• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

42 இருளில் ஔிரும் தீபமானாய்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
"இத பாரு கமலி! நான் ரோஷ காரனாக்கும், இந்த மிரட்டுற வேலையெல்லாம் என்கிட்ட வைச்சுக்காத, உன் மூத்த பையன்கிட்ட இதை வைச்சுக்கோ! அவன் தான் அடிச்சாக்கூட சிரிச்சிட்டே வாங்கிப்பான்.



இப்போ உன்னால உன் புருஷன்கிட்ட அனுமதி வாங்கித்தர முடியுமா? முடியாதா?" என்று காமலி பொய்யாக மிரட்டினான்.



அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்தவரோ,



"நீ கெஞ்சிறப்போ அப்பாக்கிட்ட பேசலாம்னு தான் நினைச்சேன், இப்போ வாய் பேசின பாரு, இதுக்காகவே அந்தாளு போன்னு சொன்னாலும் நான் விடுறதா இல்லை." என்று அவளும் போர்கொடி தூக்க,



"ஐய்யையோ.......! சாரிம்மா! நான் சும்மா உன்கூட விளையாடினேன்ம்மா. நீயும் இனிமேல் சோத்தில உப்பை போடுறதை குறைச்சுக்கோ! அப்போ தான் எனக்கும் கோபம் குறையும்,
என்னை விடு!
ஆனா உன் செல்ல மகன் உனக்கு எப்பவும் ஸ்பெஷல் தானேம்மா! அவனுக்காக அப்பாகிட்ட கேளும்மா" என்றவன் உதயவிடம்,



"எருமை! நான் கெஞ்சிட்டு இருக்கேன். நீ வேடிக்கை பாக்கிற, கேளு மாடே" என்க, அவனும் சூரியவுடன் சேர்ந்து கொண்டான்.



" உன் பிள்ளை கெஞ்சுறதை பார்க்க உனக்கு கஷ்டமா இல்லை, உன் உயிர் துடிக்கல, போம்மா! போய் அப்பாகிட்ட கேளும்மா" என்று முகத்தை பாவமாக வைத்து கெஞ்சும்



அவன் மண்டைமேல் ஒரு கொட்டு வைத்தவள்.



"ரொம்ப நல்லாவே நடிக்கிற!" என்றவருக்கு மூத்தவன் கெஞ்சுவதை தாங்கிக்காள்ளாதவராய்,



"சரி நான் கேக்கிறேன், எதுக்கும் யோசிக்காதிங்க சரியா?" என அவர்களுக்கு உறுதியளித்தவள் அறியவில்லை.



இன்று ஒருவன் கஷ்டத்தை தாங்காது தான் கொடுத்கும் உறுதிமொழியினால் ஐந்து ஜீவன்கள் கஷ்டம் அனுபவிக்க போகிறது என்று.



கமலி இருவரினதும் கெஞ்சலுக்கு இரங்கி கணவனிடம் கேட்க,



ரவீந்திரவோ "முடியாது." என்று மறுத்து விட்டார்.



"இந்த ஒரு முறை தானுங்களே!. இனி கேக்கமாட்டானுங்க. எத்தனை நாளைக்குத்தான் பயந்திட்டே வீட்டுக்குள்ள பூட்டி வைச்சுப்பிங்க, அவங்களும் வளந்துட்டானுங்க, உலகம் தெரியாம இருந்தா அவங்க வாழ்க்கைக்கு அது சரியா வராது.



யாரோ ஒரு யோசியக்காரன் எப்பவோ சொன்னான்னு இப்பவும் அதை நம்பிட்டு." என்று கணவனிடம் தர்க்கம் புரிந்து சம்மதம் வாங்கிவிட்டாள்.



அதை கேட்ட சகோதரர்கள் இருவரின் சந்தோஷத்திற்கு எல்லை என்பதே இல்லாது போனது. ஒரு வாரத்தில் இருவரையும் காரில் திருகோணமலைக்கு அனுப்பி வைத்தார்கள்.



