• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

43. காற்றோடு கலந்த விதையவள்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
"என்ன பெருசா சீன் போடுற..?"



அவன் கையை தோளிலிருந்து தூக்கி எறிந்தவள், மீண்டும் விலகி அமர, வேண்டும் என்றே அவளை ஒட்டி அமர்ந்தான்.



இதுக்கு மேல போகோணும் எண்டா, கதவை தான் திறக்கோணும்.. திறக்காவா" என்றான் மர்ம நகைப்புடன்.



அவனை திரும்பி முறைத்து விட்டு, தெரியாதது போல் அமர்ந்து கொண்டவள், கன்னமதை வருடியவனோ,



"இண்டைக்கு அவ்ளோ வடிவ இருக்க துஷி!" என்றவாறு கையினை பற்றியவன், அவள் கையினாலே தன் கன்னத்தை வருடிக்கொடு்து,



"லவ் யூ துஷி" என்றான்.



அவனின் செயலிலும் வார்த்தையிலும் தன்னை தொலைத்தவள், அவன் விழிகளில் தொலைய ஆரம்பித்த நேரம்.



வெளியே கேட்ட ஹாரன் சத்தத்தில் சித்தம் தெளிந்தவளாய், சட்டென தன்னை சரி செய்து கொண்டு, நேராக அமர்ந்து கொண்டாள்.



'சுதாரிச்சிட்டாளே!' என நினைத்தவாறு மீண்டும் ஆரம்பிக்க முன்னந்தவனை திரும்பி முறைத்தவள்,



"என்ன வேணும் உங்களுக்கு?" என்றாள் எடுத்தெறிந்து.



"என்னடி நீ யாரோ போல கதைக்கிற"



"ஏன்...? நீங்கள் யாரோ தானே? நாங்கள் என்ன லவ் பண்ணியா கல்யாணம் செய்தம்.. தாலி கட்டினம் உடனம் ரெமான்ஸ் பண்றதுக்கு.." என்றாள் சூடாக.



'என்னடா நடக்குதிங்க..? நல்லா வச்சு செய்யிறாளா! இது நல்லதுக்கு இல்லையே! இவள இவள்ட வழியில தான் போய் தான் கவனிக்கோணும்..'




வீட்டின் முன் நின்ற காரிலிருந்து இறங்கியவன், அவள் கைகளை இறுக பற்றிக் கொண்டான்.



இதற்கெல்லாம் அசைவேனா என்பது போல், அவளும் அவனோடு சேர்ந்து நடந்தாள்.



வீட்டிலும் நடக்க வேண்டிய சம்பிரதாயங்களை பெரியவர்களே முன்னின்று நடத்தினார்கள்.



இடையிடையே உரிமையுடனான ரதனின் சேட்டைகளும் அரங்கேறியது.



இதை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த ரவியின் கண்கள் தன்னவளை தேடி கண்டு விட்டு, ஏக்கமாய் மாறியது. அவளும் அவனையோ பார்த்து வெட்கத்துடன் தலைகவிழ்ந்தாள்.



இருவரையும் நீண்ட நேரமாக கவனித்துக் கொண்டிருந்த சுந்தரம்.



"இவனோட கல்யாணம் முடிஞ்சிது.. இனி என்ர மகன் கல்யாணம் தான்." என்றவர் தன் மனைவியிடம்,



"என்ன கலா.. உனக்கு ஓகே தானே!" என்க.



அவரும் நிமிர்ந்து ரவியை பார்த்தார். அவனோ தாயை வேண்டா வெறுப்பாக பார்த்தான்.



தான் செய்த பாவங்களுக்கு தான், தன் மகனை பிரிந்து இருப்பதை உணர்ந்த கலா. தன்னால் பிரிந்து போன சதாகர் மகள் கல்யாணத்தை, தாய் தாணத்தில் செய்து கொடுப்பதாக சந்தரத்திற்கு வாக்கு கொடுத்தாள்.



