பளம் அவள் ஒருத்திக்கு தாராளம்தான், விடுதிக்கு கட்டும் பணம் போக அத்தியாவசிய செலவுகள் போக, கையிருப்பு அதிகமாகவே இருந்தது! ஆடம்பர செலவு செய்யும் வழக்கம் இல்லாததும் ஒரு காரணம்! இல்லத்தின் தலைவி, அவளுக்கு அறிவுறுத்தி அனுப்பியது அவளுக்கு நினைவில் இருந்தது! பணம் இல்லாமல் இந்த உலகில் வாழமுடியாது! கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை அனாவசியமாக செலவு செய்யாமல், எதிர்காலத்திற்கு என்று சேமிக்க பழகணும்" என்றிருந்தார்!
அதற்காகவே வங்கிக் கணக்கில் அவள் சேமிக்க ஆரம்பித்திருந்தாள்!
சில மாதங்கள் பிரச்சினை ஏதும் இல்லாமல் வாழ்க்கை சுமூகமாக சென்றது! மான்சியும் மகிழ்ச்சியாக வளைய வந்தாள்! அவளிடம் தெரிந்த உற்சாகம் மயூரிக்கு சந்தோஷமாக இருந்தது! ஒரு நாள் அதற்கான காரணம் தெரிந்தது! அது மான்சி காதலிக்கிறாள் என்பது! அது சற்று அதிர்ச்சி என்றால், அடுத்த அதிர்ச்சி அவன் அவளது கம்பெனியின் முதலாளி என்பதுதான்! ஏனோ மயூரிக்கு பயமாக இருந்தது! உண்மையில் அவள் அப்போது பயந்திருக்க வேண்டியது சங்கரைப் பற்றித்தான் என்பதை உணராமல், தோழிக்காக கவலையுற்றாள்!
அந்த நிலையில் தான், திடுமென ஒரு நாள் சங்கர், கைமாத்தாக பணம் கேட்டான்! அடுத்த மாத சம்பளம் வாங்கியதும் கொடுப்பதாக சொன்னான்!
மயூரியும் கொடுத்தாள்! சொன்னது போல அடுத்த மாதம் சங்கர் திருப்பிக் கொடுத்துவிட்டான்! இரண்டு மாதங்கள் கழித்து தாயின் உடல் நலம் சரியில்லை கையில் வைத்திய செலவுக்கு பணமில்லை என்று ஒரு தொகையை வாங்கிச் சென்றான்!
அடுத்த மாதம் அதையும் திருப்பிக் கொடுத்துவிட்டான்!
அப்போதுதான் அவன் காதல் சொல்லி திருமணம் செய்து கொள்ள கேட்டது! மயூரிக்கு அவனிடம் பெரிதாக குறை தெரியவில்லை!
ஆனால் நாட்கள் செல்ல செல்ல, அவன் பணம் கேட்பதும் திருப்பித் தராமல் இழுத்தடிப்பதுமாக இருந்தான்! ஆனால் அதை கவனிக்க முடியாமல், மான்சியிடம் தெரிந்த மாற்றங்கள் கலவரப்படுத்தியது!
"மானு, என்னாச்சு ? ஏன் டல்லாக இருக்கிறே?"
"ஒன்னுமில்லை, மயூ, எனக்கு ஏதோ செய்யுது! நான் சாகப்போகிறேனா? நெஞ்செல்லாம், பிசையுது!" கண்ணீர் வழிய சொன்னவளை அணைத்துக் கொண்டாள்!
"சே,சே, அப்படி ஒன்றும் ஆகாது மானு! வா டாக்டரிடம் காட்டலாம்! முதலில் ஏதாவது சாப்பிடு! ராத்திரியும் நீ ஏதும் சாப்பிடவில்லை!"
என்று சமாதானம் செய்துவிட்டு, தட்டில் சாதம் குழம்பு போட்டு, பிசைந்து எடுத்து வந்து ஊட்ட தொடங்கினாள்! இரண்டு வாய் சாதம் உள்ளே போனதும் , குட்டியூண்டு குளியலறைக்கு ஓடினாள் மான்சி!
மயூரிக்கு ஏதோ புரிவது போல இருந்தது! பதற்றத்துடன், தோழியின் பின்னே சென்று அவளுக்கு உதவினாள்! அவளை அழைத்து வந்து கட்டிலில் படுக்க வைத்தாள்!
