• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

39. காற்றோடு கலந்த விதையவள்

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
நாட்கள் போனதே தவிர சுதாகரின் நினைவுகள் மட்டும் அவர்களை விட்டு போகதில்லை.



தேர்வுக்கு இன்னும் இரண்டு நாட்கள் என்றிருக்க,



"அம்மாடி வெளிக்கிடு போகலாம்" என்றார்.



"எங்க அங்கிள்?"



"இப்பிடி கேக்கிற.. ரெண்டு நாள்ல பரீட்சை இருக்கடா.."



"இல்லயங்கிள்... நான் எங்கயும் போகேல.."



"விளையாடாம வெளிக்கி" என்றார் கோபமாய்.



அம்மாவ பாத்திங்கள் தானே! இந்த நிலமேல அம்மாவை விட்டுட்டு போக ஏலாது. அப்பா என்னை தானே நம்பி விட்டுட்டு போனார். அப்படி இருக்கேக்க.. எப்பிடி நான் போவன்.. பரீட்சை தானே! இன்னொரு தடவை எழுதுறன்.



எனக்கு எண்டு இருக்கிற ஒரே சொந்தம் அம்மா மட்டுந்தான். அவாக்கு ஏதாவது நடந்தா, எங்க போவன் நான்?



படிப்பு இல்லாட்டிக்கும், ஏதோ செய்து சமாளிக்கலாம்... அம்மா..." என்றவளை வாசனால் எதுவும் சொல்ல முடியவில்லை.



உண்மை அது தானே! அவளுக்கென்று யார் இனி.



தானும் மூன்று மாதங்களில் வெளிநாடு சென்று விடுவேன், தேவியை பார்த்து கொள்வது முக்கியமாச்சே!



கணவன் இறந்ததில் இருந்து, சரியாக சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை என இருப்பவளை துஷாவால் மட்டுமே சமாளிக்க முடியும் என்று அவரும் விட்டு விட்டார்.



நாட்கள் மாதங்களாக ஓடியது.. வாசனும் வெளிநாடு சென்றுவிட்டார்.



துஷாவிற்கு தாயே உலகமென்றாகியது. ஆனால் அவரோ தந்தையை நினைத்து, தினமும் அழுவதை தாங்கிகொள்ள முடியவில்லை.



அவளுக்கும் தந்தை நினைவில்லாமல் இல்லை. எதை தொட்டாலும் தந்தையே தெரிவார்.



தானும் கவலை பட்டால் தாயை யார் தேற்றுவது?



தேவி குழந்தையாக அவதே தாயானாள். சாப்பிடுவதில் இருந்து, எதற்கும் அடம் பிடிப்பாள் தேவி.



அதன் காரணமாக அவள் உடல் வருத்தம் கண்டிருந்தது. அந்த நேரத்தில தான் முத்துவும் மூர்த்தியும் ஆதரவு கரம் நீட்டினார்கள்.



யாருமில்லா தமக்கு உறவென்று இவர்கள் வந்து விட, ஏதோ புது தென்பு வந்ததாக உணர்ந்தாள் துஷா.



தந்தையிடத்தில் முத்து இருந்து ஒவ்வொரு விடயமாக பார்த்து பார்த்து செய்தான். தேவிக்கு இதில் விருப்பமில்லை என்றாலும், தன் மகள் தன்னை நினைத்து வருந்துவதும், அவளுக்கும் உதவி தேவை படுவதாலும், இப்போது முத்துவின் மாற்றங்கள் தெரிந்ததாலும் அவளும் அதை பெரிதாக எடுத்து கொள்வதில்லை.



"அப்பா.. இது தான் நல்ல சந்தர்ப்பம்.. இப்பவே துஷாவை எனக்கு கட்டித்தரச் சொல்லி கேளுங்கோ" என்றான்.



"இருடா... இண்டைக்கோ.. நாளைக்கோண்டு அவளும் இழுத்துக் கொண்டிருக்கிறாள். அவளும் போயிட்டி.. யாரிட்டயுமே கேட்க தேவையில்லை... முழு சொத்தும் எங்களுக்கே வந்துடும்" என்று பின்புற வாசலில் நின்று அப்பனும் பிள்ளையுமாக போசிக்கொண்டிருந்தனர்.



ஏற்கனவே மூண்டு வருஷம்..