அப்படியாவது தன் மகன் தன்னை மன்னித்து, தன் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டானா என்ற ஏக்க்தில்.



அவன் தான் அவரிடம் பேசுகிறான் இல்லையே! பிறகு எப்படி கல்யாணத்தை பற்றி பேசுவது?



"என்ன கலா கேட்டுகொண்டிருக்கிறன்.. அவனையே பார்கிற?"



"எனக்கும் ஆசை தான்..



நான் செய்த பாவத்துக்கே, என்னை இன்னும் அவன் மன்னிக்கேல. இதில கல்யாணத்த பற்றி நான் எப்பிடி கேக்கிறது?"



"இப்ப ம் எண்டு மட்டும் சொல்லிப்பார்.. உன்ர மருமகளை உடனமே கண் முன்னால நிப்பாட்டிடுவான்.. கையோடு மன்னிப்பும் கிடைக்கம்"



"என்ன சொல்லுறீங்கள்"



"விளங்குற மாதிரி சாெல்லுறன்" என்றவர், ஓரமாக நின்ற மைனாவை இழுத்து கலா முன் நிறுத்தினார்.



மைனாவிற்கோ கால்கள் ஆட்டம் காண, அப்பாவியாய் ரவியை பார்த்தாள்.



"அவனை ஏன் பாக்குற... அத்த ஒண்டும் திட்ட மாட்டாள்."
அவளை மேலிருந்து கீழாக ஆராய்ந்தவர், கணவரிடம் பார்வையை மாற்றினார்.



அவரும் சம்மதமாய் தலையசைக்க,

மகனிடம் திரும்பியவர் விழிகளில்


உண்மையா என்ற கேள்வி இருந்தது.

என்ன தான்


அன்னையிடம் கோபம் இருந்தாலும், கல்யாணம் என்று வரும் போது அவர் சம்மதம் இல்லாது நல்லதில்லையே!
பதில் பேசாது, அதே சமயம் மறுக்காது தலையினை கவிழ்ந்தான்.


"மகாலஷ்மி கணக்கா இருக்கிறாள்"


என்று அவள் முகத்தை கைகளில் ஏந்தியவர்,
"நீயாவது அவனிட்ட சொல்லு... அம்மாவ மன்னிக்க சொல்லி" என்றார் புதியவளிடம் இரப்பது போல் கண்கசிந்து.

"ஏத்தா...


நல்ல நாள் அதுவுமா...." என்றவள் ரவியை கெஞ்சுவது போல் பார்த்தாள்.

இருவர்


அருகில் வந்தவனும்~



"


சாரிம்மா.....



உன்னை சரியா கஷ்ட படுத்திட்டன்." என்று அணைத்தான்.
"நான் தான்டா பிழை செய்தன். நீ ஏன் மன்னிப்பு கேக்கிற" என மாறி மாறி தம்மேல் பழியினை போட்டவர்களின் பாசப்போராட்டத்தை பார்க முடியாத சுந்தரம்.

"காணும்


ரெண்டு பேருமே மன்னிப்பு கேட்டது.." என்றார் சலித்தவாறு.

"அத விடுங்கோ.. நான் இவளை...." என மேல கேட்ட வந்தவனை ஒரு மாதிரியாக பார்த்தவர்,


"


ரதன் தான் சொன்னான்.. நான் தான் நம்பேல.. என்ர பையனுக்கு இதெல்லாம் வராதேன்டு.. ஆனா இந்த காலத்து பொடியல நமாப முடியாதுப்பா...



இனி என்ன? அம்மா சம்மதமும் வாங்கியாச்சு... அடுத்து கல்யாண வேலை தான்." என்றதுமே மைனாவின் முகத்தில் வெட்கத்தின் சாயல்.




சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்லும் நேரம் வரவும்,


தன் வீட்டினரை
அணைத்து விடுவித்தவள், மல்லியின் தோள்களில் விழுந்து கதறத்தொடங்கினாள்.
என்னதான் குறிப்பிட்ட நாள் வாழ்க்கை என்றாலும், அன்னைக்கு நிகரான அன்பினை தந்தவள் ஆயிற்றே..


"


அழக்கூடாதுடா.... நீ ஒண்டு தூரமா போகேல... பக்கத்தில தானே! எப்ப எங்கள பாக்கோணும் எண்டு நினைக்கிறியோ, அப்ப ஓடி வந்துடு! என்ன மாப்பிள்ள கூட்ட வந்திடுவீங்க தானே?" என்றாள் ரதனிடம் அவளை தேற்றுவதாய்.

"


பொண்டாட்டி கேட்கேக்க செய்யாம விடுவேனா ஆன்ட்டி! உங்கள எல்லாம் நினைச்சாலே கூட்டிக்கொண்டு வந்துடுவன்"

"


பாத்தியா... அவ்வளவுதான்... இதுக்கு போய் அழுது" என்று அவளை தன்னிடத்தில் இருந்து விலக்கியவள், அவள் கண்களை துடைத்து விட்டு,
"எதுக்கும் யோசிக்காத.... எல்லாம் மாப்பிள்ளை பாத்துப்பார். உனக்கு எதுவும் நான் சொல்லி தரோணும் என்டிலால... நீ புத்திசாலி.... புகுந்த வீட்டில நல்ல பெயர் எடுத்தா போதும்... இது தான் நீ எங்களுக்கு செய்ய வேண்டிய கடமை! போயிட்டு வாம்மா" என்று கார் வரை கொண்டு வந்து வழியனுப்பி வைத்தார்.



பயணம் முழுவதும் பெரிதாக அழவில்லை என்றாலும், அவர்களை பிரிந்து வரும் சோகம் அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.



அவளை நெருங்கி அமர்ந்தவன்,



அவள் கரத்தை எடுத்து கையோடு இறுக பற்றி, அணைத்தவறு அமர்ந்து கொண்டான்.



இம்முறை துஷாவும் அவனை விலக்கவில்லை. அந்த அணைப்பு தேவை பட்டதால் அவளும் அவனுடன் ஒன்றியே இருந்து கொண்டாள்.



வீடு வந்துவிட, அங்கு நடந்த சில சடங்குகளை போல் இங்கும் இடம்பெற்றது.



வசந்தா கால்களில் விழுந்து ஆசீ வாங்கிக்கொண்ட பின், ஓய்வெடுக்க தனித்தனி அறைக்குள் அனுப்பி வைத்தனர்.



இத்தனை நாட்களாக எதற்காக ஏங்கினானோ, அது கையில் வந்த சந்தோஷத்தில் நன்றாக உறங்கி விட்டான்.

அவளுக்குத்


தான் அத்தனையும் கனவோ என்று தோன்றியது.
தாய் தந்தையை இழந்து மூன்று மாத காலங்களாக அடையாளமற்று இருந்தவளுக்கு, நினைத்து முடிப்பதற்குள் எல்ராமே நடந்து முடிந்தால், இவை கனவாக இல்லாமல் எப்படி தோண்றும்?



அந்த முத்து, மூர்த்தியால் எத்தனை இழப்புக்கள்? அத்தனையும் இவனை பார்க்கும் வரை, கண்களை மறைத்த புகை மூட்டமானது, ஆதவனை கண்ட பனி மூட்டம் போல் மறைய ஆரம்பித்தது.



ஆனால் அவளுக்கான விடைதான் இன்னும் கிடைக்கவில்லை.
' அந்த முத்துவிற்கு என்னானது?



சுந்தரம் எதற்கு தன்னை தம்பி மகள் என்று முன்னரே தெரிந்தும், பொறுமை காத்தார்?

இவன்


எதற்கு இடையில் பெண் பார்ப்பதாக நாடகமாடினான்?