"மானு, என்ன காரியம் பண்ணி வச்சிருக்கிறே? என்றாள் கோபத்தை அடக்கிய குரலில்!
" என்.. என்ன மயூ? நான் என்ன செய்தேன்?"
" ஒரு பொண்ணு எதை இழக்கக்கூடாதோ அதை இழந்துட்டு வந்து நிற்கிறியேடி? இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா, என்னாகும்னு யோசிச்சியா?" என்று படபடத்தாள்!
மான்சியின் விழிகள் விரிந்தது! " நீ .. நீ என்ன சொல்றே மயூ? அப்போ நான் சாகமாட்டேனா? எனக்குள்ள பாப்பா இருக்குதா? " என்றாள் குதூகலமாக!
மயூரி அவளை ஓங்கி அறைந்தாள்! உனக்கு புரியுதா இல்லையா மான்சி? இது முறைப்படி திருமணமாகி வந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்டி! ஆனால் இது தப்புடி! நீ எப்படி ? " கண்கள் கலங்க, மயூரி கேட்க,
" இதோ பார், மயூ, நீ பயப்படறாப்ல ஏதும் ஆகிடலை! என்னோட கேசவ் ரொம்ப நல்லவர்! அன்றைக்கு நாங்க டேட்டிங் போயிருந்தோமே அப்போது மழையில் நனைந்து விட்டோம்! உனக்குத்தான் தெரியுமே எனக்கு மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும் என்று! அன்று மாற்றுத் துணியும் கையில் இல்லை! எனக்கு குளிர் தாங்கமுடியவில்லை! அப்போது வேறு வழியில்லாமல் அந்த சம்பவம் நடந்து விட்டது! கேசவ் எனக்கு அவர் செயினை என் கழுத்தில் போட்டார்! அவரோட பெற்றொர்கிட்டே பேசி, உடனே திருமணத்திற்கு சம்மதம் வாங்கிறதா சொன்னார்! அதன்படி அவங்க வீட்டில் அவர் பேசினாராம், வீட்டில் ஒத்துக் கொண்டார்கள்! ஆனால் அதற்குள்ளாக அவருக்கு வெளிநாட்டு கான்ட்ராக்ட் கிடைத்துவிட்டதால் உடனடியாக போக வேண்டிய நிலை! ஒரு மாதத்தில் வந்து விடுவதாக தெரிவித்து சென்றார்! ஆனால் அங்கே எதிர்பாராதவிதமாக வேற வேலைகளும் சேர்ந்துட்டதால் வர கொஞ்சம் லேட்டாகுதுன்னு சொன்னார்! அவர் வந்ததும் எங்க கல்யாணம் நடக்கும் மயூ! இப்ப அங்கே ராத்திரி நேரம் ! இன்னிக்கு ராத்திரி நான் விஷயத்தை சொன்னதும், உடனே கிளம்பி வந்துடுவார் பாரேன்!" சிறு குழந்தையாக அவள் சொல்ல சொல்ல, அவளை பரிதாபமாக பார்த்தாள் மயூரி!
மான்சி ஏமாந்து விட்டதை கூட உணரவில்லையே ? அந்த மனுஷனுக்கு, ஒரு அப்பாவி பெண்ணை எப்படி ஏமாற்ற மனசு வந்ததோ ? மயூரி அதற்கு மேல் அவளை தொந்தரவு செய்யாமல் குடிப்பதற்கு கொடுத்து படுக்க வைத்துவிட்டு தன் வேலையை பார்க்கச் சென்றாள்!
ஆனால் அவள் மனம் முழுதும் பெரும் கவலையில் ஆழ்ந்திருந்தது!
இந்த விபரம் விடுதியில் தெரிந்தால், தொடர்ந்து அங்கே தங்குவது என்பது முடியாத காரியம்! என்ன செய்வது ? தோழியை நிர்க்கதியாக விட்டுவிட அவளுக்கு மனம் இல்லை! நூற்றில் ஒரு வாய்ப்பாக அந்த கேசவ் வந்து விட்டால் எந்த பிரச்சினையும் இல்லை! அவனிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக இருக்கலாம்! அவன் வருவானா?
