• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

39. தத்தித் தாவுது மனசு.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
அதுவரை அமைதியாக திரை மறைவில் தலை குனிந்திருந்தவள், அவன் தாலி அணிவித்ததன் பின்பு தான், அவன் முகத்தை ஒரு தடவை பார்த்து விட்டு, மீண்டும் தரையினில் பார்வை பதித்தாள்.


அப்போது அவள் கண்கள் கலங்கி இருப்பதை ஸ்ரீ கவனிக்காமலில்லை. ஆனால் அதை அவன் அப்போதிருந்த மனநிலையில் பெருது படுத்தவும் விரும்பவில்லை.


அதன்பின் வரிசையாக சடங்குகள் நடந்து கொண்டிருக்கும் போது தான், மண்டபவாயிலை எதர்ச்சையாக நிமிர்ந்து பார்த்தவன், வாசலில் நூழைந்தவர்களை கவனித்தான்.

ஆம் அது வேறு யாருமில்லை. மைலியின் அத்தையும் அத்தானுமே தான்.


மைலியோ வேண்டா வெறுப்பாக குனிந்தபடி, ஸ்ரீயின் கை பற்றி அக்கினியை வலம்வந்தவள் கவனத்தை தன்புறம் திருப்பும் பொருட்டு,
அவளது கரங்ளுக்கு அழுத்தத்தை கொடுத்து தன்னை பார்க்க வைத்தவன், வாசலை நோக்கி ஜாடை காட்டினான்.


அவனது செயலில் அவனை தவறாக நினைத்தவள் வாசலை பாராது, மீண்டும் தரையில் பார்வையினை பதித்தவளை என்ன செய்தால் தகும் என்றிருந்தது ஸ்ரீயிற்கு.



'நான் என்ன சொல்லுறேன். இவ என்ன பண்றா..? அவகூட ரொமான்ஸ் பண்றதா நினைப்போ....' உள்ளே தான் பொருமினான். சடங்குகளும் ஒரு மாதிரியாக முடிந்தது.

மேடையில் தம்பதியினருக்காய் போடப்பட்ட இருக்கையில் அமர்த்தி விடப்பட்வர்களை பெரியவர்கள் அறுகரிசி தூவி வாழ்த்து தெரிவித்து, புகைப்படங்களும் எடுக்கப்பட்டுக்.கொண்டிருக்க,


மைலியின் பக்கம் சற்றி சரிந்த ஸ்ரீ. அவளுக்கு மாத்திரம் கேட்கும் குரலில்,

"தாரை... உன் அத்தையும், அத்தானும் வந்திருக்காங்க.
நீ இப்பிடி உம்முன்னு இருக்கிறதை பார்த்தா, உனக்கு பிடிக்காத கல்யாணத்தை, வற்புறுத்தி செய்யிறதா நினைச்சுக்க போறாங்க...

உனக்கு இந்த கல்யாணத்தில இஷ்டமில்லை என்கிறது உண்மையாவே இருக்கட்டும்...


ஆனா இவங்களுக்கு இது தெரியணும்னு நினைக்கிறியா? உன்னை ஏமாத்தினவன் முன்னாடி நீ தலை குனிஞ்சு இருக்கிறது தான் உனக்கு வேணும்னு நினைச்சா.... இந்த மாதிரியே இருந்துக்கோ,


இல்லனா என்னை நீ ஏமாத்தினால் என்ன? நீ இல்லைன்னா கூட என்னால நல்ல படியா வாழமுடியும்.. அவனுக்கு காட்டணும்னு நினைச்சா... அவங்க போகும் வரைக்குமாவது சந்தோஷமா இருக்கிறது போலயாவது நடி!" என்றவனது பேச்சின் பின்பு தான்,

மண்டபம் முழுவதும் கண்களால் தேடியவள் பார்வையில் சிக்கினர் அவர் அத்தையும், அவள் மகனும்.


அவர்களை கண்டதும் இதுவரை இல்லாத திடத்தினை தனக்குள் கொண்டு வந்தவள், ஏனோ தானோ என இராமல், தானும் இன்னும் சற்று ஸ்ரீயை ஒட்டி அமர்ந்து தமக்கு ஆசி தருபவர்களுக்கு புன்னகையினை பரிசளித்தவாறு அமர்ந்திருந்தவளை பார்த்தபடி அமர்ந்திருந்தான் ரஞ்சித்.

அவனுக்கும் அவளை அந்த அலங்காரத்தில் கண்டவுடன் ஒரு சொர்க்கத்தையே தவறவிட்டு விட்டேன் என்ற ஏக்கம் இல்லாமலில்லை.