இதில் ஒரு மாதமாக பேசவில்லை.







அந்த முத்து என்னை கடத்தில் செல்லும்போது, அந்த வழியால் தான் என்னை கடத்துகிறார்கள் என்று எப்படி இவனுக்கு தெரியும்.?
அப்படி என்றால் இவனுக்கு முத்துவை ஏற்கனவே தெரியுமா?' பல கேள்விகள் மண்டையை குடைய, இதற்கெல்லாம் பதில் கூறும் பொறுப்பில் இருப்பவனோ எந்த வித தொந்தரவுமில்லாமல் உறங்கிக்கொண்டிருந்தான்.




எட்டு மணியளவில், ரதன் அறை வாசலில் கொண்டுவந்து விட்டாள் வசந்தா.

இத்தனை நேரம் இருந்த தைரியம் ஏனோ தளர்ந்து போனது போல், கால்கள் நடுக்கம் காண ஆரம்பித்தது.






அதை வெளியே காண்பிக்காது மறைத்தவள்,



'


பயப்படாதடி! நீ நடுங்கிறது மட்டும் தெரிஞ்சிது... இவ்ளோ நேரம் காட்டின கெத்து வீணா போயிடும்.. உன்னால முடியும் சமாளிச்சிடு' தனக்கு தானே தைரியம் சொல்லிக்கொண்டவள், அறையினுள் நுழைந்தாள்.


அலங்கரிக்கப்பட்ட அறையுள் அவனில்லை... மாறாக குளியலறையில் தண்ணீர் சத்தம் வரவே, அவங்க அங்கிருப்பதை உணர்ந்தவள்,


இறுக்கம் தளர்ந்தவளாய் அறையினை விழிகளில் ஆராய ஆரம்பித்தாள்.






'ஒருத்தனுக்கு இவ்ளோ பெரிய அறை' உதட்டை பிதுக்கியபடி, பால்கணி திரை சீலையை விலக்கினாள்.
தூரத்தே தெரிந்த முழுநிலவானது, என்றும் உதிர்த்திடும் நட்சத்திரங்களில் முக்கால் வாசியை விழுங்கியிருக்கும் போல.. அத்தனை பிரகாசம் இன்று அதனிடத்தில்.
அவளை கண்டதும் முகில் கூட்டங்களின் அணிவகுப்பில், ஒழிந்து கொள்வதும், பின் எட்டிப்பார்பதுமாக இருந்த நிலவவளின் விளையாட்டினை, உதட்டில் தவள்ந்த புன்னகையுடன் தன்னை மறந்து ரசித்துக்கொண்டிருந்தாள்.

பாத்ரூமை விட்டுவெளியே வந்தவன், அவள் ரசனையை கலைக்காது, மெதுவாக நடந்து வந்து, பின்புறமாக இறுக கட்டிக்கொண்டுவன், அவளது காதுக்குள்ளே காதல் வசனம் உரைத்தான்.



காதல் மத்திரம் சொல்லி



எனை வீழ்த்திய என் மதியே!



உன் மதி வதனம் கண்டு......



வான் மதியே ஒழிந்து கொண்டாளடி!
எதற்கடி அதற்க்கு வெட்டமதை கற்பிக்கிறாய்?



என் மதியவளை நான் ரசித்திட



தவித்திருக்கையில்....



எனை விடுந்து என் மதியோ



வான்மதியை ரசிக்கிறாள்.



இன்று என் முறை இராமகளே!
ஒரு வேளை நான் அனுமதித்தால்,



என்னவளை நீ ரசித்திடு!



காதல் தோட்டமதில் சென்று........



காமப் பூக்கள் பறித்திடுவோம்.



உன் காந்த விழிகளில் மூழ்கி,



காதலனிவன் புதுக்



கவிதை படைக்க காத்திருக்கின்றேன்.



