• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
அவளது முழுக்கவனமும் யாழ்ப்பாணம் செல்லவேண்டும்.. அங்கிருக்கும் தன் சொந்தங்களை காணவேண்டும். தன்னுடைய இலக்கினை அடையவேண்டும்.
என்பதிலேயே இருந்தது.



ஆனால் எப்படி? என்பது தான் தெரியவில்லை..

வழியறியாது திணறியவளுக்கு, இனியாளே வழியமைத்து தந்தது போல், தன் திருமணசெய்தியினை கூற.


அந்த சந்தர்ப்பத்தினை தனக்கு சாதகமாகவே பயன்படுத்திக்கொண்டாள்.


முதல் தடவை இனியாளின் தந்தைக்கு தேனீர் கொடுக்க வரும்போது, அவள் எதிர்பார்க்கவே இல்லை.


வயலுக்கு நடுவே அதன் அழகை கெடுப்பது போல் மணிகண்டன் கூறிய அந்த கட்டடம் அங்கு இருக்கும் என்று.


அதை கண்டதும் செய்வதறியாது தம்பித்து விட்டாள்.


உள்ளே சென்று தாய் தந்தையின் நினைவு ஸ்தூபியை பார்க்க வேண்டும் என பரபரத்த மனதினை தன் நிலையறிந்து அடக்கிக்கொண்டவள்,

கண்களில் கட்டடத்திலிருந்து வந்தவனோ, தன்னை யாரும் கண்டு விடக்கூடாது என்று, இடுப்பில் கட்டியிருந்த சாரத்தினை முகம்வரை மூடிச்சென்ற செயலானது, அவள் கவனத்தினை அவன்புறம் ஈர்த்தது.



எதுக்கு பட்டப்பகல்ல இந்த மாதிரி போறான்? இதுக்கு வெளியவே வராமல் இருந்திருக்கலாமே! என நினைத்தவளது ஆர்வமானது அவனை யாரென அறியத்தூண்டியது.


தன்னை விட்டு, நீண்டதூரம் போனவளை கூட கவனியாது அவனையே பார்த்திருக்க,
அவனோ இப்படி ஒருவள் தன்கை கவனிக்கிறாள் என்பதை அறியாது,

முகத்திலிருந்து சாரத்தினை விலக்கியவன், அக்கம் பக்கம் நோட்டமிட்டவாறு திரும்பி நின்று தன்னாலான நீரினை வயலில் பாய்ச்சி அசிங்கம் செய்யத்தொடங்கினான்.



அதை தான் பார்க்க கூடாது என்ற எண்ணம் அற்று, அவன் முதுகினை வெறித்து நின்றவள் கனவை கலைத்தவள் இனியாள் தான்.


அது வேறு யாருமல்ல..

அவள் தேடி வந்த மூவருள் ஒருவன் தான்.


மணிகண்டன் கொலைக்குப்பின் தலைமறைவாகிவிட்டான் என்று, ஊர் மக்களால் நம்பப்பட்டவன் இங்கு பதுங்கியிருப்பதை கண்டதும், அவன் அங்கு தலைமறைவாகியிருப்பதும் அவளுக்கு வசதியாகிப்போனது.



பாவம் அவன் விதி அவ்வளவு தான் போல... தைரியமாக வெளியில நடமாடியிருந்தாலாவது உயிர் பிழைத்திருப்பானோ என்னமோ!


யார் கண்ணில் விழுந்தால் அவனுக்கு ஆபத்தோ! அவள் கண்ணில் அல்லவா விழுந்துவிட்டான்.


கண்டுவிட்டாள்... இனி தன் திட்டத்தை செயற்படுத்திடவேண்டியது தான். என மனதில் கணக்கு வகுத்தவள், அந்த இயற்கையான சூழல் தனக்கு பிடித்ததாக கூறி மறு நாளும் இனியாளை கெஞ்சி வரவழைத்தாள்.



இரவோடு இரவாக எதை எப்படி செய்யவேண்டும் என சூழ்ச்சி வகுத்தவள், மறுநாள் மாலையானதும் அதை நிறைவேற்றுவதற்காக வயல்காடு சென்றாள்.


