• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

42. நதியறியா பயணமிது.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
அவன் கூறுவதை நம்ப முடியாமல் இருந்தாலும், இந்த குழந்தையால் முகிலன் முகத்தில் தெரிந்த அளவில்லா சந்தோஷத்திற்காக தன் உயிரையே பணயம் வைக்க துணிந்தாள்.


அவன் குழந்தையை பற்றி அந்தளவுக்கு கனவுகளோடு இருக்கிறான் என்பதை , அதை யாரிடமும் தராமல் வளர்ப்பேன் என்பதிலேயே தெரிந்தது.


அது எந்தளவிற்கு சாத்தியம் என்பது அவளறியாள்.,
ஆனால் தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து செய்யும் கவனது சந்தோஷம் குழந்தை தான் என்றால் அதை கொடுப்பதில் அவளுக்கு எந்த சங்கடமூம் இல்லை.


தான் இல்லை என்றாலும், தன் குழந்தையை நன்றாக பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை உண்டானது.


அவன் கொள்ளும் சநதோஷத்தையே ரசித்தவாறு இருந்தவள்,


இதைகேட்டு இவனைப்போல தானே மற்றவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள், தங்கள் வீட்டு வாரீசு என் வயிற்றில் வளர்வது தெரிந்து. என நினைத்தவள்,
முகிலனிடமே தன் சந்தேகத்தை வினாவினாள்.


"என்னங்க அத்தை, மாமா மற்ற எல்லாருக்கும் தெரியுமா?"


"ம்ம்...... உன்னை தவிர எல்லாருக்குமே தெரியும், என் செல்லத்த உன் வயித்துக்க ஒழிச்சு வச்சிருக்கேன்னு.
ஆனா ஒழிச்சு வச்சிருக்கின்ற உனக்கு இப்பத்தான் தெரியிது." என சிரித்தான்.

'இது வீட்டுக்கு தெரிஞ்சிருக்குமா...? அத்தை சொல்லியிருப்பாங்கல்ல...? எனக்கு இப்பவே அவங்களை பாக்கணும் போல இருக்கு..
இவருகிட்ட கேட்டா கோபப்படுவாரு,

வேண்டாம்....
காலையிலயே எதுக்கு?
எனக்குத்தான் யாருமில்லையே! இனி இந்த குடும்பம் தானே என் சொந்தம்.


பானுவையும் பார்த்து ரொம்ப நாளாச்சு! இனி எப்போ அவங்கள பார்க்க போறேனோ?

எங்கேயாச்சும் எதற்சையாக கண்டா தான்..
இவரு வெளிய கிளம்படடும், அப்போ சொல்லிடலாம்.

அம்மாவும், அப்பாவும் ரொம்ப சந்தோஷபடுவாங்கல்ல....
பானு தான் ரொம்ப கிண்டல் பண்ண போற... ஆனாலும் ரொம்ப சந்தோஷபடுவா....
தான் சித்தியாக போறேன்னு வானத்துக்கும், பூமிக்கும் குதிப்பாளே! அந்த சந்தோஷத்தை என்னால பார்க்க முடியாதோ'
என அவள் சிந்தனை அவர்களை பற்றியே இருக்க,


அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளை படித்துக் கொண்டிருந்த கணவனை மறந்து மறந்து போனாள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தவன் முகம் ஒரு நொடி இறுகித் தெளிந்தது.


அதே நேரம் அவன் அறை கதவை தட்டி "அண்ணா!..." என மயூரன் குரல் கொடுத்ததும்
நிஜ உலகத்திற்கு வந்தவள்,
எழுந்து கொள்ள எத்தணிக்க,


"ஏய்... என்ன செய்ற? ரெண்டு நாளைக்கு கட்டிலை விட்டு எழுந்தேனா காலை வெட்டிடுவேன்." என்று செல்லமாக அவளை எச்சரித்தவன்,


" வரேன்டா....." என்றவாறு கதவை திறந்தான்.

ஓடிவந்து தமையனை தூக்கி சுற்றியவன்,

"சூப்பர்ண்ணா...!
என்னை சின்ன அப்பாவாக்கிடிங்க...,
ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா..

நேற்று முழுக்க வேலைண்ணா....,
அதனால தான் விஸ் பண்ண முடியல்ல, போன்ல பண்ணா இந்த ஹாப்பினஸ் வராதுல்ல.