உன் மேனி என்னும் காகிதத்தில்



இவன் இதழ் போனவால்



வா பெண்ணே! இரவோடு இரவாக



புதுக் காவிய புரட்சியை படைத்து விடலாம்...........



முதுகிலிருந்ந முடியை ஒதுக்கி, உதடுகளால் உரசியவாறு கவிதை கூறியவன் கைகளோ, அவள் வயிற்றை தாண்டி மேலே முன்னேறியது.

அவன்


கவிதையிலும், இதழிலின் சூட்டிலும் தன்னை தொலைத்தவள், நினைத்து வந்தது மறந்து, அவனின் மாய வித்தைகளில் அவனிடம் தன்னை இழக்க தொடங்கியிருந்த நேரம்,



அவனது கைகள் தந்த குறுகுறுப்பில் தான் தன் நிலை உணர்ந்தாள்

சட்டென அவன் கையினை தட்டி விட்டு திரும்பி நின்று முறைத்தாள்.

இதற்கெல்லாம் அசருவான அவன்?
அவர் அசந்து நின்ற சமயம் சட்டென தூக்கிச்சென்று கட்டிலில் போட்டவன்,
அவள் மேல் சரிந்தான்.
அவன் எண்ணம் புரிந்தவளோ, அவனை தள்ளிவிட்டு ஓரமாக எழுந்து அமர்ந்து கொண்டு அவனை கொடுரமாக முறைத்தாள்.



"என்னடி நேரம் காலம் தெரியாம.. நீ வேணுமென்டா நாளைக்கு உன்ர கோபத்தை கண்டிநியூ பண்ணு... இப்ப கொஞ்சமா ஒத்துழைடி தங்கம்..." என்று கெஞ்சலாம் கூறியவன், மீண்டும் அவள் அசந்த நேரம், சட்டென இழுத்து இதழ்களை கவ்விக்கொண்டான்.

அள்ள அள்ள குறையாத தேனுற்றை போல், நீண்ட நேரமாக சுவைத்தவன்,



மூச்சுக்கு திணறியவள் நிலை உணர்ந்து விடுவித்தான்.

விடுவித்த


அடுத்த நொடியே, அவன் நெஞ்சி பஞ்சர் ஆகியது. நெட்டாங்கு, விறுமாண்டி, முரடா இப்பிடியா பண்ணுவா?
உதடு பயங்கரமா எரியுது...



இனிமேல் இப்பிடி செய்வியா?" கேட்டுக்கேட்டே இரண்டு கைகளாலும் மாறி மாறி அடித்தவள் கைகை பற்றிக்கொண்டவன்,
தன் நெஞ்சோடு அவளை சாய்த்து அணைத்து,

"


வலிக்குதுடி!" என்றான்.



அடித்தது தான் வலித்து விட்டதோ என்று அவனை நிமிர்ந்து பார்த்தவள்,



"சாரி.... வலிக்காதது மாதிரி தான் அடிச்சன்... இருந்தும் வலிக்கிதா?" என்றாள் கவலையாய்.



இல்லை என்பதாக தலையசைத்தவனோ, பற்றியிருந்த அவளது கையை தன் நெஞ்சில் மேல் வைத்து,



"இங்க வலிக்குது.... இவ்வளவு நாளா எப்பிடி உன்னால என்னை நினைக்காம இருக்க முடிஞ்சிது?



ஒரு வேளை உங்கட அப்பா அம்மா, என்னை உனக்கு மாப்பிள்ளையா பாக்காம, வேற யாரையுமாச்சும் பாத்திருந்தா, என்னை விட்டுட்டு யாரையாச்சும் கட்டிட்டு போயிருப்ப தானே" உடைந்த குரலில் கேட்டவன் கேள்வியில் உடைந்தே போனாள்.



உண்மை அது தானே! என்ன தான் ரதனை விரும்பி இருந்தாலும், ரதன் தான் மாப்பிள்ளை என்று தெரிவதற்கு முன்னர் பெற்றவர்கள் ஆசை படி திருமணத்திற்கு ஒத்துக்கொண்டேன் தானே.