அவளின் நல்ல காலமோ என்னவோ! இனியாளை புல் புடுங்க தந்தை கட்டளையிட்டதால், வைஷூவிற்கு இன்னும் வசதியாகிப்போனது.



வயல்காட்டினை சுற்றிப்பார்ப்பதாக கூறிவிட்டு, அந்த கட்டமிருக்கும் திசை வந்தாள்.


விழிகளை சுழலவிட்டவளுக்கு, கண்களுக்கெட்டும் தூரம் வரை ஆள் நடமாட்டம் என்பது தெரியவில்லை.



மறுபடியும் அந்த கட்டடத்தின் புறம் திரும்பியவளையே, குறுகுறுவென சந்தேகமாக பார்த்தவனை கண்டதும்
பதறியே போனாள் வைஷூ.



இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. யாரை தேடி வந்தாளோ.. அவனே அவள் எதிரில் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதால், தான் வந்தநோக்கம் கெட்டுபோய்விடுமோ! என பயந்தவளுக்கு தெரியும்.




இந்த வாய்பினை தவறவிட்டு விட்டால்... இதே போலொரு வாய்ப்பு இனி அமைவது சாத்தியமல்ல என்று.
அவளையே இமைகள் சுருங்க கேள்வியாக பார்த்து நின்றவன்.



"ஏய்.....! யாரு நீ? நானும் உன்னை கவனிச்சிட்டு தான் இருக்கேன்.. இந்த கட்டிடத்தையும், வயல்காட்டையும் மாறிமாறி எதுக்கு பாக்குற?
என்ன வேகு பாக்க வந்தியோ..? யாரு உன்னை அனுப்பி வைச்சாங்க?" என சீறியவனின் கேள்வியில்,

தனக்குள் எழுந்த பயத்தினை மறைத்தவள் மனதில், ஆயிரம் எண்ண ஓட்டங்கள்.


என்ன நேர்ந்தாலும் இந்த வாய்ப்பை நழுவ விட்டுவிடவே கூடாது.


'இவனும் அந்த மணிகண்டன் கூட்டாளி தானே! அவன் புத்தி இவனிடமும் இல்லாமலா இருக்கும்?
அவனிடம் அரங்கேற்றிய நாடகத்தை இவனிடமும் அரங்கேற்றி பார்த்தால் என்ன?' என வேகவேகமாக சிந்தித்தவள் உடல் மொழியோ வேறு மாதிரியாக மாறியது.


கைகள் இரண்டையும் தலைக்கு பின்புறம் கொண்டு சென்று, ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு, உடலை முறுக்கி காண்பித்தவள்.. கீழ் உதட்டினை பற்களால் கடித்து மெதுமெதுவாக விடுவித்து.



"என்னை யாரு அனுப்பி வைப்பாங்க? உங்க முதலாளி தான் அனுப்பி வைச்சாரு..
எப்பவும் சந்தோஷமா ஜாலிய இருக்கிறவன்.. இந்த ஒருவாரமா குட்டியே இல்லாமா ரொம்ப பட்டினி கிடக்குறானாம்... யாருக்கும் தெரியாம போயி.. அறுசுவை உணவையும் பரிமாறிட்டு வான்னாரு.." என சிணுங்கலாக கூற,


அவள் சொன்ன விதமும், அவளது உடல் மொழியும் அவனை சிலிர்க்க வைத்தது.


"ஓ...! ஐய்யா தான் அனுப்பினாரா?
ஆமால்ல... அவருக்கு மட்டும் தானே தெரியும, நான் இங்க மறைஞ்சிருக்கிறது... அவரு சொன்னதனால தான் அக்கம் பக்கம் நோட்டமிட்டியா?" என்றவன்,



"பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தாய்யா...! என் பசி என்னன்னு அந்த மனுஷனுக்கு தான் தெரிஞ்சிருக்கு.


இந்த மாதிரி அழகிய தினமும் அனுப்பி வைப்பாரா இருந்தா... ஒரு வாரமென்ன? ஒரு ஜென்மத்துக்கும் தலைமறைவா இருந்திட்டு போவேன்." என வழிய.


"ச்சீ... போங்க." என சிணுங்கியவளின் சிணுங்கலில், சப்த நாடிகளும் சிலிர்த்துப்போனவன்,


"ஆமா நீ எந்த ஊரு? இந்த ஊர் இல்லன்னு மட்டும் தெரியுது." என்
றான்.