அன்று இரவு மான்சி அவனை தொடர்பு கொள்ள முயன்றபோது அவனது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிந்தது! அத‌ற்காக மான்சி மனம் தளர்ந்து விடவில்லை! தொடர்ந்து ஒரு வாரம் அவளது உடல் உபாதைகளை கூட பொருட்படுத்தாமல் அவனை தொடர்பு கொள்ள முயன்றாள்! மறுபடியும் அதே பதில் கிடைக்கவும், அவள் சோர்ந்து போனாள்! கண்ணீரும் கம்பலையுமாக அவள் அத‌அறைக்குள்ளே அடைந்து கிடந்தாள்!
தன் கைப்பேசியிலும் தொடர்பு கொண்டு பார்த்தாள்! அதே பதில் தான் !
கடைசி முயற்சியாக," மானு, அவர் வீடு எங்கே இருக்கு தெரியுமா? விசிட்டிங் கார்டு ஏதும் கொடுத்திருக்கிறாரா ? அல்லது உன் கம்பெனியில் முக்கியமான நபர் இருப்பார்களே அவர்கள்கிட்டே, அவரைப் பற்றி விசாரிக்கலாமா?"
மான்சியிடம் எதற்குமே பதில் இல்லை! " ஆபீஸ்ல, நான் யார்கூடவும் அதிகமா பேச மாட்டேன்! எனக்கு வேலை கேசவ்கிட்டே தான்!"
" அவர் போட்டோ இருக்கா? அவர்கூட நீ எடுத்துக்கிட்டது?"
" இருக்கு, மயூ! எல்லாம் என் போன்ல இருக்கு!"
"அப்படின்னா, ஒன்னு செய்யலாம் மானு! அவர் கம்பெனியில் கேட்டா, வீட்டு விலாசம் கிடைக்கும்! அங்கே போய் இப்படின்னு விஷயத்தை சொல்லுவோம்!" என்றாள்!
" ம்ஹூம்! வேண்டாம் மயூ! கேசவ்வை நான் நம்பாது போல ஆகிடும்!"
" அப்போ இந்த குழந்தையை என்ன செய்யப் போறே?" தீவிரமான முகத்துடன் கேட்டாள் மயூரி!
" இதென்ன அபத்தமான கேள்வி? பெத்துக்கத்தான் போறேன்!
" மானு, அது சாத்தியமில்லை, பேசாம இதை அழிச்சிடு! நமக்கு வேற வழியில்லை! "
" மயூரி....!" அதிர்ச்சியுடன் அவளை பார்த்தாள்!
" இது, முறையான குழந்தை இல்லை மானு! நீயும் , நான் சொல்வதற்கு ஒத்துக் கொள்ள மறுக்கிறாய்! பிறகென்ன செய்வது மானு?"
" எனக்கு நம்பிக்கை இருக்கு கேசவ் வந்துடுவார் மயூ! அதனால இந்த பேபி எனக்கு கட்டாயம் வேணும்! " கெஞ்சலுடன் மயூரியின் கையை பிடித்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள் மான்சி!
" சரி, சரி அழாதே நான் ஏதாவது செய்கிறேன்! என்ற மயூரிக்கு அவர்களது இல்லத்தின் தலைவி தான் நினைவுக்கு வந்தார்!
தலைவிக்கும் அதிர்ச்சி தான்! அதே சமயம் அந்த இல்லத்தில் மான்சியை வைத்துக்கொள்ள முடியாது என்றார்! அதுவே மற்ற பிள்ளைகளுக்கு உதாரணமாகிவிடும் என்று காரணமும் சொன்னார்! ஆகவே, மான்சியை மதுரையில் இருந்த இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்!
மான்சி, பேச்சற்றுப் போனாள்! பிரம்மை பிடித்தார்போல கிடந்தாள்!
மயூரிக்கு வேலை பார்க்க வேண்டிய அவசியம் இருந்ததால் அவள் கோயம்புத்தூரில் தொடர்ந்து தங்கியிருந்தாள்!
 