ரதன் நிலமையை சிறிதும் நினைத்து பார்க்காமல் அவனை தன் வழியில் இருந்து அகற்றத்தானே பார்த்தாள்.



ஒரு வேளை ரதன் மட்டும் மாப்பிள்ளை இல்லை என்றால் அவன் நிலமை?
என்னை நினைத்தே காலம் பூராகவும் கலங்கி இருப்பானே!என்ற நினைத்து அவனையே பார்த்து அவள் கண்கலங்கவும்,



அவள் மன ஓட்டத்தை முகத்திலே படித்தவன், அவளை தன் மடிதனில் அமர்த்தி, உடலோடு இறுக்கிக்கொண்டவன்,



"நீ யோசிக்கிறமாதிரி நான் நல்லவனில்லை துஷி. மாப்பிள்ளை வேறயவனாவே இருந்தாலும், யாருக்கும் உன்னை விட்டு குடுத்திருக்க மாட்டன்,



எனக்கு நீ வேணும்... அதுக்கு என்னண்டாலும் செய்வன்" என்றவன்,



அவள் காதை உதட்டால் பிடித்திழுத்து, "கொலை கூட" என்றான்.
இவனது ஒவ்வொரு செய்கையிலும் உடலில் கூச்சம் ஏற்பட, நெலிந்தவாறு இருந்தவளை சங்கடம் உணர்ந்து, தன் சேட்டைகளை ஓரங்கட்டினான்.

"


சரி சொல்லு... அந்த முத்துக்கு என்ன நடந்திருக்கும் எண்டு?"

அவளுக்கும்


அது தானே தெரிய வேண்டும்.



"


அவனுக்கு தான் ஆக்ஷிடன்ட் ஆச்சே!" என்றாள்.

"


நோ செல்லம்... ஆக வைச்சம்" என்றவன்,
துஷி செல்லத்தின்ர அம்மா அப்பாவ கொன்டு, என்ர கண் முன்னாலயே, உன்னையும் கடத்துவான், அவனுக்கு விருது கொடுக்க வேண்டாமா? அது தான்.." என்று அங்கு நடந்ததை கூறினான்.



அவனை கர்வமாக பார்த்தவள் மனதில் புது கேள்வி எழ.



"அப்ப உங்களுக்கு நான் யாரென்று முதலே தெரியுமா?"



மர்மமாய் புன்னகைத்தவன்,



ஆமோதிப்பதாய் தலையசைத்தான்.

"


எப்ப? எப்படி?"

"


என்னடி நீ.... இது பள்ளியறையா? இல்ல பள்ளி கொள்ளும் அறையா? இப்ப போய் இத கேக்கிற..

இந்த இடத்தில என்ன தேவையோ அத கேள் சொல்லி தாரன்.. இல்ல செய்து காட்டுறன்.. அத விட்டுட்டு...."


என்றவன் விரல்கள் அத்து மீறியது.

அதை


பிடித்து கடித்தவள்,
"முதல்ல இதுக்கு பதில சொல்லுடா நெட்டாங்கு" என்றாள்.

"


எல்லாம் என்ர நேரம்டி!" என்றவன்,



" எப்ப உன்ர வாசன் அங்கிள பாத்தியோ, அப்பவே தெரியும்" என்றதும் புரியாது பார்த்து வைத்தவள் தலையில் செல்லமாக கொட்டிவன்,

"


மக்கு பொண்டாட்டி! நீ அவர கட்டி பிடிச்சு அழுததை, கேமராவில பாத்திட்டன்...



உனக்கு தான் யாருமில்லையே! இது யாரு புதுசா எண்டு யோசிக்கேக்க தான்.. அரை நேர விடுப்பு கேட்டு வந்த.... அதனால சந்தேகம் கூடிட்டுது....