மாலை பங்க்ஷன் என்றால், காலையிலேயே சென்றுவிட்டனர்,



இரண்டு மணிக்கு முன்பே முடிந்தவரை நண்பர்கள் இருவரையும் ஊரைச்சுற்றி காட்டிவிட்டு அழைத்து வந்த விக்னேஷ், அவர்களுக்கென ஒதுக்கிய அறையினை காட்டி ஓய்வெடுக்க சொன்னவன்.



"பங்க்ஷன் நடக்கிற டைம் ரெடியாகினா போதும்" என்க,



சரியென தலையாட்டியவர்கள் அங்கு வரிசையாக இருந்த கதவுகளை கண்டு,



"என்னடா வீடு இது?, விடுதி ஏதன் நடத்துறீங்களா என்ன? என வாய்பிளந்து கேட்க,



"ஆமாடா!



இந்த பக்கம் பூராவுமே கெஸ்ட்டுக்கா ஒதுக்கியிருக்கோம்.



முன்னாடி பாத்திருப்பியே! ஹால்லோட இருக்கு அறைகள் தான் நாங்க பாவிக்கிறது.



ஆனா என்னோட ரவுடி தங்கச்சி இருக்காளே, தனக்கு இங்கே தான் அறை வேணும்ன்னு அப்பாகிட்ட அடம்பிடிச்சு வாங்கிக்கிட்டா." என்று எதிரே இருந்த அறையை காட்டியவன்.



"இது தான் அவ ரூம், மாறி கூட அந்த பக்கம் போயிடாதடா!



அது ஒரு பிசாசு, கடிச்சு வைச்சிடும்." என எச்சரித்தவன் தானும் ஓய்வெடுக்கபோவதாக சென்று விட்டான்.



அந்த வீடு விக்னேஷ் கூறியதைப்போல் பெரிய மாளிகை தான்.



முன்னால் பெரிய ஹால், ஹாலுடன் சேர்த்து சில அறைகள், அறைகளுக்கு நடுவே சின்ன ஒரு ஓடைபோல் உள்ளே சென்றால் ஓடையின் எதிரெதிரே நான்கு அறைகள். அந்த அறைகளில் ஒன்றைத்தான் துர்க்கா வீட்டில் சண்டையிட்டு தனக்கென வாங்கி இருந்தாள்.



அதற்கும் ஒரு காரணம் உண்டு.



விக்ணேஷ் எப்போதும் ஆங்கில பாடல் பிரியன். தன் அறையினில் உள்ள கோம் தியேட்டரில் ஒலிக்கவிட்டு அந்த இடத்தையே இரைச்சலுக்கு உள்ளாக்குவான்.



துர்க்காவிற்கு சும்மாவே படிப்பு ஏறாது, பாட்டையும் போட்டுவிட்டால் சுத்தம்! என்றே விருந்தினர் அறையில் ஒன்றை எடுத்துக்கொண்டாள்.



மூன்று மணியளவில் தயாராகியவர்கள், வீடு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கவும், வீட்டை சுற்றிப்பார்க்க வேண்டும் என விக்னேஷை கேட்க,



அவர்களை சுற்றிக்காட்ட மாடிக்கு அழைத்து சென்றவன் அங்கிருந்த அறை ஒன்றில் அழைத்துச் சென்றான்.



அறையோடு இருந்த பால்க்கனியை கண்ட உதய, அங்கு போடப்பட்டிருந்த ஊஞ்சலை கண்டதும், அந்த ஊஞ்சலை நோக்கி போனவனை மற்ற இருவரும் கண்டு கொள்ளாமல், மற்றைய அறையை நாடி சென்றனர்.



அங்கு போடப்பட்ட ஊஞ்சலில் ஏறி அமர்ந்து ஒரிருமுறை ஆடிப்பார்த்தவன்,



"அட இது கூட நல்லா இருக்கே! வீட்டுக்கு போனதும் இதை மாதிரியே ஒன்ன செய்து எங்க வீட்டிலையும் வைக்கணும்." என நினைத்தவாறு ஊஞ்சலில் இருந்து எழுந்தவன் காதினில் பேச்சுக்குரல் கேட்கவும்.