Attachments

  • CYMERA_20230211_012518.jpg
    CYMERA_20230211_012518.jpg
    71.8 KB · Views: 24

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
878
மயூரி, அவ்வப்போது மான்சியையும் போய் பார்த்துவந்தாள்! அப்போதெல்லாம் கேசவ் பேசினானா ?" என்று ஆவலாக கேட்பாள் மான்சி! இல்லை என்றதும் அவள் முகமே ஒளியிழந்து விடும்!

அவளது அந்த எதிர்பார்ப்பிற்காக, கேசவ் பற்றி கம்பெனியில் விசாரிக்க சென்றபோது, அங்கே அதிர்ச்சி காத்திருந்தது! ஆம் அந்த நிறுவனம் வேறு ஒருவரின் கை மாறிவிட்டதாக சொன்னார்கள்! அதன்பிறகு, அந்த கேசவ் , மான்சியை நம்ப வைத்து மோசம் செய்துவிட்டான் என்ற முடிவுக்கு வந்தாள் மயூரி!

சங்கர் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்த தொடங்கியிருந்தான்! ஆகவே, அவள் மான்சியின் விஷயத்தை சொல்லி, அவளுக்கு குழந்தை பிறந்தபின் திருமணத்தை பற்றி முடிவு செய்யலாம் என்றுவிட்டாள்!

அப்போது தான் சங்கரின் உண்மை முகம் தெரியாத வந்தது!

" அவள் என்ன உன் கூடப்பிறந்தவளா? அவளுக்காக ஏன் உன் வாழ்க்கை முடிவை தள்ளிப் போடுகிறாய்? " என்றான்!

" அவள் உடன் பிறக்கவில்லை தான்! ஆனால் சகோதரியைவிட மேலானவள்! அவள் கஷ்டத்தில் இருக்கும்போது நான் எப்படி சந்தோஷமாக வாழ முடியும்? என்று சூடாக கேட்கவும், அவன் தழைந்து பேசினான்!

"நீ சொல்வது சரிதான்! ஆனால் நமக்கு கல்யாணம் ஆகிட்டா, அவளை நம்மகூடவே வச்சு பார்த்துக்கலாம் தானே? அப்படி யோசி மயூரி!" என்றான்.

" நீங்க சொல்றதை கேட்க சந்தோஷமாக இருக்கு சங்கர்! ஆனால் கேட்கிறவங்களுக்கு எப்படி பதில் சொல்ல முடியும்? அவளுக்கு குழந்தை பிறந்துவிட்டால், அவளுக்கு வாழ ஒரு வகை செய்து கொடுத்துவிட்டால், அவள் வழியைப் பார்த்துக் கொள்வாள்! அதனால் இன்னும் இரண்டு மாதங்கள் தானே? பொறுத்துக் கொள்ளுங்கள், ப்ளீஸ்!

அப்போதைக்கு சங்கரை சமாளித்துவிட்டாள்! ஆனால் அவள் எண்ணியது போல நடக்கவில்லை!
மான்சியின் பிரசவத்தில் சிக்கல் உண்டாகி, தாயா? குழந்தையா?என்ற நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஷயத்தை கேள்விப்பட்டு மயூரி, அங்கே சென்றபோது, மான்சியின் மூச்சு நின்றுவிட்டிருந்தது!

மான்சியின் மறைவை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! இல்லத்தின் தலைவி அந்த குழந்தையை பற்றிய முடிவை மயூரியிடம் விடுத்தபோது, அந்த குழந்தை தானே வளர்ப்பது என்ற முடிவை சற்றும் தயங்காமல் எடுத்தாள் மயூரி! குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை அவள் அங்கேயே தங்கினாள்! அதற்குக் காரணம் சங்கர்!