எங்க வேற மாப்பிள்ளைக்கு அவளை கட்டி வைச்சிடுவினமோன்டு பயந்து சுதாகரனையும் டிப்பர் ஏத்தி கொன்டாச்சு.. இப்ப இந்த தேவியையும் என்ர கையால கொல்ல வைக்காம துஷாவை கட்டி வைக்கிற வழிய பாருங்கோ"



"உனக்கு எல்லாத்துக்கும் அவசரம்" என்றவாறு மகன் பின்னே சென்றவர்கள் பேச்சு அனைத்தையும், வாயில் எச்சில் ஊறுகிறது துப்பலாம் என்று பின்புறமாக வந்த தேவி கேட்டு விட்டு, மூச்சுக்கு திணற ஆரம்பித்தாள்.



வேலை செய்யும் அன்னம்மா தான் கண்டு விட்டு, துஷாவை அழத்து வைத்திய சாலையில் சேர்த்தனர்.



அவரை அவசர சிகிச்சை பிரிவிற்கு உள் வாங்கியநொடியிலிருந்து. தாதியர்கள் பரபரப்பா வெளியே வருவதும் போவதுமாக இருக்க, துஷாவின் உடல் தான் நடுக்கம் கண்டது.



இரண்டு மணி நேரம் கடந்திருக்கும்.



அதிகமாக பேச வேண்டாம் என்ற நிபர்ந்தனையோடு, தாயை பார்க்க அனுமதிக்க பட்டாள்.



தேவிக்கு சுவாசம் சீராக செல்வதற்கு செயற்கை சுவாசக் குழாய்கள் பொருத்த பட்டிருக்க, உடல் பூராகவும் ஏதேதோ வயர்கள் பொருத்த பட்டிருந்தது.



அவள் வரும் அரவம் உணர்ந்த தேவி, பேச தன் வாயில் பொருத்த பட்டிருந்த குழாயை எடுத்தவள்,



"துஷாம்மா...... . அம்மாவில கோபபடாத.. அம்மாவும் அப்பாக்கிட்டயே போக போறன். அம்மா சொல்லுறத பொறுமையா கேளு!



உனக்கு நிறைய சொந்தங்கள்....... ஊரில இருக்கினம் அப்பாவும் அம்மாவும் கல்யாணம் பண்ணீட்டு ஊரை விட்டே ஓடிவந்துட்டம்" என்று தன் கதையை சொன்னவள்,



"சின்ன மாமாக்கு நான் என்ட உயிர்... அங்க போனா, அம்மாவ போல உன்னையும் அன்பா பாத்துப்பான்... நீ இங்க இருக்காத, இங்க இருந்த உன்ர உயிருக்கே அபத்து... நீ எங்கட ஊருக்கே போயிடு" என்று மூச்சு வாங்கியவளை பார்த்து பயந்தவள்,



"டாக்டர்...... நர்ஸ்" என்று கத்த, அவளின் கத்தலில் ஓடி வந்த வைத்தியர்கள் அவள் சுவாசக்குழாய்களை பொருத்தினார்கள்.



அதை தடுத்த தேவி.



"வேண்டாம் நான் உயிரோட இருக்க மாட்டன்" என்றவர் மீண்டும் துஷாவிடம்.



" அம்மா சொன்னதை மறந்திடாத.." என்றாள்.



"அம்மா தேவையில்லாம கதைக்காத.. பேசாம இரு!" என்று குழாயை அவளே மாட்டிவிட, அவளை வெளியே போக சொன்னார்கள் வைத்தியர்கள்.



வெளியே போகும்வரை தன்னையே பார்த்தபடி போனவளை பார்த்த தேவி,



கடைசியாக அவளுக்கு காற்றில் எதையே வரைந்து காண்பித்தவர் கையானது, அந்தரத்தில் இருந்து தொப்பென கட்டில் மேல் விழுந்தது.



அவள் கை கீழே விழுந்ததை பார்த்த வைத்தியர்கள், அவள் நாடியை பிடித்து பார்த்து பார்த்தவர்கள், உதட்டை பிதுக்கி விட்டு வெளியே சென்றனர்.



எதுவுமே செய்ய முடியாத பாவியானால் துஷா.



யாருமே துனணக்கு இல்லாத அனாதை போல், தனியாக அழுது தனியாகவே தேறிக்கொண்டாள்.



தந்தை இறக்கும் போதாவது தாயும் வாசனும் உடனிருந்தார்கள். இப்போது யாருமே இல்லை. அன்னம்மா தான் அவள் கூட இருந்து கொண்டார்.



இம்முறை அவள் அன்னைக்கு கொள்ளி வைத்தது முத்துவே தான்.



பல நாட்க்கள் அறையிலே முடங்கி கிடந்தவளை எழுப்பிய அன்னம்மா,



"துஷாம்மா மூர்த்தி ஐயா ஏதோ கதைக்கோணுமாம்.. வா" என்று அழைக்க.