சரி இரவாவது விஸ் பண்ணலாம்னு வந்தா, அண்ணி தூங்கினதால நீங்களும் சாப்பிடாமலே வேளையோட தூங்கிட்டிங்கனு அம்மா சொன்னாங்க.
அதனால தான் விடியட்டும்னு காத்திட்டு இருந்தேன்.

ஐம் ஷோ ஹாப்பிண்ணா!..". என தமையனை மீண்டும் தழுவி விடுவித்தவன்,


"அண்ணி..... வாழ்த்துக்கள் அண்ணி!
இப்போ வலி பரவாயில்லையா?" என்றான்.


அவர்களது சந்தோசத்தையே பார்த்தவாறு இருந்தவள்,

"பரவாயில்லை மயூ.... இப்போல்லாம் ரொம்ப பிஸிபோல.
ரொம்ப கொடுமை படுத்துறாரா உங்கண்ணா?
அப்பிடி ஏதும்ன்னா சொல்லுங்க ரெண்டு தட்டு தட்டி உள்ள போட்டுடலாம்.


எப்பிடி என் கொழுந்தனாரை இவரு கொடுமை படுத்தலாம்." என மயூரனுக்கு பரிந்து பேசுவதை போல கணவனை கடைக்கண்ணால் பார்த்தவாற வம்பிழுக்க,
அவர்களுக்குள் நிகழும் உரிமையான உரையாடலை ரசித்தவனோ,


"இவன்கூட பேசிட்டிரு கலை. நான் அம்மாகிட்ட சில விஷயம் பேசணும், பேசிட்டு வந்திடுறேன்." என வெளியேறினான்.


பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்கும், மீண்டும் தன் அறைக்குள் வந்தவன் கண்டது,
படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்த மேகலா,

கையை ஊன்றி ஒருபக்கமாக சரிந்தமர்ந்து பல் விளக்கியவாறு இருக்க, கட்டிலை சுற்றி அவளுக்கு தேவையான தண்ணீரும், ஒரு சிறிய பாத்திரமும் இருக்க, அதனுள் துப்பிக்கொண்டிருந்தாள்.


அங்கு நடக்கும் கூத்தை பார்த்தவன்,

"என்ன இது....?"

"ஏன் பாத்தா தெரியலையா...?" என வாயில் இருக்கும் எச்சில் வழிய, அதை வழியவிடாது தலை நிமிர்த்தி கேட்டவள்,
அதை அந்த பாத்திரத்தில் துப்பி விட்டு,


"சும்மா கட்டிலை விட்டு இறங்காத, காலை வெட்டுவேன்னு சொன்னா மட்டும் போதாது.

இறங்காம இருக்கணும்ன்னா அதுக்கு ஏத்தாமாதிரி உதவி செய்யணும்,

நீங்க வெளிய போயிட்டு வரும் வரைக்கும் நான் ஊத்த வாயோட இருக்கிறதா?" என கோபமாக கணவனை உறுக்கியவளை பார்த்துக்கொண்டிருந்த மயூரன்,


இதற்குமேல் இங்கு நிற்பது நாகரிகமில்லை என்று நினைத்து,


" இன்னைக்கு ஒரு மீட்டிங்க் இருக்குண்ணா... நீங்க போக முடியாததனால நான் தான் போயாகணும்,
அப்போ நான் கிளம்புறேன்,
அண்ணி.. மதியத்துக்கு மேல.ஃப்றீ தான் அப்போ வந்து பார்க்கிறேன்." என இருவரிடமும் இருந்து விடைபெற்றான்.


"உன்னை யாருடி இப்போ அவசரப்பட்டு உன் ஊத்தவாய கழுவசொன்னது?

இத்துண்டு தண்ணில முகத்த துடைச்சிட்டு, குளிக்காமல் இருந்திடலாம்னு பக்கிறியா?"
என்றவாறு அவளை கைகளில் தூக்கிக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான்.


"உன்னை நடக்க வேண்டாம்னு தான் சொன்னேன்,
எந்த வேலையும் செய்ய கூடாதுன்னு சொல்லல.
நீ எங்க போகணுமோ சொல்லு, நான் தூக்கிட்டே போறேன். உன்னோட வேலையை தாராளமா செய்யலாம்." என அவளை இறக்கி விட்டவன்.