குழந்தை பிறந்த விபரத்தை சங்கருக்கு தெரிவித்து, தானே வளர்க்க நினைப்பதைச் சொன்னாள்! சிலகணங்கள் மௌனத்திற்கு பிறகு," முறை இல்லாமல் பிறந்த குழந்தைக்கு நான் தகப்பனாக முடியாது! அவ்வளவு தாராளமான மனசு எனக்கு இல்லை! உனக்காக என்று ஏற்றாலும் என் அம்மா ஒருக்காலும் ஒத்துக்கொள்ள மாட்டார்! அதனால குழந்தையை விட்டுவிட்டு வந்தால் , நம் திருமணம் நடக்கும்!"

"நான் என் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டேன்! " என்றவள் அதற்கு மேல் பேசவில்லை! அப்போதே அவளுக்குள் ஒரு விடுதலை உணர்வுதான் உண்டாயிற்று!

கோவைக்கு விடுதியை காலி செய்ய சென்றபோது, கோவை அலுவலகத்தில் ராஜினாமா கடித்தத்தை கொடுக்க சென்றாள்!
அப்போது சங்கருக்கு பணக்கார இடத்தில் பெண் அமைந்திருப்பதாக அங்கே பணிபுரிந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்! அப்போது ஒரு விஷயம் அவளுக்கு புரிந்தது! சங்கருக்கு பணத்தின் மீதுதான் காதல் தன் மீது இல்லை என்று!

அதன் பிறகு, அந்த இல்லத்தின் தலைவர்,சென்னையில் இருந்த கம்பெனியில் அவளுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்!

இங்கே வந்து நான்கு வருடங்கள் ஓடிவிட்டது! அவள் மனதில் அன்று சங்கர் மீது உண்டானது காதல் இல்லை! அது இப்போது தெளிவாக புரிந்தது!

பழைய எண்ணங்களின் தாக்கத்தில் தாமதமாக தூங்கிப் போனாள்!
🤎🤎🤎

மறுநாள் !

தாமதமாக எழுந்து மெதுவாக வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த மயூரிக்கு உடம்பில் வலி தெரிந்தது! படுத்து கொண்டால் தேவலாம் போல இருந்தது ! ஆனால் குழந்தை எழுந்து பசி என்று கேட்டால் சாப்பிட கொடுக்க வேண்டுமே! என்று வலியை பொறுத்துக் கொண்டு, அவள் அடுப்பில் பாலை வைத்தபோது அழைப்பு மணி ஒலித்தது!

யார்? என்றவாறு கதவை திறந்தாள் மயூரி! அங்கே ஒரு பெண் நின்றிருந்தாள்!

" என்ன வேண்டும்? "

" இரண்டு நாளைக்கு உங்க வீட்டுல வேலை செய்யணும்னு எங்க ஐயா சொல்லி அனுப்பினாரைம்மா! அவள் சொல்லும்போதே மயூரியின் செல் அழைத்தது!

அதை எடுத்துப் பார்த்தாள் தெரியாத எண்கள்! " ஹலோ"

" ஹலோ, மயூரி! நான்தான் ரிஷி பேசுறேன்! நேற்று என் காரில் விபத்து நடந்ததே ! "

" ம்ம் என்ன விஷயம் சார்?

"அந்தப் பொண்ணை வேலைக்கு சேர்த்துக்கோங்க, மயூரி! இரண்டு நாளைக்கு அதுவும் உங்க ஹெல்த் சரியாகி வரைக்கும்தான்! எனக்கு தெரியும் கீழே விழுந்ததுல எவ்வளவு பெயின் இருக்கும்னு! நான் இதைவிட மோசமாக விபத்துக்குள்ளாகி அனுபவித்து இருக்கிறேன்! அதனால் இந்த சின்ன உதவியை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்! தவறுக்கு சின்ன பரிகாரம்!" அவனது பேச்சில் தெரிந்த பணிவில் அவளால் தட்டிப் பேச முடியவில்லை!

" ஓகே, டூ டேஸ் தான்! அதற்கு மேலே வேண்டாம்! " என்றவள் அந்த பெண்ணிடம் வேலைகளை சொல்லிவிட்டு, மகள் அருகில் படுத்துவிட்டாள்!

