• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

39. என்னாளும் உன் பொன்வானம் நான்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
பலவித பறவைகளின் ஒய்யார இசையில் கண்விழித்தாள் துளசி.


தூரத்தே எங்கோ தேங்கி நின்ற மழைநீரின் துளியானது குளுப் குளுப்பென விழும் சத்தம் சந்தம் மாறாது அந்த பறவைகளின் இரைச்சலின் நடுவேயும் மிகத்தெளிவாகக் கேட்டது.


கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தவாறு எழுந்து கண்ணாடி ஜன்னல் வளியே பார்வையை திருப்பினாள்.
பொழுது நன்றாக விடிந்ததற்கு அறிகுறியாக வெளிச்சம் உள்ளே ஊடுருவது தெரிய.

'மழை நின்னுடிச்சா? அப்போ இன்னைக்கு ஊருக்கு போயிடலாம்.' என நினைத்தவாறு எழுந்து வந்து ஜன்னலை திறந்தவள் முகமதனை இதமான குளிர்காற்று வருடிச்செல்ல.

அந்த இதத்தில் கண்களை மூடி அதை அனுபவித்தவள்,
எந்த காலநிலை ஆனாலும் இந்த மலைக்கிராமம் தனி அழகு தான். என அதையே ரசித்து நின்றவள் வயிற்றில் வண்டில் ஓடும் சத்தம்.



“ஆ....” என வயிற்றை தடவியவளுக்கு அந்த சத்தம் எதன் அறிகுறி என தெரிந்து போனது.

பின்னே நேற்றைய இரவில் சாப்பாட்டினை மறந்துபோய் உறங்கினால் பசிக்காது என்ன செய்யும்?
தன் உடையினை எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்று வந்தவள் நேராக சென்றது கிச்சனுக்குள் தான்.


தனக்கும் முரளிக்குமாக காஃபியினை போட்டு எடுத்து வந்தவள் அவன் அறை கதவு திறபடாமல் இருக்கவே,
நிதானமாவே எழுந்திருக்கட்டும், அதுக்குள்ள காஃபிய குடிச்சிட்டு சின்னதா எதாவது செய்து சாப்பிடுவோம். என எண்ணியவாறு காஃபியினை அருந்த ஆரம்பித்தவள் முன் வந்து நின்றார் முத்து.



“வந்திட்டீங்களாண்ணா? சார் எழுந்திட்டா
போதும் நாம கிளம்பிடலாம்.
ரோடு எல்லாம் என்ன மாதிரி இருக்குண்ணு பாத்தீங்களா? எதாவது தகவல் தெரிஞ்சிச்சா?” எனக் கேட்க.


“நான் வரப்போ ரோட கிளீன் பண்ணிட்டு இருக்காங்க மேடம்.
போறதுல எந்த பிரச்சினையும் வராதுன்னு நினைக்கிறேன். ஏன்னா அதுக்கேத்தா மாதிரி மாற்று வழிகளை ஏற்படுத்தி தந்திருக்காங்க” என்றார் முத்து.


“நல்லது அண்ணா. காஃபி சாப்பிடுறீங்களா?” எனக் கேட்டவாறு முரளிக்காக போட்டிருந்ததை எடுத்து அவரிடம் தந்தவள்,

“சார் எழும்பினதும் சூடா போட்டு சார்க்கு தந்திடலாம்” என்றாள்.

சிறிது நேரம் கடந்திருக்க வெளியே வந்தவனுக்கும் சூடாக காஃபியினை போட்டு கொடுத்துவிட்டு ஊருக்குக் கிளம்பத் தயாரானார்கள்.


காலையில் காரில் ஏறியவர்களால் மாலை நான்கு மணியினில் தான் ஊருக்குள்ளே நுழைய முடிந்தது.


ஊரில் எல்லையை கண்டதும் தான் துளசிக்கு மூச்சே வந்தது.
பின்னே ஒரே இடத்தில் எத்தனை மணிநேரம் தான் அமர்ந்திருக்க முடியும். இதில் இயற்கை உபாதைகள் வேறு.
இடையிடையே சாப்பிடும் இடங்களில் கழித்தாலும் காரின் ஏசியின் அருளால் அதற்கு பஞ்சமே இருக்வில்லை.


