• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

41. என்னாளும் உன் பாென்வானம் நான்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
“அம்மாவ சோதிச்சு பாத்ததுலயும், அம்மாக் கூடப் பேசிப்பாத்ததுலயும் வைச்சு சொல்லுறேன். அவங்கள சீக்கிரம் சரி பண்ணிடலாம் தம்பி. ஆறு மாதத்துக்குள்ள யாரு துணையுமில்லாம எழுந்து நடக்குறது போல சரி பண்ணி தரேன்.


எப்போ அம்மாவ அட்மிட் பண்ணப்போறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா வேண்டிய ஏற்பாட்ட பண்ணிடலாம்” என்றார் அந்த அந்த நீளமான தாடிவைத்திருந்த பெரியவர்.


அவர் கேட்டதும் சட்டென முரளியைத் திரும்பிப் பார்த்த துளசி, வேண்டாம் என்பதாகத் தலையசைத்தாள்.


அவர்கள் இருவரும் விழிகளால் பேசிக்கொள்வதைக் கண்டவர்,


“என்ன தம்பி சம்சாரம் இந்தளவுக்குப் பயப்படுறாங்க? அவங்க பயப்படுறது போல இங்க எதுவுமே இல்லன்னு சொல்லுங்க” என்று முரளியிடம் சொன்னவர், துளசியிடம் திரும்பி.


“அம்மாவுக்கு எந்த குறையுமில்லாம நல்லா கவனிச்சுப்போம்மா, அதனால பயப்பட எதுவுமில்ல. உன் புருஷனும் இங்க தானே வைத்தியம் பண்ணான். ஏன் அவன் உனக்கு எதுவும் சொல்லலையா?” எனக் கேட்டார்.


துளசிக்கு சற்றுநேரம் அவர் கேள்வியில் பேச்சே எழவில்லை.
பின்னே சட்டென இருவரையும் கணவன், மனைவி ஆக்கினால் எப்படிப் பேச்சு வரும்?
அவரிடம் உண்மை நிலையினை கூற முடியாதவளாய் முரளியின் புறம் விழிகளை நகர்த்தியவள் முகத்தினை வைத்து அவள் மனநினை அறிந்தவன்,


“அது ஐய்யா....! அவங்களுக்கு பயமெல்லாம் இல்லை.
அவங்களுக்கும் அம்மாவைத் தவிர துணையுன்னு சொல்லிக்க யாருமே இல்லை, ரெண்டு பேருமே ஒருவருக்கொருவர் தான் துணையே,
அதோட அவங்க இங்கேயே இருந்து வைத்தியம் பாத்தா, தன்னைத் தனியே ருத்ரா விட்டுட்டாளோன்னு மனசளவுல பாதிக்கப் பட்டிடுவாங்களோன்ன பயம்தான் அவங்களுக்கு. அதனால வீட்டிலயே வைச்சு வைத்தியம் பாக்க தான் விரும்புறாங்க” எனக் தடுமாற்றத்தோடு கூறினான் முரளி.


“ஓ..... அப்பிடியா தம்பி! ஆனா அவங்க வீட்டிலயே இருந்தா எப்பிடி வைத்தியம் பண்ணமுடியும்? இவங்க நோய்க்கெல்லாம் தினமும் வைத்தியம் பண்ணணுமே! அப்போ தானே நோய் கட்டுக்குள்ள வரும்?” என யோசித்தவர்,


“நான் யாருக்காகவும் இந்த மாதிரி வீட்டுக்கு வந்து வைத்தியமே பாத்ததில்ல தம்பி. ஆனா என்னயே நம்பி இவ்ளோ தூரம் வந்த உங்களுக்காக வரேன், உங்க வீட்டில தானே மாமியாரும் இருக்காங்க..?” என வினவ.