அதனால் தான் அவளையே வைத்த கண் வாங்காமல் நின்றிருந்தான்.


மைலியின் புன்னகை முகத்துடனே அவர்களது பிம்பங்களை கேமெராக்காள் தமக்குள் பதிவு செய்திருந்தது.

ஸ்ரீயும் இது தான் சாக்கென்று வேண்டும் என்றே அவளை அணைத்தபடி பல புகைப்படங்களுக்கு விதவிதமாய் போஸ்ட் கொடுத்தான்.

மகனை எந்த கோலத்தில் பார்க்க வேண்டுமென்று இத்தனை நாள் ஆசை பட்டாரோ அந்த கோலத்தில் பார்த்தவளர் விழிகள் இமைக்கவே இல்லை.


இந்திரவுக்குமே மகளின் மணக்கோலம் கண்களில் நீரை கசிவித்தது.


இனி அவள் தன் வீட்டு இளவரசி இல்லையே.
ஸ்ரீ வீட்டின் மகாராணியாற்றே!


என்ன தான் புகுந்த வீட்டினர் அவளை நல்லபடியாக பார்த்துக்கொள்வார்கள் என்றாலும்,
ஒரு தாய்க்கு மகளின் பிரிவு கவலை தரக்கூடிய விஷயம் தானே!
அதுவும் இல்லாமல், அவளுக்கு தாம் இனி இரண்டாம் பட்ஷம்.
என நினைக்கும் போது மனதின் ஓரம் விபரிக்க முடியாத ஓர் உணர்வு.





ஒவ்வொரு மகளை பெற்ற பெற்றோர்களும், தம் மகளின் மணநாள் அன்று அனுபவக்கும் ஒரு இன்பமான அவஸ்தை.



ஈஸ்வரியும், ரங்கசமியும் தான் தமது வயதைக்கூட பெரிது படுத்தாமல் வந்தவர்களை வரவேற்பதும், விடைகொடுத்து அனுப்புவதும் என்று கல்யாண வேலைகள் அனைத்தையும், தலையில் போட்டுக்கொண்டு ஓடியாடி திருமண வேலைகளில் ஈடுபட்டனர்.

மாலை ரிசப்ஷன் என்பதனால் மணமக்களுக்கும் சிறிது ஓய்வு கொடுப்பதற்காக சாப்பாட்டின் பின்னர், மண்டபத்தின் தனித்தனி அறைகளில் மணமக்களை ஓய்வெடுக்க அனுப்பினர்.



மைலிக்கோ ஓமப்புகையிலும், கூட்டத்தின் மூச்சு காற்றின் வெப்பத்திலும், உண்ட களைப்பில் அவளையும் அறியாமல் தூக்கம் கண்களை சொருக,
நகைகளை மட்டும் கழைந்து கண்ணாடியின் முன் பரப்பிவிட்டு, உறங்கி விட்டாள்.

அவள் தூங்கி அரைமணி நேரம் கூட ஆகவில்லை. ஒப்பனையாளர்கள் மீண்டும் அவளது அறை கதவினை தட்டியும் எழுந்து கொள்ளவில்லை.

தெய்வானையும் கூடி வந்ததனால்,

கதவின் திருகை திருக,
கதவும் சிரமமும் இன்றி தானாகவே திறந்து கொண்டது.


அசந்து தூங்குபவள் அருகில் சென்ற தெய்வானை,



"மைலி நேரமாகுது எந்திரி..." என எழுப்ப.

தூக்கம் கலைந்தவள், கண்களை திறவாமலே..

"இவ்ளோ சீக்கிரம் விடிஞ்சிடிச்சா.." என்று கொட்டாவியின் நடுவே நிதானமாக கண்களை கசக்கிக்கொண்டு கேட்கவும்.
அங்கு நின்ற ஒப்பனை பெண்கள் சத்தமாக சிரித்து விட்டனர்


அவர்கள் சிரிப்பினில் தன் கைகளை கீழே போட்டுவிட்டு கண்களை அகலவிரித்து பார்த்தவள், அங்கு நின்ற பெண்களை கண்டு, தான் இருக்கும் இடத்தினை ஒரு வினாடிக்குள் சுற்றி பார்த்தும் தான் தன் நிலை புரிந்தவளாக,


"சாரி.... நான் தூங்கக்கலக்கத்தில..." என்று தடுமாற.