பால்க்கனியில் இருந்து எட்டிப்பார்த்தவனால் விழிகளை மீட்க முடியவில்லை.



அங்கு நின்றது வேறு யாருமில்லை. கரும்பச்சை நிற பாவாடை, மெரூன் தாவணி என முடியினை சின்ன கிளிப் கொண்டு அடக்கி, மணக்க மணக்க மல்லிகை சரம் சூட்டி, தாவணியின் நிறத்திற்கு இரு கைகளிலும் வளையல், புருவங்களுக்கிடையே குட்டியான கருநிற பொட்டு. என தேவதை போல் வந்து நின்ற அந்த கிராமத்து அழகியினையே கண் இமையாது பார்த்தவாறு நின்றான்.



அவன் இதுவரை ஐயர் குள பெண்களை அதுவும் கிராமத்து வாசனையில் பார்த்து அறிந்ததில்லை.



மற்றைய பெண்களிடம் இருந்து இவள் வேறுபட்டு தெரிந்ததனாலோ, இல்லை இவளது அழகினாளோ என்னவோ இதுவரை எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காதவன்,



ஒற்றைப்பார்வையிலேயே ஈர்த்து விட்டாள் கீதா.



அவளோ இப்படி ஒருவன் தன்மேல் மதிமயங்கி வைத்தகண் வாங்காது பார்ப்பது அறியாது, காதிலிருந்த ஜிமிக்கி அசைய தலை அசைத்து தந்தையுடன் பேசியவள், அவரை அனுப்பி விட்டு திரும்பியதும், வீட்டின் பிரமாண்டத்தை விழி விரித்து ஆராந்தவாறு உள்ளே நுழைந்தாள்.



கீதாஞ்சலியையே பார்த்திருந்தவன் அவள் பார்வையிலிருந்து விலகியதும் அவளை விழிகளில் நிறைப்பதற்காகவே வேகமாக மேலிருந்து இறங்கியவன், அவளை காணாது தேடும் போது தான் தூண் மறைவில் ஒழிந்து நின்றவளைக்கண்டு விட்டு தொலைவிலேயே நின்று ரசிக்கலானான்.



அவளுக்கும் எதுவோ உறுத்துவது போலிருக்க தான் பார்வையை சுழலவிட்டாள்.



எங்கு வைத்த கண்வாங்காது பார்க்கும் தன்னை அவள் கண்டு விட்டால் தவறாக நினைத்து விடுவாளோ என அச்சம் எழ, அருகிலிருந்த தூணோடு அவனும் மறைந்து கொண்டான்.



சூரியவிற்கு மாடியில் சுற்றி காட்டிய விக்ணேஷ், பங்க்ஷன் ஆரம்பிக்க நேரமானதால்,



"வாடா கீழே போகலாம்." என திரும்பியவன்,



"உதயா எங்கடா?."என்றான் அவனை காணாது.



"அவன் அப்பவே கீழே போட்டான்" என்றவாறு கீழே இறங்கியவர்கள், படிக்கட்டின் அருகே அவனது உள்ளூர் நண்பர்கள் கூட்டம் நிற்பதை கண்டதும்,



"டேய் மச்சானுகளா!," என்று அவர்கள் கவனத்தை தன்புறம் ஈர்த்தவன்,



"இவன் தான்டா பேனா நண்பர் மூலம் ஃப்ரெண்ட் ஆனது.



பெயர் சூரிய, இவனோட அண்ணன் உதயா, ரெண்டு பேருமே டுவின்ஸ். பாக்க அச்சு அசலா ஒரே மாதிரி இருப்பாங்கடா, நான் கூட முதல்ல ரொம்ப குழம்பிட்டேன்.