"ஆமா நான் இந்த ஊரு கிடையாது. உள்ளூரில ஏற்பாடு பண்ணா, நீங்க இருக்கிற இடத்தை காட்டிக்குடுத்திடுவாங்ளாமே!
இப்பிடியே பேசிட்டிருந்தா எப்பிடி? உள்ள போவோமா?" என அதே சிணுங்கல் மாறாது கேட்க.



"உள்ளயா? இப்போவா..? உள்ள ஆளுங்க வேலை செய்யிறாங்களே! இப்போ எப்பிடி போய் ஒதுங்கிறது?" என கவலையோடு கேட்டான்.


இத்தனை நேரம் தன் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, அந்த கேடுகெட்டவனிடய் தன்னை தாழ்த்திக்கொண்டிருந்தவள்,

தான் நினைத்த இடத்துக்கே அவனை வரவைக்கும் எண்ணம் ஈடேறுவதை உணர்ந்து,
அந்த இடத்தினை சுற்றி பார்வையை ஓடவிட்ட
வள்,


"இங்க எல்லாம் வெட்டை வெளியா இருக்கே! யாருக்கும் தெரியாம ஒதுங்க முடியாதே!
வர்றப்போ கிணறுபோல ஒரு கேணி பாத்தேன். அங்கையும் யாருமில்ல... அப்பிடி யாராச்சும் வந்தாலும், உள்ள இருக்கிற படியில இறங்கினா, யாருக்கும் நம்ம உள்ள இருக்கிறது தெரியாது.



அங்கயே போயிடலாமா?" என மயக்கும் குரலில் கேட்டாள்.


முப்பத்தியிரண்டு பல்லும் தெரிவதுபோல இளித்து வைத்தவன்,


" போலாமே....!" என்றான் அவளது பாணியி
லேயே..


"ச்சீ..... போடா!" என கேணியை நோக்கி ஓடியவளை,


" ஏய் ஓடாத நில்லு.." என அவளது போடா என்ற வார்த்தையை ரசித்தவாறு அவளை துரத்தினான்.


வரப்பு வழி நடந்தே அறியாதவளால், வேகமாக ஓடமுடியவில்லை. கவனமாக ஓடியவளை பிடித்து விட்டான் அந்த காமப்பிசாசு.


"எங்க ஓடுற? இப்போ மாட்டிக்கிட்டியா?" என அவள் தோள்களை தொட்டவன் தீண்டலில் அருவெருட்பு உண்டாக,
அவனை பிடித்து தள்ளிவிட்டாள்.


இதை அவன் எதிர்பாராததனால் வரப்பு மேட்டிலிருந்து கீழே விழுந்தவன், ஓரமாக வெட்டி ஒதுக்கப்பட்டிருந்த கூரிய முல்லின் மேல் விழுந்துவிட்டான்.


வைஷூவும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன்னை தொட்டதும் அவன் தொடுகையில் அருவெருத்து தள்ளினாலே தவிர.. இப்படி ஆகும் என அவள் நினைக்கவில்லை.


போச்சா? இவன் கோபம் கொண்டுவிட்டால் பிளான் சொதப்பி விடுமே! இவ்வளவு நேரம் பல்லை கடித்துக்கொண்டு சகித்ததெல்லாம் வீணாகி விடுமோ! என பயந்தவள்,


"ஐய்யைய்யோ..! விழுந்திட்டிங்களா? ரொம்ப அடி பட்டுடிச்சா? நான் சும்மா விளையாட்டுக்கு உங்ககிட்ட இருந்து தப்பிச்சு ஓடலாம்ன்னு தான் தள்ளிவிட்டேன். ஆனா இப்பிடி ஆகும்ன்னு நினைக்கல." என தன் கைகொடுத்து அவனை எழுப்பி விட்டவள், அவன் உடம்பிலுள்ள முற்கீறள்களின் தடங்களால் இரத்தம் கசிவதை கண்டு,


"ஐய்யோ இரத்தம்." என அவனை தொடுவது அருவெருப்பாய் இருந்தாலும், வேறு வழியின்று அந்த காயத்தை ஆராந்தவள் அக்கறையில் உருகித்தான் போனான்.