வரும் பாதை எங்கும் முத்துவோடு முரளி பேசிக்கொண்டு வர, துளசிக்கு அவர்களிடம் பேச எதுவுமில்லை. அதை விட நேற்றைய நிகழ்வுகளுக்கு பின் அவளால் பேசவும் முடியவில்லை. முடிந்தவரை வேடிக்கை பார்த்தவாறு வந்தவள், ஒரு சில இடங்களில் தன்னையும் அறியாது தூங்கித்தான் போனாள்.


இப்போதும் அதோ வேடிக்கை தான். ஏற்கனவே பார்த்த இடங்கள் தான் என்றாலும், கண்ணாடி வழியே பின்னால் இருக்கும் தன்னை பார்த்தவாறு வருபவனை தவிர்க்க வழியற்றவளாய் வேடிக்கை பார்ப்பதைப்போல பாசங்கு செய்தாள்.



சிறிது நேரம் கடந்திருக்கும்....
வீடு செல்லும் திசையல்லாது வேறு பாதையில் வண்டி போவதை உணர்ந்தவள்,


“சார் வேற எங்கேயாவது போறோமா? ஐ மீன் யாரையாவது சந்திக்க வேண்டியிருக்கா? ஏன் கேக்குறேன்னா என்னோட புரோக்கிராம் லிஸ்ல அப்பிடி எதுவுமே இல்லை. ஆனா கார் வேற ரூட்ல போகுது” என தட்டுத்தடுமாறி கேட்க.


“ம்ம்...... ஆமா துளசி! இப்போ முக்கியமான ஒருத்தங்கள மீட் பண்ணத்தான் போயிட்டிருக்கோம். அங்க போனதும் அவங்க யாருன்னு சொல்லுறேன்..” என மர்மமாய் சிரித்தான்.


துளசிக்கு அவன் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை.
'இவ்வாறு இவன் புன்னகைப்பதற்கு என்ன அர்த்தம்? ஒரு வேளை ஏதாவது ரகசிய மீட்டிங்க்கா இருக்குமாே?
எதுவா இருந்தா என்ன? என் வேலையினை சரியாய் செய்வோம்.' என நினைத்து அமைதியாக இருந்துவிட்டாள்.



சரியாக பத்து நிமிடத்துல் ஒரு பங்களாவின் முன் கார் சென்று நின்றது.

காரிலிருந்து முதலில் இறங்கியவன், துளசியின் புறமுள்ள கார்க் கதவினை திறந்து விட்டு,
“இறங்குங்க துளசி!” என்றான்.


துளசிக்கு அந்த பங்களாவினை பார்த்ததும் உதறல் எடுக்க ஆரம்பித்தது. காரிலிருந்து இறங்காது தயக்கமாக அவள் பார்க்க.


“என் வீடுதான், பயப்பிடாம வாங்க” என்றவன் பேச்சில் தான் இன்னும் பேதியாகிப்போனாள்.
ஆனால் அதை முகத்தில் பிரதிபலிக்காது சாதாரணமாக இறங்கியவள்,


“ஏன் சார் என்னை இங்க கூட்டி வந்திங்க? வீட்டுக்கு வந்தே தீரணும்ன்னு அவசரம் இருந்திருந்தா என்னை எங்கேயாவது இறக்கி விட்டிருந்தா பஸ் பிடிச்சு போயிருப்பேனே?”

“அது தான் தெரியுமே!
ஆனா அது முறையில்லை. என்வேலை முடிஞ்சதும் பாதியில கழட்டி விடுறது நல்லவேலையா?
அம்மா வரவழி பூர கூப்பிட்டுகிட்டே இருந்தாங்க. என்னன்னு கேட்டுட்டு, அப்புறமா உங்கள வீட்டில ட்ரோப் பண்ணிடுறேன்” எனக் கூறி அழைத்து சென்றான்.