மீண்டும் துளசிக்கு நெருடலாகிப்போனது. ஆனால் முரளிக்கோ அவர் துளசியை தன் மனைவியாக நினைத்து பேசும் ஒவ்வொரு தடவையும் உள்ளே பன்னீர் புஷ்பங்கள் இதழுடைத்து மணம் வீசுவதைப்போல் பரவசமாக இருந்தாலும் அவள் முகக்கோணலில் அதை மறைத்து கொண்டவன்,


“ஐயா.... அது.... இவங்க என் மனைவி கிடையாது. நான் இன்னும் மேரேஜ் பண்ணிக்கல.
இவங்க எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க, அதனால தான் உங்கள நம்பி அழைச்சிட்டு வந்தேன். இவங்க வீடும் பக்கத்தில தான் ஐயா இருக்கு.
நீங்க எந்த நேரம் வைத்தியம் பாக்கிறதுக்கான நேரம்ன்னு சொன்னிங்கன்னா நானே தினமும் வந்து உங்களை அழைச்சிட்டு போயிடுறேன்” என்றான்.


“ஓ... மன்னிச்சிடுங்க தம்பி, நீயும் மன்னிச்சிடும்மா!
தம்பி ரொம்ப கேர் எடுத்து, மெனக்கெட்டானா அதனால தான் நீங்க கணவன் மனைவியோன்னு நினைச்சிட்டேன்” என சங்கடப்பட்டார்.


“பரவாயில்லை ஐயா! தெரியாம தானே சொன்னிங்க” எனக் கூறியவள்,
“எப்போ ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம்.?” எனக் கேட்டாள்.


“உங்களுக்கு ஓகேன்னா நாளைக்கே ஆரம்பிச்சிடலாம்மா.
நாளைங்கு காலையில ஆறு மணிக்கு வந்திடுங்க தம்பி. சூரிய உதய வேளையில வைத்தியத்த ஆரம்பிக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது” என்க.


“சரி ஐயா! நாளைக்கு வந்திடுறேன். அப்போ நாங்க வரட்டுமா?” என உத்தரவு வாங்க.
உத்தரவு வழங்கினார் அந்த பெரியவர்.


வெளியே வந்தவள் எங்களால “உங்களுக்கு எதுக்கு சார் சிரமம்..? காலையில நானே ஆட்டோல வந்து அழைச்சிட்டு போறேன், நீங்க உங்க வேலைய கெடுத்துக்கிட்டு இதில மெனக்கெடாதீங்க” என்றாள்.


“என்ன ருத்ரா! இவ்வளவும் பண்ண என்னை சட்டுன்னு கழட்டி விடுறீங்க..?” என சீரியஸாக கேட்பது போல் கேட்டுவிட்டு அவள் முகம் போன போக்கில் பட்டென சிரித்தவன்,


“எனக்கு எதுவும் சிரமமில்ல ருத்ரா! எழுந்ததும் நீங்க அம்மாவை கவனிப்பீங்களா? இல்லை வைத்தியரை அழைச்சிட்டு வருவீங்களா?
அப்புறம் ஆபீஸ்க்கு வேற ரெடியாகணும்.
காலையில நான் வெட்டியா தானே ஊரை சுத்த ஜாக்கிங்க் என்கிற பெயரில ஓடப்போறேன்.
அதுக்கு பதிலா கார்ல ஓடிட்டா போச்சு. அம்மாக்கு குணமாகினா பாதி கிரெடிட் எனக்கும் தானே கிடைக்கும்” என கண் சிமிட்டி கூறியவனை ஒரு நிமிடம் தன்னை மறந்து ரசித்தவள், மறு நொடியே தன் தவறை உணர்ந்து விழிகளை தாழ்த்திக்கெண்டாள்.


அவள் பார்வையின் மாற்றம் புரிந்தாலும் அதை தான் கண்டுவிட்டேன் எனக் காட்டிக்கொடுக்க விரும்பாதவன்,


“இங்க பாருங்க ருத்ரா, எல்லாத்தையும் மனசுக்குள்ள வைச்சிருந்து, ஒன்னோட ஒன்னு சம்மந்த படுத்தி உங்கள நீங்களே கேவலப்படுத்திக்காதீங்க.