அப்புறந்தான் தெரிஞ்சிது உதயக்கு கண்ணோட கலர் வித்தியாசமா இருக்கும். அதை லென்ஸ் போட்டு மறைச்சு வச்சிருந்திருக்கிறான். எனக்கு யாருன்னு கண்டு பிடிக்க முடியாத காரணத்தினால ரொம்ப கெஞ்சி கேட்டேன்,



இங்க இருந்து போகுர வரைக்கும் அந்த லென்ஸ கழட்டி வைன்னு சொல்லி இருக்கேன். " என்றவன் தன் நண்பர்களுக்கு சூரியவை அறிமுகப்படுத்தி வைக்க,



"எல்லாம் சரிடா! உதயாவ கூப்பிடு!



நீ பண்ணின பில்டப்பில அவனையும் பாக்கணும் போல இருக்கு." என்று தங்கள் எண்ணத்தை சொல்ல.



"நீங்க பேசிட்டு இருங்க, நான் அவனை அழைச்சிட்டு வறேன்." என்று அவனை தேடி சென்று கண்டு கொண்டவன், அவனது தோளைத்தொட்டான்.



அத்தனை நேரம் திருட்டுத்தனமாக மறைந்திருந்து கீதாஞ்சலியை ரசித்துக்கொண்டிருந்தவன், திடீரென யாரோ தோளினை பற்றியதும் திடுக்கிட்டு திரும்பியவனை கண்டு விக்ணேஷும் பயந்து தான் போனான்.



"என்னடா? இப்பிடி பயமுறுத்துற?" என்றான் பயந்தவனாய்.



விக்னேஷ் தான் என தெரிந்ததும், அவன் கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாது விழித்தவாறு தலையை சொறிந்தவன் செயலே சொன்னது எதையோ மறைக்கிறான். என்பதை.



"டேய் என்னடா வித்தியாசமா நடந்துக்குற? உண்மைய சொல்லு எதுக்கு வெக்கப்படுற?" என கேட்டான்.



அவனோ பெண்கள் போல தலையினை கவிழ்ந்து காலால் கோலம் போட ஆரம்பிக்க,



"டேய்..! இந்த காமடில்லாம் என்கிட்ட வைச்சுக்காத, என்னன்னு சொல்லி தொலை" என்கவும்,



கீதாஞ்சலியை ஒற்றை விரலால் சுட்டிக்காட்டியவன்,



"அந்த பொண்ணை தான்டா பாத்தேன்." என்று நகத்தினைக்கடித்தவன் கையினை தட்டி விட்டவன்,



"யாருடா? அங்க துர்கா தானே நிக்கிறாள்." என்க,



"அவ இல்ல விக்ணேஷ், அவ கூட பேசிட்டு இருக்கிறா பாரு," என்று கீதாஞ்சலியை காட்டினான்.



இன்றுதான் விக்ணேஷும் கீதாஞ்சலியை முதல் முதலில் பார்த்தான். அவளது அழகை கண்டவன்.



"டேய் இவ யாருடா புதுசா?



எனக்கே இவள யாருனே தெரியல, பட் ரொம்ப அழகா இருக்கா. என் தங்கைக்கு இப்படி அழகான தோழியா?" என சந்தேகம் கொண்டவனாய், உதயவிடம்,



"உனக்கு அவ முழு டீடயல் வேணுமா?" என்ற விக்ணேஷின்



கன்னத்தை கிள்ளி தன் இதழில் ஒற்றியவனை இதழ் சுழித்து கேவலமாக பார்த்தவன்,



"காலாதி காலம் இதுக்குத்தானேடா நண்பன் என்கிற ஒருத்தனை கூடவே வைச்சு இருக்கிங்க,



சரிடா அவளை பத்தி எல்லாம் தெரிஞ்சிட்டு வந்து சொல்லுறன். பட் இந்த வெக்கம் மட்டும் பட்டுடாதடா! சின்ன இதயமே வெடிச்சிடப்போகுது" என்று துர்காவிடம் விரைந்தான்.



தோழிகள் இருவயும் சிரித்துக்கொண்டிருக்கவும், அவர்களை நாடி வந்த விக்ணேஷிற்கு துர்காவிடமே அவளை பற்றி கேட்டிடுவோம். என நினைத்தவன்,



"அவளைபத்தி விசாரிச்சா இவ ரொம்ப சீன் போடுவாளோ! சும்மா எதார்த்தமா பேசுறது போல பேசி விஷயத்தை கறந்திடுவோம்.