சற்று நேரத்தில் காலை உணவை தயாரித்துவிட்டு, மயூரிக்கு குடிப்பதற்கு காபி போட்டுக் கொடுத்தவள், துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுவிட்டு, மதிய சமையலுக்கு என்ன செய்வது என்று கேட்டு சமைக்க தொடங்கினாள் அவள் _ கிரிஜா!

உண்மையில் அந்த இரண்டு நாட்களும் அந்த பெண்ணின் வருகை பேருதவியாக இருந்தது! அதற்கு நன்றி சொன்னாள் மயூரி!

அதன் பிறகு நலன் விசாரிப்புகள் மட்டும் தொடர்ந்தது! ஒருபுறம் அவளிடம் கேட்டுக்கொண்டு மலரை காரில் வெளியே அழைத்து போய் வந்தான்! குழந்தையும் அவன் மீது பாசமாக இருந்தாள்!

இரண்டு மாதங்கள் சென்றிருந்த நிலையில் , எதிர்பாராதவிதமாக இருவரும் நேரடியாக சந்திக்க நேர்ந்தது! ந

அன்றைக்கு மான்சியின் பிறந்த நாள்! அவளது இஷ்ட தெய்வமான பெருமாள் கோவிலுக்கு, மயூரி, மகளை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள்!

அங்கே ரிஷியும் வந்திருந்தான்! அன்னதானம் வழங்க!

" வாட் எ சர்ப்ரைஸ்! ஹே பிரின்சஸ் கமான்! என்றவாறு கைகளை விரிக்க, மலர் அவனிடம் தாவி ஓடினாள்!

"குட்டிம்மா, பார்த்துடா" என்று மயூரி மகளுக்கு ஜாக்கிரதை சொன்னாள்!

"என்ன இன்னிக்கு விசேஷம்? அன்னதானம் எல்லாம தடபுடலாக இருக்கிறது? என்றாள் மயூரி! உள்ளூர அவளுக்கே சற்று வியப்பாகத்தான் இருந்தது! அவள் ஆண்களிடம் அவசியமின்றி நின்று பேசுவதில்லை! அப்படிப்பட்டவள் இவனுடன் மட்டும் எப்படி சகஜமாக பேசுகிறாள்? என்று!

" இன்று என் மனைவியின் பிறந்த நாள்! " என்றான் சோகம் இளையோட!

" அவங்க வரவில்லையா? "

" அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லையே? நான் அவளை தேடாத இடம் இல்லை! பகிரங்கமாக தேடவும் கொஞ்சம் பயம்! ஒருவேளை அவளுக்கு வேறு யாருடனும் திருமணம் நடந்து இருந்தால், அந்த வாழ்க்கைல என்னால எந்த தொந்தரவும் ஏற்பட்டுடக்கூடாதுல்ல!
வருஷம் தவறாமல் இந்த நாளில் நான் எந்த ஊரில் இருந்தாலும் அவளுக்கு பிடித்த இந்த சாமி கோயிலில் தான், அன்னதானம் செய்து வர்றேன்!"

" உங்கள் மனைவியை வேறு ஒருவரால எப்படி மணக்க முடியும் புரியலையே? சாரி சார், இது உங்க சொந்த விஷயம் நான் கேட்கிறது தப்பு! ஏதோ ஆர்வத்துல கேட்டுட்டேன் சாரி!

" யார்கிட்டயாவது சொல்லணும்னு தான் நானும் நினைப்பேன்! ஆனால் அதை எத்தனைபேர் சரியாக புரிந்து கொள்வார்கள்? அனால் உங்ககிட்ட சொல்ல எனக்கு தயக்கமே ஏற்படவில்லை! " என்றவன் தன் கைப்பேசியின் திரையை ஆன் செய்து காட்டினான்!

" இவள் தான் என் மனைவி, மனு, மான்சி! என்றவனின் குரல் கரகரத்தது!

"என்னது?" மயூரி உச்சபட்ச அதிர்ச்சியுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்!