"சரி ..சரி.. எங்களை சமாளிச்சது போதும்.... இதெல்லாம் தாண்டி வந்தவங்க தானே நாங்க. எங்களுக்கு தெரியாததா என்ன?

இன்னைக்கு முதலிரவு அதனால மேடம் நைட்டுக்கு புல்லா முழிக்கணும் எங்கிறத்துக்காக தானே இப்பவே தூங்குறிங்க?


ஆனா பகல்ல தூங்கி, நைட்டுக்கு முழிக்கலாம் என்கிற ஐடியா எல்லாம் யாருமே எங்களுக்கு சொல்லி தரலடி.." என்று தெய்வானை கேலி பேசினாள்.


சுற்றி நின்ற பெண்களும் தெய்வானை பேச்சினில் சிரித்து விட, சங்கடமாக தலை கவிழ்ந்தாள்.

"சீக்கிரம் போய் குளிச்சிட்டு வா மைலி....! ரிசப்ஷன கூட மறந்திட்டு தூங்கிட்டிருக்க.. நாலு மணிக்கு மேடையில இருக்கணும்" என்று தெய்வானை அவசர படுத்தினாள்.



நின்றால் கேலி என்ற பெயரில் தன்னை சங்கடப்படுத்துவார்கள் என நினைத்தவளும் ஓடிவிட்டாள்.

"யாரோட நினைவில மாத்து துணி எடுக்காம போனா. வர்றப்போ எப்பிடி வருவ?" என மீண்டும் வம்பு பேசியவளின் பேச்சில் கதவை திறந்தவள் கையில் உடையினை திணித்தவள்.


"துணியை எடுக்காமல் போனது போல. புருஷன் நினைவில துணிய போடாம வந்திடாத.. அப்புறம் நாங்க பாவம்" என்றவளது பேச்சை காதில் வாங்காது, கதவை அறைந்து சத்தினாள்.

'என்ன இது பேச்சு? இப்படித்தான் எல்லாப் பெண்களையும் கேலி செய்வாங்களா? எனக்கு மட்டும் ஏன் இது ரசிக்கல?' என்றவளுக்கு தெய்வானை கூறிய முதலிரவு நினைவில் வர,

"முதலிரவா? யாருக்கு..? எனக்கும் ஸ்ரீயிற்குமா...?" என்றவளுக்கு அலட்சிய புன்னகை ஒன்று இதழோரத்தில் வந்து ஒட்டிக்கொண்டது.

"எனக்கு முதலிரவு.. ஆனா அவனுக்கு.... எத்தனையாவது இரவுன்னு அவனுக்கு மட்டும் தானே தெரியும்?" என அன்று காலை அவன் அறை கட்டிலில் கிடந்த பெண்ணும், அவளை கொஞ்சிய ஸ்ரீயும் தான் இப்போது அவளது கண்களில் தோன்றி மறைந்தனர்.

அந்த நினைவு மைலிக்கு எரிச்சலை தர,
ஷவரை திறந்து விட்டாள்.
தலை முதல் பாதம் வரை வடிந்து ஓடிய நீரானது அவளது எரிச்சலை சற்று தணித்துத்தான் இருந்தது.

குளித்து தெய்வானை கொடுத்த ஆடையை அணிந்து கொண்டு வந்தாள்.



கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்தின் பின் மைலியின் ஒப்பனையே முடிந்தது.

பீக்காக் புளூ லெகங்கா.. அதன் கீழ் பகுதியில் அடர் நிற மஜந்தாவுடன் கூடிய கோல்ட் கலர் கரை. அங்காச்கே தங்கத்தை பொடியாக்கி தூவி விட்டதைப்போன்று அந்த பீக்காக் புளூ லெகங்கா முழுவதும் தங்கத்துகள்கள்.


மஜந்தா கரையின் நிறத்திலேயே தாவணி. பிளவுஸ் கோல்ட் என்று அவள் உடையே அவளை தேவதை போல் காட்ட.
அவளுக்கு ஒப்பனைக்கு என்று வந்த பெண்களோ தங்களின் கைவண்ணம் அனைத்தையும் அவள் மேல் கட்டியிருந்தனர்.




ஒப்பனை இல்லாதவள் முகத்தினில், இன்னொருவரின் முகம் பார்க்க கூடியது போல் தான் பளபளப்பாள்.
இன்று சொல்லவா வேண்டும்?


தன் அலங்காரங்களை கண்ணாடியில் பார்த்தவாறு இருந்தவள், முகத்தினை தன்னை நோக்கி நிமிர்த்திய தெய்வானை.