"அது சும்மா காயம்தான்... நீ வேணும்னா பண்ண? இங்க நின்னா.. யாராச்சும் பாத்திடுவாங்க. வா நம்ம கேணிக்குள்ள போவோம்." என கேணிப்படிகளின் கடைசி படிகளில் இறங்கியவனை பின்தொடர்ந்து சென்றவள்,


அடிப்படியினில் அவன் அமர.. அதற்கு மேல் படியினில் அமர்ந்தாள் வைஷூ.


சிறிது நேரம் தண்ணீரில் கால் நனைத்து விளையாடியவள் பாதங்களையே பார்த்து நின்றவன், கை சும்மா இருந்தால் தானே! அவள் பாவாடையினை சற்று உயர்த்தி, கால்களை வருடியவனை சட்டென தள்ளிவிட்டவள், தானும் அதற்குள் குதித்து,


"ஏன்டா நாயே...! பொண்ணுங்கன்னா உனக்கு அவ்வளவு கேவலமா போனோமா?" என்றவாறு அவன் தலைமுடியினை கொத்தாகப்பிடித்து தண்ணீருள் அழுக்கினாள்.



அதை எதிர்பாராதவனோ.. முதலில் தடுமாறினாலும், மறு நொடிய வைஷூவை தண்ணீரில் தள்ளி அவள் வேலையினை இவன் செய்தவன்,


"இதை மாதிரி எவ்வளவு பாத்திருப்பேன்... பொட்டச்சி நீ.. என்னை சாவடிப்பியா?" என்றவாறு வைஷூைவை முழுமையாக தண்ணீருக்குள் முக்கியவன் செயலில், ஆக்ரோஷம் கூடிப்போயிருந்தது.


ஆனால் வைஷூவின் கோபத்திற்கு முன் இவன் கோபம் பெரிதில்லையே!


உள்ளே தண்ணீரில் அழுழ்ந்திருந்தவளோ மாணிக்கத்தின் காலை இழுத்துவிட,


மல்லாக்காக விழுந்தவனை, ருத்ரகாளியாய் மாறியிருந்த வைஷூ, அப்படியே அவனை அசையவிடாது சிலநிமிடங்கள் அழுக்கியே வைத்திருந்தாள்.


அவனது காலின் துடிப்பு அடங்கியதுமே அவனை விடுவித்தாள்.


அதன் பிறகு ஒருநிமிடம் கூட அதனுள் இருக்கவில்லை.
யார் கண்ணிலும் அகப்படாமல் வெளியே வந்தவள், தான் நனைந்திருப்பதற்கு இனியாள் நிச்சயம் காரணம் கேட்பாள். அதற்கு தடுமாறாது பதில் சொல்லியாகவேண்டும்.

என்ன சொல்லுவது..? என யோசிக்கும் போது தான் ஆளுயர வாய்க்காலினால் ஓடும் நீரும், அதன் மேற்பரப்பில் நாணல் புற்களையும் கண்டாள்.


நாணலினில் ஒரு தொகை புல்லினை பிடுங்கி கைகளுக்குள் அடக்கியவள், வாய்க்கால் நீருக்குள்ளும் விழுந்து எழுந்தாள்.


அப்போது தான் ஆதியும் அவளை கண்டு கேள்விமேல் கேள்வி கேட்டான்.


அதன் பின் முன்றாவது கொலையாளியான கோதண்டத்தை தேடிக்கொண்டு இருந்தபோது தான், அவனாகவே அவள் கண்ணில் அகப்பட்டான்.


பால்கனியில் நின்று காலையின் அழகினை ரசித்தவாறு இருந்தவள் சக வேலையளை மிரட்டிக்கொண்டிருந்தவனை கண்டதும் அதிர்ந்தே போனாள்.



இதை அவள் எதிர்பார்க்கவே இல்லை.

'உண்ட வீட்டுக்கே ரெண்டகமா? செய்வதெல்லாம் செய்துவிட்டு.. எதுவும் நடவாதது போல் எப்படி இந்தளவிற்கு நாடகமாட முடிகிறதோ!: என அவனையே நோட்டமிட்டவள், அப்போது தான் கவனித்தாள். அவன் காலிருக்குமிடத்தில் பொய் கால் ஒன்று பொருத்தப்பட்டிருந்ததை.