உள்ளே வந்தவள் வீட்டின் தோற்றத்தை கண்டு மிரண்டே போய் விட்டாள்.

இதுவரை இப்படி ஒரு பங்களாவினை அவள் பார்த்ததில்லை.
அவள் வாழப்போன வீடுகூட இதில் பாதி தான் இருக்கும்.

யாராவது கண்களில் தென்படுகிறார்களா என சுற்றிச்சுற்றி பார்த்தவளுக்கு யாரும் தென்படவே இல்லை.
இருந்தும் பந்தையக் குதிரையின் வேகமதை தாண்டியிருந்தது அவள் இதயத்துடிப்பின் வேகம்.


எத்தனையை தான் எதிரில் நிற்பவனிடமிருந்து மறைப்பாள்? விழிகள் மிரட்சியை காட்ட தயக்கமாகவே வந்தவள் பதட்டம் அறிந்தவன்,


“பயப்படாதிங்க துளசி! இங்க நீங்க பயப்படும் அளவுக்கு யாரும் இல்ல.” என ஹாலில் இருந்த ஷோபாவினை காட்டி அமரச்சொன்னான்.


அப்பாடா என்றிருந்தது அவளுக்கு. எங்கே இன்னும் சிறிது நேரம் நின்றிருந்தாலும் பயத்தில் கால்கள் நடுக்கம் கண்டு தன்னை தானே காட்டிக்கொடுத்து விடுவேனோ என்று நினைத்தவள் ஓடிச்சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.


அவளின் வினோதமான செயல்களை பார்த்தவனுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.
அவளது கடந்த காலத்து கதைகளை கேட்பதற்கு முன்னர், அவன் இதுவரை பார்த்த துளசி இவளில்லை என்றே தோன்றியது.

எதையுமே தைரியமாக எதிர் கொள்பவள், மனதில் எது தோன்றினாலும் மறைத்து வைத்திருக்காது நேருக்கு நேர் பேசிவிட்டு அந்த பேச்சை அத்தோடு முடித்துக்கொள்பவள்,
தொழிலில் எந்தளவு உயரத்தில் இருப்பவராக இருந்தாலும் சிறிதும் தயக்கமற்று அவர்களுக்கே சில யோசனைகள் சொல்லுவாள். ஆனால் இன்று ஏன் இவ்வளவு தயக்கம் என்றிருந்தது.


அவளையே நோட்டமிட்டவாறு,
“அம்மா..... ம்மா....!” என அவன் குரல் கொடுக்க,
அந்த குரல் கேட்டு வெளியே வந்தார் அவனது பாசமான அன்னை.


“வாடா வந்திட்டியா? நேத்து போன வேலை எல்லாம் எப்பிடி போச்சு?” என வினவியவாறு வந்தவர் அவன் எதிர் ஷோபாவில் இருந்தவளை கேள்வியாய் நோக்க.


“ம்மா.... நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்ல ருத்ரதுளசி! அது இவங்க தாம்மா” என பார்வையால் எதையோ உனர்த


“ஓஓ... நல்லா இருக்கியாம்மா? வீட்டில எல்லாருமே நல்லா இருக்காங்களா? தம்பி உன்னை பத்தி நிறைய சொல்லியிருக்கான்” என இயல்பாக புன்னகைத்தவாறே அவள் எதிர் ஷோபாவில் அமர்ந்தவர் முகத்தினில் எந்த வித அதிர்வும் இல்லை.


மாறாக பெருத்த சந்தோஷமே குடிகொண்டிருந்தது.
அவரே எதுவும் காட்டிக்கொள்ளாத போது, தான் எதற்கு பயம்கொள்ள வேண்டும்? என நினைத்தவள் தானும் இயல்பு புன்னகையுடனே வளைய வந்தாள்.


“எல்லாருமே நல்லா இருக்காங்க ஆன்ட்டி” என்று விட்டு தரையினில் பார்வையை பதித்தாள்.