அழுது வடிந்த கண்ணீரை துடைத்தவள் வெளியே வந்தாள்.



"சொல்லுங்கோ அங்கிள்" என்றாள்.



"இந்த நேரத்தில இப்பிடி சொல்லுறன் எண்டு குறை நினைக்காத...



இப்பிடியே நீயும் அழுது கொண்டிருந்தா, நடந்த எதுவும் மாறாது



உனக்கும் ஒரு மாறுதல் வேணும்.



என்ர புள்ள உன்னை விரும்புறான்....



உன்னையே கட்டிக்கோணும் எண்டு ஆசை படுறான்" அவர் சொன்னதும் சட்டென நிமிர்ந்து அவர்களை பார்த்தவள், மீண்டும் பேசாமல் தலை குனிந்து கொள்ள,



"உனக்காக அவன் என்ன வேணும் எண்டாலும் செய்வான்ம்மா.. இப்ப கூட உனக்காக எவ்ளோ மாறிட்டான் தெரியுமா? இது வரை எந்த சாவு வீட்டுக்கும் போகாதவன், உனக்கு ஒன்டென்டதும் துடிச்சு போயிட்டான்.



அவனை கட்டிகனா உன்னை நல்லா வைச்சு பாத்துப்பான். உனக்கும் உறவென்டு ஒன்டிருக்கும்" என்று ஏதேதோ சொன்னவர், அவள் முகத்தை பார்க்க, எந்த மாறுதலும் அவள் காட்டியது போல் தெரியவில்லை.



அடுத்ததாக ஒரு பெரிய அம்பை எய்தான் மூர்த்தி.



"உன்ர அப்பாட்டயும் இதை பற்றி பேசினன்... படிப்பு முடியட்டும் கட்டி தாரதா சொன்னான்" என்றவும் இம்முறை துஷா முகத்தில் சிறிய வித்தியாசம் தெரிந்தது.



"படிப்பு தான் இப்ப இல்லை என்டாச்சே.. அப்பா ஆசையாவது நிறைவேற்று"



"தப்பா எடுக்க வேண்டாம் அங்கிள்.. எனக்கு யோசிக்க கொஞ்ச நேரம் வேணும்"



"நீ இவ்வளவு சொன்னதே சந்தோஷம்...



கெட்டது நடந்த வீட்டில ஒரு நல்லது நடக்கோணும் எண்டுவினம .. வேளைக்கு அந்த நல்லது நடந்தா சந்தோஷம்" என்றவர் அவள் தோளை தட்டிவிட்டு செல்ல.



முத்துவோ வெட்கப்புன்னகையுடன், "வாறேன் துஷா" என்றுவிட்டு சென்றான்.



ஒருமாதங்கள் கடந்திருக்கும். இரவு ஒன்பது மணியளவில் தாய் தந்தை நினைவில் அழுது தூங்கியவளை அவசரமாக எழுப்பினார் அன்னம்மா..



"அம்மாடி எழும்பு..." என்று எழுப்பியவர், அவள் கையில் பெட்டி ஒன்றை கொடுத்து,



"இப்பவே வெளிக்கிடு" என்றார்.



துஷாவிற்கு எதுவும் புரியவில்லை. "இந்த நேரத்தில எங்க அன்னம்மா..."



" விடிஞ்சா உனக்கும் அந்த முத்துவுக்கம் கல்யாணமாம்... கதைச்சுக்கொண்டிருக்க நேரமில்ல... வந்திட போயினம்." என அவசர படுத்தினார்.



"என்ன அன்னம்மா சொல்லுற? அது தான் நான் யோசிச்சு சொல்லுறன் எண்டுட்டனே!"



"எதுவும் விளங்காம இருக்கிறியே!



உன்ர அம்மா சாகேக்க என்ன சொன்னா.... இங்க இருக்காத... உயிருக்கே ஆபத்து எண்டு சொன்னாளா இல்லையா?



வெளிக்கிடுடா....." என்று அன்னம்மா அவசர படுத்த, தாய் இறுதியாக கூறிய வார்த்தைகள் நினைவில் இப்போது தான் வந்தது அவளுக்கு.



அன்னம்மா அலுமாரியில் இருந்த உடைகளை அப்படியே அள்ளி பெட்டியில் போடும் போது தான், அவள் டயரியும் அதில் சிக்குண்டு வந்தது.



அது கூட துஷாவிற்கு தெரியாது.



அவசரமாக அன்னம்மா கூறியது போல் தயாலாகியவள், தன் தாய் தந்தையுடம் இருந்த புகைப்படத்தை சுவற்றில் இருந்து கழட்டி பெட்டியில் போட்டுக் கொண்டாள்.