அதையே பார்த்திருக்கும் போது தான் ஆதி வந்து அதற்கான விளக்கம் கொடுத்தான்.


வீட்டோடே வேலை பார்ப்பவனை வைஷூவால் நெருங்க முடியவில்லை. அவள் செல்லும் நாட்கள் வேறு நெருங்கிக்கொண்டிருந்தது.



எப்படியாவது முடிவு கட்டிடவேண்டும் என நினைத்திருந்தபோது தான்,
இனியாள் வீட்டிற்கு ரஞ்சனி அழைத்து சென்றாள்.


அன்றென்று பார்த்த குடோனுக்கும் போகலாம் என்றதும்,
தாய் தந்தையை அந்த நிலையில் பார்க்கப்போகிறோம் என்பதே வைஷூக்கு தயக்கத்தை கொடுத்து, அவள் நடையினை பின்ன செய்தது.


உள்ளே சென்று நேராக அவர்கள் சமாதி முன் நின்றவளுக்கு, அதை காணும் வரை இருந்த திடம் குறைந்து போய்... மொத்தமாக தொய்ந்து போனவளாய்,

அதன் முன் மட்டியிட்டு அமர்ந்தவளுக்கு ஓ.... என கத்தி ஓலமிடவேண்டும் போலிருந்தது.


ஆனால் அது தான் முடியாதே! வேடிக்கை பார்க்க வந்துவிட்டு, இது என்ன புது நாடகம் என்று அவள் மேல் சந்தேகம் வந்து விட்டால், மொத்த திட்டத்தின் அத்திவாரமும் ஆட்டம் கண்டிவிடும்.


வெண்ணெய் திரண்டுவரும் போது தானே தாழியை உடைத்த கதையாகிவிடும்.
பொறுத்தாகிவிட்டது... இன்னும் இரண்டே இலக்குத்தானே!

பொறுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.
பெற்றவர்களை உயிரோடு தான் பார்க்க முடியவில்லை.. அவர்கள் சமாதியை கண்டும் அவளால் வாய்விட்டு கதறி அழக்கூட முடியவில்லை.


தன் துரதிஷ்டத்தை நினைத்து உள்ளுக்குள்ளே வெதும்பதொடங்கினாள்.



அந்த நிமிடத்தை நினைத்து கதை சொன்னவள் கண்களில் ஆறு பெருக்கெடுத்தது.



"இந்த நகர வேதனைய பார்க்க, நந்தன் என்னை கொள்ளவர்றப்போ அம்மா என்னை காப்பாத்தாம விட்டிருந்தாங்கன்னா.. நானும் அவங்ககூட போயிருப்பேன்.


இப்பிடி யார்கிட்டையும் சொல்லவும் முடியாம.. அழவும் முடியாம தனிமையில தவிச்சிருக்க மாட்டேன்."
என இதுவரை எந்த தடையுமற்று.. பெற்றவர்கள் சமாதியை பார்க்க சென்றதுவரை கூறியவள், தன்னுடைய அன்றைய இயலாமையினை இன்று கண்ணீராக வெளியேற்றியவளால்,


அதற்குமேல் மீதியினை கூற முடியவில்லை.
வார்த்தைகளுக்கு பதிலால ஓலமிட்டு வெடித்தழுதவளை, வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாதவராய், ஓடுவந்து தோளோடு அணைத்துக்கொண்ட பிரகாஷ்.


"அழாதடா...!
இந்த மாதிரி பேசுறதும் தப்பும்மா!
உன்னை பெத்தவங்க உன்னை விட்டு எங்கயும் போகாமாட்டாங்க... தன்னோட பொண்ணோட வாழ்கை சரியாகிற வரைக்கும் உன்கூடவே இருந்து, உன்னை கவனிச்சிட்டே இருப்பாங்க. நீ இந்த மாதிரி பேசுறதை பார்த்த.. அவங்க ஆத்மா எந்தளவுக்கு வேதனை படும்ன்னு யோசிச்சியா
?


தங்களோட உயிர் போனா போகட்டும் நீயாவது உயிரோட இருக்கணும்ன்னு தானே ஆசைப்பட்டாங்க." என அவளுக்கு ஆறுதல் கூற.