ஆனா முன்ன பின்ன தெரியாதவள பத்தி விசாரிச்சா தப்பா நினைக்க மாட்டாங்களா?,
இதெல்லாம் வாக்கு குடுக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணுமோ?



இந்த பரதேசி அவளை என்கிட்ட அறிமுகபடுத்திட்டா மட்டும் போதும். மீதிய நான் பாத்துப்பேன்.' என தங்கையை மனதில் வசைபடியவாறு அவர்கள் அருகில் சென்ற நேரம் தான், அவளது தலைமுடி கம்மலில் சிக்குண்டு அவனுக்கு எதிராக சதி செய்தது.



அவள் கவனமும் அதை மீட்பதிலியே இருக்க அவன் புறம் திரும்பி கூட பார்க்கவில்லை.



ஒரே ஒரு முறை தன்னை பார்த்து, யாரென்னு தங்கையிடம் கேட்டு விடமாட்டாளா? கேட்டால் தானே தான் நினைத்து வந்த காரியம் சுலபமாக நடைபெறும்.



'நான் பேச வரநேரம் பாத்தா இந்த முடி சதி பண்ணணும்? இவளை பத்தி தகவல் அறியிறதுக்குள்ளையே மண்டையில இருக்கிற முடி பூரவும் கொட்டிடும் போலயே!' என மனதிலேயே நினைத்தவாறு அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான்..



அவளை பற்றி தெரிந்து, நண்பனுக்கு உதவிட மாட்டேனா? என ஏக்கம் கொண்டவனாய் அவளையே பார்த்தவாறு துர்காவிடம் பேச்சு கொடுத்தவனது வித்தியாசமான நடவடிக்கையில், இவன் தான் கீதாவை பார்த்து வழிவதாக நினைத்த துர்கா, அவன் கையயினை ஆழமாக கிள்ளியது கேலி செய்தவள்,



அவளைப்பற்றிய ஒரு சில தகவல்களையும் அவன் கேட்காமலே வழங்கினாள்.



இவ தான் சிவசங்கரர் குருக்களோட ஒரே பொண்ணா?



அதானே பாத்தேன். ஐயர் பொண்ணு என்கிறதால தான் மொத்த தயிர் சாதமும் முகத்தில வடியுதா?



சும்மா சொல்லக்கூடாது ஐயர் ஆத்து பொண்ணுங்க தனி அழகுதான்.



எங்க வீட்டிலயும் ஒன்னு இருக்கே, பூரவும் மட்டனையும், சிக்கனையும் உள்ள தள்ளிட்டு, செத்த கோழியாட்டம் பாக்க கூடிய மாதிரியா இருக்குங்கா?. என நினைத்தவன்,



இவ்ளோ அழகா இருக்கிறவளா பசங்க மண்டையெல்லாம் உடைப்பா? ஆனா இவ கால தாண்டுறதுக்கு காரணம் அதுன்னு தானே இந்த மங்கி சொல்லிச்சு.



அப்பிடின்னா உதயாவினால ஹாஸ்பிடலுக்கு தினமும் வருமானம் தான் போல.



எனக்கென்ன வந்திச்சு? அவன் தானே ஆசைப்பட்டான், அனுபவிக்கட்டும்.' என மனதில் நினைத்தவனோ,



"ஏய் உன் ப்ரெண்ட்ட எனக்கு அறிமுகப்படுத்து" என்றான்.



"உனக்கு உன் வேலை முடியணும்." என்றவாறு கீதாவிடம் திரும்பியவள், அவள் கம்மளோடு போராடவும்,



"அவ இப்பா வரமாட்டாடா!" என்றாள்.



"ஏன் நீ தான் எடுத்து விடேன்" என்றவனை முறைத்தவளோ,



அவளை திரும்ப சொல்லி, முடியினை எடுத்துவிடும் நேரம்



அவனை தோடிய அவனது அன்னையோ விக்னேஷ் அங்கு நிற்பதை கண்டுவிட்டு,



"விக்னேஷ் இங்க வாடா!" என்று அவசரமாக அழைத்தார்.