"மயூரி? நீங்க, நீங்கதான் என் மனுவின் தோழி மயூரியா?" அவனும் திகைப்புடன் கேட்டான்!

மயூரியால் பேச முடியவில்லை! கண்ணில் நீர் வழிய,மலரின் முகமும் அழுகைக்கு தயாரானது! அதை கவனித்த, ரிஷி, " ஷ் ஷ்.. பிரின்சஸ், அம்மாக்கு ஒன்னுமில்லைடா! கண்ணுல தூசி பட்டிருச்சு" என்று அரவணைத்துக் கொண்டே, " கன்ட்ரோல் யுவர்செல்ஃப் மயூரி! என்று தணிந்த குரலில் சொல்ல அவசரமாக கண்களை துடைத்து முகத்தை சீர் செய்து கொண்டாள்!

அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன் என்று அவன் எழுந்து சென்றான்!

சொன்னது போல திரும்பி வந்தவன், " மயூரி வாங்க நாம வெளியே போய் பேசலாம்! என் மான்சி பத்தி தெரிஞ்சே ஆகணும்! ப்ளீஸ்!"

" எனக்கும் தான் சில விஷயங்கள் தெரியணும்!

🤎💙💙

மயூரி, மான்சியைப் பற்றி சொல்லச் சொல்ல, ரிஷி அப்படியே சிலையாகும் போனான்! சிகண்ங்களில் திகழ்வுக்கு திரும்பியவன்,மலரை பார்த்தான்,அவள் தூங்கியிருந்தாள்! அவளை ஆசையாக தொட்டு முத்தமிட்டான்!

"இவள் என் மகள்! அவன் விழிகள் கலங்கியது?

" சொல்லுங்க ரிஷி, உங்களுக்கு அப்படி என்னதான் ஆயிற்று?

"மயூரி, மனிதன் போடும் கணக்கு எப்போதும் நடப்பதில்லை! உடனடியாக வந்து விடுவேன் என்று போனேன்! ஆனால் வேலை இழுத்துவிட்டது! எல்லாம் முடிந்து, கிளம்பிய போது தான் அந்த கோர விபத்தில் நான் சிக்கினேன்!


மான்சியிடம் நான் சொன்ன விஷயங்கள் அத்தனையும் நிஜம் மயூரி! அன்றைக்கு மான்சி என்னை தொடர்பு கொண்ட நாளில் நான் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தேன் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள், நான் பிழைத்து எழுவேன் என்று யாரும் நினைக்க முடியாத அளவுக்கு என் உடல்நிலை முன்னும் பின்னுமாக ஊசலாடிக் கொண்டிருந்தது! ஒருவழியாக நான் பிழைத்து எழுந்ததே தெய்வ செயல்!
அதன் பிறகு நான் மான்சியை தேடி வந்தபோது எந்த தகவலும் இல்லை! உன்னைப் பற்றி எனக்கு அதிகம் தெரிந்திருக்கணும்! மான்சியின் வாயிலாக உன்னைப் பற்றி அறிந்திருந்தாலும் நான் அவள் சொல்வதை ஆர்வமாக கேட்டுக் கொண்டதில்லை! சந்திக்கும்போது எனக்கு அவளிடம் பேசத்தானே ஆசை வரும்? எல்லாம் விதி! வேற என்ன சொல்ல?"