"என்னப்பா இங்க நடக்குது? அவ உண்மை எதுன்னு நம்மகிட்ட சொல்லாம.. ட்ராமா பண்ணிட்டிருக்கா
..
நீங்க என்னடான்னா அவ கண்ணீர் விடுறத பாத்ததும் உருகிட்டிருக்கிங்க." என்றான் ஆதி.



"எது...டா ட்ராமா என்கிற? இவளோட இந்த அழுகை பொய் என்கிறியா..? இல்லை கண்ணீர் பொய் என்கிறியா...?
உனக்கு இப்போ என்னடா வேணும்.
...?


உண்மை தானே வேணும்... நான் சொல்லுறேன்.. மீது என்னன்னு நான் சொல்லுறேன். அவளை விடு!" என மகனின் இரக்கமற்ற பேச்சில், முதலில் கோபம் கொண்டவர், இறுதியில் கெஞ்சலோடு முடிக்க.



தந்தையின் பேச்சில் அவரை புரியாது பார்த்தவன்,


"இவளை பத்தி நீங்க சொல்லுறீங்களா? உங்களுக்கு இவளைப்பத்தி என்னப்பா தெரியும்?" என்றான் புருவங்களை சுருக்கி.


"தெரியும்டா..! எல்லாமே தெரியும்.
இப்போ சொன்னாளே ஹாேட்டல்ல ரூம் மாறி ஹாலிங்க் பெல்ல அமத்தினேன்னு... அது என்னோட ரூம் தான்... அவளுக்கு பதில் சொன்னதும் நான் தான்.


முதல் தடவையா வீட்டில பாக்குறப்போ, எங்கேயோ பாத்திருக்கேன்னு தோணிச்சு... அதையே உறுதி செய்யிறது போல வைஷூவும் என்னை அதிர்ந்து பார்த்தா..

ஹாேட்டல்ல பாக்கிறப்போ கூட இதே அதிர்ந்த பார்வை தான், ஆனா காரணம் தெரியல.


அந்த நிமிஷம் தான் இவ யாருன்னு நினைவே வந்திச்சு. இவ அவ தான்னு.
ஆனா ரஞ்சினி சொன்ன தகவல்படி இவ பேசமாட்டான்னது தான் கொஞ்சம் இடிக்கிற மாதிரி இருந்திச்சு.


ஏன்னா ஹாேட்டல்ல பார்த்தவ.. மணிகண்டன் பேரை சொல்லி என்கிட்ட விசாரிச்சா.. நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டனோனு அதை பெருசு பண்ணாம விட்டுட்டேன்.



ஆனா அதுக்கப்புறம் நேரில கண்ட காட்சியிருக்கே!" என அன்றைய நிகழ்வுக்கு தாவினார்.


பார்ஷலை எடுப்பதற்காக குடோன் வந்தாள்.
வாசலில் காவலுக்கு நின்றவனோ இவள் வரவை எதிர்பார்த்து பார்ஷலோடு நிற்க,


அவரிடத்திலுருந்து பார்ஷலை வாங்கிய
வள்.


"ரொம்ப நன்றிண்ணா.." என்று வந்தவழி திரும்பாது, ரஞ்சனி வீட்டின் புறம் கடகடவென வேகமாக நடந்தாள்.


ஆம் அவள் வரும்போதே தென்னை மரங்களுக்கு இயற்கையான உரம் புதைப்பதற்காக குழிதோண்டியவனை கண்டுகொண்டே கடந்து வந்தாள்.



வேறு வழியில்லையே..! பலரின் பாதுகாப்பு நடுவில் இருப்பவனை எதுவும் செய்யமுடியவில்லை.



இப்போது தனிமையில் தான் இருப்பான்.. எதாவது பண்ணலாம் என்று தான் வேகவேகமாக அவனை தேடி வந்தாள்.


வீட்டினர்கள் இருக்கும் போது வேலையில் கவனமானவன், அவர்கள் இல்லை என்றதும் தன் முக்கியமான வேலையில் இறங்கிவிட்டான்.