"நான் எவ்வளவு பெரிய வேலை பாத்திட்டிருக்கேன், கொஞ்சம் கூட பொறுப்பில்லாம என் வேலைய குழப்புறதுக்கு என்டே வராங்க. " என்று முணுமுணுத்தவனோ,



"என்னம்மா? எதுக்கு இப்போ கூப்பிட்டா?"



"உனக்கு என்னடா அவங்ககிட்ட பேச்சு? இப்பிடி பொறுப்பே இல்லாம நின்னு பேசிட்டிருந்தா வந்தவங்கள யாரு கவனிப்பாங்க? போய் அந்த கூல் ட்டிரிங்குக சேவ் பண்ணு" என்று விரட்ட,



"என்னம்மா நீ! கூட்டத்தை பாத்ததும் உனக்கு மூளை குழம்பிடிச்சா? அதெல்லாம் பொண்ணுங்க வேலைம்மா! என்னை செய்ய சொல்லுற?"



"ஆமாடா எல்லாம் பொண்ணுங்க செய்வாங்க நீ வலிக்காம இருப்பியோ? அது கூல்டிரிங்க் கேஸ் தெரியும்ல்ல. அதை பொண்ணுங்க எப்பிடிடா தூக்குவாங்க? உன் ஃப்ரண்ஸ் யாரையாவது கெல்புக்கு கூட்டிட்டு போ!" என்றவர் தன் வேலை முடிந்தது என்று சென்று விட
,



"இவங்க ஒன்னு.



இதுக்குத்தான் மஹால்ல பார்டிய வைப்போம்ன்னு சொன்னேன்.



கேட்டாத்தானே? இப்போ என்னை வேலை வாங்குறாங்க." என புலம்பியவன்,



உதயா தன்னையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிய,



'இவனொருத்தன்.



எனக்கு மாமா பட்டம் தராம விடமாட்டான் போல.' என நினைத்தவாறு அவனிடம் வந்தவன்,



"டேய் மச்சான்..... சின்ன வேலைடா! இந்த பார்ட்டி முடியிறதுக்குள்ள அவ டீடயல் பூரவும் வாங்கித்தரேன். அதுக்கு முன்னாடி என் ப்ரெண்ட்ஸ் உன்னை பாக்கணும்ன்னு சாென்னாங்க, வா!." என அழைத்து சென்று அவர்களிடம் அறிமுகம் செய்தான்.



சூரிய போலவே இருந்த உதயவை கண்டவர்கள்,


"


எங்க கண்ணையே நம்ப முடியலடா! அச்சில வாத்தது போலவே இருக்காங்க." என ஆச்சரியம் காட்டினர்.



"சரிங்கடா! இவனையும் உங்க ஜோதில ஐக்கியமாக்கிக்கங்க. எனக்கு சின்ன வேலை இருக்கு, சூரிய நீ என்கூட வா!" என்று அவனை அழைத்தவன்,



உதய காதினில்,



"நீ இங்கயே நின்னு உன்



ஆள சைட் அடிச்சுக்கோ! நான் என் வேலைய முடிச்சிட்டு வரேன்" என்று விட்டு சென்றான்.



சூரியவை அறை ஒன்றில் அழைத்து வந்த விக்ணேஷ், அங்கு நின்ற உறவுக்கார பெண்களிடம்,



"ஏய்! நான் பாட்டில ஓபன் பண்ணி வைக்கிறேன். ஸ்ராவை போடுங்க, வேலையை சீக்கிரமா முடிக்கணும்" என்றவன். சூரியவிடம் ஒரு ஓபனரைக்கொடுத்து,



"அந்தப்பக்கம் இருக்கிறத நீ ஓபன் பண்ணுடா, நான் இந்த பக்கம் பாத்துக்கிறேன்." என்க.



"என்ன பிரான்டுடா இது?. நான்லாம் இது குடிக்க மாட்டேன்." என்றவனை சிரிப்பினூடே ஒரு பார்வை பார்த்தவன்.