“அப்புறம்மா! வேலை எல்லாம் எப்பிடி போகுது? இவன் உன்னை அதைப் பண்ணு, இதைப் பண்ணுன்னு தொல்லை பண்ணான்னா ஆன்ட்டிக்கிட்ட சொல்லிடு. ஆன்ட்டி இவனை நல்லா கவனிச்சு அனுப்புறேன். அப்புறம் உன்கிட்ட வாலாட்ட மாட்டான்” என அவளுக்காக பரிந்து பேசிப் புன்னகைக்க.


“இதென்னாடா பொம்பளங்க ராட்ஷியமா இருக்கு!!” என்றவனது உதடுகளும் அன்னையின் பேச்சில் புன்னகையில் விரிந்தது.


“அப்படில்லாம் ஒன்னும் இல்ல ஆன்ட்டி!” என பதிலுரைத்தவளால் ஏனோ பொய்யாகக் கூட புன்னகைக்கு முடியவில்லை.

“சரி சரி... தம்பியோட அப்பா வெளிய போயிருக்காரு, இப்போ வந்திடுவாரு, அவரு வந்திடட்டும் இருந்து சந்திச்சிட்டு போறியாம்மா! உன்னை பாத்தாருன்னா ரொம்ப சந்தோஷப்படுவாரு” என்க.


“இல்லை ஆன்ட்டி! அம்மா என்னை காணல்லன்னு தவிச்சிட்டிருப்பாங்க. நான் உடனேயே போயாகணும். அதுவுமில்லாம நான் தான் ஆபீஸ்ல ஒரு வாட்டி அவரை சந்திச்சிருக்கேனே! அது வரைக்கும் போதும்” என அவள் மறுக்க.


“ஆமால்ல... அவரும் என்கிட்ட சொல்லியிருந்தாரு..” என்றவர்,


“அப்புறம் என்ன சாப்பிடுற? காஃபியா? டீயா?” என்றார்.

“ம்மா சொல்ல மறந்துட்டேன். ருத்ரா ரொம்ப நல்லா காஃபி போடுவாங்கம்மா! காலையில குடிச்ச காஃப்பி டேஸ்ட் இப்ப வரைக்கும் நாக்குல ஒட்டிருக்குன்னா பாருங்களேன்” எனப் புகழ.


“அது தான் தெரியுமேடா! அவ கை பக்குவம் எப்பவுமே தனி டேஸ்ட்ன்னு” என்க.


“அது எப்பிடி உங்களுக்கு தெரியும்?” என சந்தேகமாய் அவன் கேட்டான்.

“அ... அது.. சில பேரை பாத்தாலே தெரியும்டா. குடும்ப பாங்கான பொண்ணுங்க எதை செய்தாலுமே அதுல ஒரு நிறைவிருக்கும். அதை வைச்சு சொன்னேன்” என சமாளித்தார்.


“ஓ.. அதை வைச்சு சொன்னீங்களா?. ஆமா அப்போல இருந்து இத கேக்கணும்ன்னே நினைச்சேன். அது என்ன இன்னைக்கு வித்தியாசமா தம்பின்னு. எப்பவும் நீங்க கூப்பிடுற செல்ல பெயர் எங்க காணாம போச்சு?”


“ ஏன்டா நீ வேற? நான் அப்பிடி கூப்டா அது யாருன்னு ருத்ரா குழம்பிடுவால்ல. அதனால தான் தம்பின்னேன்” என்றார்.


“அது சரி, நீங்களும் நல்லாவே சமாளிக்க கத்துக்கிட்டிங்கம்மா” என சிரிக்க.

“நீங்க பேசிட்டிருங்க நான் கிச்சன்ல போய் காஃபிக்கு போட்டெடுத்திட்டு வரேன்” என எழுந்து சென்றவரிடம் தலையசைத்து அமைதியானவள் முகத்தினில் இறுக்கம் வந்து ஒட்டிக்கொண்டது.