அவனது முக்கியமான வேலையே, என்நேரமும் போதையில் மிதப்பது தான்.
தென்னை மரத்து அடியில் கடைபரப்பி, அதில் முக்கால் கிணற்றினை தாண்டியிருந்தான்.


அவனை தேடி கொலை வெறியுடன் வந்தவளோ.. அவனை கண்டதும் இன்னும் வெறி அதிகமாக.
அவன் முன்னால் வந்து நின்றவள்,


அங்கிருந்த கண்ணாடி போத்தலை எடுத்து அதை தென்னை மரத்தோடு மோதவிட்டு கூர்மையான ஆயுதமாக்கினாள்.



"ஏன்டா..! நீ எல்லாம் மனுஷ ஜென்மம் தானா
...?
ஒரு குடும்பத்தை துடிக்க துடிக்க கொன்னுட்டு.. அந்த வீட்டுக்காரங்க கிட்டையே சோறு வாங்கி சாப்பிடுறியே! அந்த சோறு தொண்டை குழி வழியா இறங்குதா?


அப்பிடி இறங்குறப்போ உனக்கு உறுத்தல... சோறு போட்டவங்களுக்கு நம்ம உண்மையா இல்லன்னு?
கால் போனப்புறமாவது திருந்தியிருப்ப, எதுவும் செய்யாம விட்டிடுவோம்ன்னு தான் நினைச்சேன்.


ஆனா நீ திருந்தவும் இல்ல... செய்த தப்ப நினைச்சு வருந்தவும் இல்ல..
ஏதோ இந்த வீட்டுக்கு முதலாளியாட்டம், கூட வேலை செய்யிறவனையே மிரட்டி.. வேலை வாங்குறதும், வீட்டிக்காரங்க இல்லாத சமயம் இந்த மாதிரி போதைய போட்டுட்டு.

விழுந்துகிடக்கிறதும்ன்னு வந்த நாள்ல இருந்து உன்னோட நடவடிக்கைகள பாராத்திட்டு தான் வறேன்.


நீ திருந்தவே மாட்டியா?" என்றாள் கோபமாக.


"யாருடி நீ? என்னை கேள்வி கேட்கிறத்துக்கு? நீயா சம்பளம் தர? அவன் ஒரு கேனக் கூமுட்டை தரான். நான் வாங்குறேன்.. அவங்களே என்னை கேள்வி கேட்டதில்லை. நீ என்னடி நேத்து வந்தவ கேக்கிற?" என நாவு புரள உறுமியவனை,


"எல்லாத்தையும் சேர்த்து வைச்சு கேக்கத்தானே வந்திருக்கேன்.

இன்னைக்கு நேத்து செய்த தப்புக்கு கேட்கிறதுக்கு வரல்ல.

பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி.. எனக்கும் என் குடும்பத்துக்கு செய்த பாவத்த கேட்க வந்திருக்கேன்டா!" என்று உறுமியவளாய்,

உடைந்திருந்த கண்ணாடி போத்தலை அவன் வயித்தை நோக்கு ஓங்கியவள் இலக்கினை அறிந்து, சட்டென சுதாகரித்து விலகியனான்.


அவள் கையினை பின்புறம் வளைத்து பிடித்து வலிக்கும்படியாக முறுக்கியவன், அவள் கையிலிருந்ததை தான் பிடுங்கி,



"நேற்று முளைச்ச விதை நீ!.
நீ என்னை கொலை பண்ணுவியா?
சரியா கத்தி பிடிச்சு, காய்பிஞ்சு அரியத்தெரியாதவல்லாம்.. என்னை மிரட்டுற...
ஏதோ சொந்த பிரச்சினையினால கொஞ்ச காலம் இதெல்லாம் வேண்டாம்ன்னு ஒதுங்கியிருந்தா,
தவழ்ற குழந்தையெல்லாம் என்னையே தாண்ட நினைக்குது." என்று இழக்கமாக பேசியவன்,


"யார்றி உன்னை அனுப்பினா..? அந்த பொண்ணுசாமி தானே! தெரியும்டி! அவன் தான் நம்பிக்கை துரோகி. அவனை தவிர குறுக்கு வழியில யாரும் சிந்திக்க மாட்டாங்க.