"டேய் இது நமக்கில்லடா! வந்தவங்களுக்கு மட்டும். நமக்கு வேற ஒரு ஐடம் ஆடர் பண்ணி இருக்கேன்." என்று கையினை தூக்கி முளங்கையோடு பிடித்து காட்டி கண்ணடித்து கூற.



"சரக்காடா? சுத்தம்...... நாங்க அது எல்லாம் குடிச்சதில்ல, எங்களுக்கு பழக்கம் எல்லாம் இல்லை." என்றான்.



"நாங்க எல்லாம் பிறக்கும்போதே குடிச்சிட்டா பிறந்தோம்? எதுக்கும் ஒரு ஆரம்பம் இருக்குல்ல இன்னைக்கு பழகிக்கோ" என்க,



"இல்லடா! அது சரிவராது. எனக்கும் சரி உதயவுக்கும் சரி அதோட வாடையே செட்டாகாது" என்றவன்.



"இந்த ஆரேஞ் ஜூஸ காட்டி எங்கள ஏமாத்தாம எனக்கும், உதயவுக்கும் எப்படியாவது நெக்டோ ஏற்பாடு பண்ணு" என்றான்.



"சரிடா... சரி! உனக்கு நெக்டோவே ஏற்பாடு பண்ணுறேன்." என்றவன் தன் வேலைகளை ஆரம்பித்தான்.



விக்ணேஷ் தன் நண்பர்களோடு விட்டு சென்றாலும் அவனது மனம் முழுவதும் அவளை சுற்றியே வலம்வர, விழிகளும் அவள் புறமே சென்றது.



தத்தித்தத்தி நடக்கும் அந்த அழகியை காண்பதற்கு முன் இது போன்று என்றும் அவன் உணர்ந்ததில்லை. அந்த உணர்வினை தட்டிக்கழிக்கவும் முடியவில்லை.



நத்தவனத்து பட்டாம்பூச்சியாய் அவன் மனமோ இறக்கை கட்டி உல்லாசமாய் பறக்க, மொட்டவிழ்ந்த அத்தனை மலர்களும் அதுவாகவே அவன் காலடியில் குவிந்தது போல் உணர்வு.



மீண்டும் மீண்டும அவளைப் விழிகளில் நிறைப்பதனால் அந்த சுகம் தனக்கு கிடைப்பதைப்போல் ஒரு பிரமை. அதனாலோ என்னமோ அவளையே வட்டமிட்டது அவன் விழிகள்.



தோழிகள் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே பார்ட்டியும் தொடங்கி விட,



துர்காவை அவள் குடும்பம் அழைத்தது.



அவளை அனுப்பி விட்டு அமர்ந்திருந்தளுக்கு சிறிது நேரத்தில் சலிப்பு தட்டிவிட,



அங்கு அலங்கரிக்கப்பட்ட பலூன்களைப் பார்வையிட ஆரம்பித்தவளுக்கு முன்னர் இருந்த அதே குறுகுறுப்பு.



ஊசிபோல் எதுவோ தன்னை துளைப்பது போல் உணர்வு.



'என்னதிது வந்ததில இருந்து இப்படியே இருக்கு, இதுவரைக்கும் தெரியாதவங்க வீட்டுக்கு போகாததனால இப்பிடி தோணுதோ' என நினைத்தவாறே பார்வையை சுழலவிட்டாள்.



சற்று தள்ளி நின்ற ஆண்கள் கூட்டத்தில் ஒருவனது விழி மட்டும் அங்கு நின்றவர்களது தலைகளின் மறைவில் தன்னையே பார்ப்பது போல் தோன்றியது.



அவன் தூரத்தில் நிற்பதால் தன்னைத்தான் பார்கிறானா? இல்லை வேறு எங்கோ பாக்கிறானா?. என்ற சந்தேகம் எழ,



'அவன் எதுக்கு என்னை பாக்கணும்?' என்று அவளும் அதை பொருட்படுத்தாது விட்டு விட்டாள்.
 
Top