"இந்த மேக்கப்பில உன்னை எனக்கே கடிச்சு திங்கணும் போல இருக்கே!


இன்னைக்கு ஸ்ரீ பையன் அவுட் தான் பாே....
காலையிலயே உன் அழகில மயக்கம் போடத குறையா.. அத்தனை பேரு இருக்கோம் எங்கிறத கூட மறந்திட்டு வாய பிளந்து பார்த்தான்.


இப்போ இந்த மாதிரி உன்னை பாத்தான்னா, பயல் காலத்துக்கும் உன் காலடியில விழுந்து அடிமையா இருந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல" என அவளது அழகை மெச்சியவாறு, வழக்கம் போல் தெய்வானை கேலியில் இறங்க.

மைலிக்கோ இவளது பேச்சில் இம்முறை உண்மையிலேயே வெட்கம் வந்து குடியேறியது.


முகமோ ஒப்பனையையும் மீறி அந்தி வானமாக செம்மையுற்றது.

அதை தடுக்க முடியாமல் என்ன செய்வதென்று தடுமாறியவள், தெய்வானையின் கையை தட்டிவிட்டு தலையை குனிந்து கொண்டாள்.

உதடுகளோ அவளையும் மீறி வெட்க்கத்தில் சிறிது விரிந்தது. அதை மறைக்க இன்னும் தலையை தாழ்த்தியவள், தாடையில் மறுபடியும் கைகொடு்து நிமிர்த்திய தெய்வானை,
அவளது வெட்கச் சிவப்பில் இன்னும் அவள் அழகாகத்தெரிய,

"யம்மாடி.....! இன்னைக்கு நெசமாவே பயல் கவுந்தான்." என்று கூறி சிரித்தவள்,
அருகிலிருந்த மையினை தொட்டு,
அவளது கன்னத்தின் ஓரம் சிறு பொட்டாக வைத்து விட்டு,


"எவன் கண் படுதோ இல்லையோ, உன் புருஷ்.. கண்ணே உன்னை கொண்ணுடும். அதுக்காகத்தான் இது." என்றவள்.

"சரி இரு! நான் வெளிய போய் என்ன நடக்குதுனு பாத்திட்டு வறேன்." என இரண்டடி எடுத்து வைக்கவில்லை.

வேகமாக கதவினை தள்ளிக்கொண்டு வந்த இந்திரா, கண்ணாடி முன்பிருந்தவளை கண்டுவிட்டு, ஒரு நொடி சிலையாகி விட்டார்.



"மைலி ரெடியாகிட்டாளா தெய்வானை? அங்க மாப்பிள்ளை மேடைக்கு வந்திட்டாரும்மா" என்க.


"ஆமாம்மா அவ ரெடி.. அதை பாக்கத்தான் தானே வந்திட்டிருக்கேன்.
நான் அழைச்சிட்டு வந்திடுறேன். நீங்க போங்க"


"சரிடா!" என்றவர் திரும்பாது தன்னிடம் வருவதை கண்ணாடியில் பார்த்து எழுந்து நின்றவளை நெருங்கி அவள் கன்னங்களை தாங்கியவர்,


"என் பொண்ணு இவ்ளோ அழகா.?" என்று அவள் நெற்றிமீது இதழ் பதித்தவள்
கண்களாே கலங்கியிருந்தது.
அதை மறைக்காமல் அனைவர் முன்பும் துடைத்தவர்.



"சரிம்மா.... லேட் பண்ணாம வந்திடுங்க." என்றவாறு வெளியேறினார்.

இந்திரா வெளியேறிய மறு நிமிடமே, தெய்வானை அவளை அழைத்து வந்து ஸ்ரீயின் அ அமர வைத்தவள், மைலியின் காதருகில் குனிந்து.


"நான் சொல்லல..... மாப்பிள்ளைய பாரு! நாறின மீனை பூனை பாத்த கணக்கா... முனறச்சட்டிருக்கான். தனிமையில மட்டும் இவன்கிட்ட மாட்டிக்காதடி!" என்றாள்.

தெய்வானையின் பேச்சிற்கு அவளால் அங்கு நின்று கொண்டு எதுவும் கூறமுடியாததனால் அவளை முறைக்க.



"எதுக்கு என்னை முறைக்கிற? நானா உன்னை முழுங்கிறது போல பார்த்தேன். அவன் தானே இத்தனை பேர் மத்தியில கூச்சமே இல்லாம முறைச்சிட்டிருக்கான். நீ அவன்கிட்ட காட்டு உன் கோபத்தை." என்றவள்,
அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட.