இதெல்லாம் ஒரு உதவியா செய்றனே தவிர, உங்ககிட்டயிருந்து எதையும் நான் எதிர்பார்த்து செய்யல.
இத நீ எனக்கு செய்தாத்தான் உன்மேல காதல் வரும்ன்னு சொல்லுற வீக்னஸான காதலையும் நான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்க மாட்டேன்.
ஜஸ்ட் என்னால முடிஞ்ச உதவி அதை செய்ய ஆசைப்படுறேன். அதனால கண்டதையும் நினைச்சு குழப்பிக்காதீங்க. வாங்க போகலாம்” என நடந்தவன் பின்னால் நடந்தவள், விழிகள் நந்தவனத்தில் கையில் ஒரு குழந்தையுடன் நின்ற மதுவிடம் நிலைகுத்தி நின்றது.


மதுவின் அருகில் சென்றவள்,
“யாரு குழந்தை இது? அம்மா எங்க?” எனக் கேட்டவாறு விழிகளை சுழட்டியவள், ஆலமத்தின் கீழ் இருந்தவரை கண்டுவிட்டு,


“ஏய்! அம்மாவ தனிய விட்டிட்டு யார் குழந்தைய தூக்கி வைச்சிருக்க? முதல்ல குழந்தைய உரியவங்கக் கிட்ட குடுத்திட்டு வா போகலாம்” என அழைத்தாள்.


“ம்ம் அப்பிடின்னா உங்ககிட்ட தான் குழந்தைய தரணும்” என்றாள் மது.


“என்ன உளர்ற?” என்றாள் துளசி பற்களை கடித்தவாறு.


“ஆமா குழந்தைய நல்லா ஒருவாட்டி பாருங்க. அப்பிடியே அச்சில வாத்த மாதிரி உங்களப் போலவே இருக்கா” என மது சொன்னதும் தான் முரளியும் அதை கவனித்தான்.


அவனுக்கே அது ஆச்சரியமாகி போக, “ஆமா மது. அப்பிடியே ருத்ரா மாதிரியே இருக்காளே!
இவளோட பெத்தவங்க யாரு?” என அவன் ஆர்வமாக வினவ.


“தெரியல சார். அதோ அந்த வீல்ச் சேரிலிருந்து அழுதிட்டு இருந்தா,
பக்கத்தில வேற யாரும் இல்ல. அழவிடாம பாப்போம்ன்னு கிட்ட வந்து பாத்தா துளசி அக்கா மாதிரியே இருக்குற இவளப் பாத்ததும் அதிர்ந்திட்டேன்” என நடந்தவற்றை கூறினாள்.


துளசிக்கும் சின்னவளை பார்த்ததும் அவளைக் கையில் ஏந்தவேண்டும் என்றே மனம் பரபரத்தது.


ஆம் குழந்தைகள் என்றாலே துளசிக்கு ரொம்பவே இஷ்டம். எங்கு குழந்தைகள் விளையாடினாலும் அவள் பார்வை அவர்களை நோக்கியே செல்லும். அது அவளுக்கு குழந்தை ஆசை வந்ததிலிருந்து அதை தவிர்க்க முடியாமலே போனது.
தான் ஒரு குழந்தைக்கு தாயாக முடியவில்லை என்றதும் அந்த ஏக்கம் இரட்டிப்பானது.


“பாப்பா அத்தகிட்ட வரீங்களா? அத்த சாக்லேட் வாங்கித்தரேன்” என கைகளை அவளை நோக்கி நீட்ட குழந்தை உடம்பை அவளை நோக்கி வளைக்க,


“அட செல்லப்பிள்ளை கூப்பிட்டதும் வராளே!” என சந்தோஷமாக கூறியவாறு அவளை தூக்கி கன்னத்தில் முத்தம் வைத்தவள், “உங்க அம்மா எங்கடா?” எனக் கேட்டாள்.