"சுடு தண்ணியிலேயே குளிடி, ஏதாச்சும் தேவைன்னா வெளியே தான் இருப்பேன் கூப்பிடு." என வெளியேற,

அவனது அக்கறை கலந்த அன்பிலே மூழ்கி மூச்சடைத்துப்போனாள் மேகலா.

குளித்து முடிந்து முகிலனை அழைத்தவளை மீண்டும் தூக்கி சென்று கட்டிலில் இருத்தியவன்,

"நேற்று மதியத்திற்கு பிறகு ரெண்டுபேருமே சாப்பிடல, இரு கீழே போய் ஏதாவது எடுத்து வரேன். " என அவன் எழுந்து கொள்ளும் போதே வாசலில் கமலம் சாப்பாடோடு வந்து நின்றார்.


அதை வாங்கி கொண்டு அவரை அனுப்பி வைத்தவன்,
மூடியிருந்த தட்டைத் திறந்தான்.

அதில் சூடாக இட்லியுடன் சாம்பாரும் இருக்கவே.
இட்லியை பிட்டு அவளுக்கு ஊட்டிவிட,


"கையில எனக்கொன்னும் இல்ல..., நானே சாப்பிட்டுகிறேன் தாங்க." என தட்டை வாங்க நீட்டிய கையை தட்டியவன்,


"ஏன் கையில் அடிபட்டா மாத்திரம் தான், என் பொண்டாட்டிக்கு நான் ஊட்டி விடணுமா?
என் பொண்டாட்டி என் உரிமை. இன்னைக்கு நான் தான் ஊட்டிவிடுவேன்." என்றவன்,


அவள் என்ன சொல்லியும் கேளாமல் தானே ஊட்டிவிட சங்கடமாக இருந்தாலும். மறுக்காமல் வாங்கிக்கொண்டவள்,
அதே தட்டிலிருந்த இட்லியை தானும் அவனுக்கு ஊட்டிவிட்டாள்.


சாப்பிட்டு முடிய நீரை கையில் எடுத்து கொடுத்தவனையே தண்ணீரை வாங்காது பார்த்திருந்தவளை,


'என்ன..?' என்று புருவ அசைவில் அவன் வினவ,


"இல்ல.. ஒரே கவனிப்பா இருக்கே. எப்பவும் என் கூவவே இருந்து, இப்பிடியே குழந்தையை பாத்துக்கிறமாதிரியே பார்த்துக்க போறீங்களா?
நாள் பூர என் பக்கத்திலையே இருந்தா உங்க வேலை என்னாகிறது?" என்றாள்.


"அது எல்லாம் ஒரு விஷயமே இல்லை,
அதுக்கு தான் மயூ இருக்கானே! அவன் பார்த்துப்பான்." என்றவன்,

"உன்னை பார்த்துக்க இன்னொருதங்களை வரசொல்லி இருக்கேன்,
அவங்க உன் பக்கத்திலேயே இருந்து உன்னை பத்திரமா பார்த்துப்பாங்க."


"என்ன விளையாடுறீங்களா? அதெல்லாம் தேவையில்லை.
நீங்க சொல்லுறது போல எனக்கு பெரிய வருத்தம் ஒன்னுமில்ல.,


இந்த வலியெல்லாம் குறைஞ்சது மூணு நாள்ல காணாமல் போயிடும்.
விட்டா நீங்களே என்னை படுக்கை நோயாளியாக்கிடுவிங்க போலயே!
காலையில மட்டும் என்ன பாத்ரூம் கொண்டு போய் விட்டுட்டு ஆஃபீஸ் கிளம்புங்க,
மதியத்துக்கு சாப்பாட்டுக்கு வரும் போது மறுபடியும் போன போதும். அப்புறம் இரவுக்கு வந்திடுவீங்கல்ல..
எனக்கு யாரும் தேவையில்லை." என்க.


"நல்லா யோசிச்சு தான் சொல்லுறியா கலை?
இப்போ வரபோறவங்க ரொம்ப கேர் எடுத்துப்பாத்துப்பாங்க.

அப்புறம் எதுக்குடா வேண்டாம்னேன்னு யோசிக்க கூடாது."


"எனக்கு யாரும் தேவையில்ல, என்னை கேர் எடுத்து பாத்துக்கும் அளவுக்கு நான் ஒன்னும் முடியாம படுக்கல,
இப்போ கூட என்னால நல்லா நடக்க முடியும்.
நீங்க தான் விடமாட்டன் என்றிங்க." என அவன் தன்னை ரொம்ப பலவீணமானவளாக நினைத்து பேசுவதை பொறுத்து கொள்ள முடியாமல் அவள் உதட்டை பிதுக்கி கூற,



அவள் அவ்வாறு உதட்டை பிதுக்கி சொல்வதையே பார்த்தவன் மனமோ அதில் சிக்கி வெளிவர முடியாமல் தவித்தது.