'மைலிக்கு உண்மையில் இவன் தன்னைத்தான் பாக்கிறானா? இல்லை வழக்கம் போல் தெய்வாணை தன்னை சிண்டுகிறாளா...?' நினைத்தவள், மாலையினை சரி செய்வதைப்போல் தலையை சரிந்து பார்த்தாள்.

உண்மையில் ஸ்ரீயினது பார்வை தெய்வானை கூறியது போல் தான் இருந்தது.

சட்டென தலையை திருப்பிக்கொண்டவள் இதயமோ வேகமாக இயங்கியது.

அது துடிக்கும் ஓசை அவள் காதுகளுக்கே கேட்டது.
இவனது அந்த பார்வையில் என்ன இருந்தது.....? ஏக்கமா...? கர்வமா...?இல்லை என்றால் இரக்கமா...? இதில் எது என்றே அவளாள் புரிந்து கொள்ள முடியவில்லை.

நவரசங்களையும் அந்த பார்வையில் அள்ளித்தெளித்திருந்தான்.

மாலை மாற்று நிகழ்வின் பின்னர், மோதிரம் மாற்றியவர்கள். இருவரும் சேர்ந்தே கேக்கையும் வெட்டி, ஒருவரை ஒருவர் ஊட்டி விடும்போது தான் மைலி அவனது முழுமையான தோற்றத்தையே கண்டாள்.

ஆம் அவனும் மைலியின் உடையின் நிறத்தினை போலவே கோட் ஷூட் அணிந்திருந்தான். ட்ரீம் செய்யப்பட்ட தாடி, காற்றாடு கொஞ்சி விளையாடும் சிகை, கொஞ்சமாக புன்னகையினை தத்தெடுத்திருந்த உதடுகள் என இவை எல்லாம் அவனது ஆறடித் தோற்றத்திற்கு எடுப்பாகத் தான் இருந்தது.

காலையில் அவனை அவள் சரியாக பார்க்கவில்லை என்றாலும், ஏதோ அரைகுறையாக பாத்ததில், அப்போது, விட இப்போது கூடுதல் அழகாகத் தெரிந்தான்.


அவள் தன்னை இஞ்ச் இஞ்சாக ரசிப்பதை கண்டவன்,

'ஓகே வா...?' என்பதைப்போல் புருவம் உயர்த்தி கேட்க,
அவனது செய்கையில் தன் தவறை உணர்ந்து, சட்டென திரும்பி கொண்டாள் மைலி.


அதைப்பார்த்து தனக்குள்ளாகவே புன்னகைத்துக் கொண்டவனை, மீண்டும் புகைப்பட கலைஞர்கள் தம் இஷ்டத்துக்கு ஆட்டிவைத்தனர்.

ஐந்து மணியளவில் அவர்கள் அருகில் வந்த மாணிக்கம் தம்பதிகளை கண்ட மைலி.


"அங்கிள்" என அவர் கைகளை பற்றி கொண்டவள்,


"ஏன் அங்கிள் தேனு வரல்ல? என்னை மறந்திட்டாளா?" என்று அவளை எதிர்பார்த்திருந்தவள், அவளை காணததனால் ஏமாற்றத்தோடு வினவ.

"அவ உன்னோட கல்யாணத்துக்கு வர முடியாதுனு சொல்லுவாளாடா? அவ வறேன்னு தான் அடம்பிடிச்சா!

ஆனா அவளுக்கு காலேஜ் இப்போ தானேடா தொடங்கியிருக்கு. அங்கேயே தங்கி படிக்கிறதனால, அவளால வரமுடியல...

நிச்சயம் இடையில ஒரு தடவை நான் கூட்டிட்டு வந்திடுறேன். சரியா?" என அவளை சாமாதானம் செய்தவர்,


"சரிடா.. காலையிலேயே வந்திட்டேன்.. இப்போ கிளம்பினா தான் ஊருக்கு போய் சேர முடயும்.. நான் புறப்படுறேன்ம்மா...

புகுந்த வீட்டில பாத்து பத்திரமா நடந்துக்கோடா." என ஒரு தந்தை முறையில் அவளுக்கு அறிவுரை கூறிட.

ஆமோதிப்பதாய் தலையசைத்தவள் கழுத்தினில், அவர் மனையாள் செயின் ஒன்றை மாட்டி விட்டு, அணைத்து விடுவித்தார்.