குழந்தையோ ஏதோ புரியாத மொழி கேட்டதைப்போல் துளசி முகத்தையே பார்த்தவாறு முழிக்க,


“என்னம்மா! ஏன் அப்பிடி பாக்குற?” என்க.
குழந்தை அன்னபூரணி புறம் பார்வையை மாற்றியது.


“என்னடா அங்க பாக்குறீங்க? பாட்டிக்கிட்ட போகணுமா? சரி வா போலாம்” என தூக்கிக்காெண்டு தாயிடம் விரைய, அவரிடம் தாவத்துடித்த குழந்தையை கையினில் அடக்கிக்கொண்டவள்,


“என்னம்மா உங்ககிட்ட ரொம்ப ஒட்டிக்கிட்டா போல. அம்மான்னதும் உன்கிட்ட ஓடிவரா” என்க.


“ஆமாம்மா தனியா இருந்து அழுதிட்டிருந்தா, சும்மா பேச்சு குடுத்தோம் ஒட்டிக்கிட்டா! பாவம் யாரு பெத்த பிள்ளையோ! ஓடியாடித்திரிய வேண்டிய வயசுல கால முடமாக்கிட்டான் ஆண்டவன்” என அவளுக்காய் அன்னபூரணி வருத்தப்பட அப்போது தான் துளசியும் அதைக் கவனித்தாள்.


மனம் ஏனோ கனத்துப்போக, அவளை இறுக அணைத்து முத்தம் வைத்தவள்,
“சார் பாப்பாக்கு சாக்லேட் வாங்கிட்டு வரீங்களா?” என கெஞ்சுவது போல் கேட்க,


“நடந்து போற தூரத்துல தான் ருத்ரா கடையிருக்கு. பாப்பாவ தூக்கிட்டே வாங்க, பாப்பாக்கு எது பிடிக்கிதோ அதை வாங்கி தந்திடலாம்” என்க.
அவளுக்கும் அது தான் சரியெனத் தோன்றியது.


“மதி இப்போ வந்திடுறோம். அம்மாவ தனிய விட்டுட்டு எங்கேயும் போகாத” எனக் கூறிவிட்டு மூவருமாக கடைக்குச் சென்றனர்.


தம்மை கடந்து போகும் மூவரையும் பார்த்திருந்த அன்னபூரணிக்கு அப்படியே இவர்கள் இருவரும் காலம் முழுவதம் நடைபோடக்கூடாதா? என்றே தோன்றலாயிற்று.
ஆனால் நடக்க வேண்டுமே என பெருமூச்சு எய்தவருக்கு துளசியின் கடந்த கால வாழ்க்கை நினைவு வந்தது போல.


'கடவுள் எதை நினைக்கிறானோ அது தானே நடக்கும்? என் பொண்ணு வாழ்க்கை முடிஞ்சது முடிஞ்சது தான், இனிமே அவ யாரையும் நம்ப மாட்டா!' என தனக்குள் கூறியவர் விழிகள் நீர் கோர்த்திருந்தது.


சின்னவள் காட்டிய பொருள் அணைத்தையும் ஒரு பை நிறைய வாங்கிக்கொண்டு வந்து சின்னவளது இருக்கையில் அமர்த்தி ஒவ்வொன்றாக பிரிந்து சாப்பிட கொடுத்தாள் துளசி.


குழந்தைகள் குணம் தான் தெரியுமே! எல்லாவற்றையும் கைகாட்டிவிட்டு சாப்பிடாமலே தூக்கி போட ஆரம்பித்தது.


அதை பார்த்துக்கொண்டிருந்த மதியோ,
“பாப்பா எதையும் தூக்கிப் போடாம சாப்பிட போறியா இல்லையா? உன்னால சாப்பிட முடியலன்னா அப்புறம் ஏன் பிரிச்சு தரச்சொல்லிக் கேக்குற” என சின்னவளை மிரட்டினாள்.