அவளுக்குள் ஆயிரம் கேள்விகள், விடை கூறத்தான் யாருமே இல்லை.
பதில் தெரிந்து கொண்டே ஆகவேண்டும். ஆனால் யாரிடம் கேட்பது? இது நாடகமே என்றாலும் இவ்வளவு இலகுவாகவும் தத்துரூபமாகவும் நடித்திடமுடியுமா என்ன?
மனமோ அதிலேயே உலன்று கொண்டு நிற்க, அவள் முகத்துக்கு நேரே தட்டை யாரோ நீட்டுவது தெரிந்து சித்தம் தெளிந்தவள் தடுமாறி விழிக்க ஆரம்பித்தாள்.


“என்னம்மா முழிக்கிறீங்க? காஃபி எடுத்துக்கங்க” என எதிரில் கேட்ட குரலில் தான் அது யாரென நிமர்ந்து பார்த்தாள்.

எதிரில் தட்டை நீட்டியவாறு இவளையே பார்த்திருந்தவள் உதட்டினில் நட்பாய் ஓர் புன்னகை.

அவளை கண்டதும் இன்னும் அதிர்ச்சியாகிப் போக அவளை அப்பாவியாய் பார்த்தவளிடம்.

“காஃபிய நீங்க எடுத்திட்டிங்கன்னா நான் சாருக்கு தந்திடுவேன்” என்றாள் அதே புன்னகை மாறாது.

அவள் முகத்தையே ஆராய்ந்தவாறு தட்டிலிருந்த இரண்டு கப்களில் ஒன்றை எடுக்கப் போனவளிடம்.

“அதில்ல மற்றையத எடுங்க” என தடுத்தாள் அவள்.

“ஏன் அக்கா? ரெண்டுமே காஃபி தானே! அப்புறமேன் அத எடுக்க வேண்டாம்ன்னு சொன்னீங்க?” என புரியாது கேட்டான் முரளி.

“அது.. அது”. என பயந்தவளாய் தன் முதலாளி அம்மாவின் புறம் திரும்பி விழித்தவளுக்கு எதை சொல்லி சமாளிப்பதென்று தெரியவில்லை.

“அது சார் இவங்க முதல் முதல்ல வீட்டுக்கு வராங்க. அதனால கொஞ்சம் சக்கரைய தூக்கலா போட்டேன். அதனால தான் அதை அவங்கள எடுத்துக்க சொன்னேன். மற்றம்படி எதுவுமில்லை” என சமாளித்தவள் தப்பினால் போதுமென கிச்சனுக்குள் ஓடி ஒழிந்தாள்.


துளசிக்கு அவள் செயலில் எதையோ தனக்கு உணர்த்த தான் அப்படி நடந்துகொண்டாள் என்றே தோன்றியது. ஆனால் இந்த காஃபி கப்பில் எதை உணர்த்திட முடியும் என கையிலிருந்த கப்பினை ஆராய்ந்தாள், கப்பில் காஃபியை தவிர எதுவும் தெரியவில்லை.


“என்னம்மா யோசனை?. காஃபியை குடி! என்றவர்.
தம்பி நீ பேசிட்டு இரு, நான் இப்போ ஓடி வந்திடுறேன்” என ஓடினார்.

போகும் அவரையே பார்த்திருந்தவளுக்கு 'இவர்கள் யாரும் நடந்து கொள்ளும் முறையே சரியில்லையே' என்றே தோன்றலாயிற்று.


“ஆன்ட்டி எங்க ஓடுறாங்க சார்?” என சந்தேகமாக அவள் முரளியிடம் வினவ.


“அது அவங்களுக்கு தான் தெரியும்” என தோள்களை குழுக்கியவன்,
சீக்கிரம் காஃபிய குடிங்க ருத்ரா ஆன்ட்டி தேடப்போறாங்க. என்றான்.


இருந்த குழப்பத்தில் அது ஏனோ மறந்து போக முரளி சொன்னதும் தான் நினைவே வந்தது.
கப்பினை ஸோஸரில் இருந்து தூக்கியவள் கண்களில் பட்டது யாரும் கண்டுவிடக்கூடாதென்று பத்திரமாய் மடித்து வைக்கப்பட்டிருந்த அந்த சிறிய காகிதம்.


அதை கண்டதும் அவளை அறியாமலே முரளியிடம் திரும்பியது அவள் பார்வை.