அன்னம்மா பஸ்தரிப்பிடம் கொண்டு வந்து விட, தாய் சொன்ன ஊரின் பஸ்ஸை பார்த்தே ஏறினாள்.



இருட்டியதால் எந்த பஸ் என்பதை அன்னம்மா பார்க்கவில்லை. கையில் மறைத்து வைத்திருந்த பத்தாயிரம் காசை கொடுத்தவர்,



"இதை வைச்சு கொஞ்ச காலத்துக்கு சமாளிக்கலாம்... பிறகு ஏதாவது வேலை தேடி சமாளி.. இந்த கிழவிட்ட இந்தளவு தான் இப்ப இருக்கு" என்றார் கவலையாய்.



அன்னம்மா கையினை இறுக பிடித்து கலங்கியவள்,



"உங்கள கடைசி வரைக்கும் மறக்க மாட்டன் அன்னம்மா. நான் போட்டு வாறேன்" என்று அவரை அனுப்பி வைத்தாள்.



தூரப்பயணம்.. இதுவரை கேள்வி படாத ஊர். என்று ஏதேதோ சிந்தனையில் வந்து இறங்கியவள் தான். பிறகு சைலு கண்ணில் அகப்பட்டாள்.



என்று அவள் கடந்த வந்தவற்றை கூறியவன், அவளை தோளோடு அணைத்தார்.







என்ன தான் தேவி தங்களை பிரிந்து போயிருந்தாலும், தனக்கென்று ஒரு வாழ்க்கை அமைத்து, சந்தோஷமாக இருப்பதாகவே நினைத்து, எங்கிருந்தாலும் சாந்தோஷமாக இருந்தால் சரி என, தங்கள் வாழ்க்கைக்கு தங்களை பழக்கி கொண்டவர்கள், எப்போதாவது ஒரு தடவையாவது அவளை பார்த்தால் போதும் என்றே நினைத்தார்கள்.



ஆனால் இன்று அவளே இல்லை என்றானதை வாசன் வாயால் கேட்கும் போது, அவர்களால் நம்ப முடியவில்லை.



பெட்டியை தூக்கியவாறு இளாவின் முன் போய் நின்ற வாசன்,



"இத்தனை வருஷத்தில தேவி உங்கள நினைக்காத நாளில்ல.. தன்ர கவலை மகளுக்கே தெரியக்கூடாது எண்டு தான் அவளிட்ட கூட உங்கள பற்றி சொல்லேல...



எங்க தான் இறந்தா, அந்த மூர்த்தி குடும்பத்தால மகளுக்கு ஆபத்து வந்திடுமோன்டு தான் இறக்குற நேரத்தில உங்களிட்ட அனுப்பினாள்.



இத்தனை உறவிருந்தும், உன்னை மட்டும் தான் நம்பி அனுப்பினாள்.



நீ எந்த அளவுக்கு தேவியில பாசம் வைச்சிருக்கிற எண்டு நிரூபிச்சிட்ட...



ஏதோ அவள் ஓடினாள் ஓடினாள் என்டுறீர்களே.



சுதாகர் போல் ஒரு மாப்பிள்ளையை உங்களால அவளுக்கு தேடி தந்திருக்க ஏலுமா?



இந்த வீட்ட விட, அந்த வீட்டில மகாராணியா இருந்தாள்.. கண்டம் விட்டு கண்டம் போனாலும், என்ர மாப்பிள்ளை போல யாரும் உங்கட பொண்ணுக்கு கிடைக்க மாட்டினம்..



அவர் இறந்த ஆறே மாசத்தில, உங்கட பொண்ணும், அவர் பின்னாலயே போனாள் எண்டா, என்ன மாதிரி அவர் அவளை தாங்கியிருக்கோணும்...



"நீ வாம்மா... இவயலுக்கு அந்த அன்போட ஆழம் தெரியாது" என்று அவளை தேற்றும் விதமாக தன் கை வளைவிலே அழைத்து கொண்டு செல்ல எத்தணித்தார்.



ஓடி வந்து வழிமறித்து நின்ற மல்லி.



"துஷாவ விட்டுட்டு போங்கோண்ணா.. தேவின்ர மகள நான் நல்லா பாக்குறன்" என்றாள்.



அவளை வேதனை கலந்த பார்வை பார்த வாசன், அவளை விலக்கி நடந்தார்.



வாசன் மல்லியை விலக்கி இரண்டடி செல்லவில்லை...

"


அத்தை ............." என்ற கூக் குரலோடு அவரை நோக்கி ஓடினாள் புணிதா.