உன்னை பற்றி எதுவும் தெரியாம இருந்த எனக்கு, பெரிய ஒரு துருப்பு சீட்டு உன்ர அங்கிள்.



உனக்கே தெரியாம பின் தொடர்ந்தன்.. தான் பாதி உண்மை தெரிஞ்சிது, அதோட உனக்கு மாப்பிள்ளை பார்த்த விஷயமும்,



சொல்லப்போன அதை கேட்ட நாளில இருந்து நின்மதியா தூங்கல தெரியுமா?
அது யார் எண்டு தெரியிறத்துக்கு முன்னம், என்னை விரும்ப வைச்சா காணும் எண்டு பாத்தன்" என்று பெருமூச்சை விட்டவன்,

"


அதை விடு....! பிறகு உன்னை பற்றி முழு விபரமும் தெரியிறதுக்கு, என்ர போலீஸ் நண்பன் கோகுலிட்ட, அங்கிள் போட்டோவை குடுத்து தேடி கண்டு பிடிச்சம்...



அந்தாளு எதுக்கு நீங்கள் இதெல்லாம் கேக்கிறீங்கள் எண்டுட்டார்...



கோகுல் போலீஸ் எண்டுறதால,
பிறகு மூர்த்தி பெயர பயன்டுத்தி, சும்மா மூர்தியால துஷாவிற்கு ஆபத்திருக்கு எண்டு, அவர் நம்புற மாதிரி கதையை சொல்லி, உன்னை பற்றிய முழு விபரமும் தெரிய வந்தது.
என்ன மாப்பிள்ளை தான் யாரென்டு தெரியேல...

பிறகு ரெ


ண்டு நாள் நான் ஊர விட்டு போனனே! எதுக்கு தெரியுமா?
அந்த முத்துவையும், மூர்த்தியையும் ரெண்டு சாத்து சாத்தி, கஞ்சா கேஸ்ல மாட்டி விட்டுட்டு, உன்ர அப்பா பேரில இருந்த முழு சொத்தையும், உன்ர பேரில மாத்தி, நம்பிக்கையான ஆளை வச்சி பாத்திட்டு இருக்கன்.
அத முடிச்சிட்டு வீட்ட வந்தா, உன்னை பற்றி அம்மா சொல்லுறா... நான் தான் உனக்கு பாத்த மாப்பிள்ளை எண்ட சந்தோஷத்தில வந்தா, மேடம் என்னை காணாம தவிச்சது பாத்ததும் காணமல் போச்சு. அது தான் அந்த கிஸ்சுக்கு காரணம் என்றவும்.



அவன் சொன்ன அந்த நாள் நினைவு வர, கன்னம் சிவப்பேற அவளை அறியாமலே வெட்கமும் வந்து ஒட்டிக்கொள்ள தலையை குனிந்து கொண்டவள், சிறுது நேரத்திற்கு பின் அவன் வாயால் கூறிவற்றை கேட்டு.




னக்கு தெரியாம இவ்வளவு நடந்திருக்கா? அத தான் வெள்ளை பணியாரம் அடிச்சான் என்றானா அந்த முத்து?
அது இந்த நெட்டாங்கு தானா?' என்று மனதுக்குள் நினைப்பதாக நினைத்து வெளியே வாய்விட்டே கூறினாள்..

"


நான் தான் அந்த வெள்ளை பணியாரம்" என்றவனை,
"அப்ப எதுக்கு பொய் சொன்னார் அண்ணா... உங்களுக்கு வேற பெண்ணு பாக்க போறதா?"

"


அது உன்னில இருந்த கோபம்... அதோட ஒரு உண்மையை கண்டு பிடிக்கோணும் அதால அப்பிடி சொல்ல வேண்டியதா போச்சு"

"


என்ன உண்மை?"