அதான் என்னோட ஒரே புள்ளைய பிடுங்கிட்டான்ல்ல... அப்புறம் என்னத்துக்கு பழைய கதையெல்லாம் சொல்லி, உன்னை கொலை பண்ண அனுப்பிவைச்சான்?


உன்னை பிணமா அனுப்பினாத்தான், இனிமேல் யாரையும் என்னை சீண்டிப்பார்க்க அனுப்பமாட்டான்." என அவள் கழுத்தை நெரித்தவனின் இறுக்கலில் கண்கள் பிதுங்கி, நாக்கு வெளியே தள்ளுவதை போலிருந்தது.


மூச்சுக்காக அவன் பிடியிலிருந்தே உடலை உதறியவள், அதற்குமேல் அவன் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டால், தன் உயிர் தனக்கில்லை என்பதை அந்த வினாடி உணர்ந்து கொண்டாள்.


ஆனால் என்ன செய்து அவனிடமிருந்து தன்னை காத்துக்கொள்வதென்பது தெரியவில்லை. கைகளால் அவன் கைகளை விலக்கிவிட போராடியவள்,


அது முடியாது போகவே! காலால் அவன் பொய் காலின் முட்டிப்பகுதியில், ஓங்கி ஒரு உதை விட்டாள்.


பொய்கால் பொருந்தியிருந்த இடத்தில் உயிர்போவது போல் வலியெடுத்தது.



"ம்மா....." என முணங்கியவன் பிடி சற்று தளர்ந்ததும், அவன் பிடியிலிருந்து தப்பித்து ஓடுவதை கண்டவனோ,
தன் வலியினை மறந்து அவளை தூரத்த ஆரம்பித்தான்.



அவனிடம் அகப்படாமல் தென்னை மரங்களுக்கு இடையிடையாக ஓடியவாறு இருந்தவள், திடீரென ஓடுவதை நிறுத்தி அவனை எதிர்பார்த்து காத்திருந்தாள்.



நன்றாக ஓடிக்கொண்டிருந்தவள், எதிர்த்து நிற்கிறாள் என்றதும், சதாகரித்திருக்கலாம்.



அவள் திட்டம் தெரியாது, அவளை நெருக்கியதும் சட்டென குனிந்தவள், தன்னை கண்டுவிட்டு படமெடுத்தவாறு நின்ற பாம்பின் கழுத்தில் பிடித்து தூக்கியவள், தன்னை பிடிக்க வந்தவன் கையை நோக்கி ஏவிவிட்டாள்.




இவளை கண்டதும் உயிர்பயத்தில் படமெடுத்து நின்ற பாம்பு.., தன் உயிருக்கு ஆபத்து என்றதும், கோபத்தை அவன் மேல் காட்டியது.


பாம்பின் பல்லு பட்ட இடத்தையும்.. அவளையும் மாறி மாறிப்பார்த்து மிரண்டவன், இப்போதைக்கு தன் உயிரை காப்பாற்றியாக வேண்டுமென நினைத்து ஓடத்தொடங்கினான்.


ஏற்கனவே அவள் உதைந்ததில் பொய்காலானது ஆட்டம் கண்டிருந்தது.


பாதையில் கவனமில்லாத அவனது ஓட்டத்தில், கீழே கிடந்த தென்னை மட்டை தட்டிவிட்டதில், அது கழன்றே விழுந்து விட்டது.



ஓடிய வேகத்தில் நெஞ்சு அடிபட விழுந்தவன், எழுந்து ஒற்றைகாலினால் நொண்டி நொண்டி போவத்கு பொறுமையற்று, உடும்பு போல் தவண்டவனை என்ன பாம்பு கொத்தியதோ!


வேகமாக உடலின் அத்தனை நரம்புகளையும் செயழிலக்க செய்தது.



தன் வெறியை தீர்த்து விட்டு, அவன் தவிப்பை வெறித்து நின்றவளைத்தான் ஆதி வந்து துயில் கலைத்தான்.



அவனை கண்டதும் தன் கையிலிருந்த பாம்பினை மறைத்தவள், அவன் தன்னை நோக்கிவருவதை கண்டு அதை கீழே போட்டாள்.


அதுவும் தான் உயிர் பிழைத்தால் போதுமென அவன் வருவதற்குள் ஓடி ஒழிந்து கொண்டது.

தொடரும்.....
 
Top