ஆம் தேவியின் இறப்பு செய்தியை இவ்வளவு நேரமும் பொறுமையாக கேட்டு கொண்டிருந்த காந்தியால்,



இனி எப்போதும் தன் மகளை பார்க்க முடியாது என்ற எண்ணம் தோன்றவே, மயக்கமடித்து தரையில் வீழ்ந்தார்.


தேவியின் இறப்பு செய்தி எல்லோர் மனதையும் இறுக வைத்தது.
அழக்கூட முடியாமல் தொண்டைக்குள் கண்ணீர் சிக்கி கொண்டது.
எங்கே அழுதால் இளா கோபம் கொண்டு விடுவானோ என்ற பயம்.



அனைவருக்கும் சேர்த்து நானே அழுது விடுகிறேன் என்றதை போல், மழை தூரலாய் பூமியை நனைக்க துவங்கியிருந்தது.

காந்தியின்


தலையை தன் மடியில் துக்கி வைத்துக் காெண்டவளோ,
அத்தை.... என்று பரிதவித்திருக்க, அனைவரும் அவர்களை சூழ்ந்து கொண்டனர்.



மழையின் தூரல் பட்டு எழுந்தமர்ந்த காந்தி, கணவனை கட்டிக்கொண்டு அழுதார்.

"என்னங்க...


இனி தேவிய எங்கள பாக்க வரமாட்டாள்....



எல்லாரையும் ஒரேயடியா ஏமாத்திட்டு போயிட்டாள்..." என கதறியவரை சூழ்த மற்றையவர்கள் அவருக்கு ஆறுதல் கூற ஆரம்பித்திருந்தனர்.

இவற்றை எல்லாம் ஓரமாக நின்று


பார்த்தவளுக்கு ஏக்கமாக இருந்தது.
அவளுக்கும் அதே இழப்பு தானே! சொல்லப்போனால் அவர்களை விட, அவள் இழந்தது தான் அதிகம்.
ஆனால் ஆறுதல் கூறத்தான் ஓர் கரமில்லை. அதை நினைத்து கண்கள் கண்ணீரை சொரிந்தது.



மணிவண்ணனும், பொண்வண்ணனும் அருகில் வந்து, அவள் கையை ஆறுதலாக பற்றியவர்கள்,

"எங்கள மன்னிப்பியா?"


என்றார்கள் இரந்த குரலில்.
ஒரு கேள்வி தான்.. சட்டென இருவரையும் கட்டுக்கொண்டாள்.



அவர்களை தொடர்ந்து, மற்றவர்கள் அவளை அணைத்து விலகிக் கொள்ள, இளா மட்டும் ஒதுங்கியே நின்று கொண்டான்.
"தேவி தான் வர மாட்டாள்.. நீயாவது எங்களோட இருந்துடு" என்றனர்.



வாசன் என்ன சொல்லுவான் என்று வாசனை திரும்பி பார்த்தாள்.
"
வேண்டாம்மா... அங்கிள் உன்னை எங்க சேர்கோணுமோ அங்க சேர்திடுறன். இங்க நீ இருந்தா, இண்டைக்கு நடந்தது தான் நாளைக்கும் நடக்கும்..



ஏற்கனவே இளாவுக்கு தெரியும்.. நீ தேவின்ர மகளென்டு.. உண்மை தெரிஞ்சும் வெளிய போ எண்டவ இருக்கிற வீட்டில, உன்னை விட்டுட்டு போக என்னால ஏலாது.



மற்ற பேர பிள்ளைகள போல தான் நீயும்.... இவங்களுக்கு எப்பிடி எதுவும் தெரியாதோ, அதே போல தான் உனக்கும் எதுவும் தெரியாது.

பெத்தவ செய்த தப்புக்கு


உன்னை தண்டிக்கிறது எந்த விதத்தில நியாயமாகும்.? அவன் தான் பெட்டிய தூக்கி எறிஞ்சான் எண்டா, அதை தட்டிக் கேட்காம இருந்தவய நம்பியா உன்னை விட்டுட்டு போறது?



இது சரிவராது... இவைக்கு நீ எப்பவும் வேண்டாதவள்... வேற்று மனுசி தான்.
எங்கயாவது ஒரு இடத்தில, உன்ர அம்மா அப்படி தானே செய்தாள் எண்டா, மனசு உடைஞ்சு போயிடுவ.... வா போவம்" என்றார்.

தன் சொந்தங்களை இயலாத பார்வை பார்த்தவள், ஒரு தலை அசைப்புடன் அவர்களிடய் இருந்து விடைபெற்றாள்.
 
Top