"


இந்த ஊமைச்சி என்னை லவ் பண்றாள் எண்டு தெரியும், பட் புரிஞ்சுக்காம இருந்திட்டாளே! அது தான் புரிய வைக்க இந்த நாடகம்"

"


அதெல்லாம் முன்னமே புரிஞ்சாச்சு.. என்ர அம்மாவ போல என்னையும் என்ர உறவுகள், ஓடுகாளி எண்டு நினைக்க கூடாது. அதால தான் என்ர ஆசையை புதைச்சிட்டன்" என்றவள்,

"


நீங்கள் மட்டும் என்னவாம்? எத்தனை நாள் பாக்கேல.. கதைக்கேல.... ஏன் தலையில அடிபட்டு இருக்கேக்க கூட பாக்க வரலையே!" என்றாள் குறையாக.

"


யாரு சொன்னா பாக்க வரேல எண்டு...



வந்தன் உன்ர அண்ணன் தான், கத்தி ஊரை கூட்டி என்னை துரத்தி விட்டுட்டான். அதான் போயிட்டன்.

சரி வீட்டயாவது


பாக்கலாம் எண்டு பேக்கை காரணம் காட்டி வந்தா, மேடம் தூங்கிட்டாங்களாம். தொல்லை பண்ண விரும்பமில்லை எண்டு உன்ர தாத்தா அனுப்பிட்டார்.



என்ன சொன்ன.. நான் உன்னோட கதைக்கேலயா....?" என்றவன்,

"உன்னட்ட இருக்கிற போனே என்ர தான்


தெரியுமா? எப்பவும் இரவில ஒரு கோல் வருமே... அது ஐயா தான்.. உன்ர குரல் கேக்காம எப்பயாவது தூங்கி இருக்கேனா?" என்று கண்ணடித்து கேட்டான்.
அதற்கு அவள் மௌனம் காக்க..
"என்னடி! எவ்ளோ பெரிய விஷயம் சொல்லுறன் பேசாமல் இருக்கிற"

"


பின்ன எல்லாத்துக்கும் அதிர்ச்சி ஆகிறதா? மொத்தமா சொல்லி முடியுங்கோ ஆகிக்கிறன்" என்றவள்,

"உண்மை தெரிஞ்சும்


பெரியப்பா ஏன் என்னை வந்து கூப்பிடேல?"



"உன்ர அம்மா ஆசை,.நீ தன்ர வீட்டுக்கு போறது.. ஒரு வேளை நீ பெரியப்பாட்ட போயிட்டா, அதை காரணம் காட்டி அந்த வீட்டில உன்னை ஏற்காம போக கூடாது."

"


அட பாவி! எனக்கே தெரியாம இவ்ளோ நடத்தினிங்களா? ஆனா பாருங்க கொஞ்சம் கூட நான் வாசன் அங்கிளை சந்தேகப்படேல."

"


நல்லது தானே பண்ணார்! விடு" என்றான்.

"


இந்த சதிகார கூட்டத்துக்கே தலைவர் இந்த நெட்டாங்கு தானே" என்றாள் செல்லமாக.

"


அது என்னடி நெட்டாங்கு"



"அது என்னை முதல் முதல்ல பஸ் ஸ்டாண்ல பாத்து முறைச்சிங்களே அப்பவே வச்ச பெயர்"

"


அடி பாவி! அது ஏதோ தெரியாம முறைச்சதுக்கா இந்த பெயர் வைச்சா"

"பின்ன... சும்மா போனவள வம்பிழுத்தா?"




"


எப்பிடி எண்டாலும் கூப்பிடும்மா! இப்ப என்ர வேலைய செய்ய விடுறியா?" என்றவன், அதற்குமேல் பேச இடம் கொடாது கட்டிலோடு சாய்த்தான்.




இதுக்கு மேல ஒருதங்க ரூமை எட்டிப்பாக்கிறது அனாகரீகம்..
வாங்க நாங்க போயிடலாம்.



... முற்றும்.
 
Top