அந்த செவ்விதழை கடித்து வைத்தால் என்ன என்று அவன் காதல் மனம் தவித்தது.


அவள் இருக்கும் நிலையில் இது ரொம்ப முக்கியம்.. என தன்னை தானே கண்டித்தவன்,


"இதுக்கு அப்புறம் உன் இஷ்டம்... சரி கொஞ்சம் படுத்துக்காே! எனக்கு வெளிய கொஞ்சம் வேலையிருக்கு, முடிசிட்டு வரும்போது உனக்கு தேவையான எல்லாத்தையும் வாங்கிட்டு வரேன். உனக்காக இல்லன்னாலும் நம்ம பிள்ளைக்காக
வேண்டாம்னு சொல்லாம சாப்பிடணும்" என்க.


" ம்ம்..." என தலையசைத்து விடை கொடுத்தாள்.


அவன் சென்று பத்து நிமிடமிடங்கள் கடந்திருக்கும் அவள் போனும் சிணுங்கியது.



"இந்த நேரம் யாரு? இந்த நேரத்தில ஓட்டை வாய் கூப்பிடாதே..." என்றவாறு கட்டிலின் தலைபகுதியில் இருந்த போனை எடுத்துப்பார்த்தாள்.


ஓட்டை வாயே தான் என திரையில் தெரிந்த இலக்கமே சொல்ல.


"நானே போன் பண்ணணும்னு நினைக்க, அவளே கூப்பிடுறாளே!

இப்போ நீ சித்தியாக போறன்னு சொன்னா கலாய்பாளோ...?
என நினைத்தவாறே திரையை தடவி காதில் வைத்தாள்.


"மிஷஸ் முகிலன் இருக்காங்களா? நான் அவங்க கூட கொஞ்சம் பேசலாமா?" என்று ஆரம்பித்தாள்.

"என்னடி எடுத்ததும், புது ட்ராமாவோடே ஆரம்பிக்காற?
என்ன விஷயம்?" என்றாள் மேகலா.


"பின்ன நீங்கதான் இப்போ முழுசா மிஸஸ் முகிலனாகிட்டிங்களே! இப்போ அதில இருந்து புரமோஷன் வேறு கிடைச்சிருக்காமே உண்மையா?"


"உன்னல்லாம் நல்லவனு நம்பினேனேடி!
இப்பிடி ஏமாத்திட்டியே....
எதுவுமே தெரியாதவ போல நசிந்தி நசிந்தி இருந்திட்டு என்ன வேலை பாத்திருக்க?"


"ஆனா ஒண்ணு மட்டும் உண்மைடி!
அதிகம் எல்லாம் தெரிஞ்சவங்க மாதிரி பேசுறாங்க பாரு அவங்களுக்கு எதுவுமே தெரியிறதில்லை.

ஆனா உன்னை போல எதுவுமே தெரியாதவங்க போல இருப்பாங்க பாரு
,
அவங்கள்ள தான் முழு விஷயமே இருக்கு?
இதுல முதல் ரகம் நானு... ரொம்ப அப்பாவி.
ரெண்டாவது ரகம் நீ..." என்
றாள்.


"எதுக்குடி இப்போ தேவையில்லாம கூப்டதில இருந்து அலட்டிட்டு இருக்கா?
என்னன்னு நேர விஷயத்திற்கு வா எருமை....."

"அடடா என்ன ஒரு நடிப்பு..... பக்கத்திலயே ஆர்ச்சர்யகுறி சேத்துக்காே.

யாருடி எருமை...?
நீ தான்டி எருமை.

ஒண்ணும் தெரியாத பாப்பா போட்டாளாம் தாப்பா!...
முழுசா இருபத்தியொரு வயசுகூட எனக்கு ஆகல, அதுக்குள்ள என்னை கிழவியாக்கிட்டியேடி!