அவனோ எதையும் கண்டுகொள்ளாது தன் காஃபியிலே கவனமாக இருக்க.

சட்டென அதை கைப்பற்றி இறுகப் பொத்திக்கொண்டவள் எதுவும் நடவாதவள் போலவே காஃபியினை அருந்தலானாள்.


அவள் குடித்து முடிக்கவும் முரளியின் அன்னை வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது.
வந்தவர் வெறும் கையோடு வராது கையிலிருந்த தட்டில் பட்டு புடவையொடு, குங்குமம், வளையல், மல்லிகை பூ. சிறு தொகை பணம், நகை பெட்டியென எடுத்து வந்தவர்,
“இந்தாம்மா இதை வைச்சுக்காே!” என அவள் முன் நீட்டினார்.


அவர் கையிலிருந்த பொருட்களையும், முரளியையும், அந்த அம்மாளையும் மாறி மாறி பார்த்தவள் விழிகள் இறுதியில் அந்த அம்மாவின் முகத்திலேயே நிலையாகி,
“இது யாருக்கு?” என்றாள் ஒற்றை புருவ உயர்வில்,


“உனக்குத் தான்ம்மா எடுத்துக்கோ! வீட்டுக்கு முதல் முதலா வந்திருக்க, வெறும் கையோட அனுப்பக் கூடாதில்லையா, இந்தா வைச்சுக்கோ” என்றார் உதட்டினில் புன்னகையோடு.


“ஓ... என்ற அவளும், ஆனா இந்த தட்டை வாங்கிக்கிற அளவுக்கு எனக்கு கொடுப்பனை இல்லையே ஆன்ட்டி!
இதில இருக்கிறது என் கோலத்துக்கு கொஞ்சமும் பொருந்தாத ஒன்று, என் வீட்டிலயும் இத போட்டுக்கிற அளவுக்கு யாருமில்ல.
அதனால இதை நீங்களே வைச்சுக்கங்க.
உங்க பையன் கூட வந்த என்மேல நம்பிக்கை வைச்சு உள்ள விட்டு விருந்தோம்பல் பண்ண வரைக்கும் சந்தோஷம்.

இந்த பொருள் எல்லாம் எதிர்பார்த்து நான் வரல்ல. என்றவள்” தன்பேச்சினால் அவர் முகம் வாடிப்போவதை கருத்திலே கொள்ளாது,


“சார் ரொம்ப லேட் ஆகுது. அம்மா தேடப்போறாங்க நாம போகலாம் சார்!” என அவன் புறம் திரும்பி கூறினாள்.


தன் அன்னையின் வாடிப்போன முகத்தினை கண்டவனுக்கும் ஏதோ போல் ஆனது. அதே சமயம் துளசியும் போவோம் என கூற,


“ஆ.... ம்ம்.. போலாம் ருத்ரா! என்றவன் நீங்க முன்னாடி போங்க, நான் வந்திடுறேன்” என அவளை அனுப்பிவிட்டு,
தாயின் கையிலிருந்த தட்டை வாங்கி ஷோபாவில் வைத்தவன்,


“ம்மா.... முன்னாடி நடந்த ஒரு சில சம்பவங்களினால ரொம்பவே நொந்து போய் இருக்காங்காங்கம்மா. அந்த பாதிப்புல இருந்து அவங்க வெளிய வர கொஞ்சம் டைம் வேணும்மா! அதுவரைக்கு காத்திருப்போமே!” என அவரை சமாதானம் செய்துவிட்டு வெளியேறினான்.
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
aen ellaarum ivvalvu pathattama irukkaanka. ivan than antha love pannavanaa.. appo antha hospital ah partha dr yaru...
And intha velaikkaramma yaru avalukku thappikka help panna ponna
ore kuzappama irukke
 

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
aen ellaarum ivvalvu pathattama irukkaanka. ivan than antha love pannavanaa.. appo antha hospital ah partha dr yaru...
And intha velaikkaramma yaru avalukku thappikka help panna ponna
ore kuzappama irukke
😂😂😂 சீக்கிரம் குழப்பம் போயிடும் .
 
Top