"மயூரி, எங்கள் குழந்தைக்காக நீ உன் வாழ்க்கையையே தியாகம் செய்ய துணிந்நுவிட்டாயேமா? மலருக்காக நீ கைம்பெண் வேடம் போட்டுக் கொண்டாயே! இல்லாத அழகை வெளிச்சம் போடும் உலகம் இது! என் மகளுக்காக உன் அழகை மறைத்து, வாழ்ந்தாயே! உனக்கு நான் என்ன கைமாறு செய்வேன்?"
என் மகளுக்காக வாழும் உன்னைவிட சிறந்த தாய் கிடைக்க மாட்டாள்! அவள் சிறப்பாக வாழ வேண்டாமா? தாயின் அரவணைப்பு போதுமா? தந்தையின் பாதுகாப்பு வேண்டாமா? உனக்கு ஒன்று தெரியுமா? அவளை பார்த்தது முதல் , ஓர் ஈர்ப்பு! அதனாலேயே உன் நட்பை ஏற்படுத்திக் கொண்டேன் மயூரி!
நீ வேண்டிய அளவு அவகாசம் எடுத்துக் கொள் மயூரி! நன்றாக யோசி! அவள் நம் மகளாக வளர வேண்டும் என்று எனக்கு ஆசை! உன் மீது என் மனு சொல்லி சொல்லி ஒரு பிரியம் ஏற்கனவே உண்டு! காதல் வரும்போது வரட்டும்! நிச்சயமாக அது நமக்குள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது! நீ யோசி! அதுவரை நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்! நீயாக அழைக்கும் வரை இந்த ரிஷிகேசவன் உன் முன்னாள் வரமாட்டான்! " என்றவன் இருவரையும் இறக்கிவிட்டு சென்றுவிட்டான்!

🤎💙🤎

ஆறு மாதங்களுக்கு பிறகு!

அன்று மயூரிக்கும் - ரிஷிக்கும் திருமணம் இனிதே நடந்தேறியது!
உண்மையில் மயூரிக்கு ஆறு மாத அவகாசம் தேவைப்படவில்லை! இரண்டாம் நாளே தன் உள்ளம் அவளுக்கு புரிந்து போயிற்று! அப்போதே அதை அவனிடம் சொல்லியும் விட்டாள்! ஆனால் காதலர்களாக கொஞ்சம் காலம் வாழ்ந்து விட்டுத்தான் திருமணம் செய்து கொள்வது என்று ஒத்தமனமாக இருவரும் முடிவு செய்து விட்டனர்! அதன்படி இனிமேல் பார்த்து பார்த்து ஏங்கி வாழ முடியாது என்ற நிலைக்கு வந்ததும் கெட்டி மேளம் கொட்டியாயிற்று!

"சுப மங்கலம்"
 

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
878
விந்தையடி நீ எனக்கு
வீசும் தென்றல் நான் உனக்கு.....

விந்தையான கதை தான்....

மணம் ஆகாமலே
மகளுடன் வாழும் மங்கை
மனைவியைத் தேடி அலையும்
மணம் ஆகாத மன்னவன்.....

காதலுக்காக கருவை சுமக்கும் தோழி நட்புக்காக தோழியை சுமக்கும் மயூரி...
பணத்தை குறியாக நினைக்கும் காதலன்
கல்யாணத்தை தவிர்த்து விட்டு தனியாக வாழும் மயூரி .....
தன்னிலை மறந்து வாழ்ந்தாலும்
தன் மனைவியை தேடி
தனியாக வாழும் ரிஷி_ சில பல
திருப்பங்களுடன்
சுபமாக நிறைந்தது கதை.... 👏👏💐💐🤩🤩
வாழ்த்துக்கள் சகி 💐💐💐💐

@Apsareezbeena loganathan
 

Aieshak

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
53
விந்தையடி நீ எனக்கு
வீசும் தென்றல் நான் உனக்கு.....

விந்தையான கதை தான்....

மணம் ஆகாமலே
மகளுடன் வாழும் மங்கை
மனைவியைத் தேடி அலையும்
மணம் ஆகாத மன்னவன்.....

காதலுக்காக கருவை சுமக்கும் தோழி நட்புக்காக தோழியை சுமக்கும் மயூரி...
பணத்தை குறியாக நினைக்கும் காதலன்
கல்யாணத்தை தவிர்த்து விட்டு தனியாக வாழும் மயூரி .....
தன்னிலை மறந்து வாழ்ந்தாலும்
தன் மனைவியை தேடி
தனியாக வாழும் ரிஷி_ சில பல
திருப்பங்களுடன்
சுபமாக நிறைந்தது கதை.... 👏👏💐💐🤩🤩
வாழ்த்துக்கள் சகி 💐💐💐💐

@Apsareezbeena loganathan
மிக்க நன்றி சகோதரி!♥️♥️♥️
 
Top