என்கிட்டையே நடிக்கிறியா?
அது சரி நீ தான் யமன்கிட்டையே பசக்கயித்தை பிடுங்கி, அந்தாள் மேலயே வீசினவளாச்சே." என அவளை வம்பிழுத்
து,

"ஏய் சூப்பர்டி... ரொம்ப சந்தோஷமா இருக்குடி!
இங்க அம்மாவும், அப்பாவும் ஏதோ இப்போ தான் துள்ளி விளையாடுற வயசு பசங்கமாதிரி, குதிச்சிட்டிருக்காங்க" என்றவளை இடை மறித்தவள்,


"ஏய்!...... எப்பிடிடி உனக்கு தெரியும்? யாரு சொன்னாங்க."

"ஓ..... நீங்க சொல்லலனா எங்களுக்கு விஷயம் தெரியாதோ?
ஆல் டீடயல் ஐ நோ!"


"ஏன் மேடம் நீங்க எங்களுக்கெல்லாம் சொல்ல மாட்டிங்களோ? இருடி உன்னை நேர வந்து வச்சுக்கிறேன்." என்றவளை.


"சாரிடி. சொல்ல கூடாதுன்னு இல்ல.. இவரு இப்போ தான் வெளிய கிளம்பினாரு.
அவரு வெளிய போனாதானே நான் போன் பண்ண முடியும்
?
அத விடு பானு!
யாரு சொன்னது உனக்கு" எ
ன்றாள்.


"சரி நீ திரும்ப திரும்ப கேட்கிறதனால சொல்லுறேன். அத்தை தான் சொன்னாங்க.

உனக்கு இன்னொரு சப்றைஸ் வைச்சிருக்கேன், நேர உன்னை பாக்கும் போது தெரிஞ்சுப்ப."


"அப்போ இப்போதைக்கு அந்த சப்ரைஸ் தரமாட்டன்னு சொல்லு.

இனி எப்போ நான் உன்னை பார்க்க முடியுமோ?" என குரலில் வருத்தம் காட்டி பேசவும்.

தன் தலைமேல கெட்டிக்கொண்டவள்,

'லூசு பானு. சைப்ரைஸ்ன்று சொல்லிட்டு அதை நீயே உடைக்க பாக்கிறியேடி.' என்று நினைத்தவள்.


"ஓகேடி அதை விடு! உனக்கு என்ன வேனும் சொல்லு. நான் அனுப்பி வைக்கிறேன்." என பேச்சை மாற்ற.


"என்ன கேட்டாலும் தருவியா?" என குதற்கமாகவே கேட்டாள் மேகலா.


"அத தானேடி கேட்கிறேன். சொல்லு
....
ஆனா உன் புருஷன் லெவலுக்கு கேக்காம, பானுவோட லெவலுக்கு கேளுடி!" என்றவள் பேச்சை கேட்டு சிரித்த மேகலா.


"நீ எனக்கு என்ன தரப்போகிற? எனக்கு என் தங்கை அன்பு மட்டுமே பாேதும்டி....." என்றவள்,


"அம்மா அப்பா எங்கடி?" என்
றாள்.


"அவங்க ஏதோ அலுவல வெளியால போயிருக்காங்க. மதியத்துக்கு மேல தான் வருவாங்க" என்றதும்
மேகலா முகம் சிறுத்து விட்டது.


அவளுக்கு அவர்களுடன் பேசவேண்டும், தன் மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என எல்லா பெண்களுக்கும் உள்ள நியாயமாக ஆசை தானே இது.


தன் குழந்தையை வயிற்றில் சுமக்கும் போது அவளாக கூறுகையில் பெற்றவர் அடையும் சந்தோஷத்தை பாக்கத்தான் அவளாள் முடியவில்லை. கேட்கலாம் என்றாலும் அவளுக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே!


மேகலாவின் அமைதியே அவள் மனதை பானுவிற்கு வெளிப்படுத்த
,


"ஏய் யோசிக்கிறியா? வந்ததும் உன்னை கூப்பிடுவாங்கடி...

யோசிக்காம, பாப்பாவை பத்தியும் உன் அத்தானை பற்றியும் கனவு கண்டுக்கோ! நான் அம்மா வந்ததும் பேசுறேன்." என்றவள் போனை வைத்து விட்டு.


"ரொம்ப உன்னை கஷ்டப்படுதுறோமோ?

இன்னும் கொஞ்ச நேரம் தானே பொறுத்துக்கோ...." என்றவள் சிறு புன்னகையுடனே தன் வேலையை தொடர்ந்தாள்.

சங்கமிப்பாள்............
 
Top