அவளோ அப்பா என எங்கேயோ பார்த்துக் கத்த தொடங்கினாள்.


“ஏய் லூசு! ஏன்டி பாப்பாவ மிரட்டுற? குழந்தைங்கன்னா அப்பிடித்தான்.
அதுக்கு என்ன தெரியும்?” என அவளை அடக்கியவள்,


"அந்த அத்த பேடு. அவங்க கூட நாம இனி பேசவேண்டாம் சரியா?, உனக்கு எது வேணும் சொல்லு அத்த பிரிச்சு தரேன்” என சமாதான உடன்படிக்கைக்கு வந்தவளை கருத்திலே கொள்ளாது சின்னவள் மீண்டும் அதே இடம்பார்த்து "அப்பா" என கை இரண்டையும் தூக்கி அழ,


அவள் பார்வை போன இடத்தினில் அனைவர் பார்வையும் திரும்பியது.


குழந்தைகளை சுற்றி நிற்பவர்களை கண்டு தயங்கியவாறே நடந்து வந்தவன், குழந்தையின் அழுகை அதிகமாவதை உணர்ந்து வேகமாக ஓடிவந்து குழந்தையை தூக்கியவன்,


“விஷாக் குட்டி ஏன் அழுவுது? விஷா ரொம்ப ஸ்ரோங்க் தானே? அப்பிடின்னா அழக்கூடாது” என குழந்தையின் கன்னங்களை தட்டியே தேற்றியவன்,


துளசியின் புறம் திரும்பி, “நல்லா இருக்கியா துளசி?” என வெறுமையாய் கேட்டவன் கேள்வியில் “ம்ம்..” என அவனையே ஆராய்ந்தவள் தலையானது அவளையும் அறியாமல் அசையலாயிற்று.


ஆம் அவ்வளவு கேவலமான தோற்றத்தில் நின்றிருந்தான் அவளது உடன்பிறப்பான அண்ணன் ராம்குமார்.


மூன்று வருடங்களில் இத்தனை மாற்றம் நிகழுமா என கேட்டால் நிகழும் என்று சொல்வதைப் போல் முகத்தில் பாதியை தாடி மறைத்திருக்க, ஒரு காற்றுக்கே உடைந்து விழுந்து விடுபவனைப்போல் இருந்தது அவனது உடல் தோற்றம்.


முகத்தினில் சந்தோஷத்தின் சாயல் சற்றுமில்லாது முற்றிலுமாக வழித்து துடைத்திருக்க, இவனது இத்தோற்றத்திற்கு காரணம் தேடி அவனையே பார்த்திருந்தாள் துளசி.


கண்களில் ஏக்கத்தை தேக்கியவாறு தன் எதிரே நின்றவர்களை மாறிமாறிப் பார்த்தவன்,
“நீங்க எல்லாருமே ஒன்னு சேர்ந்துட்டீங்க, ஆனா நான் தான்..”என மீதியினை கூறமுடியாது கண்கள் கலங்கயவனை பார்த்த அவன் செல்லமகள் பயத்தில் உதட்டை பிதுக்கி அழ ஆரம்பித்தாள்,


“உய்யுய்யோ.... செல்லக்குட்டிக்கு ஏன் அழுவுறா,
அப்பா ஒன்னும் அழலடா! அப்பா கண்ணுல தூசி விழுந்துட்டாம். நீங்க ஓடி வாங்க அத்தைகிட்ட” என தமையனிடமிருந்து அவளை வாங்கிக் கொண்டவளுக்கு அவன் வாழ்விலும் ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என உணர்ந்தாள்.


இருவரையும் தேற்றுவதற்காய்,


“அண்ணா குழந்தை நீ அழறத பாத்துத்தான் அழறா, முதல்ல கண்ண துடைச்சுட்டு சாதாரணமா பேசு” என்றாள்,
 
Top