திடீரென என்னானதோ.... அவள் எதிர்பாராத நேரம், அவளது இடையினை பற்றி அணைத்தாற்போல் ஒட்டி நின்றவனின் செயலில் கசிப்போனவள்,


என்ன என்பது போல் அவனை நிமிர்ந்து முறைத்தாள்.
அதற்கு அவன் அசர வேண்டுமே..!


"கையை கொஞ்சம் எடுக்கிறீங்களா?" உதடுகள் அசையாமல் கோபமாக கூற.


"நான் எடுக்கிறது இருக்கட்டும்..... அங்க உன் அத்தை... நம்மள தேடி வராங்க." என்று அவர்கள் வந்த திசையை கண்களால் காட்ட.
அவன் காட்டிய திசையை பார்த்தாள்.

அத்தை மகனோ சங்கடமாக தயங்கியவாறு நிற்க, மீனாட்சி அவனது கைகளை வலுகட்டாயமா இழுத்து வருவது அவள் கண்களுக்குள் தெளிவாகவே புலப்பட்டது.

'எதுக்கு இந்த சங்கடமாம்? வேற ஒரு பெண்ண கொஞ்சுறப்போ வராத சங்கடம், நான் இன்னொருத்தனோடு நிற்குறப்போ ஏன் வருது...?' என நினைத்தவளுக்கு, அவன் கைபட்ட இடம் குறுகுறுக்க. குனிந்து பார்த்தாள்.


அவனது விரல்கள் தான், அவள் இடையை வீணையாக்கி விளையாடிக்கொண்டிருந்தது.


அவனை கோபமாக நிமிர்ந்து பார்த்து முறைத்தவள்,

"என்ன இது?"


"எதை கேக்குறா? இதுவா? இது கேக்கு... இதுகூட தெரியாமலா ஊட்டும் போது சாப்பிட்டே!" என்றான் எதுவும் ரெியாதவனாட்டம் கேக்கினை காட்டி.

"இந்த ட்ராமா நிறுத்திட்டு.. முதல்ல கைய எடுங்க. அவங்க வந்தா வந்திட்டு போகட்டும். சும்மா ஒட்டி உரசிட்டு..." என சினந்தவள் மேலிருந்து கையை எடுத்தவன்.

"மகாராணி உத்தரவை நான் மீறலப்பா?" என்றவன் தோள்களை குளுக்கியவாறு கையை எடுக்க.

அதே நேரம் அருகில் வந்திருந்தனர் அவர்கள்.

"மருமகளே....!" என பலநாள் அவளை காணாது ஏங்கியிருந்தவள் போல் கட்டிக்கொண்டதை மைலியும் எதிர்பார்க்கவில்லை.

அவரது அத்தகைய செயலில் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தவளிடமிருந்து விலகிய மீனாட்ச்சி.


"நல்லா இருக்கியா மருமகளே.." என்றார்.


அவளுக்கோ இது தன் அத்தை தான் என்பதை நம்பமுடியாவில்லை.

அவளது கேள்விக்கு பதில் கூறாமல் அவளையே விழிவிரித்து பார்த்திருக்க.

"உனக்கென்னடா....! உன் அழகுக்கும், உன் நல்ல குணத்துக்கும் எல்லாமே நல்லதாத்தான் நடக்கும்.
நீ குடும்ப கஷ்டத்தில ஊரைவிட்டு பிழைப்புக்காக இங்க வந்தது

ஊர்ல என்ன மாதிரி எல்லாம் கதை கட்டிச்சு தெரியுமாம்மா? ஆனா நான் அதையெல்லாம் நம்பலையே!
எனக்கு தெரியாத என் மருமக எப்பிடியானவள்னு... எங்கண்ணனும் இந்திராவும் வளத்த வளர்ப்பு எப்பவுமே தப்பாகது.


என் மருமக சொக்க தங்கம்." என வாயெல்லாம் பல்லாக சொன்னவள் மறந்திருக்கலாம்.. மைலி மறப்பாளா....?



அவளுக்குத்தான் தெரியுமே!
பணம் என்றலே மீனாட்சியின் வாய் எந்தளவிற்கு விரியும் என்பதை.


அத்தையின் பேச்சினால் உண்டான விரக்தி சிரிப்பினை அறிமுக புன்னைகையாக மாற்றி. இதழ் பிரிக்காமல் உதட்டினை இழுத்து புன்னைகைத்தவள்,



"எங்கத்தை மச்சினிங்க... அவங்களையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமே."

"வந்திருக்கலாம் தான்ம்மா..... ஆனா வயலுக்கு போற உன் மாமாவுக்கே யாரு அவிச்சு போடறேது..? அதான் விட்டிட்டு வந்தேன்." என்றவாறு பின்னாலே திரும்பியவள்,

ரஞ்சித் தயங்கியவாறு நிற்பதை கண்டு,
"என்னடா தயங்குறே? நம்ம மைலி தான் வா...!" என அவனது கையை பிடித்து இழுத்து மைலி முன் நிறுத்தினாள்.

அவனோ மைலியை நிமிர்ந்து பார்க்க சங்கடப்பட்டவனாய், தலையினை தரையினில் புதையும் அளவிற்கு குனிந்து நின்றான்.

"நல்லாயிருக்கிங்களா அத்தான்?" என்ற மைலியின் குரலில், தன் தயக்கத்தை தூர போட்டவனாய்,

ம்ம் என்றவன், மைலியின் கையை பற்றி,

"சாரி மைலி..." என்றான்.


மைலிக்கு அவன் மன்னிப்பின் அர்த்தம் புரியவில்லை. இமைகள் முடிச்சிட கேள்வியாக அவனை நாேக்கினாள்.

"எல்லாத்துக்குமே சாரி மைலி." என்றவன் விழிகள் ஸ்ரீயிடம் தாவ, இதை எதையும் கண்டுகொள்ளாதவன் விழிகளோ, மைலியின் கையிைனை பற்றியிருந்தவன் கையினில அழுத்தமாக படிந்ததை கண்ட ரஞ்சித்,

சட்டென அவள் கையை விடுவித்தது. மீண்டும் தலை குனிந்து கொண்டான்.



'எதற்கு இந்த தர்மசங்கடம்?

எனக்கு எல்லாம் தெரியும் என்று இவனுக்கு தெரியுமா...? ஆனா அன்னைக்கு இவனோட கண்ணில படவே இல்லையே...! அப்புறம எப்படி..?' என்று குழம்பும் போது தான்,

அன்று தாயுடனான ஸ்ரீயின் நடவடிக்கையில் தெரிந்த மாற்றம் நினைவில் வந்தது.


அன்று அவளிருந்த மனநிலையில் இவற்றை எதுவுமே கவனிக்கவில்லை....


'அப்படி என்றால்.....! என் மனநிலையினை புரிந்து தான் விஜயா அம்மாவை அவசரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தானா?' என அவனை திரும்பி பார்த்தாள். அவனுமே அவளை தான் பார்த்திருந்தான்.

"என்னை தெரியுமா தம்பி..?" என்ற மீனாட்சியின் குரலில், இருவரின் பார்வையும் அவளிடம் தாவியது.

அவன் இல்லை என்பதாக தலையசைக்க.


"நான் ஒருத்தி லூசாட்டம் கேள்வி கேட்டிட்டு... சொல்லாமல் எப்படி தெரியும்..?" என்று தன் தலையில் தட்டிக்காெண்டவர் அறிந்திருக்க வாய்ப்பில்லையே!


மைலியை பற்றிய முழு தகவல்களும் ஸ்ரீக்கு தெரியும் என்பதை.

"நான் இவளோட அத்தை தம்பி! என் கூடபிறந்த அண்ணன் மக மைலி." என்று பெருமையாக சொன்னவள்.


"க்ஹூம்..". என்று பெரு மூச்சை விட்டவாரே,

"எனக்கு தான் இவளை என் வீட்டு மருமகளா கூட்டிட்டு போக குடுத்து வைக்கல....

எல்லாம் இவனால தான் தம்பி." என்றவளை ஸ்ரீ புரியாது பார்க்க.

"ஆமா தம்பி.... சின்ன வயசில இருந்தே இவளை இவனுக்குத்தான் முடிவு பண்ணியிருந்தோம்.
வேலைக்கு போனதும் ஒரு பொண்ணு, அதுவும் தன் வேலை செய்யிற நிறுவனத்தோட முதலாளி மகள் தன்னை விரும்பிறா....
எனக்கும் அவமேல விருப்பம். நான் அவளை தான் கட்டிக்க போறேன்னான்.


சரி.. என் பய ஆசைய ஏன் கெடுப்பான்னு விட்டுட்டேன்.


ஒரு மாதத்துக்கு முன்னாடி சொல்லுறான்,
அவ தன்னை ஏமாத்திட்டா, அவளுக்கு இவனை வெறுத்துப் போச்சு. அதனால வேணாம்னு விட்டுடாளாம். பணக்கார பொண்ணுங்க எல்லாம் இப்பிடித்தானமே! ஒருதனை விரும்பிட்டு, இன்னொருத்தனை தானாமே கட்டிப்பாங்களாம். இது என்ன கலாச்சாரமோ....! எல்லாமே புதுசா இருக்கு.

நானும் நல்ல இடத்து சம்மந்தம் வரபோகுதுனு ரொம்ப சந்தோஷபட்டேன்.
ஆனா என் பையனை கடசியில வேலையில இருந்தும் தூக்கிட்டாங்க"

"ம்.. கடவுள் யாருக்கு யாருனு முடிவு பண்ணிருக்கானோ.... அது தானே நடக்கும்." என புலம்ப...

ஸ்ரீக்கோ மீனாவை தவறானவளாக மினாட்சியிடம் சித்தரித்தது ஆத்திரத்தை உண்டாக்க அவனை முறைத்தான்.


இப்படி தன்னை மீனாட்சி மாட்டி விடுவாள். என்று எதிர்பார்க்கவே இல்லை ரஞ்சித். அவனுக்குத்தான் தெரியாதே!

இந்தளவிற்கு தான் தாயிடம் சொன்ன பொய், ஸ்ரீயின் காதில் போய் சேரும் என்று.

ஆம் மீனாட்ச்சி சொன்னது அத்தனையும் உண்மையே.
ஏன் என்றால் அவனது சுயரூபத்தை அன்றே தனது மாமன் குடும்பத்தினருக்கு படம் போட்டு காட்டிவிட்டான் ஸ்ரீ.

விஜயாவையும், மைலியையும் செல்வத்துடன் அனுப்பி வைத்து விட்டு, மாமனையும், மீனாவையும் ரஞ்சித்தையும் தனிமையில் அழைத்த ஸ்ரீ.


ஒன்றும் விடாமல் ரஞ்சித்தின் பொய்யான காதல் திரையை அவன் காதலி முன் கிழித்தவன்,
சற்று முன்னர் அவன் நண்பன் வெங்கட்டுடன் உரையாடிய உரையாடலையும் கூறி,

"நான் சொல்றதில உங்களுக்கு நம்பிக்கை இல்லன்னா, வெங்கட்டும் உங்கள் ஆஃபீஸில் தானே வேலை செய்கிறான். அவன்கிடமட தாராளமாக கேளுங்க." என்றவன்,

"மீனா நல்ல யோசிச்சு முடிவு பண்ணிக்கோ. இது வாழ்க்கை! சட்டை கிடையாது பிடிக்கலைனதும் கழட்டி மாத்திக்க.


சின்ன வயசில இருந்து இவனை நம்பியிருந்த அந்த பெண்ணுக்கே இந்த நிலைன்னா...

நேற்று வந்தவ நீ!
உன்னை விட வேறு ஒரு பணக்கார பொண்ணு இவனுக்கு கிடைச்சா, உன்னையும் வச்சுக்கிறேன் என்றுதான் சொல்லுவான். இது தான் நீ ஆசைப்படுறியா? இதுக்குமேல உன் இஷ்டம்." என்றவன்,

தன் பேச்சினால் தலைகவிழ்ந்தவன் அருகில் சென்று,


"நானும் உனக்கு புத்தி சொல்லுற அளவுக்கு நல்லவனில்ல..... அதே சமயம் துரோகி கிடையாது. மைலிய அழ வைச்சிட்டேல்ல... இனி அவ அழ நான் விடமாட்டேன்.

அவளை நான் என் கண்ணுக்குள்ள வைச்சு பாத்துப்பேன்.. " என்றவது பேச்சில் சட்டென நிமிர்ந்து பார்த்தவனை,

"என்ன அப்பிடி பாக்குற......? என்ன சொல்லுறேன்னு புரியலையா?" அலட்சியமாக கேட்டவன்.

"அவளை என் மனைவியாக்கிக்க போறேன்னு சொன்னேன். மறுபடியும் பழைய உறவை சொல்லிட்டு அவ பக்கம் வந்திடாத... அப்புறம் மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்." என எச்சரித்து விட்டே வெளியேறினான்.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
ஆஹா ஸ்ரீ இவ்வளவு வேலை பார்த்திருக்கானா 😳😳😳😳😳ரஞ்சித் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை பட்டு ஒன்னும் இல்லாம போய்ட்டான் 🙄🙄🙄🙄
 

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
ஆஹா ஸ்ரீ இவ்வளவு வேலை பார்த்திருக்கானா 😳😳😳😳😳ரஞ்சித் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை பட்டு ஒன்னும் இல்லாம போய்ட்டான் 🙄🙄🙄🙄
ஆமா ஆமா...
 
Top